முல்லை : 1
பிரமாண்டமான அந்த ஐம்பது மாடி கட்டிடத்தின் முன் ஆட்டோவில் வந்து இறங்கினாள் பிரகதி..
23 வயதில் ஐந்தரை அடியில் பிரம்மன் நிதானமாக செதுக்கி வடித்த எலுமிச்சை நிறத்து அழகிய புயல்.. கடந்த வருடம் பி.இ கம்ப்யூட்டர் என்ஜினியரிங் முடித்து கேம்பஸ் இன்டர்வியூ மூலம் சென்னையில் ப்ளேஸ்மெண்ட் கிடைத்தது..
நேற்று இரவே சென்னை வந்தவள் அவளது தாயின் அண்ணன் வீட்டில் தங்கி வேலைக்கு செல்வதற்கு ஏற்பாடு செய்து இருந்தான் அவளது அண்ணன் பரணிதரன்..
அதன்படி காலையில் எழுந்து கிளம்பி வந்த பிரகதி முதல் நாள் வேலை என்பதால் நெஞ்சம் படபடக்க அந்த அடுக்குமாடி கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தாள்..
கொஞ்சம் பயம் இருந்தாலும் தனது தோழி வருகிறாளா என திரும்பி வாசலை பார்த்தவள் அவள் வருவதாக அறிகுறி ஏதும் இல்லாததால் மொபைலை எடுத்து அவளுக்கு கால் செய்தாள்..
" ஹலோ எலி எங்கே இருக்க.. "
"......"
"வாட் ஆன் தி வேயா .. எலி பர்ஸ்ட் நாளே லேட்டா வராத. இந்த கம்பெனி எம்.டி ஹிட்லருக்கு அத்தை பையன் ரேஞ்சுல இருப்பானாம்.. சீக்கிரம் வந்துருடி.. " என்று போனை வைத்தவள் ஜீன்ஸ் பேன்ட் ஸ்லீவ்லெஸ் சர்டும் அணிந்து இருந்த ரிசப்ஷனிஸ்ட்டிடம் சென்று அப்பாயிண்மெண்ட் ஆர்டரை காட்டினாள்..
அதை கண்ட அந்த பெண்ணோ "ஹாய் மிஸ் வெல்கம் அவர் எஸ்.வி குரூப் ஆப் கம்பெனீஸ்.. ஐ ஆம் பூமிகா.. இந்த கம்பெனியில் 4இயர்ஸா வொர்க் பண்றேன்.. நீங்க ஸ்ரைட்டா போய் தேர்ட் ரூம்ல மேனேஜர் இருப்பார்.. அவரை போய் பாருங்க.." என்றாள்..
பூமிகாவிற்கு ஒரு புன்னகையை பதிலாக தந்தவள் மேனேஜர் அறை நோக்கி நடந்தாள்.. அவளுடன் ஓட்டமும் நடையுமாக வந்து இணைந்தாள் அவளின் தோழி அஞ்சலி..
"ஏண்டி லேட்.."
"உனக்கு என்னம்மா நீ உன் மாமா வீட்டில் இருந்து வர்ற.. நேரத்துக்கு டிபன் செஞ்சு குடுத்து வழி அனுப்ப ஆள் இருக்கு.. ஆனால் எனக்கு அப்படியா.. அந்த ஹாஸ்டல் சாப்பாட்டை முழுங்கிட்டு வர லேட் ஆகிடுச்சு.. சரி வா மேனேஜரை பார்த்துட்டு நம்ம சீட்டுக்கு போலாம்.."
"இங்கே வந்தும் உன் வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டியா.. காலேஜ் ஹாஸ்டலை தான் ஒருவழியாக்கி வார்டனை வெறுப்பேத்தின.. இங்கேயும் அப்படி தானா.."
"அதை விடுடி.. உனக்கும் எனக்கும் வேலை குடுத்து இருக்கானே இந்த கம்பெனி எம்.டி.. கம்பெனி உருப்படும்னு நினைக்கிற.."
"ஓவரா பேசாத.. சைலன்ட்டா வா.. " என்று அஞ்சலியுடன் மேனேஜர் அறைக்குள் நுழைந்தாள் பிரகதி..
"வாங்க... மிஸ் பிரகதி & அஞ்சலி.. இவர்களும் இன்னிக்கு தான் ஜாயின் பண்றாங்க.." என்று அங்கே இருந்த ஒரு பெண், இரு ஆண்களை காட்டினார் மேனேஜர்..
அவர்களிடம் ஹலோ சொல்லி அறிமுகமாகினர் தோழிகள் இருவரும்..
அறிமுகப்படலம் முடிந்த உடன் மேனேஜர் பேச ஆரம்பித்தார்..
"லிசன் கைஸ்.. இப்போ புதுசா ஒரு பாரின் ப்ராஜக்ட் ஸ்டார்ட் பண்ண போறோம்.. அதுக்கான டீமில் தான் நீங்க 5பேரும் ஜாயின் பண்ண போறீங்க.. பொதுவா பாரின் ப்ராஜக்ட் எல்லாம் ப்ரஸர்ஸ்க்கு தர மாட்டாங்க.. பட் உங்க டேலண்ட்ஸ்ஸை பார்த்த எம்.டி இம்ப்ரஸ்ஸாகி இந்த ப்ராஜக்ட்டை உங்களுக்கு தர சொன்னார்.. பர்ஸ்ட் இம்ப்ரசன் ஈஸ் த பெஸ்ட் இம்ப்ரசன்.. சோ உங்க பர்ஸ்ட் ப்ராஜக்ட்டை சூப்பரா கம்ப்ளீட் பண்ணி நல்ல பேர் வாங்க பாருங்க.. ஆல் த பெஸ்ட் ஆல் ஆப் அஸ்.." என்றதுடன் தன் பேச்சை முடித்துக் கொண்டார்..
சிறிது நேரம் தங்களுக்குள் டிஸ்கஸ் செய்த ஐவரும் தங்களது டீம் லீடருக்காக வெயிட் பண்ணினர்.. அடுத்த அரைமணி நேரத்தில் டீம் லீடர் வந்து ஐவருக்குமான வேலையை பிரித்து தந்தார்..
ஐவருக்கும் ஐந்து கம்ப்யூட்டர் கொண்ட தனி கேபின் கொடுக்கப்பட ஐவரும் அங்கே அமர்ந்து அவரவர் வேலையை செய்ய ஆரம்பித்தனர்..
அஞ்சலி வேலையை செய்தவாறு மற்ற நான்கு பேரையும் நோட்டமிட்டாள்.. எல்லா பக்கியும் இவ்வளவு சின்சியரா வேலை பாக்குதே.. போற போக்கை பார்த்தால் என்னையும் வேலை செய்ய வச்சிடுவாங்க போலயே... முருகா இதெல்லாம் உனக்கே நியாயமா தெரியுதா.. நா உங்கிட்ட என்ன கேட்டேன்.. எனக்கே எனக்கா சைட் அடிக்க லவ் பண்ண ஒரு முரட்டு சிங்கிளை தானே கேட்டேன்.. அதுக்குனு நீ இந்து கோஷ்டியோட கோத்து விட்டுட்டியே இதெல்லாம் அடுக்குமா... முருகா.. நீயே சொல்லு..
"என்னடி என் முருகனை திட்டிட்டு இருக்க போல.."
"அது எப்படிடி உன் கண் கம்ப்யூட்டர்ல இருந்தாலும் நா பண்ற எல்லா தில்லுமுல்லையும் கரெக்டா கண்டுபிடிக்கிற.. "
"அதுக்கு எல்லாம் யானை வேணும் எலி.."
"ம்.. யானை இங்கே இல்லை.. யாஸ்கிட்ட இருந்து வாங்கி தரவா.."
"உன்னால் முடிந்தால் வாங்கிக்கோ.. எனக்கு என்னவோ கே.ஜி.எப். பிடித்த மாதிரி கஜகேசரி பிடிக்கலை.. எலி.."
"யாஸ் எப்படி இருந்தாலும் அழகு தாண்டி.. என் செல்லம்.."
"உன் செல்லத்தை நினைச்சுகிட்டு கோடிங் மாத்தி போட்ற போற பக்கி.."
"அதெல்லாம் அஞ்சலி கரக்டா தான் பண்ணுவா.. விதி இந்த மூணு கேரக்டரும் இவ்வளவு அமைதியா வேலை பாக்குதே.. இங்கே என்ன சைலன்ஸ் போர்டா வச்சு இருக்காங்க.."
"போர்டு வச்சால் மட்டும் அப்படியே ஃபாலோவ் பண்ற மாதிரி தான்.. நம்ம ரெண்டு பேருக்கும் ரூல்ஸ் பிரேக் பண்ணி தானே பழக்கம்.. எலி.."
"ஓய் விதி இந்த மாதிரி எலின்னு கூப்பிட்டு என் இமேஜை டேமேஜ் பண்ணாத.."
"எப்படி போட்டோ எடுத்தாலும் செல்பி எடுத்தாலும் உன் இமேஜ் படு கேவலமா தான் இருக்கும்.. இதுல நான் எங்கே டேமேஜ் பண்ண எலி.." என்ற கேட்ட பிரகதியை முறைத்தாள் அஞ்சலி..
"நீ சொன்னது ஜோக்கா.. சிரிப்பே வரலை.. வேணும்னா லஞ்சுல ஞாபகப்படுத்து சிருச்சுக்குறேன்..."
"கோபமா எலி.."
"ச்சே நமக்கு எல்லாம் கோபம், வெட்கம்,சூடு, சொரணை இதெல்லாம் இருக்க கூடாதுனு 5வது படிக்கும் போது சத்தியம் பண்ணோமே மறந்து விட்டீர்களா கோபால்.."
"இல்லை கோபால் இல்லை.. நா எதுவும் மறக்கலை.. ஒருவேளை நீங்க திருந்திட்டீங்களோன்னு ஒரு டவுட்ல கேட்டேன் கோபால்.."
"வந்ததில் இருந்து நம்ம மட்டும் தான் பேசிகிட்டு இருக்கோம்டி.. அங்கே பார் 2சிட்டி ரோபாவும் 1நிலா ரோபோவும் எப்படி வேலை பாக்குதுன்னு.. விட்டால் கம்யூட்டருக்கு உள்ளேயே போய்டுவாங்க போல.. விதி கேண்டின் போலாம் வாடி.. இவங்க வேலை செய்றதை பார்த்து எனக்கு தலைவலி வந்துடுச்சு.."
"எலி இந்த கேபினை மட்டும் பார்த்து முடிவு பண்ணாதே.. மொத்த ஆபிஸும் இப்படி தான் வேலை பாக்குது.. சுத்தி கண்ணை சுழற்றி பார் எலி.. இங்கே இது தான் வழக்கம் போல.. நாம மட்டும் கேன்டீன் போனாலும் உள்ள விடுவாங்கன்னு தோணலை.." என்ற பிரகதியை வெட்டவா குத்தவா என்ற ரேஞ்சில் பார்த்தாள் அஞ்சலி..
"ஏன் எலி இவ்வளவு பாசமா பாக்குற.."
"உன்னை விதின்னு கூப்பிட்ட பாவத்துக்கு உண்மையாவே எனக்கான விதியா மாறிட்டடி.."
"இப்போ என்ன நடந்துச்சுன்னு இம்புட்டு ஆங்கிரி எலி.."
"இன்னும் என்ன ஆகனும்.. நம்மோட லட்சியம், கனவு என்ன விதி.."
"நம்மோடது இல்ல உன்னோடது.."
"சரி என்னோடது.. அந்த மீசைக்கார ஐயாச்சாமிகிட்ட இருந்து தப்பிச்சு ஒரு நல்ல அழகான 90ஸ் பையனா பார்த்து லவ் பண்ணி கல்யாணம் பண்றதுக்கு தானே வேலைக்கு போறதா சொல்லி இங்கே வந்து சேர்ந்தேன்.. இங்கே என்னடானா நா வந்ததுல இருந்து ஒரு பிகர் கூட ஒரே ஒரு முரட்டு சிங்கிளை கூட மீட் பண்ணலை.. சரி கேன்டீன் போற சாக்குலயாவது யாரையாவது சைட் அடுச்சு கரெக்ட் பண்ணலாம்னா அதுக்கும் இப்படி ஆப்பு அடிக்கிறது முறையா?? சொல்லு விதி.. இதுக்கு எல்லாம் காரணம் யாரு.."
"வேற யாரு உன் விதியான நானே தான் காரணம்.."
"இன்னும் ரெண்டு கம்பெனில ப்ளேஸ்மெண்ட் கிடைத்தது.. அதை விட்டுட்டு இந்த வீணா போன கம்பெனிக்கு தான் போகனும்னு அடம் பிடித்த உன்னை என்ன பண்ணலாம் விதி.. "
"ஒன்னும் பண்ண முடியாது எலி. உன் பைத்தியகாரதனத்துக்கு முடிவு கட்ட தான் இந்த கம்பெனியை சூஸ் பண்ணேன்.. சரி உன் அழுகாச்சி காவியம் முடிஞ்சுதா.. வா கேன்டீன் போலாம்.. எல்லாரும் போறாங்க.."
"நா வரலை விதி.. நா வேலையை ரிசைன் பண்றேன்.."
"காமெடி பண்ணாம வாடி போகலாம்.."
"நோ விதி கன்பார்மா இந்த தடவை உன்னை விட்டு நா போக தான் போறேன்..
"ஓ அப்படியா.. அப்போ நம்ம ப்ரண்ட்ஷிப் அவ்வளவு தான் இல்ல.. கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி கேன்டீன்ல சமோசா வாசம் வந்தது . சரி எலிக்கு பிடிக்குமே வாங்கி தரலாம்னு பார்த்தேன்.. நீ தான் வேலையை ரிசைன பண்ண போறியே.. நீ போய் மேனேஜரை பாரு.. நா போய் சமோசா சாப்பிட்டு காபி குடித்துவிட்டு வர்றேன்.. பாய் எலி.."
"என்னது...... என்னை விட்டுட்டு சமோசா சாப்பிட போறியா.. அடுச்சு பல்லை கழட்டிருவேன் ராஸ்கல்.. யாரு சொன்னது நா வேலையை விட போறதா.. அது சும்மா உல்லல்லாங்காட்டி சொன்னது.. என் ப்ரண்டை சென்னைல தனியா விட்டுட்டு பெங்களூக்கோ, மும்பைக்கோ போவேனா என்ன .. நண்பிடி.." என்று பிரகதியின் தோளில் கை போட்டு சொன்ன அஞ்சலியை இதழில் சிரிப்புடன் பார்த்தாள் பிரகதி..
இது தான் இவர்கள் நட்பு.. எல்.கே.ஜி தொடங்கி காலேஜ் வரை ஒன்றாக படித்து வந்தவர்கள்..
கரூருக்கு அருகே உள்ள குளித்தலை தான் இவர்கள் பிறந்த ஊர்.. பிரகதியின் தந்தை சிவநாதன் அந்த ஊரின் பெரியதனக்காரர்..
நீதி நேர்மைக்கு மறு பெயராக இவரது பெயரை சொல்லலாம்.. அந்த அளவுக்கு நியாயமானவர்..
மகாலெட்சுமியின் மறுஉருவமான சிவசக்தி தான் பிரகதியின் தாய்.. இல்லை என்று வீடு தேடி வந்தவருக்கு அள்ளி தரும் வள்ளல்.. திருவள்ளுவருக்கு வாசுகியை போல கணவர் சொல்லை தட்டாமல் நடந்து கொள்பவர்.. சில நேரங்களில் மந்திரியாக ஆலோசனைகளையும் சொல்வார்.. மொத்தத்தில் அந்த ஊரின் கலியுக வள்ளல்களாக வாழ்ந்து வரும் குடும்பத்தினர்..
சிவநாதன், சிவசக்தி தம்பதியருக்கு ஒரு ஆண் பரணிதரன் பெண் நம் நாயகி பிரகதி.. பரணி எம்.இ அக்ரி படித்து விட்டு அருகே உள்ள கல்லூரியில் வேலை பார்த்து கொண்டே பி.ஹச்.டி படிக்கும் இளைஞன்.. அந்த கிராமத்தில் விவசாயத்தில் புதுமை செய்யும் முயற்சியில் இறங்கி தன் தந்தையின் மூலம் செய்து காட்டி மற்றவர்களையும் பின்பற்ற வலியுறுத்திக் கொண்டிருக்கிறான்..
தன் தங்கைக்கு திருமணம் முடித்த பிறகு தான் தனது திருமணம் என்றிருக்கும் அன்பான அண்ணன்..
இவர்களின் பக்கத்து வீட்டில் தான் அஞ்சலியின் குடும்பத்தினர் இருக்கின்றனர்.. பிரகதி வீட்டினர் அளவுக்கு வசதி இல்லை.. விவசாயத்தை நம்பி வாழும் குடும்பங்களில் இவர்கள் குடும்பமும் ஒன்று.. பிரகதி பிறந்த ஒரு வாரத்தில் பிறந்தவள் அஞ்சலி.. அதன் பிறகு நடைபழக ஆரம்பித்ததில் இருந்து இருவரும் இணைந்தே சுற்றினார்கள்..
பள்ளி செல்லும் வயதில் பிரகதியை ஆங்கில வழியில் சேர்க்க போக அவளோ அஞ்சலியுடன் தான் செல்வேன் என்று கூற அஞ்சலி அப்பாவோ பண வசதி இல்லாததால் ஆங்கில வழி பள்ளி வேண்டாம் என்று கூற பிரகதி அழுது அழுது காய்ச்சலில் விழுந்தாள்..
அதன் பிறகு சிவநாதன் அஞ்சலியை படிக்க வைக்கும் பொறுப்பை ஏற்று கொண்டார்.. அன்றிலிருந்து இன்று வரை அஞ்சலியின் மொத்த பொறுப்பும் சிவநாதன் சிவசக்தி தம்பதியரின் வசமாக இருக்கிறது..
பிரகதிக்கும், அஞ்சலிக்கும் கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைக்க அஞ்சலியின் தந்தைக்கோ பிரகதியின் மாமா வீட்டில் தங்கி வேலை பார்ப்பதில் இஷ்டம் இல்லாததால் அவளை ஹாஸ்டலில் சேர்த்து விட்டனர்..
பிரகதியின் மாமா கோபப்படுவார் என்பதால் அவள் மட்டும் அவருடைய வீட்டில் இருந்து வேலைக்கு வருகிறாள்...