வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

முல்லை சிரிப்பில் மூர்க்கம் தவிர்த்தவள் கதைதிரி...

முல்லை : 59
பெரியவர்கள் அனைவரும் ராஜாவுக்கு பூஜாவை திருமணம் செய்து வைக்கலாமா.... அவளால் காட்டில் வசிக்க முடியுமா... என்று தங்களுக்குள் விவாதித்து கொண்டு இருந்தார்கள்....."கரிகாலா நீ என்ன சொல்ற....." என்று கேட்டார் சுந்தரம்"நான் என்ன அண்ணா சொல்றது.... நீங்க சம்மதம் சொன்னால் எனக்கும் சம்மதம் தான் அண்ணா.....""சுந்தரம் நீங்க என்ன சொல்றீங்க...." சிவநாதன் கேட்க "அப்படி எல்லாம் என் பொண்ணை அங்கே அனுப்பி வைக்க முடியாது சிவா...." என்றார்...
"நீ என்ன சொல்ற தனா....."
"என்னை கேட்டால் ராஜா ரொம்ப நல்ல பையன்.... பூஜாவை பத்திரமா பாத்துப்பான்னு தான் சொல்வேன்...."

"சரி நீ சொல்லு சிவா... ராஜாவை பத்தி நீ என்ன நினைக்கிற...." என்று தனபால் கேட்க "இங்கே வந்ததில் இருந்து ராஜா நடந்து கொள்வதை பார்த்த வரைக்கும் ரொம்ப நல்ல பையனாக தான் இருக்கான்..... " என்றார் சிவநாதன்...."சிட்டியில் வாழ்ந்த பூஜாவால் காட்டில் எப்படி வாழ முடியும்.... என் பொண்ணு காட்டுல போய் கஷ்டப்பட்டால் என்னால் தாங்க முடியாது...." என்று சுந்தரம் கண்கலங்க கரிகாலனோ அவரின் தோளில் கை வைத்து "அண்ணா எனக்கு என்னவோ பூஜா அங்கே தான் சந்தோஷமா இருப்பான்னு தோணுது..... ஆனால் உங்களுக்கு என்ன தோணுதோ அதை பண்ணுங்க...." என்றார்....


தனபால் சுந்தரத்திடம் "நம்ம பசங்க வளந்துட்டாங்க சுந்தரம்.... அவங்க லைஃபை தேர்ந்தெடுக்குற அளவுக்கு அவங்க வளர்ந்துட்டாங்க... பூஜாவால் எல்லா இடத்திலும் மேனேஜ் பண்ணி வாழ முடியும்... ராஜாவோடு பூஜா சந்தோசமாக வாழ முடியும்.... பூஜா மேல் நம்பிக்கை வைத்து இந்த கல்யாணத்தை நடத்தி வை சுந்தரம்.... உன் நம்பிக்கையை நிச்சயம் ராஜாவும் பூஜாவும் காப்பாத்துவாங்க...." என்றார்.....
நண்பனின் பேச்சை சிவநாதனும் ஆதரித்தார்....


சிவசக்தியும் "அண்ணா தனபால் அண்ணா சொல்ற மாதிரி பூஜாவையும் ராஜாவையும் நம்புங்க.... ரெண்டு பேரும் ரொம்ப நல்ல பசங்க.... அவங்க வாழ்க்கையை அவங்க நல்லபடியா வாழ்வாங்கன்னு எனக்கும் நம்பிக்கை இருக்கு.... " என்றார்.....
அனைவரும் ராஜாவிற்கு சப்போர்ட் செய்யவும் ஒரு வழியாக சுந்தரமும் அவர்களின் திருமணத்திற்கு சம்மதித்தார்.....


திருமணத்தை நடத்தி வைக்க
முடிவெடுத்து விட்டு பெரியவர்கள் அவரவர் அறைக்கு சென்று விட சின்னவர்கள் அனைவரும் மொட்டை மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்....

சிஷியும் அசோக்கும் ராஜாவின் கழுத்தை நெறிப்பது போல அவன் கழுத்தின் அருகில் கையை வைத்து நெறிப்பதை போல கொண்டு சென்று "படுபாவி எங்களை மாட்டி விட்டுட்டு ஒன்னும் தெரியாதவன் மாதிரி இங்கே வந்து உட்கார்ந்து இருக்கியா...." என்றனர்....

" நண்பா இப்படி எல்லாம் அநியாயமா பொய் சொல்லாதே..... நான் எங்கே உங்களை மாட்டி விட்டேன்....'
"அந்த பெருசுங்ககிட்ட எங்களை கோர்த்துவிட்டியே அதை தான் சொல்றேன்...""என்ன மச்சி நான் சொல்றது சரிதானே...""ஆமா மச்சி நம்மளை மாட்டி விட்டுட்டு வந்துட்டான்...."

" அப்படி என்ன நண்பா மாட்டி விட்டேன்... சொல்லிட்டாவது திட்டுங்க நண்பர்களே....."
"அந்த நாட்டாமைகள் கிட்ட பூஜாவை மூணு மாசம் காட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லி ஐடியா குடுத்தது நாங்க தான்னு சொல்லிட்டு வந்தியே அதை தான் சொல்றோம்....""நீங்க சொன்னதை தானே நான் சொன்னேன்.... உண்மையை சொன்னது கூட தப்பா நண்பா....."

"தப்பு இல்ல ராஜா... தப்பே இல்ல.... உனக்கு போய் ஐடியா கொடுத்தோம் பாத்தியா.... நாங்க பண்ணது தான் மிகப்பெரிய தப்பு....." என்று ஆண்கள் மூவரும் இங்கு பேசிக் கொண்டிருக்க பெண்கள் மூவரும் அதற்கு எதிர் புறம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.....

"நாளைக்கு கெடா வெட்டு.... நல்லா ஒரு புடி பிடிச்சிருணும் எலி.....""ஆமா விதி இந்த மாதிரி சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு...."

"பூவு உன் மேரேஜ் கூட எங்க மேரேஜ் மாதிரி அதிரடியா தான் நடக்கும் போல இருக்கு...... ஆனா பரவால்ல பூவு உனக்கு வரப்போற மாப்பிள்ளையாவது தைரியமா எல்லாருக்கும் முன்னாடி பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ண போறாரு.... என் புருஷனும் எலி புருஷனும் தான் இருக்காங்களே யார்கிட்டயும் கேட்காமல் கல்யாணம் பண்ணிட்டாங்க...."

"என்ன அண்ணி..... ரெண்டு பேருக்கும் என் அண்ணன்கள் மேல் இருக்கும் கோவம் குறையலை போல தெரியுது...."

"அவங்க பண்ண வேலைக்கு வேறு யாரா இருந்தாலும் வெட்டு குத்து நடந்து இருக்கும் ஊருக்குள்...."


"அவங்களை மாதிரி மாப்பிள்ளை கிடைக்க நீங்க ரெண்டு பேரும் ரொம்பகொடுத்து வச்சிருக்கணும்..."

"என்ன சமி நீ ஏதும் சொல்லாமல் இருக்க....."
"ஒன்னும் இல்ல அண்ணி.... சும்மாதான்....."
"நான் கேட்ட கேள்விக்கும் நீ சொன்ன பதிலுக்கும் சம்பந்தமே இல்லையே....."

"சம்பந்தம் இருக்கும் அண்ணி... நமக்கு தான் தெரியாது..." என்றாள் பூஜா...."அக்கா ஏன் பேய் அடிச்ச மாதிரி இருக்கீங்க....." சமி அமைதியாக இருக்கவும் "ஒருவேளை தீரன் அண்ணா அடிச்சிட்டாரோ...." என்றாள்

"தீரன் மாமாவா அவரை பார்த்தால் அடிக்கிற மாதிரி தெரியலையே....."
"அடிக்கிறதுனா கையால் மட்டும் அடிக்கிறது இல்ல பூவு..... வாயால் அடிக்கிறது..... ஒருவேளை வாயால் அடி வாங்கிருப்பா போல....." என்ற அஞ்சலி ஆண்களை திரும்பி பார்த்தாள்.....

அதே நேரம் ஆண்கள் அனைவரும் பேசி முடித்துவிட்டு பெண்களிடம் வந்தார்கள்......

"நாங்க எல்லாரும் ஒரு முடிவு பண்ணி இருக்கோம்....." என்றான் அசோக்..."அப்படி என்ன முடிவு பண்ணியிருக்கிங்க.."

"நாளைக்கு நாங்க எல்லாரும் பட்டு வேட்டி சட்டை ஒரே போல கட்ட போறோம்..... அதேபோல நீங்க எல்லாரும் பட்டுப் புடவை ஒரே போல கட்டினால் என்ன....." என்றதும் பெண்கள் நால்வரும் ஒருவர் முகத்தை ஒருத்தர் பார்த்துக் கொண்டவர்கள் ஆண்களைப் பார்த்து நான்கு பெண்களும் சிரிக்க ஆரம்பித்தார்கள்....."எதுக்காக இப்படி சிரிக்கிறீங்க....." என்றான் அசோக்....."எங்க சிரிப்புக்கு என்ன அர்த்தம் அப்படின்னா நீங்க இப்பதான் முடிவே பண்றீங்க..... நாங்கள் ஏற்கனவே இதை முடிவு பண்ணி ஒரே மாதிரி சாரி எடுத்து மேட்சிங் பிளவுஸ் தைத்து வைத்துவிட்டோம்... என்று அர்த்தம்..." என்றாள் அஞ்சலி.....
அவள் சொன்னதை கேட்ட ஆண்கள் அனைவரும் அசடு வழிய "சரி விடுங்க..... ஆண்களை விட பொண்ணுங்க எப்போதுமே ஃபாஸ்ட் தான்...." என்றான் தீரன்...
"எல்லாரும் இங்கேயே தூங்குவோமா...." சிஷி.....
"இங்கேயா... .""ஆமா இங்கே தான்.... இந்த இடத்துக்கு என்ன குறைச்சல்..... நல்லா காத்தோட்டமா தான் இருக்கு...... நிலா வெளிச்சம் வேற எவ்வளவு அழகா இருக்கு பாரு....."
"சரி ஓகே..... இங்கேயே தூங்கலாம்......"


'நாங்க போய் தூங்குறதுக்கு தேவையான திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு வர்றோம்...... " பெண்கள் அனைவரும் தூங்குவதற்கு தேவையான பெட்ஷீட் பெட் தலையணை அனைத்தையும் எடுத்துக் கொண்டு மாடிக்கு வந்தார்கள்.......

ஆண்களுக்கு தனியாகவும் பெண்களுக்கு தனியாகவும் படுக்கையை விரித்த பெண்கள் நடுவில் இருந்த இடத்தில் அமர ஆண்களும் சேர்ந்து அமர்ந்தனர்.......

"நம்ம இப்படி எல்லாம் உட்கார்ந்து பேசுவோம் என்று கனவுல கூட நினைச்சு பாக்கலை நண்பர்களே......"
"உங்களுக்கு இருக்கிற பிஸி செட்யூலில் நீங்க இந்த மாதிரி கிராமத்துக்கு வருவீங்கன்னு நினைச்சு கூட பாக்கலை நண்பா....." என்ற ராஜாவின் தோளில் தட்டிய சிஷியும் அசோக்கும் "நாங்களாவது பிசினஸ்மேன்ஸ் மச்சி... நினைச்ச நேரம் வருவோம் போவோம்... ஆனா கவர்மெண்ட் வேலையில் இருந்துகிட்டு லீவு எடுத்து சுத்திகிட்டு இருக்கானே தீரன்..... இவன் நம்மளோட வந்ததுதான் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம்..... " என்று தீரனை பற்றி கூறினான் சிஷி......

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல மச்சி..... கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு இருந்து என்னத்த சாதிச்சேன்.... உங்க கூட வந்துட்டு வெட்டியா காட்டை சுத்தி பார்த்தது தான் மிச்சம்..... அதுக்கு ஒரு மெடல் கொடுத்து மூணு மாசம் லீவும் கொடுத்து இருக்காங்க....." என்று கிண்டலாக சொன்னதுடன் ராஜாவின் தோளில் கை போட்டு "நீதான் மச்சி நிஜமான ஹீரோ..... நீ இல்லனா நாங்கள் காட்டுல மாட்டிகிட்டு ரொம்ப கஷ்டப்பட்டு இருப்போம்.... அசால்டா ப்லைட்டை ஹை ஜாக் பண்ணுணீங்க பாரு சூப்பர்டா மச்சி......."

"நண்பா அப்படி எல்லாம் எதுவும் இல்லை... எங்களுக்கு மலையை காப்பாத்தணும்...... அதோட அந்த டெரரிஸ்ட் புடிச்சு கொடுக்கணும்..... அதுக்கு என்னால முடிஞ்ச உதவியை பண்ணேன் அவ்வளவுதான்...... இதுல நமக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணது மேஜர் தான்......"

" பழைய கதையை விட்டுட்டு புதுசா பேசுங்கப்பா......" என்ற பிரகதி "ராஜா பூஜா மேரேஜ் பத்தி பேசலாமா...." என்றாள்......


"பேசலாமே...... சரி சொல்லு ராஜா. . உனக்கு மேரேஜ் காட்டில் நடக்குமா இல்ல இங்கே கிராமத்துல கல்யாணம் பண்ணிக்க விருப்பமா....."
"என்னுடைய விருப்பமா நான் இங்கே ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு காட்டுல போய் ஒரு கல்யாணம் பண்ணிப்பேன்.... எங்க குல வழக்கப்படி......"

"மாமா நாமும் திரும்பவும் இப்படி மேரேஜ் பண்ணிக்கலாமா....." என்று சிஷ்யை பார்த்து பிரகதி கேட்க "சூப்பர் ஐடியா அசோக் நம்மளும் இன்னொரு மேரேஜ் பண்ணிக்கலாமா....." என்றாள் அஞ்சலி....."ஒரு தடவை உன்னை கல்யாணம் பண்ணதுக்கே அவ்வளவு பாடு..... இதுல இன்னொரு முறை உன்னையவே கல்யாணம் பண்ணிக்கணுமா..... ஆள விடு சாமி....." என்றதும் "போடா...." என்றாள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.....
"சரி ராஜா பூஜா மேரேஜ் பத்தி பேசலாமா....."

"ராஜா பூஜா கல்யாணத்தை பத்தி பேச என்ன இருக்கு..... எப்படியும் பெரியவங்க கல்யாணத்துக்கு சம்மதிச்சுருவாங்க... அதுக்குப் பிறகு பர்ச்சேசிங் தான்....."

"நீ நான் எலி மூணு பேரும் ஒரே மாதிரி சாரி எடுத்துக்கலாம்..... ஒரே மாதிரி டிசைன் வைத்து பிளவுஸ் தச்சுக்கலாம்..... என்ன சொல்றீங்க...""எனக்கு ஓகே அண்ணி....."
"அக்கா அப்போ எனக்கும் அதே மாதிரி தான் வேணும்.....""அடியே நீ கல்யாணம் பொண்ணு..... உனக்கு வேற மாதிரி டிஃபரண்டா எங்களோடதை விட இன்னும் அழகா தைச்சு தர சொல்றோம்......""அப்போ ஓகே....." என்றதும் தலையில் அடித்துக் கொண்ட சமிக்ஷா "இவளை எல்லாம் திருத்தவே முடியாது....." என்றாள்.....
"கல்யாணம் மட்டும் பண்ணி வைங்க..... அப்புறம் நான் கூட்டிட்டு போய் திருத்திக்கிறேன்......" என்றான் ராஜா....."கொழுந்தனார் மேரேஜ்க்கு அவசரப்படுற மாதிரி தெரியுதே.. அண்ணி.."
"உன் அண்ணன்களை விட கொஞ்சம் ஸ்லோ தான்..... " என்ற அஞ்சலி பிரகதியுடன் ஹைபை போட்டு கொண்டாள்.....

"அண்ணி..... " என்று சமி சிணுங்க அவள் எதிராக நின்றிருந்த தீரனோ மனைவியையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்......


முல்லை : 60
ராஜா பூஜாவை தனக்கு திருமணம் செய்து கொடுத்தால் அவளை திருத்தி விடுவதாக கூறவும் சமி ராஜாவை பார்த்து "அப்போ காட்டுக்கு கூட்டிட்டு போன பிறகு பூஜாவுடைய இந்த சின்ன சின்ன ஆசைகளை கூட விட்டுட சொல்வீங்களா..." என்றாள் சமி கவலையோடு.....

சமியின் கேள்வியில் நண்பர்கள் சற்று அதிர்ந்து ராஜாவை பார்த்தனர்.... "இப்போ தான் இவனை மலை இறக்கி மேரேஜ்க்கு சம்மதிக்க வைத்தோம்.... இவளை மாதிரி யாராவது ஏதாவது சொல்லி திரும்பவும் ராஜாவை காட்டுக்கு விரட்டி விட்ருவாங்க போல... " என்று சலித்து கொண்ட அசோக் "சமி தேவையில்லாத கேள்வி எல்லாம் எதுக்காக கேட்கிற.... " என்று கடிந்து கொண்டான்....."நான் ஒன்னும் தேவை இல்லாமல் பேசலை அண்ணா.... பொண்ணுங்க நாங்க ஆசைபடுறதே ட்ரஸ் & ஜ்வல்ஸ்க்கு மட்டும் தான்... அதனால் தான் என் தங்கச்சிக்கு காட்டில் இது கிடைக்குமா கிடைக்காதான்னு கெட்டு தெருஞ்சுக்குறேன்.... ஆம்பிளைங்க உங்களை பொறுத்த வரை மூணு வேலை சாப்பாடு சாப்பிட்டு வேலைக்கு போனால் போதும்... ஆனால் வீட்டில் இருக்கும் எங்களுக்கு புருஷனோட அப்பப்போ ஊர் சுத்தனும்... அப்படி ஊர் சுத்தும் போது அவர் வாங்கி தரும் ஒரு முழம் பூவை அவரே தலையில் வைக்கனும்... பீச்சுக்கு கூட்டிட்டு போய் அலைகள் காலில் உரச அவர் கையை பிடித்து நடக்கனும்.... ஷாப்பிங் கூட்டிட்டு போய் அவருக்கு பிடித்த ட்ரஸ் எடுத்து குடுக்கனும்..... இன்னும் இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷங்கள் எவ்வளவோ இருக்கு... அதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்... என்னிக்காவது ஒருநாள் அண்ணிகளை கூட்டிட்டு வெளியே போய் இருப்பீங்களா... அப்படியே போனாலும் அது பிஸ்னஸ் மீட்டா தான் இருக்கும்.... இவ்வளவு ஏன் மேரேஜ் முடிந்து எவ்வளவு நாளாகுது.... ஹனிமூனுக்கு தான் கூட்டிட்டு போனீங்களா.... அண்ணியை கூட்டிட்டு ஆபிஸ் போறீங்க... அவ்வளவு தான்... அட்லீஸ்ட் ஆபிஸ் போகும் போதாவது வழியில் எங்காவது நிறுத்தி ஒரு ஐஸ்கிரீம் அல்லது வேறு ஏதாவது வாங்கி கொடுத்து இருக்கீங்களா.... நீங்களே அவங்க அவங்க வொய்ப்புக்கு எதுவும் செய்தது இல்லை.... அப்படி இருக்கும் போது என்னை மிரட்டாதீங்க.... என் தங்கச்சிக்காக நான் கேட்க தான் செய்வேன்.... " என்று முடித்தாள் சமி...."அது என்ன சமி... தங்கச்சிக்காக மட்டும் கேட்கிற... எங்களுக்காக கேட்க மாட்டியா... " என்று அஞ்சலி கேட்க "அண்ணி நீங்களே பேசாமல் இருக்கும் போது நான் எப்படி கேட்க.... ஒருவேளை இதெல்லாம் உங்க பொறந்த வீட்டுக்காரங்க கேட்கலாம்... அது நியாயம்... நான் கேட்டால் அது தப்பு.. உங்க லைபை எப்படி லீட் பண்ணனும்னு நீங்க தான் டிசைட் பண்ணனும்.... " என்றாள்...
"வெல் செட் சமி.... இப்போ நீ சொன்ன மாதிரி உன் தங்கையும் தங்கை ஹஸ்பண்டும் தானே அவங்க லைபை நினைத்து கவலைபடனும்.... நீ எதுக்காக இவ்வளவு யோசிக்கிற... ஒருவேளை தீரன் அண்ணாகிட்ட ஆசைபடுற விஷயங்களை இந்த நேரத்தில் சொல்ல நினைத்து பேசுறியோ..." என்று கேட்டாள் பிரகதி.....


"ஐயோ அண்ணி... அப்படி எல்லாம் இல்லை.... நான் பூஜாவை நினைத்து தான் பேசினேன்.... " என்று பதறியபடி கூறியவளை சிறு நமட்டு சிரிப்புடன் பார்த்த அஞ்சலி "எனக்கு என்னவோ நீ உன் ஆழ் மன ஆசைகளை இங்கே வைத்து தீரன் அண்ணாவிடம் சொன்னால் தான் அவர் நிறைவேத்தி தருவார்னு பேசின மாதிரி தான் இருந்துச்சு சமி.... இதை தான் எங்க ஊரில் பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்பதா சொல்வாங்க... " என்று முடித்தாள்....

சமியோ பாவமான முகத்துடன் தீரனை பார்த்து "நான் எனக்காக சத்தியமா சொல்லவே இல்லை தீரன்.... பூஜாவுக்காக மட்டும் தான் யோசித்தேன்.... உங்க வேலை பத்தி நல்லா தெருஞ்சும் நான் எப்படி ஆசைபடுவேன் சொல்லுங்க... நிஜமா நான் பூஜாவுக்காக மட்டும் தான் யோசித்தேன்... நான் 8வது படிக்கும் போது பூஜாவை பெரியப்பா வீட்டுக்கு கூட்டிட்டு வந்தார்... அப்போ அவளும் 8வது தான் படித்தாள்.... முதலில் அவள் வந்தது எனக்கு பிடிக்கலை.. இளவரசியா ஒரே ஒரு செல்ல பொண்ணா சுத்தி வந்த இடத்தில் இன்னொரு பொண்ணு போட்டியா வந்ததால் கொஞ்சம் கோபம்... பெரியப்பா அவள் மேல் அதிக அக்கறை காட்டியதால் பொறாமை வந்துச்சு... ஆனால் போக போக அக்கா அக்கான்னு பின்னாடியே சுத்தி சுத்தி வந்த இவள் மேல் என்னை அறியாமலே பாசம் வச்சுட்டேன்.... சின்ன வயதில் என்னை கேட்காமல் எதுவும் செய்ய மாட்டாள்.... ஆனால் இப்போ வளந்துட்டா இல்லையா அண்ணி.. . அதான் லவ் பண்ற விஷயத்தை எங்கிட்ட சொல்லவே இல்லை.... சின்ன வயதில் பெரியம்மா இவளை திட்டினாலோ அடித்தாலோ முதல்ல ஓடி வந்து எங்கிட்ட தான் சொல்வா.... நானும் இவளுக்காக பெரியம்மாவை பழி வாங்க அவங்க போற வழியில் எண்ணை ஊத்தி கீழே விழ வைப்பேன்... அப்படி இல்லைனா அவங்க சாப்பாட்டில் மிளகாய் தூளை கலந்துடுவேன்.... இப்படி ஏதாவது ஒரு வகையில் அவங்களை கஷ்டப்படுத்தி பூஜாவை சிரிக்க வைப்பேன்.... ஒரு நல்ல அக்காவா ப்ரண்டா தான் அவளோடு பழகினேன்... ஆனால் இப்போ அவள் என்னை விட்டு ரொம்ப தூரம் போயிட்டா... " என்று அழுதவளை "அக்கா... " என்று கதறி கொண்டு வந்து அணைத்து கொண்டாள் பூஜா...."அக்கா அப்படி எல்லாம் இல்லை அக்கா.... நீங்க அப்பவும் இப்பவும் எப்பவும் என்னோட பெஸ்ட் ப்ரண்ட் தான் அக்கா... நான் இவரை இன்னிக்கு லவ் பண்ணலை அக்கா.... எட்டாவது படிக்கும் போதில் இருந்து கிங் என் மனதில் இருக்கான் அக்கா... நான் நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி இருந்தே அவனை எனக்கு தெரியும் அக்கா... நீங்க எனக்கு உறவாகறதுக்கு முன்னாடி என் மொத்த உறவாகவும் இருந்தது கிங் மட்டும் தான் அக்கா... அப்போ அந்த வயதில் நடந்ததை உங்ககிட்ட சொல்ற அளவுக்கு நெருக்கம் வரலை... அப்படி நெருக்கம் வந்த போது அறிமுகப்படுத்த கிங் என் கூட இல்லை.... எங்கேயோ போயிட்டான்..... நான் 10த் படிக்கும் போது அசோக் அண்ணா இவனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தார்.... ஆனால் இவன் என்னை பார்க்கலை.... நான் இவனையே தான் பாத்துட்டு இருந்தேன்... அதை கவனித்த சிஷி அண்ணா என்னை திட்டினார்.... இது படிக்கிற வயசு... மனசை அலைபாய விடாதேன்னு... அப்போ அவர்கிட்ட நான் என் காதலை பத்தி சொன்னேன்.... என்னிக்கு இருந்தாலும் கிங்குக்காக காத்திருப்பேன்னு சொன்னேன்.... அப்போதைக்கு அண்ணா எதுவும் சொல்லலை.... ஆனால் ஒரு வாரம் கழித்து அசோக் அண்ணாவோடு என்னை வந்து பார்த்த சிஷி அண்ணா ராஜாவை கூட்டிட்டு வந்து உன்னோடு சேர்த்து வைப்பது என் பொறுப்புன்னு சொன்னார்... இதோ எனக்காக என் அண்ணனுங்க அவனை கூட்டிட்டு வந்துட்டாங்க.... அண்ணாகிட்ட சொன்னது போல உங்ககிட்ட என்னால சொல்ல முடியலை சமி அக்கா... நீங்க என் எதிர்காலத்தை பத்தி நிறைய கனவு கண்டு வச்சு இருந்தீங்க.... உங்ககிட்ட வந்து நான் காட்டுக்கு போறேன்னு சொல்றதுக்கு தயக்கமா இருந்துச்சு.... " என்று முடித்த பூஜா "ஸாரிக்கா... என்னை மன்னிச்சுடு.... நான் சுயநலமா யோசிச்சு தப்பு பண்ணிட்டேன்... ஐ ஆம் ரியலி சாரிக்கா..." என்றாள்....தங்கையின் தலையை வருடி கொடுத்த பூஜா "பரவாயில்லை பூஜா.... இந்த மேரேஜ் தான் உனக்கு சந்தோஷத்தை குடுக்கும்னு இப்போ எனக்கு தெளிவா புரியுது..... நீ உன் கிங்கை தாராளமா மேரேஜ் பண்ணிக்கோ..." என்று கூறி பூஜாவின் நெற்றியில் முத்தமிட்டாள் சமிக்ஷா.....
சமி முத்தமிட்டதை கண்டு பூஜாவை பொறாமை பொங்க பார்த்தான் தீரன்....தீரனின் பார்வையை கண்டு கொண்ட பூஜாவும் "மாமா என்னை பார்த்து பொறாமைபடுறீங்க போல..... உங்க பொண்டாட்டி உங்களுக்கு தான்...
ஒரு சாதாரண முத்தம் கொடுத்ததற்கு இவ்வளவு பொறாமையா....." என்று கேட்கவும் சமி தன் கணவனை திரும்பி பார்க்க அவன் கண்களில் தெரிந்த காதலில் கட்டுண்டு பார்வையை விளக்காமல் அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்...... அதைக் கண்டு மற்றவர்கள் "ஓஹோ...." என்று கத்த அவர்களின் குரலில் தன்நிலை மீண்டாள் பூஜா......


தீரனும் தன் தலையை கொத்திக் கொண்டவன் "ஏண்டா இப்படி பண்றீங்க..." என்றான்.....
"ஹலோ மாம்ஸ்..... நாங்க எல்லாரும் இருக்கும் போது உங்களுக்கு மட்டும் என்ன தனியா ரொமான்ஸ்...." என்று பூஜா கேட்க அதற்கு அஞ்சலியும் பிரகதியும் ஒரே குரலில் "அதானே நாங்க எல்லாம் சுத்தி இருக்கும் போது அங்க என்ன ரொமான்ஸ் தனியா ஓடுது....."என்றார்கள்..."நாங்க எந்த ரொமான்ஸூம் பண்ணலை.... சும்மா பார்த்தது கூட தப்பா...." என்றான் தீரன்,....

"மாமா சும்மா சொல்லாதீங்க..... நீங்க அக்காவை எப்படி பாத்தீங்கன்னு நாங்க எல்லாரும் பார்த்துட்டு தான் இருக்கோம்......"

"ஓ .... அப்போ ராஜா உன்னை இப்படி தான் பாத்துட்டு இருக்கானோ..... பாம்பின் கால் பாம்பறிய மாதிரி நீ எங்களை பார்த்து ரொமான்ஸ் பார்வைன்னு சொல்றியா.....""என் கிங் என்னை பாத்துட்டாலும்... இன்னைக்கு வரைக்கும் என் முகத்தை கூட ஒழுங்கா பார்த்ததில்லை..... இந்த லட்சணத்துல காதல் பார்வையா..... அவன் அந்த அளவுக்கு எல்லாம் ஒர்த்தில்ல மாமா...." என்றதும் ராஜாவை பார்த்து கேலியாக சிரித்தான் தீரன்......"முதல்ல சமியோட ஆசையெல்லாம் நிறைவேத்து.... அதுக்குப் பிறகு என்னை கேலியாக பாக்கலாம்..... இவர் பெரிய ரொமான்ஸ் மன்னன்..... என்னை கிண்டல் பண்றாரு..... காதல் கிலோ என்ன விலைன்னு கேக்குறவன் காதலை பத்தி பேசுறான்....." என்று தீரனை பதிலுக்கு கிண்டல் அடித்தான் ராஜா..... இதை கண்டு சிஷியும் அசோக்கும் வாய்க்குள் சிரிக்க அதைப் பார்த்த பிரகதியும் அஞ்சலியும் "ஹலோ... ஹலோ... அவங்களை கிண்டல் பண்றதுக்கு முன்னாடி சமி சொன்ன ஒரு விஷயத்தை கூட நீங்க இதுவரைக்கும் பண்ணதே இல்லை.... என்னைக்காவது எங்களை வெளிய கூட்டிட்டு போய் இருக்கீங்களா.... நீங்க ரெண்டு பேரும் தான் ஜோடி போட்டுகிட்டு எங்கே போனாலும் சுத்திகிட்டு இருக்கீங்க.... எங்களை மேரேஜ் பண்ணிக்காமல் நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி இருக்கலாம்....." என்றதும் தீரனும் ராஜாவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.....

சமியும் பூஜாவும் கூட தங்களுக்குள் சிரித்துக் கொள்ள அண்ணிகளிடம் அண்ணன்கள் படும் பாட்டை பார்த்த பூஜாவும் சமியும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் போராடினர்......
"அண்ணா இதுக்கு மேல எங்களால முடியாது...." என்று கூறிவிட்டு அவர்களும் ஆண்களின் சிரிப்பில் கலந்து கொண்டனர்.... "இந்த அவமானம் உங்களுக்கு தேவையா....." என்றான் தீரன்......
 
Top