வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

முல்லை சிரிப்பில் மூர்க்கம் தவிர்த்தவள் கதைதிரி...

முல்லை : 7
சிஷியும் அசோக்கும் பேசி சிரித்த அதே நேரத்தில் அஞ்சலியும் பிரகதியும் கேபினுக்குள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து கட்டி புரண்டு சண்டை போட்டனர்..





"உன்னால் தான் விதி என் மானம் போச்சு.." என்று திட்டிய அஞ்சலி பிரகதியின் முடியை பிடித்து உலுக்க பிரகதியோ "அசிங்கப்பட்டா எலி.. ஹா.. ஹா.. ஹா.." என்று சிரிக்கவும் மேலும் கோபமானாள் அஞ்சலி..
இவர்களின் அடிபிடி தகறாரை பார்த்து மிரண்டு போன வைஷாலி கேபினின் ஒரு மூலையில் சென்று அமர்ந்து கொண்டாள்..




அஞ்சலியும், பிரகதியும் கேபினில் கட்டி பிடித்து உருண்ட நேரத்தில் இவர்களது டீமின் மற்ற இரு ஆண்களும் கேபின் கதவை திறந்து உள்ளே வர தோழிகளின் கூச்சலில் மொத்த ஆபிஸும் இவர்கள் கேபினை தான் பார்த்தது.. அதன் பிறகு சற்று சுதாரித்த பிரகதி கீழே இருந்து எழுந்து தன் சேரில் அமர்ந்து கம்யூட்டரை ஆன் செய்தாள்.. இங்கு என்ன நடந்தது என்றே தெரியாததை போல் பிரகதி வேலை செய்ததை பார்த்து கோபத்தில் பல்லை கடித்த அஞ்சலியும் அமைதியாக வேலையை தொடங்கினாள்..





தோழிகள் மட்டும் வேலை பார்க்க அதே கேபினின் மூலையில் ஷாக்காகி நின்ற வைஷாலியையோ, இவர்கள் டீமின் இரு ஆண்களும் கதவின் அருகே நின்றதையோ மற்ற அலுவலக ஊழியர்கள் அனைவரும் இவர்களையே பார்த்தவாறு வேலை செய்யாமல் இருப்பதையோ கருத்தில் கொள்ளாமல் கோடிங்கில் தன் கவனத்தை பதித்து சின்சியர் சிகாமனிகளாக வேலை பார்த்தனர்..
இவை அனைத்தையும் சி.சி.டி.வி மூலமாக சிஷியும், அசோக்கும் ஹார்ட் அட்டாக் வராத குறையாக அதிர்ந்தவாறு பார்த்தனர்..




"மச்சி நம்ம எதிர்காலம் என் கண் முன்னாடி பிரகாசமா தெரியுதுடா.. யோசித்து பார்.. பிரகதி உன் ஹேரையும், அஞ்சலி என் ஹேரையும் பிடித்து ஆட்டுவதை போல் .. ஐயோ அம்மா.. இப்பவே கண்ணை கட்டுது மச்சி.. இந்த பத்ரகாளியால என் வீட்டில் தினம் தினம் கச்சேரி போல..." என்று சோகமாக சொன்ன அசோக்கை அழுத்தமாக பார்த்த சிஷி "கம்.." என்றவாறு வெளியே வந்தான்..





எம்.டி கேபினில் இருந்து வெளியே வருவதை பார்த்து ஒரு சிலர் பயப்பார்வை பார்க்க ஒரு சிலர் வேலையை தொடர என்றிருக்க அவர்கள் அனைவரும் மீட்டிங் ஹாலுக்கு போக சொன்ன சிஷியும் அசோக்கும் பிரகதி & அஞ்சலி கேபினுக்கு சென்றனர்..




வைஷாலி மற்றும் இரு ஆண்களை கண் ஜாடையில் மீட்டிங் ஹாலுக்கு போக சொன்ன சிஷி அவர்கள் கேபினை விட்டு வெளியேறியதும் கம்ப்யூட்டரில் தலையை கொடுத்து இருந்த இருவரையும் கோபமாக பார்த்த சிஷி "டூ யூ ஹாவ் எனி சென்ஸ்.. இப்படி தான் ஆபிஸ்ல அடுச்சுப்பீங்களா.. இட்ஸ் நாட் எ பிஸ் மார்கெட் யூ இடியட்ஸ்.." என்று கத்த அவர்களோ அப்போதும் தலையை நிமிர்த்தாமல் வேலை பார்ப்பதை கண்டு கண்கள் சிவக்க "லுக் அட் மீ இடியட்ஸ்.." என்றான்..







சிஷி திட்டுவதையும் அதற்கு தோழிகளின் ரியாக்ஷனையும் பார்த்து இதுங்க தேறாது என இடவலமாக தலையாட்டியவன் "ஸார் மீட்டிங் போங்க.. அங்கே ஸ்டாப்ஸ் உங்களுக்காக வெயிட் பண்றாங்க.. இவர்கள் நம்ம கேபினில் வெயிட் பண்ணட்டும்.. பனிஸ்மெண்ட்டை பிறகு பார்க்கலாம்.. மற்ற ஸ்டாப்ஸ் ஒர்க்கிங் டைம் வேஸ்ட் ஆகுது.. " என்றான்.





"இவர்களை நம்ம கேபினுக்கு கூட்டிட்டு போ.. நீ மீட்டிங் வரவேணாம்.." என்று கூறிய சிஷி மீட்டிங் ஹாலுக்கு விரைந்தான்..





சிஷி உள்ளே சென்ற அடுத்த நிமிடம் இதுவரை முணுமுணுத்த பேச்சுக்கள் சட்டென நின்று போய் பின்ட்ராப் சைலன்ட் ஆனது அந்த ஹால்..
"வெல் நீங்க தானே அவர்களோட டீம் லீடர்.." என்றான்..



டீம் லீடரும் சற்று தயக்கத்துடன் மெல்லிய குரலில் "யெஸ் சார்.. நான் தான் அவங்க டீம் லீடர்.." என்றான்...



"மேனேஜர்.." என்று கூப்பிட அவரும் வந்து முன்னே நின்றார்..




"மேனேஜர் இந்த ஆபிஸில் எத்தனை வருஷம் வொர்க் பண்றீங்க.."





"கம்பெனி ஸ்டார்ட் பண்ணதுல இருந்து சார்.."




"விச் இயர்ஸ்.."



"7இயர்ஸ்.. சார்.."
"இந்த 7வருடத்தில் நம்ம கம்பெனி ஸ்டாப்ஸ் டூட்டி டைமில் வேலை செய்யாமல் இருந்தால் என்ன பனிஸ்மெண்ட் குடுத்து இருக்கேன்.."




"பயர் பண்ணிடுவீங்க சார்.."



"இப்போ இங்கே நிற்கும் அத்தனை பேரும் இன்க்ளூடிங் யூ வேலையை பார்க்காமல் வேடிக்கை பார்த்தீங்க.. இப்போ உங்களுக்கான பனிஸ்மெண்ட் என்ன.."




"சார் சாரி சார்.." என்று அனைவரும் கோரஸ் பாட அவர்களை கை நீட்டி தடுத்தவன்




"நா இப்போ மேனேஜர்கிட்ட மட்டும் தான் பேசுறேன்.. சோ கீப் கொய்ட்.." என்றவன் மேனேஜரிடம் திரும்பி "கமான் டெல் மீ .. என்ன பனிஸ்மெண்ட் கொடுக்கலாம்.. "




"பயர் பண்ணனும் சார்.. பட் .."



"பட்.. "




"எங்க பேமிலியை மைண்ட் பண்ணி எங்களுக்கு இன்னொரு சான்ஸ் கொடுத்தால் இந்த மிஸ்டேக் திரும்பவும் நடக்காதுன்னு உறுதி கொடுக்கிறோம் சார்.. இந்த வேலையை நம்பி தான் எங்க எல்லாருடைய பேமிலியும் இருக்கு.. சார்.." என்று தயங்கி தயங்கி ஒருவாறாக சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடித்தார் மேனேஜர்..



"வெல்.." என்று தாடையில் கை வைத்து வருடி கொண்டவன் "பிரகதி, அஞ்சலி ரெண்டு பேருக்கும் நீங்க தான் நம்ம கம்பெனி ரூல்ஸ் பத்தி சொல்லி இருக்கனும்.. சொன்னீங்களா.. " என்றான்..




"யெஸ் சார்.. நம்ம கம்பெனி பத்தி ஃபுல் டீடைல்ஸ் சொல்லி தான் அக்ரிமெண்ட்ல சைன் வாங்கினேன்.."




"அப்படி இருந்தும் அவங்க அதை ஃபாலோவ் பண்ணலை.. சோ இது அவங்க ஃபால்ட் அப்படின்னு சொல்றீங்க.."




"அவங்க ரெண்டு பேரும் ரூல்ஸ் ஃபாலோவ் பண்ணலைன்றது எந்த அளவுக்கு உண்மையோ அதே போல நாங்க எல்லாரும் ரூல்ஸ் ஃபாலோவ் பண்ணலை அப்படின்றதும் உண்மை தான் சார்.. இன்பாக்ட் அவங்க ரெண்டு பேரும் கேபினுக்கு உள்ளே தான் அதுவும் ஆபிஸ் டைம் ஸ்டார்டாகறதுக்கு முன்னாடி விளையாடினாங்க.. ஆனால் நாங்க ஆபிஸ் டைம் ஸ்டார்டாகி வேலையை விட்டுட்டு வேடிக்கை பார்த்தோம்.. பட் அவங்க அந்த டைம்ல அதாவது ஆபிஸ் டைம்ல வொர்க் பண்ணிட்டு தான் இருந்தாங்க.." என்ற மேனேஜரை பார்த்த சிஷி "இந்த குட்டி பிசாசு மேல தப்பு இல்லைனு ஆபிஸ் ஸ்டாப்ஸை நம்ப வைக்க எவ்வளவு கஸ்டபட வேணடி இருக்கு.... " என்று மனதுக்குள் நினைத்தவன்

"அப்போ அவங்களை ஃபயர் பண்ண வேண்டாமா.."





"ஆமா சார்.. தப்பு பண்ணது நாங்க எல்லாருமே தான்.. பட் நீங்க அவங்களை ஃபயர் பண்றது நியாயம் இல்லை சார்.. வேணா மெமோ கொடுக்கலாம் சார்.." என்றார்..



"வெல்.. நீங்க சொன்னதை போல உங்க எல்லாருக்கும் நா செகண்ட் சான்ஸ் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. ஸ்பெஷலி உங்களுக்காக தான் மேனேஜர் சார்.. எவ்வளவு நியாயமா பேசுறீங்க.. ஐ லைக் இட்.. அண்ட் கைஸ்.. இனி ஒருமுறை இந்த மாதிரி வொர்க்கிங் டைமில் வேலை நடக்காமல் இருந்தால் பனிஸ்மெண்ட் ஷிவியரா இருக்கும்.. கோ & டூ யுவர் வொர்க்." என்று ஸ்டாப்ஸை அனுப்பியவன் சேரில் அமர்ந்து மூச்சை இழுத்து விட்டான்..





பிறகு அசோக்கை தோழிகளுடன் ஹாலிற்கு வர சொல்லி கால் செய்தான்..




அசோக்கின் பின்னே அஞ்சலியும், பிரகதியும் பாவமான முகத்துடன் உள்ளே வந்தனர்..





சிஷி "சிட்.. " என்ற உடன் கீ கொடுத்த பொம்மை போல சேரில் அமர்ந்தனர்..




"நீங்க பண்ணது சரியா.."




"நாங்க எதுவும் பண்ணலை சார்.." என்று இருவரும் கோரஸ் பாடினர்..
அவர்களை திரும்பி முறைத்த அசோக் & சிஷியின் பார்வையை தயங்காமல் எதிர் கொண்டனர் தோழிகள்..




"மிஸ்.பிரகதி ஆபிஸில் கட்டி உருண்டு சண்டை போட்டது சரியா.." என்றான் சிஷி..





"அது வந்து...." என்று இருவரும் பேச தொடங்க கை நீட்டி தடுத்தவன் "மிஸ்.அஞ்சலி நா பிரகதிகிட்ட தான் கேட்டேன்.. சோ யூ கீப் கொய்ட்.. " என்றவன்


"சொல்லுங்க மிஸ்.பிரகதி .." என்றான்..



ஐயையோ என்ன சொல்றதுனு தெரியலையே.. ரெண்டு பேரையும் கேட்டால் எலி ஏதாவது கதை சொல்லி சமாளிப்பா.. அப்படியே எஸ்ஸாகிடலாம்னு பார்த்தால் விடமாட்டான் போல.. என்று மனதுக்குள் புலம்பியவள் வெளியே பாவமாக முகத்தை வைத்து கொண்டு நின்றாள்..


"ஆன்சர் மீ யூ இடியட்.. உன்னால் இன்னிக்கு எனக்கு எவ்வளவு லாஸ் தெரியுமா.. கிளைண்ட் கால் பண்ணி வொர்க் எவ்வளவு தூரம் போய் இருக்குன்னு கேட்கிறான்.. ஆனால் நீங்க என்னனா கட்டி உருண்டு சண்டை போட்டு இதுவரை ஆபிஸில் கடைபிடித்த ரூல்ஸை ரெண்டு நாளில் குட்டி சுவராக்கிட்டு ஒன்றும் தெரியாத புள்ளை மாதிரி ஆக்ட் பண்ற.. போயும் போயும் உங்களை நம்பி அவ்வளவு பெரிய ப்ராஜக்ட்டை தூக்கி கொடுத்தேன் பாரு.. என்னை சொல்லனும்.. சேம் ஆன் யூ... யூஸ்லெஸ் ஃபெல்லோ..." என்று திட்டியவனை இடைமறித்த பிரகதி "சார் எங்க வொர்க்கை பார்த்து விட்டு பிறகு சொல்லுங்க.. பர்ஸ்ட் மெயில் ஓபன் பண்ணி பாருங்க.." என்றாள்..




சிஷியும் தனது லேப்பில் மெயில் ஓபன் செய்து பார்க்க அதில் பிரகதியும், அஞ்சலியும் தங்களது வேலையை சரியாக முடித்து மெயில் பண்ணி இருந்தனர்.. அவர்கள் டீமின் மற்ற மூவரும் அடிப்படை வேலைகளை மட்டுமே துவங்கி இருக்க இவர்களோ அதற்கும் மேலே சென்று இருந்தனர்..



தற்போது தான் காலேஜ் முடித்து வந்தவர்கள் போல இல்லாமல் அனுபவம் வாய்ந்தவர்கள் போல அவர்களின் வேலை இருந்ததை பார்த்து சிஷிக்கு ஆச்சரியமாக இருந்தது..




சிறுபிள்ளை போல சுபாவம் கொண்ட இவர்கள் வேலையில் கெட்டிக்காரர்கள் தான் என்று உணர்ந்தாலும் பாராட்டினால் இன்னும் ஏதாவது சேட்டைகள் செய்வார்கள் என்று எண்ணி "வொர்க் எல்லாம் பக்காவா தான் இருக்கு.. பட் மேனர்ஸ்னா என்னனு கொஞ்சம் தெரிந்து கொண்டால் நல்லா இருக்கும்.." என்று இருவருக்கும் பொதுவாக கூறினான்..



"சார் விளையாட்டு தனம் எங்களோட சுபாவம் சார்.. அதை யாருக்காகவும், எதுக்காகவும் நாங்க மாத்திக்க மாட்டோம்... பட் ஆபிஸ் அவர்ஸ்ல ப்ளே பண்ண மாட்டோம்னு வேணா சொல்றோம்.. மற்றபடி வீ டோண்ட் ஹேவ் சேஞ்ச் அவர் பிஹேவியர்.. இன்னிக்கு நடந்தது தவறு தான்.. சாரி.." என்றாள் பிரகதி..




அஞ்சலியும் "நானும் சாரி சார்.. இது போல எல்லாரும் வந்த பிறகு ப்ளே பண்ண மாட்டோம்.. பிலீவ் அஸ் சார்.." என்றாள்..



"ஓ.கே, இது தான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங்.. இனிமேல் ஸ்டாப்ஸ் கவனத்தை திசை திருப்புற மாதிரி விளையாடாதீங்க.. கோ.." என்றான் சிஷி..



அவர்கள் சென்ற உடன் சிஷியிடம் "மச்சி என்னடா இது.. நீயாடா இது.. ஒரு சின்ன தப்புக்கு ஃபயர் பண்றவன் இப்போ இவங்க பண்ண தப்பை இவ்வளவு சாதாரணமா விட்டுட்ட.." என்றான்..




"மச்சி இது மட்டும் இல்ல.. மேனேஜரை பேச வைத்து அவர் வாயால் நடந்ததுக்கு இவங்க காரணம் இல்ல.. விளையாடிட்டு வொர்க்கிங் டைம்ல கரெக்டா வேலையை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க.. ஆனால் மற்ற ஸ்டாப்ஸ் தான் வேடிக்கை பார்த்து வேலை செய்யாமல் இருந்தாங்க.. சோ இதுக்கும் அவர்களுக்கும் சம்மந்தம் இல்லைனு தெளிவா சொல்ல வச்சேன். எப்படி எனது ராஜதந்திரம்.."



"த்து... பண்றது ப்ராடு வேலை. இது ராஜதந்திரம்.."



"மச்சி அப்போ அஞ்சலியை ஃபயர் பண்ணிடலாமா.. "



"என்னது.. " என்று ஜர்க்கான அசோக் "மச்சி பொசுக்குனு இப்படி முடிவெடுக்க கூடாது.. ஆற அமர யோசித்து.."


"யோசித்து.."



"விட்ரு மச்சி.. என் ஆளோட கனவு, லட்சியம் நிறைவேறனும்.. அதனால் கொஞ்ச நாள் வேலைக்கு வரட்டும்.. மறுபடி ஏதாவது ப்ராப்ளம் வந்தால்.."



"வந்தால்.."



"இப்போ போல அப்பவும் மன்னித்து விட்ருலாம்.. " என்ற அசோக்கை பார்த்து இப்போது சிஷி துப்பினான்..

ஹலோ பிரண்ட்ஸ்
கதை எப்படி இருக்கு.. உங்களுக்கு பிடித்து இருக்கா.. படிக்கும் தோழிகள் கமெண்ட் பண்ணினால் நன்றாக இருக்கும்.. நன்றி ப்ரண்ட்ஸ்...

 
Last edited:
Top