GG writers
Moderator
பரந்து விரிந்திருந்த அந்தத் தோட்டத்தில் கட்டியிருந்த ஊஞ்சலில் ஆடியபடி கண்களில் சோகம் வழிய எங்கேயோ தூரத்தில் வெறித்தபடி அமர்ந்திருந்தாள் தாரணி.
'அம்மா உங்களோட ஆசையை என்னால நிறைவேத்த முடியும்னு நினைச்சி தான் இங்கே வந்தேன். ஆனா இப்போ எனக்குப் பயமா இருக்கு மா. மாமா என்னை அவ்வளவு கோபமா பாக்குறாரு. அவருக்கு எப்படிம்மா உன்னைப் புரிய வச்சி நீங்கக் கேட்டதை செய்யப்போறேன். ஆனா நீங்க என்கிட்ட கேட்டதைச் செய்ய வேண்டிய கடமை எனக்கு இருக்கு. எனக்குப் பக்க பலமா நீங்க இருக்கீங்க அப்படிங்கிற நம்பிக்கையில தான்மா நான் செய்யப் போறேன்' என்று மனதோடு தன் தாயிடம் பேசியவளின் கண்களில் கண்ணீர் சுமந்து வந்தது.
அவளின் கண்ணீரை ஒரு பிஞ்சுகரம் துடைத்தது. அதில் தன்னுணர்வு பெற்றவள் யாரென்று பார்க்க அங்கே ஒரு பத்து அல்லது பன்னிரண்டு வயதே ஆன சிறுமி ஒருத்தி இருந்தாள்.
அவளை யாரென்று பெண்ணவள் புரியாமல் பார்க்க அச்சிறு பெண்ணே,
"அக்கா அழாதீங்க... தைரியமா இருக்கணும்கா. பொண்ணுங்க எப்பவும் அழவே கூடாதுக்கா. நாம எப்பவும் தைரியமா இருக்கணும்னா அழவே கூடாதுன்னு அண்ணன் சொல்லுவாருக்கா. அழுகை எதுக்குமே தீர்வாகாதாம்." என்றாள் பெரிய மனுசியை போல.
அதைக் கேட்ட தாரணிக்கு சிரிப்பு தான் வந்தது. மெல்லப் புன்னகைத்தபடி,
"அப்படிங்களா பெரிய மனுஷி... சரி நான் இனிமே அழலை. ஆனா பாருங்க நான் இப்போ தான் உங்களைப் பாக்குறேன். உங்க பேரைத் தெரிஞ்சிக்கலாமா?" என்றாள் குழந்தையின் குதூகலத்துடன்.
"அக்கா என் பேரு பவித்ரா. நல்லாருக்கு இல்லை... எனக்கு அண்ணா தான் பேரு வச்சாங்களாம்." என்றாள் பவித்ரா சிரிப்புடன்.
"வாவ்! அழகான பேரு... பவித்ரமான பவித்ரா... அப்படித்தானே!" என்றாள் சிரிப்புடன்.
ஏனோ அந்த மழலையிடம் பேசும்போது புதிதாய் பழகுவது போல் இல்லை. அவளின் குழந்தை முகத்தில் பெரிய மனிதியான பேச்சு அவளை வியக்க வைத்தது.
"அக்கா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க முடி ரொம்ப நீளமா அழகா இருக்குக்கா." என்றாள் பவித்ரா அவளை வியந்து பார்த்த படி.
"அப்படிங்களா மேடம், ஆனா என்னைவிட வேற ஒருத்தங்க அழகா இருக்காங்களே..." என்றாள் கேலிப் பேச்சுடன்.
"இல்லைக்கா, உங்களைவிட இங்கே அழகா யாரும் இல்லை..." என்றாள் குழந்தையவள்.
"இல்லையே பவிம்மா, இங்கே என்னைவிட அழகான தேவதை ஒருத்தங்க இருக்காங்களே..." என்றாள் அவளும் விடாமல்.
"ஹைய்! அக்கா நீங்களும் அண்ணா மாறியே பவிம்மான்னு கூப்பிடுறீங்க." என்றாள் சின்னஞ்சிறிய சிரிப்புடன்.
"ஓ... அப்படியா உங்க அண்ணனை உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா? ஆமா உங்க அண்ணா எங்க இருக்காங்க?" என்றவளுக்குப் பேசிய இந்தக் கொஞ்ச நேரத்திலே மனதில் ஒட்டிக் கொண்ட பவித்ராவை நிரம்பவே பிடித்துப் போனது.
"அய்யோ அக்கா, எங்க அண்ணனை நீங்கப் பார்க்கவே இல்லையா இன்னும்... அய்யோ அய்யோ..." என்றாள் குழந்தையவள்.
"அச்சோ, நான் இன்னும் பார்க்கலையே... உங்க அண்ணா என்ன அவ்வளவு பெரிய ஆளா, இந்த ஊருக்கே தெரியற அளவுக்கு?" ஏனோ அந்தப் பேச்சு குமரியவளுக்கு மிகவும் பிடித்துப் போனது.
ஆனால் அதன் காரணம் தான் அவளுக்கு விளங்கவில்லை.
"அய்யோ ஆமாக்கா... எங்க அண்ணாவை கண்டா ஊரே பயப்படும்கா. எங்க அண்ணன் இந்த ஊருக்கே ராஜாக்கா..." என்றாள் பொங்கி வழியும் பெருமையுடன்.
"அடேங்கப்பா போதும்டா உங்க அண்ணாவோட புராணம். ஆமா இங்கே நீ என்ன பண்ற?" என்றாள் அவளை அருகில் இழுத்து ஊஞ்சலில் அமர வைத்தபடி.
"இங்கே எங்க அம்மாவைப் பார்க்க வந்தேன்கா" என்றாள் சிரிப்புடன்.
"உங்க அம்மா இங்கே இருக்காங்களா, யாருடா அது?" என்றாள் சுற்றியும் பார்த்தபடி.
"எங்க அம்மா பேரு மஞ்சுளா அக்கா. இங்கே தான் வேலை பாக்குறாங்க." என்றாள் புன்சிரிப்புடன்.
"நீ மஞ்சுளாவோட பொண்ணா... மஞ்சுளாவுக்கு இவ்வளவு பெரிய பொண்ணா... ஐ கான்ட் பிலிவ் திஸ்!" என்றாள் ஆச்சரியமாக.
"எதனால அக்கா நம்ப முடியலை?" என்றது அந்தச் சிறு மொட்டு.
"இல்லை பவிம்மா, அவங்களே சின்னப் பொண்ணு மாறித் தான் இருக்காங்க. அவங்களுக்கு இந்த வயசுல ஒரு பொண்ணுங்கிறதை தான் நம்ப முடியலை." என்றாள் பவித்ராவை பார்த்தபடி.
அதே நேரம், "பவித்ரா..." என்ற அழைப்புடன் அங்கே வந்தாள் மஞ்சுளா.
"இங்கே இருக்கியா பவி... அம்மாவை ஏன்டா தொந்தரவு பண்ற?" என்று குழந்தையைக் கண்டித்தவள் சிறிய சிரிப்புடன் திரும்பித் தாரணியை பார்த்து,
"அம்மா மன்னிச்சிருங்க... இது என்னோட பொண்ணு தான்மா. எல்லாரும் குடுக்குற செல்லத்துல சேட்டை இதுக்கு அதிகமாயிடுச்சிம்மா..." என்றாள் மன்னிப்பை யாசிக்கும் குரலில்.
"அய்யோ அக்கா நீங்க வேற அவ என்ன தப்பு பண்ணா நீங்க மன்னிப்பு கேட்க... ரொம்பவே சமத்து பொண்ணுக்கா. இவளை மாறி நானும் இருந்துருக்குனும்னு இப்போ நினைக்குறேன் அக்கா..." என்றாள் சிரித்துக் கொண்டே பவியின் தலையை இலேசாகக் கலைத்துவிட்டபடி.
"சரிங்கம்மா, நாங்க வீட்டுக்குக் கிளம்பறோம்." என்றபடி பவித்ராவை அழைத்துக் கொண்டு சென்றாள் மஞ்சுளா.
சரியென்று தலையசைத்தவள் இருவரும் சிறிது தூரம் செல்லும் வரை பொறுத்திருந்து பார்த்தவள் சட்டென என்ன தோன்றியதோ,
"பவித்ரா..." என்று அழைத்தாள்.
தாயும் மகளும் இருவரும் திரும்பிப் பார்க்க அவளோ பவியை வாவென்று அழைக்க, அதில் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய் ஓடி வந்து தாரணியிடம் நின்றாள்.
"சொல்லுங்க அக்கா..." என்றாள் சிரித்தபடி.
"இனி நீ தினமும் என்னைப் பார்க்க வருவியா பவி..." என்றாள் ஏக்கமாய்.
ஏனோ அவளின் காயம்பட்ட மனதிற்கு அச்சிறு மழலையின் வருகை சந்தோஷத்தைக் கொடுத்தது.
"ஓ... கண்டிப்பா வருவேன்கா. நான் தினமும் அண்ணனைப் பார்க்கிற மாறி உங்களையும் பார்க்க வரேன்கா" என்றபடி அவளின் கைகளைப் பிடித்துக் கீழே இழுத்தது.
சிறுமியின் இழுவையில் அவளிடம் குனிந்தவள், "என்னடா..." என்றாள் சிரிப்புடன்.
அவளின் கன்னத்தில் ஒரு மென் முத்தத்தை வைத்து விட்டு ஓடியது அச்சிறு மொட்டு.
அவள் முத்தம் கொடுத்த கன்னத்தைத் தன் தளிர் விரல்களால் மெல்ல வருடியவள் தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள்.
மீண்டும் ஊஞ்சலில் வந்து அமர்ந்தவளின் மனம் சற்று நிம்மதியாய் உணர்ந்தது.
அதே நேரம் தன்னை யாரோ பார்ப்பது போல் தோன்ற, யாரென்று திரும்பி முன்னும் பின்னும் திரும்பிப் பார்த்தவளின் கண்களில் யாரும் தென்படாமல் போக, இவளோ தன் வீட்டைப் பார்க்க அங்கும் யாருமில்லை என்பதை உறுதி செய்து கொண்டவள் திரும்பும் நேரம் ஒரு ஜன்னலின் திரைச்சீலை மட்டும் ஆடியது.
அவளோ அதைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல் காற்றுக்கு ஆடுவதாக எண்ணிக் கொண்டாள்.
இங்கே தன் அறையில் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான் ரத்னவேல்.
அவனின் நினைவுகள் எங்கும் பழைய சம்பவங்களை நினைத்துப் பார்த்திருந்தது.
'ஏன்கா என்னை விட்டுப் போன? மத்தவங்களை பத்தி யோசிச்ச நீ என்னைப் பத்தி கொஞ்சம் நினைச்சி பார்த்திருக்கலாம் இல்லைக்கா. உன்னை ரொம்பவே மிஸ் பண்றேன்கா, திரும்பவும் என்கிட்ட எப்போக்கா வருவே?' என்றவனின் நினைவுகள் மலர்விழியையே சுற்றி வந்தது.
அதே நேரம் அவனின் அலைபேசி அடிக்க அதை எடுத்துப் பார்த்தவன் அது ஆபிஸ் காலாய் இருக்க அட்டென்ட் செய்து காதில் வைத்தவனுக்கு அந்தப் பக்கம் என்ன சொல்லப்பட்டதோ அடுத்த நொடியே அங்கிருந்து வேகமாய் சென்றான்.
அவனின் அலுவலகத்தில் வண்டியை வேகமாய் வந்து நிறுத்தியவனின் முன்னே தாரா வேகமாய் வந்து நின்றாள்.
"தாரா, என்னாச்சி ஏதோ பிராபளம்னு சொன்னீங்க? இங்கே வந்து பாத்தா எதுவும் நடக்கலை, என்னாச்சி?" என்றான் பதற்றத்துடன்.
"ஹேய் கூல் ரத்னம், இன்னைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கொண்டு வந்தேன். அதைச் சொல்லலாம்னு வந்தா நீ இன்னும் வரவே இல்லை. அது தான் இதுமாதிரி எதாவது செஞ்சா தான் நீ வருவேன்னு நினைச்சு சும்மா உன்னைப் பிராங்க் பண்ணேன்" என்றாள் கண்களைச் சிமிட்டியபடி.
அவளின் வார்த்தையில் அதுவரை பதற்றத்துடன் இருந்தவன், சற்று இளைப்பாறி மூச்சு விட்டவன், தன் முகத்தைத் தன் கரத்தால் துடைத்துக் கொண்டவன் நிமிர்ந்து அவளைப் பார்க்க, அவளோ சிரித்தபடி அவனின் முன்னே நின்றிருந்தாள்.
"எப்படி என்னோட பிராங்க்?" என்றாள் விபரீதம் புரியாமல்.
அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் தன் கரத்தை இறுக்கிப் பிடித்து எடுத்து வேகமாய் அவளின் கன்னத்தில் பளீரென இறக்கினான்.
"ரத்னம்..." என்றாள் அதிர்ந்தபடி.
"ஏய், பேசின தொலைச்சிடுவேன் உன்னை..." என்றவன் கண்கள் இரண்டும் சிவக்க அவளை முறைத்தான்.
"என்னடி ரத்னம், என்ன சொன்ன பிராங்க் பண்ணியா? நீ பிராங்க் பண்ண என்னோட தொழிலாளிகள் உயிர் தான் கிடைச்சுதா? உன்னைப் புதைச்சிடுவேன் ராஸ்கல்..." என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.
அவனின் கோபத்தைப் பார்த்து விழி விரித்தாள்.
அவன் கோபக்காரன் என்று தெரியும். ஆனால் சும்மா ஒரு வார்த்தைக்கு இத்தனை கோபம் வருமா அவனுக்கு என்று அவனையே பார்த்திருந்தாள்.
அவனோ அவளின் பார்வையைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல்,
"இதோ பாரு, நீ சின்ன வயசுல இருந்து என் கூடப் படிச்சி, இப்போ என்கிட்ட வேலை செய்யறியேன்னு தான் உன்னைச் சும்மா விட்டுட்டு போறேன். இல்லை, இப்படி சும்மாலாம் உன்கிட்ட பேசிட்டு இருக்க மாட்டேன். நான் சொன்னதை செய்யறவன்னு உனக்கு நல்லாவே தெரியும். பார்த்து இருந்துக்கோ..." என்றவன் வேகமாய் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
அவன் அடித்ததில் அவளின் இரு கன்னமும் சிவந்து உப்பிப் போய்க் காணப்பட்டது.
அதைப் பார்த்த ஹர்ஷா சிரித்தான்.
"என்ன தாரா, நான் சொன்னது நடந்துடுச்சி பாத்தியா? இதுக்கு தான் அவன்கிட்ட நாம பேசுறதுல இருந்து பார்த்து இருக்கணும்னு சொன்னேன். ஆனா நீ கேட்கலை. இப்போ தெரிஞ்சிதா அவனைப் பத்தி..." என்றான் எதிரியைத் தெரிந்த சங்கதியுடன்.
இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இந்தியாவில் தன் காலடியைப் பதித்தான் ஹாட்ரிக் தன் உதவியாளருடன்.
அடுத்த பாகத்தில் பார்க்கலாம் செல்லம்ஸ்.
மெய் தழுவும் நேசம் தொடரும்…

Last edited: