வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மெய் தழுவிய நேசப்பூவே 5

GG writers

Moderator
அத்தியாயம் 5



"ஏன் கௌசி நம்ம பேத்தியைக் கூட்டிட்டு நம்ம குலதெய்வம் கோவிலுக்குப் போயிட்டு வரலாமா குடும்பத்தோட...?" என்றார் சாரதா ஏதோ யோசனையுடன்.

"ஆனா இந்த ரத்னம் வரவே மாட்டானேக்கா. அந்த வனதுர்க்கை அம்மன் தான் நமக்கு எல்லாமே. ஆனா, அவன் கோவிலுக்கு வந்தே பல வருஷமாச்சே, இதுல எங்க குடும்பத்தோடக் கோவிலுக்குப் போறது?" என்றார் சலிப்பான மனதுடன்.

"இல்லை சாரதா, நாம அவனையும் கூப்பிட்டு பாக்கலாம். வந்தா சரி இல்லைன்னா நம்ம பேத்தியை மட்டும் கூட்டிட்டு போலாம். நீ போய் உன் புருஷன்கிட்ட சொல்லு. நானும் போய் இவருகிட்ட சொல்லிட்டு வரேன்" என்றபடி தன் கணவனைத் தேடிச் சென்றார்.

"என்னங்க என்ன பண்றீங்க?" என்றபடி உள்ளே வந்தார் சாரதா.

ஏதோ பைலில் தலையைக் கொடுத்துப் பார்த்துக் கொண்டிருந்த சத்யமூர்த்தி மனைவியின் குரலில்,

"என்னாச்சி சாரதா, எதுக்கு இப்படி வேகமா வர்ற? உனக்கு என்ன இன்னும் சின்ன வயசுன்னு நினைப்பா...?" என்றார் கிண்டலடித்தபடி.

"பாருடா நீங்களா இது? உங்களுக்குக் கிண்டலடிக்கலாம் தெரியுமாங்க?" என்று கணவனைப் பார்த்து வியந்தபடி அவரருகில் அமர்ந்தார்.

"என்னடி இப்படி கேட்குற? ஏன் நான் கிண்டலா பேசிச் சிரிச்சி நீ பார்த்ததே இல்லையா என்ன?" என்றவர் மனைவியின் தோள்மேல் கையைப் போட்டபடி அமர்ந்தார்.

"அய்யோ என்னங்க இது? பிள்ளை இல்லாத வீட்ல கிழவன் துள்ளி விளையாண்டானாம்... அந்தக் கதையா பண்ணிட்டு இருக்கீங்க..." என்றார் வெட்கமாய்.

"என்னடி அப்படி சொல்லிட்ட... நான் கிழவனாடி? இப்பையும் நான் வாக்கிங் போகும்போது எத்தனை வயசு பொண்ணுங்க தெரியுமா என்னைத் திரும்பிப் பாக்குறாங்க? நீ என்னவோ இப்படி சொல்லிட்ட..." என்றார் கம்பீரமாய் மீசையை முறுக்கியபடி.

"அப்படி சொல்லுங்க தாத்தா... ஏன் பாட்டி என் தாத்தா இப்பவும் பாக்க ஹீரோ மாறித் தான் இருக்காரு. என்னவோ அவரைப் போய்க் கிழவன்னு சொல்றே..." என்று செல்லம் கொஞ்சியபடி வந்தாள் தாரணி.

அவளை இருவரும் வாஞ்சையுடன் பார்த்தனர். ஏதோ தங்களின் மகளே நேரில் வந்ததை போல் அவளைப் பார்த்திருந்தனர்.

"அப்படி சொல்லுடா தாரணி குட்டி. பாத்தியாடி என் பேத்தியும் எனக்குச் சப்போர்ட் தான்" என்றார் மீசையை முறுக்கியபடி.

"ஆமாமா, உங்க பேத்தி தானே... அப்புறம் எப்படி பேசுவா? உங்களுக்குத் தானே சப்போர்ட் பண்ணுவா..." என்றவரின் வார்த்தையில் இருந்த நக்கல் அவரின் வதனத்தில் சுத்தமாய் இல்லை. பேத்தியை வாத்ஸல்யத்துடன் பார்த்தார்.

தாத்தாவிற்கும் பாட்டிக்கும் இடையில் அமர்ந்தவள் அவர்களின் தோளில் சலுகையாய் சாய்ந்து கொண்டாள்.

"சாப்பிட்டியாடா குட்டிமா..." என்றார் சத்யமூர்த்தி.

"ஹ்ம்ம், இப்போ தான் தாத்தா பரசு தாத்தாகிட்ட சாப்பிட்டு வந்தேன். பாட்டியும் தாத்தாவும் தான் ஊட்டிவிட்டாங்க" என்றாள் கொஞ்சியபடி.

அதே நேரம் அங்கே பரசுராமும் தன் மனைவி கௌசல்யாவுடன் வந்தார்.

"வா பரசு... இன்னைக்கு எஸ்டேட் போகலையா?" என்றபடி தம்பியை வரவேற்றார் சத்யமூர்த்தி.

"இல்லைங்க அண்ணா... ரத்னம் இன்னைக்கு எஸ்டேட் போறேன்னு சொல்லிட்டான். அது தான் இன்னைக்கு நம்ம பேத்தியோட இருக்கலாம்னு வீட்ல இருந்துகிட்டேன்" என்றார் தாரணியை பார்த்தபடி.

தன் தமையன் அருகில் அமர்ந்த தன் சின்னத் தாத்தாவிடம் சென்று இரு தாத்தாக்களின் நடுவில் அமர்ந்து கொண்டாள் தாரணி.

அதில் இரு தாத்தாக்களுக்குமே பெருமை தான்.

"ஏங்க அண்ணா நம்ம மலரும் இப்படித்தானே நமக்கு இடையில் வந்து உட்காருவா... அவ போனதுக்கு அப்புறம் எல்லாமே மாறிடுச்சி அண்ணா..." என்றார் மகளைப் பற்றிய ஏக்கத்துடன்.

அதைக் கேட்ட தாரணியின் கண்கள் கலங்கிப் போனது.

'கடவுளே தன் மகள் மேல இவ்வளவு பாசம் வச்சிருக்கிறவங்ககிட்ட எப்படி நான் உண்மையைச் சொல்லப் போறேன்?' என்றவளின் உள்ளம் நிலைகுலைந்து போனது.

"பரசு கவலைப்படாதே சீக்கிரமே நம்ம மலர் நம்மகிட்ட வருவா. இதோ நம்ம பேத்தி கூட்டிட்டு வருவா. ஏன் குட்டிமா கூட்டிட்டு வருவே தானே?" என்றார் மகளைப் பற்றிய நினைவில் பேத்தியிடம்.

இரு தாத்தாக்களிடமும் கண்களில் கண்ணீர் வழிந்தபடி, "கண்டிப்பா கூட்டிட்டு வருவேன் தாத்தா" என்றாள் கண்ணீரைத் துடைத்தபடி.

"அடடா! எதுக்கு இப்போ புள்ளையை அழ வைக்கிறீங்க? உங்களால பாருங்க புள்ளைக்கும் அம்மா மேல நினைப்பு போயிடுச்சி போல... ஏஞ்சாமி, உனக்கு இந்தப் பழைய பாட்டெல்லாம் எப்படி சாமி தெரியும்?" என்றார் கௌசல்யா.

"அது வீட்ல அம்மா இருந்தவரைக்கும், பழைய பாட்டு, இந்த ஊரோட பெருமை இதெல்லாம் சொல்லித்தான் பாட்டி வளர்த்தாங்க. சின்ன வயசுல இருந்தே நான் வீட்ல இப்படித்தான் இருக்கணும்னு அம்மா சொல்லுவாங்க பாட்டி..." என்றாள் தாயின் நினைவில்.

"உன் அம்மா இங்கிருந்து போனாலும் இங்கத்து பழக்கத்தை மாத்தலை. எங்களை மறந்தாலும் பிறந்த ஊரோட பழக்க வழக்கங்களை நினைவு வச்சிக்கிட்டு உனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கா. எங்களுக்கு அதுவே சந்தோஷம்டா. ஆனா, உங்கப்பா ஒரு கிறிஸ்டியன் ஆச்சே, அதுக்கெல்லாம் எப்படி ஒத்துக்கிட்டாரு?" என்றார் சாரதா யோசனையாய்.

மற்றவர்களின் முகத்திலும் அந்தக் கேள்வி தொக்கி நிற்க, அனைவரின் முகத்திலும் அதற்கான பதில் என்னவாய் இருக்கும் என்பதாகவே இருந்தது.

அனைவரையும் பார்த்தவள், "அப்பாவுக்கு அம்மா தான் பாட்டி எல்லாமே. அப்போ அம்மா சொன்னதை அப்பா கேட்கத் தானே செய்வாரு. அம்மா சொல்ற வார்த்தைக்கு மறுவார்த்தை அப்பாகிட்ட இருந்து எப்போதுமே வராது பாட்டி. அது போலத்தான் அம்மாவும் அப்பாவுக்கு ரொம்பவே இம்பார்ட்டன்ஸ் கொடுப்பாங்க. வீட்ல பூஜை அறையும் உண்டு, சர்ச்சுக்கும் போவோம். ரெண்டு பேருக்குள்ளேயும் அத்தனை நேசம் இருந்துச்சி பாட்டி..." என்றாள் பெற்றவர்களின் நினைவில்.

"ஏன் கண்ணு உங்க அப்பாவுக்கு யாருமில்லையா சாமி? அவங்களோட அப்பா அம்மாலாம் இல்லையா?" என்றார் கௌசல்யா இளகிய மனதுடன்.

தங்களின் வீட்டிற்கு வந்த மருமகனைப் பற்றி இத்தனை ஆண்டுகள் கழித்துத் தெரிந்து கொள்ளக்கூடிய அவலநிலையை என்னவென்று சொல்வது?

"இல்லை பாட்டி, அப்பா பிறந்து கொஞ்ச வருஷத்திலே ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டாங்களாம். அதிலிருந்து அப்பா தனியாதான் வளர்ந்தாரு. அம்மா வந்ததுக்கு அப்புறம் அப்பாக்கு எல்லாமே அம்மா தான். அவங்க சொல் தான் அவருக்கு வேதம்" என்றாள் வதனத்தில் பெருமை பொங்க.

அதைக் கேட்ட பெற்றவர்களுக்கு மனம் நிறைந்து போனது. எல்லா பெற்றவர்களின் நினைவும் அது தானே, தங்களின் வீட்டில் இளவரசியாய் வலம் வந்த மகள் புகுந்த வீட்டில் ராணியாய் வலம் வருவதைக் கேட்டால் உள்ளம் உவகை பொங்கும் தானே! அந்த நிலையில் தான் பெரியவர்கள் நால்வரும் இருந்தனர்.

கண்ணீர் குளம் கட்டிய கண்களைத் துடைத்த சாரதா கணவரிடம் திரும்பி,

"ஏங்க நம்ம குடும்பத்தோடக் குலதெய்வக் கோவிலுக்குப் போயிட்டு வரலாமேங்க. நம்ம பேத்தி வந்துருக்கா, இனியாவது நம்ம வீட்ல எல்லாமே சந்தோஷமா நடக்கட்டுமே" என்றார் எதையோ நினைத்தபடி.

"சரி சாரதா, ஆனா அதுக்கு உன் பையன் வரணுமே சாரதா, அவன் வருவானா? நம்ம குடும்பம்னா அதுல அவனையும் சேர்த்தி தானே?" என்றார் சத்யமூர்த்தி.

அந்த நேரத்தில் வீட்டு வாயிலிலிருந்து, "கண்டிப்பா கோவிலுக்குப் போலாம்ப்பா. ஆனா, என் கூட என்னோட வருங்கால மனைவியும் வருவா" என்றவனின் பார்வை அழுத்தமாய் தாரணியை பார்த்தது.

அவனின் பார்வையில் உடல் சில்லிட்டுப் போகப் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.


***

இங்கே தாராவோ குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்தபடியே வந்த ஹர்ஷாவோ, "ஏய் தாரா, என்னாச்சி எதுக்கு இப்படி நடந்துட்டு இருக்க?" என்றான் கேள்வியாய்.

"அதிருக்கட்டும் நீ காலையிலே எங்கேயோ போயிட்டு இப்போ வர்ற ஹர்ஷா?" என்றாள் கோபமாய்.

"ஏய், இப்போ எதுக்கு கோபப்படற? என்னோட பிரண்ட் பாரின்ல இருந்து வந்தான். அவனை அழைச்சிட்டு வரப் போனேன். நேத்து நைட்டே இதை உன்கிட்ட சொன்னேன் இல்லை, இப்போ வந்து புதுசா கேக்குற? இப்போ எதுக்காக இந்தக் குதி குதிக்குற?" என்றான் எரிச்சலாய்.

"ஆ... நீ ஏன் ஹர்ஷா சொல்லமாட்டே? அந்த ரத்னம் என்ன பண்ணாலும் மயங்கமாட்டேங்குறான். ஆனா ஒன்னு அவனோட வீட்ல என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லி வச்சிருக்கான். எப்படியும் அவனைக் கல்யாணம் பண்ணிட்டு அவனோட சொத்துக்களை என் பேருல மாத்தணும் ஹர்ஷா. அந்த வீட்டு பெருசுங்களை நம்பவே முடியாது" என்றாள் எங்கோ பார்த்தபடி.

"ஹ்ம்ம், அதை முதல்ல பாரு தாரா. எவ்வளவு சீக்கிரம் அவனோட உன் கல்யாணம் நடக்குதோ அவ்வளவு சீக்கிரம் நம்ம நினைச்ச எல்லாமே நடக்கும் தாரா" என்றான் பேராசையுடன்.

அப்போது தாராவின் போன் அழைத்தது. அதைப் பார்த்தவள், "ஹர்ஷா ரத்னம் தான் கால் பண்றான்" என்றாள் பதற்றமாய்.

"ஹேய் தாரா, முதல்ல பதட்டப்படாத பேசு. நான் இங்கே இருக்கறது... நீ என்னோட தான் இருக்குறங்கிறது அவனுக்குத் தெரியாது இல்லை?" என்றான் மெதுவாய்.

"ஹாய் ரத்னம், என்ன திடீர்னு கால் பண்ணியிருக்க?" என்றாள் குழைந்த குரலில்.

"ஏன் நான் உனக்குக் கால் பண்ணக்கூடாதா தாரா? சரி, அது ஒன்னும் இல்லை... நாளைக்கு எங்க குடும்பத்தோடக் கோவிலுக்குப் போறோம். அதுல நீயும் வரணும். வந்துடு அதுக்கு தான் கால் பண்ணேன்" என்றவனின் குரலில் இருந்த விலகல் தன்மை இருந்தது.

"எதுக்கு ரத்னம் திடீர்னு கோவிலுக்கு?" என்றாள் எதிர்க் கேள்வியாய்.

"இது என்ன அபத்தமான கேள்வி தாரா? நீதானே என்னைக் கல்யாணம் செய்துக்க போறன்னு சொன்னே? அப்போ நீ வர வேண்டாமா? குடும்பமா கோவிலுக்குப் போகும்போது நீயும் அதுல இருக்கணும் இல்லை..." என்றவனின் குரலில் என்ன இருந்ததோ அவனே அறிவான்.

"சரி ரத்னம் நாளைக்குச் சீக்கிரமே உங்க வீட்டுக்கு வந்துர்றேன்" என்றாள் குழைந்தபடி.

"இல்லை, நேரா கோவிலுக்கு வந்துடு, நான் வச்சிர்றேன்" என்றவன் அவளின் பதிலை எதிர்பார்க்காமல் வைத்து விட்டான்.

"ச்சே, இவனைப் பாரு ஹர்ஷா, கொஞ்சமும் என்னை மதிக்காம அவன் இஷ்டத்துக்குக் கோவிலுக்கு வரச் சொல்லிட்டு வச்சிட்டான். நான் என்ன இவன் அடிமையா?" என்றாள் கோபமாக.

"ஆமா, நீ அவனோட பணத்துக்கு அடிமை தானே... அது தான் அவன் உன்னையும் அடிமைன்னு நினைச்சிட்டான் போல..." என்றான் நக்கலாக ஹர்ஷா.

அவனைக் கோபமாக முறைத்து விட்டு அங்கிருந்து சென்றாள் தாரா.


***

இரவின் குளுமையில் ஹாட்ரிக் கையில் மதுக் கிண்ணத்துடன் அமர்ந்திருந்தான்.

அவனின் எதிரே அதே மதுக் கிண்ணத்துடன் ஹர்ஷாவும் அமர்ந்திருந்தான்.

அப்போது ஹாட்ரிக் சொன்னதைக் கேட்டு ஹர்ஷா அதிர்ந்து தான் போனான்.

அப்படி என்ன தான் ஹாட்ரிக் சொன்னான் ஹர்ஷாவிடம்? அடுத்த பகுதியில் பார்க்கலாம் செல்லம்ஸ்.


மெய் தழுவும் நேசம் தொடரும்...
✍️
 
Добро пожаловать!

Недавно столкнулся с обновлением дизайна в помещении. Оказалось, что правильный выбор мебели - это целая наука.

Искал информацию и нашел качественный обзор про организацию интерьера. Там хорошо объяснено как организовать зоны отдыха.

Полезными оказались разделы про различные стили интерьера. Понимаю как правильно обустроить пространство для отдыха.

Кто интересуется дизайном - качественная информация! качественное сообщество для вдохновения!

Всем красивых интерьеров
 
Top