GG writers
Moderator
மௌனங்கள் பேசும்!
மௌனம் 01
"எல்லாம் ரெடி பண்ணிட்டீங்க தான..?" குழுமியிருந்த பெண்களிடம்,மீண்டும் அனைத்தையும் ஒருமுறை சரிபார்த்து விட்டு கேட்டார்,சங்கவி.
மகளை பெண் பார்க்க வருவதாக இருக்கும் பொழுது அனைத்து தாயாரின் அகத்திலும் இருக்கும் பதட்டம்,அவருக்குள்ளும்.ஒற்றை மகள் என்பதால் மேலும்,தவிப்பு.
"எல்லாம் சரியா ரெடி பண்ணி வச்சாச்சுக்கா..நீங்க போய் திவ்யா ரெடியாகிட்டாலான்னு பாருங்க.." உதவிக்கு வந்த பெண்ணொருத்தி அவரை ஏவி விட,புன்னகையுடன் மகளின் அறைப்பக்கம் வந்தார்,அவர்.
பட்டுப்புடவையில் தேவதையாய் மின்னியவளை காண இரு விழிகள் போதவில்லை,அவருக்கு.சேலையில் மகள் பேரழகாகியது போன்ற எண்ணம்,அவருக்குள்.
தாயைக் கண்டதும் இதழ் பிரித்து புன்னகைத்தாலும்,திவ்யாவின் விழிகளில் சிறு அலைப்புறுதல் இருந்தது,உண்மை.அது அவரின் பார்வையில் விழாது போக,மகளுக்குள் பூரண மகிழ்வு என நினைத்து விட்டிருந்தார்,தாயார்.
"பூவ வச்சிட்டு ரெடியா இருமா..இன்னும் கொஞ்ச நேரத்துல மாப்ள வீட்டாளுங்க வந்துருவாங்க.." என்று கூறி விட்டு அவர் வெளியே வரவும் கதவைத் திறந்து கொண்டு,அவரின் அக்காள் சம்பூர்ணம் உள்ளே வரவும் சரியாய் இருந்தது.
"வாக்கா..ரெண்டடில வீட்ட வச்சிகிட்டு இங்க வர்ரதுக்கு இவ்ளோ நேரமா..? எம் பொண்ணு எம் பொண்ணுன்னு வாய் கிழிய பேசுவ..ஆனா எதுக்கும் சீக்ரமா வர மாட்ட.."
"நீ வேற நா பெத்தத சமாளிச்சிட்டு வர்ரதுக்குள்ள எனக்கு உசுரே போயிருச்சு..கடுப்ப கெளப்பாத.." அங்கலாய்ப்புடன் கூறியவரோ,இதர வேலைகளை கவனிக்கச் செல்ல,அக்காளுடன் இணைந்து கொண்டார்,சங்கவி.
பதினைந்து நிமிடங்கள் கடந்திருக்கவும் வாகன சத்தங்கள் கேட்டது.வந்திருப்பது மாப்பிள்ளை வீட்டினர் என்பது தெரிய,சங்கவியின் உடல் மொழியில் பதட்டம் என்றாலும்,சம்பூர்ணத்திடம் அது இல்லை.
"வாங்க உள்ள வாங்க.." சங்கவியும் அவரின் கணவர் மகேஷ்வரனும் மாப்பிள்ளை வீட்டினரை வரவேற்றிட சிறு புன்னகையுடன் உள் நுழைந்தனர்,வந்தவர்கள்.
முக்கியமானவனை விடுத்து மற்றைய அனைவரும் வந்திருக்க,மகேஷ்வரனின் விழிகளில் கேள்வி தொக்கி நின்றது.மகளைப் பெற்றவர்,கொஞ்சம் பதறித் தான் போனார்.
"மாப்ள.." அவர் இழுத்திட,அவரின் கேள்வி புரிந்தாற் போல் பதிலுரைத்தார்,அவனின் அன்னை."தம்பி இன்னும் பத்து நிமிஷத்துல வந்துர்ரேன்னு சொன்னான்.." என்றவர் சங்கடத்துடன் கூறிடவே,மற்றையவர்களின் முகத்தில் நிம்மதி.
பார்வதி - கோபாலகிருஷ்ணன் தம்பதியினரின் மூத்த புதல்வனுக்கு தான்,திவ்யாவை பெண் பார்க்க வந்திருந்தனர்.
அவர்களின் சம்பாஷணையை கேட்டுக் கொண்டிருந்த சம்பூர்ணத்தின் மனதில் ஏதோ சிறு தவிப்பும் ஆதங்கமும்.
சம்பூர்ணத்தின் கணவர்,சக்திவேல் பார்வதியின் உடன் பிறந்த அண்ணன்.அவரின் சொந்த நாத்தனாரே பார்வதி.சம்பூர்ணத்தின் மகளுக்கு முறைப்பையன் தான்,பார்வதியின் மகன்.
அவர்களுக்குள்ளும் திருமண பேச்சு வார்த்தை எடுக்கும் அளவு குடும்பங்களிடையே,நல்லுறவு இருந்தாலும்,அந்த பேச்சை எடுக்காததன் காரணம்,சம்பூர்ணத்தின் மகள் தான்.
சம்பூர்ணத்திற்கு கொள்ளை ஆசை,தன் மகளை பார்வதியின் மகனுக்கு கட்டிக் கொடுத்திட;அவளை அவர்களின் வீட்டுக்கு மணமகளாய் அனுப்பிட.ஆனால்,மகளென்பவள் மனம் வைத்திட வேண்டுமே.
பார்வதிக்கு திவ்யாவை ஏதோ விழா நிகழ்வில் கண்டு பிடித்தம் வந்திட,சம்பூர்ணத்தின் வாயிலாக அவரின் தங்கையிடன் பேச்சை வளர்த்திருக்க,அது இன்று பெண் பார்த்திடும் படலத்தில் வந்து நின்றிருந்தது.
தன் மகளுக்கு கொடுத்து வைத்திடவில்லை என்று எண்ணுகையில் பெருமூச்சு வெளிப்பட,பார்வதியிடமும் அவரின் கணவரிடமும் ஓரிரண்டு வார்த்தை பேசி விட்டு,சமயலறைக்குள் நுழைந்து கொண்டார்,அவர்.
பார்வதியின் பார்வையே,அவருடன் வந்த இளைய மகளின் மீது கண்டனத்துடன் படிந்தது.வம்படியாய் உடன் வருவேன் என அவர்களுடன் வந்து இருந்தாள்,இளைய மகள் அபிராமி.
"என்னம்மா இன்னும் அண்ணன காணோம்..? வேணும்னா ஃபோன் பண்ணி பாக்கட்டுமா..?"
மெல்ல அவரின் காதுகளின் கிசுகிசுத்தாள்,அவள்.
"உன் அண்ணனோட கோவத்த பத்தி உனக்கு நல்லா தெர்யும் தான..எடுத்து கூப்டோம்னா வீம்பு புடிச்சிட்டு வராமலே இருந்துருவான்..கொஞ்சம் பேசாம இரு.." அதட்டியவரோ,தம்மை ஆராய்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த சங்கவியைப் பார்த்து சமாளிப்பாய் சிரித்து வைத்தார்.
மேலும் பத்து நிமிடங்கள் கடந்த பின்னர்,வண்டி சத்தம் கேட்டது.அந்த சத்தத்தை வைத்தே புரிந்து கொண்டாள் அபிராமி,வந்திருப்பது தனது அண்ணன் தான் என்று.
வண்டியில் இருந்து இறங்கி சுற்றத்தை ஒரு முறை தன் கூரிய விழிகளால் அலசி மீண்டான்,பையனவன்.அவன் விழிகளில் ஆராயும் தன்மை நிரம்பி வழிந்தது.
"இந்தம்மா எதுக்கு அத்த வீட்டுக்கு வர சொன்னாங்க..?" யோசனையுடன் சென்று எதிர் வீடான சம்பூர்ணத்தின் வீட்டு கதவை தட்டிட,கதவைத் திறந்தவளைக் கண்டு ஒரு கணம் அதிர்ந்து தான் போனான்,பையனவனும்.
பட்டுப்புடவையை பாந்தமாய் அணிந்து,கூந்தலை பின்னியவாறு நின்றிருந்த தன் அத்தை மகளை தான் பார்க்க வந்த பெண் என்றே நினைத்து விட்டான்,பையனவன்.
"நீயா பொண்ணு..?" அவன் கேட்டிடும் முன்னமே,"அருவி உன் மாமா வந்திருக்காங்க.." என்ற வார்த்தைகளுடன் உள்ளே நகர்ந்து விட்டாள்,அவள்.அவனின் அத்தை மகள்.சம்பூர்ணத்தின் புலம்பலுக்கு காரணமானவள்.
செவியில் விழுந்த அதட்டலான குரலில்,அவன் யோசனையில் ஆழ்ந்திடுகையிலேயே,பின்னிருந்து கேட்டது,மகேஷ்வரனின் வார்த்தைகள்.
"தம்பி எங்க வீடு இது தான்.." குரலில் திரும்பியவனோ,பின்னே இருந்த திவ்யாவின் தந்தையை பார்த்து,கடமைக்கென புன்னகை சிந்தி,அவருடன் நடந்தவனின் மனதில் சிறு நிம்மதியுணர்வு விரவிப் பரவாமல் இல்லை.அவனைப் பொறுத்த வரையில்,அவனுக்கு அவளை பிடிக்காதே.
தந்தையும் வெளியே வந்திருக்க,புரிந்து கொள்ள முடிந்தது,வீடு மாறிப் போய் கதவைத் தட்டி இருப்பதை.
"அம்மா அத்த வீட்டுக்கு வர சொன்னாங்க.."
"சக்தி அண்ணன் வீட்ல தான் பொண்ணு பாக்கற ஏற்பாட்ட வச்சிக்கலாம்னு இருந்தோம்..அப்றம் இப்போ தான் சரி நம்ம வீட்ல பண்ணலாம்னு முடிவெடுத்து..அம்மாவுக்கு சொல்ல மறந்து இருக்கும் போல.."
"ம்ம்" என்பதுடன் நிறுத்திக் கொண்டான்.
வீட்டுக்கு வந்தவனை வரவேற்று உபசரித்து,பெண்ணையும் அழைத்து வந்தார்கள்.
திவ்யாவை ஒரு கணம் ஏறிட்டு பார்த்தவனின் விழிகளில் எந்த வித உணர்வும் புலப்படவில்லை.புகைப்படத்தை கூட அவன் பார்த்திருக்கவில்லை,மனதில் ஏனோ சிறு நெருடல்.
அவனுக்குள் எந்த வித மாற்றமும் நிகழ்ந்திடாது போகவே, போக,தாயின் முகத்தை பார்த்தான்.முன்னே நின்று இருந்தவளைக் கண்டதும்,தாயாரின் முகம் விகசிக்க,அதைக் கண்டவனுக்கும் மறுக்க காரணமேதும் இருக்கவில்லை.
அடுத்து,தந்தையின் முகத்தை உரசியவனுக்கு,அவரின் முகத்தில் மகிழ்ச்சி தென்படாது போனாலும்,பிடித்தமின்மை நிலவாததே,சம்மதம் சொல்ல போதுமாய் இருந்தது.
அவன் அறிந்த வரை,அவனுக்கு இதுவரை யார் மீதும் பிடித்தம் வந்தது,கிடையாது.சுருங்கச் சொல்லப் போனால்,அவனை யாரும் ஈர்த்தது கிடையாது என்கின்ற எண்ணம்.ஆனால்,மனைவி என்றொருத்த வந்த பின்னர் அவள் மீது விருப்பம் வரும் என்று நம்பினான்.
அபிராமியோ,அண்ணனின் முகத்தை பார்த்தாள்.அவனின் முகத்தில் எந்த வித உணர்வையும் காணக் கிடைக்காதது,அவளுக்கு சிறு வருத்தத்தை தராமல் இல்லை.
அவன் முகத்தில் எந்த உணர்வுக்கான சுவடும் இல்லை.விருப்பத்துடன் இல்லையென்றாலும்,மனம் ஒப்பத் தான் சம்மதம் சொல்லப் போகிறானா என்கின்ற சந்தேகமே தோன்றி விட்டது,அவளுக்கு.
அவளுக்குத் தெரியுமே,அண்ணன் தற்போது நிச்சயம் சம்மதம் சொல்லத் தான் போகிறான்,என்பது.
அவளை ஏமாற்றாமால்,அண்ணன் அவனும் சம்மதம் தெரிவித்திருக்க,அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சிப் பெருவெள்ளம்.
மெல்ல விழி நிமிர்த்தி,பையனவனை ஏறிட்டாள்,திவ்யா.அவளுக்கு அவனைக் கண்டதும் நாணமும் வந்து ஒட்டிக் கொண்டது.
அவள் விழிகளில் மகிழ்ச்சியின் சாரல் கொட்டிக் கொண்டிருக்க,அதை உணர்ந்தாலும் எந்த எதிர்வினையும் இல்லை,பையனவனிடம் இருந்து.
முன்பிருந்தே,அவளுக்கு அவனின் மீது ஈர்ப்பு.காதல் என்று கூற முடியா விடினும்,அளவு கடந்த விருப்பம் என்று கூறிடலாம்.
ஆளுமையாய்,கம்பீரமாய்,பார்ப்போரை ஒரு கணம் ஈர்க்கும் தோற்றத்தில் இருப்பவனின் மீது யாருக்குத் தான் விருப்பம் வந்திடாது..?
அவனின் புகைப்படத்தை கண்டதுமே,பிடித்து விட்டது,அவளுக்கு.திருணம் வேண்டாம் என முரண்டு பிடித்துக் கொண்டிருந்தவளோ,சட்டென சம்மதம் சொல்லி விட,பெற்றோருக்கும் அதிர்ச்சி தான்.
தெளிவான அறிவுரையில் தெளிந்து இருந்தவளோ,மீண்டும் கடந்த கால கசப்புக்களை நினையாது ஒத்துக் கொண்டு விட்டிருந்தாள்.
அவளோ,அவனை பார்த்து விட்டு,விழி தாழ்த்திக் கொள்ள,சட்டென ஒன்ற முடியாமல் இருந்தது,பையனவனால்.
"என்னால சட்டுன்னு இப்டிலாம் மாற முடியாது..அடிக்கடி ஃபோன் பேசி கடல போட்ற ஆளு கெடயாது நான்..ஹோப் யூ வில் அஸ்டர்ஸ்டான்ட்..நா என்ன ப்ரெபயார் பண்ணிக்கனும்..கிவ் மீ சம்டைம்.." வேண்டுதல் இல்லாமல்,கட்டளை போல் ஒலித்த அவன் குரலில் பயந்தாலும்,அவன் சொன்ன தோரணையில் மயங்கி அவள் தலையாட்டி பிறகு தான்,அவன் அங்கிருந்து வந்தது.
அவன் உதிர்த்த தொனியில் நெகிழ்வில்லை;தளர்வில்லை.நெகிழ்வு தளர்வு ஒரு புறம் என்றாலும் மென்மையும் இருக்கவில்லை.துளியளவு தன்மையும் இருக்கவில்லை.அப்படியொரு இறுக்கம் அவன் குரலில்;அந்த குரலோசையில் வந்து விழுந்த வார்த்தைகளில்.
இத்தனை கடினம் ஏன் என்று அவனுக்கே புரியாதிருந்தது.திவ்யாவுடன் பேசி விட்டு வண்டியைக் கிளப்பிக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டான்,மற்றையவர்களுக்கு முன்பாகவே.
மனம் ஒரு நிலையின்றி தவித்துப் போக யோசித்தவனுக்கும் காரணமும் பிடிபடவில்லை.ஆயினும் மனதை ஒரு கனம் அழுத்திக் கொண்டேயிருந்தது.ஏனோ..?
இங்கோ,
மனமெங்கும் அழுத்திய பாரத்துடன் பாதையில் தனியே நடந்து கொண்டிருந்தாள்,அவள்.விழிகளில் மெல்லிய நீரலை படர்ந்து விரிந்து இருந்தது.
மௌனம் பேசும்!
2025.03.23

Last edited: