GG writers
Moderator
மௌனங்கள் பேசும்!
மௌனம் 02
விடிந்தும் விடியாத காலைப்பொழுது அது.இருளைக் கிழித்துக் கொண்டு மெல்லிய வெளிச்சக் கீற்று பரவி இருந்தது.
தடதடவென கதவு தட்டப்பட,கூடத்து சோபாவில் சரிந்து இருந்த விக்னேஷ் எரிச்சலுடன் திரும்பி படுத்திட,முகத்தில் கோபமும் கூட.
முன்னிருந்தவன் எப்படியும் எழ மாட்டான் என்று அவனுக்குத் தெரியும்.வழமை போல் தன் நிதானமான நடையுடன் வந்து கதவைத் திறக்கப் போனவனின் பார்வை,கூடத்தில் படுத்திருந்த தோழனை கண்டனத்துடன் மொய்த்தது.
அதிகாலையிலேயே குளித்திருப்பான் போலும்.முன்னுச்சி முடிக்கற்றைகளில் தொக்கிக் கொண்டிருந்த நீர்த்திவலைகள் அப்படித் தான் கூறிப் போயின.
முக்கால் பேன்ட்டும் காலர் இல்லா ஃபுல் ஸ்லீவ் டீஷர்டும் அணிந்திருந்தவனோ,அதை முழங்கை இழுத்து விட்டிருந்தான்.ஆளுமையான கம்பீரம் மிகுந்த தோற்றம் தான்.
"எப்பா பாரு தூங்க வேண்டியது.." முணுமுணுத்துக் கொண்டே,கதவைத் திறந்தவனை பவ்யமாய் பார்த்தார்,அவர்.அவனின் வயது என்னவென்றாலும்,அந்த ஆளுமையான தோற்றம் காண்போரை மரியாதை தர வைத்திடும்.
"இந்தாங்க தம்பி பால்.." கையில் இருந்த தூய பசும்பால் போத்தலை அவர் நீட்டிட,அவன் பார்வை ஆராய்ச்சியாய் படிந்தது.அவன் பார்வையில் அவருக்கு கிடுகிடுத்தது.
"சத்தியமா தண்ணி கலக்கல தம்பி..உங்களுக்குன்னு தனியா எடுத்து வச்சேன்.." மரியாதை போல் ஒலித்தாலும்,அதன் அடித்தளம் அவன் கோபத்தின் மீதான பயமே.
"நெஜமா தம்பி..அன்னிக்கி நீங்க நடந்துகிட்டத பாத்தும் நா உங்களுக்கு பால்ல தண்ணி கலந்து தருவேன்னு நெனச்சீங்களா..?" அவர் பயத்துடன் மொழிய,அவரை நிமிர்ந்து பார்த்தவனின் விழிகளில் என்ன உணர்வோ..?
யாருக்குத் தெரியும்..?
மொத்தமாய் உறை போட்டு தடுத்து இருந்தால் யாரால் தான் கண்டறிய முடியும்..?
"ம்ம்.." என்றவன் காசை நீட்டியவாறு,பாலை வாங்கிக் கொள்ள,விட்டால் போதுமென ஓடி விட்டார்,அவர்.அவ்வளவு பயத்தைக் கொடுத்து இருந்தான்,அவருக்கு.
வாங்கிய பாலை,எடுத்துக் கொண்டு சமயலறைக்குள் சென்றவனோ,செய்த முதல் வேலை காஃபி தயாரிக்கத் துவங்கியது,தான்.
கையோடு எடுத்து வந்த ப்ளூடுத்தை காதில் சொருகியவனின் இதழ்களோ தனக்குப் பிடித்த பாடலை மெதுவாய் உச்சரித்திட,அவனின் தாளத்திற்கேற்ப அசைந்தாடியது,அவனைப் போன்ற அடங்காத சிகையும்.
எரிவாயு அடுப்பில் சிறு பாத்திரத்தை ஏற்றி,அதில் பாலை ஊற்றி அடுப்பை பற்ற செய்திட,அடுத்த அடுப்பில் வெந்நீர் கொதித்து கொண்டிருந்தது.
தனது கோப்பையை எடுத்து அதில் சற்றே அதிகமாய்,அரைத்து வாங்கி வந்தகாபி துளை போட்டான்.காஃபி துளை எடுக்கும் போதே,அதன் வாசத்தை உள்வாங்கி ஆயார்ந்தறியத் தவறிடவில்லை.
அவனுக்கு டிக்காஷன் அதிகமாக வேண்டும்.அப்படிக் குடித்துத் தான் பழக்கம்.
காஃபி தூளை அதிகமாகவும்,சக்கரையை கொஞ்சம் குறைவாகவும் இட்டு,கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரை கோப்பையின் கால் பங்கை விட,சற்றுக் குறைவாக இருக்கும் அளவுக்கு ஊற்றியவனனின் விரல்களோ சில நொடிகள் வேலை நிறுத்தம் செய்தது.
அரை நிமிடத்தை விட ஐந்து வினாடிகள் குறைவான அளவே,விரல்களின் வேலை நிறுத்தம்.வெந்நீரால் உண்டான சிறு நுரைகள் அடங்கிய பின்னர்,கோப்பையில் இருந்த கலவையை அடித்துக் கலக்கியவனோ,அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் பாலைப் பார்த்தான்.
பால் பொங்கியும் பொங்காத தருவாய் அது.சட்டென அடுப்பை அணைத்தவனோ,பாலை கோப்பை நிரம்பும் அளவு ஊற்றிட,அவனுக்கு தோதான பதத்தில் தயாராகி வந்திருந்து,காஃபி.
சிறிய டம்ளரை எடுத்து நுரை பொங்கும் அளவுக்கு இரு தடவை மாற்றி ஊற்றிட,காஃபியின் நெடி அவனை எப்போதும் போல் அவனை,கொள்ளை கொண்டது.
மலர் தோட்டத்தில் மத்தியின் நின்று மலர்களின் சுகந்தத்தை ஏகாந்த நிலையில் நுகர்பவன் போல்,ஆழமான சுவாசமொன்றின் மூலம் சுவாசவறைகள் முழுக்க நிரப்பிக் கொண்டான்,காஃபியின் அசத்தலான வாசத்தை.
உறக்கக் கலக்கத்தில் குளியலறைக்குள் நுழைய எழுந்த தோழனும்,சமயலறையில் வீசிய அவனின் காஃபி நெடியில் ஒரு கணம் சமயலைறையை நோக்கி வரப் பார்த்தாலும் தடுத்துக் கொண்டான்,தன்மானத்தை கருத்தில் கொண்டு.
"இவன் போட்ற காஃபி மட்டும் ஏன் தான் இப்டி மணக்குதோ..?" புலம்பியவாறு கடந்தவனுக்கு,அவனின் அசத்தலான காஃபியை குடித்தால் கூட,இத்தனை ஆவல் வந்திருக்காது போலும்.
கரங்களோ காஃபி கோப்பையைத் தாங்கிட,பாதங்களோ முற்றத்தை நோக்கி நீண்டன.
கதவைத் திறந்து,அதில் சரிந்து நின்று மிடரு மிடராய் காஃபியை சுவைத்தவனின் விழிகளில் ஆராயும் தன்மை.
●●●●●●●●
தன் முன்னே நின்றிருந்தவனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட,அறை வாங்கியவனின் செவிப்பறை கிழியாதது தான் மிச்சம்.
பக்கத்தில் இருந்த விக்னேஷும் அவனின் அறையின் வீரியத்தில்,"அம்மாடி" என தன் கன்னத்தை ஒற்றைக் கையால் பொத்திக் கொண்டு அதிர்ந்து விட்டான்.
பார்த்த தனக்கே இப்படியென்றால்,அடி வாங்கியவனின் நிலையை யோசிக்கையில் தலை சுற்றல் வராத குறை தான்.விழிகளில் கவலையும் வந்து போனது.
அறைந்தவனோ,விழிகளில் தீப்பொறி பறக்க முன்னிருந்தவனை முறைத்துக் கொண்டே நின்றிருக்க,தலை தாழ்த்தி தோழனை ஏறிட முடியாது தரித்திருத்தான்,அஷ்வின்.
தோழனின் முகத்தை ஏறிட்டு பார்த்திடும் தைரியம் இல்லை.அதற்கான தகுதியும் இல்லை என்று தான் நினைத்தான்.அவன் செய்து விட்டு வந்த காரியம் அப்படியே.
அறைந்தவனோ,எதுவும் பேசிடவில்லை.அவன் எப்பொழுதும் அப்படித் தான்.உச்சபட்ச கோபம் என்றாலும் நிதானத்தை எப்படியேனும் இழுத்துப் பிடித்துக் கொள்வான்.அவனுக்கு அது கை வந்த கலையும் கூட.
"இவ இனி என் மூஞ்சில முழிக்காதன்னு சொல்லு.." உறுமி விட்டு,தன்னறைக்குள் செல்ல,"தமிழ் நில்லுடா" ,வலி மிகுந்த தொனியில் அஷ்வின் கத்தியது காற்றோடு கலந்து கானலாகிப் போனது.
கதவை அறைந்து சாற்றிய வேகமே,அவனின் கோபத்தை எடுத்துரைத்திட,அதை தணிக்கும் வழி தெரியாது நொந்து போனான்,தோழன்.
"இப்போ என்னடா பண்றது..?" விக்னேஷ் அவனின் தோளில் கை வைத்துக் கேட்டிட,உதடு பிதுக்கியவனின் விழிகளில் கலவரம் நிரம்பவே.
"நா பண்ணது தப்பு தான்ல.." சிறு வலியுடன் கூறியவனுக்கு என்ன பதில் சொல்லித் தேற்றிட என்று தெரியவில்லை,விக்னேஷுக்கு.ஆம்,என்று சொன்னால் இவனுக்கு வலிக்கும்.
இல்லை என்று சொல்லி தமிழவனிடம் மாட்டிக் கொண்டால்,வாங்கும் அடிகளால் அவனுக்கு வலிக்கும்.அதனாலோ என்னவோ,முயன்று அமைதி காத்தான்,துருதுருத்த நாவினை அடக்கிக் கொண்டு.
"கொஞ்ச நேரம் கழிச்சிப் போய் பேசி அடி வாங்கிட்டு வராத..ரெண்டு நாள் கழிச்சு அவனே சரியாகி வருவான்..அப்போ பேசு.." சிறிது யோசனையுடன் கூற,சரியென்பதாய் தலையசைத்தான்,அஷ்வின்.
இங்கோ,
தோழனுக்கு அறைந்து விட்டு வந்தும்,ஆத்திரம் அடங்க மறுத்தது,தமிழவனுக்கு.இன்னும் நான்கு அறை வைத்திருக்கலாம் என எழுந்த எண்ணத்தை புறந்தள்ளிட முடியவில்லை.
இதழ் குவித்து ஊதி தன்னை நிதானப்படுத்திக் கொண்டவனின் தற்போதைய அத்தியவசிய தேவையாக இருந்தது என்னவோ,ஒரு கப் காஃபி.
விடுவிடுவென நடந்து சென்று தனக்கென ஒரு காஃபியை எடுத்துக் கொண்டு வந்து தன்னிடத்தில் அமர்ந்தவனின் இதழ்கள்,மெது மெதுவாய் காஃபியை சுவைத்து ருசித்தன.
அந்த காஃபி கோப்பை தீர்ந்து போன பின்னரே,அவனுக்கு தான் சமப்பட்ட உணர்வு.அப்படியே அவன் தன் வேலையில் மூழ்கிப் போக,சில நாழிகைகள் கழிந்த பின்னர்,மேலதிகாரியிடம் இருந்து அழைப்பு வந்தது.
நான்கு நாட்களுக்கு பிறகு,
கையோடு கொண்டு வந்த டப்பாவை தமிழவன் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த விக்னேஷின் அருகில் வைத்திட,அதை எடுத்துப் பார்த்தவனுக்கு ஆயாசமாய் இருந்தது.
"இவனும் இவன் காஃபியும் முடில சாமி.." அவன் வாய் விட்டே புலம்பிட,அது செவியில் விழுந்தாலும் எதிர்வினை இருக்கவில்லை,அவனில் இருந்து..
அந்த மௌனவழியாளனிடம் இருந்து.
"என்னடா அது என்ன இருக்கு அந்த டப்பால.."
"வீட்டு மரங்களில் இருந்து பறிக்கபபட்டு உரல் கொண்டு இடிக்கப்பட்ட இயற்கையான காஃபி தூள்.."நக்கலாய் தூய தமிழில் அவன் பேசிட,தன்னை மீறி சிரித்திட,தமிழவனின் பார்வை முறைப்புடன் இருவரையும் தீண்டிற்று.
"எங்க இருந்துடா வாங்கிட்டு வர்ரான் காஃபி பவுடர்..?"
"அவனுக்கு தெரிஞ்ச யாரோ இருக்காங்களாம்.." சலிப்பாய் சொல்லிக் கொள்ள,அதற்குள் ஏறி வண்டியை கிளப்பி இருந்தான்,தமிழவன்.
●●●●●●●●●
அந்த அரசு மருத்துவக் கல்லூரியில் ஆங்காங்கே,மாணவர்கள் கூடி நிற்க,வாயிலின் அருகே புத்தகக் கட்டுடன் தரித்திருந்தாள்,அவள்.
விழிகளோ,நொடிக்கு ஒருமுறை பாதையை எட்டிப் பார்த்து,கலவரத்தை தமக்குள் பூசிக் கொள்ள,முகத்தில் பதட்டத்தின் ரேகைகள்.
"எங்க போய் தொலஞ்சாளோ..?" இன்னும் வராத,தோழிக்கு திட்டியவவளின் மனதில் பதட்டமே நிறைந்திருந்தது.
அவளின் பதட்டம் புரிந்தது போல்,தோழியும் ஓடிக் கொண்டு அவ்விடம் வந்து சேர,பெண்ணவளின் பார்வை அவளை உஷ்ணத்துடன் தீண்டியது.
"எதுக்குடி மொறக்கிற..? இன்னும் பஸ்ஸு போகல தான..?"
"ஆமா காலேஜ் பஸ்ஸு நாம வர்ர வர நமக்காக தான காத்து கிட்டு இருக்கும்..கொஞ்ச நேரம் நேரத்தோட எந்திரின்னா கேட்டுட்டு தான மறுவேல பாப்ப..இப்போ ரூட் பஸ்ஸு தான்.." காய்ந்து விழுந்தவளோ,பாதையைக் கடந்து பேரூந்து நிறுத்ததில் சென்று தரித்திட,அவளைப் பின் தொடர்ந்தாள்,தோழியும்.
"சரி சரி கோச்சுக்காத.."மன்னிப்புக் கேட்டிட,முறைப்பை அள்ளி வீசும் முன்பே,பேரூந்து வந்து விட,இருவரும் ஏறிக் கொண்டனர்.
அடுத்த பத்து நிமிடத்தில்,அவர்கள் பயிற்சிக்கு செல்லும் மருத்துவமனை வந்து விட,இறங்கிக் கொண்டவர்களுக்கு,பாதையை மாற வேண்டிய கட்டாயம்.
"நா சொல்ற வர இரு..அங்க இங்க பாக்காம பாயாத.." தோழியை அதட்டியவளோ,இருபுறமும் ஆராய்ந்து பாதையை மாறப் பார்த்திடும் முன்னமே,கையை இழுத்துக் கொண்டு தோழி பாய்ந்து விட,திக்கென்றது அவளுக்கு.
அவள் நினைத்தது போலவே,வேகமாய் வந்த வண்டியோ,கிறீச்சிட்டு நின்றது,அவளின் முன்.
"இடியட்..ரோட்ட பாத்து க்ராஸ் பண்ண வேணாம்.." உள்ளே இருந்தவன்,வசைமாரி பொழிய,அவனைக் கண்டதும் அவளுக்கு நெஞ்செல்லாம் பயம் பிடித்துக் கொண்டது.
ஒரு நொடி அதிர்ந்தாலும்,தன்னை சமாளித்துக் கொண்டு
தவிப்பான முகத்துடன் மறுபுறம் வந்தவளின் விழிகளோ,தோழியை உறுத்து விழித்தன.
"மெண்டல் உன்னால நா தான் இங்க அவனவன் கிட்ட ஏச்சும் பேச்சும் வாங்கி கிட்டு இருக்கேன்.." கடுகடுத்தவளுக்கு,காலையிலேயே திட்டு வாங்கியது,இனம் புரியா சோர்வைத் தந்தது.
"அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.." அலட்டிக் கொள்ளது உரைத்திட்ட தோழியின் தலையில், ஓங்கி ஒன்றை வைத்தவளுக்கு மனம் கேட்கவில்லை.
"மெண்டல்..உன்னால தான் டி எல்லாம்..அந்த கார்க்காரன் என்னெல்லாம் திட்டிட்டு போறான்.." நொந்து கொண்டவளுக்கு,தோழியை திட்டக் கூட நேரம் இருக்கவில்லை.
வேக நடையுடன் மருத்துவமனைக்கு நுழைந்து கொள்ள,அப்படியே நேரமும் கடந்தது.
மதியம் பண்ணிரெண்டு மணி வரை,மருத்துவமனையில் தரிக்க வேண்டி இருந்தவர்களுக்கு,ஒன்றரை மணிக்க மீண்டும் கல்லூரியில் விரிவுரை இருக்க,அதற்கு செல்ல அறக்க பறக்க கிளம்பி வந்தனர்.
அவர்களினது மட்டுமல்ல,மருத்துவ மாணவர்களின் நாட்கள் இப்படித் தான் நகர்ந்திரும்,பொதுவாகவே.முதலிரண்டு வருடங்களில் ஓய்வென்பது,ஓரளவு இருந்தாலும்,அடுத்த மூன்று நான்கு வருடங்களுக்கு அதைப் பற்றி நினைத்துப் பார்த்திடக் கூட இயலாது.
பாதியை உண்டு மீதி உணவை விழுங்கி விட்டு,கல்லூரிப் பேரூந்தில் ஏறி,கல்லூரிக்கு வந்து,விரிவுரை மண்டபத்துக்கு வரும் போது மொத்தமாய் களைத்துப் போய் விட்டனர்,இருவரும்.
"டாக்டர் ஆகனும்னு ஆசப்பட்டு வந்தா இவ்ளோ தாங்க வேண்டி இருக்கே.." அங்கலாய்த்துக் கொண்டே,இருக்கையில் சரிந்தமர்ந்து மூச்சு விடும் முன்னமே,விரிவுரையாளர் உள்ளே நுழைய,ஐயோடாவென்றிருந்தது,இருவருக்கும்.
"ஐயோ..இவரு வேற கரெக்டான டைமிங்ல வந்து உசுரு எடுப்பாரே.."மெதுவாய் முணுமுணுத்த கீர்த்தியின் கையில் நறுக்கென்று கிள்ளினாள்,அவள்.
கீர்த்தி அவளின் தோழி!
"வாய மூடிட்டு லெக்சர கவனி..இல்லன்னா வெளிய போட்டு அப்சன்ட் போட்ரும்.." அடிக்குரலில் சீறியவளோ,விரிவுரையில் கவனமாக,ஐந்து நிமிடங்கள் கடந்திருக்கும்.
மூடியிருந்த விரிவுரை மண்டபத்தின் கதவை,இரு மாணவர்கள் வந்து தட்டிட,அமர்ந்திருந்த அனைவரின் முகத்திலும் கலவரம் சூழ்ந்தது.
விரிவுரையாளரோ,கதவைத் திறந்து இருவரையும் திட்டி வெளியே அனுப்பி விட,தலை கவிழ்ந்த வண்ணம் சென்ற இருவரையும் பார்க்கையில் அனைவருக்கும் பரிதாபம் தான்.
ஆயினும் என்ன செய்திட..?
அவர்களின் துறையில் நேரம் தவறாமை அதீத முக்கியம்.மருத்துவர்கள் ஒரு நிமிடம் கடந்து வந்தாலும்,சில நேரங்களில் உயிர்கள் பறிபோகும் சாத்தியமும் உண்டே.
அந்த பழக்கத்தை நடைமுறைப்படுத்தவே,கல்லூரியில் இருந்தே இந்த நடைமுறை ஒழுங்குபடுத்தப்பட்டு இருப்பதை தவறென்று கூறிட முடியாது.
"எட்டு மணி லெக்சர்னா எட்டு ஒன்னுக்கு வந்தாலும் உள்ள எடுக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சும் வந்து கதவ தட்டுன இவனுங்களோட தைரியத்த நா பாராட்டியே ஆகனும்.." சின்னச் சிரிப்புடன் கீர்த்தி கூறிட,அவளுக்கோ தலையில் அடித்துக் கொள்ளத் தோன்றியது.
தொடராய் மூன்று மணிநேரம் நடந்த விரிவுரை முடிவடைய,வெளியே வந்த அனைவரின் முகத்திலும் அப்பட்டமான களைப்பு.
அதுவும் அடுத்த நாளும் இப்படித் தான் என்று நினைக்கையில் இன்னும் சோர்வு கூடிப் போனது.
தளர்ந்த நடையுடன்,சிற்றுண்டிச் சாலைக்குள் நுழையும் போது தான் எதிர்ப்பட்டது,அவ்விடம்.
"என்னடி ஆளுங்க வந்து நெறஞ்சி இருக்கானுங்க..? என்ன நடக்குது..?"
"அதுவா புதுசா லெக்சர் ஹால் ஒன்னு கட்டுறாங்கல..அனாடமி லேபோட சேத்து..அதுக்கு தான் வேலய ஆரம்பிச்சு இருக்காங்க.."
"அதுக்குள்ளயா..?" அவள் வியந்து வினவியவாறு, சிற்றுண்டிச்சாலைக்குள் நுழைந்திடவும் அவனின் வண்டி அவர்களை கடந்து செல்லவும் சரியாய் இருந்தது.
வேகமாய் வந்த வண்டி,வேலைத் தளத்தில் நின்றிட,அவனின் வேகத்தில் மிரண்டவாறே,ஓரடி பின்னடைந்தான்,விக்னேஷ்
மௌனம் பேசும்!
2025.03.24

Last edited: