GG writers
Moderator
மௌனங்கள் பேசும்!
மௌனம் 04
வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அனைவருமே,வண்டி வந்து நின்ற வேகத்தில் ஒரு கணம் திரும்பிப் பார்த்திடாமல்,இல்லை.
அவர்களின் பார்வை புரிந்தும் பொருட்படுத்தாமல் வண்டியில் இருந்து தாவி இறங்கியிருந்தான்,தமிழவன்.
கூரிய நீள நயனங்களின் ஹேசல் நிற கண்மணிகள்,அங்குமிங்கும் அசைந்திட,மென்புதராய் வளர்ந்திருந்த தாடியை சுமந்த தாடையை,அழுத்தமாய் நீவிக் கொண்டு,சுற்றத்தை ஆராய்ந்தவனின் தோரணை காணும் யாவரையும்,ஒரு க்ஷணமாவது,நிறுத்தி இரசித்திடச் செய்யும்.
அதுவும் அந்த அடர்ந்த கற்றை மீசை.அது தான் அத்தனை அழகு.அதுவும் பெருவிரலால் மீசை நுனியை தடவி விட்டு அவன் சிந்திக்கும் பாங்கு இனம் புரியா ஈர்ப்பொன்றை காண்பவர்களுக்கு தந்து விடும்.
ஆராயும் பார்வையுடன் அவனின் கண்மணிகள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்க,முனைக்கு முனை நகரும் காற்றோடு அவனின் சிகையும் அசைந்து ஆடியது.
"எதுக்குடா இவ்ளோ வேகமா வர்ர..?"
"டைமிங் முக்கியம் மச்சி.." தோழனின் தோளில் கையைப் போட்டவாறு,அவன் முன்னே நடந்திட,தலையில் அடித்துக் கொள்ளாத குறையாய் புலம்பினான்,விக்னேஷ்.
"மொதல்ல உன்ன இந்த அளவுக்கு எடம் கொடுத்து விட்டு வச்சிருக்குற எங்க பாஸ சொல்லனும்..அவரால தான் நீ இப்டி கெட்டுப் போயிருக்க.." முணுமுணுத்தவனின்,வார்த்தைகள் அவனின் செவியை அடைந்தாலும்,காட்டிக் கொள்ளாமல் தான் இருந்தான்,அவனும்.
"ஆமா இங்க கன்ஸ்ட்ரக்ஷன் வர்க் இன்னும் ஒரு வருஷத்துக்கு மாதிரி போகும்ல..?"
"ம்ம்..ஆமா மச்சான்..அது வர நாம அடிக்கடி இங்க வர வேண்டி இருக்கும்..நல்ல வேள மூணு பேருக்கும் ஒன்னாவே வேல வந்தது"
"ம்ம்..கொஞ்சம் கம்ப்ளிக்கேட்டடான வர்க்ல..அடிக்கடி இல்ல டெய்லி வந்து பாத்துட்டு போறது தான் பெட்டர்னு தோணுது..அதுவும் இல்லாம வேல செய்றவங்க கூட கிராமத்து ஆளுங்க..சேஃப்டி மெஷர்ஸ எவ்ளோக்கு எவ்ளோ ஃபோலோ பண்ணுவாங்கன்னு தெரியாது..ஸோ நீ அஷ்வின் இல்லன்னா நான் டெய்லி கண்டிப்பா வர்ரது பெட்டர்..நா கூட பாஸ் கிட்ட பேசிட்டேன்..இங்கேய வீடு பாத்து தர்ரேன்னு சொன்னாரு..அப்போ நமக்கும் ஈஸியா இருக்கும்.."
"அப்போ ஒரு வருஷத்துக்கு இங்கயா இருக்கனும்..?"
"எதுக்கு சலிச்சிக்கற..? மத்த சைட்ஸயும் கவனிச்சிகிட்டு இங்கயும் எக்கஸ்ட்ரா கவனத்தோட இருக்கனும்னு சொல்றேன்.." தெளிவாகத் தான் உரைத்தான்,அவன்.
"சரி என்னமோ சொல்ற..? என்ன பண்றது ஒத்துகிட்டு தான ஆகனும்.." சலிப்புடன் சொன்ன தோழனின் முதுகில் ஓங்கி ஒன்று வைத்தான்,அவன்.
மாலை நான்கு மணிக்கே வேலைகள் நிறுத்தப்பட்டிருக்க, மேற்பார்வை செய்து விட்டு,அவன் கிளம்புகையில் ஐந்து மணியை நெருங்கி இருந்தது.
அவன் வண்டியை எடுத்துக் கொண்டு வெளியே வரவும்,அவள் தோழியுடன் கதைத்தவாறு வாயிலை நெருங்கவும் சரியாய் இருக்க,உச்சஸ்தானியில் கேட்ட ஹாரன் சத்ததில் நெஞ்சில் கைவைத்தவாறு ஓரமாகி வழி விட,அவனின் விழிகளோ சரியாக அவளை கண்டு கொண்டன.
"காலைலயும் வந்து முட்டிக்க பாத்தா..இப்பவும் அதே தான்..இவளுக்கு அறிவே இல்ல போல.." கடுப்புடன் எண்ணியவனோ,அவளை முறைப்புடன் கடந்து செல்ல,அவளுக்கு அது புரிந்திடும் சாத்தியம் ஏது..?
ஓய்ந்து போன நடையுடன்,தாங்கள் இருக்கும் விடுதிக்கு வந்தவளோ,ஆடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்திட,அப்படியே கட்டிலில் மல்லாக்க விழுந்தாள்,கீர்த்தி.
பதினைந்து நிமிடங்கள் கடந்த பின்,உடைகளை கழுவி குளித்து விட்டு,அவள் வெளியே வர,இன்னும் அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தவளின் மீது நீர்த்துளிகளை விசிறி விட்டு,வெளியே சென்றாள்,உடைகளை காயப்போட.
கல்லூரியில் விடுதி வசதிகளுக்கு பற்றாக்குறை நிலவிட,கால் பங்கினர் தங்கியிருந்தது,என்னவோ கல்லூரிக்கு பக்கத்தில் இருக்கும் தனியார் விடுதிகளில் தான்.அதில் அவளும் அவளின் தோழியும் உள்ளடக்கம்.
அவ்விடமே,தனியார் விடுதிகளால் நிரம்பி இருக்க,கல்லூரிக்கு சென்று வருவதில் இருவருக்கும் பயங்கள் எதுவுமே இல்லை.
வெளியே துணிகளை காயப் போடும் பொழுது வெளியே வந்தார்,சாந்தவி.அவர்களுக்குரி வீட்டில் தான் மகளிர் கூட்டம் தங்கி இருப்பது.
சாந்தமான முகத்தில் புன்னகை தவழ்ந்திட வந்தவரைக் கண்டு,மெல்ல இதழ் பிரித்து புன்னகைத்தாள்,அவள்.
"அம்மாடி.."
"சொல்லுங்க ஆன்டி.."
"நா நேத்து சொல்லி இருந்தேன்ல..இந்த வீட்டோட மாடிய ஒருத்தங்க கேட்டு இருந்தாங்கன்னு.."
"ஆமா ஆன்டி..என்ன விஷயம்..?"
"அவங்க கன்ஃபார்மா வர்ரதுன்னு சொல்லிட்டாங்க..நீங்க நாலு பேரும் பொண்ணுங்கள்ல..வரப் போறது ரெண்டு பசங்கன்னு சொல்றாங்க..அதான் நீங்க நாலு பேரும் நாங்க இருக்குற வீட்டோட மாடிக்கு வந்துருங்கன்னு சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன்.." அவர் தகவலாய் சொல்லி விட்டு போக,தலையாட்டி விட்டு உள்ள வந்தவளின் முகத்தில் இருந்த மாற்றம் தோழிக்கும் புரிந்தது.
"என்னடி ஆன்டி வந்து என்ன சொல்லிட்டு போறாங்க..?"
"அதுவா இந்த வீட்டு மாடிக்கு ரெண்டு பசங்க வரப் போறாங்களாம்..அதனால அவங்க வீட்டு மாடிக்கு நம்ம ஷிஃப்ட் ஆக சொல்றாங்க.." எனும் போதே குதிக்கத் துவங்கி விட்டாள்,கீர்த்தி.
"ஏன்..? அந்த பசங்களுக்கு அந்த வீட்டு மாடிக்கு போக முடியாதா என்ன..?நாம தான் போகனுமா..?"
"எதிர்த்த வீட்டுக்கு தானடி போக போறோம்..அதுக்கு ஏன்டி இவ்ளோ கத்தற..?"
"இங்க நமக்கு நிம்மதி இருக்கும் டி..சுதந்திரமா இருப்போம்..நாம மட்டும் இருப்போம்..ஆன்டி நைட் மட்டும் வந்து தங்குவாங்க..ஆனா அவங்க வீட்ல அப்டியா..அங்கிளும் கீழ இருப்பாரு..அவரு வேற மிலிட்டரி மேன்.."
"அவரு அதுக்குன்னு எதுவும் சொல்ல மாட்டாரு டி..மாடின்னதுக்கு அதுவும் தனி வீடு மாதிரி தான..தனியா வாசல் எல்லாம் இருக்குல..டோன்ட் வொர்ரி.." என்றவளோ,எப்படியோ தோழியை சம்மதிக்கவும் வைத்திட,அன்றிரவே பொருட்களை இடம்மாற்ற துவங்கியிருந்தனர்,இருவரும்.
எல்லாவற்றையும் இடம் மாற்றி விட்டு,புத்தகக்கட்டுக்களையும் இதர சில பொருட்களையும் அள்ளிக் கொண்டு,அவர்கள் வாயிலை விட்டு வெளியேறுகையில்,அவனின் வண்டி அதி வேகத்தில் அவர்களின் முன்னே வந்து நின்றிட,அந்த வேகத்தில் பயந்து கையில் இருந்த ஓரிரு பொருட்களை கீழே விழுந்திட,புத்தகக்கட்டை மட்டும் நெஞ்சோடு அழுத்திப் பிடித்துக் கொண்டவளின் விழிகளில் கோபம்.
"எந்த பைத்தியக்காரன் இது..?அவன் ரோடுன்னு நெனப்பா...?" சத்தமாகவே,அவள் முணுமுணுத்திட,கீர்த்தியும் இதழ்களும் அவனை வசைபாடித் தீர்த்திருந்தன.
சுத்தமாய் அவளுக்கு நினைவில் இல்லை,அது தமிழவனின் வண்டியென்று.
நெஞ்சோடு அணைத்திருந்த புத்தகங்களால் குனிந்து கீழே விழுந்தவற்றை,பொறுக்கி எடுக்கவும் முடியாமல் அவள் தடுமாற,அதற்குள் இறங்கியிருந்தான்,தமிழவன்.
விழிகளை கறுப்பு நிற குளிர்கண்ணாடி திரையிட்டிருக்க,கற்றை மீசையின் நுனியை பெருவிரலால் தடவியவாறு,அலைபேசியில் ஏதோ பேசிக் கொண்டே இறங்கினான்.
அவனின் வண்டி நினைவில்லாது போனவளுக்கு,அவனைக் கண்டதும் நெஞ்சில் நீர் வற்றிப் போனது.
அலைபேசியில் கதைத்துக் கொண்டே,அவர்களை கடந்து செல்ல,அவளின் பார்வையின் மிரட்சி அவனைத் தீண்டியதை அவன் உணராமல் இல்லை.ஆயினும் காட்டிக் கொள்ளவில்லை;அவளொருத்தி இருப்பதை கண்டு கொள்ளவில்லை.
அவனால் தான்,அவள் பொருட்களை தவற விட்டாள் என்று அவனுக்கு தெரிந்தாலும்அசரவில்லை,அவன்.அசரும் ரகமா அந்த மௌனவழியாளனும்..?
வழமையான தன் வேக நடையுடன்,அவன் உள்ளே நுழைந்திருக்க,பின்னூடு வந்த விக்னேஷ் தான் இருவரின் முறைப்பினதும் அர்த்தம் தெரியாது,தடுமாறி நின்றிருந்தது.
கீர்த்தியின் விழிகள் அளவுக்கு மீறிய கோபத்தை பிரதிபலித்திட,அவளின் இதழ்களோ தாராளமாக இருவரையும் திட்டித் தீர்த்தது.விக்னேஷும் புருவ நெறிப்புடன் கடந்து விட,அவள் தான் தோழியை சுயத்துக்கு கொண்டு வந்ததே.
"ரெண்டு பேரும் போயாச்சு..இந்த புக்ஸ இதுக்கு மேல வச்சிட்டு போய் கீழ விழுந்தத பொறுக்கி எடு.." தோழிக்கு கட்டளையிட,மறுபேச்சின்றி சொன்னதை செய்தாள்,கீர்த்தி.
புதிய அறைக்கு மாறி அனைத்தையும் ஒழுங்குபடுத்தி விட்டு நிமிர்கையில் இருவருக்கும் போதுமென்று ஆகி விட்டது.
பெருமூச்சு விட்டவாறு,கட்டிலில் படுத்த கீர்த்தியின் விரல்களோ,அலைபேசியின் சார்ஜரை தேடி எடுத்திட,சட்டென்று அகப்படவில்லை,அது.
ஒழுங்குபடுத்தியிருந்த பொருட்களை கலைத்துப் போட்டு தேடியவளுக்கு,தான் அதை அவ்வீட்டிலேயே தவற விட்டு வந்திருப்பது உரைத்திட,ஒரு நிமிடம் நெஞ்சே நின்று போன நிலை.அலைபேசியும் உயிர்விடும் தருவாயில் இருக்க பதறிப்போனாள்.
"அரசி..அடியேய் அரசி.." குளியலறைக்கதவை தடதடவென்று தட்டிட,அவளுக்கும் பயம் வந்து விட்டது.
"என்னடி..? என்ன..?" உடைகளை கழுவிக் கொண்டிருந்தவளோ,பாதியில் வைத்து விட்டு வெளியே வந்தாள்,பயத்துடன்.
"என் ஃபோன் சார்ஜர அந்த வீட்ல வச்சிட்டு வந்துட்டேன்..வா போய் எடுத்துட்டு வர்லாம்.." என்க,அவளின் பார்வை சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தை தொட்டது.
நேரம் இரவு எட்டு மணி என காட்டிட,இந்நேரத்தில் தாமிருவரும் செல்வது அவளுக்கு உவப்பாய்த் தோன்றவில்லை.அதுவும் இரு ஆடவர்கள் இருக்கும் வீட்டுக்கு..?
"அடியேய் டைம பாரு..நாம பொண்ணுங்க ரெண்டு பேர் ரெண்டு பசங்க இருக்குற வீட்டுக்கு தனியா போலாமா இந்த நேரத்துல..? நாளக்கி போய் எடுத்துக்கலாம்.."
"அடியேய்..என் ஃபோன்ல சார்ஜ் இல்ல..உன்னோடதும் வேற மாடல்..இங்கெலாம் ஐ ஃபோன் சார்ஜர் இருக்காது டி.."
"சரி இரு..ஆன்டி கிட்ட சொல்லி அவங்கள கூட்டிட்டு போய் எடுத்துட்டு வர்லாம்..நாம ரெண்டு பேரும் தனியா போறது சரியா படல.." என்றிட,கீர்த்திக்கும் அதை ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயம்.
ஊரார் பேச்சை செவிசாய்த்திட வேண்டிய தேவை இல்லை என்றாலும்,அதற்கு வழி வைக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்பது,அவளின் எண்ணம்.
பெரியவர்களை இருவரையும் அழைத்துக் கொண்டு,அவ்வீட்டிற்கு செல்ல விக்னேஷ் தான்,வைத்துச் சென்ற பொருட்களை கொண்டு வந்து கொடுத்ததே.
"போகும் போது எல்லாத்தயும் பாத்து எடுத்து போக வேண்டியது தான..இங்க நம்மள வந்து டிஸ்டர்ப் பண்ணி கிட்டு.." அவன் கத்தியது,அவள் செவிகளில் விழ ஒரு மாதிரியாகிற்று,அவளுக்கு.அவனின் எதிர்வினை இவ்வாறு தான் இருக்கும் என்று அவளுக்குத் தெரியும்.ஆனாலும்,சட்டென ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
பெரியவர்கள் இருவரும் முன்னே சென்றதால்,அவர்களின் காதுகளில் விழாதிருக்க,கீர்த்தியோ அவளின் முகத்தை ஏறிட,அதுவே சட்டென மாறிப் போயிருந்தது.
"எதுக்கு நீ இப்போ அப்சட் ஆகற..?" கேட்ட தோழிக்குமே,அவன் கத்திய கத்தலைக் கேட்கையில் சங்கடம் தான்.ஆயினும்,அவளைப் போல இல்லை.
"ஒரு மனிஷன் தவறுதலா தான வச்சிட்டு வருவாங்க..அதுக்கு போய் இப்டி கத்துவாங்களா..?" கடுப்புடன் கூறியவளுக்கு,கோபமும் சங்கடமும் ஒரு சேர.அவன் மீது கொலைவெறியே உண்டாகிற்று.
மறுநாள் பொழுது விடிய,கல்லூரிக்கு தாயாராகி வெளியே வந்த இருவரும் கண்டது என்னவோ,காதில் ப்ளூடூத்துடன் சாவகாசமாய் மொட்டை மாடியில் நின்று காஃபியை சுவைத்துக் கொண்டு இருந்த அவனைத் தான்.
"நமக்கு நிம்மதியா ஒரு காஃபி குடிக்க கொடுப்பின இல்லயே.." கீர்த்தி சலித்துக் கொள்ள,அவளோ முறைத்துத் தள்ளினாள்.
"பராக்கு பாத்துட்டு இருக்காம வா..இல்லன்னா எல்லார் முன்னாடியும் திட்டு வாங்க வேண்டி இருக்கும்.." கடிந்தவாறு தோழியின் கரத்தை பிடித்துக் கொண்டு நடக்க,கீர்த்தியின் பார்வை அவன் மீது படிந்து அளவிட்டது.
"என்ன தான் சிடுமூஞ்சியா இருந்தாலும் இந்த பக்கத்து வீட்டு ஆளு அம்சமாத் தான்டி இருக்காரு..பாரேன்..நல்ல ஹெயிட்டா அளவான வெயிட்டோட அல்ட்ரா ஸ்மார்ட்டா..ஹேன்ட்சமா இருக்காருல.."
"ஆமா இப்டியே ஒருத்தர் விடாம சைட்டடி.."
"இல்லடி சும்மா சொல்றேன்..இந்த மனுஷனோட கெத்துக்கு அவர் கோவப்பட்டது எல்லாம் சரியா தான் இருக்கும்னு தோணுது..அப்டி கோவப்பட்டா தான கெத்து.."
"ஐயோ முடில உன்னோட.." தரதரவென்று இழுத்துக் கொண்டு அவள் நகர,அவர்களை கண்டாலும் அலட்டிக் கொள்ளாமல் காஃபியை உறிஞ்சி கொண்டிருந்தான்,அவன்.
அன்றைய நாளும் அப்படித் தான் கழிந்தது.கல்லூரி முடிந்து அவர்கள் தங்கியிருக்கும் வீட்டுக்கு வரும் போது ஐந்து மணியைத் தாண்டிட,அப்போது தான் அவனின் வண்டியும் உள்ளே நுழைந்தது.
"இந்த மனுஷன் கார விட்டுட்டு பைக்க ஓட்டுனா இன்னும் ஸ்மார்ட்டா இருப்பாரு.."
"வாய மூடிட்டு போடி உள்ள.." உதைக்காத குறையாய் தோழியை விரட்டி,அவள் கதவடைத்திட,சலிப்பாய் பெருமூச்சு விட்டாள்,தோழி.
●●●●●●●●
அனல் மோதிய விழிகளுடன் தன் முன்னே நின்றிருந்தவனை அவள் மிரண்டு பார்த்திட,அதில் இன்னும் கோபம் கிளர்ந்தது,அவனுக்குள்.
மௌனம் பேசும்!
2025.03.26

Last edited: