GG writers
Moderator
மௌனங்கள் பேசும்!
மௌனம் 05
ஆழ்ந்த உறக்கம் அவளைத் தழுவத் தவறி ஒதுங்கி நிற்க,விழிப்பிற்கும் நித்திரைக்கும் இடையில் தள்ளாடி தவித்துக் கொண்டிருந்தவளின் மனதை முழுக்க நிரப்பி நின்றான்,அவன்!
அவளின் அவன்!
உணர்வுகள் தளர்ந்திருக்கும் கட்டத்தில் அவளின் உயிரையும் தளர்த்திப் போட்டிட,மெதுவாய் கன்னம்குழிய புன்னகைத்திடான்.
நிகழை ஏற்க மறுத்திருக்கும் தருணத்தில்,அவளின் நிஜத்தையும் மறந்திடச் செய்திடவே,நெற்றியில் புரண்ட கேசத்தை ஒதுக்கி விட்டி கண் சிமிட்டி,அவளை சிதற வைத்தான்.
கலக்கங்கள் களைந்து இருக்கும் நிமிடங்களில்,அவள் அழுத்தங்களையும் அகற்றிப் விரட்டிட,ஒற்றைக் கண் அடித்து அவன் வசம் இழுத்துக் கொண்டான்.
நினைவுகளை தன் வசம் கொள்ளையிட்டு இருப்பவன்,அவளின் உறக்கத்தில் கூட,இமையோரத்தில் உறைந்திருக்க அவள் கடையிதழில் சிறு புன்னகை,உறக்கக் கலக்கத்திலும்!
ஏனோ,அதே புன்னகையுடன் அவளும் உறங்கிப் போகிறாள்,தன்னை மறந்து,அவனை மட்டுமே நினைத்துக் கொண்டு.
ஊர் வரும் வரை,உறக்கம் கலையவில்லை,பெண்ணவளுக்கு.அவன் நினைவுகளுடன் அவள் ஆழ்ந்து உறங்கி இருக்க,அருகே இருந்த திவ்யாவுக்கும் அவளை எழுப்பி விட மனம் வரவில்லை.
"நிம்மதியா தூங்கறா..தூங்கட்டும்.." சிறு புன்னகையுடன் நினைத்துக் கொண்டாலும்,அவள் விழிகளில் கலவரத்தின் துளிகள்.
வண்டி வந்து அவர்களின் பூர்விக வீட்டின் முன்னே தரித்திட,சாமான்களை இறக்கி வைத்து விட்டு ஒவ்வொருவராய் இறங்கிக் கொண்டனர்.
"தூங்காம எந்திரி..திவ்யா நீ இவள எழுப்பி கூட்டிட்டு வா.." சம்பூர்ணம் இருவரையும் அதட்டி விட்டுப் போன சத்தத்தில் உறக்கம் கலைந்து விழித்தவளுக்கு,இன்னும் சில நாழிகைகள் இந்த பயணம் நீண்டிருந்தால் என்னவென்று தோன்றிற்று.
முன்பும் ஓரிரு முறை இப்படித் தோன்றியிருக்கிறது,அவனுடனான பயணங்களில்.அந்த தருணங்களில் ஏதோ ஒரு இதம் இருக்கும்.இப்போது என்னவோ இருப்பது,நிம்மதி வேண்டும் என்கின்ற எண்ணமே.
விழிகளில் உறக்கத்தின் சாயல் இன்னும் மிச்சமிருக்க,மனமோ மீண்டும் உறக்கத்தை வேண்டியது.திவ்யாவின் பின்னூடு அறைக்குள் நுழைந்தவளோ,கட்டிலை தட்டி உதறி விட்டு,கை கால்களை கூட அலம்பாமல் அப்படியே சரிந்து மீளவும் உறங்கி விட்டிருந்தாள்.
குளித்து விட்டு வந்த திவ்யாவின் மனமோ படபடவென்று இருந்தது.உள்ளத்தில் பயத்தின் பேரலை உருப்பெற்று அவளை பாடாய்ப்படுத்திட,அதை வெளிப்படுத்த முடியா தன்னிலையை எண்ணி குமைந்தவளுக்கு அழுகையும் வரப் பார்த்தது.
வாயிலில் தோன்றிய நிழலில்,தன்னை நிதானப்படுத்தி அழுகையை விழுங்கிக் கொண்டவளுக்கு,அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை.மனம் பல திக்கில் குழப்பிப் போய் கிடந்தது.
ஆயிரம் அலைக்கழிப்புக்கள் அவளுக்குள்.அதை மேலும் அதிகரிக்கும் விதமாய் ஒலித்தது,அவளின் அலைபேசி.
திரையில் மிளிர்ந்த எண்ணைக் கண்டதும்,உடல் தூக்கி வாரிப் போக தேகம் நடுக்கத் துவங்கிற்று.
தொடராய் விடாது ஒலித்த அலைபேசியின் ஓசையில்,பெண்ணவளின் விழிகள் மெல்லச் சுருங்கிட,அதற்கு பயந்து அலைபேசியை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து விட்டாள்,திவ்யா.
இதயமோ,படபடவென அடித்துக் கொள்ள,விரல்கள் பயத்தில் நடுங்கவே துவங்கிற்று.பெரூமுச்சுடன் அழைப்பை ஏற்றவளின் விழிகளில் நீர் கட்டியிருக்க,விம்மலுடன் தான் பேசினாள்,மறுமுனையில் இருந்த நபருடன்.
மறுமுனையில் என்ன கூறப்பட்டதோ,அழைப்பு துண்டிக்கப்பட்டவுடன் ஒரு மூச்சு அழுது தீர்த்து விட்டு வெளியே வந்தவளின் விழிகள் வீங்கிப் போய் சிவந்து இருந்தன.
அதே நேரம்,
அறையில் உலாத்திக் கொண்டிருந்த,ரகுவரனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை.தவியாய்த் தவித்தது.
அவளைப் பிடித்து இருக்கிறது.அவளுடன் வாழ்நாள் முழுக்க வாழ்ந்திட,அவனுக்கு கொள்ளை ஆசை.
அவள் தான் இடம் தர மாட்டேன்,என்கிறாளே.அவளுடனான சம்பாஷணையை நினைக்க நினைக்க,அப்படியொரு எரிச்சலும் சலிப்பும்,உள்ளுக்குள்.
அவனின் தங்கை ரேவதியும்,அவனின் நடவடிக்கை கண்டும் காணாதது போல் கவனித்துக் கொண்டிருக்க,தாயாருக்குத் தான் மனம் பதபதைத்தது.
அவருக்கு இன்னும் மகனுக்கு அவள் மீது வந்திருப்பதை,காதல் என்று நம்பிட முடியவில்லை.அவன் காதல் என்று அவரிடம் கூறவும் இல்லையே.
"உங்க அண்ணனுக்கு நல்ல புத்தி வரனும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கோடி..போயும் போயும் இந்த பொண்ணு தான் வேணும்னு ஒத்தக் கால்ல நிக்கிறான்.." சலிப்புடன் கூறியவாறு,அவர் கடந்திட,ரேவதிக்கு அண்ணனைப் பார்க்கையில் பாவமாகத் தான் இருந்தது.
அவ்வெண்ணத்தை புறந்தள்ளி விட்டு,வீட்டைப் பெருக்கத் துவங்கியவளோ,ரகுவின் அறைக்குள் நுழைந்து ஒழுங்குபடுத்தத் தொடங்கினாள்.
ஆங்காங்கே,பொருட்கள் சிதறி கிடக்க,கட்டில் விரிப்பைக் கூட ஒழுங்குபடுத்தி வைக்காமல் கிளம்பி இருந்தான்,அவன்.
"பெட்ஷீட்ட சரியா விரிச்சா தான் என்ன..?" கடிந்தவாறே,தலையணையை ஒழுங்கு படுத்திட,தலையணையின் கீழே திறந்து வைக்கப்பட்டிருந்தது,ஒரு நாட்குறிப்பு.
திடுமென சுவாரஷ்யம் வந்து சூழ்ந்து கொள்ள,"இவனுக்கு டயரி எழுதுற பழக்கம் எல்லாம் இருக்கா..? நம்ம கிட்ட சொன்னதே இல்ல.." எண்ணியவாறு முதல் பக்கத்தை புரட்ட,முத்து முத்தாய் எழுத்துக்கள்.
"அட,என்ன இது..நம்ம ஆளோட டயர தான்னு.?" குதுகலமாய் நினைத்துக் கொண்டு,வேலையை பாதியில் விட்டு விட்டு,நாட்குறிப்பை வாசிக்கத் துவங்கினாள்.
*"இத்தன நாள் நா பாத்த பொண்ணு தான்..எனக்கு நல்லா தெரிஞ்ச பொண்ணும் தான்..இவ்ளோ நாள் அவள பாக்கும் போது எனக்கு எதுவும் தோணுனதே இல்ல..ஆனா இன்னிக்கி.."என்றதுடன் தொடராய் புள்ளிகள் வைக்கப்பட்டிருக்க அவளிதழ்களில் புன்னகை.
"எழுதக் கூட முடில..ஒரு மாதிரி மூச்சு வாங்குது..யார் கிட்ட சொல்றது எதுவுமே புரில..நா என்ன ஃபீல் பண்றேன்னு எனக்கே தெரில..ஆனா அந்த நிமிஷம் நா வித்யாசமா ஃபீல் பண்ணேன் அது மட்டும் உண்ம..கண்ணாடிய கழட்டு கைல எடுத்து அழுத்தமா ஒரு பார்வ பாத்தா பாரு..இன்னுமே என் கண்ணுக்குள்ள இருக்கு.."
"என்ன பார்வடா அதுன்னு எனக்கே தோணாம இல்ல..அவ எப்பவும் பாக்கற பார்வ தான்..ஆனா எதுக்கு எனக்கு இன்னிக்கி மட்டும் வித்யாசமா ஃபீல் ஆகனும்..?"
"இவ மட்டும் நம்மள என்னவோ பண்றா..அது மட்டும் தெளிவா புரிது..அதுவும் அவ கண்ணு..கண்ணா இல்லன்னா கடலான்னு எதுவுமே புரில..பாத்ததும் எனக்கு எல்லாம் மறந்து தான் போகுது.." இடையில் இருந்ததை, வாசித்தவளுக்கு அப்படியொரு புன்னகை.
மேலும்,சில பக்கங்களை தாண்டி புரட்டினாள்.
"இது நாள் வர அவ மேல ஏதோ ஒன்னு இருக்குன்னு தான் நெனச்சிகிட்டு இருந்தேன்..ஆனா அது ஏதோ ஒன்னு இல்லன்னு இப்போ தான் புரிது..அந்த பார்வ..அந்த ஏறெடுத்து பாக்க முடியாம நா பட்ற பாடு..இலேசா கண்ண நிமித்தி அவ பார்த்தா ஏன் எனக்கே எதுவும் ஓடலன்னு இப்போ தான் புரிது.."
"அப்போலாம் எப்பவும் பாப்பா..ஆனா அது ஒரு கோவத்தோட இருக்கும்..இப்போ,அப்போ அப்போ பாப்பா..ஆனா அது வெறும் கல்லயும் மண்ணயும் பாக்கற மாதிரி தான் இருக்கு..அதுல தான் கல்லா இருந்த நான் கரஞ்சிட்டேன்னு தோணுது..யப்பா..முடில சாமி.."
"முடில..சத்தியமா முடிலடா சாமி..இப்டி எல்லாம் ஃபீல் ஆகும்னு தெரிஞ்சு இருந்தா கண்டிப்பா அவ பக்கம் பார்வ கூட பட விட்டிருக்க மாட்டேன்..ஹையோ முடில..என்ன தான் வெளில வீம்பு புடிச்சிகிட்டு திரிஞ்சாலும் என்னயே என்னால ரொம்ப நாளக்கி ஏமாத்திக்க முடியாது.."
"ஐ ஸ்வேர் நா ஒத்துக்கறேன்..முழு மனசோட ஒத்துக்கறேன்..நா அவள லவ் பண்றேன்..ரொம்ப டீப்பா லவ் பண்றேன்னும் தோணுது..போகப் போக தான் பாக்கனும்..எங்க போய் நிக்கப் போகுதுன்னு..ஹப்பா!" என்று அவன் முடித்திருக்க,சிரிப்பை அடக்கிட முடியவில்லை,ரேவதிக்கு.
ஆயினும்,அவன் உணர்வுகளில் ஏதோ அழகியல்.இயல்பான அவன் உணர்வுகள் அவளுக்குள்ளும் உள்ளிறங்குவது போல்.
இதழ்களில் புன்னகை தவழ்ந்திட,அடுத்த பக்கத்தை புரட்டிட,ஒரிரண்டு வரிகள் மட்டுமே அந்த பக்கத்தில்.
"என்ன ஃபீல் பண்றேன் எப்டி ஃபீல் பண்றேன்னு எதுவும் தெரில..மனசுக்குள்ள வச்சிக்கவும் முடில..அதுக்குன்னு உடனே வந்து உன் கிட்ட சொல்லவும் முடியாது..பட் ஐ பெல்ட்..நீ ஃபீல் பண்ண வச்சிட்ட..அதுக்கப்றமும் என்ன நானே ஏமாத்திக்கறது சரியா என்ன..?ஐ அம் இன் லவ் வித் யூ..லவ் யூ அரசிம்மா.. " என்றதை படித்ததும்,அவளுக்குமே மனம் குளிர்ந்தது.
அடுத்தடுத்த பக்கங்களை விரல்கள் தாண்டிட முயன்றாலும்,கதவு தட்டும் சத்தம் அவளைக் கலைத்தது.
படபடவென அறைக்கவு தட்டப்பட,மனமேயின்றி நாட்குறிப்பை இருந்த இடத்தில் வைத்து விட்டு,கதவைத் திறந்தவளுக்கு,அவ்விடத்தில் தாயாரைக் கண்டதும் பெருத்த ஆசுவாசம்.
"என்னம்மா..?எதுக்கு இவ்ளோ வேகமா கதவ தட்ற வந்து..?" ஆர்வம் பாதியில் துண்டிக்கப்பட்ட கடுப்பில் தோய்ந்து வந்தன,அவளின் வார்த்தைகள்.
"வீட்டுப் பெருக்கி சுத்தம் பண்ணுன்னா கதவ அடச்சிகிட்டு தூங்கறியா..? ஒழுங்கா எல்லாத்தயும் க்ளீன் பண்ணு..இன்னிக்கி உங்க அக்காவும் மாமாவும் வர்ராங்கன்னு தெரியும்ல.." கடுகடு முகத்துடன் கூறி விட்டு அவர் நகர,மனமில்லை என்றாலும் அவளுக்கு வேலை செய்தாக வேண்டிய கட்டாயம்.
அண்ணன் வரும் முன் நாட்குறிப்பை படித்து விட வேண்டும் என்கின்ற முனைப்பில்,அவள் தீவிரமாக வேலை செய்திட,அது நிறைவேறப் போவதில்லை என்று அவளுக்கு தெரியாது.
இரவு கவிழ்ந்திருந்த சமயம் அது.
மொட்டை மாடியின் நின்று நிலவை வெறித்துக் கொண்டிருந்த திவ்யாவுக்கு அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை.
தான் செய்திருக்கும் முட்டாள்தனம் தனம் தனக்கு இத்தனை பெரிய பிரச்சினையை தந்திடும் என்று அவள் நினைத்திடவுமில்லை.
அதே யோசனையுடன் நின்றிருந்தவளின் பின்னே வந்து நின்ற பெண்ணவளுக்கு,எழுந்ததில் இருந்து அவளின் மாற்றம் தென்பட,என்வென்று கேட்டித் தான் மாடியேறி வந்ததே.
"திவ்யா..ஏதாச்சும் ப்ரச்சனயா உனக்கு..?" தோளில் கை வைத்தவாறு வினவியவளின் குரலில் திடுக்கிட்டு கலைந்தாள்,திவ்யா.
"ச்சே..ச்சே அப்டிலாம் ஒன்னுல்ல.." தன்னை மீட்டுக் கொண்டு கூறியவளின் வார்த்தைகளில் உண்மையைக் காணவில்லை,பெண்ணவள்.
"எதுக்கு பொய் சொல்ற..? என்ன தான் டி ப்ரச்சன உனக்கு..?"
"கல்யாணம் பண்ணி இன்னொரு வீட்டுக்கு போகப் போறேன்ல..அதான் அத நெனக்கும் போது கஷ்டமா இருக்கு.." உண்மைய் மறைத்து அவள் பொய்யை அடித்து விட,அவள் விழிகளை ஆழ்ந்து பார்த்தாள்,பெண்ணவள்.
அதில் இருந்த பொய் அவளுக்கு புலப்பட்டாலும் மேலும் எதுவும் தோண்டித் துருவாது இருக்க,அதுவே பெரும் பிரச்சினையாகிடப் போவது தெரியாது,அவளுக்கு.
மேலும் சில நாட்கள் நாட்கள் கடந்து விட்டிருக்க,திருமணத்துக்கு இன்னும் இரண்டு நாட்கள் என்கின்ற சமயம் அது.
பையனவனும்,அவனின் குடும்பத்தினரும் ஊருக்கு வந்திருக்க,திவ்யாவின் தாயிற்கு சொந்தமான இன்னொரு வீட்டில் அவர்களை தங்க வைத்திருந்தனர்.ஊரில் பேசும்படியாய் எந்த விடுதியும் இல்லாததால் தான் இந்த ஏற்பாடு.
வந்த முதல் நாளிலேயே,வைஷ்ணவி வந்து பெண்ணவளை பார்த்துச் சென்றிட,அதுவே பெரும் கோபத்தை தந்தது,பார்வதிக்கு.
"அண்ணன் கல்யாணம் டி..அத்த வீடு அது இதுன்னு அலஞ்சு திரியாத.." எச்சரித்து விட்டு நகர,அசட்டையாய் கடந்து விட்டு,மாடியேறிவளின் பின்னூடு வந்தான்,அபினவ்.
அவளின் கணவன்.
"என்ன வைஷு ஒரு மாதிரி டல்லா இருக்க..?"
"இல்ல எனக்கு எங்க அண்ணனுக்கு இன்னொரு பொண்ண கட்டி வக்க ரொம்ப விருப்பம்.." இழுத்துக் கொண்டே கூறிட,அவளின் வாயை எட்டிப் பொத்தினான்,அவன்.
"அடியேய் வாய மூடு..யாராச்சும் கேட்டா என்ன நெனச்சிக்கப் போறாங்க..பைத்தியமே.."
"இல்லங்க உண்மயா..?"
"வைஷு..உங்கண்ணனுக்கு இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம்..அப்டி இருக்கும் போது இப்டி பேசுனா என்னன்னு எடுத்துக்குறதுன்னு சொல்லு..?"
"..................."
"நீ யார சொல்றன்னு எனக்கு நல்லா தெர்யும்..ஆனா அதுக்கு இப்போ எதுவும் பண்ண முடியாது..இப்டி ஒரு ஐடியா இருந்தா நீ இத முன்னாடியே உங்கம்மா கிட்டவோ அண்ணன் கிட்டவோ சொல்லி இருக்கனும்.."
"இல்ல..அவளுக்கு இஷ்டமில்ல.."
"அப்போ மட்டுமா..??இப்போவும் இஷ்டமில்ல தான..பேசாம இந்த கதய விட்ரு..இந்த கல்யாணத்துல ப்ரச்சன வந்தா நல்லா இருக்காது.."
"பேசாம சின்னண்ணனுக்கு அவள பொண்ணு கேக்கலாமா..?"
"மொதல்ல இந்த கல்யாணம் முடியட்டும்..அப்றம் பாத்துக்கலாம்.." என்று அவளின் பேச்சுக்கு தடை விதித்தான்,அபினவ்.
மௌனம் பேசும்!
2025.03.27

Last edited: