GG writers
Moderator
மௌனங்கள் பேசும்!
மௌனம் 08
தோழியர் கூறியதை கேட்டவளுக்கு நெஞ்சு வலி வராத குறை தான்.திகைத்து விழித்தவளைக் கண்டவர்களின் மனதிலும் சில கேள்விகள் உருப்பெற்று நின்றன.
"எதுக்குடி இவ்ளோ ஷாக் ஆகற..? அவர பாத்தா ஸ்மார்ட்டா தெரில..என்னா ஸ்மார்ட்டு..ஒன்னு விடாம நாங்கெல்லாம் சைட் அடிச்சா நீ என்னான்னா பே பேன்னு முழிச்சு பாக்கற..?" என்றிட,பதில் சொல்லத் தெரியாது விழித்தாள்.
அவனைக் காண்பது அரிது.கண்டாலும்,விழி நிமிர்த்திப் பார்ப்பது என்பது எப்போதாவது நடந்தேறுவது.அப்படியே தவறுதலாய் விழிகள் நிமிர்ந்தாலும்,அவனின் கோபப் பார்வை அவள் விழிகளை தழைய வைத்திட,தலை தாழ்த்துவதே வாடிக்கையாய்.இதில் எங்கே அவனின் கம்பீரத்தை ஆராய்வதாய்..? ஆளுமை மெச்சுவதாம்..?
அதுவும் அவனை நினைக்கையிலும் தனிச்சையாய்க் காண்கையிலும் அவள் முன் உருவெடுத்து நிற்கும் நிழல் எங்கனம் அவனை பார்க்க விடும்..?
இப்போதும் அந்த கோபாவதாரம் கண் முன்னே வந்து போக,தலையை உலுக்கிக் கொண்டு நிமிர்ந்தாள்.
"என்னடி இது..?அவரப் பாத்தா உனக்கு ஸ்மார்ட்டா தெரிலியா..? எந்த பதிலும் சொல்லாம இருக்க..?"
"தெரிலடி..அப்டிலாம் தோணல.." அப்பாவி முழியுடன் பதில் கூறியவளை, கொலைவெறியுடன் முறைத்தனர்,தோழியினர்.
"இவ கிட்ட கேட்டோம்ல எங்களத் தான் செருப்பால அடிக்கனும்..சத்யா சார் அழகுன்னு சொன்னதும் இவ இவரயும் சைட் அடிப்பான்னு நெனச்சு தப்பு பண்ணிட்டோம்.." தலையில் அடித்துக் கொள்ளாத குறையாய் முணுமுணுத்திட,கீர்த்தியின் விழிகளிலும் அதே பாவம் தான்.
அதுவும் அவர்களின் நேரம் போலும்.அலைபேசியில் காதில் பொருத்தியவாறு,வேலைத் தளத்தில் இருந்து வெளியே வந்து தமிழவன் நிற்க,அவளைத் தவிர மற்றையவர்களின் விழிகள் அவன் மீது மினுமினுப்புடன் படிந்தது.
"ஆன்டி ஹீரோன்னு தெரியாம இப்டி சைட் அடிக்கிறாளுங்களே..காஃபிய தூக்கி அடிச்ச சீன்ல இருந்தா கண்ணு இந்தாளு பக்கம் திரும்பியே இருக்காது.."
உள்ளுக்குள் அங்கலாய்த்து கொண்டு அவள் தலைதாழ்த்தி இருக்க,அவனின் பார்வை ஒரு கணம் இவளைத் தொட்டுச் சென்றதை யாரும் அறியவில்லை.விழிகளை கூலர்ஸ் மறைத்திருக்க,அது அவனின் பார்வை வீச்சை உணரத் தடுப்பாய்.
கவனம் முழுவதையும் அலைபேசிக்கு கொடுத்து இருந்தவனோ,வழமையான மேனரிசமாய் நெற்றியில் புரண்ட அடர் கேசம் ஒதுக்கி,தலையை சின்ன அழுத்தத்துடன் கலைத்து கோதி,பெருவிரல் கொண்டு அடர்கற்றை மீசைநுனியை அழுத்தமாய் தடவிக் கொடுக்க,"ஹோஓஓஓஓஓ" என்ற கூச்சல் அவ்விடத்தை நிறைத்திட,தூக்கி வாரிப் போட்டது,பெண்ணவளுக்கு.
"ஆத்தாடி.." கொஞ்சம் சத்தமாகவே முணுமுணுத்து புலம்பி,அவள் மடியில் இருந்த புத்தகப்பையில் தலை சாய்த்திட,அரவம் உணர்ந்தும் அவர்களின் புறம் திரும்பவில்லை,தமிழவனின் பார்வை.
சில வாரங்கள் கடந்து இருந்த சமயம் அது.
தமிழவன் வீட்டில் இருக்கவில்லை.வேலை விடயமாக வெளியில் கிளம்பி இருக்க,மடிக்கணினியில் தட்டிக் கொண்டிருந்த அஷ்வினின் அருகே வந்து அமர்ந்தான்,விக்னேஷ்.
"மச்சி..?"
"ம்ம்ம்ம்ம்.."
"எனக்கு ஒரு விஷயம் மட்டும் ரொம்ப கொழப்பமாவே இருக்கு டா..இந்த தமிழ் பையன புரிஞ்சிக்கவே முடில.."
"ஏன் என்னாச்சு..?"
"அதான் நம்ம பக்கத்து வீட்ல ஒரு பொண்ணு இருக்கே..அந்த பொண்ண எப்ப பாரு மொறச்சிகிட்டே இருக்கான்..அவன் இப்டிலாம் ரியாக்ட் பண்ற ஆள் கெடயாதுல..அவனுக்கும் அந்த பொண்ணுக்கும் ஏதாவது முன்பக இருக்கோ..?"
அஷ்வின் பதில் சொல்லவில்லை.விசைப்பலகைளை தட்டிக் கொண்டிருந்த விரல்கள் வேலை நிறுத்தம் செய்திட,நிமிரிந்து பார்த்தவனை குழப்பிப் போய் பார்த்தான்,தோழன்.
"கேள்வி கேட்டா பதில் சொல்லாம எதுக்கு டா என்ன இப்டி முழிச்சு பாக்கற..?"
"எதுவும் இல்ல..ஆனா போகப் போக உனக்கே எல்லாம் புரியும்.." பொடி வைத்துப் பேச,அவனுக்கு தலையை சொறிந்து கொள்ளும் நிலை தான்.
"ஒரு வருஷம் உங்க ரெண்டு பேரயும் விட்டு வெளில இருந்தேன்னு என்ன இப்டி பழி வாங்குறீங்க பாவிங்களா.." அவன் கத்தும் போதே,வண்டி சத்தம் கேட்டது.
"வந்துட்டான் அவன்..அமைதியா இரு..என் கிட்ட கேட்டத அவன் கிட்ட மட்டும் வாயத் தெறந்து கேட்றாத ராசா..போட்டு பொளந்துருவான்.." என்று விட்டு புன்னகைத்திட,அவன் புன்னகையில் ஏதேதோ அர்த்தங்கள்.
காரை லாக் செய்து விட்டு திரும்பியவனின் பார்வை தனிச்சையாய் எதிர்வீட்டை துழாவிட,பட்டென ஹேசல் நிற கண்மணிகளை திரும்பி நின்றன.
அவனைக் கேட்காமல் விழிகள் மெல்லிய சுழற்சியில் அசைய,அகத்தின் அடியோரத்தில் அவள் விம்பம் விழிகளுக்குள் பொதிந்திட வேண்டுமென்று சிறு இசைவு.
இசைவின்றிய அசைவில் அவளைக் காணும் இசைவு அப்பட்டமாய் வெளிப்பட,இமைகளும் ஒப்புக் கொடுத்து,இசைந்து போயின.
அவன் உணரவில்லை.உணர்ந்திடினும் ஒப்புக் கொள்ள மாட்டானே,திமிருக்கு அரசன்.ஒப்புக் கொண்டால் பூமி தலைகீழாய் மாறி விடும்.
நொடியதில் விழிதனில் தோன்றிய ஆர்வத்தை அமிழ்த்தி புதைத்து விட்டு உள்ளே நுழைந்தவனோ,தனக்கான காஃபியை கலக்கிக் கொண்டு பால்கனிக்கு வர தெளிவாய்த் தெரிந்தது,அவளின் உருவம்.
மொட்டை மாடியில் தோழியுடன் கதைத்துக் கொண்டு துணிகளை காயப்போட்டுக் கொண்டிருந்தாள்.
குளித்திருந்தவளோ கூந்தலை அவிழ்த்து விட்டிருக்க,அசைந்து காற்றுக்கேற்ப ஓரிரண்டு இழைக்கற்றைகள் நெற்றியில் முகாமிட,சிலுப்பலுடன் அதை பின்னே தள்ளியவளை பார்த்திட்ட, அவன் விரல்களும் தனிச்சையாய் நெற்றியில் புரண்ட அடர் கேசத்தை பின்னே ஒதுக்கின.
அவளுக்கோ,மொத்த எண்ணமும் தன் கதையில் இருக்க,அவன் கவனம் அவளில் நிலைத்துத் தொலைத்தது;சிந்தாமல் சிதறாமல்;சிந்தையது கலையாமல்.
இசைவின்றி சுழன்ற கண்மணிகள் அவளை உரசி,அசைவின்றி உறைந்து கிடக்க,இமைகளின் முத்தம் நின்று போக,இதயத்தின் சத்தம் இசையென அவனில் நிறைந்தது.
விழிகள் நிரப்பிய அவள் விம்பத்தை, அச்சுப் பிசகாமல் அகமும் அள்ளிக் எடுத்து உயிரில் கோர்த்து,ஜீவனுக்குள் பொதிந்து கொண்டது.
நகர்ந்திடா அவன் விழிகள் ஆயிரம் கதை பேச,முகர்ந்திடா காதல் வாசமது சுவாசத்தில் வீச,அவன் நெஞ்சிலும் சின்னச் சின்ன சங்கேதங்களை உயிர்ப்பெற்று, சாயங்கள் பூசிட,அவன் உணர்ந்து தொலைக்கவில்லை.
காளையின் பார்வையை பாவை உணராது போக,அது அவனுக்கும் இன்னும் வசதியாகிற்று.
தொண்டைக் குழியை நனைத்த காஃபியின் ஈரத்தை விட,விழிகள் நிறைத்த அவள் விம்பத்தின் தூரம் அவனுக்குப் பிடித்துப் போயிற்று,போலும்.பாதி கப் காஃபி அப்படியே இருந்தது.
திடுமென கேட்ட சத்தத்தில் கலைந்து தன்னிலை மீண்டான்,தமிழவன்.தன் நிலை எண்ணி அவனுக்கும் திகைப்பே.
"என்னடா பண்ணிட்டு இருந்த...?" தன் தலையில் தட்டிக் கொண்டு இல்லாத பொல்லாத நினைவுகளை இழுத்தெடுத்து இறுக்கிக் கொண்டான்,அவன் மனதை;அவள் வசம் நழுவிக் கொண்டிருக்கும் அவன் மனதை.
●●●●●●●●●●
இன்று செய்ய வேண்டி இருந்த வேலைகள் சீக்கிரமாகவே நிறைவடைந்திருக்க,ஊழியர்களை சீக்கிரமாக கிளம்ப அனுமதி கொடுத்திருந்தான்,அவன்.
வேலைத்தளத்தை மேற் பார்வை செய்ய,ஐந்து பொறியிலாளர்களே அங்கு தரித்திருக்க,மேற்பார்வையை முடித்து விட்டு வெளியே வரும் போது நான்கு மணி ஆகியிருந்தது.அஷ்வினும் இன்று வந்திருக்கவில்லை.
வண்டியை இன்று கல்லூரிக்கு வெளியே நிறுத்தி இருந்ததால்,அவனும் விக்னேஷும் வாயில் வரை நடந்து வர,பாவையினரில் சிலரின் பார்வை தன் மீது ஆர்வமாய் படியது எரிச்சலே மண்டியது,அவனுக்குள்.
"ராசிக்காரன்டா நீயி.." தோழன் வேறு நேர காலம் தெரியாமல் கலாய்த்திட,அவனின் தீப்பார்வையில் அமைதியாகினான்,உடன் வந்த பாவத்துக்காக.
வாயிலின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இளநீர் வண்டியைக் கண்டதும் விக்னேஷின் விழிகள் பளிச்சிட்டன.
"மச்சி எளநீ வாங்கிக் குடிச்சிட்டு போய்ரலாம்.." என்றிட,ஆமோதிப்பாய் அசைந்தது,அவன் சிரசு.
இரண்டு இளநீர்களை சீவி வாங்கிக் கொண்டு வர,வண்டியில் சாய்ந்து நின்றவாறு,உறிஞ்சி பருகிக் கொண்டு இருந்தனர்,இருவரும்.
இளநீர் குடித்தவாறு தோழன் வேடிக்கை பார்க்கத் தொடங்கிட,அலைபேசியில் இருந்து கவனத்தை திருப்பிய தமிழவனின் விழிகளில் சடுதியான கோபம்.
அனல் முட்ட நின்ற ஹெசல் விழிகளை அவள் கண்டிருந்தால், வெகுவாய் பயந்து போயிருப்பாள் என்பது சத்தியம்.
அவள் தான்.அவனின் கோபத்தின் பிண்ணனி அவளின் இதழ்களில் அழகாய் தொக்கி நின்ற புன்னகை தான்.
அவளும் அவளின் தோழியும் வர,அவளுக்கு பக்கமாய் அவர்களுடன் நடந்து வந்து கொண்டிருந்த ஆடவனுடன் புன்னகை முகமாக கதைத்தவாறு நடந்து வந்தவளைக் காண்கையில் அவனுக்குள் சினம் பீறிட,விழிகளில் அது பட்டவர்த்தனமாய் விரிந்து நின்றது.
அவளுக்கு பதில் சொல்லியவாறு,அந்த ஆடவனும் அவர்களுடனேயே நடந்திட,தவறாக நினைக்கவில்லை என்றாலும்,அவனில் ஜனித்த கோபத்தீயை தணிக்க முடியவில்லை.தணித்திட அவன் முயலவுமில்லை.
அதுவும் அவள் இயல்பாக எப்போதும் போல,வாயிலில் நின்றிருந்தவர்களை கொஞ்சமும் கண்டு கொள்ளாது பார்வையை கூட படிய விடாமல்,கடந்து உள்ளே செல்ல,அவனுக்கு வந்ததே கோபம்.
பாதிகுடித்துக் கொண்டிருந்த இளநீரை வீசியெறிந்தவனோ,வண்டிக்குள் ஏறி உச்ச வேகத்துடன் கிளப்பியிருந்தான்,வண்டியை.
அவன் எறிந்த வேகத்தில் இளநீர் பின்னிருந்த சுவற்றில் பட்டுத் தெறிக்க,அதில் அதிர்ந்த தோழன் மீளும் முன்னர் வண்டியைக் கிளப்பியிருந்தான்,தமிழவன்.
விக்கித்துப் போய் நின்று விட்டான்,தோழன்.அதிலும் அருகே இருந்த கூட்டம் அவன் நடவடிக்கையை வித்தியாசமாய்ப் பார்த்திட,முணுமுணுத்துக் கொண்டே தனது இரு சக்கர வாகனத்தை விரட்டினான்.
உச்ச வேகத்தில் வந்த தமிழவனோ,சட்டென அவனிருக்கும் வீட்டின் முன்னர் நிறுத்தப்பட்ட,இறங்கியவனுக்குள் என்ன உணர்வென்று அவனுக்கு புரியவில்லை.
நெஞ்சமே காந்தி விடும் அளவு,ஜீவனின் அடியில் பெரும் தகிப்பு.உயிருக்குள் என்னவென்று அறியாத சிறு தவிப்பு.அதுவும் அவளின் புன்னகையை நினைக்கையில் அது இன்னுமே கூடிப் போயிற்று.
அவள் தோழியுடன் புன்னகைப்பதை கண்டிருந்தாலும் பிற ஆண்களுடன் புன்னகைப்பதை கண்டதே இல்லை,இங்கு வந்த நாளில் இருந்து.முன்பும் அப்படித் தான்.
அந்நிய ஆண்களுடன் அவள் கதைக்கையில் பேச்சில் இருக்கும் கத்தரிக்கும் தன்மையும் பார்வையாலே ஓரடி தள்ளி நிறுத்தும் அழுத்தமும் தானே,அவனையும் முன்பிருந்தே அவளை கவனிக்க வைத்தது.
ஏனோ,அது யாரோ ஒருவரின் முன் தொலைந்து போனதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
தன்னிடம் ஓரிரு முறை பேசிய பொழுதுகள் நினைவில் வந்தன.தன்மையாய் பேசினாலும் அவளின் விழிகளில் எட்டி வைக்கும் தன்மை நிரம்பியிருப்பது,அவனுக்கு புரிந்திருக்க,அது வேறு ஆழமாய் உரைத்து அவனின் கோபத்தை பெருகிடச் செய்தது.
கோபமாய் வந்து அது ஆற்றாமையில் முடிய,மேனியில் வழுக்கிக் கொண்டு ஓடிய நீர்த்துளிகளின் தயவால் சற்றே மட்டுப்பட்டு இயல்பானான்,அவன்.
அவனுக்கு தன் மீது கோபம்.அவளின் நடத்தையும் செயல்களும் தன்னைப் பாதிக்க விடுவதை எண்ணி,அவனுக்கு தன் மீது கட்டுங்கடங்கா கோபம்.
"யாரோ ஒருத்தி ஏதோ பண்றான்னு நீ எதுக்குடா குதிக்குற..? இடியட்ட்ட்ட்ட்.." நிலைக்கண்ணாடியில் தெரிந்த தன் விம்பத்தை அனல் பொதிந்த விழிகளுடன் உரசி,அவன் வசைபாட,அவனுக்கே தன் நடவடிக்கை புதிதாகத் தோன்றிற்று.
இதழ் குவித்து ஊதி தன்னை சமப்படுத்திக் கொண்டான்.இனிமேல் இப்படி நடந்து கொள்ளக் கூடாது என்கின்ற உறுதியையும் எடுத்துக் கொண்டான்.அது பொய்யாகிடப் போவது தெரியாமல்.
அவனுக்குள் புதைந்திருக்கும் நிதானம் நழுவிப் போய் என்ன சொன்னதாம்..?
நெஞ்சமது மீளாமல் அவளை தழுவிக் கொண்டிருப்பதை மறைமுகமாய் உணர்த்திடப் பார்த்ததாமா..?
முன்னிலை தெரியாமல் அவள்!தன்னிலை புரியாமல் அவன்!
மௌனம் பேசும்.
2025.03.29

Last edited: