GG writers
Moderator
மௌனங்கள் பேசும்!
மௌனம் 10
"இங்க வந்ததுல இருந்து இவனுக்கு ஏதோ ஆயிடுச்சுன்னு நெனக்கிறேன்..நடுமண்டைல சாத்தான் எறங்கின மாதிரி எளநீய தூக்கி அடிச்சிட்டு வந்தான்..இவனுக்கு தான் இப்டிலாம் கோவமே வராதேன்னு மண்டய பிச்சிகிட்டு யோசிக்க வேண்டியதா இருக்கு.."
"என்ன நடந்துச்சுன்னு இப்டி பொலம்பிகிட்டு இருக்க நீ..?"
"என்ன நடச்சுன்னு இப்டி அசால்டா கேக்கற நீ.." என்றவனோ,தமிழவனின் நடத்தையை வியப்புடன் ஒப்புவிக்க,அஷ்வினின் ஒரு கணம் வியப்பில் மேலேறி நின்றது.
"நெஜமாவா டா சொல்ற..?"
"வேணும்னா போய் அங்குட்டு இருக்குற சீசிடீவல செக் பண்ணிப்பாரு..நா சொல்றது உண்மயா இல்லயான்னு புரியும்.." சிலிர்த்துக் கொண்டான்,தோழன்.
இருவரின் உரையாடலைப் பற்றி எதுவும் தெரியாமல்,தவையைத் துவட்டிக் கொண்டு வெளியே வந்த பையனின் அடர் கேசம் வழமை போல் நெற்றியில் புரண்டு கிடந்தது.
அதை பின்னே ஒதுக்கியவனின் பார்வை இருவரையும் கூர்மையாய் அளவிட,விக்னேஷுக்கு அவனின் நடத்தைக்கான காரணம் கேட்டிட நா துறுதுறுத்தது.
தோழனைப் பற்றி தெரிந்தவன் வாயைக் கட்டிக் கொள்ள,அஷ்வினின் பார்வை தான் ஆராய்ச்சியுடன் படிந்தது,திமிர் பிடித்தவனின் மீது.
"மச்சான்.." என இழுத்தான்,விக்னேஷ்.அவனிடம் காரணத்தை கேட்டறியாமல் மனம் அமைதிப்படும் என்று தோன்றவில்லை,அவனுக்கு.
பதில் பேசாது விழிகளால் என்னவென்று கேட்டான் ஒற்றைப் புருவமுயர்த்தி.புருவங்களும் இமைகளும் உயர்ந்து தாழ்ந்தது.
ஆர்ம் கட்டும் முக்கால் ஷார்ட்ஸும் அணிந்து,தலையை துவட்டிக் கொண்டே அவன் நின்றிருக்க,அந்த தோரணையில் உள்ளுக்குள் கொஞ்சம் பயமெடுக்கத் தான் செய்தது,கேள்வியை கேட்டவனுக்கும்.
சில நொடி அமைதியில் தமிழவனின் விழிகள் இடுங்கின.
அவனோ,தோழனை ஒரு பொருட்டாகவே கருதாமல் கடந்து செல்லப் பார்த்திட,சட்டென்று கோபம் மூள,"தமிழ்!" கொஞ்சம் காட்டமாக அழைத்து விட்டான்.
அவனின் அழைப்பில் அலட்சியமாக புருவம் உயர்த்தியவாறு,தோழனின் புறம் திரும்பி நின்றான்,அவன்!
தமிழவன்!
"என்னடா ஆச்சு உனக்கு..? பேய் பிடிச்ச மாதிரி மாறி மாறி நடந்துக்குற..? எளநிய எதுக்குடா தூக்கி அடிச்சிட்டு வந்த..? என்ன தான்டா உன்னோட ப்ரச்சன..?" மூச்சு விடாமல் தோழன் வினவிட அஷ்வினுக்கு பக்கென்றது.
தோழனைப் பற்றி நன்கு தெரியும்.இப்படி சட்டென ஏறிப்பாய்ந்து காய்ந்து விழுவதெல்லாம் அவனுக்கு துளியும் பிடிக்காது என்றும் தெரியும்.
"சேதாரம் பலமா தான் இருக்கப் போகுது இந்த பக்கிக்கி.."முணுமுணுத்தவனின் விழிகளோ,தமிழவனின் எதிர்வினைக்கு தவமிருந்தது.
ஆனால்,அவனோ ஆழமான மூச்சொன்றை உள்ளிழுத்து சுவாசக்குழலை நிரப்பிக் கொண்டு தொண்டையைச் செருமிட,அதுவே பயத்தைக் கிளப்பியது.
"கொஞ்சம் ஸ்ட்ரெஸ்ஸா இருந்துச்சு..அதான் அப்டி பிஹேவ் பண்ணி இருப்பேன் போல.." பிரித்தறிய முடியா தொனியில் கூறி விட்டுப் போக,இருவரின் விழிகளிலும் அப்பட்டான அதிர்வு.
"என்னாச்சு இவனுக்கு..?" ஒரு சேர மனதில் முளைத்த கேள்வியுடன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.விக்னேஷுக்கு ஏனோ மீண்டும் கோபம் வந்தது.
"என்னவோ பண்ணித் தொல..இவன் கூட ஃப்ரெண்ட் ஆன பாவத்துக்கு எனக்கு இதுவும் வேணும்..இன்னுமும் வேணும்.." தலையில் அடித்துக் கொண்டே புலம்பியவனின் இதழ்கள் ஓயாது திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தன,தமிழவனை.
இரவு ஒன்பதரை மணியைத் தாண்டி சில நிமிடங்கள் கடந்திருக்கும்.குளிர்மை பரவிய காற்று தேகம் தீண்ட,அவ்விடத்தில் பெரும் நிசப்தம்.அதைக் கலைக்கும் விதமாய் தோழியரின் சம்பாஷணை.
"என்ன காரியம் டி பண்ணி வச்சிருக்க பைத்தியக்காரி..? யோசிச்சு தான் இப்டி பொய்ய சொன்னியா மெண்டல்..?"
"வேற என்னடி பண்ண சொல்ற..? கேன்டீன் போய் நிம்மதியா சாப்ட முடியுதா அவனால..? பாத்துட்டே இருந்து எரிச்சல கெளப்புவான்..ப்ளேட்டாலே அவனோட மண்டய ஒடக்க தோணும் எனக்கு"
"அதுக்கு இப்டியாடி சொல்லி வப்ப..?"
"நா கூட இல்ல எனக்கு இதெல்லாம் சரி வராதுன்னு சொல்லத் தான் நெனச்சேன்..ஆனா அவன் நடந்துகிட்டத பாத்ததும் அப்டி சொல்லத் தோணல..அப்டி சொன்னாலும் அவன் தொரத்தி தொரத்தி டார்ச்சர் பண்ணுவான்னு தோணுச்சு..அதான் கமிட்டட்னு அடிச்சு விட்டுட்டேன்.."
"அரசி இது ஒன்னும் விளயாட்டு இல்ல..நம்ம லைஃப்டி..இப்போ நீ கமிட்டட்னு சொல்லி இருக்குற விஷயம் எல்லாருக்கும் தெரிய வரும்..சப்போஸ் யாருக்காச்சும் உன்ன நெஜமாலும் புடிச்சி இருந்தா கூட,அவங்க சொல்லிர மாட்டாங்க.."
"நா ஒன்னு சொல்லட்டுமா கீர்த்தி..நமக்குன்னு கடவுள் யாரயாச்சும் எழுதி வச்சிருந்தா அவங்க எப்டின்னாலும் நம்ம கிட்ட வந்துருவாங்க..அப்டி இல்லன்னா அது ஒரு நாளும் நடக்காது.."
"..................."
"நா சொன்னது பொய் தான்..இல்லன்னு சொல்லல..ஆனா அது என்னோட சேஃப்டிக்கு தான..? வேற என்ன பண்றதுன்னும் புரிலடி..அதனால அப்டியெலாம் நடக்காது.."
"நா வேணும்னு தான் டி கேக்கறேன்..சத்தியமா உனக்கு லவ் பண்ணனும்னு ஆச இல்லயாடி..?"
"ஆச இருக்கு..ஆனா அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்றமா..ஒருத்தர மட்டுந்தான் லவ் பண்ணனும்னு நெனக்கிறேன்.."
"அது சர்தான்..உன்ன பத்தி தெரிஞ்சும் உன் கிட்ட கேட்டேனே என்ன சொல்லனும்.." இருவரும் கதைத்துக் கொண்டிருக்கும் போதே,படபடவென மேல் மாடியின் கதவு தட்டப்பட்டது.
கதவைத் திறந்தவர்களுக்கு வாயலில் நின்றிருந்த மருதவேலை கண்டதும் சிறு அதிர்வு தான்.
"சாந்தவி மயக்கம் போட்டு விழுந்துட்டா..யாராச்சும் கொஞ்சம் வந்து பாருங்கம்மா.." என்றிட,அறக்க பறக்க அவர்களின் வீட்டுக்கு வந்திட,இருவருக்கும் ஏதோ பிடிபட்டது.
பயின்று கொண்டிருப்பவர்கள் என்பதால்,அவ்வளவாய் தெரியாத பட்சத்திலும்,அவரின் நாடித் துடிப்பு இறங்கி இருப்பதை வைத்து காரணங்களை ஊகிக்க முடிந்தது.
"அங்கிள் சீக்கிரமா வண்டி எடுங்க.." அவள் அவரின் நாடியைப் பிடித்துப் பார்த்துக் கொண்டே உரைத்திட,அதற்குள் வந்து சேர்ந்திருந்தனர்,தமிழவனும் அவனின் தோழர்களும்
மருதவேலோ,பயந்து போய் என்ன செய்வதென்று புரியாமல் இடிந்து செயலற்று போய் அமர்ந்து இருக்க,தமிழவனுக்கு கண்ணைக் காட்டினாள்,அவள்.
அவள் விழியசைவை சரியாக புரிந்தவனும் உடனடியாய் வண்டியைக் கிளப்பிட,சாந்தவியை கிடத்திக் கொண்டு தோழியர் இருவரும் மருத்துவமனை விரைந்திட,அஷ்வினும் ஏறிக் கொண்டான்.
விக்னேஷோ, மருதவேலை ஆற்றுப் படுத்தி,அவனின் வண்டியில் அழைத்துக் கொண்டு வந்திருந்தான்,பத்து நிமிடங்களுக்கு பிறகு.
சாந்தவி அனுமதிக்கப்பட்டதும் அவருக்கு தாமதமின்றி சிகிச்தை அளிக்கப்பட,இருக்கையில் இடிந்து போய் அமர்ந்து இருந்தார்,மருதவேல்.
பெண்ணவளுக்கு, என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை.கம்பீரமாக இருக்கும் மனிதர்,இடிந்து போய் இருப்பது என்னவோ போல்.
"ஏதோ அவங்க சாப்பது அலர்ஜியாகி இருக்கு..அதான் பல்ஸ் இவ்ளோ ரெடியூஸ் ஆகி இருக்கு..நத்திங்டு வொர்ரி..அவங்க இப்போ சேஃப்..இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சிருவாங்க..பட் காலைல தான் டிஸ்சார்ஜ் பண்ணனும்" மருத்துவர் வந்து கூறவும் தான்,அனைவரின் முகமும் தெளிந்தது.
"அங்கிள் நீங்க கெளம்பி போங்க..நா ஆன்டி கூட இருக்கேன்.." உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பவர் என்பதால் அவரைக் கிளப்பி விடவே முயன்றாள்,அவள்.
தம்பதியினரின் சொந்த பந்தங்கள் எல்லோரும் வெளியூரில் இருப்பதால் உடனடியாக இவ்விடம் வந்து சேர்ந்து கொள்ள முடியாத சூழ்நிலை.மகளும் மகனும் வெளிநாட்டில் வாசம்.
ஏற்கனவே மாத்திரைகளை விழுங்கியிருந்தவரின் தேகமும் விழித்திருக்க ஒத்துக் கொள்ளாது சதி செய்த வண்ணம் இருந்தது.அதைக் கவனித்தே,அவள் கூறியது.
"நானும் உன் கூட இருக்கேன் டி.." கீர்த்தியும் நிற்பதாய்க் கூறிட,வம்படியாய் அவளையும் அனுப்பி வைத்தாள்.
"போய் அசைமண்ட செய்..இல்லன்னா நாளக்கி காது கிழிர அளவு திட்டு வாங்கனும்.." அவளின் காதுகளில் கிசுகிசுத்திட,அவளுக்கும் மறுக்கும் வழியில்லை.
அவள் மருத்துவமனையில் தரிப்பதாய் உறுதி கொடுக்க,ஒருவர் மட்டுமே இருக்க முடியும் என்பதால் மற்றைய அனைவரும் கிளம்பிச் சென்றாலும்,தமிழவனின் மனமோ அவன் வசம் இல்லை.
அவளை அங்கு,தனியே விட்டுச் செல்ல அவனின் மனம் இடம் தந்திடாது இருக்க,பெரும் அலைக்கழிப்புடனேயே வண்டியை விரட்டினான்,தங்கியிருக்கும் வீட்டை நோக்கி.
அவர்களை வீட்டில் விட்ட தமிழின் மனம் கேட்கவில்லை."எங்கடா போற..?" தோழர்களின் கலவரமான கேள்விக்கு பதிலேதும் சொல்லாமல் வண்டியை திருப்பியிருந்தான்,மருத்துவமனைக்கு.
வேக நடைகளுடன் வந்தவனோ,அவளிருக்கும் தளத்தை அடைகையில் தன்னை நிதானப்படுத்திக் கொண்டான்.மெல்ல குறைந்தது,நடையின் வேகமும்.
இயல்புகளும் அவனில் இல்லை.இயல்பாகவும் அவன் இருக்கவில்லை.என்னவோ போல் உள்ளுக்குள்.
தன் அருகே கேட்ட காலடியோசையில் நிமிர்ந்து பார்த்தவளுக்கு,அவனை அவ்விடத்தில் கண்டதும் விழிகள் இடுங்கின.அத்துடன் பல யோசனைகளும்.பயமாகவும் இருந்தது,அவனின் வரவை எண்ணுகையில்.
"என்ன அ..சார் ஏதாச்சும் ப்ரச்சனயா..?" படபடப்பாய் கேட்டவளின் விழிகளிலும் அதே கேள்விகளை காணக் கிடைத்தது.
துவக்கத்தில் அதிர்ந்து,தொடரில் பயந்து,மீள தன்னை மீட்டெடுத்து,வினாக்களை தேக்கி அவள் பார்வை அவனை கரைத்து விட,பெருவிரலால் மீசைக் கற்றையின் நுனியை தடவியவனின் விழிகள் ஒரு கணம் அலை பாய்ந்தன.
"சார்ர்ர்ர்ர்ர்.." இமைக்கதவுகள் சாற்றித் திறந்து,அவள் இழுத்திட,தன்னை சமப்படுத்திக் கொண்டான்,தமிழவன்.
"நத்திங்..அங்கிள் தான் நீ தனியா இருக்கனும்னு பயந்து போ சொன்னாரு.." உணர்வு காட்டாத தொனியில் அவனுரைத்திட்ட பொய்யை,அவள் நம்பினாலும்,அவன் வரவுக்கான பிடித்தமின்மையும் பயமும் அவள் விழிகளில் கொஞ்சமாய்.
அவனிருந்தால் அவளால் இயல்பாக இருந்திட முடியாது என்பதால் உண்டாகிட்ட பிடித்தமின்மை போலும்.
இசைவின்றி இயல்புகள் தொலைத்து அவன் நிற்க,அதை உணர்ந்திடும் பக்குவம் அவளுக்கு இல்லையும் கூட.
"இல்ல இங்க சேஃப் தான்..நாங்க க்ளினிகல் வர்ர ஹாஸ்பிடல் தான்..நா பாத்துக்குறேன் நீங்க போங்க.." தன்மையாய் அவனை கிளப்ப முனைந்திட,அவனுக்கு சுர்ரென்று ஏறியது.
"அங்கிள்கு என்னால பதில் சொல்ல முடியாது.." கொஞ்சம் காரமாய் வந்து விழுந்த வார்த்தைகளில் அவளுக்கும் ஒரு மாதிரியாகிப் போக,சரியென்பதாய் தலையசைத்து விட்டு தள்ளி அமர்ந்து கொண்டாள்.
தமிழவனுக்கு கோபம்.தன் இருப்பை அவள் ஏற்கவில்லை,என்பதை அவனால் சட்டென்று ஏற்றுக் கொள்ளவில்லை.
அவளை அவனின் உரிமையாய் நினைக்கத் துவங்கியதாலோ என்னவோ,அவளுக்கு அவன் அப்படியில்லை என்கின்ற எண்ணம் மனதில் எட்டிப் பார்க்கவுமில்லை.
நான்கைந்து இருக்கைகள் தள்ளி அமர்ந்து இருந்தவளோ,அலைபேசியை துழாவிக் கொண்டிருக்க,அவனின் ஓரவிழிகளோ அவளின் விம்பத்தை களவாடி நெஞ்சில் நிரப்பிக் கொண்டிருந்தது,அவனை மீறி.
தவித்தவனின் விழிகளும் அதே தவிப்புடன் அவளை அள்ளிக் கொண்டு,ஆசுவாசம் அடைந்தது.
தன்னையொருவன் கவனிக்கிறான் என்கின்ற எண்ணமே இல்லை,அவளில்.அப்படியொரு எண்ணம் அவளுக்கு அத்தனை எளிதில் வந்திடாது என்பதும் உண்மை.
நாழிகைகளில் சில கரைந்தோட,உறக்கம் சுழற்றிட,அவள் விழிகள் தூக்கத்தில் சொக்கின.விழிகளை மூடித் திறந்து பிரயத்தனப்பட்டு விழித்திருந்தவளைக் காண்கையில் அவனுக்கும் மனம் கேட்கவில்லை.
அவள் பாராமுகம் தெரிந்தும்,அவள் வசம் செல்லும் இரகசியம் இன்னும் பிடிபடாது போக,பாதங்கள் தன்னாலே அவளை நோக்கி நீண்டன.
"தூக்கம் வருதுன்னா உள்ள போய் தூங்கலாம் தான.." சாந்தவி அனுமதிக்கப்பட்டிருந்த அறையை காண்பித்துச் சொல்ல,விழுக்கென நிமிர்ந்தவள் திடுமென கேட்ட ஓசையில் படபடத்து நிமிர்ந்தாள்.
வியாபித்த அச்சமது விழிகளில் விரிய,நெஞ்சில் கை வைத்து விழி நிமிர்த்தி அவள் பார்த்த பார்வையது,அவள் நெஞ்சாங்கூட்டில் மீளாமல் ஒட்டிக் கொள்ள,அவன் தணிய அவன் விழிகளும் கனிந்து தன்மையாய் புன்னகைத்தன.
இதழ்கள் அசையாவிடினும்,இமைகளினோரம் தெரிந்த கனிவான புன்னகையில் அத்தனை தண்மையும் இதமும் பரம்பியிருந்ததை,அவனே அறியவில்லை.
சில நொடி ஸ்தம்பித்து அவளிருக்க,"மொழி" என்று அவனிதழ்கள் உதிர்த்த வார்த்தைகளில் அத்தனை தன்மை;அளவில்லா தண்மை.
"மொழி.." என்றான்,மீளவும்.
"ஹா..ஹா சொல்லுங்க.." திணறலுடன் அவள் பதில் மொழிய,தழிழவனின் விழிகள் அழகாய் புன்னகைத்தன.
மௌனம் பேசும்!
2025.03.30

Last edited: