GG writers
Moderator
மௌனங்கள் பேசும்!
மௌனம் 11
சாமி சன்னிதியில நின்று மனமுருக வேண்டிக் கொண்டிருந்த சம்பூர்ணத்தின் வேண்டுதல் முழுவதையும் நிறைத்து நின்றது,மூத்த மகள் மட்டுமே.
கோயிலுக்கு வரும் போதெல்லாம் அவளுக்காகவே,அவரின் மனம் முதன்மையாய் பிரார்த்திக்கும்.அவளை எண்ணி வேண்டாத நாளில்லை.
எதற்கும் பிடி கொடுக்காமல் இருப்பவளை சரி செய்யும் வழி தெரியாது இருக்க,கடவுளிடம் வழி கேட்பதை தவிர வேறு வழி இல்லை,அவருக்கு.
வேண்டுதலை முடித்துக் கொண்டு குளக்கட்டில் வந்த அமர்ந்தவரின் பின்னூடு வந்து தானும் அமர்ந்து கொண்டார்,பார்வதி.இருவரும் தான் கோயிலுக்கு வந்து இருந்தனர்.
"என்ன அண்ணி..? வேண்டுதல் பலமா இருக்கு..? யார நெனச்சி இவ்ளோ வேண்டுதல்..?"
"வேற யாரு என் பொண்ணு அரசிய நெனச்சு தான்..ஏன்னு புரில பார்வதி..அவ கல்யாணத்துக்கு பிடி கொடுக்கவே மாட்டேங்குறா..யாரக் காட்டுனாலும் வேணாங்குறா.."
"......................."
"என்ன என்ன பண்ண சொல்ற பார்வதி..? அவ அப்பாவும் அவளுக்கு ஒத்து ஊதிக்கிட்டு இருக்குறத பாக்கும் போது தான் கோவமா வருது..இவளுக்கு அப்றம் அருவியும் இருக்கா.."
"அரசி கிட்ட அத சொல்லி பாக்கலாம்ல.."
"எல்லாத்தயும் பண்ணி பாத்தாச்சு..அவ கிட்ட சொன்னா தங்கச்சிக்கு கல்யாணம் எடுங்க...அதுல அவளுக்கு எந்த ப்ரச்சனயும் இல்லன்னு சொல்றா..?"
"........................."
"இதுக்கு மேல நா என்ன பண்ணலாம்னு சொல்லு..? மனசுல யாரயாச்சும் நெனச்சி கிட்டு இப்டி கல்யாணம் வேணாம்னு சொல்றாளான்னு கேட்டா அதுக்கும் இல்லன்னு பதில்..சும்மா சும்மா கேள்வி கேக்காதீங்கன்னு என்ன திட்ட வேற செய்யறா..? என்ன பண்ணலாம்னு சொல்லு நான்..?" அங்கலாய்த்து புலம்பியவருக்கு,மனதின் கனம் தீர்ந்தபாடில்லை.
"எல்லாம் சரியாய்டும் அண்ணி..ரொம்ப போட்டு கொழப்பாதீங்க..படிச்ச பொண்ணு..டாக்டர் வேற..அவளுக்கு மாப்ள அமயாமலா போய்ரும்..?"
"மாப்ள சரின்னாலும் இவ ஒத்துக்க மாட்டேங்குறாளே.. ஏன்னு கேட்டா காரணமும் சொல்றதில்ல..அதான இங்க ப்ரச்சன.." பெருமூச்சுடன் எழுந்து கொண்டிட,பார்வதியும் கிளம்பத் தயாரானார்.
கோயிலைத் தாண்டி வெளியில் வந்திட,அங்கு அவர்களுக்காக காத்திருந்தான்,பையனவன்.
சம்பூர்ணத்தை கண்டதும் மெல்லிய புன்னகையொன்றை அவனிதழ்கள் சிதற விட,மருமகனின் தோற்றம் அவர் விழிகளுக்குள் நிறைந்து போனது.
கூடவே,தன் மகளுக்கு அவனை கொடுத்து வைத்திடவில்லையே,என்கின்ற ஆதங்கமும் நூலிழையென மனதை தழுவாமல் இல்லை.பெருமூச்சு வெளிப்பட,அவரின் எண்ணமும் அவருக்குள் அமிழ்ந்து போயிற்று.
பெரியவர்கள் இருவரும் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்திட,வண்டியைக் கிளப்பிய பின் அத்தைக்கும் மருமகனுக்கும் இடையில் சுகநல விசாரிப்புக்கள் மட்டுந்தான் நடந்தேறியது.
அளவுடன் பழகி,ஒட்டாத தன்மையுடன் இருப்பவனின் குணம் தெரியுமாதலால் சம்பூர்ணமும் பெரிதாய் பேச்சுக் கொடுப்பதில்லை.பேசும் சந்தர்ப்பங்களும் குறைவு தான்.
சம்பூர்ணத்தை அவர்களின் வீட்டில் விட,உள்ளே அழைத்தவரிடம் மறுப்பு சொல்லி விட்டு வண்டியை நகர்த்திக் கொண்டு,அவர்களின் வீட்டில் இருந்து சற்றுத் தள்ளி இருக்கும் முட்டுச் சந்தியை கடக்க முற்பட்ட சமயம் அது.
தோளில் கைப்பை தொங்கிட,தளர்ந்த நடையுடன் வீடு நோக்கி நடையைக் கட்டிக் கொண்டிருந்த,பெண்ணவளைக் கண்டதும் என்ன தோன்றியதோ,சட்டென நின்றது,வண்டி.
பார்வதிக்கும் அவளை அவ்விடம் கண்டு விட்டு பேசாமல் போக சங்கடமாய் இருக்க,மகனிடம் வண்டியை நிறுத்தச் சொல்லி கூற மனம் விழைந்தாலும்,எங்கே கோபம் கொள்வானோ என பயந்து அவர் மௌனம் காத்திட,அவரின் எண்ணம் புரிந்தாற் போல் வண்டியை நிறுத்தி விட்டிருந்தான்,மகனானவனும்.
பையனவனின் வண்டியைக் கண்டு ஒரு நொடி அதிர்ந்தாலும்,பார்வதி இருப்பதை உணர்ந்த பின்னர் தான் அவள் மனம் சமப்பட்டது.
தனக்காகத் தான் என்பது புரிய,பார்வதியின் புறம் வந்து நின்று அவருடன் பேசி விட்டு விடை பெற்றவளோ,பையனவனுக்கு சிறு தலையசைப்பை மட்டும் செலுத்தி விட்டு நகர்ந்திருக்க,சில நொடி அவனில் மோதிய அவள் பார்வையில் ஏதேதோ பிறழ்வுகள்,அவன் ஜீவனில்.
க்ஷணங்கள் மட்டுமே நீடித்த விழி மொழியென்றாலும்,பையனவனின் அகத்தின் ஆழத்தில் சின்னச் சின்ன அதிர்வலைகள்.
வீட்டுக்கு வந்தவளை ஒரு பிடி பிடித்து விட்டார்,சம்பூர்ணம்.அவளோ அலட்டிக் கொள்ளவில்லை.பொருட்படுத்தாது குளியலறைக்குள் நுழைந்திட,அவருக்கு அப்படியொரு கோபம்.
"அரசின்னு பேர வச்சிகிட்டு திமிரு காட்ட வர்ரா..இவளோட.." அவர் பல்லைக் கடிக்க,அதைக் கேட்ட தங்கைக்கு அப்படியொரு சிரிப்பு.சிரித்தால் தாயார் அடித்தாலும் அடித்து விடுவார் எனப் பயந்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.
குளித்து விட்டு அவள் வெளியே வந்த பின்னும்,தாயாரின் அர்ச்சனை தொடர்ந்திட,சலிப்பான முகபாவம் பெண்ணவளின் வதனத்தில்.
இரவு கவிழ்ந்திருக்க,வானத்தை வெறித்துக் கொண்டு யன்னலின் அருகே அமர்ந்து இருந்தாள்,பெண்ணவள்.
வீசிச் சென்ற குளிர்காற்று அவளைத் தீண்டிட,அவளுக்குள் அவனின் நினைவுகளின் பிரவாகம்.
"நீ எதுக்கு பயப்பட்ற ஏன் யோசிக்கறன்னு எனக்கு தெரில..இப்போ புடிச்சி இருக்குற இந்த கைய நா வாழ்க்க முழுக்க விட மாட்டேன்னு உனக்கு நம்பிக்க இருந்தா என் நெத்தில சந்தனத்த பூசி விடு.."
நெற்றியில் புரண்ட,அடர் கேசத்தை பின்னே தள்ளி ஒதுக்கியவாறு தன் முன்னிலையில் விழி மூடி,தேகத்தை சற்று முன்னே சரித்து நின்றிருந்தவனின் உருவம் விழிகளுக்குள் நிறைய,வலியென்றாலும் அவள் தேகம் சிலிர்த்தது.
நிகழ்கையில் இல்லாத சிலிர்ப்பது,அந்த நினைவை உணர்கையில்.தனக்குள் புன்னகைத்துக் கொள்ளவும் செய்தாள்,இதழ் பிரித்து.
அவனின் மொழியும் விழியின் பரிபாஷைகளும் நினைக்க நினைக்க தித்திப்பூட்டின.தித்திப்பூட்டி அவளை தெவிட்டச் செய்தன.
"மொழியோட கண்ணுல பொய் தெரியுதே.." அவன் நிழல் அவளை மறைத்திட,அவன் பார்வை அவளை கரைத்திட, பெருவிரலால் கற்றை மீசையின் நுனியைத் தடவியவாறு அவன் உரைத்திடும் தோரணையும் அவனின் ஆளுமையும்.
அப்பப்பா..!
அதை,நினைக்கும் தருணங்களில் எல்லாம்,அவள் வசம் வீழ்ந்து கரைந்து சிதைந்து தான் போகிறாள்,மொழியவள்!அந்த மௌனவழியாளனின் மொழியானவள்!
அந்த ஹேசல் நிற விழிகளும் அதில் அவளை சிதைத்துப் போடவே தவமிருக்கும் அவன் காதலும்,அவளின் முன் மட்டும் இதழ்களில் தவழ்ந்திடும் புன்னகையும் ஏனோ நினைவில் நிழலாடி,அவளை முழுதாய் இழுத்துக் கொண்டது.
நினைவுகளில் தொலைந்து கொண்டிருந்தவளின் மனதில் நிறைவான இதம்.அவனின் நினைவுகளால் மட்டுமே அது சாத்தியமாகும்.
நினைவுகளால் அவளின் அவனுடன் ஒன்றித்துப் போனாள்,அவள்.
அவள் மொழியரசி!
●●●●●●●
நான்கு நாட்களாக,மனதில் ஒரு வித அழுத்தம் பையனவவனுக்கு.திருமணம் சம்பந்தமான முதற்கட்ட வேலைகள் தந்தையானவர் துவங்கி இருக்க,மனது ஏனோ நெருடிக் கொண்டே இருந்தது.
ஏன் இந்த நெருடல் என்று புரிந்தபாடில்லை.ஆனால்,அப்படியொரு அழுத்தம்,உள்ளுக்குள்.
அன்று காலையில் எழுந்ததும்,அதே மனநிலை நிலவிட,அலுவலகம் செல்லத் தயாராகி தன்னை ஆராய்ந்தான்,நிலைக்கண்ணாடியில்.
அடர் நீல ஷ்ர்ட்டும் அதற்கு தோதாய் கறுப்பு நிற டெனிமும் அணிந்து இருந்தவனின், இடது கையை கறுப்பு நிற கைக்கடிகாரம் தழுவி இருந்தது.முழுக்கை சட்டையை மடித்து விட்டிருந்தான்,முழங்கை வரை.
நீளமான ஹேசல் நிற விழிகளில் கூர்மை நிரம்பி வழிந்திட,இறுகியிருந்த தாடையை மறைத்திருக்கும் மென் புதர் தாடி அழகென்றால்,அவன் கம்பீரத்துக்கு இன்னும் மிடுக்கை சேர்த்திடும் தடித்த அடர் கற்றை மீசை பேரழகு!அப்படி ஒரு அழகு அவனுக்கு.
அவனைப் போலவே அடங்க மாட்டேன் என சிகை வளர்ந்து இருக்க,அதை நேர்த்தியாய் கத்தரித்து இருந்தாலும்,முன்னுச்சியை முட்டிக் கொண்டு நிற்கும் முடிக்கற்றைகளை இப்போதும் பின்னே தள்ளி,அழுத்தமாய் தலையைக் கோதிக் கொண்டவனின் பெருவிரல் கீழிறங்கி,மீசை நுனியை அழுத்தமாய் தடவி விட்டது.
அடர்மீசை நுனியை ஒற்றைப் பெருவிரலால் தடவி விடும் பழக்கம் எங்கிருந்து வந்தது என்று அவனுக்கே தெரியாது.ஆனால்,அது அவனுக்கு தனித்துவமான அழகு.
நிலைக்கண்ணாடியில் தெரிந்த தன் விம்பத்தை கண்டு திருப்திப்பட்டவனாய்,மனதை நிறைத்திருந்த சஞ்சலங்களை புறந்தள்ளி விட்டு,கீழே வந்திட,அவனுக்கான உணவை எடுத்து வைத்திருந்தார்,பார்வதி.
அவசர கதியில் அதை விழுங்கி விட்டு வெளியே வந்தவனின் கரங்களில் சீறிப் பாய்ந்தது,வண்டி.
அவன் போகும் வழியில் பேரூந்துக்காக காத்து நின்றிருந்தாள்,மொழியவள்.அவளைக் கண்டதும் வண்டியின் வேகம் சற்றே தளர்ந்து போக,அவளின் முன்னே வண்டியை நிறுத்தினான்,அவன் அறியாமலே.
"வண்டில ஏறு நா கெண்டு விட்றேன் ஹாஸ்பிடலுக்கு.." திடுமென கேட்ட அவன் குரலில் திடுக்கிட்டவளின் விழிகளில் அதிர்வலைகள்.
அவனை அவ்விடம் எதிர்பாரா அதிர்வில்,அவள் திகைத்து விழிக்க,விரிந்த விழிகளின் விம்பம் அச்சுப்பிசாகமல் அவனோடு நெஞ்சோடு சேர்ந்து உயிருடன் கோர்த்தது.
"என்ன வர்ரியா..?" புருவங்கள் உயர்ந்து, விழிகள் நிமிர்ந்து வினாவெழுப்பிட,மறுப்பாய் தலையசைத்திருந்தாள்,தாமதமின்றி.
அவள் விழிகளில் தெரிந்த மிரட்சியில்,அவன் தளர,இமைகள் தாழ்ந்திட,விழிகளில் கனிவு சேர்ந்தது.
மொழியவளின் விழி மொழியில் கவிழ்ந்த தமிழவனுக்கு மொழி மறந்து போனது,போல்.
பெருவிரலால் கற்றை மீசையை நீவிக் கொண்டான், தமிழின்பன்!
சில நொடிகள் கடக்க,ஏன் என்கின்ற கேள்வியை அவன் விழிகள் அள்ளித் தெளித்திட,"ப்ரெண்ட் வரனும்.." சரளமான பொய்யொன்றை ஒப்புவித்திருந்தன,அவள் இதழ்கள்.
அவள் சொல்வது பொய்யென்று தெரிந்தும்,வண்டியைக் கிளப்பிக் கொண்டு கடந்தவனின் மனமோ அவளுக்கு அர்ச்சித்து தீர்த்தது எல்லாம் அதிசயமான விடயம்.
அலுவலகத்துக்கு வந்தவனோ,வேறு எண்ணங்களை புறந்தள்ளி விட்டு வேலையில் ஆழ்ந்திட,மெல்ல வந்து அவனின் தோளைச் சுரண்டினான்,விக்னேஷ்.
"என்னடா..?" சலிப்பாக மடிக்கணினியில் இருந்து பார்வையை விலத்தாது அவன் கேட்டிட,தோழனுக்கு பற்றிக் கொண்டு வந்தது.
"எப்ப பாரு எறிஞ்சிகிட்டே இருக்க வேண்டியது.." முணுமுணுத்தவனின் கண் முன்னே,அவனின் மாற்றங்களின் கோர்வையது வந்து போக,தன்னாலே முறுவலித்தன,அவனிதழ்கள்.
தலையை உலுக்கிக் கொண்டு நிமிர,புருவம் சுருக்கி அவனைப் பார்த்திருந்தான்,பையனவன்.
"ஒன்னுல்ல மச்சான்..போன வாரம் ப்ரமோஷன் கெடச்சிருச்சு..முன்னாடி இருந்தத விட ஹயர் பொஷிஷன்கு வந்துட்ட..எதுக்கு இன்னும் ட்ரீட் வக்காம லேட் பண்ற..?"
"ட்ரீட் கேக்கவா வேலய விட்டுட்டு இங்க வந்த.." வார்த்தைகளை கடித்துத் துப்பிட,அதற்குள் "எக்ஸ்க்யூஸ் மீ சார்" என்கின்ற அழைப்பு செவியில் நுழைந்தது.
பையனவனுக்கு கீழே பணிபுரியும் ஒருவன்,கையில் கோப்புடன் வந்திருக்க,அதற்கு மேலும் தாமதியாது கிளம்பி விட்டான்,தோழன்.
அவன் கொண்டு வந்த கோப்பை சரிபார்க்கத் துவங்கியவனை வேலைகள் இழுத்துக் கொள்ள,நேரம் போனதே தெரியவில்லை.
அலுவலகம் முடியும் நேரம்,வெளியில் வந்தவனோ,தோழனுடவ் பேசிக் கொண்டு வண்டியை நோக்கி நடந்திடுகையில் தவறுதலாக அருகே இருந்த துருப்பிடித்த பழைய நுழைவாயிற் கதவில் மோதி விட்டிருக்க,முழங்கைக்கு மேல் சட்டை பிய்க்கப்பட்டு சிறியளவில் ஒரு காயம்.
மௌனம் பேசும்!
2025.03.30

Last edited: