shyamala"madhu"
Moderator
தீட்சிதனால் ஏற்பட்ட வலியில் உறங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் தயனி....
விடியலில் உறக்கத்தை தழுவியவள் வழக்கத்தை விட தாமதமாகவே எழுந்தாள்..
உடல் முழுவதும் வலி ஏற்பட போர்வையை விலக்கி தன்னை பார்த்தவள் பதறிவிட்டாள்..உடல் முழுவதும் பற்தடங்கள் பட்டு சிவந்திருந்தது அப்பட்டமாக தெரிந்தது....தட்டு தடுமாறி எழுந்து குளியல் அறைக்கு சென்று சூடான நீரில் குளித்து உடலில் வலியை சற்று போக்கினால் அவள்..
குளித்து முடித்துவிட்டு கீழே வந்து வாசலை பார்க்க அங்கு ஏற்கனவே கோலம் போடப்பட்டு இருந்தது... பிறகு நேராக கிச்சனுக்குள் சென்றால் தயனி...
அவளைப் பார்த்ததும் எப்போதும் பாசமாக பேசும் கார்த்திகா இப்போது கோபமாக பேச ஆரம்பித்திருந்தார்... "என்ன தயனி இதெல்லாம்.. கல்யாணம் ஆன பொண்ணு அடுத்த நாள் புடவை கட்டாம இப்படி சுடிதார்ல வந்து நிக்கிற... உன் பெரிய அத்தை பாத்தா உன்னை தான் ஏதாவது சொல்லுவாங்க.. ஒழுங்கா குடும்ப பொண்ணா போய் புடவை கட்டிட்டு வா" என்று என்றும் இல்லா திருநாளாய் தயனிதாவை மிரட்டிக் கொண்டிருந்தார் கார்த்திகா....
உடலில் இருந்த தழும்புகள் அனைத்தையும் மறைக்க முடியாதவள் முடிந்த வரையாவது மறையட்டும் என்று காலர் நெக் மற்றும் 3/4 ஸ்லீவ் வைத்த சுடிதார் மற்றும் லெக்கின்ஸ் அணிந்து வந்திருக்க அதைப் பார்த்ததும் பொங்கி விட்டார் கார்த்திகா....
அவளிடம் கோபமாக பேசிக் கொண்டிருந்த கார்த்திகா அவள் கழுத்து மற்றும் கன்னங்களைப் பார்க்க.. இருவரும் அவர்களின் வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விட்டனர் என்பதை புரிந்து கொண்டார் அவர்...
கார்த்திகா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தயனிதாவிடம் வார்த்தைகளும் இல்லை இதற்கு மேல் அவளை கேள்வி கேட்க அவரிடம் கேள்விகளும் இல்லாமல் போனது... அப்போது அங்கு தனது டிராவல் பேக்குடன் வந்தான் அருள்மொழி..
"அம்மா நான் டெல்லிக்கு கிளம்பறேன்" என்று தனது தாயிடம் கூற...தயனி தான் அவனை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள்... "அவள் புறம் திரும்பியவன் "தயனி மா.. உனக்கு இப்ப கல்யாணம் ஆயிடுச்சு... இதுக்கு மேல உன்னை உன் தீட்சி மாமா பார்த்துப்பாரு... நான் இன்னைக்கு டெல்லிக்கு கிளம்புறேன் சரியா" என்று அருள் அவளிடம் கூற தாவி அவனை இறுக அணைத்துக் கொண்டு அழுதாள் தயனி... என்னை விட்டுட்டு எங்கேயும் போயிடாத மாமா என்பது போல்...
அங்கே கார்த்திகா, கற்பகம், சுந்தரம் என்று அனைவரும் இருக்க.. அவர்களின் முன்னே தயனிதா அருளை கட்டிப்பிடிப்பதை பார்த்துக் கொண்டிருந்த தீட்சிதன் கோபமாக அவனது அறைக்குச் சென்று விட்டான்...
சிறிது நேரம் நின்று அவள் என்ன பேசப் பேசுகிறாள் என்பதை கேட்டிருந்தால் அவர்கள் வாழ்வில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருந்திருக்கும்.. ஆனால் அவன் கோபம் அவனை யோசிக்க விடாமல் செய்திருக்க...அவனது அறைக்கு சென்று விட்டான்..
"மாமா நீ கண்டிப்பா இன்னைக்கே டெல்லி போகனுமா.. என்னை விட்டுட்டு நீ அங்க போய் தான் ஆகணுமா.. சின்ன வயசுல இருந்து அம்மா முகத்தை கூட பார்க்காத எனக்கு நீதான் அம்மாவாவும் அப்பாவாவும்,ஒரு நல்ல பிரண்டாவும் இருந்து என்னை அன்பா பாசமா பாத்துக்கிட்ட.. சின்ன வயசுல என் கைய புடிச்சு நான் இருக்கேன் உனக்கு பயப்படாதேன்னு சொல்லி இப்ப காலேஜ் முடிக்கிற வரைக்கும் கொண்டு வந்து கரை சேர்த்துட்ட.. இப்ப எனக்கு கல்யாணமான அடுத்த நாளே நீ என்னை விட்டுட்டு போறேன்னு சொல்லும்போது என்னதான் நான் வாழ்ந்து வீட்டிலேயே கட்டிகிட்டு வந்து இருந்தாலும் எனக்கு என்னமோ இன்னைக்கு தான் நான் பொறந்த வீட்டுல இருந்து புகுந்த வீட்டுக்கு போகிற மாதிரி கஷ்டமா இருக்கு மாமா.. என் அம்மா அப்பா என்னை விட்டுட்டு போகிற மாதிரி இருக்கு மாமா" என்று அழுதாள் தயனி..
"தயனி மா" என்று மெல்ல அவளை தன்னிடமிருந்து பிரித்தவன் "இங்க பாரு.. என்னை பாருன்னு சொல்றேன்.. இதுக்கு மேல உன் லைஃப் நல்லா சந்தோஷமா இருக்கும் புரியுதா.. அண்ணா உன் மேல ரொம்ப பாசம் வச்சிருக்காரு.. அதனாலதான் உன்னை கல்யாணம் பண்ணி இருக்காரு.. இதுக்கு மேல அவர் கூட சந்தோஷமா நீ வாழனும்.. அதுதான் எனக்கு வேணும்.. உனக்கு எப்போ என்ன பிரச்சனைனாலும் சரி உடனே எனக்கு கால் பண்ணு.. என்னதான் நான் உன்னை விட்டு அவ்வளவு தூரம் போனாலும் என் நினைப்பு முழுக்க உன்னை சுத்தி தான் இருக்கும்" என்று கூறிவிட்டு வீட்டில் இருந்த அனைவரிடமும் சொல்லிவிட்டு அன்றே டெல்லிக்கு கிளம்பினான் அருள்மொழி..
இன்னும் இரண்டு நாட்கள் தங்க வேண்டும் என்பதுதான் அவனுக்கும் ஆசை ஆனால் தயனித்தாவின் கன்னம் மற்றும் கழுத்தில் தெரியும் காயங்களே தீட்சிதன் அவளிடம் எவ்வளவு கோபத்தைக் காட்டி இருப்பான் என்பதை புரிந்து கொண்டான் அருள்... தன்னிடம் தயனிதா பேசுவது அண்ணனுக்கு பிடிக்காது என்று நன்கு தெரியும் என்பதால் இங்கு இருந்து மேலும் அவர்கள் இருவருக்கும் நடுவில் பிரச்சனை எதுவும் வந்து விடக்கூடாது என்று இன்றே கிளம்பி விட்டான்..
அதுவும் இல்லாமல் அவன் தனக்கு கல்யாணம் என்று இங்கு வந்து விட்டதால் அங்கு அவனுக்காக காத்துக் கொண்டிருக்கும் அவனது காதலியை சமாதானம் செய்ய வேண்டும் என்பதற்காகவும் அருள்மொழி வீட்டில் இருந்து கிளம்பினான்...
அழுது கொண்டிருக்கும் தயனிதாவிடம் "உன் அருள் மாமா ஊருக்கு போனா என்ன.. அதான் தீட்சி மாமா இருக்கான்ல.. அவன் இருக்கும் போது நீ எதுக்கு கவலைப்படுற.. கல்யாண அடுத்த நாளே இப்படி அழுதுட்டு இருக்காத தயனிதா" என்று பாசமாக கூறினார் கற்பகம்...
தன் பெரிய அத்தையே தன்னிடம் பாசமாக பேசியதால் கண்களை துடைத்துக் கொண்டு அடுத்த அடுத்த வேலைகளை பார்க்க சென்று விட்டாள் அவள்.. இரவு நேரமும் நெருங்கியது.. ஏற்கனவே சிறுவயதில் இருந்தே தீட்சிதனை பார்த்தால் பயந்து நடுங்குபவள் நேற்று அவளிடம் அவன் நடந்து கொண்ட விதத்தில் மேலும் பயப்பட ஆரம்பித்திருந்தாள்..
தீட்சிதன் அறைக்குச் செல்லவே பயந்தவள் வேறு வழி இல்லாமல் தயங்கி தயங்கி அவனது அறைக்குள் நுழைந்தாள்... அவள் முகத்திலேயே பயத்தின் கலை அப்பட்டமாக தாண்டவம் ஆட.."இங்கே வா தயனி.. என்கிட்ட வா" என்று அவளை தனது அருகில் அழைத்தான் தீட்சிதன்..
அவன் அருகிலேயே போக பயந்த தயனி "வேணாம் மாமா.. நான் அங்க வரல.. என் உடம்பு ஃபுல்லா வலிக்குது..இன்னைக்கு நான் தாங்க மாட்டேன்" என்று பயந்து கொண்டே கூறும் அவளை பார்க்க பாவமாக தான் இருந்தது அவனுக்கும்...
"நான் உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன்.. இங்க வா" மீண்டும் அவளை அழைக்க.. தயங்கிப்படியே அவன் அருகில் சென்றாள் தயனிதா.. அவனால் ஏற்பட்ட காயத்தை பார்க்கும் பொழுது அவனுக்கே சற்று வருத்தமாக தான் இருந்தது.. "எவ்வளவு சின்ன பொண்ணு இவ கிட்ட போய் இப்படி நடந்துக்கிட்டேனே" என்று நினைத்தவன் ஒரு ஆயின்மென்ட் எடுத்து வெளியே தெரியும் காயங்களுக்கெல்லாம் மறந்திட்டவன் "ட்ரெஸ்ஸ ரிமூவ் பண்ணிட்டு எங்க எங்க காயம் இருக்கோ அங்கெல்லாம் இந்த மருந்தை போட்டுக்கோ" என்று அவளிடம் அந்த ஆயின்மென்ட் கொடுத்துவிட்டு அந்த அறையில் இருந்து வெளியேறினான் தீட்சிதன்..
அவன் வெளியே சென்றதும் மருந்தை போட்டுக் கொண்டவள்.. முன்னிரவில் தூங்காமல் இருந்ததால் படுத்த உடனே உறக்கம் அவளை தழுவிக் கொண்டது.. அவள் தூங்கிவிட்டாள் என்று தெரிந்த பிறகு தான் அவனது அறைக்கு வந்தான் தீட்சிதன்.. அவளது முகத்தை பார்க்கும் பொழுது அவளை அணைத்துக்கொண்டு படுக்க கூட அவனுக்கு பயமாக இருந்தது...
கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து அவளது காயங்கள் எல்லாம் முழுமையாக சரியாகி இருந்தது.. அதன் பிறகு வழக்கம் போல் காலையில் எழுந்து அவளது அனைத்து வேலைகளையும் செய்ய ஆரம்பித்து இருந்தால் தயனிதா.. ஆனால் இரவு என்று வரும் பொழுது மட்டும் எப்பொழுதும் தீட்சிதனை பார்த்தால் அஞ்சி நடுங்க ஆரம்பித்து இருந்தாள் அவள்..
அவளது இந்த பயத்தை பார்த்து அவளை நெருங்கவே பயந்தான் தீட்சிதன்..."ச்சை... அன்னைக்கு ஒரு நாள் அவகிட்ட அப்படி மூர்க்க தனமாக நடந்து கொண்டதால எப்போ என்ன பாத்தாலும் பயப்படுறா..சாதாரணமாவே என்கிட்ட அவ பேச மாட்டா.. இப்போ நான் இருக்க பக்கம் வரவே பயப்படுறா" என்று தன்னையே வெறுத்தவன் பிசினஸ் மீட்டிங் ஒன்று வெளிநாட்டில் நடக்க இருப்பதால்
ஒரு மாசம் அவளை விட்டு பிரிஞ்சி இருந்தா தான் அவளுக்கும் கொஞ்சம் என் மேல இருக்க பயம் போய் மனசு என்னை தேட ஆரம்பிக்கும்... அதை விட்டுட்டு நான் இங்க இருந்து தினம் தினம் என்னை பார்த்து அவளுடைய பயம் தான் அதிகமாகும்" என்று முடிவு எடுத்தவன்..
அன்று இரவு அனைவரும் சாப்பிடும் போது இதைப் பற்றி பேச ஆரம்பித்தான்.. அம்மா, அப்பா இன்னும் டூ டேஸ் ல யு எஸ் ல நடக்குற பிசினஸ் மீட்டிங்கு நான் போகணும்.. அங்கே போனா திரும்பி வரதுக்கு ஒரு மாசம் ஆகும்" என்று அவன் கூற அனைவரும் அவனைத்தான் அதிர்ச்சியாக பார்த்தனர்.. எப்பொழுதும் இந்த மாதிரி பிசினஸ் மீட் என்றால் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் மட்டுமே ஆகும்.. ஆனால் இன்று இவன் ஒரு மாதமாகும் என்பதால் அவ்வாறு பார்த்திருக்க..
"என்ன எல்லாரும் அப்படி பாக்கறீங்க" என்று கேட்டான் தீட்சிதன்..."அப்புறம் வேற" என்று கேட்டார் அவனது அம்மா.. "அவ்வளவு தான் சொல்லிட்டேனே" என்று சாதாரணமாக கூறிவிட்டு சாப்பிட்டு முடித்து தனதறைக்கு சென்று விட்டான் அவன்..
இந்த ஒரு வார காலமாக கற்பகம் தயனிதா விடம் நல்ல முறையில் நடந்து கொள்வதால் வீட்டில் உள்ளவர்களை நம்பி அவளை தனியாக விட்டுவிட்டு செல்ல அவன் முடிவெடுத்து இருக்க.. கற்பகமோ 'இந்த ஒரு மாசம் தான் நமக்கான டைம் தீட்சிதன் திரும்பி வரதுக்குள்ள எப்படியாவது அவளை இந்த வீட்டை விட்டு அனுப்பியாகணும்' என்று முடிவெடுத்திருந்தார் கற்பகம்...