வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ரட்சகனா? ராட்சஷனா? 5

அடுத்த இரண்டு நாட்களும் ஜெட் வேகத்தில் ஓடிவிட்டது.. தீட்சிதன் அமெரிக்கா கிளம்புவதற்கான நாளும் வந்துவிட.. விடியற்காலையிலேயே இல்லை நள்ளிரவில் என்றும் சொல்லலாம்.. அந்த வீடே பரபரப்பாக இருந்தது...

கிளம்புவதற்கு தயாராக இருந்த தீட்சிதன் தயனிதாவை பார்க்க அவளது அறைக்கு சென்றான்.. இன்று தன் கணவன் தன்னை விட்டு அவ்வளவு தூரம் செல்வதால் சந்தோஷப்படுவதா அல்லது வருத்தப்படுவதா என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தாள் தயனிதா...

"தயனி" என்று அழைத்தவரே அவளது அறைக்குள் வந்தான் தீட்சிதன்... அவனைப் பார்த்ததும் தானாக அவள் எழுந்து நின்றுவிட.. வந்த வேகத்தில் அவளை அணைத்துக் கொண்டான் அவன்...

அவன் அணைத்ததில் அவள் உடல் நடுங்க.. அதை உணர்ந்த தீட்சிதன் "எதுக்கு தயனி மா என்னை பார்த்து நீ இப்படி பயப்படுற.. உன்னை நான் எதுவும் பண்ணிட மாட்டேன் டா... இன்னைக்கு நான் அமெரிக்கா போறதே உனக்காக தான்" என்று அவன் கூறியவுடன் நிமிர்ந்து அவனை பார்த்தாள் தயனிதா..

"ஆமா தினம் தினம் நீ என்னை பார்க்கும் போதெல்லாம் பயந்து நடுங்கறதை பாக்கவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. இந்த ஒரு மாசம் நாம ரெண்டு பேரும் பிரிஞ்சு இருந்தா தான் உனக்கும் என் மேல இருக்க பயம் போகும்.. நானும் உன் அருமையை புரிஞ்சுகிட்டு என் கோபத்தை எல்லாம் அங்கேயே தூக்கி போட்டுட்டு வந்துடுவேன்.. கல்யாணம் ஆகி இந்த ஒரு வாரம் நம்ம வாழ்ந்த வாழ்க்கை எல்லாம் மறந்துட்டு நான் அங்க இருந்து திரும்பி வந்த உடனே நம்ம ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்கலாமா.. நீ என்னை ஏத்துப்ப தானே" என்று அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே அவன் காதலுடன் கேட்க..

அவன் பாசக்காரன் தான் ஆனாலும் கோபக்காரன்.. இன்று தனக்காக கோபத்தை எல்லாம் தூக்கி எறிந்து விடவும் துணிந்து விட நீர் வழிந்த கண்களுடன் சம்மதமாக தலையசைத்தாள் தயனி.. "இந்த மாதிரி தினமும் அழுதுட்டு இருக்காத புரியுதா.. நிம்மதியா சந்தோசமா இரு.. அடுத்த ஒரு மாசமும் உன்னை எந்த ஒரு விதத்திலும் நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.. உனக்கா என்கிட்ட பேசணும்னு தோணுச்சுன்னா கண்டிப்பா நீ கால் பண்ணு" என்று கூறி அவள் கண்கள் மற்றும் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான் தீட்சிதன்..

விடியற்காலையிலேயே பிளைட் என்பதால் வீட்டில் இருந்து நள்ளிரவில் கிளம்பி இருந்தவன் ஏர்போர்ட்டில் செக்கிங் அனைத்தையும் முடித்துவிட்டு ஃபிளைட்டில் ஏறினான்.. மனம் முழுவதும் அவனது தயனித்தாவின் நினைவுகள் மட்டுமே சுமந்து கொண்டு சென்றான் தீட்சிதன்..

அங்கு சென்ற ஒரு வாரம் முழுவதும் பிசினஸ் மீட்டிங்கிற்காக நிற்க கூட நேரம் இல்லாமல் பிசியாக அவன் இயங்கிக் கொண்டிருக்க... அந்த ஒரு வாரம் முடிந்த பின்பு தான் அவனால் நிம்மதியாக மூச்சு விடவே முடிந்தது... அவன் தங்கியிருந்த அந்த ஹோட்டலுக்கு சென்றவன் தயனிதாவின் நினைவுகள் வர.. 'இப்ப அவளுக்கு கால் பண்ணலாமா.. என்ன பண்ணிட்டு இருப்பா' என்று அவளுக்கு போன் செய்ய பரபரத்த கைகளை கட்டுப்படுத்திக் கொண்டான் தீட்சிதன்...

"தயனி கிட்ட இந்த ஒரு மாசம் ஃபுல்லா எந்த விதத்திலும் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு நல்லா வீர வசனம் எல்லாம் பேசிட்டு வந்துட்டு ஒரு வாரத்திலேயே அவளை கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ண போறியா" என்று கண்ணாடியில் தெரிந்த அவன் உருவத்தை அவனே தூப்பிக் கொண்டான்...

தயனிதா வெறும் அவன் மாமன் மகளாக இருந்த சமயத்தில் எத்தனையோ ஆண்டுகள் படிப்பு வேலை என்று வெளிநாட்டில் வாழ்ந்தவன்.. இன்று அவள் அவனது மனைவியாய் மனம் முழுக்க அவளுக்கான காதலுடன் இருக்கும் பொழுது அவளை விட்டு இந்த பிரிந்து இருந்த இந்த ஒரு மாதமும் நரக வேதனையாக இருந்தது தீட்சிதனுக்கு.. எப்பொழுது இந்த ஒரு மாத காலம் முடியும் என்று அவன் காத்திருக்க..அந்த ஒரு மாத காலமும் முடியும் தருவாயில் நாளை இரவு இந்தியா திரும்புகிறான் தீட்சிதன்..

தீட்சிதன் வீட்டிலிருந்து கிளம்பியதில் இருந்து தயனிதாவை நன்றாக பார்த்துக் கொண்டார் கற்பகம். அவர் பார்த்துக் கொண்டார் என்பதை விட பார்த்துக் கொள்வதாக நடித்தார் என்றே கூறலாம்.. அவரின் அந்த செய்கையில் கார்த்திகாவும் தனது அக்காவை முழுதாக நம்பி விட்டார்...

இந்த ஒரு மாத காலத்தில் தீட்சிதனின் மேல் இருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக தெளிந்து அவனது வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் தயனிதா... "தயனி நாளைக்கு நைட்டு நம்ம தீட்சிதன் வீட்டுக்கு வரான்..உனக்கு தெரியுமா" என்று அவளிடம் கேட்டார் கார்த்திகா...

"ஓ அப்படியா அத்தை..ஒரு மாசம் முடிய போகுது அதனால மாமா வந்துருவார்னு தெரியும் ஆனா நாளைக்கு தான் வராருன்னு எனக்கு தெரியாது அத்தை" என்றாள் தயனிதா.. "சரி சரி நான் கோவிலுக்கு போயிட்டு உங்க ரெண்டு பேர் பேருலயும் அர்ச்சனை பண்ணிட்டு வரேன்.. நீ சமையல் வேலை எல்லாம் பார்த்துக்கோ" என்று கூறிவிட்டு கோவிலுக்கு கிளம்பினார் கார்த்திகா..

நாளை தன் கணவன் முகத்தை காண ஆவலாக இருந்த தயனிதா சந்தோஷத்துடன் சமைத்துக் கொண்டிருக்க.. அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது.. வாஷ்பேஷனில் சென்று வாந்தி எடுத்தாள் அவள்.. அந்த சத்தத்தை கேட்டு அங்கு வந்த கற்பகம் "தயனிதா என்னம்மா ஆச்சு" என்று கேட்க...

"தெரியல அத்தை.. சமைச்சிட்டு இருந்தேன்.. ஒரே குமட்டிட்டு வந்துருச்சு.. அதான் வந்து வாந்தி எடுத்தேன்" என்று பேசிக் கொண்டிருக்கும்போதே பின்பக்கமாக அவள் மயங்கி விழ அவளை சுந்தரம் தாங்கி பிடித்தார்.. பின் இருவரும் சேர்ந்து அவளை கட்டிலில் படுக்க வைத்து விட்டு "என்னங்க இவளுக்கு வேற கல்யாணம் ஆகி நாப்பது நாள் ஆகுது.. இன்னைக்கு என்னனா வாந்தி எடுக்கிறா.. மயக்கம் போட்டு விழறா.. ஒருவேளை இது அதுவா இருக்குமோ" என்று கணவரிடம் கேட்க..

"எதுவா டி"

"அதாங்க.. ஒருவேளை இவ மாசமா இருப்பாலோ" என்று கற்பகம் கூற.... அவரும் யோசித்துப் பார்த்து.. "ஆமா நீ சொன்னதை பார்த்தா அப்படித்தான் தெரியுது.. இப்ப என்ன பண்ணலா"ன்கிற என்று கேட்டார் சுந்தரம்..

"நாளைக்கு நைட்டு வேற நம்ம பையன் வீட்டுக்கு வரப் போறான்.. அதுக்குள்ள இவள எப்படியாவது அனுப்பனும்னு பாத்தா இன்னும் முடியாம இருக்கு.. இப்ப என்னடானா நம்ம குடும்பத்தோட வாரிசு இவ வயித்துல வந்துரும் போலையே" என்று அவர் புலம்ப...

"எதுக்கு நாம ரெண்டு பேரும் இப்படி மாத்தி மாத்தி யோசிச்சிட்டு இருக்கணும்..கொஞ்சம் இரு" என்று கூறிவிட்டு உடனே தனக்கு தெரிந்த ஒரு மருத்துவரை வீட்டிற்கு வருமாறு அழைத்தார் சுந்தரம்.. வந்த அந்த மருத்துவரும் அவளை பரிசோதனை செய்துவிட்டு தயனிதாவின் கர்ப்பத்தை உறுதிப்படுத்தி விட்டு சென்று விட்டார்...

"இப்ப என்னடி பண்றது.. இவ மாசமா தான் இருக்கானு சொல்லிட்டாங்க" என்று சுந்தரம் கற்பகத்திடம் கேட்க.. நம்ம குடும்பத்தோட வாரிசு, என் பையனோட புள்ளைய இவ வயித்துல வளர்ரது என்னால ஒரு போதும் ஏத்துக்க முடியாதுங்க... இப்பவும் நான் என் முடிவுல உறுதியா தான் இருக்கேன்.. கண்டிப்பா இவளை வீட்டை விட்டு இன்னைக்கே துரத்தி ஆகணும்" என்று தயனிதாவை வீட்டை விட்டு துரத்துவதற்காக என்ன காரணம் சொல்லி அனைவரையும் சமாளிப்பது என்ற திட்டத்தை தீட்ட ஆரம்பித்திருந்தார் கற்பகம்...

சிறிது நேரம் கழித்து கண் விழித்து வழக்கம்போல் விட்ட இடத்தில் இருந்து வேலைகளை எல்லாம் செய்ய ஆரம்பித்து இருந்தாள் தயனி.. அவளிடம் அவள் கர்ப்பத்தை பற்றி இருவரும் மூச்சு விடவில்லை... கார்த்திகாவிற்கு பிபி, சுகர் போன்ற பிரச்சனைகள் உடலில் இருப்பதால் அதற்கான மாத்திரைகளை போட்டுவிட்டு இரவில் சீக்கிரமாக உறங்கி விடும் வழக்கம் கொண்டவர் அவர்.. இன்றும் அதே போல் அவர் உறங்கிவிட இரவோடு இரவாக தயனிதாவை அந்த வீட்டிலிருந்து துரத்தி விட்டிருந்தனர் சுந்தரமும், கற்பகமும்..
 
Вы допускаете ошибку. Давайте обсудим это. Пишите мне в PM, пообщаемся.
Ozel bonuslarla desteklenen parabet, kazanc?n?z? kazanman?z? kolaylast?r?r parabet nedir parabet! her sey, musteriniz ihtiyac?n?z var kendi yolunuza ulasman?z uygulamay? indirin kumar kurumu veya giris yap kendi kisisel hesab?n?z.
 
Браво, ваша фраза просто отличная
тем паче, приобрести, скажем, https://cottagecommunity.ru дачу в данный момент не так уж трудно как было раньше. подобная информация сможет спланировать верный выбор.
 
Top