வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ரட்சகனும் இவனே! ராட்சஷனும் இவனே!

ஆள் ஆர்வமற்ற ஒரு நெடுஞ்சாலையில் தன் மானத்தை காக்க வேண்டி ஓடிக்கொண்டிருந்தாள் ஒரு பெண்.. அவ்வப்போது பின்னாடி அவர்கள் துரத்திக் கொண்டு வருகிறார்களா என்று திரும்பி திரும்பி பார்த்தபடி அவள் ஓடிக் கொண்டிருக்க.. நான்கு தடியர்கள் கண்ணில் காமத்தோடு அவளை நெருங்கிக் கொண்டிருந்தனர்..

தன் ஒட்டுமொத்த பலத்தையும் ஒன்று திரட்டி அவர்களிடமிருந்து தன் உயிரையும், மானத்தையும் காக்கும் பொருட்டு இன்னும் அவள் வேகம் எடுக்க.. "என்னடா இங்க என்ன ரன்னிங் ரேஸா நடக்குது.. அந்த பொண்ணு என்னவோ ரன்னிங் ரேஸ்ல ஓடுற மாதிரி இவ்ளோ பாஸ்ட்டா ஓடுறா.. என்னால இதுக்கு மேல ஓட முடியல.. நீங்க மூணு பேரும் போய் அவளை புடிச்சி இழுத்துட்டு வாங்கடா" என்று சற்று குண்டாக இருந்த ஒருவன் அங்கேயே நின்றுவிட... மற்ற மூவரும் அவளை துரத்திக் கொண்டு ஓடினர்..

"ஏய் ஒழுங்கா நில்லுடி.. நாங்க சொல்றத கேட்டு நீ இப்ப நின்னினா.. உன்னை மட்டும் எடுத்துக்கிட்டு உயிரை மிச்சம் வைப்போம்.. எங்களை ஓட வச்சு ரொம்ப மூச்சு வாங்க விட்டினா உன் மூச்சையே நிறுத்திடுவோம்" என்று கர்ஜித்தான் இன்னொருவன்... அவன் கூறியதில் உள்ளுக்குள் பயம் எடுத்தாலும் அவள் மூளையோ
'அவன் பேசற எதையும் நீ கேட்காத ஓடிட்டே இரு, ஓடிட்டே இரு' என்று அவளை எச்சரித்தது..

"அட விடு ண்ணே..பாப்பா எவ்ளோ ஆசையா நம்ம கிட்ட ஓடி புடிச்சு விளையாடுது.. நீ இந்த சினிமாவில எல்லாம் பார்த்தது இல்ல.. ரௌடிங்க எல்லாம் எப்பவுமே ஹீரோயின்னை துரத்திட்டு போயி தான் ரேப் பண்ணுவாங்க.. அதுல தான் ஒரு கிக்கே" என்றான் மற்றொருவன்..

இவர்கள் பேசுவதெல்லாம் காதில் விழுந்தாலும் நிற்காமல் ஓடி கொண்டிருந்தவள்..
ஒரு கட்டத்தில் ஓடி ஓடி கால்கள் வலி எடுக்க.. தடுமாறி கீழே விழும்பொழுது தாங்கிப் பிடித்தான் ஒருவன்..

தாங்கி பிடித்தவன் மேலையே அவள் மயங்கி சரிய.. "யாருடா நீங்க எல்லாம்.. எதுக்கு இவளை துரத்திட்டு வரீங்க" என்றவன் குரல் காற்றில் எதிரொலித்தது.. "இதோ வந்துட்டாரு இல்ல ஹீரோ ஹீரோயினை காப்பாத்துறதுக்கு" என்றப்படி மூவரும் அவனை நெருங்க.. அந்தப் பெண்ணை அணைத்து பிடித்தபடி அந்த மூவரையும் கண்ணிமைக்கும் நேரத்தில் அடித்து வீழ்த்தியிருந்தான் நம் கதையின் நாயகன் தீட்சிதன்..

தன் அணைப்பில் இருந்த அந்த பெண்ணின் முகத்தைப் பார்த்ததும் சற்றே அதிர்ந்தவன்.. காரின் பின் பக்க கதவை திறந்து சீட்டில் படுக்க வைத்து தனது கர்சீப்பால் அவளின் முகத்தில் இருந்த வியர்வைகளை துடைத்து விட்டு வாட்டர் பாட்டிலை எடுத்து தண்ணீரை சிறிது அவள் முகத்தில் தெளிக்க.. மயக்கத்தில் இருந்து கண் விழித்தாள் தயனிதா.. அங்கு தீட்சிதனை பார்த்ததும் "மாமா நீங்களா" என்றால் அவள்...

"தயனி, இவங்க எல்லாம் யாரு?.. நீ எப்படி இங்க வந்த" என்று தனக்கு எதுவும் தெரியாததைப் போல் தயனித்தா விடம் கேட்டுக் கொண்டிருந்தான் தீட்சிதன்..

"அது வந்து.. மாமா.. நான் காலேஜ் முடிச்சு வரும்போது இவனுங்க" என்று அழுகையின் ஊடே அவள் திக்கி திணறி பேசிக் கொண்டிருக்க.. அதை ரசித்து கொண்டு இருந்தவனுக்கு அது ஆறுதலாக இருந்தது..

"சரி சரி விடு அழாத.. அதான் மாமா நான் இருக்கேன்ல.. எல்லாம் நான் பாத்துக்குறேன்" என்று அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டு ஆறுதல் கூற.. அவளிடம் அழுகை குறைந்து இருந்தாலும் பயம் மற்றும் குறையாமல் இருந்தது..

பின் டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை ஓட்டிக்கொண்டே கண்ணாடியின் வழியே அவளைப் பார்த்த தீட்சிதனின் முகம் இறுகியது.. 'காலேஜ் காம்பவுண்ட்ல வச்சு அவளை வெறும் பயமுறுத்தி அனுப்புங்கடா னு சொன்னா..அவளை தூக்கிட்டு வந்து தப்பா நடந்துக்குவா பாக்குறானுங்க" என்று சில பல கெட்ட வார்த்தைகளால் மனதிற்குள் அவர்களை திட்டியவன்.. காரை அவர்களின் வீட்டை நோக்கி ஓட்டி செல்ல.. இருவரும் வீட்டை வந்தடைந்தனர்..

காரில் இருந்து இறங்கிய தயனிதா பயத்தில் வீட்டிற்குள் செல்ல தயங்கி அங்கேயே நிற்க.. "தயனி பயப்படாம நீ என் கூட வா.. அதான் நான் இருக்கேன் இல்ல.. எல்லாம் நான் பார்த்துக்கிறேன்" என்று அவளை கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான் தீட்சிதன்..

வீட்டில் அனைவரும் அந்த இரவு நேரத்திலும் தயனிதாவின் வருகைக்காக உறங்காமல் காத்திருக்க.. கொலு சொலி கேட்டதும் அவள் வருகையை அறிந்த அவளின் அத்தை கற்பகம் "வாடி என் ஓடுகாளி சிறுக்கி.. இந்த நட்டு நடு ராத்திரியில எவன் கூட போய் ஊரு சுத்திட்டு வர" என்று அவள் கன்னத்தில் அறைய வர..

"அம்மா" என்ற தீட்சிதனின் ஒற்றை வார்த்தையில் ஓங்கிய கை அப்படியே அந்தரத்தில் நின்றது.. "அவளை அடிக்கறதுக்கு முன்னாடி ஃபர்ஸ்ட் என்னை அடிங்க.. நான் தான் அவளை வெளியே கூட்டிட்டு போயிட்டு வந்தேன். அதனால தான் அவ வீட்டுக்கு வர லேட் ஆயிடுச்சு" என்றான் தீட்சிதன்..

அவன் அப்பா சுந்தரமோ அவன் கூறுவது பொய் என்று தெரிந்து அவன் முகத்தையே ஆராய்ந்த பார்வை பார்க்க அவன் முகமோ எந்த ஒரு உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கவில்லை..

"இன்னைக்கு காலேஜ்ல கான்வகேஷன் டேன்னு தானே போயிருந்த.. அஞ்சு மணிக்கு எல்லாம் அது முடிஞ்சிடுச்சு இல்ல... இப்ப டைம் என்ன ஆகுது.. நைட் 12 மணி வரைக்கும் என் பையன் கூட சுத்துற அளவுக்கு உன் மூஞ்சிக்கும் முகரைக்கும் வெளிநாட்டுல படிச்சிட்டு வந்த என் பையன் கேட்கிறானா" என்று கற்பகம் மீண்டும் அவளை அடிக்க நெருங்க...

அவளுக்கு முன்னே வந்து நின்ற தீட்சிதன் உங்க கை மட்டும் அவ மேல பட்டுச்சு.. இங்க நடக்கிறதே வேற" என்று எச்சரித்தான் தன் அன்னையை...

"இங்க என்னடா நடக்குது தீட்சிதா.. இதுவரைக்கும் நீ வீட்ல தயனிதா கிட்ட பேசி கூட நாங்க யாரும் பார்த்தது இல்லையே.. அப்படி இருக்கும்போது நீ காலேஜ்ல இருந்து அவளை கூட்டிட்டு வெளியே போயிட்டு இவ்வளவு லேட்டா வீட்டுக்கு வரேன்னு சொன்னா அதை நாங்க நம்பனும் இல்ல" என்று சுந்தரம் அவனை நம்பாமல் கேட்க..

"அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம் ப்பா..தயனி இவ்வளவு நேரமா என் கூட தான் இருந்தா.. இப்போதைக்கு என்னால அவ்வளவு தான் சொல்ல முடியும்" என்று தன் தந்தையிடம் கூறியவன்.. தயனி நீ உன் ரூமுக்கு போ" என்று அவளிடம் கூற... அழுது கொண்டே தனது அறைக்கு சென்றாள் தயனிதா..


அப்போது கிச்சனுக்கு சென்ற அருள்மொழி ஒரு தட்டை எடுத்து அதில் தயனிதாவிற்கு தேவையான உணவை அதில் வைத்து கொண்டு இருக்க.. அதைப் பார்த்த கற்பகம் "கார்த்திகா உன் பையன் தேவையில்லாத வேலை பண்ணிட்டு இருக்கான்... காலேஜ் முடிஞ்சதும் வீட்டுக்கு வராமல் அவ எவன் கூடவோ போயி ஊர் மேஞ்சிட்டு வருவா.. அவளுக்கு உன் பையன் சேவகம் பண்ணிட்டு இருப்பானா" என்று கடுப்போடு கூற..

"அக்கா நம்ம தயனிதா ஒன்னும் அந்த மாதிரி பொண்ணு கிடையாது.. நீங்களா தேவையில்லாம அவளை பத்தி எதுவும் தப்பா பேசாதீங்க" என்று தன் அக்காவிடம் கூறியவள்.. "அருள் நீ சாப்பாடு எடுத்துட்டு போயி தயனிதாவுக்கு கொடுப்பா.. பாவம் புள்ள ரொம்ப பசியோட இருக்கும்" என்று தன் மகனை தயனிதாவின் அறைக்கு அனுப்பி வைத்தார் கார்த்திகா...

தயனிதா அவள் அறைக்கு சென்றதுமே . வீட்டிலிருந்து வெளியேறிய தீட்சிதன் நேராகச் சென்றது என்னமோ அந்த நால்வரையும் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த பழைய வீட்டிற்கு தான்... அவனது நண்பன் கார்த்திக் அந்த நால்வரையும் பிடித்து கட்டிப்போட்டு வைத்திருக்க.. கோபமாக உள்ளே சென்ற தீட்சிதன் அந்த நால்வரையும் ஒரு அழுத்த பார்வை பார்த்து "நான் உங்ககிட்ட என்ன பண்ண சொன்னேன்" என்று கேட்க அவன் குரலிலேயே பயந்தவர்கள் "காலேஜ் வாசல்ல வெச்சி அந்த பொண்ணை கொஞ்சமா பயமுறித்தி வைக்க சொன்னீங்க" என்றான் ஒருவன்..

"அவ்வளவு தானா" என்று அவனின் கையைப் பிடித்து முறுக்க.. வலியில் அலறியவன் "எங்க நுனிவிரல் கூட அவங்க மேல படக்கூடாதுன்னு சொன்னீங்க"

அதில் மேலும் கையை முறுக்கி "ம்ம் அப்புறம் சொல்லு" என்று தீட்சிதன் கூற.. "நீங்க வர வரைக்கும் அங்க இருந்து அவங்களை பயமுறுத்திட்டு நீங்க வந்த உடனே அங்கிருந்து கிளம்பிடனும்னு சொன்னீங்க"

மேலும் அவன் கையே உடையும் அளவுக்கு முறுக்கியவன் "ஆனா நீங்க என்ன பண்ணீங்க" என்று கேட்க.."அந்த பொண்ணு வேற பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருந்தது சார்.. அதனால தான் மயக்கம் மருந்து கொடுத்து தூக்கிட்டு போயிட்டோம்.. எங்களை மன்னிச்சிடுங்க" என்றான் ஒருவன்..

"அந்தப் பொண்ணு யாருன்னு உங்களுக்கு தெரியுமா" என்று அவன் சினம் கொண்ட சிங்கமாய் கர்ஜிக்க..

"உங்களுக்கு வேண்டப்பட்டவங்கனு மட்டும் தெரியுது சார்.. ஆனா யாருன்னு எங்களுக்கு தெரியாதுங்களே" என்று கூற..

"அவ நான் கட்டிக்க போற பொண்ணு.. ஏன் மாமா பொண்ணு.. உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா எனக்கு தெரியாம மயக்க மருந்து கொடுத்து அவளை தூக்கிட்டு போனதும் மட்டும் இல்லாம அவ கிட்ட தப்பா நடந்துக்க பார்த்திருப்பீங்க" என்றவன் நால்வரின் கையையும் ஆத்திரம் தீரும் அளவிற்கு அடித்து உடைத்துவிட்டு "டேய் கார்த்தி ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணி இந்த நாலு பெரையும் வந்து அள்ளிப்போட்டு போக சொல்லு" என்ற தன் நண்பனிடம் கட்டளையாக கூறியவன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்...

அருள்மொழி உணவை எடுத்துக்கொண்டு தயனிதாவின் அறைக்குச் செல்ல அங்கு ஏற்கனவே பயத்தில் அழுது கொண்டிருந்தவள்..அவனை பார்த்ததும் "அருள் மாமா" என்று ஓடி வந்து கட்டிக் கொண்டவள் "மாமா எனக்கு ரொம்ப பயமா இருக்கு மாமா.. அங்க நாலு பேரு என்னை துரத்திட்டு வந்து.. அதற்கு மேல் அவளால் பேச முடியாமல் வார்த்தைகள் எல்லாம் தொண்டையை அடைக்க.. "வீட்ல கூட யாரும் என்னை நம்பல பாத்தீங்களா.. அத்தையே என்ன தப்பானவன்னு பேசுறாங்க" என்று மேலும் அழுதாள் தயனிதா...

சாப்பாடு தட்டை கீழே வைத்த அருள்மொழி "தயனி மா அழாத டா.. அதான் உனக்கு எதுவும் ஆகலை இல்ல.. வீட்ல யார் என்ன சொன்னா நமக்கென்ன
நான் உன்னை முழுசா நம்புறேன்" என்று அவள் முதுகை ஆதரவாக தடவி கொடுத்தான் அருள்மொழி..

பின்பு "வா பர்ஸ்ட் சாப்பாடு" என்று அவன் கூற... "சாப்பாடு வேணாம் மாமா.. எனக்கு சாப்பிடவே பிடிக்கல" என்று அவள் அடம்பிடிக்க.. "அப்படியெல்லாம் சொல்லக்கூடாது வா.. இந்த மாமனுக்காக ஒரு வாய் சாப்பிடு" என்று அவளை அழைத்து அவனே அவளுக்கு ஊட்டி விட..

இன்று நடந்த சம்பவத்தில் தயனிதா மிகவும் பயந்திருப்பாள் என்பதால் அவசரமாக வீட்டிற்கு வந்த தீட்சிதன், தயனிதாவின் அறைக்கு செல்ல அவன் கண்ணில் பட்டது என்னவோ தயனிதாவும், அருள்மொழியும் கட்டிப்பிடித்து இருந்ததும்.. இப்போது அருள்மொழி தயனிதாவிற்கு ஊட்டிக் கொண்டிருப்பதும் தான்..
 
Top