GG writers
Moderator
ரேணுகா
வேலன்
(அத்தியாயம்-17)
அதன்பின் இரவில் வீட்டில் மாமா வேலன் சுஹானாவுக்கும்,லேகாவுக்கும் கைகொடுத்து பாராட்டி “என் 2 மகளும் சூப்பர் பேசாம 2பேரும் என் கூட கார்மென்ட்ஸ்க்கு வந்திருங்களேன்” என்றார்.
“ஏன்ப்பா இப்பதான் பெரிய டாஸ்க் முடிச்ச மாதிரி இருக்குது,அதுக்குள்ளேயே அடுத்தது தர்றியா” என்று கேட்டாள் லேகா.
“சும்மாதான்மா சொன்னேன்” என்று வேலன் 2 பேருக்கும் உணவு ஊட்டி விட்டான்.
உணவு முடித்த பின் சுஹானா கிச்சனிலிருந்த ரேணுகாவை பின்நின்று அணைத்து கொண்டு மாமா வேலனை நோக்கி “மாமா எல்லா வெற்றிக்கும் காரணம் என் அத்தைதான்” என்று சொல்லி முத்தமிட்டாள்.
“மருமகளே கஷ்டப்பட்டது நீங்க கிரெடிட் ரேணுகாவுக்கா” என்று கேட்டான் மாமா வேலன்.
“ மாமா அன்னைக்கு ..அத்தை என் ஸ்ட்ரெஸ் குறைக்கலன்னா இந்த சக்சஸ் அடைஞ்சிருக்க முடியாது” என்றாள் சுஹானா.
“மருமகளே எதுக்கோ அடி போடற மாதிரி தெரியுதே” என்று கேட்டாள் ரேணுகா.
“ரொம்ப சந்தோசமா இருக்கு அத்தையம்மா.”
“சரி அதுக்கு நான் என்ன பண்ணனும்” என்று கேட்டாள் ரேணுகா.
“இல்ல அன்னைக்கே மாதிரி கொஞ்ச நேரம் உங்க மடியில தூங்கட்டுமா” என்று கேட்டாள் சுஹானா.
“ஹேய் என்னடி குழந்தை மாதிரி கேட்குற..நீ போய் மாடியில வெயிட் பண்ணு..அம்மா வேலையை முடிச்சிட்டு வர்றேன்” என்றாள் ரேணுகா.
சுஹானாவும் சிரித்தபடி படிகள் ஏறிப் போனாள்.
மாமா வேலன் ரேணுகாவிடம் வந்து “மருமக என்னம்மா இப்படியிருக்கா..?” என்று ஆச்சர்யமாய் கேட்டான்.
“இல்லங்க அம்மா அன்பு எப்படி இருக்கும்னே அவளுக்கு தெரியாதுல இப்பதான் உணர்றா..அதான் இப்படி கேட்கிறா..”என்றாள் ரேணுகா.
“நம்ம மகன் சக்தி அவ மேல அன்பா இருந்தா நல்லா இருக்கும் மா” என்றார் வேலன்.அவளும் அதை ஆமோதித்தபடி
தலையசைத்தாள்.
அதன்பின் மாடியில் வேலன் விஜயகுமார் லேகாவை நோக்கி “ஹேய் லேகா காபி ஷாப்ல நான் சொன்னதை பத்தி யோசிச்சியா”என்று கேட்டான்..
அவளோ சற்று தயங்கி நிற்கும் போது..
அத்தை சக்தி அங்கு வந்து லேகாவை நோக்கி “உன்ன பெயர் சொல்லிதான கூப்பிட்டான் என் மகன்,அவனுக்கு என் மேல அவ்ளோ பாசம்” என்று சொல்லி விட்டு,அவன் பாக்கெட்டிலிருந்து போனை எடுத்து “என்னடா இவ போட்டோவ வால் பேப்பர்ல வச்சிருக்க” என்று அவளும்,மகனும் உள்ள போட்டோவை வால் பேப்பராய் மாற்றி லேகாவுக்கு காண்பித்து விட்டு கடந்து போனாள் அத்தை சக்தி.
லேகா டென்ஷனாகி வேலன் சட்டை காலரை பிடித்து “ஏன் டா உன் பாசம் முழுக்க உன் அம்மா மேலதான...”
“ஏய் இல்ல டி பொண்டாட்டி..”
“மகனே நீ உங்கம்மா முன்னாடி என்ன கூப்பிட்டு வால் பேப்பர் மாத்துற, இல்ல.. நான் உன் கூட பேசவே மாட்டேன் டா ஞாபகம் வச்சுக்கோ” என்று மிரட்டி விட்டு போனாள் லேகா.
வேலன் திருதிருவென விழித்தபடி நின்றான்.
அவனிடம் தாத்தா போய் “பேரா நான் தான் முதலியே சொன்னனே இது மாமியார் மருமக சண்ட தீராதுன்னு..”
“சரியா தான் சொன்னீங்க தாத்தா..எந்த பக்கம் நிற்கிறதுன்னெ தெரியல” என்றான் வேலன்.வேலனை அழைத்து போனார் தாத்தா.
மாடியில் நடந்த எல்லாவற்றையும் பார்த்த சுஹானா “அட நாத்தனாரின் மாமியாரே போற போக்குல ஒரு பிட்ட போட்டு பிரிச்சுவிட்டு போறீங்களே..”என்று நினைத்து கொண்டு ஸ்டோன் பெஞ்சில் அமர்ந்திருந்தாள்.
ரேணுகா வந்ததை பார்த்ததும் “வாங்க அத்தையம்மா” என்று சொல்லி வரவேற்று அவளை அமர வைத்து மடியில் படுத்தாள் சுஹானா.
ரேணுகா தட்டி கொடுக்க, சுஹானா அவள் கையை பிடித்து கொண்டு “அத்தை உங்க நாத்தனார்க்கிட்ட என் நாத்தனாருக்காக பேசுங்களேன்.”
“நீ போய் என் நாத்தனாருக்காக உன் நாத்தனார்கிட்ட பேசேன்” என்றாள் ரேணுகா.
“அவ கேட்க மாட்டா அத்தை” என்றாள் சுஹானா.
“என் சக்தியும் கேட்க மாட்டா” என்றாள் ரேணுகா.
“என்ன ஒற்றுமை நம்ம ஃபேமிலி ல அண்ணிங்க நாம 2 பேரும் அமைதியாயிருக்கோம்,நம்ம நாத்தனார் 2பேரும் வீம்பு பிடிச்சவங்களா இருக்காங்களே..”
“அதை பத்தி யோசிக்காம கண்ண மூடி தூங்கு மா”என்றாள் ரேணுகா.
“அத்தை மாமா ஏன் சக்சஸ்புல் லா இருக்காரு தெரியுமா..?”
“ஏன்.. ?” என்று கேட்டாள் ரேணுகா.
“நீங்க அவர் கூட துணையா,அவருக்கு பலமா இருக்கிறதாலதான்” என்றாள் சுஹானா.
“என்ன மாதிரியே நீயும் என் மகன் சக்திக்கு துணையா பலமா இருக்கணும் சரியா” என்றாள் ரேணுகா.
“எனக்கு தூக்கம் வருது அத்தை ” என்றாள் சுஹானா.
“இதை பத்தி பேசுனா மட்டும் உனக்கு தூக்கம் வந்துருமே” என்றாள் ரேணுகா.
சிறிது நேரத்தில் சுஹானா தூங்கிவிட..சக்திவேலன் ஆபிசிலிருந்து லேட்டாய் வந்து அம்மா ரேணுகாவை தேட அப்பா வேலன் அவனை மாடிக்கு அழைத்து செல்ல அவன் ரேணுகா மற்றும் சுஹானாவை பார்த்து அமைதியாய் திரும்ப மகன் சக்தியை ரேணுகா அழைத்தாள்.
சக்தி சென்று அம்மா அருகில் அமர..
“ஏன் சக்தி உன் முகம் இவ்வளவு சோர்வா இருக்கு வா அம்மா மடியில படு என்று ஒரு புறம் சுஹானாவையும், மறுபுறம் சக்தியையும் படுக்க வைத்தாள் ரேணுகா,
அப்போது சக்தியின் அப்பா வேலன் சக்தியின் கால்களின் அருகே அமர்ந்து காலை பிடித்து விட..சட்டென சக்தி எழுந்து “அப்பா என்னப்பா பண்ற விடுப்பா” என்றான்.
“டேய் இன்னைக்கு ரொம்ப சோர்வா தெரியுற அம்மா மடியில படு,அப்பா கால் பிடிச்சி விடுறேன் தூங்கு” என்று சொல்லி சக்தியை படுக்க வைத்தான்.
“சாரி மா” என்றான் ரேணுகாவிடம் கண்ணீர் வர...
ரேணுகா அவன் கண்ணீரை துடைத்து “ஏன் சாரி சொல்ற” என்று கேட்டாள்.
“ஆபிஸ்ல கோபத்துல,டென்ஷன்ல பாபு சாரை டிஸ்மிஸ் பண்ணிட்டேன். இப்ப அவரை பார்த்து சாரி கேட்டு நாளைக்கே வேலைக்கு வர சொல்லிட்டேன்” என்றான் சக்தி.
“சக்தி கோபத்துல எடுக்கற எல்லா முடிவும் தப்பாதான் போகும்,நீ கோபத்துல சுஹானா வேண்டான்னு எடுத்த முடிவும் தப்புதான்” என்றாள் ரேணுகா.
சக்திவேலன் எதுவும் பேசாமல் மௌனமாய் இருந்தான்.
“சக்தி அம்மா சொல்றதை கேட்பியா..?”
“சொல்லுமா..”
“நீ சுஹானா கூட தான் வாழனும்னு நான் கட்டாயப்படுத்தல,ஆனா உன் கோபத்தை விட்டு எதார்த்தமாய் அவ கூட வாழ்ந்துதான் பாரேன்,அதுக்கப்புறம் அவளை உனக்கு பிடிக்கலன்னா..ஓகே..அம்மா உன்ன கம்பெல் பண்ண மாட்டேன்.ஆனா நீ வாய்ப்பே அவளுக்கு கொடுக்காம தட்டி விடுறதுதான் அம்மா,அப்பா 2 பேருக்குமே கஷ்டமா இருக்கு” என்றாள் ரேணுகா.
“கரெக்ட்டா சொன்ன ரேணுகா” என்றார் வேலன்.
“சரி அம்மா, நீ சொல்றபடி நான் நடந்துக்குறேன் ஆனா என் முடிவை சேலஞ்ஜோட லாஸ்ட் நாள் தான் சொல்லுவேன்.அது எப்படி பட்ட முடிவுன்னாலும் நீ ஏத்துக்கணும் சரியா” என்று கேட்டான்.
“சரி டா” என்றாள்.சிறிது நேரத்தில் சக்தியும் நல்ல தூங்கிவிட அத்தை சக்தி மாடிக்கு வந்தாள்.
“ஹேய் அண்ணி என்ன டி இது, இதுக 2ம் இன்னும் குழந்தையாவே இருக்கே... இப்படி இருந்தா இதுக எப்ப வாழ்க்கையை தொடங்கி..நாம எப்ப தாத்தா,பாட்டி ஆகுறது சொல்லு” என்று கேட்டாள் அத்தை சக்தி.
“என்ன டி பண்றது” என்று கேட்டாள் ரேணுகா.
“ஏய் பார்ட்-2 ரேணுகா வேலன் மாதிரி இருக்காங்களே என்ன பண்றது”.
“சக்தி கிண்டல் பண்ணாதடி” என்றான் அண்ணன் வேலன்.
“பின்ன என்னடா உன் பையனும், மருமகளும் உங்கள மாதிரியே பேசிக்காம இருக்காங்களே” என்றாள்.
“என் மகன் இனி சுஹானாக்கிட்ட ஒழுங்கா பேசுவான்” என்றாள் ரேணுகா.
“அப்ப சரி” என்றாள் அத்தை சக்தி.
தாத்தா படுக்கையுடன் மாடிக்கு வந்தார். அன்று இரவு அனைவரும் மாடியில் படுக்கை விரித்து ஒன்றாக உறங்கினர்.
அடுத்த நாள் காலை ஆபிஸில் சக்திவேலன் கேபினிலிருந்து சுஹானாவுக்கு அழைப்பு வர அவளோ கோபமாய் அவன் கேபினுள் நுழைந்தாள்.
“நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் சக்தி.
“பேச முடியாது” என்று கோபமாய் சொல்லி திரும்பி கைகட்டி நின்றாள் சுஹானா.
ஒரு நிமிடம் தன் அம்மா ரேணுகாவை போலத் தெரிந்தாள் சுஹானா சக்தியின் கண்களுக்கு....அவளின் கோபம் தன் அம்மாவின் கோபம் போல செல்லமாய் தெரிந்தது அவனுக்கு அதை தொடர்ந்து
“ரொம்ப முக்கியமான விஷயம் நான் சொல்றதை கேளுங்க” என்றான்.
“கேட்க முடியாது” என்று சொல்லி முன்னோக்கி நடந்தாள் சுஹானா.
அவன் சத்தமாய் “மிஸ்சஸ் சுஹானா-சக்திவேலன்” என்று அழைத்ததும் அதிர்ச்சியாய் திரும்பினாள்.
“அப்படி தான் உங்க பெயர் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்ல இருக்கு..”என்று அவன் சொல்லும் போது பாபு சார் உள்ளே வந்தார். அவரை “வாங்க பாபு சார் இவங்கதான் நம்ம கம்பெனி சி.இ.ஓ” என்று சுஹானாவை அறிமுகம் செய்தான்.
“மேடம் ரொம்ப தேங்க்ஸ்” என்று கையெடுத்து கும்பிட்டான் பாபு.
“என்ன சார் என் அப்பா வயசு இருப்பீங்க கையை கீழ இறக்குங்க” என்றாள் சுஹானா.
“தேங்க்ஸ் மேடம், நீங்க ஏன் ஹவுஸ் கீப்பீங் யூனிபார்ம்ல இருக்கீங்க” என்று கேட்டார் பாபு.
“கொஞ்ச நாளைக்கு இப்படி தான் சார்.நான் தான் சி.இ.ஓ ன்னு யார்க்கிட்டேயும் சொல்லாதீங்க” என்றாள் சுஹானா.
“சரிங்க மேடம் நான் போய் வேலையை பார்க்கிறேன்” என்று சொல்லி பாபு வெளியே போனார்.
சுஹானாவும் திரும்பி நிற்க, சக்தி அவளிடம்“நான் ஒன்னும் உங்க புருஷன் இல்ல நீங்க திரும்பி நின்னா அமைதியா போறதுக்கு..”என்றான்
அவள் அவனிடம் திரும்பி “வாட் டூ யூ வான்ட்?”
“ஐ அம் சாரி..”என்று சக்தி சொல்ல
அவள் மனதின் கோபம் எங்கேயோ காணாமல் போக.... “எதுக்கு சாரி” என்று கேட்டாள்.
“உங்ககிட்ட ரொம்ப ஹார்ஸா நடந்துக்கிட்ட மாதிரி தோணுச்சு அதான்” என்றான்.
அவள் புன்னகையை அடக்கி கொண்டு“ஓகே..ஓகே..”என்று அறையை விட்டு வெளியேற அடக்க முடியாமல் புன்னகை செய்து கொண்டே நடந்தாள்.
அதன்பின் மாலை நேரத்தில் ஆபிசுக்குள் சக்திவேலன் கேபினில் உள்ளே கோபமாய் வந்தான் வேலன் விஜயகுமார்.
“டேய் மச்சான் ஒருத்தன அடிக்கணும் வாடா”என்றான் மாப்ளை வேலன்.
“யாரடா மாப்ளை அடிக்கணும்” என்று சக்தி கேட்டதும் அவனை வேகமாய் இழுத்து சென்று காண்பித்தான் லேகாவோடு ஒருவன் பேசி கொண்டிருந்தான்.
“டேய் மாப்ள அவன் இன்வெஸ்டரோட பையன் டா பெயர் முகுந்தன், மலையாளி தமிழ் சரியா வராதுடா அதான் லேகாட்ட ஏதாச்சும் கேட்டிருப்பான்.”
“போடா..அவன் கவிதையா பேசிட்டு இருக்கான் என் பொண்டாட்டிக்கிட்ட..நீ வரலன்னாலும் நான் அடிக்கதான் போரேன்” என்றான் வேலன்.
“டேய் நானே அவன கூப்பிட்டு பேசுறேன் கூல் கூல்” என்று கேபினுக்குள் அழைத்து போக முகுந்தன் சக்தியை பார்க்க உள்ளே வந்தான். அப்பொழுது சக்தி மாப்ளை வேலன் கையை இறுக்கமாய் பிடித்து கொண்டே “சொல்லு முகுந்தன்” என்றான்.
“தங்கள் ஆபிசில் பணி செய்யும் ஒரு பெண்குட்டியை நான் பிரேமம் செய்யும்” என்றான் முகுந்தன்.
“நான் சொல்லலடா” என்றான் மாப்ளை வேலன் மீண்டும் கையை அடிக்க முறுக்கினான்..
“ஏய் இரு டா” என்று வேலனை அடக்கி பிடித்து கொண்டே, சக்தி முகுந்தனிடம்
“அப்பெண்குட்டி அல்ரெடி கமிட் ஆயிருந்தா” என்று கேட்டான்.
“அதான் சக்தி அப்பெண்குட்டியை வர சொல்லி இருக்கேன் உங்க முன்னால ப்ரொப்போஸ் செய்றேன் எங்கள சேர்த்து வையுங்க” என்று சொல்லும் போதே லேகா கேபினுள்வர..
அவள் பின் வந்த சுஹானாவை
“சுகம் தானா சுஹானா” என்று சொல்லி சத்தமாய் அழைத்தான் முகுந்தன்.
சக்தி அதிர்ச்சியாய் மாப்ளை வேலன் கையை விட்டு முகுந்தனை பார்த்தான்.
“சுஹானா நீங்கள் என் மனம் கவர்ந்த மனுசியானு என்னே கல்யாணம் கழிக்குமோ” என்று முழங்காலில் நின்று கேட்டான் முகுந்தன்.
சக்தி முகுந்தனை அடிக்க கையை முறுக்க மாப்ளை வேலன் அவன் கையை அழுத்தி பிடித்து கொண்டான்.
சுஹானா சக்தியை பார்த்தபடி மென்மையான குரலில் “என் அத்தை பையன் எனக்கே தெரியாம என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டான்” என்றாள்.
“என்ன சொல்றீங்க சுஹானா..?” என்று கேட்டான் முகுந்தன்.
“வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டோம்”என்றாள் சுஹானா.
“உங்க ஹஸ்பண்ட பார்க்கலாமா” என்று கேட்டான் முகுந்தன்.
“அவன் ரவுடி சார்,என் கூட எந்த பையன பார்த்தாலும் அடிச்சிருவான்” என்றாள் சுஹானா.
“ஹோ மை காட்.. கோபக்காரனோட எப்படி வாழ்றீங்க சுஹானா” என்று கேட்டான் முகுந்தன்.
“அவன் என் ரவுடி பேபி சார்” என்று சிரித்தபடி சொல்லிவிட்டு சுஹானா வெளியே போனாள்.
சுஹானா லிப்ட்டை நோக்கி நகர்ந்தாள், அவள் பின்னாடியே சக்திவேலன் சென்று லிப்ட்டுக்குள் இருவரும் தனிமையில் பேச ஆரம்பித்தனர்.
“டேய் மாப்ளை” என்று சுஹானாவை இழுத்து நெருக்கத்தில் பிடித்தவன்..நான் ரவுடியா..அப்படியே அடிச்சன் வை உன் மூக்கு உடைஞ்சிரும்” என்று கைகளை குத்தும்படி அவளருகே கொண்டு போனான் சக்தி.
“என் அண்ணியாரே” என்று சக்தியை பார்த்து “இப்ப நீ பண்றதுக்கு பெயர் என்ன அகிம்சையா..? ரவுடியிசம் தான” என்று அவள் சொன்னதும் லிப்ட் திறந்தது.
அவன் சட்டென அவள் மேல் உள்ள கைகளை எடுத்து விலக..அவளோ அவனை செல்லமாய் “என் ரவுடி பேபி வர்றட்டா..”என்று தன் கேப்-ஐ சரி செய்து வெளியேறினாள் சுஹானா.
“இம்சை பிடிச்சவடி நீ..ராச்சஷி” என்று திட்டி கொண்டே லிப்ட்டில் மேல் ப்ளோர் போனான் சக்திவேலன்.
அதே நேரம் சக்தி-கேபினில் லேகா மாப்ளை வேலனிடம் “என்ன சந்தேகப்பட்டதானடா...?” என்று கேட்டாள்.
“ஹேய் லூசு..... இதுக்கு பெயர் சந்தேகமில்ல டி..”
“அப்புறம் ...?”
“என் பொண்டாட்டி எனக்கு மட்டும்தான்ற பொசசிவ்னஸ்” என்றான் வேலன்.
அவளும்-சிரித்தபடி, “அப்படியா...மொபைல்
வால்பேப்பர் மாத்துனியா” என்று கேட்டாள்.
மொபைல் ஸ்கிரீன் லாக்கில் அவளது போட்டோவை எடுத்து காண்பித்தான் வேலன்.
அதே நேரம் அத்தை சக்தி அங்கு வந்து அவன் போனை பிடுங்கி லாக்கை ஓபன் செய்து மெயின் வால் பேப்பரில் அம்மா-மகன் போட்டோவை காண்பிக்க கோபமாகி வெளியே போனாள் லேகா.
வேலன் திரும்பி “ஆனா அம்மா நீ உன் அண்ணன் வேலன் வாழ்க்கைக்கு துணை,மகன் வேலன் வாழ்க்கைக்கு வினை மா வினை” என்று சொல்லி கொண்டே லேகாவை தேடி வெளியே போனான்.
“ஏய் பொண்டாட்டி நில்லு டி எனக்கு 2 பேரும்
வேணும்னு சொன்னேன்ல” என்றான் வேலன்.
“யாராவது ஒருத்தர்தான் இருக்கணும்னு
சொன்னேன்ல” என்று சொல்லிவிட்டு கோபமாய் ஸ்கூட்டியை எடுத்து கிளம்பினாள் லேகா.
அப்பொழுது சுஹானா வேலனிடம் “மனசு விடாத நாளைக்கு லீவுதான காலையில் 10 மணிக்கு அண்ணியை அவுட்டர்ல இருக்க குளக்கரைக்கு தனியா கூட்டிட்டு வர்றேன் அங்க வச்சு பேசிக்கோ” என்று அமைதியாய் யாருக்கும் கேட்காதபடி சொன்னாள்.
“தங்கச்சி, தங்கச்சிதான்” என்றான் வேலன்.