வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ரேணுகா வேலன் அத்தியாயம் 1

GG writers

Moderator
ரேணுகா💝வேலன்
(அத்தியாயம் -1)
ஒரு பணக்கார குடும்பத்தின் பிரம்மாண்டமான திருமணவிழாவில் மணநேரத்தில் மணக்கோலத்தில்ஆரவாரங்களின் மத்தியில்அமைதியாய் அமர்ந்திருந்தாள் மணப்பெண் சுஹானா.
ஆனால் மணமகனோ வேறொரு பெண்ணை திருமணம் செய்து மணமேடைமுன் அழைத்து வந்தான்... பலகுரல்கள் மணமகனுக்கு எதிராக எழும்பவே...
சுஹானா அமைதியாய் கண்ணீரோடும், ஏமாற்றத்தோடும், மணமேடை விட்டு இறங்கி மணமகன் மீது மலர்களை தூவி அனைவரையும் கடந்துபோனாள். அனைவரும் அதைகண்டு அமைதியாய் கலைந்து போனார்கள். பின் வீட்டில் சுஹானாவின் பாட்டி கண்ணீரோடு பேச ஆரம்பிக்கிறாள்.
வாழ்க்கையில தோல்வியே பார்க்காத இந்த ஸ்ரீலேகா முதல் தடவையா உன் கல்யாண விஷயத்துல தோத்துட்டேன். அதனால இனி உன் கல்யாணம் உன் விருப்பபடிதான் நடக்கும். அத தவிர நீ என்ன சொல்றியோ எது வேணும்னு கேட்குறியோ... அத நான் உனக்கு செய்வேன். இது நான் உனக்கு கொடுக்கிற சத்தியம் சுஹானா என்றாள்.
சத்தியத்தை ஏற்று கொண்டது போல் தலையசைத்தாள் சுஹானா.
2-நாட்களுக்குபின்.... அவளது தாத்தா சுஹானாவிடம் நீ வா குட்டிமா.. நாம வெளிய போலாம் என்று அழைத்தார்.
நான் வரல தாத்தா
தாத்தா சொல்லுறேன்ல வா வீட்லஅடைஞ்சிருக்ககூடாது.. என சுஹானாவை கையோடு இழுத்து சென்று காரில்அமரவைத்து காரை இயக்கினார்.
அவன் எல்லாம் நல்லாவே இருக்கமாட்டான் சுஹானா
தாத்தா சபிக்காதீங்க.....
உன்ன போய் ஏமாத்திட்டானே
விடுங்க தாத்தா...
அவன் வாழ்க்கை எல்லாம்.. என்று மீண்டும் தாத்தா சபிக்க தொடங்க....
தாத்தா நிறுத்துங்க என்று கோபமாய் கத்தினாள். அதன்பின் சிறிது நிதானமாய் என் அத்தைபையன் நல்லா இருக்கணும். எனக்கு அம்மா, அப்பாதான் இல்ல இந்த கல்யாணம் நடந்தா அத்தை, மாமாவாவது எனக்கு கிடைப்பாங்கன்னு நினைச்சுதான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன். அவன் என்கிட்ட இத முன்னாடியே சொல்லிஇருந்தா நானே அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன்.. என்று சுஹானா கூறியதும்
தாத்தா வேகவேகமாய் காரை யுவடிவில் திருப்பி, வேகமாய் சென்று அவர்களது பழைய வீட்டின்முன் காரை நிறுத்தினார்.
சுஹானா காரை விட்டுஇறங்கி இது யார் வீடு தாத்தா என்று கேட்டாள்.

இது நாம 20வருசத்துக்கு முன்னாடி வாழ்ந்தவீடு வா உள்ள போலாம் என அவளை கூட்டிசென்றார்.

ஸ்டோர்ரூமிலிருந்து ஒரு பழைய திருமணபுகைப்படத்தை கொண்டு வந்து சுஹானாவிடம் காட்டினார்.

யாரு தாத்தா இவங்க அழகாக இருக்காங்க....?

இவ என் கடைசிபொண்ணு உன் அத்தைஸ்ரீரேணுகா.... இவர் உன் மாமாவேலன்.... விதிவசத்தால நம்ம குடும்பம் பிரிஞ்சு போயிருச்சு..

அத்தையா..? இத்தனை வருஷமா இவங்களபத்தி நீங்க சொன்னதே இல்லையே

இப்ப சொல்லணும்னு தோணுச்சு என்று தாத்தா சொல்லவும் அவரது அலைபேசியில் அழைப்பு வர சற்றுபேசிக்கொண்டு தள்ளிபோனார்.

சுஹானா மாடிப்படி ஏறி ஒரு அறைக்குள் சென்றாள். அங்கு அறைமுழுவதும் ரேணுகாவின்புகைப்படங்கள் மற்றும்அவளதுபுத்தகங்கள்.

அத்தை நிறைய புக்ஸ் படிப்பாங்க போலஎன மனதினுள் நினைத்தாள்..அங்கு ஒரு பை இருந்தது. அதை திறந்த போது அதில் உள்ள புத்தகங்கள் ஒன்று ஒன்றாய் பார்த்து கொண்டு இருந்தாள். அப்போது ஒரு டைரி கிடைத்தது.

தாத்தா அறையினுள் வந்தார் என்னம்மா சரியா அத்தைரூம்க்கே வந்துட்ட

தாத்தா இது அத்தையோட டைரி எப்படி இங்க வந்துச்சு என்று கேட்டாள் சுஹானா

சுஹானா இந்த ட்ராவெல்லிங்பேக் உன்அத்தை அவதோழி ஹாசினாவுக்கு அனுப்புனது. ஹாசினா ஒருநாள் இந்த ட்ராவெல்லிங்பேக் ரேணுகாவுக்கு அனுப்ப சொல்லி கொடுத்தா.... நான் அனுப்ப மறந்தேபோயிட்டேன் என்றதும் மீண்டும் அலைபேசிஒலிக்க எடுத்து பார்த்து தாத்தா சைலென்டில் போட்டு.... சுஹானா ஸ்ரீலேகா போன் பண்ணிட்டே இருக்கா வா போலாம் என அவளை கூட்டிகொண்டு வேகமாய் கீழ்இறங்கினார்.

சுஹானா டைரியை கையில் பிடித்தபடி தாத்தாவோடு சென்றாள்.

இருவரும் அவசரமாய் வீடு போய்சேர்ந்தனர். அதன்பின் இரவுநேரத்தில் சுஹானா டைரியின்முதல்பக்கத்தை திறந்தாள்.....
இனி 24வருடங்களுக்கு
முன்.....................

திருமணமான முதல்நாள் இரவன்று எத்தனையோ சொல்ல சந்தோசத்துடன் வேலனுக்காக அமைதியாக அவள் அறையில் காத்திருந்தாள் ஸ்ரீரேணுகா.....

வேலன் அறையினுள் வந்தான் ரேணுகாவின் எதிரில் வந்து அமர்ந்தான்...

நிறைய பேச நினைத்தவள்....... அவள் பெண்மை அவளை அடக்கி போடவே தலைகுனிந்து புன்னகை ஒன்றை மட்டும் வெளிக்காட்டினாள்.

வேலன் அமைதியான குரலில் என்னங்க....? எனக்கு அப்பா இல்ல... அம்மா மட்டும்தான்.. என் கூட பிறந்தவங்க 3 சகோதரிகள் என்றான்.

அது எனக்கு முன்னாடியே தெரியும் என்றாள்ரேணுகா

நாம இந்த 3மாசம்தான் இங்க உங்க வீட்ல இருப்போம். என் ப்ராஜெக்ட் முடிஞ்சதும் ஊருக்கு போயிடுவோம் என்றான்.

தெரியுங்க.... என்றாள் ரேணுகா

நான் உங்கள 2 தடவை கல்யாணத்துக்கு முன்னாடி பார்க்க முயற்சி பண்ணுனேன் என்று சொன்னவுடன் தொலைபேசி சிணுங்கியது.

அந்த தொலைபேசியை கட் செய்தாள்.

மீண்டும் மீண்டும் வேலன் பேசுவதற்குள் 3முறை தொலைபேசி சிணுங்க....
எடுத்து பேசுங்க என்றான்.

ரேணுகா தொலைபேசியில் பேசுவதை மட்டும் கேட்டுவிட்டு கட் செய்து குழப்பமாய் மாறியது அவளது முகம்.

என்னாச்சுங்க போன்ல என்ன சொன்னாங்க?

நான் காலேஜ் படிக்கும் போதிருந்தே என் ட்ரீம் ப்ராஜெக்ட் ஒன்னு பண்ணுனோம். அதுக்கு யு.எஸ்ல இருந்து மெஷின் இறக்குமதி செய்ய அந்த ப்ரெசிடெண்ட் பெர்மிஷன் தரவே இல்ல. இப்ப பெர்மிஷன் கிடைச்சிருக்கு.

நல்ல விஷயம்தானேங்க.....

இல்லங்க நாளைக்கே யு.எஸ் கிளம்பனும் 10லிருந்து15 நாள் அங்க தங்குற சூழ்நிலை வரும். நான் என்ன பண்றது?

என்னங்க போலாம். நாம சேர்ந்தே போலாம்.

நிஜமாதான் சொல்றிங்களா.......

நிஜம்தாங்க என்றான் வேலன்.

நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும் என்றாள்ரேணுகா... தொலைபேசி மீண்டும் சிணுங்கியது.

வேலன் சிரித்தபடி நீங்க உங்க வேலையை பாருங்க... நாம நாளைக்கு பேசலாம்.. என்று தூங்க போனான்.

ரேணுகாவும் அவளது வேலையை தொடர்ந்தாள். இரவு முடிந்து அடுத்தநாள் பொழுது விடிந்தது. ரேணுகா கண்விழிக்கும் போது வேலன் அறையில் இல்லை... வேலனை தேடி இறங்கியவள்.... அப்பா அவரை பார்த்திங்களா...? என்றுகேட்டாள்

மாப்பிள்ளையாம்மா அவர் வாக்கிங் போயிருக்காரு நீ போய் ரெடியாகுமா என்றார்.

ரேணுகா தயார் ஆகி கீழ் இறங்கி வந்த போது அவளது டீம்மெம்பர்ஸ் அவளிடம் விமானபயண டிக்கெட் ஒருத்தருக்குதான் இருக்கு என்றவுடன் டென்ஷன் ஆகி அவள் அறைக்கு சென்றாள்.

வேலன் வீ ட்டிற்குள் வர ரேணுகா டீம்மெம்பர்சை பார்த்து விட்டு மாமா ஏன் இவங்க எல்லாம் ஒரு மாதிரி சோர்வா இருக்காங்க..

மாப்பிள்ளை எப்படி சொல்றது? விமான டிக்கெட் ஒருத்தருக்குதான் கிடைச்சிருக்கு.

ஹோ.... அப்படியா என்றான் வேலன்.

எங்க 6வருஷ உழைப்பு சார் போச்சு.. என்றனர் டீம்மெம்பர்ஸ்.
எதுவும் பேசாமல் அவர்களை விட்டு கடந்து படிகள் ஏறினான்.
என்ன சார் மாப்பிளை ஒன்னும் சொல்லாம போறாரு...?
தெரியலையே?என்றார் மாமா

வேலன் அறைக்கு செல்லும் வழியில் பணியாள் அவர்களுக்கென கொண்டுவரும் காபிதட்டை வாங்கிகொண்டு அறைக்குள் சென்றான். ரேணுகாவின் எதிரில் போய் நின்றான்.

ரேணுகா பதட்டமாய் காபிதட்டை வாங்கி ஓரம் வைத்து விட்டு வேலன் முகம் பார்க்க முடியாமல் முகத்தினை ஒரு பக்கமாய் திருப்பி கொண்டாள்.

முகம் பார்க்க மறுக்கும் ரேணுகாவை தன் இரு கைகளால் அவள் முகத்தினை பிடித்து அவள் கண்களை நேராக பார்த்து யு. எஸ் க்கு போயிட்டு வாங்க என்றான்.
நான் எப்படி போக முடியும் உங்கள விட்டுட்டு என்று கண்ணீர் மல்க கூறினாள்.
என் ஆயுள் முழுக்க உங்ககூட தான் இருக்க போரேன்... இந்த அரைமாசம் பிரிவு என்ன ஒன்னும் செஞ்சிராது.... கவலைப்படாதீங்க..... நீங்க போயிட்டு வாங்க... நீங்கஇப்ப
யு . எஸ் போகலைன்னா ஆயுள் முழுக்க இந்த வாய்ப்பை விட்டதை நினைச்சு வருத்தப்படுவீங்க...

எல்லாரும் கேட்டா என்ன சொல்லுவீங்க..?எப்படி சமாளிப்பீங்க?

என்னங்க என்னோட 2வது சிஸ்டர் பெயர்சக்தி அவளை நம்ம கல்யாணத்துல பார்த்தீங்களா....?

இல்ல என்றாள் ரேணுகா.

அவ நம்ம கல்யாணத்துக்கே வரல. அவ என் சிஸ்டர்ன்னு சொல்றதை விட என்னோட தோழின்னு சொல்லலாம். நாங்க ட்வின்ஸ்... அவ ராணுவத்துல டாக்டரா இருக்கா அங்க முக்கியமான ஆபரேஷன் நடக்கிறதால அவளால வரமுடியல... அது எனக்கு புரியுது. அவ வராததை எல்லாரும் குறையா சொன்னாலும் அத நான் ஏத்துக்கல... இப்ப நீங்க யு. எஸ் போறதை குறையா சொன்னாலும் நான் ஏத்துக்கமாட்டேன். அதனால நீங்க நிம்மதியா கிளம்புங்க..... என்றான்.

வேலன் கையை பிடித்து கண்ணீர் மல்க தேங்க் யூங்க.... நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும் என்றாள் ரேணுகா.

சொல்லுங்க.... என்றான்
அவள் சொல்லுவதற்குள் ரேணுகா என அவள் அம்மா ஸ்ரீலேகா அழைக்க இருவரும் சென்றனர்.

அம்மா நான் யு.எஸ் கிளம்புறேன்.

குட் டெசிசன் ரேணு... என்றாள் அவள் அம்மா.

பின்னர் விமானநிலையம் வரை ரேணுகாவும், வேலனும் ஒன்றாய் சென்றனர்.

விமானநிலையத்தில் என்னங்க என்று ரேணுகாவை கூப்பிட்டு தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த ஒற்றை ரோஜாவை அவள்முன் நீட்டி ஆல் தி பெஸ்ட் என்று சொன்னான் வேலன்.

தங்கம் கிடைத்தது போல் மகிழ்வாய் ரோஜாவை வாங்கி கொண்டு நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும் என்றாள்.
அந்நேரம் ரேணுகா ப்ளைட்டுக்கு டைம்ஆச்சு வா....என்று டீம் மெம்பர்ஸ்அழைத்தனர்.

வேலன் சிரித்தபடி போயிட்டு வாங்க பேசிக்கலாம் என்று ரேணுகாவை வழியனுப்பி வைத்தான்.

வேலன் ரேணுகாவின் வீட்டிற்குள் தனியாக வந்தபோது எந்திரமயமான சூழ்நிலை. ரேணுகாவின் அக்கா, மாமா, அண்ணன், அண்ணி என அனைவரும் கம்பெனி வேலை என ஒவ்வொருவராய் அவனை கடந்து போனார்கள். யார் ஒருவரும் அவனிடம் பேசவில்லை.

அப்போது வேலனின் நண்பன் கண்ணன் மறுவீடு அழைக்க உள்ளே வந்தான்.
டேய் வேலா தங்கச்சியை கூட்டிட்டு வா மறு வீடு போலாம்.

கண்ணா ரேணுகா யு.எஸ் போயிருக்காங்க
என்னடா சொல்ற....? அம்மாட்ட நான் என்னடா சொல்லுவேன்.

டேய் கண்ணா நாங்க 2பேரும் யு. எஸ். போயிருக்கோம்னு சொல்லுடா அம்மாகிட்ட

என்னடா.... இரு... நான் அம்மாட்ட போன் பண்ணி சொல்லிட்டு வர்றன்.. என்றான்கண்ணன்.

ஸ்ரீலேகாவிடம் வேலன் சென்று அத்தை என் நண்பன் கண்ணன் வந்திருக்கான் கொஞ்சம் சாப்பாடு பரிமாறுறிங்களா என்று கேட்டான்.

வேலன் மணியம்மா இருக்காங்கள அவங்ககிட்ட சொல்லுங்க

யாரு மணியம்மா...?

நம்ம வீட்டு வேலைக்காரி வேலன்

வேலனுக்குள் சொல்ல முடியாத கோபம் ஒன்று எழுந்தது. ஆனால் அவன் அதை வெளிகாட்டாமல்.... ஹே கண்ணா வாடா... சாப்பிடலாம் நான் உனக்கு என் கையால பரிமாறுறேன் என்று அவனை டைனிங் டேபிளுக்கு இழுத்து சென்றான் வேலன்.

கையை விடுடா என்னடா நடக்குது இங்க கல்யாணவீடு மாதிரியா இருக்கு. உன் மாமியார் இப்படிபேசுறாங்க, உன் பொண்டாட்டி உன்ன விட்டுட்டு யு. எ ஸ். போயிருக்கா...?

டேய் கோபப்படாத நான் சொல்றதை கேளு ரேணுகாவை யு. எஸ் . அனுப்புனதே நான்தான்... என் மாமியாரும் எனக்கு அம்மா மாதிரிதானே விடுடா...

பணக்கார பேமிலி இப்படிதான் இருக்குமா எனக்கு கஷ்டமா இருக்கு வேலா...?நீயே சொல்லி இருந்தாலும் ரேணுகா போயிருக்ககூடாது டா.....

டேய் ஒரு வேளை ரேணுகாவுக்கு பதில் எனக்கு ப்ராஜெக்ட் கிடைச்சு நான் யு. எஸ். போயிருந்தா நீ இவ்ளோ கோபப்படுவியா..... மாட்ட..... ஏன்னா பொண்ணு விட்டு கொடுத்தா அது நியாயம்.... அதே ஒரு ஆம்பள விட்டுகொடுத்தா அது தியாகம்.... ஏன்டா அப்படிதானே......

அப்படியில்லடா வேலா நீங்க 2 பேரும் சேர்ந்து இருக்கறதுதான் எங்களுக்கெல்லாம் சந்தோசம்.

கண்ணா அவங்க இந்த ப்ராஜெக்ட்டுக்காக 6வருஷம் கஷ்டபட்டிருக்காங்க அதை முடிக்க முடியாம போனா வாழ்க்கை முழுக்க வருத்தப்படுவாங்க.. நான் அவங்களுக்கு சந்தோசத்தை தரணும்னு நினைக்கிறேன்டா.. என் மனைவி ஜெயிக்கிறதுக்காக என்னால முடிஞ்சதை செய்வேன்

மாப்பிளை உன்ன மாதிரி எல்லாம் எவனும் இருக்க மாட்டான்டா....!ரேணுகா லக்கிடா.....

சரியா சொன்னிங்க தம்பி என்று சொல்லிகொண்டு வந்தார் ரேணுகாவின்அப்பா.. ஆமா மாப்பிளை, 2 பேரும் சாப்பிட்டீங்களா...முதல் உட்காருங்க என்று சொல்லி அவரே அவர்களுக்கு உணவு பரிமாறினார்.

அதன்பின் இரவில் வேலன் அவர்களது அறையில் தனிமையில் ஒரு கடிதம் எழுதுகிறான். என்ன விந்தை ரேணுகா இது...?நான் உங்களோடு இருந்தது 2நாள் ஆனால் பல வருடங்கள் பழகி பிரிந்த தோழியை போல உங்களை நித்தமும் நினைக்கிறேன் என்று எழுதி ரேணுகாவின் புத்தகத்தில் வைத்து விட்டு தூங்க போனான்.

தொலைபேசியில் ரேணுகாவிடம் தினமும் சிறிது பேச்சுகளால் மகிழ்ச்சியானாலும்;வேலனுக்கு ரேணுகாவின் வீட்டாரின் நடத்தையும் அந்த வீட்டின் சூழ்நிலையும் மனஅழுத்தத்தை தந்தன. இந்த 15 நாட்கள் ரேணுகாவை பிரிந்து வேலனுக்கு பாலைவனம்போல மனம் வறண்டு போனான்.
15 நாட்கள் முடிந்து ரேணுகா திடீரென வந்து தூங்கும் வேலனின் தலைபக்கத்தில் அமர்ந்தாள்.
வேலன் மெல்ல கண்விழித்து ரேணுகாவை பார்த்ததும் வந்துட்டீங்களா...? என்று வேகமாய் எழுந்தான்... ரேணுகாவின் கையை பிடித்து இந்த 15நாளும் நீங்க எப்ப வருவீங்கன்னுதான் யோசிச்சிட்டு இருந்தேன்... என்றவுடன்.....
ரேணுகா.... என்று ஸ்ரீலேகா அறைவாசலில் நின்று அழைக்க சட்டென்று பிடித்த கையை உதறினான் வேலன்.
ரேணுகா...? புதுசா இருக்கு எப்பவும் என்ன பார்த்து சொல்லிட்டுதான வருவ....
இல்லம்மா பேக் வச்சிட்டு வந்து உங்கள பார்க்கலான்னு இருந்தேன்.
சரி ரெடியாயிட்டு கீழ வாங்க என்றாள்.
வேலனும்,ரேணுகாவும் தயாராகி இருவரும் கைகோர்த்து சிரித்து பேசி மகிழ்வாய் படிகளில் இறங்கினர்.
டைனிங் டேபிள் சென்று வேலனுக்கு ரேணுகா பரிமாறும் போது ஸ்ரீலேகா.... ரேணுகாவை அழைத்தாள்.
ஏங்க ஒரு நிமிஷம் இப்ப வந்துரேன்... என்று வேலனிடம் கூறிவிட்டு அம்மாவிடம் சென்றாள் ரேணுகா.
நம்மளோட பார்மசியூட்டிகள் கம்பெனிக்கு போய் இந்த ஒர்க் முடிமா
அம்மா அவருக்கு சாப்பாடு வச்சுட்டு......
அதுக்குதான் வேலைக்காரங்க இருக்காங்கல நீ போய் நான் சொன்ன வேலையை முடி.
சரிம்மா.... என்று சங்கடமாக திரும்பினாள்...

வேலனுக்குள் சொல்ல முடியாத மனவேதனை..... அதை ரேணுகாவிடம் வெளிக்காட்டாமல் நீங்க போய் வேலையை பாருங்க என்றான்.

அப்பொழுது ரேணுகா நீயும் வேலனும் இன்னைக்கு நைட் டின்னர்க்கு நம்ம பார்ட்னரோட பார்ட்டிக்கு போயிட்டு வாங்க என்றாள் ஸ்ரீலேகா.

சரி அம்மா என்றாள்.

இரவும் வந்தது..... ரேணுகா வேலனுக்காக யு.எஸ் . லிருந்து கோட்சூட் வாங்கி வந்து அதை கிப்ட் ஆக வேலனுக்கு கொடுத்து.. இதை பார்ட்டிக்கு போட்டுக்கோங்க என்றாள்.

இருவரும் அறையில் தயாராகி கொண்டிருந்தபோது.... ரேணுகா சிவப்புசேலையில்......

நான் ரெடியாயிட்டேங்க என்றாள்.... ஆமா டை கட்டலையா...?

எனக்கு டை கட்ட தெரியாதுங்க என்றான் வேலன்.

மெலிதான புன்னகையோடு வேலன் அருகில் சென்று டை கட்ட ஆரம்பித்தாள்.

என்னங்க நான் ஒன்னு சொல்லலாமா என்று கேட்டான் வேலன்.

சொல்லுங்க.....

உங்களுக்கு மத்த டிரஸ்விட சேலையிலதான் ரொம்ப அழகாக இருக்கீங்க.

அப்படியா.... நானும் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்.... என்றவுடன் ரேணுகா என அவள் அக்கா சாருலேகா பார்ட்டிக்கு டைம் ஆச்சு...என்று அழைத்தாள்.

நாங்க ரெடி ஆயிட்டோம் வர்றோம்.ஏங்க நான் அப்புறமா சொல்றன் இப்ப போலாமா என்று கேட்டாள் ரேணுகா.

போலாம் என்றான் வேலன்.

இருவரும் பார்ட்டிக்கு சென்ற இடத்தில்.. அங்கு குடித்து விட்டு போதையில் நடமாடுபவர்களை பார்க்கும் போது வேலனுக்கு அவை அருவருப்பாய் தோன்றின. அப்பொழுது ரேணுகாவின் அக்கா கணவர் சுதர்சன்... உன்பொண்டாட்டி;என்பொண்டாட்டி எல்லாருமே குடிப்பாங்க....... என்றான்.

ரேணுகா குடிப்பாங்கன்னு எனக்கு தோணல....

நம்ப மாட்டியா.... போய் பாரு... உன் பொண்டாட்டி கையில கிளாஸோட நின்னு குடிச்சிட்டு இருப்பா... என்றான் சுதர்சன்.

வேலன் பார்த்த போது ரேணுகா கையில் கிளாசோடு சுதர்சன் சொன்னது போலவே நிற்க.. வேலன் வேகமாய் சென்று ரேணுகாவை பிடித்து இந்த இடம் எனக்கு பிடிக்கல, நீங்க இங்க நிக்கறதும் எனக்கு பிடிக்கல வாங்க போலாம் என்று அவளை வேகமாய் இழுத்து சென்றான்.

பின் வீட்டில் ரேணுகா பேச இடம்கொடாமல் இந்த மாதிரி பார்ட்டி லைப் நமக்கு வேண்டாம் என சொல்லிவிட்டு கடந்து போய் படுத்துவிட்டான்.ஆனால் உண்மையில் ரேணுகா கையில் இருந்தது கிரேப் ஜூஸ்

பின் 2 நாட்களுக்கு மேலானது வேலன் முகம் கொடுத்து பேசவே.....

ரேணுகா வேலனோடு வெளியே செல்ல திட்டமிட்டு அவனை அழைத்து சென்றாள். இருவரும் மனம் விட்டு பேச ஆரம்பிக்கும் போது தொலைபேசி சிணுங்க... அவற்றை எடுத்த போது ·பேக்டரில தீவிபத்து உடனே வாங்க என்றதும் இருவரும் ·பேக்டரிக்கு சென்று பிரச்சனை சரி செய்தனர்.

ஆனால் வேலனுக்குள் தாங்க முடியாத மனஅழுத்தம் அதிகமாகவே.... தனது கம்பெனியில் ப்ராஜெக்ட் வேற யாராவது மாத்துங்க. நான் ஊருக்கு போகணும். நாங்க இன்னும் மறுவீடு கூட போகல என்று கேட்க அட என்ன வேலா ப்ராஜெக்ட் ஹெட் ஸ்ரீலேகா மேடம் தான நீ இப்படி சொல்ற என்றார் மேனேஜர்.

அந்நேரம் அவன் ஆபீஸ்க்குள் சுதர்சன் வந்தான். ஹேய் உன்ன வீட்டோட மாப்பிள்ளையா ஸ்ரீலேகாமேடம் வாங்கிட்டாங்க உனக்கு தெரியாதா.... உங்க அம்மாகிட்ட மேடம் டீல் பேசி முடிச்சாங்க.

வேலன் கொதித்தெழுந்து ஆத்திரத்தின் உச்சிக்கு போய் வேகமாய் வீட்டிற்கு சென்று தனது துணிப்பையை எடுத்து கொண்டு ஸ்ரீலேகாமேடம் என்று கத்தினான்.....

என்ன வேலன் ஏன் சத்தம் போடுறீங்க?

ஏன் மேடம் என்ன வீட்டோட மாப்பிள்ளையா டீல் பேசுனீங்களா....

ஆமா இப்ப என்ன அதுக்கு

எனக்கு ரேணுகா வேண்டாம்

வேண்டாம்னா..... என்றாள் கோபமாக ஸ்ரீலேகா.

எனக்கு மனைவி வேண்டாம் உங்க குடும்பமும் வேண்டாம்....

வேலனின் வார்த்தையில் நொறுங்கி போனாள் ரேணுகா.

என்ன குறை என் பொண்ணுகிட்ட நீ வேண்டான்னு சொல்றதுக்கு.....

உங்க பேமிலி மொத்தமா குறைதான் மேடம்.... நான் நைட் லேட்டா வந்தா கூட எனக்கு சாப்பாடு போட்டு என்அக்கா, தங்கச்சி எனக்காக வெயிட் பண்ணுவாங்க. அது பேமிலியா.. உங்களோடது பேமிலியா....

ரேணுகாகிட்ட உனக்கு என்ன பிரச்சனை?

மேடம் என் மனைவி எனக்காக இருக்கணும், என் வீட்டு கிச்சன்ல எனக்காக சமைக்கணும், எனக்காக அவ வாழணும். என்னால உங்க பொண்ண பேர் சொல்லி கூட கூப்பிட முடியல......

என் பொண்ணு உனக்கு வேலை செய்யணுமா....அவ பிரின்சஸ்டா...இடியட்.. நீ என்னடா வேணாங்கறது போடா வெளிய....என் வீட்ட விட்டு இப்பவே வெளிய போடா......

வேலன் வீட்டை விட்டு வெளியேற.... ரேணுகா வேலனிடம் பேச போக அவளை கையை பிடித்து தடுத்து நிறுத்தினாள் ஸ்ரீலேகா.

அம்மா அவர் போறாரு....?கையை விடுங்க என்றாள் ரேணுகாஅழுகையுடன்.....

அவன் நமக்கு வேண்டாம் ரேணுகா அவனால நீ கஷ்டம்தான் படுவ.....

அம்மா ஒரே ஒரு நிமிஷம் நான் அவர்ட்ட பேசணுமா விடுங்கம்மா ப்ளீஸ்......

கேட் இழுத்து மூடு செக்யூரிட்டி என்றாள் ஸ்ரீலேகா

ரேணுகா கண்ணீரோடு மாடிக்கு ஏறினாள். அவன் வீட்டை விட்டு கடந்து செல்வதை பார்த்து அவனை நினைத்து கதறினாள்.

அதன்பின் வேலன் அவன் வீட்டிற்கு சென்று அம்மாவிடம் ஏன் அம்மா என்ன வித்துட்டு வந்தீங்க........?

வேலா என்ன சொல்ற ரேணுகா எங்க?

இனி வரமாட்டா எப்பவும்....

என்ன சொல்ற தம்பி நீ

அவ எனக்கு வேண்டாம் அம்மா....என்ன வீட்டோட மாப்பிள்ளையா அனுப்ப எப்படிம்மா சம்மதிச்ச.... நான் உங்கள, அக்கா,தங்கச்சியை விட்டுட்டு போவன்னு எப்படி நம்புனீங்க.

தம்பி நீ அமைதியா...உட்காரு

நான் சொல்றதை முதல கேளு.

தாங்கவே முடியல அம்மா...

வேலா அப்பா இறந்ததுக்கு அப்புறம் நீ ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சு, இராத்திரி, பகலா வேலை செய்து உன்அக்கா, தங்கச்சியைபடிக்க வச்சு, பெரியவளுக்கு கல்யாணம் பண்ணிவச்சு, சின்னவள டாக்டர் ஆக்கி நீ உனக்காக வாழவே இல்லையேடா மீதம் கடைசி உள்ள தங்கச்சி மட்டும்தான.... ஸ்ரீலேகா கேட்டப்ப நான் யோசிக்கதான் செஞ்சன் சம்மதம்சொல்லல. ஆனா அவங்க 3மாசம் முடிஞ்சு உன்னையும் ரேணுகாவையும் தனிக்குடித்தனம் வைக்கிறதா சொன்னாங்க அதனாலதான் சம்மதம் சொன்னேன். வேலா இப்ப என்ன ஆச்சு.....?

வேலன் கண்ணீரோடு என்ன எதுவும் கேட்காத அம்மா என் கல்யாண வாழ்க்கை முடிஞ்சு போச்சு. ரேணுகாவுக்கு இனி என் வாழ்க்கையில இடமில்லமா.... என்று கூறிவிட்டு மாடிப்படி ஏறி அவன் அறைக்கு சென்றான்.

2 நாட்களுக்குபின்..... வேலன் வீட்டிற்குள் ரேணுகா வந்து பேச முயற்சிக்கும் போது வேலன் அவளை தடுத்து உங்களுக்கும் எனக்கும் சரியா வராது போங்க உங்க வீட்டுக்கே போய்டுங்க......

நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளுங்க....

நீங்க எதுவும் சொல்ல வேணாம்.... போங்க.....

என்னங்க ப்ளீஸ் நான் சொல்றதை ஒரு தடவை கேளுங்க...

ஏய் உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா என்று ரேணுகாவை தரதரவென்று இழுத்து சென்று கொட்டும் மழையில் வெளியே நிறுத்தினான் வேலன்.

என்ன செய்வதென்று தெரியாமல் ரேணுகா கொட்டும் மழையில் கண்ணீரோடு நின்று கொண்டு இருந்தாள்.
 
Last edited:
Top