வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ரேணுகா 💝வேலன் (அத்தியாயம்-10)

GG writers

Moderator
அடுத்த நாள் மாலையில் சக்தியும்,வேலன்
விஜயகுமாரும்
சஹானாவுக்கும், லேகாவுக்கும்,
லெஹங்கா டிரஸ் வாங்கி வந்து ரேணுகாவிடம்
காண்பித்தனர்.

“என்னடா இது கலர் ? எனக்கே பிடிக்கல..அவங்க
2பேருக்கும் எப்படி பிடிக்கும்.அவங்களகூட்டிட்டு
போய் டிரஸ் எடுங்கடா” என்றாள்.

“அத்தை என் பொண்டாட்டியை கூப்பிட்டு
கேளுங்க அவளுக்கு கண்டிப்பா பிடிக்கும்”

“ஆமாம்மா
நீ சஹானாவையும் கூப்பிட்டு கேளு” என்றான் சக்தி.

“அவ்ளோ கான்ஃபிடென்டா உங்க 2 பேருக்கும்
லைட் கிரீன் யாருக்கு?
ரெட் கலர் யாருக்கு?" என்று கேட்டாள் ரேணுகா .

“லைட் கிரீன் என் பொண்டாட்டிக்கு” என்றான்
வேலன் விஜயகுமார்,
“ரெட் என் ஃப்ரண்டுக்கு” என்றான் சக்தி.

“சரி கேட்குறேன். நீங்க அமைதியா இருங்க
சஹானா, லேகா வாங்க...இந்த 2 டிரஸ்ல எது
பிடிச்சிருக்கோ அதை எடுத்துக்கோங்க, பிடிக்கலன்னா
கடைக்கு போய் கூட டிரஸ் வாங்கிக்கலாம்” என்றாள் ரேணுகா.

இருவரும் டிரஸை பார்த்த லேகா லைட்
கிரீனையும்,சஹானா ரெட் கலரையும் எடுத்ததும்
சக்தியும்,வேலனும் சக்சஸ் என்று கையோடு
கைகளை அடித்து கொண்டனர்.

“டேய் என்னாச்சு” என்றாள் சஹானா.

“ஒன்னுமில்லடி” என்றான் சக்தி.

“சஹானா இது அடிக்கிற கலரா இல்ல?” என்று
கேட்டாள் ரேணுகா.

“இல்ல அத்தை ஐ லவ் திஸ் ஒன்” என்றாள் சஹானா.

“ஏய் லேகா இது டல் கலரா இல்லையா டி..?”

“என்னம்மா இது சிம்பிளா அழகா இருக்கு எனக்கு பிடிச்சிருக்கு” என்று இருவரும் டிரஸை எடுத்து சென்றனர்.

“அம்மா உன்ன விட நாங்க 2பேரும் அவங்கள
தெளிவா புரிஞ்சு வச்சிருக்கோம்” என்றான் சக்தி.

“ஆமாடா நீங்க சொல்றது கரெக்ட்தான்” என்றாள் ரேணுகா.

அடுத்த நாள் வழக்கம் போல் வேலன் விஜயகுமார் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி
கொண்டு லேகாவை பார்க்க ஆபிஸ்க்கு சென்ற போது அவனிடம் ஹார்ஷாக பேசி
அவளும் வெளியே அனுப்பினாள்,அப்போது அவளது எம்.டி. அவளை அறைக்கு அழைத்தார்.

“நீங்க வெளிய ஒருத்தர்ட்ட ரூடா பேசுனீங்களே..அவர் யாருன்னு தெரிஞ்சுதான் அப்படி ரூடா
பேசுனீங்களா..”

“ஆமா சார் அவன் என் அத்தை பையன்” என்றாள்.

“அது மட்டுமில்ல லேகா அவர் எனர்ஜி ஆர்கனிசேஷன் எம்.டி. மிஸ்டர் வேலன் விஜயகுமார்” என்று அவர் சொன்ன மாத்திரத்தில் அதிர்ச்சியானாள்.

“நீங்க உங்க கேபினுக்கு போங்க 13ந் தேதி
மீட்டிங் ஹால்ல அவர் என்ன சொன்னார்ன்ற
ஃபூட்டேஜ உங்ககிட்ட கொடுக்க சொல்றேன்.”

“சரி சார் வர்றேன்” என்று சொன்னபடி போய்
அவள் சீட்டில் அமர்ந்து கண்களை மூடி
யோசித்தாள்..

6 மாதங்களுக்கு முன் லேகா மொபைலில் எனர்ஜி ஆர்கனிசேஷன் எம்.டி.யுடன்,
“சார் சொல்லுங்க..உங்க ப்ராஜக்ட் டீட்டெயில்
தெரிஞ்சுக்கதான் கால் பண்ணுனேன்,படிச்சேன் பட்
எனக்கு டவுட் இருக்கு.”

“மேடம் நான் நிறைய சாப்ட்வேர் கம்பெனி ட்ரை
பண்ணுனேன் யாரும் பண்ணி தர மாட்டேன்றாங்க”.

“சார் நீங்க டீட்டெயில் சொல்லுங்க எவ்வளவு
எங்களால செய்ய முடியும்ன்னு சொல்றேன்.”

“மேடம் மலைப் பகுதியிலும்,பனிசூழ்ந்த மலை
பகுதியில்,காடுகளில் வாழ்ற கிராம மக்களுக்கு விலங்குகள் அவங்களை விட்டு எவ்வளவு தூரத்துல அதாவது 100 அடி,500அடி தூரத்துல இருக்குன்னு அங்க வாழ்ற சாதாரண மக்களுக்கு சொல்ற மாதிரி
சாப்ட்வேர் கிரியேட் பண்ணனும்.”

“சார் அப்படி சொல்றதால என்ன பெரிசா
நடந்திடும்.”

“மேடம் நாம சொல்றதால விலங்குகள்கிட்ட-
இருந்து மனித உயிர்களையும்,மனுஷ வேட்டைக்கு பலியாகாம விலங்குகளையும் காப்பாத்த முடியும்,எந்த
உயிரும் கஷ்டப்படாம வாழ முடியும்” என்று அவன்
பேசியதை மெய் மறந்து கேட்டு கொண்டிருந்தாள்.

“மேடம் லைன் ல இருக்கீங்களா..?”

“இருக்கிறேன் சார்..இல்ல சாப்ட்வேர் எல்லாருமே பிஸினஸாக தான் பண்ணுவாங்க நீங்க சர்வீஸ் மாதிரி கேட்குறீங்களே”

“ஏன் மேடம் உங்கள மாதிரி படிச்சவங்க படிச்ச
அறிவை பணத்துக்காக மட்டும்தான்
பயன்படுத்துவீங்களா..?சாதாரண மக்களோட
கஷ்டத்தை மாத்த பயன்படுத்த மாட்டீங்களா..?”

“இல்ல சார்..அப்படியில்ல..”

“இந்த ப்ராஜெக்ட் என்னோட எய்ம்,ட்ரீம் மேடம் இத சக்சஸ் பண்ணுவீங்களா..?”

“சார் யார் பண்லன்னாலும் நான் உங்களுக்கு இந்த ப்ராஜெக்ட் சக்சஸ் பண்ணி கொடுப்பேன்.”

“மேடம் நான் ஃபண்டு டிரான்ஸ்பர்
பண்ணிடறேன்,நீங்க வேலைய ஆரம்பிங்க,எனக்காக
வெயிட் பண்ணாதீங்க,எனக்கு லீவு கிடைச்சதும் நானே உங்கள நேர்ல வந்து பார்க்கிறேன்.”

“சரிங்க சார்” என்று போனை கட் செய்து ‘எவ்வளவு
வித்தியாசமான மனுஷன் லவ்லி கேரக்டர்’
என்றாள் அவள் மனதினுள்,சட்டென கண்களை
திறந்து தன் டிராவை ஓபன் செய்து ப்ராஜெக்ட் பைலை தேடி எடுத்து அதை திறந்து பார்த்த போது வேலன் விஜயகுமார் சிக்னேச்சரை பார்த்ததும் அவளை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்தது.

அப்போது கேமரா ஆப்பரேட்டர் எம்.டி. சொன்ன ஃபூட்டேஜை பென்டிரைவில் லேகா கையில் கொடுத்தார்.

அவளும் அதை வாங்கி வேகமாய் பி.சி,யில்
சொருகி ஹெட் போனை எடுத்து காதில் மாட்டி
வீடியோவை ஓபன் செய்தாள்.அதில் வேலன் எம்.டி. சாருடன் தனிமையில்......

“வேலன் சார் இங்க என்ன நடக்குது,லேகா ஏன்
உங்ககிட்ட இப்படி பிகேவ் பண்றாங்க.”

“நான் உங்களுக்கு சொல்றேன், அவங்க மேல
தப்பே கிடையாது” என்றான் வேலன்.

“எனக்கு புரியும்படி யா சொல்லுங்க சார் என்றார் எம்.டி.

“சார் ப்ராஜெக்ட் எப்படி நடக்குதுன்னு பார்க்க
லேகாவ பார்த்து ப்ராஜெக்ட் கம்ப்ளீட் பண்ண என்ன தேவைன்னு கேட்கதான் ஆபிஸ்க்கு வந்தேன். பட் லேகாவ முதன்முதல்ல பார்த்தப்ப ஷி இஸ் மை கேர்ள் அண்ட் ஷி இஸ் மை ஃவொயிப்-ன்னு ஃபீல் ஆச்சு.அப்பம் தான் யாரோ ஒரு பையன் அவளுக்கு ப்ரொப்போஸ் பண்ணான் அவ அவன்கிட்ட சொன்ன பதில வச்சே நானும் என் மனசை என் அம்மாகிட்டேயும், அவகிட்டேயும் ஒரே
நேரத்துல சொன்னேன். அவ யாரோட பொண்ணா இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சுதான் அவ கூட ஸ்கூட்டில அவ வீட்டுக்கு போனேன். பிக் சர்ப்ரைஸ் அது என் மாமா வீடு,லேகா என் மாமா பொண்ணுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் நான் எப்படி சார் அவள விட
முடியும்.மாமா,அத்தைட்ட பேசிட்டேன் அவ
சம்மதத்துக்காக வெயிட் பண்றேன்.”

“ஆனா வேலன் சார் லேகா ரொம்ப ரூடா ஆக
ரஃப் அண்ட் டஃப் ஆக இருக்காங்களே,எப்படி நீங்க இவ்வளவு தூரம் இறங்கி
போறீங்க.”

“சார் அவள லவ்வர் ஆக நினைச்சா நீங்க
சொல்றது சரி,நான் அவள என் ஃவொயிப் ஆல
நினைக்கிறேன்.அவ என்ன சொன்னாலும்,எவ்வளவு கோபப்பட்டாலும்,
திட்டுனாலும்,அடிச்சாலும் என்னால
அவள விட்டு கொடுக்க முடியாது,ஏன்னா என் உயிர்ல கலந்திருக்கா என் மனைவி என்கிட்ட இருந்து அவள யாராலும் பிரிக்க முடியாது.”

“லேகா ரொம்ப லக்கி வேலன் சார்.”

“இல்ல சார் நான் தான் லக்கி என் ஃவொயிப்
பெர்ஃபெக்ட்,ஹானஸ்ட், ட்ரூத்-ன்னு எல்லா நல்ல குணமும் அவகிட்ட இருக்கு. சார் நான்
தான் எனர்ஜி ஆர்கனிசேஷன் எம்.டி.
வேலன் விஜயகுமார்ன்னு அவட்ட இப்பவே சொல்லிடாதீங்க. அவளுக்கு அவ
அத்தை பையன் வேலனாவே என்ன பிடிக்கட்டுமே.”

“நான் சொல்ல மாட்டேன் சார்..”என்று வீடியோ
முடிந்தது.
இதை பார்த்ததும் கல் மனம் கொண்டவளின் இதயம் தன் மழலை மனம் கொண்ட மன்னவனின் நேசத்திற்கு முன்னால் உடைந்து நொறுங்கியது.உண்மையான அன்பிற்கு முன்னால் இவ்வுலகில் எதுவும் ஈடு இணையாய் நிற்காது

லேகாவின் கல்லான இதயம் உடைந்த
வார்த்தையில் விவரிக்க முடியா வண்ணம் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து
எம்.டி.ரூம்க்கு சென்று, நன்றி சொல்லி லீவு போட்டு வீட்டிற்கு கிளம்பி போனாள்.

வீட்டிற்கு போகும் வழியெல்லாம் வேலன் வந்த
முதல் நாளில் இருந்து நடந்த அனைத்தையும் நினைத்து நினைத்து சித்ராவின் இதயமே அவளை சித்ரவதை செய்து கண்ணீர் மட்டும் அடக்க முடியாமல் வந்தது அவளுக்கு........

வேலன் விஜயகுமார் வீட்டின் நடுவில் டைனிங்
ஹாலில் தனியாக அமர்ந்திருந்தான்.

வீட்டிற்குள் வந்ததும் லேகா கண்களை
துடைத்து கொண்டு கோபமாய் போய் அவனிடத்தில் “நீ தான்-எனர்ஜி ஆர்கனிசேஷன் எம்.டி.யா..?” என்று கேட்டாள்.

அவன் எழுந்து தலை குனிந்தவாறே “ஆமா”
என்றான்.

“பைத்தியமாடா நீ... .?” என்று கலங்கிய கண்களோடு கோபமாய் கேட்டாள்.

அவன் தலைகுனிந்தபடியே வேறு பக்கமாய்
பார்த்து கண்ணீர் விடும் குரலில், கெஞ்சல் மொழியாய் “ஹேய் திட்டாதடி” என்றான்.

“யாராச்சும் ஒரு பொண்ணுக்காக இவ்வளவு
கஷ்டப்படுவாங்களா.....?”

“பொண்ணுக்காக இல்ல என் பொண்டாட்டிக்காக”
என்று அவன் சொன்ன மாத்திரத்தில் அவள் அவனை இறுக்கமாக கட்டி கொண்டாள்.

அவனோ..”லேகா எல்லாரும் பார்க்கிறாங்க டி
தள்ளி போ” என்றான்.

“என் புருஷன தான் நான் கட்டி பிடிச்சிருக்கேன், யார் பார்த்தா என்ன..?” என்று சொல்லி அவனை விட்டு 2அடி விலகி நின்றாள்.

அவன் அழுகையும்,சிரிப்புமாய் “இப்ப என்ன
சொன்ன திரும்பி சொல்லு, சொல்லு டி..?”

“சொல்ல முடியாது” என்று அவனை விட்டு பின்னோக்கி நகர்ந்தாள்.

“ஹேய் ஒரு தடவை சொல்லிட்டு போ டி ......
மாமா நீங்க கேட்டீங்கள்ல,அத்தை நீங்க
கேட்டீங்கள்ல” என்றான்.

“டேய் அத்தையை வர சொல்லு, நாம
கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று சொல்லி
ஆனந்தமாய் அவள் அறைக்கு போனாள் சித்ரலேகா.

வீட்டில் உள்ள அனைவரும் வேலனுக்கு
வாழ்த்து தெரிவித்தார்கள்.

அடுத்த நாள் காலையில் சித்ரலேகா வழக்கம்
போல் அறையை விட்டு வெளியே வரும்போது
எல்லோரும் பரபரப்பாய் அவளை கண்டும்
காணாதவாறு சென்றனர். அவளும் வேலன்
விஜயகுமாரை தேடினாள். ஆனால் அவன் அங்கு இல்லை.பின் சஹானாவிடம் சென்று
“வேலா எங்க..?”

“ஹோ மாமாவா மேல மாடியில இருக்காரு.”

“நான் கேட்டது உன் அண்ணன..”

“அண்ணன் ஊருக்கு போயிருக்கார் அண்ணி”

“எப்ப போனான்...? என்கிட்ட சொல்லவே இல்ல”

“அவர் 3.30மணி ஃப்ளைட்ட பிடிக்க நைட்
2மணிக்கு கிளம்பி போனார்” என்று சொல்லி கடந்து போனாள் சஹானா.

சித்ரலேகா அவள் அறைக்கு சென்று அமர்ந்து
“தங்கச்சியை 2 மணிக்கு எழுப்பி சொல்லிட்டு போக தெரியுது.. எனக்கு ஒரு மெசேஜ் கூட போடாம கிளம்பிட்டல்ல உன்ன பார்த்துக்குறேன்” என்று
மொபைல் போனில் அவன் போட்டோவை பார்த்து திட்டி கொண்டிருந்தாள்.

அப்பொழுது சஹானா அவள் பின் நின்று ஒரு
ஸ்மைலி ஸ்பாஞ்சு ரெக்கார்டிங்கை ஆன் செய்தாள்.
“பொண்டாட்டி திட்டாத டி ஃப்ளைட்டுக்கு
கிளம்பும் போது உன் ரூம்க்கு வந்தேன் நல்லா
தூங்கிட்டு இருந்த குழந்தை மாதிரி அதான் எழுப்பி சொல்லாம கிளம்பிட்டேன்.இன்னும் 2 நாள்ல நம்ம ஆர்.வி. கம்பெனியோட
25வது-அனிவெர்சரி ஃபங்க்சன் நம்மோட
நிச்சயதார்த்தமா இருக்கணும்
அதுக்காகதான்-அம்மாவ
கூப்பிடறதுக்காக போரேன் ,எக்ஸ்ட்ரா லீவு அப்ளை பண்ணிட்டு
வந்துர்றேன் டி.....அப்புறம்
உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன் பொண்டாட்டி பை..”என்று ரெக்கார்டிங்
முடிந்தது.

இதை கேட்ட சித்ரலேகா சஹானாவை கட்டி
கொண்டு “நீ என்னோட பஃட்டி டி.

“நீ என்னோட டெடி டி” என்று
கொஞ்சினாள் சஹானா.

2 நாளுக்கு பின்...அனைவரும்
அனிவெர்சரி பார்ட்டிக்கு கிளம்பினர்.
அப்போது சஹானாவிடம்
“ஹேய் பஃட்டி இன்னைக்கு ரெட் டிரஸ்ல செம
அழகா இருக்க” என்றாள் சித்ரலேகா.

“நீயும் தான் டெடி செமயா
இருக்க, அண்ணன் பார்த்தாரு அவ்ளோதான்......”

“யாரு உன் அண்ணன் தான 2நாள்ல வர்றன்னா இன்னும் ஆள காணோம்.....டிசிப்ளினே இல்ல”

“அண்ணன் வந்தா நல்லா சாத்துங்க” என்றாள்
சஹானா.

இவர்களும் கிளம்பிய பின்...சக்தி வீட்டை
பூட்ட வேகமாய் ஓடி வந்தான் வேலன் விஜய்குமார்.

“டேய் மாப்ளை வாடா ஏன் லேட்..?”

“ஃப்ளைட் லேட் மச்சான்,ஆமா
என் பொண்டாட்டி எங்கடா...?”

“இப்பதான் போனா டா ஹேய் வேலா அது சரி அது என்ன பாக்கெட்ல”என்று வேலனின் கால்சட்டை பாக்கெட்டை பார்த்து கேட்டான் சக்தி.

“இது உன் தங்கச்சியை பயமுறுத்த டம்மி பாம்பு டா”என்றான் மாப்ள வேலன்.

“அவள கலாட்டா பண்ணாம இருக்க மாட்ட சரி வா போலாம்” என இருவரும் பைக்கில் பயணமாக

“டேய் உன் கூட என் தங்கச்சியும், என் கூட உன் தங்கச்சியும் பைக்கில வந்தா எவ்வளவு நல்லா இருக்கும்,ஏதாவது ஏற்பாடு பண்றா மச்சான்” என்றான் வேலன்.

“டேய் நான் அவளுக்கு அண்ணன் டா மறந்துராத” என்றான் சக்தி.

இவர்கள் பேசி கொண்டு போக,இவர்களுக்கு முன்னால் சென்ற சித்ரலேகாவின் வண்டியை கவிழ்த்து சஹானாவை தூக்க அகர்சன் ரௌடிகளோடு முயற்சி செய்தான்.
அந்த நேரம் வேலனும், சக்தியும்
சென்று அகர்சனோட சண்ட போட்டு சஹானாவை காப்பாற்றினர்.

சக்தி அகர்சன் சட்டையை பிடித்து
“எத்தன தடவை டா உன்ன
அடிக்கிறது,விருப்பமில்லாத
பொண்ணு கட்டுன பொண்டாட்டியா இருந்தாலும் பார்க்க கூடாது...நான் இன்னொரு தடவை அவ பின்னாடி உன்ன பார்த்தேன் செத்துருவடா நீ” என்று
அவனை தள்ளிவிட்டு பைக்கில் ஏறினான் சக்தி.

“சஹானா நீ என் கூட வா...
சித்ரா நீ மாப்ளைய கூட்டிட்டு வா” என்று சொல்லி போனான் சக்தி.

“மச்சான்......மச்சான்தான் போலாமா மேடம்”என்றான் வேலன்.

லேகாவும் வேலனும் பைக்கில் செல்ல செல்ல
“மேடம் 2நாளாச்சு.... திட்டு வாங்கி லேகா
ஒன்னும் பேச மாட்டீங்களா..”

“சொல்லாம போனவங்கட்ட எல்லாம் நான் பேசறதில்ல”

“அட சஹானா கொடுக்கவே இல்லையா...சரி
இந்த டிரஸ் உனக்கு உண்மையாவே பிடிச்சிருக்கா..”

“ஏன் ..?கேட்குற”

“இது நான் தான் உனக்கு செலக்ட் பண்ணுனேன்.”

அவள் சிரித்தவாறே எதுவும் பேசாமல் வண்டியை ஓட்டினாள்.

பின் பார்ட்டி ஹாலில் சித்ரலேகா-வேலன்
நிச்சயதார்த்தம் 4 நாட்களுக்கு பின் இதே ஹாலில் நடைபெறும் என்று சித்ராவின் அப்பா வேலன் அறிவித்தார்.

வேலன் விஜயகுமார் லேகாவை அழைத்தவாறே அவள் பின் சென்றான்... அவளை பிடித்து ஒரு
தூணோடு சேர்த்து நிறுத்தினான்.

“என் கூட பேச மாட்டியா லேகா.....”

“சார் எப்பவும் என்ன பெயர் சொல்லிதான்
கூப்பிடுவீங்கள்ல.........”

“ஹேய் பொண்டாட்டி என்னடி கோபம் உனக்கு...”

“2 நாளாச்சு ..ஒரு போன் கால் இல்ல,மெசேஜ்
எதுவுமில்ல,உன்கிட்ட எதுக்கு பேசணும்.”

“நான் இருந்த இடத்துல சிக்னல் இல்ல டி.”

“சரி அத்தை எங்க .....?ஏன் அவங்க வரல...”

“அம்மா எல்லையில கேம்ப்ல இருக்காங்க
4 நாள் ஆகும் அவங்க வர்றதுக்கு..”

“இன்னும் எவ்ளோ நாள்தான் பிரிஞ்சு
இருக்கணுமோ” என்றாள் சித்ரலேகா.

“4நாள் மட்டும்தான்” என்றான் வேலன்.

“அதெப்படி நிச்சயதார்த்தம் தான
அப்பா சொன்னார்”.

அவள் கைகளை பிடித்தபடி“எங்கம்மா வர்ற
நாள் நம்ம கல்யாண நாளா இருக்கும் “என்று சொல்லி விட்டு அவளை விட்டு பின் நகர்ந்து சென்றான் வேலன்.

“அதெப்படி டா நடக்கும்....”

“உன் கழுத்தை பாரு டி...”

“டேய் என் செயின் எங்க டா..?”

“என்கிட்ட தான் இருக்கு” என்று ஓட ஆரம்பித்தான்.

“என் செயின கொடு றா” என்று துரத்தினாள்.

“அத்தை காப்பாத்துங்க” என்று ஒவ்வொருவர்
பின் ஒளிந்து ஓடினான்,அவளும் அவனை விடாது துரத்தினாள்.

“ஏய் பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் நீ என்ன டான்ஸ்
ஆடி ஜெயிச்சா உன் செயின் உனக்கு” என்றான்
வேலன்.

பாடல் டி.ஜே. போட
சக்தி,சஹானா,சித்ரலேகா, வேலன்
என சேர்ந்து நடனமாட... நடனத்தின் மத்தியில் “என் செயின
எப்படா தருவ” என்று கேட்டாள் லேகா.

“உன் கழுத்தை பாரு டி” என்றான் வேலன் ஆடி
கொண்டே...

அதே நேரம் பாட்டி ஸ்ரீலேகா டிரஸில் ஜுஸ்
தவறுதலாய் பட்டு கறையாக அதை கழுவ பார்ட்டி ஹாலை விட்டு தள்ளி போனாள்.

“டேய் இது என் செயின் மாதிரியே இருக்கு ஆனா என்னோடதில்ல” என்றாள் சித்ரலேகா.

“ஆமா டி உன் பழைய சி.எல்.வி செயின்
அந்த வேலன் போட்டது என்று அவள் அப்பாவை கை காட்டினான்.இந்த புது சி.எல். வி -செயின் இந்த வேலன் போட்டது” என்று ஆடிக் கொண்டே பதில் சொன்னான்.

“என் பழைய செயின் எங்கடா..”என்று அவளும்
ஆடிக்கொண்டே கேட்டாள்.

வேலன் சட்டையின் காலரை எடுத்து விட்டு
அவளின் பழைய செயினை காட்டினான்.

“திருடன் டா நீ” என்றாள்.

“இதே மாதிரி தாலியையும் உன் கழுத்துல
போட்டுருவேன் டி” என்று அவர்கள் மகிழ்வாய்
நடனமாடும் நேரத்தில்..

அகர்சன் அங்கு வந்து சஹானாவை
இழுத்தான்,அகர்சனின் நண்பன் சஹானா தாத்தா கழுத்தின் மீது கத்தியை வைத்து மிரட்டினான்.

“என்ன இப்பவே கல்யாணம் பண்ணிக்கோ”
என்றான் அகர்சன்.

“கல்யாணம் பண்ணிக்கிறேன் தாத்தாவை விடு” என்றாள் சஹானா.

“நான் தாலி கட்டுனதும்தான் அவன் விடுவான்”
என்று சொல்லி கொண்டு திரும்பி அவன் நண்பனின் பாக்கெட்லிருந்த தாலியை எடுத்துகொண்டு தாலியை விரித்து பிடித்த படி அவளை நோக்கி நடந்தான் அகர்சன்.

“டேய் டி.ஜே. கல்யாண கெட்டிமேளம் சாங் போட்றா என் நண்பன்
தாலி கட்ட போரான்” என்று கத்தினான் அகர்சனின் நண்பன்.

சக்தி , வேலன் விஜயகுமாருக்கு கண் சைகை
காண்பித்து கைகளை பாம்பு போல் மடக்கி
காட்டினான்.வேலனும் அதை புரிந்து கொண்டு கண் சைகை செய்தான்.

அகர்சன் தாலியொடு அருகில் வந்ததும் சஹானா ‘வாழ்க்கை முடிந்தது’ என்று கண்களை மூடினாள்.

வேலன் டம்மி பாம்பை அகர்சன் மீதும்,அகர்சன்
நண்பன் மீதும் போட அகர்சன் நண்பன் தாத்தாவை விட,அகர்சன் பயத்தில் அலறி தாலியை தூக்கி போட

அதை பிடித்து கண்ணிமைக்கும் நொடியில் சஹானா கழுத்தில் சக்தி தாலி கட்ட அலறல் சத்தத்தால் சஹானா கண்களை திறந்த போது சக்தி 3வது முடிச்சை போட்டு அகர்சனை பார்க்க திரும்பி இப்ப
“நான் தான் அவ மாப்ளை” இப்ப அவள தொடுறா பார்க்கலாம்” என்று அகர்சனை எட்டி உதைத்து தள்ளினான்.

சஹானா அதிர்ச்சியாய் தலைகுனிந்து தாலியை தூக்கி பார்த்தாள்.

அகர்சனையும், அவன் நண்பனையும் அடித்து
வெளியே துரத்தினர் சக்தியும்,மாப்ளைவேலனும்.

இதையெல்லாம் பார்த்த பாட்டிஸ்ரீலேகா பர்தாவை கழட்டி எறிந்து வேகமாய் படியிறங்கி வந்து சக்தியை ஓங்கி ஒரு அறை அறைந்தாள்.

அம்மாவை பார்த்த அதிர்ச்சியில் ரேணுகா மற்றும் அப்பா வேலன்.

“யாரை கேட்டு என் பேத்தி கழுத்துல தாலி கட்டுன” என்றாள் பாட்டி.

“நான் கட்டலன்னா அவன் கட்டியிருப்பான்
பரவாயில்லையா” என்று கத்தினான் சக்தி.

“அவ யாரு அவ ஸ்டேட்டஸ் என்னன்னு தெரியுமா டா உனக்கு......”

“சஹானா” என்று கூப்பிட்டான் சக்தி.

“அவ சஹானா இல்ல
சுஹானா சுரேந்திரன், ஸ்ரீலேகாவோட பேத்தி....ஐ அம் ஸ்ரீலேகா
ரேணுகாவோட அம்மா” என்றாள்.

மிகுந்த அதிர்ச்சியால் அப்படியே உறைந்து நின்றான் சக்தி.

“எதுனாலும் வீட்டுக்ககு போய் பேசிக்கலாம்” என்று ஸ்ரீலேகாவை அழைத்து சென்றார் தாத்தா.அனைவரும் வீட்டிற்கு போயினர்.
 
ரேணுகா வேலன் ரெண்டு பேரோட அழகான அன்பான வாழ்க்கையை பார்த்துமா இந்த ஸ்ரீலேகா கிழவி இன்னும் திருந்தல
 
ரேணுகா வேலன் ரெண்டு பேரோட அழகான அன்பான வாழ்க்கையை பார்த்துமா இந்த ஸ்ரீலேகா கிழவி இன்னும் திருந்தல
என்ன பண்றது சிலருக்கு சொன்னா புரியும், சிலருக்கு பட்டாதான் புரியும் நம்ம ஸ்ரீலேகா மேடமும் கதை முடியறதுக்குள்ள பட்டு புரிஞ்சுக்குவாங்க
 
Paravala lekha kullaiyum kadhal vanthuruchu.. Enna sakthi ippadi thali kattitay
Friend aa தப்பானவன்கிட்ட இருந்து காப்பாத்த தாலி கட்டிட்டார்
 
Top