GG writers
Moderator
ரேணுகா
வேலன்
(அத்தியாயம் -11)
வீட்டில்... “சுஹானா தாலியை கழட்டு மா,இவன் வேண்டாம்”என்றாள் பாட்டி.
“ஸ்ரீலேகா அமைதியாயிரு....” என்றார் தாத்தா
“நீ கழட்டலன்னா நான் கழட்டுறேன்” என்று தாலி மீது கை வைத்த ஸ்ரீலேகாவை பளார் என அறைந்தார் தாத்தா.
“நீ இப்ப கோடீஸ்வரி ஸ்ரீலேகா இல்ல, என் மனைவி ஸ்ரீலேகா அதான் அடிச்சேன்,உன்ன முன்னாடியே நான் அடிச்சிருந்தா..என் மகளை இத்தன வருஷம் பிரிஞ்சிருந்திருக்க மாட்டேன்...இப்ப என்ன உனக்கு...ரேணுகா பையன் தான தாலி கட்டியிருக்கான்” என்றார் தாத்தா.
“அவன் சுஹானாவுக்கு சரியானவன் இல்ல ..” என்றாள் பாட்டி ஸ்ரீலேகா.
சக்தியின் அப்பா வேலன் ஸ்ரீலேகாவின் முன் கையெடுத்து கும்பிட்டு “அத்தை தப்பு என் பையன் மேலதான் நீங்க என்ன முடிவெடுத்தாலும் நாங்க கட்டுப்படறோம்.”
“நீ கையை இறக்கு அப்பா...எனக்கு சுஹானா வேண்டாம்..”என்றான் சக்தி.
“நீ என்னடா வேணாங்கறது.... என் பேத்தி என் சொத்து இல்லாம சுய-சம்பாத்தியமா 1700 கோடி வச்சிருக்காடா..உன்கிட்ட என்னடா இருக்கு.?”
“ஏய் ஸ்ரீலேகா ஏற்கனவே உறவுன்னு சுதர்சன் மூத்த பையன் கோடீஸ்வரனதான பேத்திக்கு பார்த்த கல்யாணம் நடந்துச்சா..?” என்றார் தாத்தா.
“எனக்கு சுஹானா வேண்டவே வேண்டாம்” என்று கத்தி கொண்டே படி ஏறி போனான் சக்தி.
“அவன் வேண்டான்னு சொன்னாலும் நீ அவன் கூடதான் வாழணும் சுஹானா” என்றார் தாத்தா.
பின்னும் ஸ்ரீலேகா “நீ வா சுஹானா நாம நம்ம வீட்டுக்கு போலாம்.”
“எங்க கூப்பிடற... சுஹானாவ..அவ உன்கிட்ட கேட்ட 45நாள்ல 20 நாள்தான் முடிஞ்சிருக்கு.இன்னும் 25நாள் நாம இங்கதான் இருக்கணும்” என்றார் தாத்தா.
அனைவரும் கலைந்து போயினர்.
அடுத்த நாள் வீடே அமைதியாய் இருந்தது.சுஹானாவிடம் சக்தியை தவிர எல்லோருமே “ஏன் உன்ன பத்தி சொல்லாம இருந்த” என்று கசப்பாய் கடந்து போயினர்.யாரும் அவளிடம் பேசவில்லை....
சுஹானா சக்தியை தேடி போனாள். சக்தியிடம் பேச ஆரம்பிக்கும் போது
“சஹானா என்ன விட்டு போ...” என்றான் சக்தி.
“நான் சுஹானா , நான் சொல்றதை கேளு சக்தி”
“ஏய் பேசாமபோயிடு..என் கண் முன்னால
நிக்காத” என்று கோபமாய் திரும்பி நின்றான்.
“நான் சொல்றதை ஒரு தடவை கேளு........”
“ஏய் கேட்க முடியாது டி...” என்று ஆவேசமாய் அருகில் இருந்த அலங்கார விளக்கை தன் கைகளால் உடைத்தான்.கையில்இரத்தம் வழிந்தது.
சத்தம் கேட்டு ரேணுகா வந்து பார்த்து “என்னடா சக்தி இது....?”
“அவள போ சொல்லு மா..அவள பார்த்தா நான்
அவகிட்ட ஏமாந்தது தான் மா ஞாபகம் வருது,ஏன் மா சொல்ல மாட்டேன்ற. ஹோ உன் அண்ணன் பொண்ணு இல்ல..”என்று சொல்லி வேகமாய் இன்னொரு அலங்கார விளக்கை இரத்தம் வழியும்கைகளாலே மீண்டும் உடைத்தான்.
ரேணுகா பதறி சுஹானாவை “வெளியே போ”என்று சொல்லி வேகமாய் தனியே அழைத்து போய்.. “தயவு செய்ஞ்சு என் அம்மா கூட நீ போயிடு,அவன் உன் கூட வாழ மாட்டான் சுஹானா,எனக்கு பயமா இருக்கு அவனையே அவன் ஏதாவது செய்துக்குவானோன்னு” என்றாள்.
மாமா வேலனும் ரேணுகாவோடு சேர்ந்து “உன் பாட்டி சொல்றதை கேளு மா” என்றான்.
சுஹானா அமைதியாய் போனாள்.
சித்ரலேகா-வேலன் நிச்சயதார்த்த வேலையை ஒவ்வொருவரும் பார்க்க ஆரம்பித்தனர்.
மாடியில் சுஹானா தாத்தாவிடம் கண்ணீரோடு...
“என் வாழ்க்கை மட்டும் ஏன் தாத்தா இப்படி
இருக்கு..?அம்மா, அப்பா இல்ல இந்த வீட்டுக்கு
அத்தை,மாமாவ பார்க்க வந்தேன்,நான் யாருன்னே
தெரியாம வந்தப்ப என்ன சொந்தம் மாதிரி
பார்த்துக்கிட்டாங்க.மாமா, அத்தை, அண்ணன்,ஃப்ரண்ட்
அண்ணின்னு எத்தன உறவு எனக்கு , நல்லா
இருந்துச்சு,இப்ப நான் அவங்க உண்மையான
சொந்தமா நிற்கிறேன் என்ன ஒருத்தர் கூட
ஏத்துக்கலையே” என்று அழுதாள், “நான் என்ன
தாத்தா தப்பு பண்ணினேன்...?” தாங்காமல் அதிகமாய் கதறி அழுதாள்.
“அழாதம்மா.. குடும்பம்ன்னா இப்படிதான்
இருக்கும், எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது.”
“நாம போலாம் தாத்தா இந்த வீட்டை விட்டு”
“அப்படி சொல்லாத சுஹானா உன் கல்யாண
வாழ்க்கை மா..”
“எனக்கு நடந்தது கல்யாணமில்ல
விபத்து தாத்தா,போலாம் தாத்தா என்னால இருக்க முடியல..”
“சுஹானா தாத்தாவுக்காக இன்னும்
20நாள் மட்டும் இங்க இருடா..”
“தாத்தா என்னால முடியல ப்ளீஸ் போகலாம்.”
தாத்தா சுஹானாவின் முன் மண்டியிட்டு
“சுஹானா உன்ன கெஞ்சி கேட்கிறேன் மா... இது உன் புகுந்த வீடு..... நீ இந்த வீட்டு மருமகடா...உன்ன
எல்லாரும் ஏத்துக்குவாங்க, எனக்காக
பொறுமையாயிரு” என்று கண்ணீரோடு வேண்டி
கொண்டார்.
சுஹானா தாத்தா முன் மண்டியிட்டு
“உங்களுக்காக இருக்கேன். ஆனா இனி வர்ற 20
நாளும் என் கண்ணீரை தான் நீங்க
பார்ப்பீங்க..”என்றாள்.
சித்ரலேகா-வேலன் நிச்சயத்திற்கு அனைவரும்
கிளம்பி போயினர்.
ஸ்ரீலேகாவோ “மனசு சரியில்லை நான்
நம்ம வீட்டுக்கு போரேன் 20நாள் கழிச்சு சுஹானா
உன்ன கூப்பிட வர்றேன்” என்று கிளம்பினாள்.
தாத்தா ஸ்ரீலேகாவை கொண்டு விட இரயில் நிலையம் சென்றார்.
சிறிது நேரத்திற்கு பின்....மண்டபத்தில் வேலன்
விஜயகுமாரின் அம்மா சக்தி கையில் பையுடன்
உள்ளே வந்தாள். அவள் முகம் எல்லாம் கோபமாய்
மாறி மேடைக்கு சென்று சித்ராவை விட்டு வேலன்
விஜயகுமாரை தரதரவென்று தனியே இழுத்து
கொண்டு போனாள்.
மகன் வேலனோ
“அம்மா,என்னம்மா நீ மேடைக்கு வா” என்றான்.
“இந்த கல்யாணம் உனக்கு வேண்டாம் வா....”
“சக்தி விளையாடாத மாப்ளைய விடு” என்றான்
அண்ணன் வேலன்
“நான் சக்தி இல்ல மாப்பிள்ளையோட
அம்மா, உன்னோட சம்மந்தி....”என்று
சொல்லியவாறே தன் மகனை இழுத்து சென்றாள்.
“அம்மா என்னம்மா.... உனக்கு தெரிஞ்சுதானே
எல்லாமே பண்ணுனேன்... சொல்லுமா...”
“எனக்கு அவள பிடிக்கல,”என்று பின் நின்ற
சித்ரலேகாவை கை காட்டினாள்.
“என்னம்மா பிடிக்கல நான் எல்லாமே
உன்கிட்ட சொன்னேன்ல.....”
“என்ன டா சொன்ன..வீடு ரெஜிஸ்டர் ஆகி
போகும் போது எல்லாரும் கவலப்பட்டாங்க அவ
ஆபிஸ்க்குத்தான் போனா, ரேணுகாவுக்கு ஸ்பைனல் கார்டுல அடி அப்பவும் ஆபிஸ்க்குதான் போனா..அவ இன்னைக்கும் ஆபிஸ் போயிட்டுதான்
வந்திருக்கா..ரிலேசன்ஷிப் வேல்யூவே
தெரியாத இவ எனக்கு மருமகளா...டா. வாடா” என்று அவன் வலது கையை பிடித்து இழுத்து நடந்தாள் சக்தி.
“அம்மா,அம்மா,நான் சொல்றதை கேளு மா, ஒரு
பொண்ண நிச்சய மேடை வரை கூட்டிட்டு வந்து
ஏமாத்தறது தப்பு மா” என்று கண்ணீரோடு
கெஞ்சினான்.
அப்போது சித்ரலேகா அவன் இடது
கையை பிடித்தாள்.
“வா நாம போலாம் ... எங்க வாழ்க்கையை முடிவு
பண்ண நீங்க யாரு..ஒரு மரியாதைக்காகதான் உங்கள கூப்பிட்டோம்...நீங்க இருந்தாலும், இல்லன்னாலும் எங்க நிச்சயமும் நடக்கும்,எங்க கல்யாணமும் நடக்கும்”
என்றாள் சக்தியை பார்த்து சித்ரலேகா.
“ஒரு நிமிஷம் என் கையை விடு அம்மா”
என்றான் வேலன் விஜயகுமார்.
சக்தி கையை விட்ட மாத்திரத்தில் ஒரே அறை
ஓங்கி சித்ராவை அறைந்தான்.
“ஏய் என் அம்மா இருந்தாதான் நிச்சயம் ..என்
அம்மா உனக்கு ஒகே சொன்னாதான் நான் உனக்கு
தாலி கட்டுவேன்..என்ன..? புரிஞ்சுதா...”என்று கேட்டு தன் அம்மா பக்கம் திரும்பி “நீ சொன்னது கரெக்ட் மா ரிலேசன்ஷிப் வேல்யூ தெரியல” என்று சொல்லி தன் கழுத்தில் உள்ள பூ மாலையை தூக்கி வீசி விட்டு,அவன் சக்தியின் கையை பிடித்து
முன் நடந்து வெளியேறினான்.
குடும்பத்தில் அனைவரும் உடைந்து போயினர்.
அத்தை சக்தி, வேலன் விஜயகுமாரும்
வேலனின் கார்மெண்ட்ஸ் கோட்ரஸில் போய்
இருந்தனர். வேலன் விஜய்குமார்
மன அமைதிக்காக
தனியே வெளியே போனான்.அம்மா சக்தி அதிக மன அழுத்தத்தில் இருந்தாள். அவளை பார்க்க ரேணுகாவும் அவளது அண்ணன் வேலனும் வந்தனர்.
“சக்தி ஏன் டி இப்படி பண்ற...”என்றாள் ரேணுகா
“சக்தி இல்ல சம்மந்தி அம்மா” என்றான்
கண்ணீருடன் வேலன்.
“டேய் அண்ணா வேணாம், உங்க 2பேர்
மேலதான் நான் கொலவெறில இருக்கேன்” என்றாள் சக்தி.
“சக்தி என் பொண்ணோட வாழ்க்கை டி.....” என்று கையெடுத்து கும்பிட்டு அழுதாள் ரேணுகா.
“ஏய் நிறுத்து டி..உனக்கு மட்டும் தான்
பொண்ணு இருக்கா..என் பொண்ணு வாழ்க்கைய நீ பார்த்தியா டி..?”
“உன் பொண்ணு யாரு சக்தி...?”
“சுஹானா எனக்கு மக முறைதான அவளைதான் என் பொண்ணுன்னு சொன்னேன் .....மனுஷங்களாடி நீங்க 2 பேரும்..”
“சக்தி சுஹானா பத்தி எப்படி உனக்கு தெரியும்”
“ஏய் அவ வாழ்க்கைக்கு என்ன பதில் சொல்ற”
என்று கேட்டாள் சக்தி.
“நான் என்ன சொல்ல முடியும்” என்றாள்
ரேணுகா.
“ஹேய் மனசாட்சியிருக்காடி உனக்கு..அவ உன்
அண்ணன் பொண்ணு,அவ சக்தியை கல்யாணம்
பண்ற ப்ளான் ல வரல.உன் டைரியை படிச்சிட்டு
அத்தைய பார்க்கணும்,மாமாவ பார்க்கணும் பாட்டி கூட சேர்க்கணும் குடும்பம் ஒன்னா இருக்கணும்னு
நினைச்சவடி”
மௌனமாய் இருந்தாள் ரேணுகா.
“ஆனா ஸ்ரீலேகா அத்தை தான் சொன்னாங்க”
என்று வேலன் பேச தொடங்க..
“டேய் நிறுத்துடா..ஸ்ரீலேகா மேடம்
சொல்றதைதான் நீ கேட்ப..ரேணுகாவ கூடதான்
வேணான்னு சொன்னாங்க நீ விட்டுட்டியா
டா...பேசறான் பேச்சு”
.
“சக்தி-சுஹானாவுக்காக, சித்ரலேகா வேலன ஏன்
பிரிச்ச” என்று கேட்டாள் ரேணுகா.
“காரணம் இருக்கு டி..உனக்காக நான்
நின்னேன்ல ..ஏன் சுஹானாவுக்காக சித்ரலேகா
வரல, ஏன் லேகா துணையா நிற்கல.?”
“நம்மள மாதிரி எல்லாரும் இருக்க மாட்டாங்க
சக்தி” என்றாள் ரேணுகா.
“எல்லாரும் நம்மள மாதிரி இருக்கணும்னு
அவசியமில்ல..நம்ம பிள்ளைங்க நம்மள மாதிரிதான் இருக்கணும்”.
“சக்தி-சுஹானா கல்யாணம் விபத்து டி,அவங்க
2பேரும் சம்மதிச்சிருந்தா நாங்க ஏன் பிரிக்க
போறோம்” என்றான் வேலன்.
“உன் பையன் சுஹானாவ காப்பாத்தணும்னு
நினைச்சிருந்தா எப்படி வேணாம்
காப்பாத்தியிருக்கலாம்... விரும்புனதாலதான் தாலி கட்டுனான்”.
“சுஹானா மனசு தெரியாம நான் என்னடி செய்ய
முடியும்” என்றாள் ரேணுகா.
“நீ கேட்டியா சுஹானாகிட்ட.,இல்ல ல., ஏன்
கேட்கல பையன் பாசம் உனக்கு அதான் அவ
சொல்றதை நீ கேட்கவே இல்ல.., ரேணுகா நீ வந்த
வழியை மறந்துராத...”
“நீ ஏன் சுஹானாவுக்கு இப்படி சப்போர்ட்
பண்ற?”
“ஏன்னா அவள நினைக்கும் போது எனக்கு அவ
இன்னொரு ரேணுகாவா தெரியுறா..”என்றாள் சக்தி.
“ஊர்ல இருந்து வரும்போது சந்தோசமா வந்தேன்,எல்லா உறவுகளும் ஒன்னா
இருக்கோம்னு,இங்க வந்து பார்த்தா ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு மூலை.குடும்பத்துல ஒரு பிரச்சனைனா எல்லா உறவுகளும் துணையா
இருக்கணும்.சக்திக்குதான கோபம்
உங்களுக்கென்ன, சித்ரலேகாவுக்கு என்ன,கடைசில என் பையனும் சேர்ந்து உங்க கூட சுயநலமா நிற்கிறதை பார்க்கும் போது என்னால தாங்க முடியல
டி” என்று சொல்லும் போதே சுஹானாவின் தாத்தா
தூரத்தில் வருவதை பார்த்த சக்தி..ரேணுகா, வேலனை உள் அறையில் அடைத்து “வெளியில என்ன நடக்குதுன்னு மட்டும் 2பேரும் வாயை மூடி கேளுங்க” என்று கதவை மூடினாள்.
“என்னம்மா சக்தி இப்படி பண்ணிட்ட நான்
சுஹானா பத்தி மனசு கேட்காமதான் ரயில்வே
ஸ்டேசன்ல உன்கிட்ட சொன்னேன்,நீ இப்படி
பண்ணிட்டியே லேகாவும்,வேலனும் பொருத்தமான
ஜோடி நீ வா சேர்த்து வை மா...அதுக்குதான் உன்ன
பார்த்து பேச சுஹானா வந்திருக்கா...சுஹானா உள்ள வாம்மா” என்று தாத்தா வெளியே பார்த்து அழைத்தார்.
“வணக்கம்ங்க நான் சுஹானா” என்றாள் அத்தை
சக்தியிடம்..
“நீ சக்தியோட மனைவிதான” என்றாள் அத்தை சக்தி.
“நான் லேகா பத்தி பேச வந்தேன்”
“என்ன பேச போற...”
“சித்ரலேகா நீங்க நினைக்கிற மாதிரி
இல்ல..அவ பாசத்தை நம்மள மாதிரி எதார்த்தமாக
வெளிய சொல்ல மாட்டாளே தவிர மனசளவுல
தங்கமானவ,உங்களையும், அண்ணனையும் நல்லா பார்த்துக்குவா,என் மாமா,அத்தை அவள நல்லா வளர்த்திருக்காங்க,நீங்க அவ கூட பழகுனா
தெரிஞ்சுக்குவீங்க.”
“ஹோ......உன் நாத்தனார் இல்ல அதான்
சப்போர்ட் பண்ற” என்றாள் சக்தி.
“அப்படியில்ல சக்தி தாலி கட்லன்னாலும் அவ
எனக்கு அண்ணி தான்,அவ என்னோட அத்தை
பொண்ணு அவ வாழ்க்கை இப்படி கஷ்டத்துல
இருக்கும் போது நான் வராம வேற யார்
வருவாங்க.. நீங்க என்ன சொன்னாலும் நான்
கேட்கிறேன் அவங்கள சேர்த்து வைங்க ப்ளீஸ்” என்று கையெடுத்து கும்பிட்டாள் சுஹானா.
சக்தி ஒரு நிமிடம் கண் கலங்க..”எனக்கு ரொம்ப
சோர்வா இருக்கு,நாளைக்கு நான் உன்கிட்ட
பேசறேன்,இப்ப நீ வீட்டுக்கு போ” என்று இருவரையும் அனுப்பி வைத்து விட்டு,ரேணுகா-வேலன் அறைக்கதவை திறந்தாள்.
“சுஹானா சொன்னத கேட்டியா..? அவ என் மக
அவ அண்ணிக்காக வந்திருக்கா..... ஆனா நீங்க..?"
இருவரும் தலைகுனிந்தவாறு அறையை விட்டு
வெளியே சென்றனர்.
அடுத்த நாள் காலையில் மீண்டும் அத்தை
சக்தியை தேடி ரேணுகாவும், வேலனும்
வந்தனர்,அவர்களை பார்த்ததும் கோபமாய் வெளியே போனான் மாப்ளை வேலன் விஜயகுமார்.
சக்தி அவர்களை காணாது திரும்பி நின்றாள்.
“சக்தி என்ன பாரு என்கிட்ட பேசு” என்று
கூப்பிட்டாள் ரேணுகா.
அவர்களை பார்க்காமல் நேராய் கோபமாக
நடந்தாள் சக்தி.
“நாத்தனாரே”..... என்று கண்ணீரோடு
அழைத்தாள் ரேணுகா.
அவள் அழைத்ததும்
24வருடங்களுக்கு
முன் இரயில் நிலையத்தில் அவள் அழைத்தது
சக்திக்கு ஞாபகம் வந்து கண் கலங்க திரும்பினாள்.
ரேணுகா கையெடுத்து கும்பிட்டு “சாரி
நாத்தனாரே நாங்க பண்ணது தப்புதான்.உங்க
பொண்ண என் பையனோட சேர்த்து வையுங்க..”என்று
அவள் சொன்ன மாத்திரத்தில் சக்தி வேகமாய் வந்து அவளை கட்டி கொண்டாள்.தன் ஒரு கையால்
அண்ணனையும் தட்டி கொடுத்தாள்.
“அப்ப சித்ரலேகா-வேலன் விஷயம்” என்று
கேட்டாள் சக்தி.
“உன் மருமகளை கல்யாணம் பண்ணி
திருத்துவியோ,இல்ல அவள திருத்தி உன் மகனுக்கு கல்யாணம்
பண்ணி உன் மருமகளாக்குவியோ, அது உன் பாடு-அவ பாடு,எனக்கு என் மருமக என் பையனோட சேர்ந்தா போதும்”.
“அப்படி சொல்லுங்க என் அண்ணியாரே”
“ஆமா சக்தி இப்ப எப்படி சுஹானா சக்தியை
சேர்க்க போறோம்” என்று கேட்டான் அண்ணன்
வேலன்.
“அதுல ஒரு சிக்கல் இருக்கு சுஹானா மனசுல
என்ன இருக்குன்னு தெரிஞ்சா தான் அவங்கள சேர்க்க முடியும்” என்றாள் சக்தி.
“அதெல்லாம் சக்திதான் மா இருப்பான்” என்று
சிரித்து கொண்டே சொன்னார் சுஹானாவின் தாத்தா வாசலில் நின்று..
“மாமா உள்ள வாங்க” என்றாள் சக்தி.
“மாமா, வேலா நீங்க 2 பேரும் என்ன
நடந்தாலும் சுஹானாவுக்கு சப்போர்ட்டாக
இருங்க,ரேணுகா நீ என் கூடவே இருக்கணும்”.
“சரி என்ன பண்ண போற” என்று கேட்டாள்
ரேணுகா.
“இன்னும் 20நாள் என்ன எதுவும்
கேட்காத, நான் சொல்றதை மட்டும் கேளு” என்றாள்
சக்தி.,
அப்போது வேலன் விஜயகுமார் உள்ளே
வந்தான்.
“வாடா மாமா வீட்டுக்கு போலாம்” என்று
அழைத்தாள் சக்தி.
“லூசாம்மா நீ..இப்ப எதுக்கு மாமா வீட்டுக்கு, நேத்து அவர் பொண்ணு பேசும்போது உன் அண்ணன் வந்தாங்களா, அண்ணி வந்தாங்களா”
என்றான்.
“டேய் வேலா நான் சித்ரலேகாவதான்
வேண்டான்னு சொன்னேன்,ரேணுகா வேலன
சொல்லல.., அம்மாவுக்காக வாடா ப்ளீஸ்” என்றாள்.
அரைமனதாய்அம்மாவோடு கிளம்பி போனான்
அனைவரும் கிளம்பினர்.
ரேணுகா,வேலன்,அத்தை சக்தி மற்றும் வேலன்
விஜயகுமார் என அனைவரும் சேர்ந்து வீட்டிற்குள்
வருவதை கண்டு கோபமாய் பேச ஆரம்பித்தாள்
சித்ரலேகா.
“இவங்கள ஏன் வீட்டுக்குள்ள கூட்டிட்டு
வர்ற..இவங்களுக்கு இங்க என்ன வேலை...வெளிய
போக சொல்லு அப்பா” என்றாள்.
“ஹேய் இது என் வீடு டி...அவ என் நாத்தனார்
இங்க என் கூடதான் இருப்பா” என்று சத்தமாய்
கூறினாள் ரேணுகா.
“உன் மகள வேண்டான்னு சொன்னவங்க
உனக்கு வேணுமில்ல” என்றாள் சித்ரலேகா.
“ஆமா டி .அது உனக்கு அவளுக்குமான
பிரச்சனை..”என்று சொன்னாள் ரேணுகா.
“அவங்களுக்கு இங்க இடம்
கிடையாது.... அவங்க இங்க இருக்க கூடாது” என்று
தடுத்தாள் சித்ரலேகா.
“உனக்கு அவ்ளோ கஷ்டம்னா நீ என்
வீட்ட விட்டு வெளிய போ...அவ என் கூடதான்
இருப்பா” என்று லேகாவை தள்ளிவிட்டு அத்தை சக்தி
மற்றும் வேலன் விஜயகுமாரை உள்ளே அழைத்து
போனாள் ரேணுகா.
சித்ரலேகா அழுகை மற்றும் ஆத்திரத்துடன்
வேகமாய் அவள் அறைக்கு சென்றாள்.
அதன்பின் அத்தை சக்தி பேசுவதற்காக
சுஹானாவிடம் சென்றாள்.
“நேத்து ஏதோ உன் நாத்தனார் நல்லவன்னு
சொன்ன எப்படி பேசிட்டு போறான்னு
பார்த்தியா... உறவுகள் அன்புன்னா என்னன்னே
தெரியாதவ அவ,அவள நான் மருமகளா
ஏத்துக்கணும்?” என்று கேட்டாள் சக்தி.
“கோபப்படாதீங்க அவ நிச்சயம் நின்னு போன
கஷ்டத்துல பேசிட்டா அதை
பெரிசுபடுத்தாதீங்க..”என்று கையெடுத்து கும்பிட்டு
தயவாய் கேட்டாள் சுஹானா ..அதை தொடர்ந்து “ஒரு வாய்ப்பு கொடுங்க...அவ கண்டிப்பா மாறுவா ப்ளீஸ்”
என்று கெஞ்சினாள் சுஹானா.
“அவ மாறுவான்னு எதை வச்சு சொல்ற” என்று
கேட்டாள் சக்தி.
“அவ கண்டிப்பா உங்கள புரிஞ்சுக்குவா
இல்லன்னா, நான் புரிய வைப்பேன்” என்றாள் சுஹானா.
“நீயே வெறும் 20நாள் தான் இருக்க போற...”
“வெறும் நாட்களா பார்க்காதீங்க நிமிசமாய்
பாருங்க...1000நிமிசங்களுக்கு மேல எனக்கு வாய்ப்பு
இருக்கு அவளுக்கு புரிய வைக்கிறதுக்கு..” என்றாள் சுஹானா.
“சேலஞ்சு பண்றியா...?” என்று
கேட்டாள் அத்தை சக்தி.
“ஆமா சேலஞ்சு தான் ஆன்ட்டி
21வது நாள் நீங்க தாலி எடுத்து கொடுத்து
சித்ரலேகா-வேலன் கல்யாணம் நடக்கும்..” என்று
தைரியமாய் சொன்னாள் சுஹானா.
“உன் நாத்தனார் வாழ்க்கைக்காக நான் என்ன
கேட்டாலும் செய்வியா..”என்று கேட்டாள் அத்தை
சக்தி.
“செய்வேன்.....”என்றாள் சுஹானா
“உன் தாலி வேணும் இப்பவே கழட்டி கொடு”
என்றாள் சக்தி.
ஒரு நிமிடத்தில் சுஹானா முகம் மாறி
தாலியை தன் கைகளால் இறுக்கமாக பிடித்து
கொண்டாள் பத்திரமாக..
“என்னாச்சு தாலி சென்டிமென்ட்டா அப்ப
நானே கழட்டுறேன்” என்று சொல்லி அவளருகே
கைகளை கொண்டு சென்றாள் சக்தி.
ஒரு நிமிடத்தில் சட்டென சக்தி கையை தட்டி
விட்டாள் சுஹானா.. “சாரி ஆன்ட்டி இது ஒன்னு தவிர
நீங்க எது சொன்னாலும் செய்வேன்” என்றாள்
கலக்கமாக..
அத்தை சக்தி மனதினுள் “அப்படி சொல்லு டி என் மகளே நீ தான் டி அடுத்த ரேணுகா, உன்ன ரேணுகா வேலன் மாதிரி வாழ வைக்காம விடமாட்டேன்
சேலஞ்சு டி மகளே ’என்று நினைத்தவாரே
“பயந்துட்டியா இப்ப ஒரு நிமிசம் உன்
நாத்தனார் பத்தி யோசிச்சியா..? இல்லல்ல இதே மாதிரி
வரப் போற 20 நாளும் நீ அவங்கள சேர்க்க
நினைக்கறப்ப உன் வாழ்க்கைய உனக்கு காண்பிச்சு
உன்ன டைவர்ட் பண்ணுவேன்..
சேலஞ்சுல உன்ன ஜெயிக்க விட
மாட்டேன்” என்றாள் சக்தி.
அப்போது வேலன் வீட்டிற்கு
அமேசானிலிருந்து அத்தை சக்தி ஆர்டர் செய்த
10கூலிங் கிளாஸ் உடைய பாக்ஸை டெலிவரி செய்ய
வந்தான் கொரியர்மென்.அதை வேலன் விஜயகுமார்
பணம் செலுத்தி கையெழுத்திட்டு வாங்கி கொண்டு
அம்மா சக்தியிடம் வந்தான்.
சக்தி அந்த கூலிங் கிளாஸ் பாக்ஸிலிருந்து
ஒன்றை எடுத்து துடைத்தவாறு பேசினாள்.
“மகளே..நீ மாமியார் கொடுமை பார்த்திருப்ப
நாத்தனாரோட மாமியார் கொடுமையை பார்த்திருக்க, இனி பார்ப்ப” என்று கூலிங்கிளாஸை கண்களில்
மாட்டி திரும்பி நடந்தாள்.
“ஒரு நிமிஷம் நாத்தனாரின் மாமியாரே..நீங்க
நாத்தனார் கொடுமை பார்த்திருப்பீங்க..அண்ணி
கொடுமை பார்த்திருக்கீங்க..பார்த்திருக்கமாட்டீங்க ஏன்னா உங்களுக்கு தான் நல்ல அண்ணியாச்சே , இனி நாத்தனார் வாழ்க்கைக்காக இந்த
அண்ணி என்ன எல்லாம் கொடுமை செய்யறேன்
பாருங்க” என்று சுஹானாவும் ஒரு கூலிங் கிளாஸை எடுத்து அவள் கண்களில் போட்டு திரும்பி கெத்தாய் சென்றாள்.
அத்தை சக்தி-சுஹானாவின் உரையாடலை
ரேணுகா,வேலன்,வேலன்
விஜயகுமார்,தாத்தா கேட்டு
அதிர்ச்சியாய் அவர்களை பார்த்தனர்.