வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ரேணுகா 💝வேலன் (அத்தியாயம்-12)

GG writers

Moderator
ரேணுகா 💝வேலன்
(அத்தியாயம்-12)

ரேணுகா அத்தை சக்தியை தனியே அழைத்து
போய் “ஏய் என்னடி பேசிட்டு வர்ற நீ என்கிட்ட என்ன சொன்ன..? இங்க என்ன நடக்குது” என்று கேட்டாள் குழப்பமாக..

சக்தி காலண்டரை பார்த்து
“ஹை..சேலஞ்சு முடிஞ்சு 22வது நாள்
தீபாவளி..”என்றாள்

“ஹேய் நான் என்ன கேட்கிறேன் நீ என்ன
சொல்ற?”

“ரேணுகா நம்ம பிள்ளைங்க 4 பேருக்கும் இந்த
வருஷம் வர தீபாவளி தலதீபாவளியாக இருக்கும்,”
என்று பதில் சொல்லி கடந்து போனாள் சக்தி.

ரேணுகா யோசனையாய் பார்த்தாள்

அப்பொழுது
அவள் கணவன் வேலன் அவளருகில் வந்து “சக்தி
சொல்லிட்டாள்ல அவ சொன்னதை செய்ஞ்சு முடிப்பா. நம்ம பிள்ளைங்கள பத்தி யோசிச்சு கவலப்படாத...நல்லதுதான் நடக்கும்” என்றான்

அவளும் சரி என தலையசைத்தாள்.

அதன் பின் தாத்தா சுஹானாவிடம் வந்து “ஏன் மா சேலஞ்சு பண்ண..?”என்று கேட்டார்.

“ஏன் தாத்தா அவங்க ரேணுகா அத்தைக்கு துணையாக நிற்கலாம் நான் லேகாவுக்காக நிற்க கூடாதா” என்று கேட்டாள் சுஹானா.

“அட ஏன் மா இது குட்டி ஸ்ரீலேகாம்மா...”
என்றார் தாத்தா.

“அது எல்லாம் நான் பார்த்துக்கிறேன் தாத்தா”

“எங்க அவ வீட்ட விட்டு போறதை பார்த்துக்குவியா” என்று கேட்டார் தாத்தா.

“என்ன சொல்றீங்க..? தாத்தா”

“அவ ரூம்ல டிரஸ் எடுத்து பேக் பண்ணிட்டு இருக்கா” என்றார் தாத்தா

“அய்யோ தாத்தா இதைதானே என்கிட்ட முதல்ல சொல்லி இருக்கணும்” என்று வேகமாய் ஓடினாள் சுஹானா லேகா அறையை நோக்கி..அவள் அறை முன் சென்றதும் சற்று தன்னை அமைதிப்படுத்தி சுஹானா உள்ளே சென்று பேச ஆரம்பித்தாள்.

“இப்ப நீ வீட்ட விட்டு போனா..அந்த அண்ணி-நாத்தனாருக்கு பயந்து போற மாதிரி தான் சொல்லுவாங்க” என்றாள் சுஹானா.

“யாருக்கு பயம் இவங்கள பார்க்க பிடிக்காம தான் போரேன்” என்று கண்ணீரும், கோபமுமாய் சொன்னாள் லேகா.

“இப்ப நீ போனன்னா..அவங்க ஜெயிச்சதா தான் அர்த்தம்” என்று சொன்னாள் சுஹானா.

கையில் வைத்திருந்த டிரஸை வேகமாய் தூர எறிந்து “என்ன என்னதான் செய்ய சொல்ற?” எந்த குடும்பத்துலயாச்சும் இப்படி நடக்குமா.. ?” என்று கண்ணீரும், கோபமுமாய் கேட்டாள் லேகா.

சுஹானா அவளருகே சென்று அவளை மெதுவாய் கட்டிக்கொண்டாள்..அப்பொழுது லேகா தன் அறியாமல் தன் கண்ணீரால் அவள் தோள்களை நனைத்தாள். அவள் கண்ணீர் பட்ட நொடியில்
சுஹானா..அவள் கண்களை துடைத்து..

“அட என்னம்மா நீ..இந்த வீட்லேயே கெத்தான ஒரே ஆள் நீதான்..நீ போய் அழலாமா..? நீ என் பாட்டி
ஸ்ரீலேகா மாதிரி கெத்தானவ, நீ போய் அந்த அண்ணி நாத்தனாருக்காக வீட்ட விட்டு போலாமா..?” என்று கேட்டாள் சுஹானா

“என்னால முடியல சுஹானா..”

“ஹேய் அவங்கள விட நாமதான் வெயிட்..அவங்க வெறும் அண்ணி-நாத்தனார் மட்டும்தான்.. நாம நாத்தனார்க்கு- நாத்தனார்,அண்ணிக்கு-அண்ணி.. அவங்க ஓல்ட் வெர்சன் பார்ட்-1ன்னா, நாம நியூ வெர்சன் பார்ட்-2, இனி வர்ற 20 நாளும் அவங்கள வச்சு செய்வோமா..? என்ன சொல்ற” என்று கேட்டாள் சுஹானா.

“செய்ஞ்சிருவோம்” என்றாள் சித்ரலேகா கண்ணீரும் சிரிப்புமாக....

சிறிது நேரத்திற்கு பின்
“சுஹானா நீ அவசரப்பட்டு என் தங்கச்சிக்கிட்ட சேலஞ்சு பண்ணிட்ட மா” என்றார் சுஹானாவின் மாமா வேலன்.

“இல்ல மாமா நான் ஜெயிப்பேன்” என்றாள் சுஹானா.

“அவ குட்டி ஸ்ரீலேகா மா அவளுக்கு எப்படி புரிய வைப்ப” என்று கேட்டார் சுஹானாவிடம் தாத்தா.

“தாத்தா என் அண்ணன வச்சுதான் அவளுக்கு புரிய வைக்கப்போரேன்” என்றாள் சுஹானா.

“ஹோ..அப்படியா கொஞ்சம் அந்த பக்கம் பாரு சுஹானா” என்றார் தாத்தா.

சுஹானா பார்த்த போது.. வேலன் விஜயகுமாரும்-சித்ரலேகாவும் ஒருவரையொருவர் தீவிரமாய் கோபம்,கொந்தளிப்புடன் பார்த்து முறைத்து கொண்டு இருந்தனர்.

“அய்யோ தாத்தா என்ன இது..?”என்றாள் சுஹானா.

“ஹீம் காதல் பார்வை..கனல் பார்வையா மாறிருச்சு என்ன பண்ண போற..?”என்றார் தாத்தா.

குழப்பமாய் தாத்தாவையும், மாமா வேலனையும் பார்த்து “ஏதாவது பண்றேன்” என்று சொல்லி அவள்
மாடிப்படி இறங்குவதற்குள்..சித்ரலேகா- வேலன்விஜயகுமார் சண்டை ஆரம்பமானது.

“இன்னும் ஏன் டா இங்க இருக்க..?நீயும் உன் அம்மாவும் நடிப்பை நிறுத்த மாட்டீங்க.. ? 2 பேரும் சேர்ந்து ஏமாத்த போறீங்கள்ல..மான, ரோசமே கிடையாதாடா உங்க 2 பேருக்கும் என் வீட்ட விட்டு போங்க” என்றாள் லேகா

“ஏய் ..போடி..”என்று எரிச்சலாய் அவளை தள்ளிவிட்டு சென்றான் வேலன் விஜயகுமார்.

“அய்யோ நாத்தனாரே சொதப்பிட்டியே டி"
என்றபடி வேலன் விஜயகுமார் பின்னால் சென்றாள் சுஹானா.

“அம்மா நீ வேணா இங்கேயே இரு,நான் இங்க இருக்க மாட்டேன்” என்று துணிப்பையுடன்கிளம்பினான் வேலன் விஜய்குமார்.,யார் தடுத்தும் நிற்காமல் வெளியேறினான்.

தங்கை சக்தியிடம் “மாப்ளை கோபிச்சிட்டு போறான் மா” என்றார் அண்ணன் வேலன்.

“ஹேய் கூல்லா.. இருக்க,மாப்ளைய நிறுத்து டி” என்றாள் ரேணுகா.

“என்ன இப்ப மாப்ளை கோபமா
போறாரு, கல்யாணத்துல மாப்ளை அழைப்புக்கு யார் போவாங்க..?”

“பொண்ணோட அண்ணன்” என்றார் வேலன்.

“போன் போடு பொண்ணோட அண்ணனுக்கு,ரேணுகா ஆரத்தி தட்டு ரெடி பண்ணு அண்ணனும்-அண்ணியும் சேர்ந்து மாப்ளைய கூட்டிட்டு வருவாங்க” என்றாள் சக்தி.

“பயமா இருக்கு டி..”என்றாள் ரேணுகா

“பயப்படாத..என் பையன் போன வேகத்துல திரும்பி வருவான்” என்றாள் சக்தி.

வேலன் விஜயகுமார் இரயில் நிலையம் சென்று நடைமேடையில் நடக்க ஆரம்பித்தான்.சுஹானா 6 அடி இடைவெளியில் அவனை பின் தொடர்ந்து அழைத்தாள்.அதே நேரம் ரேணுகா மகன் சக்தி அங்கு
வந்து அவர்களை பார்த்தபடி தூரமாய் நின்றான்.

“அண்ணா ஒரு நிமிசம் நில்லுங்க,லேகா பேசுனது தப்புதான் மன்னிச்சிருங்க” என்றாள் சுஹானா.

“எனக்கு சித்ரலேகா வேண்டாம்...”

“வேண்டான்னு சொல்றது உங்களுக்கு எல்லாம்,ஈஸியா இருக்குல்ல..ஆனா கேட்குற எங்களுக்கு தாங்க முடியாத வலி அண்ணா.”

“நீ என்ன சொன்னாலும் எனக்கு அவ வேண்டாம்” என்று திரும்பி நடக்க ஆரம்பித்தான் வேலன்.

“அவ பேசுனது தப்புனா..அவள பேச வச்ச நீங்களும் தப்புதான்” என்று சத்தமாய் கூறினாள்.

வேலன் சட்டென திரும்பி “நானா..தப்பு” என்று கேட்டான்.

“ஆமா, நீங்கதான்..அவ பேசுன வார்த்தைதான் தப்பு,ஆனா அவ மேல தப்பு இல்ல..”

“என்ன பேசற சுஹானா” என்று கடும்-கோபமாய் கேட்டான் வேலன்.

“அவ புருஷனோட அன்பு அவளுக்கு மட்டும் தான்னு அவ உங்கள முழுசா நம்புனதால தான் தைரியமா பேசுனா அந்த சபையில..”

வேலன் ஒரு நிமிடம் யோசிக்க சுஹானாவின் வார்த்தை அவனுக்குள் ஏதோ ஓர் உணர்வை தந்தது.அவன் அமைதியாய் சுஹானாவை பார்த்தான்.

“இதே உங்களுக்கும் அவளுக்கும் கல்யாணம் நடந்ததுக்கு அப்புறம் இந்த பிரச்சனை வந்திருந்தா..அவள விட்டுட்டு போவீங்களா..? மாட்டீங்க ஏன்னா அப்ப அவ உண்மையிலேயே உங்க பொண்டாட்டியாயிருப்பா. நீங்களும் எல்லா பாய்ஸ் மாதிரி தானே அவள அட்ராக்ட் பண்ணதான் பொண்டாட்டின்னு கூப்பிட்டீங்க...மனசார அவள மனைவியா நினைச்சு நேசிக்கல ல” என்று கோபமாய் கேட்டாள் சுஹானா.

அவள் கேட்ட கேள்வியில் பதில் சொல்ல முடியாமல் கலங்கிய கண்களோடு நடைமேடையில் உள்ள பெஞ்சில் சட்டென அமர்ந்து சித்ரலேகாவோடு இருந்த நினைவுகள் அவன் கண்முன் வரவே கண்ணீரை மட்டும் சிந்தினான் வேலன்.

சுஹானா அவனருகில் அமர்ந்து “உங்க காதலை அவகிட்ட சொன்னீங்களே அவளுக்கு சமமா நீங்க உங்க அம்மா மேல வச்ச அன்பை அவகிட்ட ஒரு தடவையாவது சொன்னீங்களா?” என்று கேட்டாள்.

இல்ல என்கின்றபடி தலையசைத்தான் வேலன்.

“அதுதான் அண்ணன் நீங்க செய்ஞ்ச தப்பு அவளுக்கு வேலன் நமக்கு மட்டும்தான்ங்கற எண்ணம் அந்த பாசத்துலதான் அப்படி பேசிட்டா”

“என்ன என்ன செய்ய சொல்ற சுஹானா”
என்று கண்ணீரோடு கேட்டான்.

“அண்ணன் அவளுக்கு புரிய வையுங்க உங்கம்மாவ பத்தி...”

“லேகா புரிஞ்சுக்க மாட்டா சுஹானா”

“அண்ணன் உங்களால மட்டும்தான் அவளுக்கு புரிய வைக்க முடியும்” என்றாள் சுஹானா.

“எனக்கு நம்பிக்கையில்ல சுஹானா, லேகா எங்கம்மாவ புரிஞ்சுக்கிட்டு ஏத்துக்குவான்னு”

“அண்ணன் கல்லு மாதிரி இருந்தவள பேச வச்சீங்க,சிரிக்கவச்சீங்க, அழ வச்சீங்க, நேசிக்க வச்சீங்க இதெல்லாம் எந்த நம்பிக்கையில செய்தீங்க..”

பதில் சொல்ல முடியாமல் சுஹானாவை பார்த்தான்.

“ஏன் அண்ணன் உங்க பொண்டாட்டிதான அவ நீங்க இரங்கி போக கூடாதா..”என்று கனிவாய கேட்டாள் சுஹானா.

வேலன் மனம் உருகி “என் பொண்டாட்டி
புரிஞ்சுக்குவா நான் பேசுறேன்” என்றான்.

அவன் சொல்லும் போதே வேலனின் மகன் சக்தி அங்கு வந்து
“வாடா மாப்ளை வீட்டுக்கு போலாம்.உன் தங்கச்சியை கூட்டிட்டு வெளிய வா,நான் காரை திருப்பி வெயிட் பண்றேன்” என்று சொல்லி போனான். மூவரும் கிளம்பினர்.

ரேணுகா அவர்கள் மூவரையும் வாசலில் நிறுத்தி ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பி வைத்தாள்.

அதன்பின் அண்ணன் வேலன் தன் தங்கை சக்தியிடம் சென்று “எப்படி டி..நீ சொன்ன மாதிரியே அவங்க வந்தாங்க.”

“ஹேய் அண்ணா,அண்ணி சித்ரலேகா-வேலன சுஹானா பிரிய விட மாட்டா..,நான் சுஹானா-சக்திய சேர்க்காம விடமாட்டேன் என்ன நடந்தாலும் பயப்படாதீங்க” என்றாள் அத்தை சக்தி.

சரி என்றபடி தலையசைத்தாள் ரேணுகா.

சுஹானாவின் மாமா வேலன் சுஹானாவிடம் சென்று கை கொடுத்து “மருமகளே என் தங்கச்சிதான் அதிரடின்னு நினைச்சேன் நீ அவளுக்கேத்த சரவெடி மா” என்று மிக சந்தோசமாய் பேசினான்.

அதன்பின் ரேணுகா வந்ததும் அவள் கணவன் வேலன் அவளிடம் “இனி வரப் போற 20 நாளும் நமக்கு என்டர்டெயின்மென்ட் தான்,நீ எதுக்கும் கவலப்படாத அம்மாவும்-மகளும் பார்த்துக்குவாங்க” என்று தனது தங்கையையும்,மருமகளையும் கை காட்டினான்.

ரேணுகாவும் சந்தோசமாய் ஆமாம் என்று தலையசைத்தாள்.

மாடியில் சித்ரலேகா தனிமையில் நிற்பதை கண்டு வேலன் விஜயகுமார் அவளருகே சென்றான்.அவனை பார்த்ததும் வாய்க்கு வந்த வண்ணமெல்லாம் திட்டி கொண்டே இருந்தாள்.

வேலன் அவள் இரு கைகளையும் இறுக்கமாக பிடித்து அவனை பார்க்க திருப்பி.. “எனக்கு ஒரே ஒரு கேள்விதான் அதுக்கு பதில் சொல்லு அதுக்கப்புறம் வாழ்க்கை முழுக்க உன் கண்லேயே பட மாட்டேன்” என்று சொல்லி அவள் கண்களை நேராக பார்த்து கண்ணீரோடு “நான் இல்லாம நீ இருப்பியா..?” என்று கேட்டான்.

லேகா கண்களை மூடி முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“ஹேய் என் கண்ண பார்த்து பதில் சொல்லு நான் உன்ன விட்டு போயிடுறேன்...நான் இல்லாம நீ இருப்பியா..?” என்று மீண்டும் கேட்டான்.

2 நிமிடங்கள் அவளுக்கு பேச்சுக்கு பதில் கண்ணீர் மட்டும் வந்தது. அதன்பின் “ஆனா நான் இல்லாம நீ இருப்பதான டா” என்று அவன் கைகளை தட்டி விட்டாள்.

“நான் எப்ப அப்படி சொன்னேன்” என்று கேட்டான் வேலன்.

“உன் அம்மா ஓகே சொன்னாதான தாலி கட்டுவ” என்றாள் லேகா.

“என் அம்மாவ ஓகே சொல்ல வை..”என்றான்.

“அது என் வேலை இல்லடா..”

“எனக்காக மாற மாட்டியா லேகா”

“ உனக்காக மாறலாம் ஆனா உன் அம்மாவுக்காக மாறவே கூடாது.”

“எனக்கு நீயும் வேணும், அம்மாவும் வேணும்.”

“யாராவது ஒருத்தர்தான் உன் கூட இருப்போம் ஒன்னு நான் இல்லன்னா, உன் அம்மா யார் வேணும்னு நீ முடிவு பண்ணு” என்று அவள் சொல்லும் போதே அத்தை சக்தி அங்கு வந்தாள்.

“என்னடா பண்ணிட்டு இருக்க இங்க?”

“அவ கூட பேசிட்டு இருந்தேன்,நான் அவ கூட பேச கூடாதா?”என்று கேட்டான் வேலன்.

“ஹோ...பேசலாமே ஆனா தனியா இல்ல, எல்லார் முன்னாடியும் பேசு..அவ இன்னொரு வீட்டுக்கு போற பொண்ணு அவ பெயரை கெடுத்துராத” என்றாள் அம்மா சக்தி.

“அம்மா என்னம்மா பேசற நீ” என்று அதிர்ச்சியாய் கேட்டு அம்மா சக்தியை நோக்கி போனான் வேலன்.

அப்பொழுது லேகா “அவங்க கரெக்ட்டா தான் சொல்றாங்க நீ எது பேசன்னாலும் அவங்க முன்னாடியே பேசு” என்றாள்.

வேலன் தான் நேசிக்கும் இருவரும் எதிர் எதிர் துருவங்களாய் நிற்பதை அதிர்ச்சியாய் பார்த்தான். அம்மா சக்தி அவனை அழைத்து போனாள் .

அன்று இரவு மாடியில் சுஹானாவும், தாத்தாவும் ஒன்றாய் அமர்ந்து இருந்தனர்.

“சுஹானா நீ லேகா வாழ்க்கைக்காக செய்றதை உன் வாழ்க்கைக்கும் கொஞ்சம் யோசிச்சு செய்யலாமில்லமா..”என்றார் தாத்தா.

“தாத்தா அண்ணனும், அண்ணியும் மனசார விரும்புறாங்க, பழகுனவங்கள பிரிக்கிறது பெரிய பாவம், எனக்கும் சக்திக்கும் அப்படி ஒரு ஃ பீலிங்ஸ் கிடையாது.அவன் என்ன காப்பாத்த நினைச்சு தாலி கட்டினான் அவ்ளோதான்..”என்றாள்.

“சுஹானா சக்தி மேல உனக்கு ஃபீலிங்ஸ் இல்லன்னா தாலியை கழட்டி இருக்கலாமே உன் நாத்தனாரோட மாமியார் கேட்டப்போ” என்று கேட்டார் தாத்தா.

“அப்படியில்ல தாத்தா” என்று தாலியை அவர் கண்முன் காட்டி.. “இதோட அருமை மணமேடை வரை வந்து என் கல்யாணம் நின்னப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன். நம்மக்கிட்ட ஆயிரம் சொத்து, சுகம் இருக்கலாம் ஆனா தாலி கடவுள் நினைச்சாதான் ஒவ்வொரு பொண்ணோட கழுத்துக்கு வரும் தாத்தா அது மட்டுமில்ல நான் 20 நாள் கழிச்சு பாட்டி கூட போயிடுவேன். ஆனா தாலியை கொடுக்க மாட்டேன்” என்றாள் சுஹானா.

‘உன் அம்மா சக்தி உன்ன அப்படி விட்ர மாட்டாம்மா’ என்று மனதினுள் நினைத்தார்
தாத்தா.

இவர்கள் பேசுவதை ரேணுகா, வேலன், அத்தை சக்தி பார்த்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது சித்ரலேகா, சுஹானா மற்றும் தாத்தாவிடம் வந்தாள்.
“ஓய் அண்ணி..எங்க டி போவ 20நாளுக்கு அப்புறம்” என்று கேட்டாள் லேகா.

“இல்ல .. என்னால என் பாட்டியை எப்பவும் எதிர்த்து பேச முடியாது” என்றாள் சுஹானா.

“அண்ணனுக்கும், தங்கச்சிக்கும் இதே பொழப்பு”என்று கோபமாய் திரும்பினாள்.

“ஹேய் டெடி..கோபப்படாத டி..”

“இங்க பாரு சுஹானா சக்தி கூட இருக்கிறதும் வாழ்றதும் உன் சொந்த விருப்பம்..ஆனா நீ என் அண்ணியா இந்த வீட்ல என் கூடதான் இருக்கணும்.மீறி எங்கேயாச்சும் போன கொன்றுவன் உன்ன” என்று மிரட்டினாள் லேகா.

“ஏய் பாசத்தை கூட கொலவெறியா தான் காட்டுவியா டி “என்று கண்கலங்க புன்னகையோடு அவளை கட்டி கொண்டாள் சுஹானா.

லேகாவை அதிசயமாய் பார்த்தனர் அவளது அம்மா,அப்பா,அத்தை மற்றும் தாத்தா.

“சக்தி நீ நிச்சயத்தை நிறுத்துனது கரெக்ட் தான்” என்றாள் ரேணுகா.

“இல்லன்னா நம்ம லேகாவ இப்படி பார்க்கவே முடியாது” என்றார் அவளது அப்பா வேலன்.

பின் அனைவரும் தூங்க போயினர்.

























































































 
Top