வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ரேணுகா 💝வேலன் (அத்தியாயம் -13)

GG writers

Moderator
ரேணுகா 💝வேலன்
(அத்தியாயம் -13)

அடுத்த நாள் காலையில் மாடி மேல் இருந்து சக்திவேலன் மெல்ல படிகள் இறங்கினான்..அவனை கீழே இருந்து அத்தை சக்தி பார்த்த வண்ணமாய் இருந்தாள்.

“ஏய் ஏன் டி என் மகனை இப்படி பார்க்கிற?”என்று கேட்டாள் ரேணுகா.

“இல்ல...என் மகளை ரொம்ப அழ வச்சிட்டான்..ஆனா சாரி இன்னும் சொல்ல ல..”என்றாள் அத்தை சக்தி.

“என் மகனாச்சும் சாரி சொல்றதாவது வாய்ப்பே இல்ல” என்றாள் ரேணுகா.

“2லிருந்து3 தடவையாவது அவன என் மக கிட்ட சாரி சொல்ல வைக்கிறேன்” என்று சொல்லி கடந்து போய் தன் மகன் வேலனை அழைத்தாள் அம்மா சக்தி.

“டேய் வாடா கால்பந்து விளையாடலாம்”

“ஏன் மா நீ என் வாழ்க்கைல விளையாண்டது போதாதா...கால்பந்து விளையாட வேற கூப்பிடுற”

“வேலா ஃபீல் பண்ணாத டா லைப் னா எல்லாமே தான் இருக்கும். நீ விளையாடு ஸ்ட்ரெஸ் குறையும்.”

“வீட்டுக்குள்ள எப்படி மா விளையாடுறது?”

“ ரெண்டு பேரும் பந்தை உதைப்போம், யாரு விடறாங்களோ அவங்களுக்கு பாயிண்ட் மைனஸ் ஓகே வா ஸ்லோ வா விளையாடலாம் டா..நீ அந்த சோபா வ நகர்த்து” என்று சொல்லி சோபாவை நகர்த்தி விளையாட தொடங்கினர் இருவரும்.

அதன் பின் மருமகன் சக்தி வரும் போது அவன் கால்களை குறி வைத்து பந்தை எட்டி உதைத்தாள் அத்தை சக்தி.

பந்து உருண்டு சென்று அவன் கால்களில் பட்டு அவன் இடறி எதிரில் வந்த சுஹானாவை பற்றி கொண்டான்.

“சாரி,சாரி ரொம்பவே சாரி” என்று தன்னை மறந்து சுஹானாவிடம் பேசினான் சக்திவேலன்.

‘ஒய் அண்ணி எப்படி’ என்று ரேணுகாவிடம் கண் சைகைகளில் கேட்டாள் அத்தை சக்தி.

அவளும் சூப்பர் என்று தன் வாய் திறக்காமல் கை சைகையில் சொன்னாள். அதன்பின் சக்திவேலன் கடந்து போனான்.

சுஹானா அத்தை சக்தியை கவனித்து ‘இது உங்க வேலை தானா' என்று மனதினுள் நினைத்தபடி பந்தை கையில் எடுத்து சென்று “நானும் உங்க கூட விளையாட வரலாமா” என்று கேட்டாள்.

“ வாம்மா தங்கச்சி விளையாடலாம்” என்றான் வேலன்.

3பேரும் விளையாடினர். அப்பொழுது சுஹானா சித்ரலேகா நடந்து வரும்போது அவளது கால் இடறும் படி பந்தை அவள் கால்கள் நோக்கி உதைத்தாள்.

சித்ரலேகா கால் இடறி எதிரில் இருந்த வேலன் விஜயகுமாரை பற்றி கொண்டாள். அவர்கள் இருவரது செயினும் மாட்டிக் கொண்டது.

இதை பார்த்ததும் அம்மா சக்தி வேகமாய் அவர்கள் அருகே வந்து “டேய் விலகு டா.....”

“அம்மா செயின் மாட்டிக்கிச்சுமா..”என்று சட்டென லேகா மேல் உள்ள கைகளை எடுத்தான்.

“ஏய் என்ன 2பேர் கழுத்துலேயும் ஒரே மாதிரி சி.எல்.வி போட்ட செயின்” என்று கேட்டாள் சக்தி.

“அம்மா அது அது வந்து...” என்று சொல்ல தயங்கினான் வேலன்.

“உன் கிட்ட இந்த செயின் கிடையாதே வேலா..இது உன்னோடதில்லையே சரி செயின கழட்டு” என்றாள் சக்தி.

சக்தி சொல்லும் போது ஏதோ ஒரு கலக்கம் இருவர் கண்களிலும் கண்ணீர் முன் வந்து நின்றது.

“இருங்க,இருங்க நாத்தனாரின் மாமியாரே ஏன் பிரிக்கிறிங்க,நான் சரி பண்றேன்” என்று சொல்லி சிக்கிய செயினை சரி செய்து பிரித்து விட்டாள் சுஹானா.

நன்றி சொல்வது போல் கண் சைகை செய்து சுஹானா கைகளை பிடித்து விட்டு கடந்து போனாள் சித்ரலேகா.

“ஹேய் மகளே என்ன விளையாட்டு இது” என்று கேட்டாள் மிரட்டல் தோரணையில் அத்தை சக்தி.

“நீங்க மட்டும் ஸ்டூல தட்டி விட்டு உங்க அண்ணியை விழ வைக்கலாம்...நான் பந்தை தட்டி விட்டு என் அண்ணியை விழ வைக்க கூடாதா?”என்றாள் சுஹானா.

“ஏய் என்ன சொன்ன..?”என்று அத்தை சக்தி
மிரட்டலாய் கேட்க

“கூப்பிட்டீங்களா தாத்தா வந்துட்டேன் தாத்தா..என்று சக்திக்கு பயந்து ஓடிப் போனாள் சுஹானா.

சுஹானாவை நினைத்து சிரித்தபடி கடந்து போனாள் அத்தை சக்தி.

அத்தை சக்தியிடம் அவள் அண்ணன் வேலன் வந்து “சக்தி உனக்கே சுஹானா டஃப் கொடுக்கிறா..”என்றான்

“என் மக என்ன மாதிரி தானே இருப்பா” என்றாள் சக்தி.

“ஏன் சக்தி எதுக்கு இந்த சேலஞ்சு எல்லாம்
சுஹானாகிட்ட நீ ஓப்பனா வே பேசலாமே” என்று கேட்டாள் ரேணுகா.

“அண்ணியாரே இந்த காலத்து பிள்ளைங்க நம்மள மாதிரி சொன்னா கேட்க மாட்டாங்க”.

“நீ பேசிதான் பாரேன்” என்றாள் ரேணுகா.

“ஹேய் அண்ணி சுஹானாவ கூப்பிட்டு பேசுனா ஆன்ட்டி எனக்கும் சக்திக்கும் ஃபீலிங்ஸ் இல்ல.எங்கள சேர்க்க ட்ரை பண்ணாதீங்க அப்படின்னுதான் சொல்லுவா”.

“நீ எதை வச்சு அப்படி சொல்ற..”

“ஹேய் நேத்து மாமாக்கிட்ட அவ என்ன சொன்னா 20நாள்ல போயிடுவாளாம், ஆனா தாலியை தர மாட்டாளாம். அவளுக்கு தாலி வேணும் ஆனா அதை கட்டுனவன் வேணாம் இது எந்த ஊர் நியாயம் டி” என்று கேட்டாள் சக்தி.

“நீ சொல்றது கரெக்ட்தான்” என்றாள் ரேணுகா.

“அண்ணி உனக்கு புரிய வைக்கிறதுக்குள்ள எனக்கு உயிர் போயிரும்டி..என்ன கேள்வியா கேட்டு கொல்லாதடி” என்றாள் சக்தி.

“சரி இனி கேட்க மாட்டேன் ஓகே” என்றாள் ரேணுகா.

“ஓகே..ஓகே” என்றாள் சக்தி.

பின் இரவு நேரத்தில் அத்தை சக்தி அதிகார தோரணையாய்“மகளே..” என்று சத்தமாய்அழைத்தாள் சுஹானாவை பார்த்து.....

“சொல்லுங்க நாத்தனாரின் மாமியாரே..”என்றாள் சுஹானா.

“நீ என்ன பண்ற உன் பெட்டி,படுக்கை எல்லாம் எடுத்துட்டு..”என்று அவள் சொல்லும் போதே குறுக்கிட்டு பேசினாள் சுஹானா “வீட்ட விட்டு போயிடவா ?”

“இல்ல உன் புருஷன் சக்தி ரூம்க்கு போ..”என்றாள் அத்தை சக்தி.

“அங்க நான் எப்படி போறது ...”என்று தயக்கமாய் சொன்னாள் சுஹானா.

“ஹோ போக மாட்டியா..அப்ப சரி நான் என் மகன் வேலன கூட்டிட்டு இப்பவே கிளம்புறேன்” என்றாள் அத்தை சக்தி.

“இல்ல,இல்ல நான் இப்பவே போரேன்” என்றாள் சுஹானா.

“அப்ப போ...”என்று கட்டளையிட்டாள் அத்தை சக்தி.

தாத்தவிடம் சுஹானா சென்று.. “தாத்தா நீங்க
சக்தி ரூம்ல உடையற மாதிரி இருக்கிற எல்லா பொருளையும் எடுத்துருங்க, நான் போய் பேக்
எடுத்துட்டு வர்றேன்” என்றாள்.

“எதுக்குமா ?”என்று கேட்டார் தாத்தா

“தாத்தா அவன் கண்டிப்பா என்ன பார்த்தா எதையாச்சும் தூக்கி போட்டு
உடைப்பான்..அதுக்குதான் சொல்றன்” என்றாள் சுஹானா.

“சரி மா” என்று சொல்லி சுஹானா சொன்ன வண்ணம் செய்து முடித்தார் தாத்தா.

கையில் பையுடன் சுஹானா சக்திவேலன் ரூம்க்கு சென்றாள் அவளை பார்த்ததும் எரிச்சலாகி உடைக்க ஒன்னும் கிடைக்காமல் சக்திவேலன் தன் செல்போனை உடைத்து போட்டான்.பின்னும் கோபம் தாளாமல் அவளை திட்டிக் கொண்டு இருந்தான்.

சுஹானா மனதினுள் ‘ஹய்யோ பாரபட்சமே இல்லாம திட்றானே இவன எப்படி அமைதியாக்குறது” என்று எண்ணியபடியே வெளியே பார்த்தாள்...சுஹானாவின் மாமா வேலன் அவ்வழியே வந்தார்

அவரை “மாமனாரே....”என்று வேகமாய் அழைத்தாள் சுஹானா.

“என்னாச்சு மருமகளே ஏன் கூப்பிட்ட?”

“மாமா இவர் என்ன இங்க இருக்க விட மாட்டேன்றார்” என்று கை காட்டினாள் சக்திவேலனை...

“டேய் என்னடா..”என்று கேட்டார் அப்பா வேலன்.

“இவ எதுக்கு என் ரூம்ல இருக்கணும்” என்று கேட்டான் சக்தி.

“டேய் நீ ஒரு கோழை டா,பயந்தவனே” என்றார் அப்பா வேலன்.

“யார்,யாரை பயந்தவன்னு சொல்றீங்க” என்று கேட்டான் சக்தி.

“நீ தான் டா..ஒரு பொண்ணு கூட தங்குறதுக்கு பயப்படற...”என்றார் அப்பா வேலன்.

“யாருக்கு பயம் அவ இங்கேயே இருக்கட்டும். அந்த நேரம் மாப்ளை வேலன் விஜயகுமார் ஏதோ கேட்க சக்தி ரூம்க்குள் வர.. அவனை பார்த்ததும் சக்தி “ஆனா என் கூட என் மாப்ளையும் இங்கதான் இருப்பான்” என்று வேலன் விஜயகுமாரை சேர்த்து கொண்டான்.

சுஹானாவோ மனதிற்குள் ‘சக்சஸ்’ என மகிழ்வுற சக்தியின் அப்பா வேலன் தலையில் அடித்து கொண்டபடி அறையை விட்டு வெளியேறினார்.

அதன் பின் வேலன் விஜயகுமார் வெளியே வர தாத்தா அவனை பிடித்து தனியே அழைத்து போய் “தம்பி நீங்க வேணா நம்ம சக்தி மாதிரியே லேகாவுக்கு தாலி கட்டிட்டு அவ ரூம்க்கு போய்க்கோங்களே” என்றார் தாத்தா.

“சுஹானா சிஸ்டர்க்கு தாலி சென்டிமென்ட்டுன்னு ஒன்னு இருக்கு.என் பொண்டாட்டிக்கு எந்த சென்டிமென்ட்டும் கிடையாது.அவ விருப்பமில்லாம தாலி கட்டினேன் கழட்டி கைல கொடுத்துட்டு போயிட்டே இருப்பா இந்த அவமானம் எனக்கு தேவையா” என்றான் மாப்ள வேலன்.

“இல்ல தம்பி நான் எதுக்கு சொல்றேன்னா” என்று தாத்தா ஆரம்பித்தவுடன்,அவன் சிரித்தபடி

“தாத்தா நான் மச்சான் கூட ரூம்ல எல்லாம் இருக்க மாட்டேன் பயப்படாதீங்க” என்று சொல்லி கடந்து போனான் வேலன் விஜயகுமார்.

தாத்தாவும் நிம்மதி பெருமூச்சு விட்டு கடந்து போனார்.

சற்று நேரத்திற்கு பின் சக்திவேலன் மாடியில் தனிமையாய் நின்ற வேலன் விஜயகுமாரை பார்க்க வந்தான்.

“வாடா மாப்ளை என் ரூம்க்கு போலாம்” என்றான் சக்திவேலன்.

“ஏய் கூறு கெட்ட குப்பா...? நான் எப்படி டா உங்க கூட இருக்க முடியும்.”

“ஏன் இருந்தா என்ன?” என்று கேட்டான் சக்தி.

“டேய் என் தங்கச்சி,மச்சான் கூட நான் எப்படிடா..தங்க முடியும் பைத்தியமே..”

“எனக்கு புரியல..நீ வா போலாம்” என்று வேலன் விஜயகுமாரை இழுத்தான்.

“ ஹோ அப்படியா..அப்ப வாடா நீயும், நானும் சேர்ந்து லேகா ரூம்ல தங்குவோம்” என்றான் வேலன்.

“அது எப்படி டா..”என்று தயங்கினான் சக்தி.

“உன்னால முடியாதுல..அதே மாதிரி என்னாலேயும் முடியாது” என்றான் வேலன்.

“டேய் வேலா உங்க கதை வேற..எங்க கதை
வேற” என்று கோபமாய் சொன்னான் சக்தி.

“என்னடா ஓவரா பண்ற.. நானும் பெர்சனல் விஷயம்னு பேசாம விட்டா..ரொம்ப பண்றடா நீ” என்றான் வேலன்.

“என்னடா சொல்ல வர்ற...”

“டேய் நீ வாழ்வியோ, வாழ மாட்டியோ.. அவ உன்னோட ஃ வொயிப் ஆயிட்டா டா..”

“ஃ வொயிப்ன்னு சொல்லாத டா வேலா” என்றான் சக்தி.

“ஹேய் நீ விரும்புனாலும்,விரும்பலன்னாலும் அவதான் உன் மனைவி” என்றான் வேலன்.

“நான் அவள அப்படி நினைக்கவே இல்ல எங்களுக்குள்ள ஒன்னுமில்ல” என்று கத்தினான் சக்தி.

“சரி டா உங்களுக்குள்ள ஒன்னுமில்லதான அப்புறம் ஏன் அவ கூட தங்க பயப்படற..உனக்கு பயம் அண்ட் ஈகோ எங்க அவள ஏத்துக்குவியோன்னு...”என்று சொன்னான் வேலன்.

“நீ என் கூட தங்க வேணாம, நான் போரேன்” என்று கோபமாய் சக்தி அவன் அறைக்கு போனான்.

அங்கு சுஹானாவை பார்த்ததும் திரும்பி கொண்டான் சக்தி.

அப்பொழுது சுஹானா.. “நீ என்ன காப்பாத்ததான் தாலி கட்டுன வேற எந்த ஃபீலிங்சும் கிடையாதுன்னு எனக்கு தெரியும். நான் கொஞ்ச நாள்ல என் பாட்டி வந்ததும் அவங்க கூட போயிடுவேன்” என்று அவள் சொல்லும் போதே வேலன் விஜயகுமார் உள்ளே வந்தான்.

சக்தி அப்பொழுது “மாப்ளை முதல்ல உன் பாட்டியை வர சொல்லி போயிடு” என்று பதில் சொல்லி போய் படுத்தான்.

“எனக்கு பாட்டியே கிடையாதே டா என்ன யார் கூட போக சொல்றான் இவன்” என்று சந்தேகமாய் கேட்டான் வேலன் விஜயகுமார்.

“அண்ணன் அவர் உங்கள சொல்ல ல என்கிட்ட சொல்றாரு” என்றாள் சுஹானா.

“பெரிய இவன்..கோபத்தை கூட நேரடியா காட்ட மாட்டியாடா எருமை” என்று திட்டினான் மாப்ளை வேலன்.

“எனக்கு தூக்கம் வருது வெளிய போடா” என்றான் சக்தி.

“அண்ணன் வாங்க வெளிய போலாம்” என்று சுஹானா வேலன் விஜயகுமாரை வெளியே அழைத்து போய் “அண்ணன் கோபப்படாதீங்க..அவன் சொல்றதை நீங்க கேட்க வேண்டியதான” என்றாள்.

“ஏய் அந்த பைத்தியக்காரனுக்கேத்த
பைத்தியக்காரிதான் நீயும்” என்று திட்டிவிட்டு
சுஹானாவை அறைக்குள் அனுப்பிவிட்டு அவனும் கடந்து போனான்.

மாடியிலிருந்து தற்போது வரை நடந்த எல்லாவற்றையும் ரேணுகா, வேலன், அத்தைசக்தி,தாத்தாவும் பார்த்தனர்.

“என்னம்மா சக்தி இது இவங்க 2பேரும் இப்படி இருக்காங்க” என்று விசனமாய் சொன்னார் தாத்தா.

“நான் பெத்ததுக்கு அறிவே இல்லப்பா” என்றாள் ரேணுகா.

“ஏய் ரேணுகா,மாமா முதல்ல அவங்க 2பேருக்கும் இடைவெளியை குறைப்போம்.அப்புறம் சூப்பரா வாழ்வாங்க” என்றாள் அத்தை சக்தி.

“என்னமோ சொல்ற போ சக்தி” என்று தாத்தாவும்,ரேணுகாவும் கடந்து போயினர்.
சக்தியின் அண்ணன் வேலன் அமைதியாய் அவளை பார்த்தான்.

“என்னடா நீ ஒன்னும் சொல்லலையா” என்று கேட்டாள் சக்தி.

“நான் உன்ன நம்புறேன் டி” என்று தைரியமாய் சொன்னான் அண்ணன் வேலன்.

“தேங்ஸ்டா அண்ணா” என்றாள் சக்தி,அன்றைய நாள் முடிந்தது.

அடுத்த நாள் காலையில் அனைவரும் அவரவர் பணிக்கு சென்ற பின் ரேணுகா போனில் பதட்டமாய் உரையாடினாள்.அவள் போனை வைத்தபின் அத்தை சக்தி அவளிடம் சென்று “என்ன பிரச்சனை” என்று கேட்டாள்.

“நம்ம கம்பெனி புரொடக்சன் யூனிட்ல பிரச்சனை,அது மட்டுமில்லாம மெட்டீரியல் டெலிவரிலேயும் பிரச்சனை அத சரி செய்ய நான் ஆபிஸ் போணும் டி” என்றாள் ரேணுகா.

“போலாம்..ஆனா பிரச்சனைய என் மக சரி பண்ணுவா” என்றாள் சக்தி.

“அவ எப்படி டி....இது சீரியஸ் ப்ராப்ளம்” என்றாள் ரேணுகா.

“ஹேய் ஸ்ரீலேகா மேடம் ப்ராடக்ட் சுஹானா மறந்துட்டியா......”

ரேணுகா சிரித்தபடி “சரி அவள எப்படி நம்ம கூட சேர்த்து கூட்டிட்டு போறது...”

“அத என்கிட்ட விட்ருங்க அண்ணியாரே”
என்றாள் சக்தி.

வழக்கம் போல் மாமியார் தோரணையில் சத்தமாய் “மகளே”...... என்று கூப்பிட்டாள் அத்தை சக்தி.

“சொல்லுங்க நாத்தனாரின் மாமியாரே” என்றாள் சுஹானா.

“நீ என்ன பண்ற ரேணுகா கம்பெனில
புரொடக்சன் யூனிட்ல பிரச்சனை, அது மட்டுமில்லாம மெட்டீரியல் டெலிவரிலேயும் பிரச்சனை அத உன் நாத்தனாரை வச்சு சரி பண்ணு”.

“ஆனா லேகா அவ ஆபிசுக்கு போயிருக்காளே”

“அது உன் பிரச்சனை” என்றாள் அத்தை சக்தி.

சற்று யோசனையாய் அமைதியாய் நின்றாள்
சுஹானா.

“என்ன..?மகளே கொடுத்த வேலை செய்றியா என்ன” என்று மிரட்டும் தோரணையில் கேட்டாள் சக்தி.

“நீங்க உங்க அண்ணியோட போங்க 1 மணி நேரத்துல நான் என் அண்ணியோட ஆபிஸ்ல இருப்பேன்” என்று உறுதியாக சொன்னாள் சுஹானா.

அத்தை சக்தியும்,ரேணுகாவும்ஆபிசுக்கு சென்றனர்.

சிறிது நேரத்திற்குப் பின் ரேணுகாஆபிசில்
எம்.டி. கேபினில் அமர்ந்திருந்த ரேணுகாவின் மகன் சக்திவேலனிடம் சென்றான் மாப்ளை வேலன் விஜயகுமார். அவனை பார்த்ததும் சக்திவேலன்
“வாடா மாப்ளை என்ன இந்த பக்கம் வந்திருக்க..?”

“நான் மட்டுமில்ல..என் தங்கச்சியும் வந்திருக்கா கீழ புரொடக்சன் யூனிட்ல இருக்கா” என்று அவன் சொன்ன மாத்திரத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கேபோன சக்திவேலன், “ஓவர் அட்வான்டேஜ் தாலியை கழட்டி வீசுறேன்” என்று கோபமாய் சொல்லி வெளியேற..

“டேய் சக்தி நில்லு” என்று வேலன் விஜயகுமார் சொல்ல சொல்ல நிற்காமல் வேகமாய் நடந்து போனான் சக்திவேலன் சுஹானாவை பார்க்க..லிப்ட்டில் கீழே இறங்கி புரொடக்சன் யூனிட் நோக்கி நடந்தான்...

அங்கு சுஹானா ஹவுஸ் கீப்பீங் யூனிபார்ம்மில் தலையில் கேப்-உடன் தரையில் மாப் போட்டு துடைத்து கொண்டு இருந்தாள். அவளை பார்த்த ஒரு நிமிடம் அதிர்ச்சியாய் நின்றான்.சுஹானாவோடு தாத்தாவும் பேக்கிங் செக்சனில் யூனிபார்ம்மில் பணியில் இருந்தார்.

போன வேகத்தில் தன் அறைக்கு திரும்பினான் சக்திவேலன். தன் அறைக்கு சென்று அவனது சீட் அருகே சென்று திரும்பி நின்று யோசித்தான்.அவனுக்கோர் பழைய நினைவு அவன் கண்முன் வந்தது.”ஒரு என்.ஆர்.ஐ. மீட்டீங்க்கு இப்படியாட போவ” என்று டை கட்டிவிட்டு பிஸினஸ் அட்மின் சொல்லி கொடுத்த சஹானாவாய் தோன்றினாள் சுஹானா..அவனையறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.அவன் தனது எம்.டி.சீட்டை தடவி மனதினுள் ‘என்ன இந்த இடத்துல உட்கார வச்சிட்டு நீ ஏன் டி இப்படி ஒரு கோலத்துல நிற்கிற’ என்று அவன் நினைத்த பொழுதில் சுஹானா காபி தட்டுடன் அறையினுள் நுழைந்தாள்.அவள் பின்னே வேலன் விஜயகுமாரும் வந்து நின்றான்.

“டேய் மச்சான் திரும்பு டா” என்றான் வேலன்.

சக்திவேலன் கண்களை துடைத்து திரும்பி
சுஹானாவை பார்த்த போது கோபமாய் கேட்டான் “நீ ஏன் டா இங்க வந்த..என்னடா கோலம் இது..?எதுக்கு வந்த இங்க ஆபிஸ விட்டு கிளம்பு” என்று கத்தினான்.

வேலன் விஜயகுமார் யோசிக்க சுஹானாவோ கை விரல்களால் சைகையில் அவன் உங்கள சொல்லல என்ன சொல்றான் என்றாள்.

“ஏன் டா டேய்..”என்று வேலன் விஜய்குமார் பேச ஆரம்பமாகும் போது சித்ரலேகா அறையினுள் வேகமாய் வந்து சுஹானாவிடம் “ஏய் என்ன டி பஃ ட்டி இது..? எமர்ஜென்சி ஆபிஸ்ல ஒர்க்
ஃ ப்ரம் ஹோம் வாங்கிட்டு வர சொன்ன.. வந்து பார்த்தா இப்படி நிற்கிற..பார்க்க கஷ்டமா இருக்கு இது உன் கம்பெனி டி..நீ ஓனர் டி..”என்றாள்.

“லேகா அமைதியாயிரு..நான் எல்லா விவரமும் வீட்ல போய் சொல்றேன்.. இங்க கொஞ்ச நாள் நான் இப்படி தான் இருந்தாகணும்;என்ன புரிஞ்சுதா அண்ணியாரே” என்று சக்திவேலன் காதுகள் கேட்கும்படி சத்தமாய் சொல்லிவிட்டு கடந்து போனாள் சுஹானா.

பின் இரவில் வீட்டில் வேலன் விஜய்குமார்,தாத்தா,சித்ரலேகாவிடம் எல்லாவிதமான பிரச்சனையையும் எப்படி சரி செய்யறது என்கிற ப்ளானையும் பேசி முடித்தாள்.

அப்பொழுது அத்தை சக்தி உள்ளே வர அவள் பின்னால் சக்திவேலனும் மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தான்.

“மகளே என்ன ப்ளான் போடற” என்று கேட்டாள் அத்தை சக்தி.

“சொன்னா புரியாது மாமியாரே என் அண்ணி செய்ஞ்சு முடிப்பா..அப்ப தெரிஞ்சுக்கோங்க” என்று சத்தமாய் பின்னால் வரும் சக்திவேலன் காதுகளில் விழும்படி கூறினாள் சுஹானா.

அதை கேட்டு அமைதியாய் தன் அறைக்கு சென்றான் சக்திவேலன்.










































































































 
என்னடா நடக்குது இங்க ஆளாளுக்கு ஒரு பிளான் போட்டுக்கிட்டு மண்டையை குழப்பிக்கிட்டு இருக்காங்க
 
என்னடா நடக்குது இங்க ஆளாளுக்கு ஒரு பிளான் போட்டுக்கிட்டு மண்டையை குழப்பிக்கிட்டு இருக்காங்க
அவங்க அவங்களுக்கான இலக்குக்காக பிளான் போடறாங்க
 
Top