GG writers
Moderator
ரேணுகா
வேலன் (அத்தியாயம்-14)
அதன்பின் வீட்டில் சுஹானாவின் மாமா வேலன் தன் மருமகளை அழைத்து ஆபிஸ் பற்றி கேட்டறிந்தார்.
அப்பொழுது லேகாவை அமரச் சொல்லி அவளுக்கு ஊட்டிவிட இரவு உணவை எடுத்து வந்தார்.சுஹானா அதை பார்த்ததும் எழுந்து திரும்ப..
“மருமகளே எங்க போற உட்காரு.. எனக்கு நீயும்,லேகாவும் ஒன்னுதான் உனக்கும் சேர்த்து ஊட்டி விடுறேன்” என்றார் மாமா வேலன்.
“இல்ல மாமா பரவாயில்ல” என்று எழுந்தாள் சுஹானா.
“அப்ப நீ என்ன மாமான்னு சும்மாதான கூப்பிடுற”
“ஹய்யோ மாமா” என்று சட்டென அமர்ந்தாள் சுஹானா.
“கூச்சப்படாத மருமகளே மாமா உனக்கு அப்பா மாதிரி வாயை திற” என்று ஊட்டி விட்டார்.
அப்பொழுது சித்ரலேகா.. “அப்பா ஒரு கதை சொல்லேன்” என்றாள்.
“ஏன் டி அண்ணி நம்ம கதையே பெரிய கதையா ஓடிட்டு இருக்கு இதுல புது கதை வேற வேணுமாடி உனக்கு” என்றாள் சுஹானா.
அப்பொழுது தாத்தா அவர்களோடு அமர்ந்து “நான் கதை சொல்லட்டுமா” என்று கேட்டார்.
“சொல்லுங்க தாத்தா” என்றாள் ஆவலாய் சித்ரலேகா.
“உங்க அப்பா வேலனும், சுஹானா அப்பா சுரேந்திரனும் பற்றின கதை” என்றார் தாத்தா.
“தாத்தா எங்கப்பா பத்தியா” என்று சுஹானாவும்,லேகாவும் ஒரு சேர கேட்டனர்.
“ஆமா அம்மா..”என்றார் சிரித்தபடி தாத்தா.
“இது புதுசா இருக்கு எனக்கு தெரியாம என் அண்ணனுக்கும்,
அவருக்கும் என்ன” என்று கேள்வி கேட்டு அவர்களுடன் சேர்ந்து அமர்ந்தாள் ரேணுகா.
தாத்தா முன் கதை சொல்ல” பல வருடங்களுக்கு முன்”...
ரேணுகா வேலனை விட்டு யூ.எஸ் போன அந்த நாட்களில் வேலன் ஸ்ரீலேகா வீட்டினுள் சுரேந்திரனை
“மச்சான் ஒரு நிமிசம் நில்லுங்க” என்றான்.
வேலன் அழைத்ததும் சுரேந்திரனுக்குள் ஒரு மகிழ்ச்சி திரும்பி வந்து “என்ன இப்ப எப்படி கூப்பிட்டீங்க? கால் மீ ஓன்ஸ் அகெயின்” என்றார்.
“மச்சான்னு கூப்பிட்டேன்” என்றான் வேலன்.
“நான் உங்கள எப்படி கூப்பிடனும்” என்று
கேட்டார் சுரேந்திரன்.
அந்நேரம் சுதர்சன் அவர்களை கடக்க..வேலன் சுரேந்திரனிடம் சுதர்சனை கை காட்டி “அவர எப்படி கூப்பிடுவீங்க..?”
“பெயர் சொல்லிதான்” என்றான் சுரேந்திரன்.
“அது சரி..நீங்க என்ன மாப்பிள்ளைன்னு கூப்பிடணும்” என்றார் வேலன்.
“சரி மாப்பிளை எதுக்கு கூப்பிட்டீங்க..?”
“உங்க குழந்தைக்கு பை சொல்லாம போறீங்க” என்றான்
சட்டென அவன் முகம் வாடி.. “எங்களுக்கு குழந்தை இல்ல மாப்ளை..”
“அப்ப தங்கச்சி கையில இருக்கிற குழந்தை”என்று சுரேந்திரன் மனைவி சந்திராவை கை காட்டினான்.
“அது என் சிஸ்டர் சாருலேகாவோட குழந்தை” என்று வேகமாய் சொல்லி கடந்து போனான்.
அப்பொழுது சந்திரா வேலனருகே வந்தாள் குழந்தையோடு.. “அண்ணன் அவர் என்ன சொல்லிட்டு போறாரு” என்று கேட்டாள்.
“உங்களுக்கு கல்யாணம் ஆகி எத்தன வருஷம் ஆச்சு மா” என்று கேட்டான் வேலன்.
சட்டென புரிந்து கொண்டு “4 வருஷம் அண்ணன்” என்று சோகமாய் பதில் சொன்னாள்.
“எங்கம்மாவுக்கு கல்யாணம் ஆகி 6 வருஷம்
குழந்தையே இல்ல...எல்லாரும் நினைச்சாங்க குழந்தையே பிறக்காதுன்னு..ஆனா அப்படி இல்ல குழந்தை கடவுள் கொடுக்கிறது, நாங்க 4 பேர் எங்க
அம்மாவுக்கு பிறந்தோம்” என்று சந்திராவை தேற்றும் விதமாய் சொல்லிவிட்டு போனான் வேலன்.
சந்திரா வேலன் சொன்னதை நினைத்து ஒரு வித மனரம்மியமாய் புன்னகை செய்தாள்.
அதன்பின் இரவில் வேலன் அவன் அறையில் தனிமையாய் கையில் பரிசுபொருளை வைத்து பார்த்து கொண்டிருந்தான்.
அப்பொழுது சுரேந்திரன் உள்ளே வர வேலன்வேகமாய் பரிசை பின்னே மறைத்தான்...
“ஹேய் மாப்பிள்ளை என்ன மறைக்குறீங்க” என்று அவன் கையிலிருந்ததை வேகமாய் பிடுங்கினான் சுரேந்திரன்.
“ஹேய் இயர் ரிங் ..யாருக்கு..?” என்று கேட்டான் சுரேந்திரன்.
“உங்க தங்கச்சிக்கு” என்றான் வேலன்.
“மாப்ளை ரொம்ப மிஸ் பண்றீங்களா..? உங்களுக்கு யூ.எஸ் டிக்கெட் போடட்டுமா” என்று கேட்டான் சுரேந்திரன்.
“வேண்டாம் மச்சான். நான் போனா என் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணாங்கன்னா அவங்களால ஓர்க்ல ஃபோகஸ் பண்ண முடியாது,அவங்க அச்சீவ் பண்றதுக்கு நான் தடையா இருக்க கூடாதுல”.
அவன் சிரித்தபடி.. “சரி மாப்ளை அதான் கல்யாணம் ஆயிடுச்சுல இன்னும் என்ன அவங்க, இவங்கன்னு கூப்பிடுறீங்க ரேணுகாவ” என்று கேட்டான்.
“அப்படியில்ல மச்சான் கல்யாணம் ஆயிடுச்சு ஆனா என்னால அந்த உரிமை எடுக்க முடியல. அவங்க கூட பழக,பழகதான் அது மாறும்” .
“அப்ப ரேணுகா கிட்ட இப்ப என்ன உரிமையில பேசுறீங்க” என்று கேட்டான் சுரேந்திரன்.
“அவங்ககிட்ட சொல்லிராதீங்க மச்சான்..என் லைப் ஓட ஃபர்ஸ்ட் கேர்ள் ஃப்ரண்ட் உங்க தங்கச்சிதான்..அப்படி நினைச்சுதான் பேசுறேன்” என்றான் வேலன்.
சுரேந்திரன் சிரித்தபடி “உங்க கல்யாணத்துக்கு நான் எதுவுமே செய்யல என்ன வேணும்னு கேளுங்க மாப்ளை நான் செய்யுறேன்” என்றான்.
“மச்சான் நீங்க என் தங்கச்சி சந்திரா கூட டைம் ஸ்பெண்ட் பண்ணனும்.உங்க வீட்ல யாருமே ஒருத்தருக்காக ஒருத்தர் ஸ்பெண்ட் பண்ண மாட்டேன்றீங்க அது ரொம்ப கஷ்டமா இருக்கு”.
“அப்படியில்ல மாப்ளை நம்ம கம்பெனி, டார்கெட்
எல்லாமே நம்ம ரெஸ்பான்ஸிபிலிட்டி, ஓர்க் பிரஷர் அதனாலதான் ஸ்பெண்ட் பண்ண முடியறதில்ல”
“அப்படி சொல்லாதீங்க மச்சான்... தங்கச்சி யார்க்கிட்டேயும் ஷேர் பண்ண முடியாததை கூட உங்ககிட்டதான் சொல்ல முடியும்”.
“கரெக்ட்தான் மாப்ளை ஆனா...”
“ஆனா..ஆவன்னா எல்லாம் இல்ல, இப்பவே உங்க கேர்ள் ஃ ப்ரண்ட கூட்டிட்டு வெளிய போறீங்க” என்றான் வேலன்.
“மாப்ளை டைம் இப்ப நைட் 1 மணி” என்றான் சுரேந்திரன்.
“அதுக்கென்ன என் தங்கச்சி வெயிட் பண்ணுவா.. நீங்க காருக்கு பதிலா டூ வீலர்ல போங்க” என்றான் வேலன்.
“அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்” என்றான் சுரேந்திரன்.
“இதெல்லாம்மா அம்மாட்ட பெர்மிசன் கேட்பீங்க?அம்மாவுக்கு மரியாதை கொடுங்க ஆனா மனைவிக்கு மனசை கொடுங்க..மச்சான்”
“நாங்க என்ன புது ஜோடியா மாப்ள”
“மச்சான் மனைவியை உண்மையா நேசிக்கிறவங்களுக்கு ஒவ்வொரு நாளும் கல்யாண நாள்தான்.. நான் உங்க தங்கச்சியை அப்படிதான் பார்த்துக்கணும்னு ஆசப்படுறேன்” என்றான் வேலன்.
“இல்ல அம்மாவ நினைச்சா தான்..”என்று இழுத்தான் சுரேந்திரன்.
“யோவ் மச்சான் உனக்கு அவ்ளோ தான் மரியாதை என் தங்கச்சியை கூட்டிட்டு கிளம்பு..”
“இல்லடா மாப்ளை அது....”
“டேய் 4 வருஷம் என்னடா பண்ண கட்டுன பொண்டாட்டிய நைட் ரைடு கூட்டிட்டு போக பயப்படுற”.
“மாப்ளை ரொம்ப பேசுறடா நான் இப்பவே போரேன் பாருடா..”என்று சந்திராவை அழைத்து வெளியே சென்றான்.
அடுத்த நாள் காலையில் “என்னடா மச்சான்
ஜாலியா இருந்துச்சா நைட் ரைடு” என்று கேட்டான் வேலன்.
ஆமாம் என்று தலையசைத்தபடி “முடிவு பண்ணிட்டேன் மாப்ளை”
“என்ன என் தங்கச்சியை அடிக்கடி ரைடு கூட்டிட்டு போணும்னா” என்று கேட்டான் வேலன்.
“இல்ல தினமுமே கூட்டிட்டு போணும்னு” என்றான் சுரேந்திரன்.
“சூப்பர் டா மச்சான்..... இனி குழந்தை தன்னால பிறக்கும். நீ ப்ளான் பண்ண வேண்டாம் டா மச்சான்”.
“டேய் சும்மா இரு டா” என்று செல்லமாய் வேலன் வயிற்றில் குத்தினான் சுரேந்திரன்.
“பாரு மா தங்கச்சி மச்சான் என்ன குத்துறான்”.
“நீங்கதான் காரணமா அண்ணன்”.
“சந்திரா உன்ன என் 4வது தங்கச்சியா தான் நான் நினைக்கிறேன்” என்றான் வேலன்.
“ரேணுகா ரொம்ப லக்கி நீங்க அவளுக்கு கிடைச்சதுக்கு” என்றாள் சந்திரா.
“கரெக்ட்டா சொன்னம்மா சந்திரா” என்று சொல்லி கொண்டு வந்து அவர்களோடு சேர்ந்தார் ரேணுகாவின் அப்பா.
“மாமா நீங்க வேணா அத்தைய கூட்டிட்டு நைட் ரைடு போங்களேன்” என்றார் வேலன்.
“மாப்ளை ஸ்ரீலேகா எப்பவும் சோலோ ரைடு தான் மீறி பேசுனேன்..என்ன சோலோவாக்கி அனுப்பியிருவா.....” என்று கதையை தாத்தா சொல்லி முடிக்கவும் அமர்ந்திருந்த அனைவரும் தன்னை மறந்து சிரித்தனர்.
அப்பொழுது சக்திவேலன் அங்கு வந்து கோபமாய் “என்னப்பா பண்ணிட்டிருக்க நீ?”
“டேய் ஏன் கத்துற நீ..எல்லாரும் சந்தோசமாதானே பேசிட்டு இருக்கோம்”.
“இவளுக்கு ஏன் ஊட்டி விடற” என்று சுஹானாவை கை காண்பித்தான்.
“நீ எழுந்திருக்காத உட்காரு மா மருமகளே, அவளுக்கு நீ தாலி கட்டலன்னாலும் எனக்கு மருமகதான் அந்த உரிமையில தான் ஊட்டி விடுறேன்”.
“எனக்கு பிடிக்கல..”என்றான் சக்திவேலன்.
“உனக்கு பிடிக்கலன்னா போடா..மருமகளே இவன முதல் நாள் ஒரு அறை விட்டல்ல அதே மாதிரி எதுக்குடா தாலி கட்டுனன்னு கேட்டு ஒரு அறை விட்டிருந்தா மாமா சந்தோசப்பட்டு இருப்பேன்.”
“அப்பா”என்று சத்தமாய் கத்தினான் சக்திவேலன்.
“டேய் தங்கம் மாதிரி ஒரு பொண்ண தாலி கட்டிட்டு தள்ளி வச்சிருக்கியே நீயெல்லாம் மனுசனாடா..?”என்று வேலன் கேட்கவும் ரேணுகா கோபமாய் எழுந்து போனாள்,
சக்திவேலனும் வேகமாய் அவன் அறைக்கு சென்றான்.
வீட்டிலுள்ள அனைவரும் கலைந்து போயினர்.
ரேணுகா கோபமாய் கிச்சனில் நின்றாள்.
ரேணுகாவின் கணவன் வேலன் அங்கு சென்று “ஏன் கோபமா இருக்க..?”
“மகனை மருமக முன்னாடி திட்டுனா நாளைக்கு எப்படி சக்தியை அவ மதிச்சு நடப்பா..?”
“என் மருமக தங்கம்,உன் பையன் தான் மோசம்...”
“ஆமா நீங்க பெரிய அமைதியின் சிகரம்,பல வருஷங்களுக்கு முன்னாடி நீங்க என்ன செய்ஞ்சீங்களோ அதைதான் உங்க பையனும் செய்யுறான்.”
“அவன் இப்படி இருக்கிறதுக்கு நீதான் காரணம்” என்றான் வேலன்.
அப்பொழுது அவன் தங்கை சக்தி ரேணுகா பின் நின்று வேலனுக்கு கண்சைகை செய்து பேச ஆரம்பித்தாள்.
“ஆனா ஒன்னு அண்ணா நீ இப்படி
ஊட்டி விடுறதை பார்க்கறப்ப எனக்கு பழசுதான் ஞாபகம் வந்துச்சு”.
“நீ எதை சொல்ற சக்தி” என்று கேட்டான் வேலன்.
“ரேணுகா வர்றதுக்கு முன்னாடி வரையும் எங்களுக்கு தான ஊட்டி விடுவ..அண்ணா”
“அப்ப ரேணுகா வந்ததுக்கப்புறம்” என்று இழுத்தான் வேலன்.
“அவதான் உன்ன முழுசா முந்தானைல
முடிஞ்சிட்டாளே” என்று சக்தி சொல்லவும் அவள் வாயை மூடி “ஹேய் வயசுக்கேத்த பேச்சை பேசு டி” என்றாள் ரேணுகா.
“அவ கரெக்ட்டா தான சொல்றா ..”என்றான் வேலன்.
“நீங்களுமா..” என்று கேட்டாள் ரேணுகா.
தங்கை சக்தி அவர்களை விட்டு சற்று தூரமாய் சென்றாள்.
“ஓய்..என் முதல் கேர்ள் ப்ரண்டே” என்று ரேணுகாவை அழைத்தான் வேலன்.
“என்ன....... ?”என்று முறைப்பும்,சிரிப்புமாய் கேட்டாள் ரேணுகா.
“சாரி... கோபம் வந்தாலும் நம்ம மகனை தனியா கூப்பிட்டு பேசறேன்” என்றான் வேலன்.
சரி என்று சிரித்தபடி தலையசைத்தாள் ரேணுகா.
இதனை பார்த்த அத்தை சக்தி சிரித்தபடி திரும்பவும் அவள் மகன் வேலன் விஜயகுமார் நின்றான்.
“டேய் நீ எப்ப வந்த....?”
“ஏன்மா அந்த வேலன பொண்டாட்டியை பிரியவே விட மாட்டேன்ற, இந்த வேலன பொண்டாட்டி கூட சேரவே விட மாட்டேன்ற...”
“இல்ல டா சண்ட வர்ற மாதிரி இருந்துச்சு அதான்..”
“எதுவும் சொல்லாத ..உன்ன எதாவது திட்டிற போரேன்” என்று சொல்லி சக்தியை கடந்து போனான் மகன் வேலன் .
அதன்பின் அத்தை சக்தி சுஹானாவின் தாத்தாவிடம் சென்று..... “மாமா,சுஹானா
அப்பா,அம்மாவுக்கு என்னாச்சு” என்று கேட்டாள்.
“ரேணுகா வீட்ட விட்டு வந்த 2வது வருசத்துல தான் சுஹானா பிறந்தாம்மா.. சுஹானாவுக்கு 2 வயசு முடியறப்ப சுரேந்திரனும் சந்திராவும் சுஹானாவோட அவங்க திருமண நாள கொண்டாட வெளிய கிளம்புனாங்க, நீங்க 2 பேர் மட்டும் சந்தோசமா போயிட்டு வாங்க.. சுஹானாவ என்கிட்ட கொடுங்கன்னு நான் வாங்கிக்கிட்டேன் அன்னைக்கு நடந்த கார் ஆக்சிடென்ட்ல என் மகனும்-மருமகளும் அந்த இடத்துலேயே இறந்துட்டாங்க” என்று கண்ணீரை துடைத்து கூறினார் தாத்தா.
“சாரி மாமா...”
“இல்ல சக்தி..எல்லா பேரன், பேத்தியை விட எனக்கு சுஹானாவ ரொம்ப பிடிக்கும்.ஏன்னா அவ என் பேத்தியா தெரியல என் மக ரேணுகாவதான் தெரிஞ்சா..பாவம்மா சுஹானா அவளுக்கு நினைவு தெரியற வயசுலஅம்மா,அப்பா
இல்ல,நானும் ஸ்ரீலேகாவும் தான் அவளுக்கு எல்லா மா இருந்தோம்” என்று சொல்லி அழுதார் தாத்தா.
“அப்பா..சுஹானாவுக்கு அம்மா,அப்பா இல்லன்னு சொல்லாதீங்க..நானும்,வேலனும் அவளுக்கு அம்மா,அப்பாவுமா இருப்போம்” என்றாள் ரேணுகா.
“சரியா சொன்னடி அண்ணி” என்றாள் சக்தி.
பின் இரவில் சித்ரலேகா தனிமையில் கிச்சனுக்கு தண்ணீர் எடுக்க சென்றாள்.
அப்போது
வேலன் விஜயகுமார் வந்து அவளை வழி மறித்து பேச ஆரம்பித்தான், “மேடம் அமைதியாவே இருக்கீங்க..... பேச மாட்டீங்களா.....?”
“நீ என் கூட தனியா பேசக்கூடாதுன்னு சொன்னாங்கள்ல.. போய் உன் அம்மாவ கூட்டிட்டு வா பேசுவோம்” என்று அவன் கையை தட்டிவிட்டு போனாள்.
“ஹேய் பொண்டாட்டி நில்லு டி..சாரி..நீ பேசாம இருக்கிறது கஷ்டமா இருக்கு..திட்டிட்டாச்சும் 4 வார்த்தை என் கூட பேசிட்டு போ டி....”
“அதான் உங்கம்மா இருக்காங்கள்ல உனக்கு.....நான் எதுக்கு டா உனக்கு..?”
“அறிவில்லாம பேசாதடி..எனக்கு நீங்க 2 பேரும் 2 கண் மாதிரி.. 2பேரும் வேணும்.”
“முடியாது டா...ஒருத்தர்தான் இருக்கணும்”.
அவன் தலையில் அடித்தபடி கிளம்ப
“ஒரு நிமிசம் நில்லு..உன் செயின வாங்கிட்டு போ” என்று செயினை கழட்ட ஆரம்பித்தாள்.
வேலன் விஜயகுமார் அவள் கைகளை பிடித்து தடுத்து... “தாலி போடற மாதிரி நினைச்சுதான் இந்த செயின போட்டேன்..
வேண்டான்னு நினைச்சா கழட்டி கொடு” என்றான்.
லேகா கைகளை எடுத்து “இதை நீ உன் அம்மா முன்னாடி சொல்லிருக்கணும்..”
என்று சொல்லிவிட்டு அவனை கடந்து போனாள்.
அடுத்த நாள் காலையில் சுஹானா டிரஸிங் ரூமில் இருந்து வெளிவர தரையில் உள்ள தண்ணீரை கவனிக்காமல் கால் வைத்து வழுக்கி விழுந்தாள்.அவளால் கால்களை இருந்த இடத்திலிருந்து அசைக்க முடியவில்லை.
சக்திவேலன் அவளை பார்த்தும் பார்க்காதது போல தன் வேலையை செய்து கொண்டிருந்தான்.
பின்பு சித்ரலேகா சுஹானாவை பார்க்க அறைக்குள் வந்தவள் பதட்டமாய் போய்.
“பஃட்டி என்னாச்சு..”
“விழுந்துட்டேன் லேகா என்னால எழுந்திருக்க
முடியல ட்ரை பண்ணுனேன் அரைமணி நேரமாக
என்னால முடியல..”
“கையை கொடு” என்று அவளை தாங்கி பிடித்து பெட்டில் அமர வைத்து விட்டு அறையிலிருந்த அண்ணன் சக்தியிடம் சென்றாள்.
“மனுஷ தன்மை கொஞ்சம் கூட இல்லையாடா உனக்கு ..?” என்று கேட்டாள் லேகா.
“அவ நடிக்கிறான்னு நினைச்சேன்” என்றான் சக்தி.
“ஹோ..அப்படியா..”
என்று கோபமாய் அவனை பார்த்து “எத்தனை நாள் நைட்டும்,பகலும் 2 பேரும் வேலை செய்ஞ்சீங்க,
என்னைக்காவது ஒரு நாள் அவ உன்ன தப்பான எண்ணத்தோட பார்த்திருக்காளா..? இல்ல ஃப்ரண்ஷிப் லிமிட் மீறி உன்கிட்ட பழகியிருக்காளா..
சொல்லுடா”
இல்லையென்ற படி தலையசைத்தான் சக்திவேலன்.
“அவ அப்ப எப்படி கள்ளம் கபடமில்லாம உன் கூட இருந்தாளோ இப்பவும் அப்படியேதான் இருக்கா..நீதான் அவ விருப்பத்தை கூட கேட்காம தாலி கட்டுன மறந்துராத” என்று
கூறிவிட்டு
“பஃட்டி நான் உனக்கு ஜெல் எடுத்துட்டு வர்றேன்” என்று வெளியேறினாள்.
சித்ரலேகா பேசியதில் சக்திக்கு அடித்தது போல் இருந்தது.சக்தி சுஹானா அருகே சென்று அவள் வலது காலை பார்த்தான்.
அந்நேரம் வேலன் விஜயகுமார் சக்தி அறையினுள் வர
“டேய் மாப்ளை ரொம்ப வலிக்குதா...”என்று கேட்டான் சக்திவேலன்.
‘எனக்கு என்ன டா வலி’ என்று மாப்ள வேலன் யோசனையாய் பார்க்க சுஹானா சைகையில் அவன் உங்கள சொல்லல என்கிட்ட சொல்றான்.
“இவன டேய் மச்சான் என்ன பாரு”என்று மாப்ள வேலன் அழைக்க
சக்தி சுஹானா வின் கால்களை பார்த்தபடி “மாப்ள நீ போய் அத்தைய கூட்டிட்டு வா”
மாப்ள வேலன் எதுக்கு என்று கேட்கும் போதே சக்தி சுஹானா வின் கால்களில் எண்ணெய் ஊற்றி நீவ ஆரம்பித்தான்.
உடனே சுஹானா “அண்ணன் எனக்கு கால் வலி”என்றாள்.
மாப்ள வேலனும் சிரித்தபடி தன் அம்மாவை கூப்பிட போனான்.
சக்தி சுஹானாவிடம் “மாப்ள உன் காலுல சுளுக்கு எடுக்க போறேன் வலிக்கும் பொறுத்துக்கோ” என்று சொல்லியபடியே
அவள் கால்களில் அவன் அழுத்தி நீவவே சுஹானா வலி தாங்காமல் சக்தி வேலனின் தோளை அழுத்தி பிடித்து “அம்மா” என்ற படி கண்ணீர் விட்டாள்.
அவளின் கண்ணீரும்,வலியும் பார்த்த அவனுக்குள்ளும் ஏதோ ஒர் வலியை தந்து, அவனை அறியாமல் அவன் கண்களிலும் கண்ணீர் வர அதை மறைத்து எழுந்து அவளை விட்டு விலகி சென்றான் சக்திவேலன்.
அதன் பின் அத்தை சக்தியும்,வேலன் விஜயகுமாரும் உள்ளே வந்தனர்.
அத்தை சக்தி சுஹானாவின் கால்களை பார்த்து “நரம்பு சுருண்டு இருந்து சரி பண்ண மாதிரி தெரியுது,யாராவது சுலுக்கு எடுத்தாங்களா..?” என்று கேட்டாள் .
அதற்கு அவளது மகன் வேலன் “மச்சான் தான் தங்கச்சி கால்ல நீவி விட்டாரு” என்றான்.
“நம்ம சக்தியா..?”என்று ஆச்சர்யமாய் கேட்டாள் அத்தை சக்தி.
அந்நேரம் சித்ரலேகா ஜெல் ஓடு அறைக்குள் வந்தாள்.
“ஜெல் போட தேவை இல்ல...”என்று சொல்லி அத்தை சக்தி மற்றும் லேகா வெளியேறினார்கள்.
அதன்பின் வேலன் விஜயகுமார் சுஹானாவிடம்
“அப்புறம் தங்கச்சி 2 வது நாளே மச்சான கால்ல விழ வச்சுட்ட வேற லெவல் தான்..”
“அண்ணன் கிண்டல் பண்ணாதீங்க..கீழ விழுந்தப்ப கை கூட கொடுக்கல..லேகா
திட்டுனதால வந்து ஹெல்ப் பண்ணான்” என்றாள் சுஹானா.
“எப்படியோ தலைவர் இறங்கி வர்றார் ல” என்றான் வேலன்.
“அண்ணன் நாம 2 பேரும் ஒன்னா இருக்கும் போது மாப்ளன்னு கூப்பிட்டா உங்கள இல்ல என்னதான் கூப்பிடறான் சரியா..?நீங்க கோபிச்சுக்காதீங்க..”
“2,3 தடவை குழப்பமா இருந்துச்சு, இனி புரிஞ்சுக்கிறேன்.ஏன் அவன் நேரா பேச மாட்டானா..”என்றான் வேலன்.
“அவன் அமைதியா இருந்து கொல்றதுக்கு உங்க பெயரை சொல்லியாச்சும் பேசுறானேன்னு சந்தோசப்படுங்க”.
“சரி மா..நான் கிளம்புரேன்” என்று வெளியேறினான் வேலன் விஜயகுமார்.
சிறிது நேரத்திற்கு பின் சக்திவேலனை “அண்ணியாரே” என்று சத்தமாய் அழைத்தாள் சுஹானா.
அவனும் ‘யாரை கூப்பிடறா’ என்று அறை முழுதும் சுற்றி பார்த்தான்.
“உங்களதான் அண்ணியாரே சுலுக்கு எடுத்ததுக்கு தேங்க்ஸ்” என்றாள்.
“இம்சை பிடிச்சவடி நீ..”என்று முறுமுறுத்து கடந்து போனான் சக்திவேலன்.
சிறிது நேரத்திற்கு பின் ஆபிஸில் சுஹானாவை சூப்பர்வைசர் தினேஷ் கண்டிப்பாய் நடத்துவதும் ,அவள் தன் கால்வலியை மறைத்து நிற்க முடியாமல் நின்று வேலை செய்வதை 10அடி தூரத்தில் நின்று பார்த்த சக்திவேலனுக்கு கோபமாய் மனதினுள் ‘இவள யார் இங்க வந்து வேலை செய்ய சொன்னா’ என்று நினைத்தபடி அங்கிருந்த சக்கர நாற்காலியை ஆத்திரமாய் அவளை நோக்கி போகும்படி எட்டி உதைத்தான்.அவன் மிதித்த சக்கரநாற்காலி சுஹானாவிற்கு பின்னாக சென்று அவளை இடித்து அதில் அமர வைத்தது.அவள் அதிர்ச்சியாய் திரும்பினாள்.
அப்போது சக்திவேலன் திரும்பி லிப்ட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அப்பொழுது தாத்தா மயக்க நிலை தடுமாற்றமாய் விழ..அவருக்கு தோளை கொடுத்து தாங்கினான் சக்திவேலன்.
லிப்ட்டில் தாத்தாவை தன் கேபினுக்கு அழைத்து சென்று எம்.டி. சீட்டில் அமர வைத்து அவர் சட்டையின் 2 பட்டன்களை கழட்டி ஏ.சி.யை அதிகப்படுத்தி அவரது காலின் ஷுவை தரையில் அமர்ந்து கழட்ட......
“சக்தி விடுப்பா” என்றார் தாத்தா.
“தாத்தா ஹாஸ்ப்பிட்டல் போலாமா?”
“வேணாம்ப்பா காலையில பி.பி டேப்ளட் போட மறந்துட்டேன் அதான் மயக்கமா இருக்கு.”
சக்தி உடனடியாக போன் செய்து டீ ஆர்டர் செய்தான்.
அதை தொடர்ந்து “தாத்தா இங்க என்ன நடக்குது ?நீங்க ஏன் இந்த வேலை எல்லாம் செய்யுறீங்க?”
“அத சொல்ல கூடாது சுஹானாவோட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்” என்றார் தாத்தா.
“சரி இனி வேலை எல்லாம் செய்யாதீங்க” என்றான் சக்தி.
“அது எப்படி பேத்தி கோபப்படுவாளே..”
சக்தி தாத்தா காலின் அருகே அமர்ந்து ஷு வை கழட்டி கொண்டே கேட்டான் “அப்ப பேத்தி சொல்றதை தான் கேட்பீங்க உங்க பேரன் நான் சொன்னா கேட்க மாட்டீங்க..”
“அப்படியில்ல” என்று சிரித்தபடி “நீ பேத்தியோட
பேரனா சொன்னா கண்டிப்பா கேட்பேன்” என்றார் தாத்தா.
அப்பொழுது சுஹானா டீயோடு கேபினுக்குள் வந்தவள் “என்ன தாத்தா இது..இங்க இருக்கீங்க
“அதுவும் எம்.டி.சீட்ல யாராச்சும் பார்த்தா.. நான் உங்களுக்கு என்ன வேலை கொடுத்தேன்” என்று அதிகாரமாய் பேச
தரையிலிருந்த சக்திவேலன் எழுந்து நின்று “இது அவர் பொண்ணோட ஆபிஸ் அவர் கரெக்ட் ஆன சீட்ல தான் இருக்காரு” என்று பதில் சொன்னான்.
அவன் பேசியதும் திரும்பி நடக்க ஆரம்பித்தாள் சுஹானா.அப்பொழுது வேலன் விஜயகுமார் கேபினுள் வர..
“டேய் மாப்ள நில்லு டா”என்று சத்தமாய் சொன்னான் சக்தி.
சுஹானா சட்டென நின்றாள்.
மாப்ள வேலன் மனதிற்குள் ‘மறுபடியும் ஆரம்பிச்சிட்டான்’ உன்னதான தங்கச்சி கூப்பிட்டான் என்று கை சைகையில் கேட்டான் வேலன்.
சுஹானாவும் ஆமாம் என்று கண்களால் பதில் சொன்னாள்.
“அறிவு இல்ல,பி.பி டேப்லட் கொடுக்கல..கொண்டு வந்த டீயையும் திரும்பி கொண்டு போயிட்டு இருக்க” என்று திட்டினான்” சக்திவேலன்.
வேகமாய் தாத்தாவிடம் வந்தாள்
சுஹானா..
“சாரி..ரொம்ப சாரி தாத்தா என்று டீ யை கையில் கொடுத்தாள்.தன் யூனிபார்ம் பாக்கெட்டில் இருந்து பி.பி.டேப்ளட்டை எடுத்து தாத்தாவின் பாக்கெட்டில் வைத்தாள். “நீங்க ரெஸ்ட் எடுங்க நான் போரேன்” என்று கிளம்பினாள்.
இங்கு நடப்பதை எல்லாம் சிசிடிவி ஆப்ரேட்டர் ரூமிலிருந்து அத்தை சக்தியும்,ரேணுகாவும் கண்காணித்து கொண்டு இருந்தனர்.
அப்பொழுது
அத்தை சக்தி “பரவாயில்ல ரேணுகா நீ சிசிடிவியை
ஆடியோ ரெக்கார்ட் ஓட செட் பண்ணதால இவங்கள பார்க்க ஈ.ஸி.யாக இருக்கு.நான் கூட சக்தி மோசமோன்னு நினைச்சேன்.ஆனா அப்படியில்ல” என்றாள்.
“ஹேய் என் மகன் எவ்ளோ கோபக்காரனோ அவ்ளோ பாசக்காரன் அவங்க அத்தை சக்தி மாதிரி”என்றாள் ரேணுகா.
அத்தை சக்தி சிரித்தபடி மேலும் சிசிடிவியை பார்க்க அதில் அவள் மகன் வேலன் சித்ரலேகாவின்
பின் செல்வதும்,பேச முயற்சிப்பதையும் பார்த்து “இவன” என்று இருக்கையை விட்டு எழுந்து வெளிய போனாள்.
“ஏய் எங்க டி போற” என்று கேட்டாள் ரேணுகா.
“நீ இங்கேயே சிசிடிவில பாரு டி” என்று சொல்லி போனாள் சக்தி.
அதே நேரம் கீழே வேலன் விஜய்குமாரை சித்ரலேகா அருகே நிற்பதை பார்த்து அங்கு பணி செய்யும் ஒரு பெண். “சார் நீங்க யாரு? நேத்தும் உங்கள பார்த்தேன்.. இப்ப எங்க சின்ன மேடம் கூட நிற்குறீங்க” என்று கேட்டாள்.
“என் தங்கச்சியும்,
பொண்டாட்டியும் இங்கதான் வேலை செய்யுறாங்க. அவங்க எங்கன்னு உங்க சின்ன மேடம்கிட்ட கேட்டுட்டு இருந்தேன்” என்றான்.
“உங்க தங்கச்சி பெயர் சார் ?”
“சுஹானா” என்றான் வேலன்.
“ஹோ சுஹானவா இப்பவே கூப்பிடுறேன் சார்” என்று லேண்ட் லைனில் அழைத்தாள்.
அதன்பின்
“சார் உங்க ஃவொயிப் பெயர்” என்று அவள் கேட்டதும்
சித்ரலேகா பதட்டமாய் “நீங்க ஆடிட்டர்க்கிட்ட போன ஆர்டர் காப்பி பைல் மேனேஜர்கிட்ட இருக்கு வாங்கிட்டு வாங்க” என்று அவளை அனுப்ப..
வேலனோ..”ஹலோ என் பொண்டாட்டி பெயரை கேட்டுட்டு போங்க” என்று கத்த..
சித்ரலேகா வேகமாய் தன் கைகளால் அவன் வாயை மூடி “எதுவும் சொல்லாதடா...”
என்றாள்.
“பொண்டாட்டி க்லோஸ் அப் ல செமயா இருக்க டி..” என்று அவன் சொன்னதும் சட்டென கைகளை எடுத்து அவனை விட்டு விலகி திரும்பி நடந்தவளை..”எங்க டி போற என் பொண்டாட்டி” என்று அவள் பின் இருந்து அவள் கைகளை இழுத்தான்.
அந்நேரம் வேலன் அம்மா சக்தி அங்கு வந்து அவன் கைகளை ஓங்கி ஒருதட்டு தட்டி பிரித்து விட்டு
“என்னடா பண்ற..?, அவள இப்ப என்னன்னு கூப்பிட்ட” ..? என்று மிரட்டலாய் கேட்டாள் சக்தி.
அப்பொழுது சுஹானா அங்கு வந்து “என்ன நாத்தனாரின் மாமியாரே லவ்-பேர்ட்ஸ இப்படி பிரிக்கிறீங்களே...?”
“ஏய் ஒரு கல்யாணம் ஆகாத பொண்ண இப்படி கூப்பிடுறான் அவனுக்கு நீ சப்போர்ட்டா..”என்று கேட்டாள் சக்தி.
“அட மாமியாரே அண்ணன் அண்ணியை பார்த்த நிமிசத்துல இருந்தே இப்படிதான் கூப்பிடறாரு..அவள பெயர் சொல்லி கூப்பிட்டு நான் பார்த்ததே இல்ல..”என்றாள் சுஹானா.
“ஏன் டா கல்யாணமே ஆகல அவ உனக்கு பொண்டாட்டியா” என்று அவனை மேலும்,கீழுமாக பார்த்து முறைத்தாள் சக்தி.
சக்தி பேச பேச வேலன் தலைகுனிந்து திரும்பி “ஏன் மா அண்ணி கொடுமை,
மாமியார் கொடுமைன்னு நீங்க சேலஞ்சு பண்ணிட்டு
கடைசில என்ன கொடுமை பண்றீங்களே மா” என்றான் சுஹானாவிடம்..
“திரும்புடா வேலா இனி அவள அப்படி கூப்பிட்ட அவ்ளோதான்” என்று மிரட்டினாள் அம்மா சக்தி.
சித்ரலேகா மீண்டும் வேலனை திருப்பி “நீ
எப்பவும் போல என்ன கூப்பிடல அவ்ளோ தான்” என்று மிரட்டினாள்.
வேலன் தலையில் கை வைத்தபடி அமர்ந்து “உங்க 2 பேரையும் நான் கூப்பிடல இப்ப என்ன விட்டு தயவு செய்ஞ்சு போங்க” என்று கையெடுத்து கும்பிட்டான்.
இருவரும் அவனை விட்டு சென்றனர்.
“அய்யோ சுஹானா மண்ட சூடாகுது மா” என்றான் வேலன்.
“அண்ணன் ரிலாக்ஸா விடு வீட்ல போய் பார்த்துக்கலாம்” என்றாள் சுஹானா.