GG writers
Moderator
ரேணுகா
வேலன்
(அத்தியாயம் -15)
பின் இரவு நேரம் வீட்டின் மாடியில் அத்தை சக்தி,தாத்தா மற்றும் அவளது மகன் வேலன் விஜயகுமார் சேர்ந்து இருந்தனர்.அப்பொழுது அவளது மகன் உணவை தட்டில் வைத்து அம்மாவுக்கு ஊட்டி விட முயற்சி செய்தான்.அவளோ வேண்டாம் என கிளம்ப நினைக்கும் போது சித்ரலேகா எதிரில் வர..அவளை பார்த்ததும் “நீ ஊட்டி விடு வேலா” என்று மகனை பாசமாய் அழைத்தாள்.
அவன் உணவு ஊட்டுவதை பார்த்து சித்ரலேகா “ உலகத்துலேயே இல்லாத அம்மா,மகன்” என்று சொல்லி கீழ் இறங்கி போனாள்.
அப்பொழுது சுஹானா சித்ரலேகா காதில் ஒரு இயர் -போடை சொருகினாள். தாத்தாவின் மொபைல் கால் மூலம் மேலே அவர்கள் பேசுவதை அந்த இயர் போட் மூலம் அவள் கேட்பதற்காக...
மாடியில் வேலன் அவன் அம்மாவுக்கு உணவு ஊட்டிக் கொண்டே பேச ஆரம்பித்தான். “அம்மா
உன்கிட்ட அவள இன்ட்ரோ பண்ணும் போதே என் பொண்டாட்டின்னுதான சொன்னேன். நீ அப்ப ஒன்னும் சொல்லாம, இப்ப ஏன் மா இப்படி பண்ற” என்று தயவாய் கேட்டான்.
“அது அப்ப ஓகே டா..பட் இப்ப அவ உனக்கு வேண்டான்னு எனக்கு தோணுது.”
“ஏன் மா உனக்கு அவள பிடிக்கல..?”
“சரிடா உனக்கு ஏன் அவள பிடிச்சிருக்கு”
“அம்மா அவள பார்த்த நிமிசத்துல இருந்து இப்ப வரையும் அவ எனக்கானவன்னு மட்டும்தான் தோணுது.அவ நல்ல பொண்ணுமா, அவள வேண்டான்னு சொல்லாதம்மா..”
“டேய் உனக்கு வயசு கோளாறு டா..அத விட அவ உன் மாமா பொண்ணு,அழகா வேற இருக்கா அதுல வந்த அட்ராக்சன் தான தவிர இது லவ் இல்லடா தம்பி.”
“அம்மா நான் இதுவரைக்கும்.,ஏன் நம்ம காஷ்மீர்ல கூட என்கிட்ட பழகுற எல்லா பொண்ணையும் சிஸ்டர்ன்னுதான கூப்பிடுவேன் இவள மாதிரி யாரையும் நான் கூப்பிடலையே அப்புறம் எப்படி அட்ராக்சன் ஆக இருக்க முடியும்”
“அதே தான் நானும் சொல்றேன்டா அவ மாமா பொண்ணுன்றதால தான் உனக்கு இந்த ஃ பீலிங்”
“இல்லம்மா..நான் உனக்கு எப்படி புரிய வைக்கிறது என்று சொல்லியபடி கண்ணீர் விட்டு நீ ஆரம்பத்துலேயே அவள பிடிக்கலன்னு என்கிட்ட சொல்லியிருக்கலாம் அம்மா....”
“சொல்லியிருந்தா அவள விட்டிருப்பியா வேலா”
“இல்லம்மா,என் ஆசை அவகிட்ட சொல்லாமலே இருந்திருப்பேன். இப்ப கஷ்டமா இருக்குமா,நான் தான் அவ மனசுல ஆசைய வளர்த்தேன், நம்பிக்கை கொடுத்தேன், அவள இப்ப தவிக்க விட்டுட்டேனே அம்மா” என்று அழுதான்,
மறுபுறம் இயர் -போடில் இந்த உரையாடலை கேட்ட லேகாவின் கண்களும் கண்ணீரால் நிரம்பி வழிந்தது.
“உனக்கு அவ்ளோ இஷ்டம்னா நீ அவள கல்யாணம் பண்ணிக்கோ...ஆனா அம்மா உன் வாழ்க்கைல இருக்க மாட்டேன்” என்று வேகமாய் சொல்லிவிட்டு இறங்கி போனாள் அம்மா சக்தி.
தாத்தா வேலனிடம் போய் “அதான் அம்மா கல்யாணம் பண்ணிக்க சொல்லிட்டாள்ல” என்றார்.
“இல்ல தாத்தா எனக்கு அம்மாவும் வேணும்,பொண்டாட்டியும் வேணும் 2 பேரையும் என்ன விட்டு பிரிய விட மாட்டேன்”.
“அவங்கதான் புரிஞ்சுக்க மாட்டேன்றாங்களே டா பேரா..”
“தாத்தா புரிஞ்சுப்பாங்க நான் வெயிட் பண்ணுவேன்.”
“டேய் மாமியார்-மருமக சண்ட தீராதுடா நீ யாராவது ஒருத்தர் பக்கம் முழுசா இருந்தே ஆகணும்” என்றார் தாத்தா.
“தாத்தா அம்மாவுக்காக பொண்டாட்டிய விட மாட்டேன்,அதே நேரம் பொண்டாட்டிக்காக அம்மாவ விட மாட்டேன்” என்று உறுதியாக சொன்னான் வேலன்.
தாத்தா வேலனை அணைத்து கொண்டு “உன்ன மாதிரி நான் யாரையும் பார்த்ததே இல்லடா தம்பி.உன் நல்ல மனசுக்கு நீ நினைச்ச மாதிரி அவங்க 2 பேர் கூடவும் நல்லா வாழ்வடா” என்று அவன் கண்ணீரை துடைத்து கீழே அழைத்து போனார்.
மறுபுறம் லேகா இயர்-போடை
கழட்டி சுஹானாவிடம் கொடுத்து விட்டு கண்களின் கண்ணீரை மட்டும் துடைத்து கொண்டே எதுவும் பேசாமல் அவள் அறைக்கு போனாள்.
நடந்த அனைத்து உரையாடலையும் சுஹானாவும் மற்றொரு இயர்-போடில் கேட்டு என்ன செய்வதென்று தெரியாமல் தனிமையாய் மாடியில் நின்று கொண்டிருந்தாள்.அப்பொழுது ரேணுகா அவளை தேடி வந்து
“ஏன் சுஹானா தனியா நின்னு என்ன யோசிச்சிட்டிருக்க” என்று கேட்டாள்.
“அத்தை ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆக இருக்கு”
அவளை அணைத்து கொண்டே கேட்டாள்
“என்ன ஸ்ட்ரெஸ் உனக்கு அம்மாகிட்ட சொல்லு” என்று ரேணுகா சொன்ன மாத்திரத்தில் சுஹானாவின் கண் கலங்கியது.
“சுஹானா வா அங்க போலாம்”என்று சொல்லி ஸ்டோன் பெஞ்சில் அமர்ந்தனர்.
சுஹானா பேச துவங்கும் முன் ரேணுகா “முதல்ல அம்மா மடியில படு வா..அதுக்கப்புறம் நீ சொல்லு நான் கேட்கிறேன்” என்றாள்.
சுஹானாவும் ரேணுகாவின் மடியில் படுத்து பேச ஆரம்பித்தாள்.”அத்தையம்மா உங்க சக்தி பிரச்சனைதான் பெரிய பிரச்சனை..”
“என்ன பண்ணான் அவன்?”
“நான் உங்க மகனை சொல்லல, உங்க நாத்தனாரை சொன்னேன்.”
“ஏன் அவ என்ன பண்ணா” என்று கேட்டாள் ரேணுகா.
“அதான் சேலஞ்சு பண்ணாங்களே......”
“நீதான மா முதல சேலஞ்சு பண்ண இப்ப என் சக்தியை சொல்ற..”
“ஆனாலும் நீங்க கொஞ்சம் ஓவர் பாசம்தான் லேகா சொல்ற மாதிரி” என்றாள் துளிர் கோபமாக சுஹானா.
“ஏய் என் சக்தி நியாயத்தராசு மாதிரி அவ எது செய்ஞ்சாலும் அதுல நியாயம் இருக்கும்.”
“என்ன நியாயம் இருக்கும். மகனையும், மருமகளையும் பிரிச்சு வச்சிருக்காங்க” என்றாள் கோபமாக..
“அமைதியா...அம்மா சொல்றதை கேட்கணும்” என்று அவளை தட்டி கொடுத்து பேச ஆரம்பித்தாள். “அவளுக்கு அவ மருமக அவள மாதிரி எல்லா உறவுகளுக்காக நிற்கணும்னு ஆசை இதுல என்ன தப்பு சொல்லு.”
“என் அண்ணியும் உங்க நாத்தனார் மாதிரிதான்” என்றாள் சுஹானா.
“யாரு சித்ரலேகாவா..நான் அவ அம்மா டி”
“போங்க அத்தை நீங்க அவள புரிஞ்சுக்கல”
“நீதான் உன் அண்ணியை மெச்சிக்கணும்...சரியா” என்றாள் ரேணுகா.
“ஒரு நாள் என் அண்ணி சித்ரலேகா ஸ்ரீலேகா பாட்டி மாதிரி மாஸா தெரிவா அப்ப உங்ககிட்ட பேசிக்கிறேன்” என்றாள் சுஹானா.
“அதையும் பார்ப்போம்” என்றாள் ரேணுகா, சற்று அமைதியாகி “கம்பெனி பிரச்சனை என்னாச்சு” என்று கேட்டாள்.
“அந்த ப்ராசஸும் சித்ரலேகா-வேலன் கல்யாண விஷயம் மாறி போயிட்டே இருக்கு.”
“எல்லா சேர்ந்து உனக்கு ஸ்ட்ரெஸ் ஆகுதுல பேசாம சக்திக்கிட்ட சேலன்ஞ்சு வித் டிரா பண்ணி சரண்டர் ஆயிடு” என்றாள் ரேணுகா.
“அப்படி எல்லாம் ஸ்ட்ரெஸுக்கு பயந்து சரண்டர் ஆக முடியாது மாமியாரே...அதான் எனக்கு ஸ்ட்ரெஸ் ரீலிவ் பண்ண நீங்க இருக்கீங்களே” என்று ரேணுகாவின் கையை பிடித்து கொண்டு எனக்கு“நல்லா தூக்கம் வருது கொஞ்ச நேரம் இப்படியே தூங்கட்டுமா...”
“தூங்கு டி மருமகளே தூங்கு” என்று சிரித்து கொண்டே தட்டி கொடுத்தாள் ரேணுகா.சுஹானா ஒரு சில நிமிடங்களில் நல்ல உறங்கி போனாள், தாய் மடியை பார்க்காதவள் இப்பொழுது அத்தை வடிவில் தாய்மையின் அன்பை உணருகிறாள்.
அப்பொழுது ரேணுகாவின் கணவன் வேலன் அங்கு வந்தார்.
“இவ்வளவு நேரம் நீயும்,சுஹானாவும் பேசுனதை கேட்டேன் ரேணுகா நாமளே நம்ம சக்திக்கு பொண்ணு பார்த்திருந்தாலும் சுஹானா மாதிரி அமைஞ்சிருக்குமா... ?”என்று கேட்டார்.
“இல்லங்க ...சுஹானா நமக்கு கடவுள் கொடுத்த கிப்ட்” என்றாள் ரேணுகா..அப்பொழுது அத்தை சக்தி அங்கு வந்தாள்.
“என்ன அண்ணியாரே நீங்களும் அண்ணனும் சேர்ந்து என் பொண்ண மயக்குறீங்களா?” என்று கேட்டாள் அத்தை சக்தி.
“இல்ல சம்மந்தி அம்மா உங்க பொண்ணுக்கிட்ட நானும், என் வீட்டுக்காரரும்தான் மயங்கி நிற்கிறோம்”என்றாள் ரேணுகா.
“ஏய் சக்தி உன் மாமியார் கொடுமையை நிறுத்து டி பாவம் சுஹானா” என்றார் வேலன்.
“யார் இவளா பாவம்..?”என்று கேட்டாள் சக்தி.
“ஆமா பின்ன என்ன மிரட்டு,மிரட்டுற சக்தி ரூம்க்கு போ,ஆபிசுக்கு போன்னு சொல்ற” என்றார் வேலன்.
“அண்ணா நாத்தனாரின் மாமியார் கொடுமையை இப்பதான் ஆரம்பிச்சிருக்கேன் அதுக்குள்ள என்ட் கார்டு போட சொல்றியே..”
“சக்தி சுஹானா தாங்க மாட்டா டி” என்றாள் ரேணுகா.
“அதெல்லாம் தாங்குவா, தாங்குவா கஷ்டத்தையும் தாங்குவா , இந்த வீட்டு வாரிசையும் தாங்குவா” என்றாள் சக்தி.
“எங்க அதை பத்தி வாயை திறக்க மாட்டிக்கிறா என் மருமக” என்றாள் ரேணுகா.
“மாமியார் நம்மகிட்ட எப்படி டி சொல்லுவா..”
“எனக்கு நம்பிக்கையே வரமாட்டேங்குது டி என் மகன் சக்தியை தவிர மத்த எல்லாரை பத்தியும் யோசிக்கிறா என் மருமக” என்றாள் ரேணுகா.
“ரேணுகா சொல்றது கரெக்ட்” என்றார் வேலன்.
“அதெல்லாம் நல்ல படியா நடக்கும் டி” என்றாள் சக்தி.
“ஆமா எனக்கு ஒரு டவுட் டி தங்கச்சி என்ன தைரியத்துல சுஹானாவுக்கு டாஸ்க்கா கொடுக்கிற,அவ டென்சன் ஆகி நம்ம வீட்ட விட்டு போயிட்டா” என்று கேட்டார் வேலன்.
“அண்ணா ஸ்ரீலேகாங்கிற சிங்கத்தை உங்க யார்னாலயாச்சும் அடக்க முடிஞ்சுதா..அப்படி கர்ச்சிக்கிற சிங்கத்தை கொண்டு வந்து 20 நாள் சாதாரண வாழ்க்கைய வாழ வச்சு உன் வீட்ல அடைச்சுவச்சாளே என் மக..இவ சேலன்ஞ்சு,டாஸ்க்குக்கு பயந்து ஓடிப் போறவளா? இல்ல,அவளும் இரங்கி செய்வா,நானும் அவள வச்சு செய்வேன்,முடிவுல 2 பேரும் ஜெயிச்சிருவோம் பாரு”.
“நீ சரியா சொன்ன சக்தி” என்று சொல்லி கொண்டு வந்தார் தாத்தா.சுஹானவை எழுப்பினார் தாத்தா.அதன் பின் அனைவரும் தூங்க போயினர்.
அடுத்த நாள் காலை ஆபிசில் ப்ராஜெக்ட் சம்பந்தம்மான செமினார் ஒன்று தீடீரென நடைபெற மீட்டீங்கில் ரேணுகாவின் மகன் சக்தி நடுவில் நிற்க ஒவ்வொருவராய் கேள்வி கேட்க அவனோ பதில் சொல்ல முடியாமல் திகைக்க,கைகள் உதற, வியர்வை நெற்றியில் வடிய,கண் கலங்க நின்று கொண்டிருந்தான்.
அப்பொழுது சித்ரலேகா குறுக்கிட்டு மீட்டீங் வந்திருந்த அனைவரையும் டீ பிரேக்கில் உணவு அருந்த வருமாறு அழைத்து சென்றாள்.
அப்பொழுது சக்தி மீட்டீங் ஹாலை விட்டு தன் கேபினுக்கு சென்று கதவை திறந்து உள்ளே சென்றபோது சுஹானா சாய்வு நாற்காலியில் கால் மேல் கால் போட்டபடி பாட்டி ஸ்ரீலேகா போல திமிரான பார்வையாய் சக்தியை பார்த்தாள்.
சக்தி அவளருகே சென்றதும் சாய்வு நாற்காலியில் ஆடிக்கொண்டே பேச ஆரம்பித்தாள்.
“என்ன அண்ணியாரே..ப்ராஜெக்ட் செமினார்ல பதில் சொல்ல முடியலையா..”என்று திமிராய் கேட்டாள்.
சக்தி பதில் பேசாமல் முறைத்தான்.
“அப்படி முறைச்சா பயந்துருவோமா..”என்று சொல்லி கொண்டு தன் போனிடெயில் முடியை எடுத்து முன் போட்டு அதனை கையில் சுற்றிய படி “இந்த 3அடி கூந்தல் உதவி இல்லாம உன்னால ஒன்னும் பண்ண முடியாது” என்று ஜாடையாய் பேசினாள்.
சக்தி தன் கால்களை 2அடி எடுத்து அவள் முன் வேகமாய் செல்ல..அவளோ சாய்வு நாற்காலியை விட்டு வேகமாய் எழுந்து அவன் கண் முன் நெருங்கி
“இந்த ப்ராஜெக்ட் செமினார் சக்சஸா முடிக்கலன்னா, உன் மூக்குக்கு கீழ விரல் நீள முடி வச்சிருக்கிறதுக்கு அர்த்தமே இல்ல” என்று சொல்லிய படி தன் போனி டெயில் முடியை அவன் சட்டையில் ஓங்கி படும்படி தன் தலையை திருப்பி கேப்-ஐ சரி செய்தபடி முன் நடந்து போனாள் சுஹானா.
சக்தி வெறி கொண்ட வேங்கை போல தைரியமாய் மீட்டீங் ஹாலுக்கு சென்று கொஞ்சமும் பதட்டமில்லாமல் அனைவரின் கேள்விகளுக்கும் கம்பீரமாய் நின்று பதில் கூறி மீட்டீங்கை சக்சஸாக முடித்தான். மீட்டீங் முடிந்த கையுடன் டீ கொண்டு வர சொல்லி சுஹானாவை அழைத்தான்.
சுஹானா டீயுடன் மீட்டீங் ஹாலுக்குள் சென்ற போது அங்கு சக்தி மட்டும் தனிமையாய் சாய்வு நாற்காலியில் கால் மேல கால் போட்ட படி ஆடிக் கொண்டிருந்தான்.சுஹானாவை பார்த்ததும்
“என்ன மாப்ளை இந்த சக்சஸை நீ எதிர்பார்க்கலையா..”என்றான்.
சுஹானா தலைகுனிந்து நின்றாள்.
“3 அடி கூந்தல்ன்னாலும் இந்த விரல் நீள
மீசைக்கிட்ட குனிஞ்சுதான் ஆகணும்”என்றான் .
சுஹானா சற்று தலை நிமிர சக்தி சாய்வு நாற்காலியை விட்டு வேகமாய் எழுந்து அவள் கண் முன் நெருங்கி தன் மீசையை முறுக்கி கம்பீரமாய் பார்த்து அவளிடம் “நீ 3அடிக்கு முடி வச்சிருந்தாலும்
இந்த விரல் நீள மீசைதான் எப்பவும் ஜெயிக்கும்”என்ற் சொல்லி கடந்து போனான்.
சுஹானா அவனை பார்த்து கண்களால் புன்னகை செய்து அவள் வேலையை செய்ய போனாள்.
சிறிது நேரத்திற்குப் பின் வேலன் விஜயகுமார் மச்சான் சக்தியை பார்க்க..அவன் கேபினுக்குள் செல்ல..சக்தி
அவனை பார்த்ததும் உற்சாகமாய் “டேய் இன்னைக்கு உன் தங்கச்சியை எப்படி ஜெயிச்சேன்னு தெரியுமா” என்றான்.
“போடா..”இந்த வீடியோவ பாரு என்று மொபைலை அவன் கண்முன் காண்பித்தான் மாப்ள வேலன்.
வீடியோவில் சக்தி மீட்டீங் ஹாலை விட்டு வெளியே சென்றதும் லேகா உள்ளே வந்தாள்.
லேகாவும்,சுஹானாவும் ஒருவரையொருவர் பார்த்து அடக்க முடியாமல் வயிறு குலுங்க சிரித்து கொண்டு கையொடு கையடித்து கொண்டனர்,
“என்னால் சிரிப்பை கன்ட்ரோல் பண்ண முடியல அவன் டயலாக் பேச பேச..அதான் தலை
குனிஞ்சிட்டேன்” என்றாள் சுஹானா.
“ஹேய் சக்தி சொதப்புறான்னுதான போன்ல சொன்னேன் நீ பிரேக் கூட்டிட்டு போக சொன்ன..அதுக்குள்ள எப்படி அவன பேச வச்ச...”
“சோ சிம்பிள் மா அவனுக்கு முன்னாடி என்ன
பிடிக்கும், அதனால நான் எதிர்ல வந்து நின்னேன் அவன் ஜெயிச்சான்,இப்ப அவனுக்கு என்ன பிடிக்காது அதான் எதிரியா வந்து நின்னேன் ஜெயிக்கவச்சேன்” என்றாள் சுஹானா. வீடியோ முடிந்தது
“இப்ப சொல்லு டா ஜெயிச்சது நீயா..? என் தங்கச்சியா..?”என்று கேட்டான் வேலன் விஜயகுமார்.
சக்தி பதில் எதுவும் சொல்ல முடியாமல் அவனை பார்த்தான்.
“டேய் மச்சான் நீ மட்டுமில்ல உலகத்துல இருக்கிற எல்லா மீசையும் கம்பீரமா நிமிர்ந்து
நிற்கிறதுக்கும் இந்த மாதிரி 3அடி கூந்தல்தான் காரணம் மறந்துராத..”என்று சொல்லி வெளியேறினான் வேலன் விஜயகுமார்.
சுஹானா வேலைகளுக்கு மத்தியில் சக்தி கம்பீரமாய் மீசையை முறுக்கியது அவள் நினைவுக்கு வர தன்னை மறந்து சிரித்தாள்.
தாத்தா சுஹானாவிடம் “என்னாச்சும்மா” என்று கேட்டார்.
“ஒன்னுமில்ல தாத்தா” என்ற சிரித்தபடி பதில் சொல்லி போனாள்.
தாத்தாவுக்கோ கண்ணீரும் புன்னகயும் சேர்ந்து வந்தது அப்போது பேரன் வேலன் விஜயகுமார் வந்து
“என்ன தாத்தா என்னாச்சு?”
“சுஹானாவ இப்படி சந்தோசமா பார்த்து ரொம்ப நாளாச்சு..பேரா” என்றார்.
“இனி தங்கச்சியை இப்படிதான் பார்ப்பீங்க சோ நோ ஃ பீலிங்ஸ்” என்றான் வேலன்.
சுஹானா தனியாக சென்று தன் மொபைலில் கேலரியில் கம்பெனி ஆண்டு விழாவின்போது சுஹானாவும்,சக்தியும் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோவை வால்பேப்பர் ஆக செட் செய்தாள்.அதன் பின் வால்பேப்பரை பார்த்து...... ‘நீ மீசைய முறுக்கும் போது அழகுதான்டா’ என்று மனதினுள் நினைத்து சிரித்தாள்.
சக்தி தன் கேபினில் தன் சட்டை பட்டனில் மாட்டியிருந்த சுஹானாவின் முடியை கையில் எடுத்து, சுஹானாவின் திமிரான பார்வையும்,பேச்சும் அவனுக்கு நினைவு வர தன்னை மறந்து சிரித்தான்.
‘உன் திமிர் கூட அழகு தான் டி’ என்று மனதினுள் நினைத்து அவளின் முடியை பத்திரமாய் தன் வாலட்டில் அவனது அம்மாவின் போட்டோவை சுற்றிய படி வைத்தான்.
சக்தி எழுந்து புரோடக்சன் யூனிட்டிற்கு நடந்து போக..சுஹானா மகிழ்ச்சியோடு சிரித்தபடி கம்பெனியை விட்டு தனியே வெளியே வர அப்போது சுஹானாவின் எதிராக ஒருவன் வந்து நின்று அவளிடம் பேச..அவள் முகம் மாறி பேச வார்த்தையின்றி கண்ணீரோடு தலைகுனிந்து நின்றாள்.
இதையெல்லாம் மாடியில் புரோடக்சன யூனிட்டிலிருந்து தாத்தா பார்த்து அங்கிருந்த ஒரு இரும்பு பைப்பை வேகமாக எடுத்தார்.இதை பார்த்த
பேரன் வேலன் “தாத்தா அதை ஏன் எடுக்குறீங்க” என்றான்.
“என்ன விடு பேரா ...அவன கொல்லாம விட
மாட்டேன்” என்று சுஹானாவிடம் பேசிக் கொண்டிருந்தவனை கை காண்பித்தார்.
“யார் தாத்தா அவன்..?” என்று கேட்டான் வேலன் அதிர்ச்சியாய்
“சுதர்சன் ஓட மூத்த பையன்...”என்றார் தாத்தா
“சுதர்சன் பையன்னா உங்க பேரன் தான தாத்தா..?அவர ஏன் அடிக்க போறீங்க?”
“என் சுஹானாவ மணமேடை வரை கூட்டிட்டு வந்து ஏமாத்துனவன் அவன்..என் பேத்திக்கு தாலி கட்ட வேண்டிய நேரத்துல வேற ஒருத்திக்கு தாலிகட்டி மணமேடை முன்னாடி வந்து நின்னான். அன்னைக்கு சுஹானா என்ன தடுத்திட்டா இன்னைக்கு இவன கொல்லாம விடமாட்டேன்” என்றார் தாத்தா.
“தாத்தா தங்கச்சிக்கு அண்ணன் நான் இருக்கேன் நான் கேட்கிறேன் அதை என்கிட்ட தாங்க” என்று பைப்பை பிடுங்கினான். இதையெல்லாம் பின் நின்று கேட்டான் சக்திவேலன்.
சுஹானாவுக்கோ கண்ணீர் மட்டும் அருவி போல் வந்தது எதிர்நின்று அவன் பேச பேச...
அப்பொழுது உரத்த சத்தமாய் “டேய் மாப்ளை நில்லுடா” என்று சக்தியின் குரல் கேட்க சுஹானா
வேகமாய் திரும்பிய போது சக்திவேலன் தாத்தா மற்றும் மாப்ளை வேலனை கடந்து சுஹானாவிடம் வந்தான்.
சுஹானாவுக்கோ வேதனையுடன்,பயமும் மனதில் பற்றி தலைகுனிந்தவாறே கண்ணீருடன் நின்றாள்.
சக்திவேலன் சுஹானா கண்முன் நெருங்கி நின்று “தப்பு பண்ணாதான் தலை குனியனும்” என்று சொல்லும் போதே எதிரில் இருந்தவன் சுஹானா
“இவன் உனக்கு எத்தனாவது ஆளு” என்று சக்தியை கைகாட்டி கேட்க,சக்தி தன் பின் கைமூட்டுகளால்
அவன் வாயை உடைத்துவிட்டு”நிமிர்ந்து பாரு” என்று சத்தமாய் கத்தினான்.
சுஹானா தலை நிமிர சக்தி அவன் பக்கமாய் திரும்பி எட்டி உதைத்து நெஞ்சில் ஏறி மிதித்தான் அவனை எழும்ப விடாமல் நெஞ்சில் 5,6 மிதிகள் மிதித்து...கடைசியாக அவன் கழுத்தில் கால் வைத்து நெருக்கினான்.அப்பொழுது சுஹானா பதட்டமாய் வேண்டாம் என்பது போல் சக்தியின் கையை பிடித்து தடுத்தாள்.
சக்தி அவன் கழுத்தில் கால் வைத்தவாறே சுஹானாவின் கையை பிடித்து “இவ என் வீட்டுப்பொண்ணு தப்பா பேசுன உனக்கு தலை இருக்காது” என்று அவனை எச்சரித்து விட்டு அவள் கையை பிடித்து கம்பீரமாய் கார் பார்க்கிங் நோக்கி அவளை கூட்டி சென்றான்.
அவளும் கண்ணீரை துடைத்து தைரியமாய் அடி வாங்கியவனை பார்த்தபடி சக்தியோடு நடந்து போனாள்.
சக்தி கார் கதவை திறந்து சுஹானாவை அமரும்படி கண்சைகையில் சொன்னான். அவள் அமர்ந்ததும் சக்தியும் உள்ளே அமர்ந்து காரை இயக்கினான்.
அதன்பின் வேலன் விஜயகுமார் அடி வாங்கியவனை எழுப்பி “ஏன் டா என் மச்சான் அடுத்த வீட்டு பொண்ண தப்பா பேசுனாலே அடிப்பான் நீ அவன் பொண்டாட்டியவே பேசுனா விட்டு வைப்பானாடா..தாத்தா இவன் வாயை பாருங்களேன் இன்னும் ஒரு வாரத்திற்கு சோறு சாப்பிட முடியாத அளவுக்கு மச்சான் உடைச்சு விட்டுருக்கான் நாம வேற அடிக்கணுமா தாத்தா..?”
“பேரா அந்த நாயை விட்டுட்டு வாடா நாம போலாம்” என்றார் தாத்தா.
நடந்த எல்லா நிகழ்வையும் அத்தை சக்தியும்,ரேணுகாவும் சிசிடிவியில் பார்த்து மகிழ்ந்தனர்.
அதன்பின் வேலன் தாத்தாவை ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி விட்டு லேகாவுக்காக பார்க்கிங்கில் காத்திருந்தான்.சித்ரலேகா வந்ததும் “உன் கூட கொஞ்சம் பேசணும் வெளிய போலாமா..?” என்று கேட்டான்.
அவளும் சரி என் தலையசைத்து அவனை ஸ்கூட்டியில் ஏற்றி காபி ஷாப்புக்கு அழைத்து சென்றாள். அங்கு காபி ஆர்டர் செய்துவிட்டு பேச துவங்கினாள் லேகா.
“வேலா நேத்து நீ உன் அம்மாகிட்ட பேசுனதை நான் கேட்டேன். உன் ஆசை நிஜத்துல நடக்காது.என்ன விட்ரு உன் அம்மா ஆசைப்படி கல்யாணம் பண்ணி நல்லா இரு.”
“ஏய்..என் கண்ண பார்த்து பேசு டி..”
“என்ன விட்ரு வேலா..”
“உன்ன விடறதும் உயிரை விடறதும் ஒன்னுதான் விட்ரவா..?சொல்லு டி..,ரொம்ப சந்தோசம் நான் வேற ஏதோ சொல்ல வந்தேன் நீ ரொம்ப நல்லா சொன்ன..இப்பவே விட்டுரேன்” என்று எழுந்து காபி ஷாப்பை விட்டு வெளியே வந்து லாரி மீது விழுகப் போனவனை இழுத்து ஓரமாய் தள்ளினாள் லேகா.
“ஏய் வழியை விடுடி நான் எப்படி போனா உனக்கென்ன” என்றான் வேலன்.
“டேய் எமோசன் ஆகி அறிவில்லாம முடிவெடுக்காத, நம்ம 2 பேர்ல யாராவது ஒருத்தராவது
நல்லா வாழணும்னுதான் அப்படி சொன்னேன்.”
“நான் இல்லாம நல்லா
வாழ்வியா..”என்று கேட்டான்.
அமைதியாயிருந்தாள் லேகா.....
“ஆனா நீ இல்லாம நான் வாழ மாட்டேன் டி” என்றான் வேலன்.
“ஏன் டா என்ன உயிரோட கொல்ற..... உன்னோட இந்த பாசம், நீ ஆசைப்படற மாதிரி நானும் உன் அம்மாவும் சேர்ந்திருந்தா இல்லாமாலே போயிடும்.எனக்கும் உன் அம்மாவுக்கும் ஒத்து வராது.”
“ஹேய் அப்படியில்லடி உனக்கு நான் வேணும்னா வா காபி ஷாப் உள்ள போய் பேசலாம் வேண்டான்னா இப்படியே என்ன விட்டுட்டு போ” என்றான் வேலன்.
அவனை வேகமாய் கடந்தவள் ஒரு நிமிடம் நின்று திரும்பி அவனை பார்த்து விட்டு காபி ஷாப்புக்குள் சென்றாள். அவனும் அவள் பின்னே காபி ஆர்டர் செய்த இடத்திற்கே போய் அமர்ந்தனர்.காபி வந்தது.
“என்ன சொன்ன லேகா என் அம்மா கூட நீ இருந்தா உன் மேல இப்ப இருக்கிற பாசம் எனக்கு இல்லாம போயிடுமா” என்று கேட்டான் வேலன்.
“ஆமா..ஏன்னா நீ உன் அம்மாவுக்குதான் இம்பார்ட்டன்ஸ் கொடுப்ப எனக்கு கோபம் வரும், பிரச்சனை வரும் முடிவுல நீ என்ன விட்டு பிரிஞ்சு போயிடுவ..இதுதான் நடக்கும்,நாம கல்யாணம் பண்ணி தனியா இருந்தா நமக்குள்ள பிரிவு வர்ற அளவுக்கு பெரிய சண்ட வராதுன்னு எனக்கு தோணுது” என்றாள் லேகா.
“அதாவது நாம தனியா இருந்தா அன்பு குறையாது,மாறாதுன்னு சொல்ற அப்படிதான..”
“ஆமாடா அதுதான் எதார்த்தம்...”
“சரி லேகா நமக்கு இப்ப கல்யாணம் ஆயிடுச்சு நாம தனியா இருக்கோம்.நான் ஓர்க் முடிஞ்சு வீட்டுக்கு வர்றேன் காபி எத்தன கப் போடுவ.?”
“என்னடா சம்மந்தமில்லாம பேசுற...”
“சம்மந்தமிருக்கு நீ பதில் சொல்லு நான் சொல்றேன்.”
“2 கப் ஒன்னு உனக்கு, இன்னொன்னு எனக்கு” என்றாள்.
“சரி இப்ப நமக்கு கல்யாணம் ஆகி நான் சொல்ற மாதிரி என் அம்மா கூட இருக்கோம்.நான் ஓர்க் முடிஞ்சு வீட்டுக்கு வர்றேன் காபி எத்தன கப் போடுவ பதில்
சொல்லு.”
கரகரப்பான குரலில் “3 கப்” என்றாள்.
“இல்லடி அப்பவும் 2 கப் தான் ..”
“அதெப்படி 2 கப் தான்” என்று தீவிரமாய் கேட்டாள்.
“1 கப் என் அம்மாவுக்கு, இன்னொரு கப் உனக்கும்,எனக்கும்.நீ குடிச்சிட்டு மிச்சம் வச்சாலும் நான் குடிப்பேன்,நான் குடிச்சிட்டு மிச்சம் வச்சாலும் நீ குடிப்ப..இது தான் நான் சொல்ற பேமிலி லைப்.,நீ சொல்ற மாதிரி தனியா இருந்தா நாம ஒன்னாவே இருந்தாலும் வேறவேற கருத்துகளோடு தனிதனி ஆளாதான் இருப்போம்.அதே நான் சொல்ற மாதிரி பேமிலியோட இருந்தா தனி தனி ஆளா இருந்தாலும் நம்ம உயிரும்,மனசும் எப்பவும் ஒன்னா இருக்கும் யோசி டி” என்றான்.
“உன் அம்மாவ மீறி உன்னால அன்பு காட்ட முடியும்னு நினைக்குறியா வேலா” என்று கேட்டாள்
“ஹேய் முடியும் டி..நாம ஒன்னா இருக்கும் போது விட்டு கொடுக்க வேண்டிய சூழ்நிலை நிறைய வரும்..ஆனா அதை தாண்டி நம்ம பொண்டாட்டி நமக்காக தானே இருக்கா,நம்ம குடும்பத்தை தாங்கி பிடிச்சிருக்கான்னு..உன் மேல அன்பு அதிகமாகுமே தவிர குறையாது டி.”
அவனுடைய வார்த்தைகள் அவளுக்குள் ஓர் உணர்வை தந்து சற்று யோசிக்க வைத்தது அதற்குள் லேகா செல்போன் சிணுங்க..எடுத்து பேசினாள்
“வேலா போலாம் வீட்ல இருந்துதான் போன் பண்ணாங்க.”
“நான் சொன்ன விஷயம் டி..”என்று கேட்டான்.
“வேலா எனக்கு கொஞ்சம் டைம் கொடு நான்
யோசிக்கணும்” என்றாள்.
“பொறுமையா யோசி உனக்கே உண்மை புரியும்” என்றான். இருவரும் கிளம்பினர்.