வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ரேணுகா 💝வேலன் (அத்தியாயம்-16)

GG writers

Moderator
ரேணுகா 💝வேலன்
(அத்தியாயம்-16)

பின் இரவில் சுஹானா,சக்திவேலன்,வேலன் விஜயகுமார்,லேகா என நால்வரும் ஒன்றாய் மாடியில் அமர்ந்திருந்தனர்.

“அண்ணியாரே” என்று சக்தியை அழைத்தாள் சுஹானா.

அவனும் மறுமொழியாக “சொல்லு மாப்ள எதுக்கு கூப்பிட்ட”என்றான்.

லேகா குழப்பமாக சுஹானா-சக்தியை பார்த்தாள்.

“எதுக்கு அவன அந்த அடி அடிச்ச”என்று கேட்டாள் சுஹானா.

“நான் யாரை டி அடிச்சேன் பஃட்டி” என்றாள் லேகா.

வேலன் விஜயகுமார் நடப்பதை புரிந்து கொண்டு லேகாவை தனியே அழைத்து போய் “சுஹானா உன்ன கூப்பிடல,மச்சானதான் அண்ணியாரேன்னு கூப்பிட்டா,அதே மாதிரி மச்சானும் என்ன மாப்ளன்னு
கூப்பிடல சுஹானாவதான் கூப்பிட்டான்.” மேலும் ஆபிசுல நடந்ததை எல்லாம் லேகாவிடம் கூறினான்.

“இது புது கதையா இருக்கே...பஃட்டி வர்றேன் இரு” என்றாள் லேகா.

அப்பொழுது சக்திவேலன் சுஹானாவிடம் “என் ஃ ப்ரண்ட ஏமாத்துனதுக்கே அவன மிதிக்கணும்னு நினைச்சேன் இன்னைக்கு வசமா சிக்குனான் அதான் அடிச்சேன்” என்றான்.

அதே நேரம் லேகா வேலனிடம் “புது லவ் ஸ்டோரி வெப்-சீரிஸ் வந்திருக்கு தெரியுமாடா..”

“தெரியாதே ..ஆமா அந்த வெப்-சீரிஸ் பெயர் என்ன?”

“சுஹானா-சக்திவேலன்” என்றாள் லேகா.

லேகா சொன்னதும் “எனக்கு வேலை இருக்கு நான் கீழ போரேன்” என்று வேகமாய் போனாள் சுஹானா.

லேகா சிரித்தபடி “ஏன் டா அண்ணா அவன அடிச்ச மாதிரி நீ இவனையும் அடிச்சிருக்கணும், என்ன நிச்சய மேடை வரை கூட்டிட்டு போய் ஏமாத்திட்டான்” என்றாள்.

“விடுடி தாலி கட்டாம ஏமாத்துனா னா இவன ஸ்கெச்சு போட்டு செய்ஞ்சிரலாம்” என்று சொல்லிவிட்டு கடந்து போனான் சக்தி.

“டேய் மச்சான் நான் உன் மாப்ளைடா எனக்கே ஸ்கெச்சா..?”என்று சொல்லிய படி லேகாவை பிடித்து “ஏன் டி அதான் டெய்லி உன் அழகாலேயே கொல்றியே தனியா ஆள் வச்சு வேற கொல்லணுமா” என்று அவன் ஆசையாய் கேட்ட போது..

வேலனின் அம்மா சக்தி 10அடி தூரத்தில் நின்று “டேய் அங்க என்னடா பண்ற..?” என்று கேட்க பிடித்த கையை விட்டான்.

“அம்மா உன்ன வச்சிட்டு நான் அவள ஒன்னுமே பண்ண முடியாது” என்று புலம்பி சென்றான் வேலன்.

அடுத்த நாள் காலையில் ஆபிசில் சக்திவேலன் தன் கேபினில் அமர்ந்து வேலை செய்யும் போது சித்ரலேகா, சுஹானா,தாத்தா என மூவரும் உள்ளே வந்தனர். அப்பொழுது லேகா சக்தியை அழைத்து “முக்கியமான விஷயம் உன்கிட்ட சொல்லணும்” என்றாள்.

“இப்ப வேண்டாம் வீட்ல போய் பேசிக்கலாம்”என்றான்

அப்பொழுது தாத்தா தலையிட்டு “பேரா சொல்றத கேளுப்பா” என்றார்.

அவனோ மனதினுள் ‘சுஹானாவை பற்றி பேச வந்துள்ளனர்’ என்று எண்ணி “தாத்தா எனக்கு நிறைய வேலை இருக்கு நீங்க வீட்டுக்கு போங்க” என்றான்.

அப்பொழுது சுஹானா “அண்ணியாரே அவங்க சொல்ல வர்றதை முதல்ல கேளு” என்று சக்திவேலனை நோக்கி சொன்னாள்.

அவனோ சட்டென நாற்காலியை விட்டு எழுந்து “நீ சொல்ற எதையும் என்னால கேட்க முடியாது” என்று கோபத்துடன் சத்தமாய் சொல்லிவிட்டு திரும்பி நின்றான்.

சுஹானா அப்பொழுது வெகு சத்தமாய்.. “மிஸ்டர் சக்திவேலன் நான் ஒன்னும் உங்க
ஃ வொயிப் இல்ல, நீங்க திரும்பி நின்னா அமைதியா போறதுக்கு” என்று கத்தினாள்.

அவன் திரும்பி “வாட் டூ யூ வான்ட் ?”என்றான்.

“ஐ வான்ட் ஜஸ்டிஸ்” என்றாள் சுஹானா.

“எனக்கு புரியல” என்றான் சக்தி.

“உங்களுக்குதான் சொன்னா புரியாதே..யூ
ஜஸ்ட் சிட் அண்ட் வாட்ச் தி சிசிடிவி ஆபரேட்டர் ரூம்” என்றாள் சுஹானா.

அப்பொழுது சக்தியிடம் லேகா “வா ஆபரேட்டர் ரூம்க்கு போலாம்,உனக்கு எல்லாம் புரியும்” என்று அவனை அழைத்து போனாள்.

அங்கு கான்பிரன்ஸ் ஹாலை மட்டும் சூம் செய்து காண்பித்தாள். அதில்
சக்தியின் பணியாளர்கள் மூன்று பேர்
மேனேஜர் சிவா,டிசைனர் கார்த்திக்,சூப்பர்வைசர் தினேஷ் உள்ளே இருந்தனர். அப்பொழுது சுஹானா அறையினுள் சென்றாள்.

சுஹானா அவர்கள் மூவரை பார்த்து “போன வாரம் ஏன் புரொடக்ட் டிசைன் மாறுச்சு,ஏன் டெலிவரி பண்ணும் போது குவாண்டிட்டி லெவல் குறைஞ்சுச்சு அண்ட் மேனேஜர் பாபுவை நீங்க என்ன பண்ணுனீங்க” என்று கேட்டாள்.

சூப்பர்வைசர் தினேஷ் கோபமாய் “நீ எங்கள கேள்வி கேட்குறியா..பெரிய முதலாளின்னு நினைப்பா உனக்கு” என்று மிரட்டினான்.

“டேய் முதலாளிதான் டா நான்..”சுஹானா வெகு சத்தமாய் “ஐ அம் சுஹானாசக்திவேலன் சி.இ.ஓ
ஆஃ ப் திஸ் கம்பெனி, ஐ அம்
ஸ்பெஷலி அப்பாயின்டெட் திஸ் கம்பெனி, பிகாஸ் ரேணுகாவேலன் இஸ் மை மதர்- இன் லா..திஸ் இஸ் மை ஆர்டர் காப்பி”என்று அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரை தூக்கி போட்டாள்.

மேனேஜரும்,டிசைனரும் அதை எடுத்து
படித்து அதிர்ச்சியாக வணக்கம் வைத்தனர் சுஹானாவுக்கு..

அதற்கு சுஹானா “கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க?”

“மேடம் பாபு சார் தான் புரோடக்சன் யூனிட்ல எல்லாமே பார்த்துக்குவார், அவரோட 2 பொண்ணுங்களும் தான் இன்சார்ஜ் மெட்டீரியல்ஸ் டெலிவரி வரையும்...போன வாரம் மெட்டீரியல்ஸ் எல்லாம் குவாலிட்டி செக்கிங் பண்ணாம ஆர்டர் கொடுத்த கம்பெனியோட டிசைனில்லாம மாத்தி மாத்தி செய்து, ஆர்டர் கொடுத்த கம்பெனிக்கு அனுப்பி வச்சு பிரச்சனையாகி எம்.டி.சக்தி சார் பாபு சாரையும் அவர் பொண்ணுங்களையும் டிஸ்மிஸ் பண்ணிட்டார்” என்றார் மேனேஜர் சிவா.

“நான் நீங்க என்ன செய்தீங்கன்னு கேட்டேன்”என்றாள் சுஹானா.

“நாங்க ஒன்னும் பண்ல மேடம்” என்றார் டிசைனர் கார்த்திக்.

“அப்படியா...உண்மையை சொன்னா உங்கள மன்னிச்சு விட்ரலாம்ன்னு நினைச்சேன்” என்றாள் சுஹானா.

“பாபுவும் அவர் பொண்ணுங்களும் தப்பு பண்ணதுக்கு எங்கள கூப்பிட்டு கேள்வி கேட்குறீங்க” என்றான் திமிராய் சூப்பர்வைசர் தினேஷ்.

“ஹேய் தப்பு பண்ணிட்டு தைரியமா பேசுற..சத்தமா பேசுன அறை வாங்கிருவ..அமைதியா கேளு..நான் சொல்லட்டா உண்மையை.. நீங்க 3 பேரும் கூட்டு களவாணிங்க இல்ல தனித்தனி திருடனுங்க..மேனேஜர் சிவா மெட்டீரியல்ஸ் குவாலிட்டி செக்கிங் பண்ற மெஷின்ல ரீடீங் அளவை மாத்தி வச்சு நாம தயாரிச்ச புரோடக்ட் எல்லாமே சரிதான்னு பாபு சார் பொண்ணுங்கள நம்ப வச்சது நீங்க, காரணம் பாபு சார் மேல உள்ள பொறாமை அவர் போஸ்டிங்ல நீங்க வர்றதுக்கு பண்ண வேலை”என்றாள்.

“இல்ல மேடம் இல்ல நீங்க பொய் சொல்றீங்க” என்றார் மேனேஜர் சிவா.

“அப்படியா” என்று வேகமாய் புரொஜெக்டரை ஆன் செய்தாள். அதில் மேனேஜர் சிவா மெஷினில் ரீடீங் அளவை மாற்றிய வீடியோ தேதி-நேரத்தோடு ஒலிபரப்பானது.

“மேடம் சாரி மேடம்” என்று சுஹானா காலில் விழுந்தார் மேனேஜர் சிவா.

“எழுந்திருச்சு போய் ஓரமா நில்லு..”என்று சுஹானா மேனேஜர் சிவாவை பார்த்து.. கட்டளையிட்டாள்

அதை தொடர்ந்து டிசைனர் கார்த்திக்கை பார்த்து “போன வாரமும், இந்த வாரமும் ஆர்டர் கொடுத்த கம்பெனி டிசைன மாத்துனது நீ..”

“நான் ஒன்னும் அப்படியெல்லாம் செய்யல வேணும்னா சிசிடிவி வீடியோ செக் பண்ணிக்கோங்க” என்றான் டிசைனர் கார்த்திக்.

“உனக்கு வீடியோ இல்ல ஆடியோ என்று சொல்லி டிசைனர் கார்த்திக் ராஜன் குரூப் ஆஃப் கம்பெனியோடு தொடர்பு கொண்டு பணத்திற்காக ஆர்.வி கம்பெனி பெயரை கெடுக்கும் படியாய் டிசைன் மாற்றியதாக பேசியது ஒலிபரப்பி காண்பித்து..அதோடு “நீ ராஜன் கம்பெனில இருந்து வாங்குன பணத்தோட பேங்க் டிரான்சக்ஸன் ஸ்டேட்மென்ட், இந்த ஆடியோ உன்னோட மொபைல் கால்-தான்ங்கற எவிடென்ஸ்” என்று அனைத்தையும் அவன் கண்முன் போட்டாள் சுஹானா.

அதிர்ச்சியில் உறைந்து நின்றான்
டிசைனர் கார்த்திக்.

அதை தொடர்ந்து சூப்பர்வைசர் தினேஷை பார்த்தாள் சுஹானா.

“என்ன பார்க்குறீங்க நான் எல்லாம் ரொம்ப சுத்தம் இவனுங்கள மாதிரி இல்ல” என்றான் தினேஷ்.

“உன் சுத்தத்தை இப்ப காட்டுறன்டா” என்று புரொஜெக்டரில் மீண்டும் வேறொரு போல்டரை திறந்தாள். அதில் வந்த வீடியோவானது மெட்டீரியல் ஏற்றி செல்லும் லாரியானது ஒரு குறிப்பிட்ட தெரு முனையில் திரும்பும் போது தினேஷ் மற்றும் அவன் ஆட்களோடு சென்று அதில் கொஞ்சத்தை மாற்றி தன் மினிலாரியில் ஏற்றி கொண்டு போய் விற்று லாபம் பார்த்தது தேதி-நேரத்தோடு பதிவாகி ஒலிபரப்பானது.

ஒரு நிமிடத்தில் தினேஷின் முகம் எல்லாம் வியர்வையாய் மாறி வழிந்தது..அப்பொழுது ரேணுகா கதவை திறந்து உள்ளே வந்தாள்.

அவளை பார்த்ததும் சுஹானா “குட் மார்னிங் மேடம்” என்று சல்யூட் அடித்தாள்.

ரேணுகாவும் பதிலுக்கு சல்யூட் கொடுத்து “குட் ஜாப் சுஹானா ஐ அம் வெரி ப்ரவுடு ஆஃப் யூ, இவங்கள என்ன பண்ணலாம்” என்று கேட்டாள் ரேணுகா.

“3பேரையும் டிஸ்மிஸ் பண்ணி
போலீஸ் கம்ப்ளைன்ட் பைல் பண்ணுங்க மேடம்” என்றாள் சுஹானா.

மூவரும் ரேணுகா காலில் விழுந்தனர்.

“ஏய் 3 பேரும் இப்பவே வெளிய போங்க உங்க செட்டில்மென்ட் உங்க வீடு தேடி வரும்” என்று சொல்லி செக்யூரிட்டியை அழைத்து அவர்களை வெளியே அனுப்பினாள் ரேணுகா.

“போலீஸ் கம்பளைன்ட் வேண்டாம் சுஹானா 3 பேரோட ஃ பேமிலி பாவம்” என்றாள் ரேணுகா.

“சரிங்க மேடம்” என்றாள் சுஹானா.

“என்ன மேடம்ன்னு சொல்ற வா உன்ன எல்லாருக்கும் அறிமுகப்படுத்துறேன்” என்றாள் ரேணுகா.

“வேண்டாம் அத்தை இவங்கள பிடிக்கதான் சி.இ.ஓ போஸ்ட் கேட்டேன்,வேற எந்த ஆசையும் இல்ல” என்று சொல்லி சுஹானா கிளம்ப அத்தை சக்தி உள்ளே வந்தாள்.

வழக்கம் போல் அதிகார தோரணையில் “மகளே “என்று அழைத்தாள்.

“சொல்லுங்க நாத்தனாரின் மாமியாரே” என்றாள்.

“நான் உன் நாத்தனாரை வச்சுதான சால்வ் பண்ண சொன்னேன் நீயே சால்வ் பண்ணிட்ட” என்று கேட்டாள்.

“இப்பவும் என் நாத்தனார்தான் சால்வ் பண்ணியிருக்கா..”என்று சுஹானா-சொன்னதும்...

யோசனையாய் பார்த்தாள் அத்தை சக்தி.

“என்ன பார்க்குறீங்க மாமியாரே,இங்க இருக்கிற அத்தனை ஓர்க்கர்ஸோட மொபைல் போன், பேங்க் டிரான்சக்ஸன்-ஸ்டேட்மென்ட், ஆடியோ,சிசிடிவி வீடியோன்னு எல்லாத்தையும் ஹேக் பண்ணது என் அண்ணி சித்ரலேகாதான்..அது மட்டுமில்ல டிசைனர் கார்த்திக்க டிராக் பண்ணி புரொடக்ட் டிசைனை அவனுக்கே தெரியாம மாத்தி இந்த வாரம் புரொடக்சனை சரி பண்ணதும் என் அண்ணிதான்.. தாத்தாவும், வேலன் அண்ணாவும் தினேஷை பென் -கேமரா வச்சு ஃபாலோ பண்ணி அவன் திருட்டை வெளிய கொண்டு வந்தாங்க..திஸ் இஸ் ஏ டீம் ஓர்க், ஐ ஜஸ்ட் ப்ளான் அண்ட் லீட் மை டீம்..என் அண்ணி அமைதியா இருக்கிறதால..ஆணவம் பிடிச்சவன்னு நினைச்சுட்டீங்க..அப்படியில்ல அவ அமைதிக்கு பின்னாடி அடக்கமும்,அறிவும் நிறைய இருக்கு மாமியாரே..
என் நாத்தனாரின் மாமியாரே என் வேலை முடிஞ்சது வர்றட்டா..”என்று அத்தை சக்திக்கு சல்யூட் வைத்து கிளம்பினாள் சுஹானா.

மறுபுறம் நடந்ததை கண்டு சக்திவேலன் பேச எதுவுமின்றி அமைதியும் யோசனையுமாய் சிசிடிவி ரூமை விட்டு வெளி வந்து அவன் கேபினுக்குள் போனான்.

அப்பொழுது சுஹானா கேபினுக்குள் வேகமாய் உள்ளே வந்து சக்திவேலனிடம்
“ஐ வான்ட் ஏ ஜஸ்டிஸ் பாஃர் பாபு அப்பா அண்ட் அவர் ஃபேமிலி” என்றாள்.

சக்திவேலன் அமைதியாய் நின்றான்.

அவன் கண்முன் எதிர்நின்று“நாளைக்கு பாபு
அப்பாவும்,அவர் பொண்ணுங்களும் நம்ம ஆபிஸ்ல வேலைக்கு வரணும் நீங்கதான் அவங்கள வர வைக்கணும் எம்.டி.சார்” என்று சத்தமாய் சொன்னாள் சுஹானா.

“நான் ஏன் வர வைக்கணும்” என்று அமைதியாய் கேட்டான் சக்திவேலன்.

“ஏன்னா அநியாயம் பண்ணவங்க கையாலதான் நியாயமும் கிடைக்கணும்” என்று அவனுக்கு கட்டளை
போல் சொல்லி சுஹானா வெளியேறினாள்.
 
Top