வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ரேணுகா 💝வேலன் (அத்தியாயம்-18)

GG writers

Moderator
ரேணுகா💝வேலன்
(அத்தியாயம்-18)

அடுத்த நாள் காலை 10மணிக்கு லேகா-வேலன் இருவரையும் சந்திக்க வைத்தாள் சுஹானா.
“நீங்க 2-பேரும் பேசிட்டு இருங்க..நான் அந்த பக்கம் படித்துறைல வெயிட் பண்றேன்” என்று சொல்லி நடந்து போனாள் சுஹானா.

அப்பொழுது சுஹானா நடந்து வர
படித்துறையின் மேல் செங்கல்லை
வைத்து வட்டம், வட்டமாக
போட்டு கொண்டு இருந்தாள் அத்தை சக்தி.

அத்தை சக்தியிடம் பேசுவதற்கு சுஹானா படித்துறையின் மேல் ஏறி நடந்து கொண்டே “என்ன நாத்தனாரின் மாமியாரே நீங்க தாலி எடுத்து கொடுத்துதான் அவங்க கல்யாணம்னு சேலன்ஞ்சு பண்ணேன் இப்படி அவங்கள பேசவே விடாம பாஃலோ பண்றீங்களே” என்று கேட்டு கொண்டே சக்தியின் கடைசி வட்டத்தில் கால் வைத்தாள் சுஹானா.

சுஹானாவை பார்த்து சிரித்தபடி அத்தை சக்தி
அவளை படித்துறையின் மேலிருந்து நீரினுள் தள்ளி விட்டு கரையில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

இதை பார்த்த ரேணுகா “என்னடி பண்ற” என்று பதறி ஓட அவளை தடுத்து நிறுத்தினாள் அத்தை சக்தி.

அப்பொழுது நீரினுள் இருந்து சக்திவேலன் கையில் தாங்கியபடி சுஹானாவை வெளியே
கொண்டு வந்தான். இவர்களை தாத்தா போட்டோ எடுத்தார்.

ரேணுகாவும்,அத்தைசக்தியும் சிரித்தபடி திரும்பி காரை நோக்கி நடந்தனர்.

சுஹானாவை சக்திவேலன் மேல்படித்துறையில்
இறக்கிவிட்டான்.

“மாப்ள நீ எங்க இங்க” என்று சுஹானாவை பார்த்து தலைகுனிந்தவாறு தயக்கமாய் கேட்டான் சக்திவேலன்.

“நான் தவறி விழுந்துட்டேன்..சரி அண்ணி நீ
எப்படி தண்ணிக்குள்ள இருந்த” என்று அவளும் தலை குனிந்தவாறே அவனிடம் தயக்கமாய் கேட்டாள்.

“சக்தி-அத்தைதான் 1000 எண்ணுற வரையும்
தண்ணிக்குள்ள இருக்கணும்னு சேலஞ்சு பண்ணி என்ன இங்க இருக்க வச்சாங்க”என்றான்.

சுஹானா மிகுந்த அதிர்ச்சியாய் தூரத்தில் இருந்த அத்தை சக்தியை பார்த்தாள்.

அப்போது அத்தை சக்தி
கூலரை எடுத்து கண்களில் மாட்டி,கெத்தாய்
பார்த்தாள் சுஹானாவை.

சுஹானா மனதினுள் ‘மாமியாரே உன் கொடுமை தாங்கலப்பா’ என்று நினைத்தாள்.

அதே நேரம் லேகா–வேலனிடம் "நம்ம
கல்யாணத்துக்கப்புறம் என் அம்மா,அப்பாவும் என் கூடதான் இருப்பாங்க” என்றாள்.

“ஹேய் செம ஐடியா டி..சூப்பரா இருக்கும்” என்றான் மாப்ள வேலன்.

“உனக்கு உண்மையாவே ஓகே வா” என்று கேட்டாள்.

“எனக்கு டபுள் ஓகே” என்றான்.

“உனக்கு டிஸ்டர்ப் ஆக
இருக்காதா..”என்று கேட்டாள்.

“ஏய் உன் அம்மா,அப்பா வேற, என் அம்மா வேறயா டி” என்று அவன் சொன்னதும்..அவனிடமிருந்து அந்த
பதிலை எதிர்பார்த்திடாத லேகா
மகிழ்வாய் அவனை பார்த்தாள்.

“பொண்டாட்டி வீட்ல பெரியவங்க இருக்கிறது
ப்ளஸிங்ஸ் டி, நம்ம வீட்ல நிறைய பெரியவங்க இருந்தா அது நமக்கு பெரிய ப்ளஸிங்ஸ் டி” என்று
சொல்லும் போதே வேலனின் அம்மா சக்தி வந்து அவனை மிரட்டி அங்கிருந்து அழைத்து போனாள்.

சிறிது நேரத்திற்கு பின் வீட்டில் சுஹானா தலையில் துண்டை வைத்து துடைத்தபடியே அத்தை சக்தியை பார்த்து முறைத்தாள்.

“என்ன டி முறைக்குற..?”என்று மிரட்டலாய்
கேட்டு “நான் மாமியார் டி மறந்துராத”என்றாள் அத்தை சக்தி.

“எனக்கில்ல லேகாவுக்குதான
மாமியார் நீங்க” என்றாள் கோபமாக சுஹானா.

“சத்தம் ஓவரா இருக்கு மகளே..கடுப்பேத்துன
அவ்ளோதான் பார்த்துக்க..”என்றாள் அத்தை சக்தி.

“என்ன பண்ணுவீங்க ...”என்று கேட்டாள் சுஹானா.

மருமகன்-சக்தி கையில் சுஹானா இருக்கும் குளக்கரை போட்டோவை சுஹானாவுக்கு மொபைலில் காண்பித்து..”இந்த போட்டோவை 10க்கு 10 ரூம் அளவுக்கு ப்ளக்ஸ் அடிச்சு உன் பெட்ரூம்ல ஒன்னும் உன் பாட்டியோட பேலஸ்க்கு ஒன்னும் அனுப்பி
வச்சிருவேன்.”

அத்தை சக்திய அதிர்ச்சியாய் பார்த்தாள் சுஹானா..

“இங்க பாரு உன் அண்ணனையும்,அண்ணியையும் சேர்க்க ஏதாவது ப்ளான் பண்ண...ப்ளக்ஸ் கன்பாஃர்ம் டி”
என்று மிரட்டினாள் அத்தை சக்தி.

சுஹானா ரேணுகாவை தேடி கிச்சனுக்கு போய்
“அத்தை உங்க நாத்தனார் மிரட்டுறாங்க என்னன்னு கேளுங்க..?”என்றாள்

“என்ன டி என் அண்ணிட்ட கம்ப்ளைன்ட் பண்ற ப்ளக்ஸ் போட்டுரலாமா” என்று மீண்டும் மிரட்டினாள் அத்தை சக்தி.

“பாருங்க அத்தை..உங்க நாத்தனாரை..”

“நீ முதல்ல உட்காரு” என்று சுஹானாவை அமர
வைத்து தலையில் துண்டை போட்டு
நன்றாக துவட்டிக் கொண்டே “சக்தி மிரட்டுறதை நிறுத்து” என்றாள் ரேணுகா.

“நல்லா சொல்லுங்க அத்தை, உலகத்துல இப்படி ஒரு மாமியார் கொடுமையை நான் பார்த்ததே இல்ல...”

ரேணுகாவின் கணவன் வேலன் கிச்சனில் தோசை சுட்டு ரேணுகா கையில் கொண்டு வந்து கொடுத்தான்.

ரேணுகா சக்திக்கும், சுஹானாவுக்கும் ஊட்டி விட்டு “அம்மாவும்,மகளும் சண்ட போடாம
பிரச்சனை என்ன என்கிட்ட சொல்லுங்க” என்றாள்.

“அத்தை இவங்க லேகா-வேலன பேசவே விடாம பிரிக்கிறாங்க..”

“எனக்கு அவங்க சேர்றது பிடிக்கல..அதான்
பிரிக்கிறேன்” என்றாள் அத்தை சக்தி.

“என் நாத்தனார்க்கு என்ன குறை
அழகு இல்லையா, அறிவு இல்லையா? என்ன பிரச்சனை உங்களுக்கு...? அத்தையம்மா
நீங்களே கேட்டு
சொல்லுங்க உங்க நாத்தனார்க்கிட்ட”
என்றாள் சுஹானா.

“சொல்லு சக்தி” என்றாள் ரேணுகா.

சக்தி அமைதியாய் “அன்பு இல்ல டி.. மகளே, நான் வந்ததுல இருந்து பார்க்கிறேன்,என் பையன் தான் அவ மேல அன்பா இருக்கானே தவிர அவ அன்பா இருக்கிறதை நான்
ஒரு தடவை கூடப்பார்க்கல, அவங்க 2 பேரும் சேர்ந்தா நிம்மதியா இருக்க மாட்டாங்க..”

“தப்பு மாமியாரே லேகா அன்பை சீக்கிரம் வெளிப்படுத்த மாட்டாளே தவிர நீங்க சொல்ற மாதிரி மோசமானவ இல்ல..”என்றாள் சுஹானா.

“வெளிப்படுத்துனாதான் அன்பு தனக்குள்ளேயே அன்பை வச்சுக்கிட்டா அதுக்கு பெயர் சுயநலம்.உன்
நாத்தனார் சுயநலவாதி” என்றாள் அத்தை சக்தி.

“இல்ல நாத்தனாரின் மாமியாரே..அவ உருவம் மட்டும் உங்க சாயல் இல்ல..அவ கேரக்டரும் உங்கள மாதிரிதான், அவ இன்னொரு சக்தி... நீங்களே அவ கூட பழக பழக அதை புரிஞ்சுக்குவீங்க” என்றாள்
சுஹானா.

அத்தை சக்தி பதில் பேசாமல் அமைதியாய் கடந்து போனாள்.

ரேணுகா சுஹானாவிடம் “நீ ஏன் லேகாவ இவ்ளோ நம்புற..?”

“இல்ல அத்தை லேகாவோட இருக்கும் போது நான் மனசார உணர்றேன். உங்க நாத்தனார்க்கு என் நாத்தனார் எந்த வகையிலும் குறைஞ்சவ இல்ல..”என்று சொல்லி தன் அறைக்கு போனாள்
சுஹானா.

பின் அன்று இரவில் சக்திவேலன் அறையில் சுஹானாவும், சக்திவேலனும் குளக்கரையில் நடந்ததை நினைத்து, தன்னை மறந்து ஒருவரையொருவர் பார்த்து சிரித்தனர்.

அப்பொழுது சக்திவேலன் மனதில் ‘நீ
எனக்கு ஏதோ புதுசா தெரியற டி சுஹானா’ என்று நினைத்தபடி அவளை பார்த்தான்.

‘ஆமா டா எனக்கும் நீ புதுசா தான் தெரியற’ என்று நினைத்தபடி சக்தியை
பார்த்தாள். இருவரும் 5 அடி இடைவெளியில்
கண்களை மூடி தூங்கினர்.

அடுத்த நாள் காலை ஆபிசுக்கு போகும் வழியில் லேகாவின் ஸ்கூட்டி பெட்ரோலின்றி நிற்க.. “சுஹானா நீ வண்டியை
பார்த்துக்கோ..பெட்ரோல் இல்ல, பங்க் பக்கத்துலதான் நான் போய் வாங்கிட்டு
வர்றேன்” என்று சொல்லி போனாள் லேகா.

அப்பொழுது கார் ஒன்று சுஹானாவை சுற்றி வந்து நிறுத்தி அதிலிருந்து இறங்கினான் கௌதம்.

“சுஹானா வா நம்ம வீட்டுக்கு போலாம்” என்று அவள் கையை பிடித்தான்.

“எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு.. சோ கையை விடு” என்றாள் சுஹானா.

“நான் நேத்துதான் யூ.ஸ்-லிருந்து வந்தேன்,உன்
கல்யாணத்தை பத்தி தெரிஞ்சுதான்
கூப்பிடுறேன்,வா நம்ம வீட்டுக்கு போலாம்” என்று மீண்டும் வலுவாய் பிடித்து இழுத்தான்.


அதே நேரம் சுஹானா அருகில் வந்து நின்று கௌதமை காது சவ்வு கிழியும் படி ஓங்கி ஒரு அறை அறைந்தான் சக்திவேலன்.

“ஹேய் யூ..அவ என் மாமாப்பொண்ணு” என்றான் கௌதம்.

சக்திவேலன் சுஹானாவின் தோள் மீது கை போட்டு அவளை தன்னோடு நெருக்கமாய் காண்பித்தான்.

“சுஹானா யாரு இவன்..?” என்று
கேட்டான் கௌதம்.

அவளும் மிக மகிழ்வாய் கழுத்திலிருந்த தாலியை தூக்கி காண்பித்து, “இத கட்டுனவர்” என்றாள்.

கெளதம் அதிர்ச்சியாய் பார்த்தான்.பின் மீண்டும் அவள் கையை பிடிக்க முயற்சி செய்தான்..மீண்டும் 2
அறைகள் சக்திவேலனிடம் வாங்கிய பின் வேகமாய் காரில் ஏறி போனான்.

அதன்பின் லேகா பெட்ரோலோடு வந்தாள்.சுஹானா-லேகாவை முன் விட்டு பின் அவர்களை பாதுகாப்பாய் காரில் பின் தொடர்ந்தான் சக்திவேலன்.

ஆபிசுக்கு போனதும் அங்கு ஆயுத பூஜைக்காக முழுவதுமாய் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதின் நடுவே இருந்த
சுஹானாவை தனியே அழைத்தான் சக்திவேலன்.

“மாப்ளை யார் அவன்” என்று சுஹானாவிடம்
கோபமாய் கேட்டான்.

“சுதர்சன் மாமாவோட 2வது பையன் கௌதம்” என்றாள்.

“யாரு சுதர்சன்..?”

“ஏய் ரேணுகா அத்தையோட அக்கா சாருலேகா
அவங்களோட ஹஸ்பண்ட் தான் சுதர்சன்
மாமா..அவனும் எனக்கு அத்தை
பையன் தான்..உனக்கு தம்பி வேணும்.”

“இப்ப ரொம்ப முக்கியம்..உறவு முறை..ஆமா
உன்ன மணமேடையில ஏமாத்துனது, கௌதமோட அண்ணனா..?”

“ஆமா...”என்றாள் சுஹானா.

“சரி கௌதம் எதுக்கு வந்தான்..?”

“வீட்டுக்கு வர சொல்லி கம்பெல் பண்ணாண்” என்றாள்.

“போய் தொலைய வேண்டிய தான... உனக்கு பாடி-காட் வேலை பார்க்கிறதுதான் எனக்கு
வேலையா..?” என்று கேட்டான் சக்தி.

இதை கேட்ட மாத்திரத்தில் கோபமாய் அவனை விட்டு வேலை செய்யும் இடத்திற்கு போனாள்
சுஹானா.

சிறிது நேரத்தில் பூ,பழம்,குங்குமம், திருமண அழைப்பிதழ் வைத்த தட்டுடன் வந்தார் பணியாளர் ஒருவர்,அவர் மனைவியுடன் சக்திவேலனை காண.. “சார் ரேணுகா மேடம் எப்ப வருவாங்க” என்று கேட்டார்.

“அம்மா இன்னைக்கு வர லேட்டாகுமே” என்றான் சக்தி.

“அப்ப சார் சின்னம்மா லேகாம்மாவும் நீங்களும் சேர்ந்து அழைப்பிதழை வாங்கிக்கோங்களேன்”
என்றார்.

“வாங்க லேகா புரோடக்சன் யூனிட்ல தான் இருக்கா” என்று அவர்களை அழைத்து போனான்.

அங்கு லேகா-வேலன் விஜயகுமாரும் ஒன்றாக நின்று இருந்தனர். “அவர்களிடம் கொடுங்க” என்றான் சக்தி.

“சார் இவர் யாரு” என்று வேலன் விஜயகுமாரை பற்றி கேட்டார் பணியாளர்.

“உங்க சின்னம்மாவோட சின்ன ஐயா தான் இவர் லேகாவோட மாப்பிள்ளை” என்று வேலன் விஜயகுமாரை அறிமுகம் செய்தான் சக்தி.

“ சார், மேடம் குடும்பத்தோட என் பொண்ணு
கல்யாணத்துக்கு வாங்க” என்று அழைப்பிதழ் தட்டை கொடுத்தார் பணியாளர் அவர் மனைவியுடன்...அதை லேகாவும்,வேலன்விஜயகுமாரும் பெற்று கொண்டனர்.

சற்று தூரத்தில் சுஹானாவோடு ஒருவர் வாக்குவாதம் செய்வது போல் தெரிந்து
சக்திவேலன் சற்று அருகில் சென்று பார்த்தால் முகுந்தனின் அப்பா..கோபமாய், சத்தமாய்...

“என் பையன நீ ஏமாத்தி இருக்க..”

“சார் நான் ஏமாத்தல எனக்கு மேரேஜ் ஆயிருச்சு”

“ஹோ அப்படியா உனக்கு மேரேஜ் ஆனதுக்கு என்ன சாட்சி”

மறைத்து வைத்திருந்த தாலியை அவர் கண்முன் காட்டி “இதுதான் சாட்சி” என்றாள்.

“இதை கட்டுன உன் புருஷன் யாரு, எங்க இருக்கான் ?”

“எனக்கு தாலி கட்டுனவன் என் அத்தை பையன் அவன் அவனோட ஆபிசுல இருப்பான்.”

“அவன் பெயரை சொல்லு..உன்னதான்
உன் புருஷன் பெயரை சொல்லு..?”

“சொல்ல முடியாது சார்..உங்க பையன நான் ஏமாத்தல,இது என்னோட பெர்சனல் நீங்க தலையிடாதீங்க.”

“ஏமாத்த பார்க்கிறியா..தாலி இருக்கு..கட்டுன
புருஷன் பெயர் கூட உன்னால சொல்ல முடியல..”என்று அவர் சொல்ல சொல்ல
கோபமும்,கண்ணீருமாய் கேட்க முடியாமல் திரும்பி நின்றான் சக்திவேலன்.

மறுபுறம் சுஹானா பதில் பேச
முடியாமல் கண்ணீர் ததும்ப அவர் முன் நிற்க...

“சுஹானா யூ ஆர் ஃப்ராடு..நீ எல்லாம் நல்ல குடும்பத்தோட பொண்ணுதானா...” என்று அவர் கேட்ட மாத்திரத்தில் , ஆத்திரத்தின் உச்சியில் சக்திவேலன் லேகா கையில் இருந்த அழைப்பிதழ் தட்டிலிருந்த குங்குமத்தை கையில் எடுத்து வேகமாய்
முன் நடந்து கண்ணீரோடு நின்ற சுஹானாவை
திருப்பி அவள் உச்சியில் பொட்டு வைத்து முகுந்தன் அப்பா பக்கம் திரும்பி.. “நான் தான் அவ அத்தை பையன், அவ சொன்னது எல்லாமே உண்மை” என்று
கண் கலங்க கையெடுத்து கும்பிட்டு “உங்களுக்கு என்ன சந்தேகம்னாலும் என்ன கேளுங்க..அவள டிஸ்டர்ப் பண்ணாதீங்க ப்ளீஸ் ..”என்றான்.

“சக்திவேலன்...சுஹானா உங்க மனைவியா?”

“உண்மையாவே ரொம்ப சாரி மா.. வெரி சாரி சக்தி” என்று சொல்லி முகுந்தன் அப்பா வெளியே செல்ல..அத்தை சக்தியை பார்த்து சக்சஸ் என கை விரல்களால் சைகை செய்தார்.

அத்தைசக்தியும் கண்களால் நன்றி கூறினாள்.

ரேணுகா அத்தை சக்தியிடம் “இது உன் ப்ளான் தானா” என்று கேட்டாள்.

ஆமாம் என்று கண் சைகை செய்தாள் அத்தை சக்தி.

அந்த நேரம் அங்கிருந்த பணியாளர்கள்
அனைவரும் மகிழ்ச்சியாய் “ஏய் நம்ம ரேணுகா அம்மா மருமக இவங்க, நம்மளோட இன்னொரு சின்னம்மா”
என்று சொல்லி தோரணம் கட்டிய பூவை பறித்து பணியாளர்கள் சக்திவேலன்-சுஹானா மீது தூவ...

சக்தி சுஹானாவை கைப்பிடித்து நடக்க அவன்
கேபினுக்கு போகும் வரை உள்ள அத்தனை
பணியாளர்களும் மலர் தூவி வாழ்த்தினர்.

சுஹானாவை இழுத்து சென்று எம்.டி. சீட்டில் அமர வைத்து அவனும் அருகில் அமர்ந்தான்.

ஏதோ புதிதாய் திருமணமானது போல் மகிழ்வுடன் எம்.டி. சீட்டில் அமர்ந்திருந்தாள் சுஹானா.

அப்பொழுது ரேணுகா மகிழ்வாய் உள்ளே வந்து
“மருமகளே” என்று அணைத்து கொண்டாள்.
“இந்த சீட் தான் உனக்கு கரெக்ட் உட்காரு”
என்றாள் ரேணுகா.

“உனக்கு இப்பவாச்சும் புத்தி வந்துச்சே”
என்றாள் மகன் சக்திவேலனை பார்த்து ரேணுகா.

“என்ன சொல்ற அம்மா..?”

“அவள மனைவியா ஏத்துக்கிட்டல்ல டா..”

“அம்மா..அப்படி எல்லாம் இல்ல
என்ன எம்.டி.சீட்ல உட்கார வச்ச என் ஃ ப்ரண்ட அதுல உட்கார வச்சிருக்கேன் அவ்ளோதான்..”என்று சொல்லி
வெளியேறினான் சக்தி.

“டேய் என்னடா..”என்று பேச ஆரம்பித்த
ரேணுகாவை தடுத்தாள் சுஹானா “எதுவும் பேசாதீங்க அத்தை ,முகுந்தன் அப்பாவை சமாளிக்க தான் பொட்டு வச்சான் எனக்கு அவன் மனசு தெரியும் ” என்று பதில் சொன்னாள்.

அப்பொழுது வேலன் விஜயகுமார் உள்ளே வந்து சுஹானாவிடம் “மச்சான் சொன்னதை நீ பெரிசா நினைக்காதம்மா பாசமில்லாம லா
பொட்டு வச்சான், புரிஞ்சுக்குவான்” என்றான்.

“இல்ல அண்ணன் எனக்கு இதுவே போதும் ரொம்ப சந்தோசமா இருக்கேன்” என்றாள் சுஹானா.

ரேணுகா அத்தை சக்தியிடம் போய் “என் பையனையும் சுஹானாவையும் பார்த்தா கோபம்தான் வருது, 2 பேரும் ஒருத்தருக்கொருத்தர் அன்பா இருக்கணும், இல்ல விலகி இருக்கணும் அத விட்டுட்டு என்ன இது இருக்கிறவங்கள எல்லாம் கிறுக்கு பிடிக்க வைக்கிறாங்க”என்றாள்.

“அண்ணியாரே எனக்கு அவங்க 2 பேரோட பவித்ரமான மனசும்,குழந்தை தனமான காதலும் தான் தெரியுது”என்றாள் அத்தை சக்தி.

“என்ன டி சொல்ற புரியும் படி சொல்லு ”

“அண்ணியாரே உன் மகன் கஷ்டபடுத்தினாலும் சுஹானா அவன் ஜெயிக்கணும்னு நினைக்கிறா, அவன் சொல்லாமலே அவன் கோபம், மனச புரிஞ்சுக்குறா...மனசுல காதல் இல்லாம இந்த புரிதல் வராது, உன் பையன் ஒன்னும் குறைஞ்சவன் இல்ல சுஹானா ஆபிஸ் வந்த முதல் நாள் அவன் கண்ல கண்ணீரை பார்த்தேன், அவளை தப்பா பேசுனவன மிதிச்சானே அவ என்னுடையவன்ற காதல அவன் கண்ல பார்த்தேன், இதோ இன்னைக்கு முகுந்தன் அப்பா தப்பா பேசுனப்போ அவ கண்ல கண்ணீர் வந்தா இவனால தாங்க முடியல அதான் பொட்டு வச்சான்”

“சரி அப்ப 2 பேரும் மனசு விட்டு பேசி சேர வேண்டியதான இல்ல நீயே அவங்ககிட்ட பேசி புரிய வைக்க வேண்டியதானே” என்று கேட்டாள் ரேணுகா.

“ஹேய் அண்ணி காதல் மனசால உணர வேண்டிய விஷயம் அதுல நேசிக்குற 2பேரை தவிர வேற யாரும் தலையிட கூடாது” என்றாள் அத்தை சக்தி.

“அப்ப எப்பதான் சேருவாங்க”என்றாள் ரேணுகா ”

“நீயும் என் அண்ணனும் சேர்ந்த மாதிரி சேலஞ்சு முடியற நாள் கண்டிப்பா அவங்க சேர்ந்துருவாங்க” என்றாள் அத்தை சக்தி.

சிறிது நேரத்திற்கு பின் வேலன் விஜயகுமார்
லேகாவிடம் சென்று எதிர்நின்று அவள் நெற்றியில் குங்கும பொட்டு வைத்தான்.

“ஏய் உங்க அம்மா இல்லாத தைரியமா..?” என்று கேட்டாள்.

“நீ மட்டும் எங்கம்மாகிட்ட சாரி
சொல்லு..எங்கம்மா முன்னாடியே உன் உச்சியிலேயே குங்குமம் வைக்கிறேன்” என்றான் வேலன்.

அமைதியாய் அவனை கடந்து போனாள் சித்ரலேகா.

பின் இரவில் வீட்டில் சக்திவேலன் அவன்
அறையில் சுஹானாவை “மாப்ளை” என்று அழைத்தான்.

அவளும் பதிலாக “என்ன அண்ணியாரே”
என்று சக்திவேலனை அழைத்தாள்.

“சாரி காலையில உன்ன ரொம்ப திட்டிட்டேன்” என்றான்.

“பரவாயில்ல...குட்-நைட்” என்று திரும்பி படுத்தாள்.

“குட் நைட்” என்று பதில் சொல்லியபடி அவனும் திரும்பி படுத்து யோசித்தான்.. ‘அவள யாராவது தொட்டா எனக்கு ஏன் இவ்ளோ கோபம் வருது,அவ கலங்குனா ஏன் நானும் சேர்ந்து கலங்குறேன்..என்ன
ஃபீலிங் இது ப்ரண்ட்ஷிப் மாதிரியுமில்ல,லவ்
மாதிரியுமில்ல..’

அதே சமயம் சுஹானாவும் மனதில்
‘அவன் என்ன நெருங்கும் போது எல்லாம் எனக்கு ஏன் சொல்ல முடியாத அளவுக்கு சந்தோசமா இருக்கு, அவன் சாரி சொன்னா ஏன் நான் மொத்தமா என் கோபத்தை மறந்துர்றேன். வலியும், சுகமும் சேர்ந்து
வர்ற இது என்ன ஃபீலிங்,
ப்ரண்ட்ஷிப் மாதிரியுமில்ல,
லவ் மாதிரியுமில்ல’ என்று சிந்தித்தபடி இருவரும் கண்களை மூடி தூங்கினர்.

அடுத்தநாள் அதிகாலையில் வேலை விஷயமாக ஒருவரை சந்திக்க சக்திவேலன்,மாப்ளை வேலன்
உடன் வெளியே சென்றான்.

சற்று நேரத்திற்கு பின்
சுதர்சன் அடியாட்களோடு தடாலடியாய் ரேணுகா வீட்டினுள் புகுந்து சுஹானாவை வலுகட்டாயமாக அறையை விட்டு வெளியே கூட்டி வந்தான்.

அதை பார்த்த சுஹானாவின் மாமா வேலன்
“சகளை என்னய்யா பண்ற..? மருமகள விடு” என்றான்.

“விட முடியாது..?எங்க உன் பையன் சக்திவேலன்”

“சகளை என் மகன் வீட்ல இல்லாத நேரத்துல நீ
மருமகள கூப்பிடறது தப்புடா..”

“என் 2 பசங்களையும் அடிச்சான்ல உன் பையன் அவ கண் முன்னால சுஹானா கூட்டிட்டு போகதான் வந்தேன் வழியை
விடுடா” என்று வேலனை தள்ளிவிட்டு சுஹானாவை பேச விடாமல்
தரதரவென்று இழுத்து போனான்.

வீட்டிலிருந்த தாத்தா,ரேணுகா, வேலன், அத்தை சக்தியை அடியாட்களை வைத்து ஆயுதங்களின் பிடியில் அடக்கி வைத்தான்.தைரியமாய் சுதர்சன் சுஹானாவை நடு ஹாலுக்கு கொண்டு வரும் போது..சுதர்சன்
நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்தாள் சித்ரலேகா.

சித்ரலேகாவை பார்த்த சுதர்சனுக்கு
பல வருடங்களுக்கு முன் ரேணுகாவின் ஆபிசில் பார்த்த அவள் நாத்தனார் சக்தி முகம் நினைவுக்கு வரவே. “.சக்தி..”என்று அழைத்தான்.

இல்ல என்று தலையசைத்தபடி நான் “சித்ரலேகா சுஹானாவோட நாத்தனார்,
அண்ணி மேல உள்ள கையை எடு, ரவுடிகள்
எல்லாரையும் கிளம்ப சொல்லு” என்றாள் லேகா.


அப்பொழுது தாத்தா அங்கு சத்தமாய் “சுதர்சா
கையை எடுத்துரு, இல்ல அவ உன் தலையை
எடுத்துருவா..ஏன்னா அவ குட்டி ஸ்ரீலேகா டா..”

சுதர்சன் எடுக்க மறுக்கவே..அருகில் இருந்த டைனிங் டேபிளில் உள்ள தண்ணீர் கிளாசை சுட்டாள்,பின் மீண்டும் சுதர்சன் நெற்றிப்பொட்டில் வேகமாய் வைத்தாள்.

சுதர்சன் பதறி சுஹானா கையை விட்டு அடியாட்களை “வெளிய போங்க டா” என்றான்.

“ஒரு ரவுடி கூட இங்க இருக்க கூடாது எங்க ஏரியாவ விட்டே ஒடுங்கடா” என்று அடியாட்களின் கால்களுக்கு நேராக தரையில் சுட்டாள் லேகா.

அடியாட்கள் பயந்து வெளியே சென்று காரை எடுத்து ஏரியாவை விட்டே சென்றனர். இதனை தாத்தா பார்த்து “அடியாட்கள் போயாச்சு” என்று லேகாவிடம் சொன்னார்.

மீண்டும் சுதர்சனை துப்பாக்கி பிடியில்
வைத்திருந்தாள் லேகா.

“என் வீட்டு பொண்ண நான் கூப்பிடுரேன்
உனக்கென்ன” என்று கேட்டான் சுதர்சன்.

“யாருப்பா உன் வீட்டு பொண்ணு?” என்றாள் லேகா.

“ஸ்ரீ சுஹானா சுரேந்திரன்” என்றான்.

“இல்ல ஸ்ரீ குடும்பத்தோட சுஹானா இல்ல அவ, ரேணுகா வேலன் ஃ பேமிலியோட சுஹானா சக்திவேலன்” என்று உரத்த
சத்தமாய் சொன்னாள் அதோடு “என் அண்ணி என் வீட்டு சொத்து அனுப்ப முடியாது..என்ன அண்ணியாரே நான் சொன்னது கரெக்ட்டா..”என்று கேட்டாள் லேகா.

“சரியா தான் சொன்னீங்க நாத்தனாரே” என்றாள் சுஹானா.

“சுஹானா உன்ன கூட்டிட்டு வரச் சொன்னது உன் பாட்டி ஸ்ரீலேகா” என்றான் சுதர்சன்

“போடு வீடியோ கால் ஸ்ரீலேகாமேடம்க்கு”
என்றாள் சித்ரலேகா.

சுதர்சன் வீடியோ கால் டயல் செய்ய அவன் மொபைலை பிடுங்கி.. “தாத்தா இத டிவி ல கனெக்ட் பண்ணுங்க” என்றாள் சித்ரலேகா.

பாட்டி ஸ்ரீலேகாவீடியோ காலில் தோன்ற
“சுதர்சன் என்னாச்சு” என்று பதறி சித்ரலேகாவை பார்த்து “நீ ஏன் சம்மந்தமில்லாம தடுக்கிற..?” என்று கேட்டாள்.

“ஏன்னா அவ என் அண்ணன்
பொண்டாட்டி..என் அண்ணி.. உங்க லிமிட்ட கிராஸ் பண்ணிட்டீங்க மேடம்..ஏன் பயமா இருக்கா ?”

“யாருக்கு டி பயம் நான் வெற்றியை விடாத ஸ்ரீலேகா டி.”

“நீங்க ஸ்ரீலேகான்னா நான் சித்ரலேகா
மறந்துராதீங்க,பயம்தான்
உங்களுக்கு ரேணுகா வேலன் பேமிலிக்கிட்ட தோத்துருவோமோன்னு
அதான் சேலன்ஞ்சு டேஸ் முடியறதுக்கு முன்னாடி அண்ணிய தூக்க ட்ரை பண்றீங்க..”

“சேலன்ஞ்சு டேஸ் முடியறவரையும்
சுஹானா அங்கேயே இருக்கட்டும்” என்று வீடியோ கால்லை கட் செய்தாள் பாட்டி ஸ்ரீ லேகா.

அதே நேரம் வீட்டில் நடப்பது ஏதும் அறியாமல் சக்திவேலனும், மாப்ள வேலனும் உள்ளே வந்தனர்.


அப்பொழுது சுதர்சன் “இவங்களுக்கு நடந்தது கல்யாணமா” என்று சுஹானாவை பார்த்து ஏளனமாய் கேட்டார்.

சித்ரலேகா வேலன் விஜய்குமாரை அழைத்து
துப்பாக்கியை சுதர்சன் நெற்றி ஓரம் பிடிக்கும்படி அவனிடம் கொடுத்துவிட்டு சுஹானாவை தன் அண்ணன் சக்திவேலனை நோக்கி கைபிடித்து அழைத்து சென்றாள்.

சக்திவேலன் சுஹானாவிடம் “மாப்பிள்ளை யார் இவர்” என்று கேட்டான்.

“சுதர்சன் மாமா” என்றாள் சுஹானா.

சித்ரலேகா சுதர்சனை நோக்கி “சுஹானாவோட சொந்தக்காரர்,உங்க-கல்யாணத்தை பார்க்கல...இதையாச்சும் பார்க்கட்டும்” என்று தன் அண்ணனின் கையை பிடித்து “உனக்கு இன்னொருத்தியில்ல இவ மட்டும்தான் வாழ்க்கை,
சுஹானாவின் கை பிடித்து உனக்கு இன்னொருத்தன்
இல்ல இவன் மட்டும்தான்
வாழ்க்கை” என்று இருவரின் கைகளையும் சேர்த்து தன் துப்பட்டாவினால் கட்டி தன் அண்ணன் கை பிடித்து
அவன் அறைக்கு இருவரையும் இழுத்து சென்றாள் லேகா.

அதன்பின் அத்தைசக்தி தன் மகனிடம்
சுதர்சனை விட சொன்னாள். அவனும் சுதர்சனை விட்டு மச்சான் சக்திவேலன் அறைக்கு சென்றான்.

“அவமானப்படுறதுக்குன்னே வர்ற
சுதர்சா..”என்றாள் அத்தை சக்தி.

“ஏய் யார் நீ..?”

“என்ன அடையாளம் தெரியலயா..என்
மருமககிட்ட என் பெயரை சொன்ன..”

“ஹேய் சக்தி. ...கையை சேர்த்து கட்டிட்டா..சேர்ந்து வாழ்ந்துருவாங்களா அவங்க 2 பேரும்..?”என்றான் சுதர்சன்.

“சுதர்சா கொஞ்சம் அந்த பக்கம் பார்த்துட்டு பேசு” என்று டிவியை கை காண்பித்தாள் அத்தை சக்தி.

அப்பொழுது டிவியில்
குளக்கரையில் சுஹானாவை மருமகன் சக்தி கையில் தாங்கிய போட்டோ வந்தது.

அதை பார்த்ததும்
எரிச்சலாய் கால்களை உதைத்தவாறு
சென்றான் சுதர்சன்.






 
லேகாவோட அதிரடி செம்ம 👌👌
சுதர்சா நீ அவமானப்படுறதுக்குனே வர
 
Top