GG writers
Moderator
ரேணுகா
வேலன்
(அத்தியாயம்-19)
அதன்பின் வேகமாய்
அத்தைசக்தி,தாத்தா,ரேணுகா, வேலன் என அனைவரும் சக்திவேலன் அறைக்கு சென்று வெளியே நின்று பார்த்தனர்.
“டேய் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க 2 பேரும்” என்று தன் அண்ணன், அண்ணியை கேட்டாள் சித்ரலேகா.
“ஹேய் அது அவங்க பெர்சனல் நீ தலையிடாத டி” என்றான் வேலன் விஜயகுமார்.
“வேலா நான் என் அண்ணன்
அண்ணிட்ட பேசுறேன் நீ வராத நடுவுல..”என்று கண்டிப்பாய் சொன்னாள் லேகா.
“ஏய் அண்ணா அவள பிடிக்காமதான் தாலி கட்டுனியா,பொட்டு வச்சியா..தாலி கட்டுனா
சேர்ந்து வாழணும்னு தெரியாதா..கழுதை வயசாச்சுல அறிவு இல்ல உனக்கு..”என்று லேகா திட்ட சுஹானா தடுத்தாள்.
“ஹேய் தடுக்காத டி உனக்கு அறிவு இல்ல..அவன பிடிக்காமதான் அவன் கூட இருக்கியா..அவன் உன் புருஷன்
அவன விட்டுட்டு பாட்டி கூட போக ரெடியா இருக்க..உங்கள சேர்க்கிறதுக்கு 4 பேர் வெளியே இருந்து வரனுமா..உங்களுக்கே சேர்ந்து வாழனும்னு தெரியாதா” என்று கேட்டாள் லேகா.
“அமைதியா பேசு டி” என்றான் வேலன் விஜயகுமார்.
“என்ன பேசுறது..2பேரும் எனக்கு
இப்ப சொல்லுங்க உங்களுக்கு ஒருத்தரையொருத்தர்
பிடிக்குமா,பிடிக்காதா..?” என்று கேட்டாள் லேகா.
சக்தியும்,சுஹானாவும் ஒரு சேர “பிடிக்கும்” என்று ஒரே நேரத்தில் பதில் சொன்னார்கள்.
“அப்ப சேர்ந்து வாழ்றதுல உங்களுக்கு என்ன பிரச்சனை” என்று கேட்டாள் சித்ரலேகா.
“நாங்க மனசார நினைக்காமலே
இந்த ரிலேசன்ஷிப்புக்குள்ள வந்துட்டோம், இதை ஏத்துக்க முடியல,கொஞ்சம் டைம் வேணும்” என இருவரும் ஒரே
மாதிரி பதில் சொன்னார்கள்.
“எவ்வளவு நாள் டைம் வேணும்” என்று கேட்டாள் சித்ரலேகா.
“இந்த சேலன்ஞ்சு டேஸ் வரையுமாவது டைம்
கொடு” என்று இதையும் இருவரும் ஒரே நேரத்தில் பதிலாக சொன்னார்கள்.
சித்ரலேகா சிரித்தபடி “நீங்க 2 பேரும் மேட் பாஃர் ஈச் அதர் கப்பில்ஸ்,
அதை நீங்க எப்பதான் உணர போறீங்க..? சரி
சேலன்ஞ்சு டேஸ் வரையும் உங்கள நான் டிஸ்டர்ப் பண்ல..பட் அண்ணா உன்ன இவள தவிர வேற எவ கூடவும் நான் வாழ விடமாட்டேன் அத எப்பவும் நீ
மனசுல வச்சுக்கோ..அவ மட்டும்தான் என் அண்ணி” என்று மிரட்டலாய் சொன்னாள் லேகா.
“ஆமா லேகா உன் கையில எப்படி துப்பாக்கி”என்று கேட்டான் வேலன் விஜயகுமார்.
“டேய் அவ ரைஃபில் கிளப் சாம்பியன் டா, அம்மா பேர்ல லைசென்ஸ் ஓட வாங்கி வச்சிருக்கா”என்றான் சக்திவேலன்.
“சூப்பர் டி பொண்டாட்டி..” என்றான் மாப்ள வேலன்.
“போடா...உன் பாராட்டு ஒன்னும் வேண்டாம் போ”
“ஹேய் ஏன் டி “
“காலையிலே சொல்லாம எங்க போன”
“மச்சான் கூட ஹெல்ப்க்கு போனேன்”
“என்கிட்ட சொல்லிட்டு போனும்னு உனக்கு தெரியாதா, டேய் அண்ணா உனக்கும் சேர்த்து தான் சொல்றேன் எங்க போனாலும் உன் பொண்டாட்டிகிட்ட சொல்லிட்டு போ” என்று சொல்லி வெளியேறினர் சித்ரலேகாவும், வேலன்விஜயகுமாரும்.
அவளின் அப்பா வேலன் மற்றும் ரேணுகா பெரிதும் உற்சாகமாய் லேகாவுக்கு கை
கொடுத்து பாராட்டினார்கள்.
அத்தை சக்திக்கோ சொல்ல முடியாத அளவுக்கு சந்தோசம் லேகா முதல் முறையாய் உறவுகளுக்காக நின்றது. ஆனால் அத்தை சக்தியால் வெளிப்படுத்த தான் முடியவில்லை.
“லேகா எங்களால கேட்க முடியாதது எல்லாம் நீ
கேட்டுட்ட மா தேங்க் யூ” என்றார் தாத்தா.
அப்பொழுது லேகாவின் அப்பா வேலன் “ஒரு நிமிசம் அப்படியே என் தங்கச்சி சக்தி மாதிரியே நீ பேசுன சுதர்சன்கிட்ட”
என்று அவர் சொன்னதும் லேகாவின் மகிழ்ச்சி மாறி அப்பாவை முறைத்தபடி
கோபமாய் கடந்து போனாள்.
அதன்பின் இரவில் மாடியில் தாத்தா,ரேணுகா,அப்பா வேலன்,அத்தை சக்தி என நால்வரும் இணைந்து பேசி கொண்டு இருக்கையில் லேகா அங்கு வர அவர்களை பார்த்ததும் அறைக்கு
திரும்ப நினைத்தவளை தாத்தா அழைத்தார்.
“நீ உன் அத்தைக்கிட்ட சாரி சொன்னா உன்
பிரச்சனையும் முடிஞ்சிரும்ல பேத்தி” என்றார் கனிவாக தாத்தா.
“நான் ஏன் சாரி கேட்கணும்” என்று கேட்டாள் சித்ரலேகா.
“ஏய் நீதான என் நாத்தனாரை மரியாதை இல்லாம பேசுன அப்ப நீதான் சாரி கேட்கணும்” என்றாள் ரேணுகா.
“அவங்கள என்கிட்ட சாரி கேட்க சொல்லுங்க
நானும் கேட்கிறேன்” என்றாள் சித்ரலேகா.
“என் தங்கச்சி எதுக்கு சாரி கேட்கணும் அவ எது
செய்ஞ்சாலும் அதுல நியாயம் இருக்கும்” என்றார் அவள் அப்பா வேலன்.
“ஆனா எனக்கு அநியாயம்ல செய்ஞ்சிருக்காங்க” என்றாள் லேகா.
“என்ன அநியாயம் செய்ஞ்சா அவ..என் நாத்தனார் நியாயதராசு மாதிரி டி..”என்றாள் ரேணுகா.
“ஹோ..அப்படியா..என்ன,அவங்களுக்கு
பிடிக்கலன்னா அவங்க என்கிட்ட
சொல்லி இருக்கலாம்..அவங்க
மகன், அண்ணன், அண்ணி
யாராவது ஒருத்தர்ட்ட சொல்லி இருக்கலாம்ல.எல்லா
ஏற்பாட்டையும் செய்ய சொல்லிட்டு
எல்லார் முன்னாடியும் வந்துதான் பிடிக்கலன்னு சொல்லனுமா”
என்று கண்ணீரோடு கேட்டாள்.
“ஹேய் அது அப்படி இல்ல டி” என்று பேச போன ரேணுகாவை அத்தை சக்தி கையை பிடித்து தடுத்து சொல்லாத என்றபடி கண்சைகை செய்தாள்.
ரேணுகாவும் அமைதியானாள்.
லேகா வேதனையும், கண்ணீருமாய் “வேற எப்படிமா உன் நியாயத்தராசோட நியாயம்
எங்க போச்சு, அவங்களுக்கு ஒரு பொண்ணு இருந்திருந்தா என் வலி அவங்களுக்கு புரிஞ்சிருக்கும்” என்று அவள்
சொல்லும் போது கரண்ட் கட் ஆக..
அந்த சமயம் அத்தை சக்தி ஒரு நிமிடம் தன் மருமகளை அழும் மழலையை சமாதானம் செய்வது போல் அன்பாய் அணைத்து அவள் உச்சியில் முத்தமிட்டாள்..
கரண்ட் வந்த போது எதிரில் இருந்த அம்மா ரேணுகாவிடம்
“இப்ப என்ன ஹக் பண்ணியாம்மா”
என்று அமைதியாய் கேட்டாள் லேகா.
ரேணுகா புரியாமல் அவளை பார்க்க லேகா பின் நின்று அத்தை சக்தி ஆமா என்று சொல்ல சொல்லி ரேணுகாவிடம் கண் சைகையில் சொன்னாள்.
“ஆமா டி அம்மாதான் நீ ஃபீல் பண்றியேன்னு ஹக் பண்னேன் .”
“புதுசா இருக்கு..எனக்கு நீ தொட்ட மாதிரி இல்லம்மா ..”என்றாள் லேகா.
அந்நேரம் சுஹானா அங்கு வந்து “லேகா என்
அண்ணன் எல்லாம் இங்க இல்லம்மா உன்ன ஹக் பண்றதுக்கு” என்றாள்.
“ஏய் பஃடி அடி வாங்கிருவ டி நீ” என்று கண்ணீர் மாறி சிரித்து கொண்டே பதில் சொன்னாள்.
“பின்ன என்ன அண்ணி அத்தை என்னையவே ஹக் பண்ணி அவங்க
மடியில் தூங்க வைப்பாங்க..அவங்க
பொண்ணு உன்ன விட்டுருவாங்களா” என்று கேட்டாள் சுஹானா.
“ஹீம்.. ஏன்ம்மா உன் மருமக வந்ததுக்கப்புறம் தான் உன் மக அருமை தெரியுதுல உனக்கு" என்று சொல்லிவிட்டு கீழே போனாள் சித்ரலேகா.
அதன்பின் சுஹானா அத்தைசக்தியிடம் சென்று “நாத்தனாரின் மாமியாரே கொஞ்சம் மனசு இறங்குங்க” என்றாள் கனிவாக..
அத்தைசக்தியும் அமைதியாக “என்ன வேணும் மகளே உனக்கு” என்று கேட்டாள்.
“என் அண்ணனையும், அண்ணியையும் சேர்த்து வைங்களே” என்று பரிவாய் கேட்டாள் சுஹானா.
அத்தை சக்தியோ அமைதியாக இருந்தாள்.
“நீங்க இன்னைக்கு பார்த்தீங்கள்ல அவ உங்கள மாதிரியே தான் கேரக்டர்லேயும்,தைரியத்துலேயும்.. இன்னைக்கு எனக்காக நின்னவ, நீங்க சேர்த்து வச்சா வாழ்க்கை முழுக்க உங்களுக்காக நிற்பா..” என்றாள் சுஹானா.
“எனக்கு 2 விஷயம் நீ செய்ஞ்சா நானே அவங்க கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்” என்றாள் அத்தை சக்தி.
“சொல்லுங்க..எதுனாலும் செய்வேன்” சுஹானா.
“முதல்ல எனக்கு லேகாவோட காதலை பார்க்கணும்” என்று கேட்டாள் அத்தை சக்தி.
“சோ சிம்பிள் என் அண்ணனோட அண்ணியை பேச விட்டீங்கன்னா நீங்க நல்லாவே தெரிஞ்சுக்கலாம்”
என்றாள் சுஹானா.
“அது தான் கூடாது..அவங்களுக்குள்ள இருக்கிறது மாமாப்பொண்ணு-அத்தைபையன்ற அட்ராக்சன் மாதிரிதான் தோணுது லவ் மாதிரி தெரியல.”
“அப்படி எல்லாம் இல்ல அவங்களுக்குள்ள இருக்கிறது ட்ரூ லவ் தான் மாமியாரே...”
“அப்ப எனக்கு ப்ரூவ் பண்ணு உன் அண்ணன் உதவி இல்லாம உன் அண்ணி மனசை திறந்து லவ்வை சொல்லணும்” என்று கேட்டாள் அத்தை சக்தி.
சற்று யோசித்தவள் “சரிங்க மாமியாரே..2வது விஷயம் என்ன” என்று கேட்டாள் சுஹானா.
“நீயும் உன் அண்ணியும் நல்ல ப்ரண்ட்ஸ் இல்ல”என்று கேட்டாள் அத்தை சக்தி.
“ஆமா எனக்கு அவ செல்லம்,அவளுக்கு நான் செல்லம்” என்றாள் சுஹானா.
“நீ என்ன பண்ற, என்னையும், அவளையும் ப்ரண்ட்ஸ் ஆக மாத்திடு. உன் கூட அவ இருக்கிற மாதிரி என் கூடவும் அவ இருக்கணும் என்ன செய்வியா..”என்று கேட்டாள் சக்தி.
சுஹானா அதிர்ச்சியாய் வாய் அடைத்து நின்றாள்.
“மகளே உன்னதான்” என்று சுஹானாவை தட்டினாள் அத்தை சக்தி.
“மாமியாரே நானும் வாழ்க்கையில எத்தனையோ மாமியார் கொடுமை படிச்சிருக்கேன்,பார்த்திருக்கேன்,
கேள்விப்பட்டு இருக்கேன்.ஆனா உங்கள மாதிரி கொடுமை பண்றவங்கள பார்த்ததுமில்ல,படிச்சதுமில்ல, கேள்விப்பட்டதுமில்ல..” என்றாள் சுஹானா.
“நான் நியூ-வெர்சன் மாமியார் மா இப்படிதான்
டார்ச்சர் பண்ணுவேன்” என்றாள் அத்தை சக்தி.
பின் மீண்டும் மிரட்டும் தோரணையில் “மகளே
என்ன 2 விஷயமும் செய்வியா” என்று கேட்டாள் அத்தை சக்தி.
“நாத்தனாரின் மாமியாரே செய்றேன் ஆனா கொஞ்சம் டைம் கொடுங்க” என்று கேட்டாள் சுஹானா.
“டேக் யுவர் ஓன் டைம்” என்று சொல்லி அத்தை
சக்தி ரேணுகாவை அழைத்து கீழே போனாள்.
தாத்தா சுஹானாவிடம் “ஏன்மா செய்றேன் ஒத்துக்கிட்ட"
“வேற என்ன பண்றது தாத்தா"
“ஏன்மா உன் அண்ணன் வேலன் போய் பேசுனாலே லேகா லவ்வை முழுசா சொல்ல மாட்டான்னு பேரன் வேலன் என்கிட்ட பல தடவை புலம்பியிருக்கான். இதுல அவன் இல்லாம எப்படி ப்ரூவ் பண்ணுவ.”
“தாத்தா தலை சுத்துது..ஏதாவது யோசிப்போம்”என்றாள் சுஹானா.
சுஹானாவின் மாமா வேலன் சுஹானவிடம் “என் மருமகளே சக்தி கேட்ட 2வது விஷயம் எப்படி செய்வ” என்றார்.
“அய்யோ மாமா லேகாவ பாசமா மாத்தலாம்..ஆனா ப்ரண்ட்டா மாத்தறது சாத்தியமே இல்லாத ஒன்னு.”
“அப்ப என்னம்மா செய்ய போற” என்று கேட்டார் மாமா.
“செய்வோம் மாமா நாத்தனாரோட வாழ்க்கையாச்சே யோசிச்சு பொறுமையா செய்வோம்” என்றாள் சுஹானா.
மறுபுறம் ரேணுகா அத்தை சக்தியிடம் தனிமையில்
“ஏன் டி உனக்கு உன் மருமக வேணும்னா அதுக்கு எதுக்கு என் மருமகளை டார்ச்சர் பண்ற..”என்று கேட்டாள்.
“நான் என்ன பண்றது அண்ணி. நம்ம போஸ்ட்டிங் வேற மாமியார் ஆச்சா..ஆனா எனக்கு லேகா கூட ப்ரண்ட்டா இருக்கணும்னு ஆசை..எனக்காக என் மக செய்யாம வேற யார் செய்வா சொல்லு.”
“பாவம் டி சுஹானா..நீ என்ன கூட இப்படி டார்ச்சர் பண்ணதில்ல..ஆனா அவகிட்ட ரொம்ப பண்றடி” என்றாள் ரேணுகா.
“சுஹானாவும் என் செல்லம் தான் அண்ணி,ஆனா இப்ப எல்லாம் உன் பாசம் முழுக்க உன் மருமக மேலதான்..என் மேல இல்லல்ல உன் கூட டூ போ”என்றாள் சக்தி.
“ஹேய் நாத்தனாரே.... என்ன பாரு...உனக்கும் சுஹானாவுக்கும் வித்தியாசமே இல்ல..2பேரும் குழந்தைங்களா தெரியுறீங்க..”
“அண்ணி நீ மட்டும் உன் மருமகள ஹக் பண்ற,மடியில போட்டு தூங்க வைக்கிற..எனக்கு ஆச இருக்காதா என் மருமகள பார்த்துக்கணும்னு.”
“ஹேய் போய் நீயும் லேகாவ கொஞ்சு,தூங்க வை நான் வேணான்னா சொல்றேன்” என்றாள் ரேணுகா.
“ஆனா அவ வேணான்னுல சொல்லுவா” என்றாள் அத்தை சக்தி.
“அதுக்கு நான் என்ன பண்ண முடியும்” என்று கேட்டாள் ரேணுகா.
“ஹேய் அண்ணியாரே..சீரியஸா ஒன்னு சொல்லவா ..நீயும்,நானும் எத்தன வருஷ ப்ரண்ட்ஸ் இதே மாதிரி லேகா கூட கடைசி வரையும் ப்ரண்ட்டா இருக்கணும்ங்கறதுதான் என் ஆசை..”
ரேணுகா கண்கள் கலங்க “நாத்தனாரே...மருமகள
மகளா பார்க்கிறவங்கள பார்த்திருக்கேன்..ஆனா உன்ன மாதிரி ப்ரண்ட்டா இருக்கணும்னு நினைக்கிறவங்கள பார்த்ததே இல்லடி..உன் நல்ல மனசுக்கு நல்லதுதான் நடக்கும்”
“லேகா என்ன புரிஞ்சுக்குவாளா டி..?”
“புரிஞ்சிப்பா சக்தி..இல்லன்னா சுஹானா புரிய வைப்பா” என்று சக்தியை தழுவி கொண்டாள் ரேணுகா.
சிறிது நேரத்திற்கு பின் அத்தை சக்தி வழக்கம் போல மிரட்டலான தோரணையில் சுஹானாவை
“மகளே” என்று சத்தமாய் அழைத்தாள்.
“சொல்லுங்க நாத்தனாரின் மாமியாரே அதான் டாஸ்க் கொடுத்திட்டீங்களே..”என்றாள்.
“அதுக்கு லான்ங் டைம் இருக்கு..மகளே..அடுத்த டாஸ்க் ரெடி நாளைக்கே நீ செய்யணும்..” என்றாள்
சக்தி.
“அது என்ன டாஸ்க்” என்று கேட்டாள்
“நீ என்ன பண்ற..உன் நாத்தனாரை சேலை கட்டி,சமையல் கட்ல சமையல் பண்ண வச்சு..வீட்டு வேலை செய்ய வைக்கிற..என்ன செய்வியா” என்று சத்தமாய் கேட்டாள் அத்தை சக்தி.
“செய்யுறேன்,செய்யுறேன்” என்று பதட்டமாய் பதில் சொன்னாள்.
சுஹானா அதன்பின் லேகாவிடம் சென்று
“அண்ணியாரே ஒரு சேலன்ஞ்சு அதுல நான்
ஜெயிக்கிறது உன் கையில தான் இருக்கு.”
“என்ன சேல்ன்ஞ்சு யார்க்கிட்ட சேலன்ஞ்சு பண்ண..”
“எல்லாம் உன் மாமியார்க்கிட்ட தான்...”
“என்னவாம் அவங்களுக்கு..”என்று கேட்டாள் லேகா.
“அது நாம எல்லாம் அவங்கள மாதிரி ஹோம்லி அண்ணி-நாத்தனாரா இல்லையாம் அப்படி எல்லாம் அவங்களால மட்டும்தான் இருக்க முடியுமா.. நம்மளால
இருக்க முடியாதுன்னு சொன்னாங்க.”
“புரியற மாதிரியே பேச மாட்டாங்களா உன் அம்மா” என்று கேட்டாள் லேகா.
“இல்ல டி அவங்கள மாதிரியே சேலை கட்டி,சமையல்செய்ஞ்சு,வீட்டு பொறுப்பு எடுத்து வேலை செய்றது எல்லாம் அந்த அண்ணி நாத்தனாரால தான் முடியுமாம் நம்மளால முடியாதுன்னு சொன்னாங்க.”
“அதெப்படி அவங்க அப்படி சொல்லலாம் பதிலுக்கு நீ என்ன சொன்ன..” என்று கேட்டாள் லேகா.
“நாங்களும் உங்கள மாதிரி என்ன உங்கள விடவே பொறுப்பா செய்வோம்ன்னு சொன்னேன்” என்றாள் சுஹானா.
லேகா அமைதியாயிருந்தாள்.
“உனக்கு பிடிக்கலன்னா விடு அண்ணி” என்றாள் சுஹானா.
“ஹேய் அந்த அண்ணி-நாத்தனார் ஆட்டம் கொஞ்சம் ஓவர்தான்..அதான் சொல்லிட்டல்ல அவங்ககிட்ட செய்வோம்ன்னு,சிரித்தபடி நாளைக்கே செய்ஞ்சிருவோம்” என்றாள் லேகா.
“என் டெடி டி நீ என்று சொல்லி லேகாவை கட்டி கொண்டாள் சுஹானா.
அடுத்த நாள் அதிகாலையில் லேகாவும்,சுஹானாவும் புடவை கட்டி தயாராகி பேசிக் கொண்டே படிகளில் கீழ் இறங்கினர்.
தற்செயலாய் எழுந்த சக்திவேலன் மாடியில் நின்று அவர்களை பார்த்து யோசனையாய் நின்றான். அப்பொழுது வேலன் விஜயகுமாரும் சக்தி அருகில் வந்து “என்னடா மச்சான் பார்த்துட்டு இருக்க” என்றான்.
“இல்ல டா வேலா, அவங்க 2 பேர் முதுகுதான் தெரியுது யாருன்னு தெரியல..”
“டேய் பார்த்தா தெரியல புடவைல இருக்காங்க உன் அம்மாவும்,என் அம்மாவும் டா” என்றான் வேலன்.
“டேய் அவங்கள பார்த்தா யங்-கா தெரியுறாங்க. அங்க பாரு ஜிமிக்கி மட்டும்தான் தெரியுது..எங்கம்மா, உங்கம்மா ஜிமிக்கி போடுவாங்களா..”
“நீ சொல்ற பாயிண்ட் கரெக்ட் தான்” மச்சான்.
“ஒரு வேளை உன் தங்கச்சியும்,என் தங்கச்சியுமா இருப்பாங்களோ” என்று கேட்டான் சக்தி.
“ஏய் என்னைக்கு அவளுகளுக்கு 8 மணிக்கு முன்னாடி விடிஞ்சிருக்கு..”என்று சொன்னான்
வேலன்..அத்தோடு “டேய் மச்சான் இவளுக வீடு புகுந்து திருடற திருடிகன்னு நினைக்கிறேன்.”
“ஏன் டா திருடுறவ காலையில குளிச்சு தலையில டவல் கட்டி, ஜிமிக்கி போட்டா டா திருட வருவா..” என்று கேட்டான் சக்தி.
“டேய் இப்ப அதான் ட்ரெண்ட், இந்த மாதிரி வீட்டு பொண்ணா வந்து திருடுறது..டேய் அங்க பாரு
ஒருத்தி ஸ்டோர் ரூம் போறா,இன்னொருத்தி கிச்சனுக்கு போறா..ஒன்னு பண்ணு நீ ஜிமிக்கிய பாஃலோ பண்ணு, நான் அந்த ஸ்டோர்ரூம் போறவள பாஃலோ பண்ணுறேன்” என்று சொல்லி
வேலனும்,சக்தியும் வேகமாய் கீழே வந்து தனிதனியாக பாஃலோ செய்தார்கள்.
அப்பொழுது ஸ்டோர்ரூம்க்கு சென்றவள் பின்னே போய் வேலன் சென்று..அவள் தோளை தட்டி “ஏய்
திருட்டு பொண்ணே யார் நீ? இங்கே என்ன பண்ற” என்று கேட்டான்.
“யாரு டா திருடி” என்று திரும்பினாள் சித்ரலேகா.
அவளை புடவையில் பார்த்ததும் இன்ப அதிர்ச்சியாய் புன்னகை செய்தபடி அசந்து நின்றான் மாப்ள வேலன்.
அவனை கடந்து போக நினைத்தவளை வழி
மறித்தான் வேலன்.
“வழியை விடு டா..”
“இல்ல நிச்சயத்தன்னைக்கு கூட லெஹன்ங்கா லதான இருந்த இப்ப என்ன தீடீர்ன்னு சேலை” என்று கேட்டான்.
“அது என் இஷ்டம்..மரியாதையா வழியை விடு” என்று அவனை தள்ளிவிட்டு கடந்து போனாள்.
மறுபுறம் சக்தி கிச்சனுக்கு சென்று அங்கிருப்பது யார் என தெரியாமல் ஜிமிக்கி மட்டுமே தெரிந்தது.”ஹேய் எக்ஸ் கி யுஸ் மீ என்று கை நீட்டி அழைத்தான்.
சுஹானா சட்டென திரும்பி கண்களால் என்ன வேணும் என்பது போல் சைகையாய் கேட்டாள்.
சக்தி இன்ப அதிர்ச்சியாய் கையிலிருந்த செல்போனை தவறி கீழே விட்டான்..சுஹானா
சட்டென செல்போனை பிடித்து அவன் கையில் கொடுத்தாள்.
சுஹானா தலையில் டவல் கட்டி,நெற்றியில் கோவி வடிவ பொட்டு வைத்து,ஜிமிக்கி போட்டு புடவையில் பார்த்ததும் ‘என்ன அழகுடா..தேவதை டி நீ’ என்று
மனதிற்குள் நினைத்து சிரித்துவிட்டு சமையலறையை பார்த்த வண்ணமே டைனிங் டேபிளில் போய் அமர்ந்தான்.வேலனும்சிரித்தபடியே டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தான்.
வேலனும்,சக்தியும் “யாரடா பார்த்த” என்று ஒரு சேர ஒருவரையொருவர் பார்த்து கேட்டு கொண்டனர்.
அப்பொழுது இருவரும் மீண்டும்
ஒரு சேர “உன் தங்கச்சிடா” என்று பதிலையும் ஒன்றாக சொன்னார்கள்.
“டேய் மச்சான் இருடா..இதுக எல்லாம் அகாலப்
பிறவிகள் எப்பவாச்சும் தான் புடவை கட்டும்.. நான் போய் ஒரு செல்ஃபி எடுத்துட்டு வர்றேன் டா” என்று
கிச்சனுக்குள் போனான் வேலன்.
வேலன் அவர்களுக்கே தெரியாமல் செல்ஃபி
எடுத்து விட்டு லேகாவை பார்த்து “சேலை ரொம்ப நல்லா இருக்கு..”என்று சொல்ல லேகா திரும்பி கையில் கரண்டியுடன் முறைக்க... “த த தங்கச்சிக்கு சேலை
நல்லா இருக்குன்னு” சொன்னேன் என்று சமையலறையை விட்டு வெளியே போனான்.
“ஏய் அண்ணி அண்ணன் பாவம் டி..உன்னதான்
சொல்ல வந்தாரு,நீ முறைச்சதும் என்ன சொல்லிட்டு போறாரு” என்று அடக்க முடியாமல் சிரித்தாள் சுஹானா.
“அவங்கம்மா முன்னாடி வந்து சொல்ல வேண்டியதான” என்றாள் லேகா.
அதன்பின் 4 கப்லேயும் காபி எடுத்து டைனிங் டேபிளுக்கு சென்றனர் லேகாவும்,சுஹானாவும்
அங்கிருந்த சக்தியும்,வேலனும் காபி எடுத்து கொண்டனர்.
வேலன் "நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேன் டி” என்று பாடலை செல்போனில் போட்டான்.
லேகா வேலனை பார்த்து.. “பாட்டு ஆஃப் பண்ணு இல்ல காபியை உன் முகத்துலேயே ஊத்திருவேன்” என்று மிரட்டினாள்.
அவனும் “சிட்டுவேசன் சாங்ன்னு போட்டேன்” என்று சொல்ல அவள் முறைக்க பாட்டை ஆஃப் செய்தான்.
சக்திவேலன் செல்போனை பார்த்தபடி “மாப்ள”
என்றதும் சட்டென நிமிர்ந்தாள் சுஹானா.
“பொண்ணுங்களுக்குன்னு எத்தன
வகையான டிரஸ் இருந்தாலும் புடவைதான் ரொம்ப அழகு” என்றான் சக்தி.
தன்னை மறந்து அவன் சொல்வதை கேட்டு ரசித்து கொண்டிருந்தாள் சுஹானா.
அதன்பின் வேலன் சேலையில் உள்ள சுஹானா போட்டோவை மச்சான் சக்திக்கு ஷேர் செய்தான்.சக்தியும் அதை மொபைலில் பார்த்ததும் அந்த போட்டோவை வால்பேப்பராய் செட் செய்தான்.
அதன்பின் அத்தை சக்தியும்,ரேணுகாவும் கீழே
வந்து லேகா மற்றும் சுஹானாவை பார்த்து மிகுந்த ஆச்சர்யம் அடைந்தனர்..ஏனென்றால் 24 -வருடங்களுக்கு முன் இருந்த ரேணுகாவை போல சுஹானாவும் மற்றும் சக்தியை போல லேகாவும் புடவையில் தோற்றமளித்தனர்.
வீட்டில் உள்ள அனைவருக்கும் இருவரையும் புடவையில் பார்த்ததும்
அவர்கள் சமையல் செய்வதும்,வீட்டு வேலைகள் செய்வதை பார்த்து பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.
சிறிது நேரத்திற்கு பின் சுஹானா ஆபிசுக்கு செல்ல தயாராக தன் அறைக்கு சென்றாள்.
சக்திவேலன் சுஹானா டிரஸிங் டேபிளில் தயாராவதை அவளுக்கே தெரியாமல் பார்த்து கொண்டிருந்தான்.
சுஹானா தயாராகி வெளியே செல்ல முயலும் போது..
சக்திவேலன் “மாப்ளை என் போன்ன காணும் தேடி கொடேன்” என்றான் சுஹானாவிடம்..
அவளும் தன்
அலைபேசியில் அவனுக்கு டயல் செய்ய அவன்
பாக்கெட்டிலே போன் ரிங் ஆகியது..அவனை பார்த்து விட்டு சுஹானா திரும்ப..
மீண்டும் சக்தி “மாப்ள என்
டவலை காணும் டிரஸிங் ரூம்ல இல்ல எடுத்து கொடேன்” என்றான் சுஹானாவிடம்,
அவளும் போய்
தேடும் நேரத்தில் ஒரு ரெட் கலர் பைலை எடுத்து கட்டிலின் மெத்தைக்கு அடியில் மறைத்து வைத்தான் சக்திவேலன்.இதை வேலன் விஜயகுமார் அறைக்கு
வெளியே இருந்து பார்த்து கொண்டிருந்தான்.
சுஹானா டவலை கொண்டு வந்து சக்தி கையில் கொடுத்து விட்டு திரும்ப மீண்டும் “மாப்ள” என்று அழைத்தான்.
சுஹானா திரும்பி “என்ன” என்று கேட்டாள்.
“என் ரெட் கலர் பைல்ல காணும் கொஞ்சம் தேடி கொடேன்” என்றான்.
சுஹானாவும் மனதிற்குள் ‘என்னாச்சு
இன்னைக்கு இவனுக்கு’ என்று நினைத்தபடி பைலை தேடினாள் அகப்படவில்லை..வேலன் விஜயகுமார் அறைக்கு வெளியே நின்று சுஹானாவுக்கு போன்
செய்தான்.அவளும் போனை எடுத்தாள்.
தங்கச்சி மெத்தைக்கு அடியில ரெட் கலர் பைல் இருக்கு என்றான். அவள் போனை கட் செய்து மெத்தையின் அடியிலிருந்து பைலை எடுத்து
சக்திவேலன் கையில் முறைத்தபடி கொடுத்துவிட்டு அவள் திரும்ப..மீண்டும் சக்தி அழைக்க நினைக்க
கோபமாய் முறைத்தபடி திரும்பி தன் கைவிரல்களை அவன் முகத்திற்கு நேராக நீட்டி “இன்னொரு தடவை
கூப்பிட்ட அவ்ளோதான்” என்று மிரட்டினாள்.
சக்திவேலன் குழந்தையை போல பாவமாய் முகத்தை வைத்து கொண்டு தன் முகம் முன் நீட்டிய அவள் கைவிரல்களுக்கு நேராய் தன் கையில் இருந்த ஒரு ஜிமிக்கியை காண்பித்தான்.
ஜிமிக்கியை பார்த்ததும் தன் காதுகளை தொட்டவள் ஒரு ஜிமிக்கி இல்லாததால் அவள் கோபம் மாறி வெட்கத்தோடான புன்னகை செய்து அவன் கையிலிருந்து வாங்கி திரும்பி நடக்க..வேலன் விஜயகுமார் வெளியே இருந்து “ஜிமிக்கி ஜிமிக்கி
பொண்ணு மினுக்கி மினுக்கி கண்ணு” என்ற பாடலை மொபைலில் போட்டு விட்டான்.சுஹானா சிரித்தபடி
வேகமாய் வெளியேறினாள்.
மாப்பிளை வேலன் மச்சான் சக்தியிடம் சென்று “எதோ ஸ்டார்ட் ஆன மாதிரி தெரியுது”
“ஹேய் நீ நினைக்கிற மாதிரி ஒண்ணுமில்ல டா”
“அப்படியா சரி சரி டேய் மச்சான் சுஹானா டா..”என்றான் வேலன் விஜயகுமார்.
“எங்கடா எங்க” என்று ஆவலாய் திரும்பினான் சக்தி.
“ஹும் உன் ஹார்ட்ல இருந்து உன் கண்ல தெரியுறா என் தங்கச்சி”என்றான் மாப்ள வேலன்.
சக்தி சிரித்தபடி “ஹேய் போடா நீ சும்மா ஏதாவது சொல்லிட்டு இருப்ப நான் ஆபிஸ் கிளம்புறேன்”என்று அறையை விட்டு வெளியேறினான்.
வெகு நாட்களுக்கு பின் சக்திவேலன் சந்தோசமாய் ஆபிஸ் கிளம்புவதை குடும்பத்தினர் ஆச்சர்யமாய் பார்த்தனர்.
சக்திவேலன் வாசல் வரை சென்ற பின் திரும்பி “மாப்ள” என்று சத்தமாய் அழைத்தான்.
கிச்சனில் இருந்த சுஹானாவுக்கு தன்னை தான் சக்தி அழைத்தான் என்று தெரிந்தும் சிரித்தபடி அவன் பக்கம் திரும்பாமல் நின்றாள்.
அந்நேரம் வேலன் விஜயகுமார் தண்ணீர் எடுக்க கிச்சன் பக்கம் வந்து சுஹானா அருகே நின்றான்.
சக்திவேலன் மீண்டும் “மாப்ள” என்றான்.
“என்னடா மச்சான்” என்று கத்தினான் மாப்ள வேலன்.
அதற்கு சக்தி உன்ன இல்ல டா..அவள கூப்பிட்டேன் என்று கை சைகையில் சொன்னான்.
வேலன் விஜயகுமார் அருகே சக்தி சென்று
“டேய் மாப்ள” என்று பாவமாய் கூப்பிட திரும்பினாள் சுஹானா..என்ன என்று கண்களால் கேட்டாள்.
“ஆபிசுக்கு கிளம்புறேன்” என்றான் சக்தி.
அவளும் சிரித்தபடி போயிட்டு வா என்று கண்களை சிமிட்டினாள்.
“டேய் மாப்ள வர்றன் டா” என்று வேலன் விஜயகுமாரிடம் சக்தி சொல்ல...
“போய் தொலை டா முதல்ல.. ஒரு பை சொல்ல இந்த அக்கப்போர் பண்றியே டா மச்சான்.”
சக்தி வெளியே சென்றதும் வீட்டில் உள்ள பெரியவர்கள் யாவரும் நடந்ததை கண்டும் காணாதவர்கள் போல நடந்து கொண்டு அவர்களுக்குள்ளே மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர்.
அதன்பின் சுஹானா லேகாவிடம் சென்று “நாம ஆபிஸ் போலாமா” என்று கேட்டதும்..
“இன்னைக்கு ஆபிசுக்கு போகல எங்க காலேஜ்ல அலுமினி மீட்டீங் போறோம்” என்றாள் சித்ரலேகா.
“சரி லேகா ஆபிஸ்ல ஒரு சின்ன வேலை முடிச்சிட்டு உன் காலேஜ் மீட்டீங் போலாம்” என்றாள் சுஹானா.