GG writers
Moderator
சிறிது நேரத்திற்கு பின்... வேலன் வீட்டு கதவை பலமாய் தட்டும் சத்தம் கேட்கவே வேலன் வந்து கதவை திறந்தபோது......
வேலனின் 2வது தங்கை சக்தி கையில் பையுடன், ரேணுகாவின் கையை பிடித்தபடி உள்ளே நுழைய முயல்கிறாள். அவளுடன் வேலனின் தாய்மாமாவும் வருகிறார்.
அப்பொழுது வேலன் அவர்களை தடுத்து நிறுத்தி நீங்க மட்டும் உள்ள வாங்க ரேணுகாவுக்கு இடமில்ல என்றான்.
சக்தி கோபமாய் இது உனக்கு மட்டும் வீடு இல்ல.. என்னோட வீடும்தான் சரியா எதுனாலும் உள்ள வந்ததுக்கு அப்புறம் பேசு என்று அவனை மீறி ரேணுகாவை உள்ளே கூட்டி சென்றாள்.
வேலனின் அம்மா... சக்தி வாம்மா ,அண்ணன் வா என்று அழைத்தாள்.
இங்க என்னம்மா நடக்குது நீ கூட இவனுக்கு சொல்ல மாட்டியா...?
நான் சொல்றதை அவன் கேட்கவே மாட்டிக்கிறான் சக்தி.
என்னடா பிரச்சனை உனக்கு...?
எனக்கு ரேணுகா வேண்டாம்... எனக்கு அவள பிடிக்கல என்றான் வேலன்.
எனக்கு அவர் வேணும், அவர் கூட வாழணும் என்றாள் ரேணுகா.
இவ கூட வாழ முடியாது,இவ நம்ம குடும்பத்துக்கு சரியா வரமாட்டா சக்தி.
என்னங்க என் வீட்டாளுங்க பண்ண தப்புக்கு என்ன ஏன் தண்டிக்கிறீங்க.... ஒரு வாய்ப்பு கொடுங்க.
அண்ணா
ரேணுகாவுக்கு ஒரு
வாய்ப்பு கொடுடா
ஹோ அப்படியா... அப்ப உன் பிசினஸ் விட்டுட்டு வீட்லயே இரு நாம ஒன்னா இருக்கலாம்.
அது... அது வந்து என்று தயங்கினாள் ரேணுகா.
திணர்றா பாத்தியா சக்தி? அவளால முடியாது ஏன்னா உடம்புல ஓடுறது ஸ்ரீலேகா மேடம் ஓட இரத்தம்.....”
நீங்க புரோஃபசனையும், பெர்சனலையும் ஒன்னா பார்க்காதீங்க இரண்டும் வேற வேறங்க என்றாள் ரேணுகா.
இல்ல 2ம் ஒன்னுதான் நம்ம லைப்ல,சக்தி அவளால எனக்கு மனைவியா இருக்க முடியாது.. அவள போக சொல்லு என்றான் வேலன்.
“ஒரு 45-நாள் நான் என் வேலையை செய்துகிட்டே உங்ககூட இருக்கேன் அப்பவும் நான் சரி இல்ல. ஒரு நிமிஷம் கூட உங்க மனைவியா என்ன ஏத்துக்க முடியலைன்னா சொல்லுங்க, நானே உங்கள விட்டுட்டு போரேன்”.
வேலா அவங்க சொல்றது சரிதான் தோணுது.. யோசிக்காதடா சரின்னு சொல்லு என்றாள் சக்தி.
மாப்ளை அந்த பொண்ண பார்க்க பாவமா இருக்குயா...? சரின்னு சொல்லுயா நம்ம வீட்லயும் 3 பொண்ணுங்க இருக்காங்க கொஞ்சம் யோசிச்சு பாரு வெறும் 45 நாள்தான ஐயா..
சரி 45 நாள் மட்டும்தான்.... என் மனசு மாறாது நீ 45நாள் இங்க இருக்கறது வேஸ்ட்தான்... ஆனா இருந்துட்டு போ என்று சொல்லிவிட்டு வேகமாக வேலன் அறைக்கு சென்றான்.
ரேணுகா தன்னை சற்று அமைதிப்படுத்தி பெருமூச்சுவிட்டாள்.... தேங்க்ஸ் அங்கிள் அண்ட் சக்தி என்றாள்.
என்ன அங்கிள்ன்னு சொல்ற சித்தப்பான்னு சொல்லுமா...
சரிங்க சித்தப்பா...
நான் இங்கதான் ரயில்வேல ஸ்டேஷன் மாஸ்டர் ஆக இருக்கேன்... எனக்கு ஒரே பொண்ணு அமராவதி....அவள நம்ம வேலன் நண்பன் கண்ணனுக்குதான் கட்டி கொடுத்துருக்கேன், உனக்கு எது வேணும்னாலும் சித்தப்பாட்ட கேளுமா என்றார்.
சரிங்க சித்தப்பா என்றாள் ரேணுகா.
அம்மா குடிக்க காபி கொடு அம்மா 3பேருக்கும்,கொஞ்ச நேரத்துல வீடே போர்க்களம் ஆயிடுச்சு தலைவலிக்குது என்றாள் சக்தி.
பூமா எங்கம்மா ஸ்கூல் விட்டு வரலையா....
இனிமேல் தான் வருவா சக்தி காபி எடுத்துக்கோ, நீயும் எடுத்துக்கோமா அண்ணா எடுத்துக்கோங்க என்று காபி கொடுத்தாள் வேலனின் அம்மா.
ரேணுகா உங்கள எப்படி கூப்பிடறது.... நீ,வா,போன்னு பேசுனா உங்களுக்கு பிடிக்குமா... ஏன்னா வாங்க, போங்கன்னு கூப்பிடுறது யாரையோ கூப்பிடற மாதிரி இருக்கு என்றாள் சக்தி.
பெயர் சொல்லி கூப்பிடுங்க நீ,வா,போன்னு பேசுங்க என்றாள் ரேணுகா.
ரேணுகா ப்ரண்ட்ஸ் என்று கையை நீட்டினாள் சக்தி.
ரேணுகா சிரித்தபடி கைகொடுத்து தேங்க்ஸ் சொன்னாள்.
ப்ரண்ட்ஸ் க்கு தேங்க்ஸ் சொல்லக் கூடாது.... நான் ஆர்மில டாக்டர் ஆக இருக்கேன்., இப்பதான் லீவு கிடைச்சுது. இது என் தங்கச்சி பூமாதேவி என்று ஸ்கூல் விட்டு வந்தவளை அறிமுகம் செய்தாள். எனக்கொரு அக்கா அவபெயர் அகிலா... அம்மா கார்மெண்ட்ஸ் வச்சிருக்காங்க அவங்ககூட சேர்ந்து அக்காவும் பார்த்துக்கிறா., அப்புறம் அக்கா மாசமா இருக்கா 6மாசம் முடிஞ்சு இது 7வது மாசம் தெரியுமா.? என்றாள் சக்தி.
நீங்க சொன்னதுல பாதி தெரியும், பாதி தெரியாது.
அடப்பாவி எங்கள பத்தி எல்லாம் அவன் உன்கிட்ட சொல்லவே இல்லையா.....?
சொல்லயிருக்காரு, ஆனா எங்க வீட்ல பேசவே முடியாத சூழ்நிலை என்றாள் ரேணுகா.
சரிசரி 2பேரும் பேசுனது போதும் போய் தூங்குங்க என்று இருவரையும் அனுப்பினாள் வேலனின் அம்மா.
இரவு முடிந்து பொழுது விடிந்தது .வேலன் எழுந்து அறைகதவை திறந்தபோது ரேணுகா எதிரில் சக்தி அறையிலிருந்து வெளியே வர.... ரேணுகா வேலனை பார்த்து முகம் மலர கண்டும் காணாதவனாய் கடந்து போனான் வேலன்.
ரேணுகா சமையலறைக்கு சென்று பால் சூடு செய்து காபி போட முயன்ற போது தவறுதலாய் அவள் மேல் கொட்டிவிட.... பதட்டமாய் ஓடி வந்தனர் சக்தியும், அம்மாவும் என்னாச்சு என்று...பூமாவிடம் மருந்து எடுத்துட்டு வா என்று சக்தி சொல்ல,
எந்தவித பதட்டமும் காட்டாமல் நடுஹாலில் அமர்ந்து இருந்தான் வேலன்...
ரேணுகா உனக்கு ஏன் இந்த வேலை, இதெல்லாம் நீ செய்யாதம்மா என்றாள் அவளது அத்தை.
எனக்கு எந்த வீட்டு வேலையும் தெரியாது கத்துக்கலான்னுதான் வந்தேன் அத்தை.
ரேணுகாவை தெரியாதது போல எழுந்து போனான் வேலன்.
அப்பொழுது சக்தி உரத்த சத்தமாய் “அண்ணியாரே...." முதுகுவலின்னுங்களே தைலம் போடட்டா?
போனவன் வேகமாய் திரும்பி வந்து கோபமாய் அவள ஏன் அண்ணின்னு கூப்பிடற..”
அண்ணன் பொண்டாட்டிய அண்ணின்னு கூப்பிடாம வேற என்னன்னு கூப்பிடறது..
அண்ணியாரே என்று மீண்டும் கத்தினாள்.
ஹேய் சக்தி.... என்று அவன் எரிச்சலாகி இவள ஏன் அம்மா என் கூட பெத்த... தலையில் அடித்து வேகமாய் படி ஏறி அறைக்கு சென்றான்.
ஏன் டி காலையிலேயே அவன வம்புக்கு இழுக்குற.....
பின்ன என்னம்மா ரேணுகாவுக்கு எதுனாலும் அவர் பார்க்க மாட்டாராம்மா.
என்னமோ பண்ணு சக்தி என்று கடந்து போனாள் அம்மா.
சக்தி ஏன் திடீர்ன்னு அண்ணியாரேன்னு கூப்பிட்ட...?
நான் அண்ணியாரேன்னு கூப்பிட்டா நீங்க என்ன நாத்தனாரேன்னு கூப்பிடனும் ஓகேவா
ஓகே.....ஓகே...
வேலன் ரெடியாகி வேலைக்கு கிளம்பி போனான்.
ரேணுகாவை கண் எடுத்தும் பாராமல் கடந்து போனான்.
ரேணுகா தன் ஆபீஸ்க்கு தேவையான வேலைகளை செய்து கொண்டு இருந்தாள்.
மாலைநேரம் பூமா வந்ததும்; சக்தி ரொம்ப போரிங்காக வீடு ரொம்ப அமைதியா இருக்கே., ரேணுகா....
சொல்லு சக்தி
டான்ஸ் ஆடலாமா....?
ஹேய் என்னாச்சு உனக்கு..!
ரேணுகா வா டான்ஸ் ஆடலாம் கேசட் இருக்கு.
அத்தை இருக்காங்க என்ன நினைப்பாங்க...?
அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க
வேணாம் சக்தி காலேஜ் படிக்கும் போது ஆடுனது......
அட வாம்மா ஆடலாம், பூமா நீயும் வா என கேசட்டில் பாடலை போட்டு மூவரும் ஒரு சேர மகிழ்வாய் நடனமாட அந்நேரம் வேலனும், அகிலாவும் வீட்டிற்குள்வர..
பூமா பாட்டை நிறுத்த,
என்னடி தெருகூத்து மாதிரி ஆடிட்டு இருக்கீங்க என்றான் வேலன்.
என் அண்ணி கூட நான் ஆடுறேன் உனக்கென்னடா பொறாமை
ஏய் பூமா நீயும் இவங்ககூட சேர்ந்துட்டியா என்று மிரட்டும் குரலில் கேட்டான் வேலன்
அவள ஏன்டா மிரட்டுற...? என்றாள் சக்தி.
அக்கா இவள நீயாச்சும் ஏதாவது சொல்லேன் என்றான் வேலன்.
நான் பேசிக்கிறேன்டா தம்பி நீ போ என்று சொல்லி சக்தியை தனியாக அழைத்து போய் என்னடி பண்ணிட்டு இருக்க என்று கேட்டாள் அகிலா.
ரேணுகா கூட டான்ஸ் ஆடிட்டு இருந்தேன்.
ஏன் டி அவனுக்கு அவள பிடிக்கல, நீ ஏன் அவளுக்கு சப்போர்ட் பண்ற
பாருடா தம்பிக்கு சப்போர்ட்...
வேலன் தப்பு பண்ண மாட்டான்......
அப்படி எல்லாம் சொல்ல கூடாது அகிலா தப்பு யார் பக்கம் வேணாலும் இருக்கலாம்.
நான் வேலனை நம்புறேன் என்றாள்.
உன்ன திருத்த முடியாது அகிலா... என்று கூறினாள் சக்தி.
அன்று இரவில் எல்லோரும் உறங்கிய பின் வேலனின்அம்மா சக்தியிடம்... நீ ரொம்ப வெறுப்பு ஏத்துற வேலனை.
அம்மா என் கூட வாயென் சொல்லி அவளை வேலனின் அறைக்கு கூட்டிட்டு போய் கதவை திறந்து காண்பித்தாள்.
அங்கு வேலன் திருமணமான முதல்நாள் இரவில் ரேணுகா கட்டிய சேலையை உடல் முழுதும் மூடி தூங்கி கொண்டு இருந்தான்.
பின் கதவை அடைத்து இருவரும் படி இறங்கி கீழே சென்றனர்.
பார்த்தியாம்மா... நேத்து கோபமா பேசிட்டோமேன்னு மனசு கஷ்டமா இருந்துச்சு,அவன்கிட்ட பேசலான்னு அவன் ரூம்க்கு போனேன் பார்த்தா பொண்டாட்டி புடவையை மூடி தூங்குறான்,அடுத்த
நாள் காலையில அவள பிடிக்காத மாதிரி நடிக்கிறான். அதான் அவன வெறுப்பு எத்துனன்.
அவங்களுக்குள்ள என்ன பிரச்சனை சக்தி.
தெரியல அம்மா... நான் கேட்கல நீயும் கேட்காதே புருஷன் பொண்டாட்டி பிரச்சனை தன்னால சரி ஆயிடும். நாம யாரும் தலையிட வேண்டாம்.
ஏன் அப்படி சொல்ற.......சக்தி.
அம்மா அவ்ளோ கோபமா அவங்க வீட்ல இருந்து கிளம்பும் போது அவ புடவையை எடுக்க இவன் மறக்கல...... இவனுக்கு அவள ரொம்ப பிடிக்கும். ஒரு நாள் அவனே அவகிட்ட சொல்லிடுவான் நீ ரேணுகாகிட்ட எதுவும் சொல்லிடாத அம்மா.
சரிம்மா என்று இருவரும் தூங்க போனார்கள்.
அடுத்த நாள் காலையில் வேலனின்அம்மா ரேணுகாவை தனியே அழைத்து சமையலறையில் வைத்து நான் ஒன்னு கேட்பேன் நீ மறைக்காம உண்மையை சொல்லணும்.
சொல்லுங்க அத்தை.
நீயும் வேலனும் சேர்ந்து வாழ்க்கை தொடங்கிட்டிங்களா...?
அவள் சற்று தயங்கவே.....
நான் உன் அம்மா மாதிரிம்மா நீ உண்மையை சொல்லு..... என்றதும்
அத்தையை கட்டி கொண்டு அழுக ஆரம்பித்தாள்.
ரேணுகா என்று அவள் தலையை கோதி கவலைப்படாதம்மா வெட்கப்பட வேண்டிய இடத்தில நீ அழும் போதே எனக்கு புரியுது. சீக்கிரமா அவன் உன்ன சேர்த்துக்குவான் கவலைப்படாத ரொம்ப வருஷம் 2 பேரும் சேர்ந்து நல்லா வாழ்வீங்க என்று ஆசீர்வதித்தாள்.
அந்நேரம் அங்கு வந்த வேலன் அம்மா என்னம்மா பண்ற என்று அலறினான்.
ரேணுகா கையை எடுத்து சற்று விலகினாள்.
என்னடா...? அவ என் மருமக... தள்ளி நின்ற ரேணுகாவை தோள் மீது கை போட்டு இவள எனக்கு பிடிச்சிருக்கு இவ என்னோட 4வது மகடா.. என்றதும்
அதிர்ச்சியாய் அம்மாவை பார்த்தான் வேலன்.
அதே நேரம் எதுவும் அறியாமல் சக்தி அண்ணியாரே என்றழைக்க......
வெறியான வேலன்..... ஹேய் என்னடி காலையிலேயே அண்ணியாரே, வெண்ணியாரேன்னு போடி... என்று வேகமாய் அறைக்கு போனான்.
என்ன இவ்ளோ கடுப்பா போரான்... சித்ராம்மா என்னாச்சு.... என்று தன் அம்மாவை கேட்டாள் சக்தி.
ரேணுகாவ என் மகன்னு சொல்லிட்டேன் அதான் அவனுக்கு கடுப்பு.
அம்மா சூப்பர் என தன் அம்மாவை கட்டி கொண்டாள் சக்தி.