GG writers
Moderator
ரேணுகா
வேலன்
(அத்தியாயம்-20)
சிறிது நேரத்தில் ஆபிசுக்கு போனார்கள். அங்கு லேகாவை நிறுத்திவிட்டு சுஹானா சக்திவேலனை காண தனியாய் கேபினுக்குள் நுழைந்தாள்.
அங்கு சக்திவேலன் "ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு” பாடலை மொபைலில் வைத்து கண்களை மூடி எம்.டி.சீட்டில் சாய்ந்தபடி கேட்டு கொண்டிருந்தான் சுஹானா வந்தது கூட தெரியாமல்...
சுஹானா புன்னகையோடு நடந்து வந்து பாடலை நிறுத்தினாள்.
சக்தி சட்டென கண் திறந்தான்.. “என்ன சி.இ.ஓ மேடம்” என்றான்.
அவளும் புன்னகையை மறைத்து மிரட்டலாய்
“என்ன வேலை நேரத்துல பாட்டு” என்று கேட்டாள்.
“ஹேப்பி மூட் மேடம்” என்றான்.
“அப்படி என்ன ஹேப்பி மூட் சார்” என்று கேட்டாள்.
“ஒரு அழகான ஜிமிக்கி பொண்ண பார்த்துட்டு வந்தேன் அதான்” என்றான்.
“அந்த பொண்ணு ரொம்ப நாளா உங்க கூட தான இருக்கா” என்றாள்.
“ரொம்ப நாளா என் கூட தான் இருக்கா..ஆனா இன்னைக்கு தான் பொண்ணு மாதிரி தெரிஞ்சா” என்று அவன் சொன்னதும் செல்லமான கோபமாய் திரும்பி நடந்தாள்.
“மேடம் எங்க போறீங்க” என்று கேட்டான்.
“நான் இன்னைக்கு லீவு” என்றாள்.
“பொறுப்பில்லாம இப்படி விட்டுட்டு போறீங்களே மேடம்.”
“அதான் பொறுப்பு பொரியல் இருக்கார்ல அவர் பார்த்துக்குவார்.”
“யார் மேடம் அது..”
“நீங்க தான் எம்.டி.சார்” என்று புன்னகையுடன் சொல்லியபடி கேபின் கதவை மூடினாள் சுஹானா .
அதன்பின் சிறிது நேரத்தில் லேகா படித்த கல்லூரி வாசலில் வந்து இறங்கினார்கள் சுஹானாவும்,லேகாவும்.,
லேகா சுஹானாவிடம்
“இதுதான் எம்.டி.சார் சக்திவேலன் படிச்ச காலேஜ் பார்த்துக்கோ” என்றாள்.
“ஹேய் நீயும்,உன் அண்ணனும் ஒரே காலேஜா?என்று கேட்டாள் சுஹானா.
“ஆமா,அவன் வரல அதான் உன்ன கூட்டிட்டு
வந்தேன்” என்றாள் லேகா.
“சரி வா உள்ள போலாம்” என்றாள் சுஹானா.
“அண்ணி சக்தி செட்ல அனுன்னு ஒருத்தி அவ உன்கிட்ட பேசுனா அதிகமா ரெஸ்பான்ட் பண்ணாத அவாய்டு பண்ணிடு” என்றாள்.
“ஏன் டி..” என்று கேட்டாள் சுஹானா.
“நான் உனக்கு அப்புறம் சொல்றேன்” என்று சொல்லி லேகா சுஹானாவை காலேஜுக்குள் அழைத்து சென்று அங்கிருந்த அனைவரிடமும் சுஹானாவை சக்திவேலனின் மனைவி என அறிமுகம் செய்து வைத்தாள்.
பழைய மாணவர்கள் சந்திப்பும் நினைவுகளும் அவற்றை பகிர்தலும் கண்ணீரும்,மகிழ்ச்சியுமான தருணங்கள் அங்கு நடைபெற வேலன் விஜயகுமார் லேகாவை காண வந்தான்.
“என்ன டா வேணும் இங்க ஏன் வந்த” என்று கேட்டாள் லேகா.
“நான் உன்கிட்ட பேசணும் டி..”
“சரி வா அங்க போலாம்” என்று மரத்தடி ஸ்டோன் பென்ஞ்சில் அமர்ந்தனர்.
“என்ன டி முடிவு பண்ணியிருக்க நம்ம விஷயத்துல” என்று கேட்டான்.
“எனக்கும் உன் அம்மாவுக்கும் எப்பவும் செட் ஆகாது..”
“ஏன் டி..”
“எந்த காலத்துலடா இருக்க..மாமியாரும்- மருமகளும் சேர்ந்து இருக்கணும்னு டார்ச்சர் பண்ற”.
“ஏன் இந்த காலத்துல அப்படிப்பட்டவங்க யாரும் இல்லையா?”
“இல்ல டா..”
“அப்ப சுஹானாவும், ரேணுகா அத்தையும் யாரு”என்றான் வேலன்.
“டேய் அவங்க 2 பேருக்கும் மனசளவுல நல்ல புரிதல் இருக்கு.எனக்கும் உன் அம்மாவுக்கும் அப்படிப்பட்ட புரிதல் கிடையாது.”
“அதான் ஏன் ? அவங்க கூட பேசாம, பழகாம எப்படி டி புரிஞ்சுக்குவ..?”
“நான் ஏன் பழகணும்,புரிஞ்சுக்கணும்”.
“எனக்காக..நமக்காக டி..”
“முடியாது டா...”
“ஏன் டி பிடிவாதமா இருக்க ரேணுகா அத்தைய விட என் அம்மா உன்ன நல்லா பார்த்துக்குவாங்க.”
“ஹாம் பார்த்துக்குவாங்க..பார்த்துக்குவாங்க நான் தான் டெய்லி பார்க்கிறேனே..”என்று முகத்தை திருப்பி கொண்டாள் லேகா.
“ஹேய் பொண்டாட்டி என்ன பாரு ..”என்றதும் அவனை பார்க்க திரும்பினாள்.
“எனக்கு நினைவு தெரிஞ்சு என் அப்பா முகத்தை நான் பார்த்ததே இல்ல...அவர் வேலை விஷயமா வேற நாட்டுல இருக்காரு..ஆனா ஒரு நாள் கூட எனக்கு அப்பா இல்லன்னு ஃ பீல் ஆனதே இல்ல...என் அம்மா எனக்கு அப்பாவாவும் நல்ல ப்ரண்ட்டாவும் இருந்திருக்காங்க..அந்த நம்பிக்கையிலதான் சொல்றேன் என் அம்மாவ ஏத்துக்கோ,உன்ன நல்லா பார்த்துக்குவாங்க” என்றான்.
லேகா அமைதியாயிருந்தாள்.
“இதுக்கு மேல நான் என்ன சொல்ல நான் கிளம்புரேன் டி” என்றான் கிளம்பினான் வேலன்.
லேகா அவன் சொன்னதை யோசித்தவாறு நடந்தாள்.அப்பொழுது சுஹானாவிடம் ஒரு பெண் அறிமுகமாகி "திஸ் இஸ் யுவர் மேரேஜ் கிப்ட்" என்று ஒரு பென்-டிரைவை கொடுத்து "இதில் சக்திக்கே தெரியாம எடுத்த போட்டோ வீடியோ உள்ளது" என்று சொன்னாள்.
லேகா சுஹானாவை வேகமாய் அந்த பெண்ணிடம் பேச விடாமல் தனியே இழுத்து சென்று “அனு கூட பேசாதன்னு சொன்னேன்ல”
“அவங்கதான் அனுவா..? ஏன் பேச கூடாதுன்னு சொன்ன” என்று கேட்டாள் சுஹானா.
“அவ சக்தியை லவ் பண்ணா அவனுக்கே தெரியாம போட்டோ,வீடியோ எடுக்கிறது சர்ப்ரைஸ் பண்றதுன்னு சுத்திட்டு இருந்தா..சக்தி ஒரு நாள் கண்டுபிடிச்சிட்டான்” என்றாள் லேகா.
“சக்தி என்ன சொன்னான்” என்று கேட்டாள் சுஹானா.
“அவன் அம்மாவ கூட்டிட்டு போய் அவ வீட்டுக்கே போய் அட்வைஸ் பண்ணான் அதுக்கப்புறம் அவளாவே புரிஞ்சுக்கிட்டு விலகிட்டா..”
“அப்புறம் ஏன் டி நீ என்ன பேச விடல..அவ கூட” என்று கேட்டாள் சுஹானா.
“இல்ல டி ஏதாவது இல்லாததை சொல்லி உன்ன கஷ்டபடுத்திட்டானா..அதான் வேண்டானு சொன்னேன் என் பஃட்டி எப்பவும் ஹேப்பியா இருக்கணும்” என்றாள் லேகா.
“சரிங்க நாத்தனாரே ..என் அண்ணன் வந்தாரே என்ன சொன்னாரு” என்று கேட்டாள் சுஹானா.
“அவன் வழக்கம் போலதான் பேசுனான்..சரியான அம்மா பிள்ளை டி உன் அண்ணன் .”
“அதாவது அம்மாவ நல்லா பார்த்துக்கிற பசங்க கல்யாணத்துக்கு அப்புறம் பொண்டாட்டிய ரொம்ப நல்லா பார்த்துக்குவாங்கன்னு தாத்தா சொன்னார்” என்றாள் சுஹானா.
“போதும்...போதும் வா வீட்டுக்கு போலாம்” என இருவரும் கிளம்பி வீட்டுக்கு சென்றனர்.
லேகாவும், சுஹானாவும் வீட்டிற்குள் வந்ததும்
லேகா சுஹானாவிடம் “ஹேய் பஃட்டி பார்த்தியா அந்த அண்ணியையும்,நாத்தனாரையும் நம்மள ஹோம்லி யா சேலை கட்ட சொல்லிட்டு அவங்க 2பேரும் சுடிதார்ல இருக்காங்க..என்ன சேட்டை 2 பேருக்கும்..”
“கோபப்படாத லேகா.. இதுவும் அழகாதான இருக்கு”என்றாள் சுஹானா.
“நீ அவங்களுக்கு சப்போர்ட்டா டி அண்ணி.”
“நோ டென்ஷன் நாம 2 பேரும் கை கோர்த்துட்டு போய் அவங்கள வெறுப்பு ஏத்துவோம்” என்று சொல்லி சுஹானா லேகாவை அழைத்து போனாள்.
அப்போது அத்தை சக்தி சத்தமாய் “மகளே ஒரு நிமிசம்..” என்றழைக்க இருவரும் திரும்பினார்கள்.
“ஏதோ என்னையும்,என் அண்ணியும் மாதிரி இருக்க ட்ரை பண்றீங்கன்னு தெரியுது..ஆனா நீங்க 2 பேரும் எங்க அளவுக்கு ஒர்த் இல்ல விட்டுருங்க” என்றாள் அத்தை சக்தி.
“ஹலோ மேடம் நீங்க பார்ட்-1 அண்ணி நாத்தனார்ன்னா,நாங்க பார்ட்-2 அண்ணி
நாத்தனார்ம்மா உங்கள விட ஸ்ட்ராங்கா இருப்போம் கரெக்ட் தானே அண்ணியாரே” என்று கேட்டாள் சுஹானா.
“கரெக்ட்டா சொன்னீங்க நாத்தனாரே” என்றாள் லேகா.
“ஹோ அப்படியா தில் இருக்கா உங்க 2 பேருக்கும் நானும்,என் அண்ணியும் இப்ப கூட டான்ஸ் ஆடுவோம்.எங்களுக்கு சமமா நீயும் உன் அண்ணியும் ஆடிருவீங்களா..”என்று கேட்டாள் அத்தை சக்தி.
“வேண்டாம் பஃட்டி பழைய பாட்டா போடுவாங்க” என்றாள் லேகா.
“பாட்டு நீங்களே செலக்ட் பண்னுங்க” என்றாள் அத்தை சக்தி.
“லேகா வயசாயிடுச்சே இவங்க கூட போயா போட்டி போடுறது” என்று கேட்டாள் சுஹானா.
“மருமகளே ரேணுகாவும்,சக்தியும் நல்ல டான்சர்ஸ் மா..அவங்ககிட்ட சேலன்ஞ்சு பண்ணாதீங்க, அவங்க உங்கள மாதிரி அண்ணி நாத்தனாரா இருக்கும் போதே அந்த ஆட்டம் ஆடுனவங்க இப்ப 2 பேரும் மாமியார் வேற ஆட்டம் வேற லெவலா இருக்கும்” என்றான் மாமா வேலன்.
லேகாவும், சுஹானாவும் யோசனையாய் திரும்பவும்..அந்நேரம் அத்தை சக்தி சத்தமாய்
“அந்த பயம் இருக்கணும் டி மருமகள்களா..”என்றாள்.
அவர்கள் இருவரும் திரும்பி “டிரஸ மாத்திட்டு வர்றோம்” என்று ஒரு சேர சொன்னார்கள்.
அதன்பின் அத்தை சக்தி ரேணுகாவிடம் எந்த பாட்டுன்னாலும் கடைசி ஸ்டெப் ரோலிங்-ஸ்டெப் நீ உன் மக கூட..நான் என் மக கூட ஓகேவா டி” என்று கேட்டாள்.
“ஓகே ஓகே..”என்றாள் ரேணுகா.
லேகாவும், சுஹானாவும் உடை மாற்றி வந்து வாரிசு படம்-ரஞ்சிதமே பாடலை செலக்ட் செய்தனர்.
அப்பொழுது சுஹானாவின் மாமா வேலன்
“எப்படியும் என் தங்கச்சியும், என் பொண்டாட்டியும் தான் ஜெயிக்க போறாங்க” என்றார் .
வேலன் விஜயகுமார் அங்கு வந்து “என் தங்கச்சியும்,என் பொண்டாட்டியும் தான் ஜெயிப்பாங்க” என்றான்.
“முதல்ல அவங்கள ஆட விடுங்க..நிற்காம ஆடுறவங்க வின்னர்” என்றார் தாத்தா.
பாடல் ஆரம்பித்ததும் அவர்கள் நால்வரின் நடனமும் தொடங்க தாத்தா வீடியோ எடுக்க.,வேலனும்,மாப்ளவேலனும் சேர்ந்து அவர்களை போட்டோ எடுக்கவும், கருத்து சொல்லவும் வீடே மகிழ்ச்சியாய் மாறியது.
“ஹய்யோ மாமா என்ன 4 பேரும் சளைக்காம ஆடுறாங்க வேற லெவலா இருக்கே எப்படி வின்னரை செலக்ட் பண்ணுவீங்க” என்று கேட்டான் வேலன் விஜயகுமார்.
“ஆமாடா மாப்ள ஒருத்தருக்கொருத்தர் விடாம ஆடுறாங்களே..”என்றார் மாமா வேலன்.
பாடல் முடியும் தருணம் ரேணுகாவும்,சக்தியும் மாறி மாறி லேகாவோடும், சுஹானாவோடும் ஆடி அவர்களை குழப்பி விட்டு ரேணுகா லேகா கையை பிடித்து சுழட்டி சுழட்டி வேகமாய் நடனமாட,அத்தை சக்தியும் சுஹானாவின் கையை சுழட்டி சுழட்டி வேகமாய் நடனமாடி ஒரே நேரத்தில் விட்டனர்.லேகா தலை சுத்தி விழ அப்பா வேலனும்,மாப்ளைவேலனும் அவளை விழாதபடி பிடித்து கொண்டனர்.
சுஹானா தலை சுற்றி விழ அவள் எதிரில் வந்த சக்திவேலன் மீது மோத அவள் விழாதபடி சக்திவேலன் பிடித்து கொண்டான்.ரேணுகாவும்,அத்தைசக்தியும் பாடல் முடிவு வரை நடனமாடி வென்றனர்.
தாத்தா அனைத்தையும் போட்டோ,வீடியோ எடுத்து அனைவருக்கும் ஷேர் செய்தார்.
அதன் பின் சுஹானா..ரேணுகாவிடம் “மாமியாரே உங்க நாத்தனார் கூட சேராதீங்க எல்லாத்துலேயும் எப்படியாச்சும் ஜெயிச்சிறாங்க..”
“அதுதான் மருமகளே என் நாத்தனாரோட ஸ்பெஷல் கேரக்டர்..அவள யாரும் கெஸ் பண்ண முடியாது,ஜெயிக்கவும் முடியாது” என்றாள் ரேணுகா.
“அப்படி எல்லாம் இல்ல இதுக்கு பெயர் ஏமாத்து வேலை..”என்றாள் லேகா.
“சேலன்ஞ்சுன்னா அப்படிதான் இருக்கும், நீங்க தான் யோசிக்கணும்” என்றாள் அத்தை சக்தி.
அதன்பின் வேலன் விஜயகுமார் தன் அம்மா சக்தியிடம் “அம்மா நீ சூப்பர் மா..நான் என்ன சொல்றேன் நீ கல்யாணத்துக்கு ஓகே சொல்லி அவள உன் மருமகளாக்கி மாமியார் டார்ச்சர் பண்ணு அப்பதான்மா நீ கெத்தா இருப்ப...” என்றான்.
“ஆனாலும் நீ ரொம்ப தைரியசாலிடா..”என்றாள் சக்தி.
“ஏன் அம்மா..”
“உன் பின்னாடி கொஞ்சம் பாரு..”என்று சொல்லி தள்ளி விலகி போனாள் அம்மா சக்தி.
அவன் பின்னால் சித்ரலேகா நிற்க.. “நீ எப்ப டி வந்த..”என்று சிரித்தபடி மழுப்பலாய் கேட்டான்.
“ஏன் டா உங்க அம்மா, மகன் டார்ச்சருக்கு நான் தான் கிடைச்சனா..இப்பதான் புரியுது நீ ஏன் ஒன்னா இருக்கணும் சொல்றன்னு”
“ஏய் இல்ல டி...அது..அப்படி இல்ல” என்று தொட போனவனின் கைகளில் ஓங்கி அடித்தாள் லேகா.
“வேற எப்படி டா...”என்றாள்.
“பொண்டாட்டி..உன்ன எல்லாம் யாராச்சும் டார்ச்சர் பண்ண முடியுமா,நீதான் 4 பேரை டார்ச்சர் பண்ணுவ..”
“4 பேர் யாரு..”என்று கேட்டு லேகா அவனை அடிக்க அவள் அப்பா பெல்ட்டை எடுக்க..
“நானு, என் அம்மா, நம்ம பிள்ளைங்க 2 பேர் டி..” என்று கூறிவிட்டு பயந்து அவளை விட்டு வேகமாய் ஓடி மாடிக்கு போனான்.
அடிக்க போன லேகா சிரித்தபடி பெல்ட்டை தூக்கி எறிந்து விட்டு கடந்து போனாள்.
வேலன் விஜயகுமார் மாடியில் சக்திவேலன் தனிமையில் மொபைல் ரசித்து பார்ப்பதை பார்த்து விட்டு அமைதியாய் அவன் பின்சென்று பார்த்தான்.அதில் சுஹானாவின் சேலை அணிந்த போட்டோ..வேலன் விஜயகுமார் சட்டென பின்னிருந்து மொபைலை பிடுங்கினான் சக்தியிடமிருந்து.
“டேய் மாப்ள போன்ன கொடுடா..”
“முடியாது..என் தங்கச்சி மேல லவ் வந்திருச்சுதான உனக்கு..”
“ஹேய் லூசு இதுக்கு பெயர் லவ்வாடா..அழகா
இருந்தா வால்பேப்பர்ல வச்சிருக்கேன் அவ்ளோ தான்”.
“அப்படியா நம்பிட்டேன் டா, நம்பிட்டேன்,நம்பிட்டேன்” என்றான் வேலன்.
“டேய் சினிமால ஹீரோ,ஹீரோயின்ஸ் அழகா இருந்தா ரசிக்க மாட்டோமா அந்த மாதிரிதான் இதுவும்..”என்றான் சக்தி.
“அப்ப என் தங்கச்சி ஹீரோயின் மாதிரி இருக்கா..”
சக்தி சிரித்தபடி “இல்ல டா... என் அம்மா மாதிரி இருக்கா..”என்றான்.
“டேய் மச்சான் அங்க பாரு,என் தங்கச்சி வர்றா என்கிட்ட இப்ப சொன்னதை வார்த்தை மாறாம அவட்ட சொல்லு அப்பதான் போன் தருவேன்” என்றான் வேலன்.
சக்தியும்,சுஹானாவை நோக்கி நடந்தான்..அவன் விரல்கள் நடுங்க கையை உடனே கால்சட்டை பாக்கெட்டில் விட்டான்..சுஹானா அருகில் வந்ததும் அவன் நெற்றியில் வியர்வை வடிந்தது.சக்தி மாப்ளை வேலனை திரும்பி பார்த்தான்.
மரியாதையா பேசு,இல்ல போன்ன தர மாட்டேன் என்று கைசைகையில் மிரட்டினான் வேலன்.
சுஹானா தலைகுனிந்தபடி “அண்ணியாரே..லேகா வந்தாளா” என்று கேட்டாள்.
“இல்ல இல்ல மாப்ள” என்று தயக்கமாய் பதில் சொன்னான் சக்தி.
சுஹானா சரி என திரும்பி நடக்க.. “மாப்ள” என்று சக்தி அழைக்க திரும்பினாள்
சக்தி தடுமாறி பேச வந்ததுக்கு பதில் “நாளைக்கு மார்னிங் என்ன டிபன்” என்று கேட்டான்.
“ஹும்.. பொங்கலும், தேங்காய் சட்னியும்” என்று அங்கு வந்து பதில் சொன்னான் வேலன் விஜய்குமார்.
“தங்கச்சிமா எங்க 2 பேருக்கும் டீ வேணும்” என்று சுஹானாவை அனுப்பினான் வேலன்.
“டேய் என்னடா பண்ற” என்று சக்தியை திருப்பினான்..”மச்சான் என்னடா வெட்ட வெளியில் உனக்கு இப்படி வியர்வை வருது..கை ஏன் டா இப்படி நடுங்குது, நீ ஒரு மாவீரன் எத்தன பேரை அடிச்சிருக்க..தங்கச்சிட்ட பேச தைரியமில்லயா டா உனக்கு..”
“டேய் எனக்கு நீ சொல்ற மாதிரி எல்லாம் பேச வராது டா” என்றான் சக்தி.
“டேய் மச்சான் ஏன் டா இப்படி சொல்ற..”
“நான் எந்த பொண்ணுகிட்டேயும் இப்படி எல்லாம் பேசுனதில்ல..அவகிட்ட பேசி,அவ ஏதாச்சும் சொல்லிட்டானா மனசு கஷ்டமாயிரும்டா..” என்றான் சக்தி.
“உனக்கு அடிக்கடி குறும்படம் காட்ட வேண்டியதா இருக்கு” என்றான் வேலன்.
“என்னடா சொல்ற” என்று கேட்டான் சக்தி.
வேலன் அவன் மொபைலில் வீடியோவை ஓபன் செய்தான்.அதில் காலேஜ் அலுமினி மீட்டீங்கில் சுஹானா தனிமையில் அவளை சுற்றி வளைத்தனர் சக்திவேலனோடு படித்த ஆண்களும்,பெண்களும்அவர்கள் தொடர்ச்சியாய் சக்தியை வசைபாடி “படிக்கும் போது உன் புருஷன் 6 தடவை சஸ்பென்சன் வாங்கியிருக்கான் தெரியுமா?எத்தன பொண்ணுங்க அவன் பின்னாடி வந்தாங்கன்னு தெரியுமா?” என்று கேட்டனர்.
சுஹானா சிறிது நேரம் அமைதியாயிருந்து பின்“ஹலோ ப்ரோ என்ன சொன்னீங்க 6 தடவை சஸ்பென்சனா அந்த 6 தடவையும் எவனையாச்சும் அடிச்சிட்டுதான் சஸ்பென்சன் வாங்கியிருப்பான்,ஏன் கோபம் கெட்டவனுக்குதான் வருமா..கரெக்டா இருக்கிறவனுக்கும் வரும்.”
“ஹாம் சிஸ்டர் நீங்க என்ன சொன்னீங்க பொண்ணுங்க அவன் பின்னாடி வந்தாங்கன்னுதான..
என் அத்தைபையன் அழகன் டி அவன் பின்னாடி பொண்ணுங்க வர்லன்னாதான் தப்பு ..வந்தா தப்பே கிடையாது.."என்றுசுஹானா கிளம்ப.. அவளை நிறுத்தினாள் ஒரு பெண் தோழி.
“என்னம்மா உனக்கு என்ன..”என்று கேட்டாள் சுஹானா.
“சக்தி என்ன சபலமே படாத ஆளா..புராணத்துல சொல்லுவாங்களே யாரோ..யாருடி அது” என்று அருகில் இருந்தவர்களிடம் கேட்டு “ஹாம் விஸ்வாமித்ரனா..உன் புருஷன்..இப்படி தூக்கி வச்சு பேசுற” என்று கேட்டாள்.
சுஹானா முறைத்தபடி “ விஸ்வாமித்ரனில்ல ...சக்திவேலன் ஸ்ரீ ராமன்" என்று சொல்லியபடி கடந்து போனாள்.
சற்று தூரம் சென்றபின் திரும்பி அவர்களை
பார்த்து “என்னடா இந்த காலத்துலேயும் சக்தி
ப்ரண்ட்ஸ் இல்லாம இருக்கானேன்னு நினைச்சேன்..ஆனா இப்பதான் தெரியுது உங்க கூட சேர்ந்து தறுதலையாகுறதுக்கு அவ தனியா இருக்கிறதே பெஸ்ட்” என்று சுஹானா சொல்லி போக வீடியோ முடிந்தது.
சக்திக்குள் சொல்ல முடியாத உற்சாகம்,சந்தோசம் ஒருசேர மனதில் வர அந்நேரம் லேகா மற்றும் சுஹானா டீயுடன் மாடிக்கு வந்து..சுஹானா ஒரு கப் டீயை அண்ணன் வேலனிடம் கொடுத்து விட்டு,இன்னொரு கப் டீயை சக்திக்கு கொடுக்காமல் திரும்பி சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து போனாள்.
சக்தி வேகமாய் அவள் பின் சென்று “ஹேய் மாப்ள உன்னதான் டி..ஃ பிராடு,420” என்று சிரித்தபடி திட்ட
அவளும் திரும்பி வேகமாய் அவனிடம் நெருங்கி வந்து “யார் ஃ பிராடு, 420” என்று கோபமாய் கேட்டாள்.
“நீ தான்..சுஹானாவ இருந்துட்டு சஹானாவ வந்த அது ஃபிராடு இல்லையா.... சி.இ.ஓ வா இருந்துட்டு ஹவுஸ் கீப்பீங் கேர்ள் ஆக வந்த அது 420 வேலை இல்லையா” என்று கேட்டான் சக்தி.
“நான் எது செய்ஞ்சாலும் அதுக்கு பின்னால நியாயமான காரணம் இருக்கும்” என்று சொல்லி முகத்தை திருப்பி கொண்டாள் சுஹானா.
சக்திவேலன் தன் கைகளின் ஒரு விரலால் அவள் முகத்தை திருப்பி “என் முறைப்பொண்ணு முறைக்கும் போது தான் அழகு. அழகி டி நீ உன் பின்னாடி 4 பேர் வர்லன்னாதான் தப்பு,வந்தா தப்பே கிடையாது” என்று அவன் சொன்னதும்
அவளுக்கு அலுமினி மீட்டீங்கில் நடந்ததை அவன் தெரிந்து கொண்டதை எண்ணி கோபம் மாறி புன்னகைதான் வந்தது.
அவள் புன்னகையை கண்டதும் சக்திவேலன் “தேங்க்ஸ் டி என்ன நம்புனதுக்கு” என்றான்.
அவளும் சரி என்று தலையசைத்தபடி டீயை அவன் கையில் கொடுத்தாள்.
அதன்பின் புன்னகையோடு அவனை விட்டு கடந்து போனாள்.
வேலன் விஜயகுமார் சக்திவேலனிடம் சென்று
“டேய் மச்சான் இப்படி கூட மனசுல இருக்கிறத
சொல்லலாமா..புதுசா இருக்குடா நீ பண்றது”.
“இது என்ன ஃ பீலிங்ன்னு தெரியலடா..ஆனா ஜாலியா இருக்கு” என்று வேலனை கட்டி கொண்டான் சக்தி.
மறுபுறம் லேகா..சுஹானாவிடம்
“முறைப்பொண்ணே அழகிதான் நீங்க..”என்றாள்.
“ஹேய் கிண்டல் பண்ணாத டி..அவன் நான் அலுமினி மீட்டீங்ல பேசுனன்ல அதனால் பதிலுக்கு பேசுனான் அவ்ளோதான்” என்றாள் சுஹானா.
“அப்படியா அண்ணி உன் கண்ண பார்த்தா லவ் மாதிரி தெரியுதே” என்று கேட்டாள் லேகா.
“இதுக்கு பெயர் லவ்வா...லவ்ன்னா ரேணுகா- வேலன் அண்ட் சித்ரலேகா-வேலன் நாங்க கிடையாது மா” என்றாள் சுஹானா.
“அப்ப உனக்குள்ள தெரியற இந்த மாற்றத்துக்கு என்ன அர்த்தம் அண்ணி” என்று கேட்டாள் லேகா.
“தெரியல டி இந்த ஃ பீலிங் என்னன்னே தெரியல ஆனா ஜாலியா இருக்கு” என்று சொன்னாள் சுஹானா.
சிறிது நேரத்திற்கு பின் அனைவரும் ஹாலில் கூடி இருக்கும் போது தாத்தா வேகமாய் பதட்டமாய் வந்தார்.”சுஹானா நாளைக்கு நீ மெட்ராஸ் ஹை கோர்ட்ல ஆஜர் ஆகணும். நம்ம அட்வகேட் கிட்ட இப்பதான் பேசிட்டு வர்றேன்.”
“ஏன் தாத்தா என்ன ஆச்சு...”
“உன்னோட ஆயில் பேக்டரில கலப்படம் நடக்கறதா கேஸ் பைல் பண்ணியிருகாங்க..நீ இப்ப உடனடியா கிளம்பணும்.அப்பதான் மார்னிங் கோர்ட்ல ஆஜர் ஆக முடியும்” என்றார் தாத்தா.
“மாமா சுஹானா கண்டிப்பா போயே ஆகணுமா”என்று கேட்டான் ரேணுகாவின் கணவன் வேலன்.
“ஆமா மாப்ள சுஹானா ஆஜர் ஆகலைன்னா பிடிவாரண்ட் போட்டுருவாங்க.நான் சீக்கிரம் கேஸ் முடிச்சிட்டு சுஹானாவ கூட்டிட்டு வந்துர்றேன்” என்றார் தாத்தா.
“சரிங்க மாமா ஒரு நிமிசம் சக்திவேலா நீயும் மருமக கூட போயிட்டு வா” என்றார் வேலன்.
“என்னால எல்லாம் போக முடியாது அதுவும் ஸ்ரீ லேகா மேடம் பேலஸ்க்கு,இந்த பிரச்சனைக்கு
காரணமே அவங்களாதான் இருப்பாங்க, செல்பிஃஷ்" என்று பாட்டியை வசை பாட ஆரம்பித்தான் சக்தி.
சுஹானா கோபமாகி சக்திவேலனை பார்த்து “அண்ணியாரே போதும் நிறுத்து” என்று சொல்லி விட்டு மாமா வேலனிடம் “யாரும் என் கூட வர வேண்டாம் நான் போயிட்டு வர்றேன்” என்று சொல்லி கிளம்பினாள்.
சிறிது நேரத்திற்கு பின் ரேணுகா கவலையாயிருந்தாள் அவள் கணவன் வேலன்
அவளிடம் சென்று “ஏன் கவலையா இருக்க” என்று கேட்டான்.
“இல்லங்க சுஹானா போனது எனக்கே கஷ்டமா இருக்கு ஆனா நம்ம மகன் சக்தி எந்த ஃபீலும் இல்லாம ஜாலியா இருக்கானே..”
“விடு ரேணுகா பிரிவுலதான் உண்மையான அன்பை உணர முடியும். .நம்ம மகன் இனிமேதான் உணருவான்” என்று அவளை சமாதானம் செய்தார்.
அப்பொழுது அத்தை சக்தி தூரத்திலிருந்து ரேணுகாவை அண்ணியாரே என்று சத்தமாய் அழைத்ததும் சக்திவேலன் சட்டென சுஹானா என நினைத்து திரும்பி பார்த்து விட்டு ஏமாற்றமாய் அவன் அறைக்கு போனான்.
அங்கு அவனது அறையில் வேலன் விஜயகுமார் சக்தியிடம் “உனக்கு உண்மையாவே கஷ்டமாவே இல்லையா டா” என்று கேட்டான்.
“எதுக்கு கஷ்டப்படனும் இன்னைக்குதான் நான் கையை,கால நீட்டி ஃப்ரியா தூங்குவேன்” என்றான் சக்தி.
“டேய் எனக்கெல்லாம் 2 நாள் லேகாவ பார்க்காம,பேசாம ஊருக்கு போனப்ப வெளிய சொல்ல முடியாம கஷ்டமா இருந்துச்சுடா..”
“ஹேய் மாப்ள உனக்கு என் தங்கச்சி மேல லவ் அதான் ஃ பீல் பண்ண.எனக்கு உன் தங்கச்சி மேல லவ் கிடையாது,அவளுக்கும் என் மேல லவ் கிடையாது,அதான் நாங்க 2 பேரும் ஜாலியா இருக்கோம்”
“என்னமோ போடா..”என்று வெறுப்பாய் சொல்லிவிட்டு வெளியே போனான் வேலன் விஜயகுமார்.
அதன்பின் சக்தியின் அப்பா வேலன் அறைக்குள் வந்தார்.
“சக்தி கோர்ட்-கேஸ்ன்னு மருமக போயிருக்கா எப்ப வருவான்னு உறுதியா சொல்ல முடியாது..உனக்கு மருமகள பார்க்கணும்னா அப்பாவுக்கு வாட்ஸ்அப்ல மெசேஜ் போடு அப்பா உனக்கு ஹெல்ப் பண்றேன்.வீட்லேயும், ஆபிசுலேயும் எல்லாரையும் நான் பார்த்துக்கிறேன்” என்றார் அப்பா வேலன்.
“சரிப்பா..எனக்கு தூக்கம் வருது..இப்போதைக்கு என்ன தூங்க விடுறிங்களா” என்றான் சக்தி.
வேலனும் “சரிப்பா” என்று கூறி அறையை விட்டு வெளியேறினார்.
அதே இரவில் சுஹானா தாத்தாவோடு காரில் பயணிக்க..டீ குடிப்பதற்காய் ரெஸ்டாரண்ட்டில் காரை நிறுத்தினார்கள். சுஹானா சட்டென்று கண் விழிக்க “டேய் மாப்ள வாடா” என்று ரோட்டில் போற யாரோ இரு நண்பர்களும் பேசிக் கொண்டு போக..சுஹானாவுக்கோ சக்திவேலன் அழைப்பது போல் தோன்ற தன்னை மறந்து சிரித்தாள்.
அப்பொழுது தாத்தா,சுஹானா,டிரைவர் டீ அருந்தி முடித்தனர். அப்பொழுது தாத்தா
சுஹானாவிடம் “ஜிபே பண்ண முடியலம்மா உன்கிட்ட சில்லரை இருக்கான்னு பாரு மா” என்றார்.
அவளும் மணி பர்சை திறந்து சில்லரையை தாத்தாவிடம் கொடுத்துவிட்டு..அதிலிருந்த பென்-டிரைவை வெளியே எடுத்தாள்.
இது ‘அனு கொடுத்ததாச்சே’ என்று யோசித்தவள் அருகிலிருந்த அவள் மடிகணினியை எடுத்து ஆன் செய்து பென் டிரைவை சொருகினாள்.அவள் காதுகளில் ஹெட் போனை மாட்டினாள். தாத்தாவும் காரில் ஏறினார் டிரைவர் காரை இயக்கினார்.