வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ரேணுகா 💝வேலன் (அத்தியாயம்-21)

GG writers

Moderator
ரேணுகா 💝வேலன் (அத்தியாயம் -21)

பென்-டிரைவ் போல்டரை ஓபன் செய்தாள் சுஹானா .

அதில் சக்திவேலனின் மீசை அரும்பிய கல்லூரி நாட்களின் போட்டோக்கள் வரிசையாய் வந்தது. அதை புன்னகையோடு பார்த்து கொண்டிருந்தாள் சுஹானா.

அடுத்த போல்டரில் பொங்கல் செலிப்ரேசன் சக்தி வேட்டி, சட்டையில் சிலம்பாட்டம் வீர விளையாட்டுகளில் அவன் வெற்றி பெற்ற வீடியோ வர.. சுஹானாவோ “பெரிய வீரன் தான்” என்று சொல்லியபடியே அடுத்த போல்டரில் வீடியோ ஓபன் செய்தாள்.

அதில் சக்திவேலன் நெற்றியில் வியர்வை வடிய கைகள் நடுங்க பதட்டமாய் போன் எடுத்து டயல் செய்து கையில் பிடிக்க முடியாமல் ஸ்பீக்கரை ஆன் செய்து தன் அம்மாவிடம்..
“அம்மா நான் ஸ்பீச்சுல கலந்துக்கல..”

“ஏன் டா..அதான் பிரிப்பேர் பண்ணி சொல்லி காண்பிச்சல்ல..”

“இல்லம்மா என்னோட பாயிண்ட் எல்லாமே ராகேஷ் பேசிட்டான் நான் இப்ப என்ன பண்றது.. நான் போலம்மா..”

“சக்தி உன்னால முடியும்..நீ மேடைக்கு போய் உன் மனசுல இருந்து பேசு..ப்ரைஸ் கிடைக்கலன்னாலும் பரவாயில்ல.”

“அம்மா பயமா இருக்கு உமென்ஸ் டே ஸ்பெஷல்னால கான்பிரன்ஸ் ஹால் முழுக்க பொண்ணுங்கதான் அதிகம்..பேச முடியாம போயிட்டா ..என்ன ஓட்டுவாங்க அம்மா.”

“சக்தி உன்னால முடியும், நீ மத்தவங்கள நினைக்காத அம்மாவ நினைச்சுக்கோ..அம்மாவுக்காக மேடை ஏறி பேசு..” என்றாள் ரேணுகா.


“சரி மா” என்று போனை கட் செய்து மேடை பக்கம்
நடந்து படிகள் ஏறினான். மேடை ஏறி மைக் முன் நின்றதும் அவன் எதிரே அம்மா ரேணுகா சிறப்பு விருந்தினர் நாற்காலியில் அமர்ந்திருப்பதை பார்த்ததும் தன்னை அறியா சந்தோசமும் தைரியமும் அவனுக்குள் வந்தது பேச்சை துவக்கினான்.


“பெண் சாதனையாளர்கள் பத்தி பேசணும்னு சொன்னாங்க,பெண்ணுனாலே சாதனையாளர் தானே தனியா ஏன் யாரையும் குறிப்பிட்டு சொல்லணும். ஒரு வீட்ல ஒரு ஆண் குழந்தை பிறந்தா என் வம்சத்து பெயர் சொல்ல ஒருத்தன் பிறந்துட்டான்னு சொல்வாங்க. ஆனா ஒரு பெண் குழந்தை பிறந்தா வம்சத்தை தழைக்க வைக்கிற குலம் காக்கிற சாமி பிறந்துருக்கான்னு சொல்வாங்க..வெறும் பெயர் சொல்ல பிறந்த நாங்க பெரிசா? இல்ல குலம் காக்கிற சாமி நீங்க பெரிசா? என்று அவன் சொன்னதும் அரங்கமே நிறைந்தது கைத்தட்டல்களால்,

“ஆணா பிறந்த நாங்க வெற்றியை தேடி வாழ்க்கை முழுக்க ஓடணும்..ஆனா நீங்க பிறக்கும் போதே வெற்றியாளரதான் பிறக்குறீங்க.அதனால தான் ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பொண்ண இறைவன் துணையா கொடுத்தார்,என் அப்பா வாழ்க்கைல என் அம்மா மாதிரி,

ஒவ்வொரு பொண்ணும் ஒவ்வொரு தீக்குச்சியிலிருந்து வர ஒளி ஒவ்வொரு ஆணுக்கும்,வீட்டுக்கும்...அப்படியிருக்கிற உங்கள்ல ஒரு சிலரை மட்டும் சாதனையாளர்ன்னு எப்படி சொல்ல முடியும்..பெண்ணா பிறந்த நீங்க ஒவ்வொருவரும் சாதனையாளர்தான் .நன்றி” என்று மேடையை விட்டு கீழ் இறங்கினான்.

சக்திக்கு முதல் பரிசு கிடைத்து அதை சிறப்பு விருந்தினராய் வந்த ரேணுகா கையினால் மேடையில் வாங்கினான்.


அப்பொழுது கீழ் இருந்த கல்லூரி
பணியாளர் ஒருவர் மைக்கில் “ரேணுகா மேடம் உங்க வருங்கால மருமக எப்படி இருக்கணும்” என்று கேட்டாள்.

ரேணுகா மைக்கில் “அதை நான் எப்படி சொல்ல முடியும் சக்தி தான் சொல்லணும்” என்றாள்.

“ஏன் மா என்ன மாட்டி விடற” என்றான் சக்தி.

“சும்மா சொல்லுடா” என்று மைக்கை கொடுத்தாள் ரேணுகா.


சக்தி மைக்கை வாங்கி “என் மனைவி என் அம்மா மாதிரி கோபப்படுறவளா,என் தங்கச்சி மாதிரி தைரியமானவளா இருக்கணும்” என்றான்.


கல்லூரி பணியாளர் “எல்லாரும் அம்மா மாதிரி அன்பான மனைவியதான கேட்பாங்க, நீங்க இப்படி சொல்றீங்க” என்று கேட்டாள்.


“ஆமா நான் கோபக்காரன், சண்டக்காரன் அப்ப என் மனைவி மட்டும் அன்பா இருக்கணும்னு எதிர்பார்க்கிறது தப்புதான” என்றான் சக்தி.


ரேணுகா மைக்கை வாங்கி.. “அது அப்படி இல்ல என்னால என் மகன்கிட்ட ரொம்ப நேரம் கோபமா இருக்க முடியாது,அவன் சாரி சொன்னா நான் எல்லாத்தையும் மறந்துருவேன் அதான் அவ மனைவியும் அதே மாதிரி வரணும்னு நினைக்கிறான்.”

இந்த வீடியோ முடியவும் சுஹானா தன் தாலியை தூக்கி பார்த்து வெட்கத்தோடே புன்னகை செய்தாள்.

கடைசியாக உள்ள போல்டரை ஓபன் செய்தாள். அதில் சக்தி கல்லூரியின் கடைசி நாள் வீடியோ ஓபன் ஆனது.

அதில் அவன் கிளாஸ்-மேட்ஸ் அவனிடம் “டேய் இன்னைக்கு லாஸ்ட் டே இப்பவாச்சும் உண்மையை சொல்லு.. உனக்கு எந்த பொண்ணு மேலேயும் லவ் வர்லையாடா?” என்று கேட்டனர்.

சக்தி சிரித்தபடி.. “நான் என் அப்பா மாதிரி இருக்க ஆசப்படுறேன் டா சுத்தமானவனா..”என்றான்.

“ரொம்ப சுத்தமானவனா இருக்காத பொண்ணுங்களுக்கு பிடிக்காது”


“டேய் என் ஃ வொயிப்-க்கு கல்யாண கிப்ட் ஆக என்னையே கொடுக்கணும்னு நினைக்கிறேன் என் அப்பா என் அம்மாவுக்கு கொடுத்த மாதிரி”

“டேய் உங்கப்பா காலம் வேற..இப்ப இருக்கிற கேர்ள்ஸ் வேற ..கேர்ள்ஸ்க்கு ப்ரண்ட்ஷிப்,சைட்,லவ்,ஹக்,சண்ட..இதெல்லாம்
தான் பிடிக்கும், உன்ன மொக்கையாக்கி உட்கார வச்சிருவாங்க” என்றார்கள் கிளாஸ்-மேட்ஸ்.

“நீ சொன்ன ப்ரண்ட்ஷிப்,சைட்,லவ்,ஹக்,சண்ட..எல்லாத்தையும் நான் இல்ல என் ஃவொயிப்ப பண்ண வைப்பேன்..அதுக்கப்புறம் நீங்க லவ்ன்ற பேர்ல 4 பொண்ணுங்க கூட என்ன எல்லாம் பண்ணீங்களோ அத எல்லாம் அவ ஒருத்தி கூட மட்டும் பண்ணுவேன் உரிமையோட கல்யாணம் பண்ணிக்கிட்டு..” என்றான் சக்தி.

“ஆல் தி பெஸ்ட் டா” என்றனர் கிளாஸ்மேட்ஸ் அத்தோடு வீடியோ முடிந்தது.

சுஹானா மனதிற்குள் ‘என்னதான் எல்லாம் பண்ண வைப்பியா அதையும்தான் பார்ப்போம்’ என்று மடிகணினியை மூடினாள்.

அடுத்த நாள் காலையில் சுஹானா மெட்ராஸ் ஹை கோர்ட்டில் கேஸை முடித்து விட்டு வக்கீலை பார்க்க ஹைகோர்ட்டுக்கு உள்ளே காத்திருந்தாள்.

அப்போது தாத்தா அலைபேசி ஒலிக்க தனியாக பேச போனார்.

சுஹானா தனித்து நின்றிருந்த நேரத்தில் கோர்ட் வாசலினுள் ஒருவன் ஓட இன்னொருவன் வெட்ட அரிவாளுடன் துரத்தி வந்தான் அப்போது ஓடி வந்தவன் சுஹானா முன் நிற்க அரிவாளுடன் துரத்தியவன் ஓங்கி வெட்ட முயற்சிக்கும் போது ஓடி வந்தவன் கீழே குனிந்து தப்ப அரிவாள் வெட்டு சுஹானா மேல் விழு முன் அங்கு வந்து இமைப்பொழுதில் சுஹானாவை இறுகப் பற்றி அரிவாள் வெட்டை முதுகில் வாங்கினான் சக்திவேலன்.


மீண்டும் வெறியுடன் அரிவாளோடு துரத்தினான் அவன் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்ய..சுஹானாவின் பாடி-காட்ஸ் சக்திவேலனை பிடித்து இழுத்து சுஹானா பேசும் முன் அவன் தலையில் அடிக்க..தாத்தா பதட்டமாய் வரும்போது சக்திவேலன் மயங்கினான்.


“பேரா..”என்று சக்தியை பிடித்து எழுப்பினான். அத்தோடு “அறிவில்லையா டா உங்களுக்கு இவன் சுஹானாவோட புருஷன் டா” என்று பாடி-காட்ஸை திட்டினார் தாத்தா.


அதன்பின் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து கண் விழித்தான் சக்திவேலன்.அப்போது சுஹானா கோபமாய்...


“பெரிய ஹீரோ இவர்,குறுக்க வந்து காப்பாத்துறார்,உன்ன யார்றா வர சொன்னது..” என்று அவள் திட்ட தாத்தா சுஹானாவை வெளியே இழுத்து சென்று கோபமாய் “என்ன பேசுறமா நீ அவன”என்றார்.


“பின்ன ஹீரோயிசம் பண்ணுவான் பார்த்திட்டு இருக்கணுமா தாத்தா” என்றாள்.


“ஆமாம்மா ஹீரோயிசம் பண்றவன் நேத்து ராத்திரி போட்ட நைட்-டிரஸ்ஸ கூட மாத்தாம தான் வந்து ஹீரோயிசம் பண்ணுவானா” என்று கேட்டார் தாத்தா.

அமைதியானாள் சுஹானா


“ஹே ஹே...அந்த சண்டக்காரனுக்கேத்த சண்டக்காரிதான் நீயும்” என்றார் தாத்தா.


“தாத்தா என்ன சொல்றீங்க நீங்க” என்று கோபமாய் கேட்டாள்.


“நீ வாட்ஸ்அப் ஓபன் பண்ணி உன் மாமா வேலன் அனுப்புன ஆடியோவ கேளு.அப்புறம் என்கிட்ட பேசு” என்றார் தாத்தா.

சுஹானா வேகமாய் ஆடியோவை ஆன் செய்தாள் அதில் சக்திவேலனின் குரல் கண்ணீரும்,பயமுமாய்.. “அப்பா சுஹானாவ யாரோ வெட்டுற மாதிரி கனவு வந்துச்சுப்பா,பயமா இருக்குப்பா,அவளுக்கும்,தாத்தாவுக்கும் கால் பண்ணேன் ஆனா ரீச் ஆகல.அப்பா நான் அவள பார்க்கணும் நைட் 2.30 மணி ப்ளைட்ட பிடிச்சு போரேன்.எனக்கு அவள உடனே பார்க்கணும். எனக்கு பாட்டியோட பேலஸ் அட்ரஸ் அனுப்பு பா...நான் அவளுக்கே தெரியாம அவள பார்த்திட்டு வந்துர்றேன். அப்பா அவளுக்கு எதுவும் தப்பா நடந்திட கூடாது, அவளுக்காக வேண்டிக்கப்பா அவள பார்த்தாதான் நிம்மதிப்பா வர்றேன்” என்று முடிந்தது.

சுஹானா கண் கலங்க தாத்தாவை பார்த்தாள்.

“என்ன பார்க்கிற காலையிலேயே நம்ம பின்னாடி சக்தியும் வந்துட்டான்.நம்ம பேலஸ்க்குள்ளேயும் வந்தான்..உன் சுதர்சன் மாமாவும், அவன் 2 பசங்களும் சக்தியை அவமானமா பேசுனாங்க,ஆனா சக்தி கோபப்படல.. “தாத்தா பயத்துலதான் வந்தேன், ஆனா இங்க பாடி-காட்ஸ், பிளாக்-கேட்ஸ்ன்னு செக்யூரிட்டி
இருக்குல.அவள பத்திரமா பார்த்துக்கோங்கன்னு சொல்லிட்டு போனான்.அவன் வந்ததை உன்கிட்ட சொல்ல வேணான்னு சொன்னான்.மனசு கேட்காம உன்ன பார்க்க கோர்ட்டுக்கு வந்திருக்கான்.,கடைசில அவன் பயந்த மாதிரியே உனக்கு நடந்துருச்சுல..அவன் வரலன்னா அரிவாள் வெட்டு உன் கழுத்துல விழுந்திருக்கும்.”

“தாத்தா... நான்...சாரி..”என்றாள் கண்ணீரோடு

“சக்தியை கம்பீரமானவனாதான் பார்த்து இருக்கேன், இன்னைக்குதான் அவன் கலங்கி நிற்கிறத பார்த்தேன்”

சுஹானா கலக்கதோடு நிற்க


“சக்தி ஹீரோயிசம் காட்டணும்னு அவசியமில்ல சுஹானா, உன்ன கேட்காமலே தாலி கட்டுனவன் உன்ன கேட்காமலே உன்ன அம்மாவாக்க அவனால முடியாதா...”


அதிர்ச்சியாய் பார்த்தாள் சுஹானா.


“ஆனா அவன் அப்படி பண்ண மாட்டான் என் பேரன் சக்தி தங்கம் என் ரேணுகா வேலன் வாரிசு அவன், பொண்ண மதிக்கிறவன் நீ அவனோட மனைவிங்கறத மறந்துராத..”என்றார் கோபமாய் தாத்தா.


சுஹானாவோ சக்தியை தேடி அறைக்கு போக அவனோ தடுமாறி எழுந்து நின்று தன் பேக்கை தோளில் போட்டபடி மெல்ல நடந்து போனான்.

சுஹானா சக்தியை பிடித்து நிறுத்தி அவன் எதிரே நின்றாள். அப்பொழுது சக்தி அவள் முகம் பார்க்காமல் தலையை ஒரு பக்கமாக திருப்பி.. “மாப்ள உன்ன அடையனும்னு நினைச்சு வர்ல டி..உனக்கு ஆபத்துன்னு நினைச்சுதான் உன்ன தேடி வந்தேன்”
என்றதும் அவனை கண்ணீரோடு இறுக பற்றினாள் “என் அத்தைபையன் அகர்சன் மாதிரி ஆள் இல்ல எனக்கு தெரியும்..உனக்கு ஏதாவது ஆனா நான் அத்தை,மாமாவுக்கு என்ன சொல்லுவேன்..எனக்காக ஏன் நீ வெட்டு வாங்கணும்” என்று விலகி நின்றாள்.

“தெரியல டி ..அந்த நிமிசம் உன்ன காப்பத்தணும்னு தோணுச்சே தவிர வேற ஒன்னும் தோணல..”

அவள் கண்களில் கண்ணீர் வந்தது.

“ஏய் ஏன் டி? அழாத டி” என்று கண்ணீரை துடைத்தான்.


“தெரியல டா.. இது என்ன ஃ பீலிங்ன்னே புரியல” என்றாள் சுஹானா.


சக்தியின் அலைபேசி ரிங் ஆக அவன் எடுத்து பேசிவிட்டு சுஹானாவிடம்.. “நாளைக்கு மீட்டீங் இருக்கு மாப்ளை நான் ஊருக்கு போகணும் நீ உன் வேலை முடிச்சிட்டு வா” என்றான்.


“நானும் உன் கூட வர்றேன்..என் வேலை முடிஞ்சுது” என்றாள் சுஹானா.


அப்பொழுது தாத்தா “ப்ளைட் ஈவினிங்தான் மா நம்ம வீட்டுக்கு போயிட்டு கிளம்புவோம்.டாக்டரை பார்த்தேன் சக்திக்கு ஒரி பண்ற மாதிரி ப்ராப்ளம் எதுவுமில்லன்னு சொன்னார் 2 நாளைக்கு ஒரு தடவை ட்ரெஸ்ஸிங் மட்டும் பண்ணனும் 1 வீக் வரையும் நம்ம ஊருல போய் கூட பண்ணிக்கலாம் ” என்று ரிப்போர்ட்ஸை சுஹானாவிடம் கொடுத்தார் தாத்தா.

“நான் வர்ல மாப்ள உங்க பேலஸ்க்கு” என்றான் சக்தி.

“அண்ணியாரே நான் இருக்கேன்ல வா..”என்று அவனை இழுத்து போய் காரில் அமர வைத்தாள்.”தாத்தா உங்க பழைய வீட்டுக்கு போங்க” என்று சொல்லி சுஹானாவும் அவனோடு அமர்ந்தாள்.

காரை தாத்தா இயக்கி ரேணுகா-வேலன் திருமணமாகி இருந்த பழைய வீட்டிற்கு சக்தி- சுஹானாவை அழைத்து சென்றார்.ரேணுகா அறைக்கு சக்தியை அழைத்து சென்று ரேணுகாவின் டைரி பற்றிய கதையை சொன்னாள் சுஹானா.

அத்தோடு “அண்ணியாரே எனக்கு ஒரு போன்,மெசேஜ் கூட பண்லியே” என்று கேட்டாள்.


“நான் பண்ணலயா” என்று தன் போனை எடுத்து பார்த்து “ஏன் மாப்ள நீ கூடதான் ஒரு போன்,மெசேஜ் கூட பண்ல” என்றான்.


சுஹானாவும் தன் போனை எடுத்து பார்த்து..இருவரும் ஒரு சேர மொபைல் கால் லிஸ்ட் மற்றும் வாட்ஸ் அப் மெசேஜ்களை மாறி மாறி காண்பித்து கொண்டனர்.


“ஏதோ மொபைல் ப்ராப்ளம்ன்னு நினைக்கிறேன் அதான் எதுவுமே ரீசிவ் ஆகல” என்று சொன்னான் சக்திவேலன்.


ஸ்ரீ லேகா ஆக்ரோஷமான கோபமாய் வீட்டின் உள் வந்து சத்தம் போட தாத்தா பாட்டியை அமைதிப்படுத்த முயற்சி செய்ய..

அப்பொழுது சுஹானா மற்றும் சக்திவேலன் கைகோர்த்தபடி மாடிப்படிகளில் இறங்க.. ‘ஒரு நிமிடம் ஸ்ரீ லேகாவிற்கு ரேணுகா-வேலன் திருமணமான புதிதில் இருந்தது போல் சுஹானா மற்றும் சக்திவேலன் ஜோடி தெரிய’ கோபம் மாறி அமைதியாய் வீட்டை விட்டு வெளியேறினாள்.


சிறிது நேரத்திற்கு பின் ப்ளைட்டில் முதுகு வலியால் சக்தி ஜன்னலை விட்டு சுஹானா பக்கமாய் திரும்பினான்,மீண்டும் அவன் நெற்றியில் வியர்வை வர..சுஹானா வேகமாய் தன் புடவை முந்தானையால் அவன் வியர்வையை துடைத்து விட்டாள்.

“பயமா இருக்கா” என்று கேட்டாள் சக்தியிடம்,

“இல்ல உன்க்கிட்ட ஒன்னு கேட்கணும் மாப்ள”

“கேளு..”என்றாள் சுஹானா.

“இல்ல உனக்கு முன்னாடி 10 காரு பின்னாடி 10 காரு,பாடிகார்ட்ஸ்,பிளாக்கேட்ஸ்,உனக்கு மட்டும் வேலை செய்ய 50 பேர்,நினைச்சது எல்லாம் நடக்கும்,கேட்டதெல்லாம் கிடைக்கும் ஸ்ரீ லேகா மேடம் பேலஸ் ஓட குயின் நீ..அதெல்லாம் விட்டுட்டு ஏன் டி எங்க வீட்டுக்கு வந்த..?”

“அப்படியில்ல அண்ணியாரே பாட்டி எல்லாமே கேட்டதை விட அதிகமாதான் செய்வாங்க.. ஆனா நான் கேட்டது அவங்களுக்கு புரியாது..”

“மாப்ள நீ சொல்றது எனக்கே புரியல..”

“பேலஸ்ல நான் சாப்பாடு கேட்டா எல்லா வகையான சாப்பாடும் கிடைக்கும் எனக்காக..ஆனா எனக்கு அதை எடுத்து ஊட்டி விட மாமா மாதிரி யாருக்கும் அன்பில்ல ..மாமா ஊட்டி விடும் போதெல்லாம் எனக்கு என் அப்பா ஊட்டி விடற மாதிரி அவ்ளோ சந்தோசமா இருக்கும், பேலஸ்ல ஏ.சி.ரூம்ல லோன்லியா எத்தன நாள் தூக்கமில்லாம இருந்திருக்கேன் தெரியுமா ..? ஆனா நம்ம வீட்ல
மாடியில அத்தை மடியில தூங்குற சுகம் இருக்கே சொர்க்கம்,சொன்னா புரியாது,அத்தை மடி என் அம்மா மடி மாதிரி..நம்ம வீட்ல உறவுகள் எல்லாமே அழகு..என்னையே நான் எவ்வளவு புதுசா பார்க்கிறேன் தெரியுமா...இந்த சந்தோசம் எல்லாம் பேலஸ்ல கிடைக்காது எனக்கு நம்ம வீடுதான்
பிடிக்கும்” என்றாள் சுஹானா.

சக்தி மனதிற்குள் ‘என்ன பொண்ணு டி நீ..உன் முகத்தை விட உன் மனசு ரொம்ப அழகு டி..உன்ன மாதிரி ஒரு குயின் ஹவுஸ்கீப்பீங்-கேர்ள் ஆக வர்றது எல்லாம் நினைச்சு கூட பார்க்க முடியாத ஒரு விஷயம்.. முன்ன விட இப்பதான் உன்ன எனக்கு ரொம்ப பிடிக்குது டி” என்று நினைத்தான்.

அந்நேரம் ப்ளைட் ஆடி ஆடி குலுங்கவே சுஹானாவின் தோள்களில் அம்மா மீது சாயும் குழந்தையை போல சாய்ந்தான் சக்தி பயத்தோடு அவள் கைகளை பிடித்து கொண்டான்.

சுஹானா சிரித்தபடி மனதினுள் ‘என்னடா நடக்குது நீ என் கூட இருக்கும் போது ஏன் எனக்கு இவ்ளோ சந்தோசமா இருக்கு, சக்தி உன் கோபத்தை கூட தாங்கிக்கலாம், ஆனா உன் பாசத்தை தாங்கவே முடியலடா..என்ன மனுசன் டா நீ..”என்று நினைத்தாள்.

சிறிது நேரத்திற்கு பின் சுஹானா,தாத்தா,சக்தி மூவரும் வீடு போய் சேர்ந்தனர்.
 
ரெண்டு பேரும் மனசுக்குள்ள இவ்வளவு காதல வெச்சிகிட்டு வெளியில வீம்பா சுத்திட்டு இருக்காங்க எப்ப இவங்களோட காதல வெளிய சொல்ல போறாங்க
 
ரெண்டு பேரும் மனசுக்குள்ள இவ்வளவு காதல வெச்சிகிட்டு வெளியில வீம்பா சுத்திட்டு இருக்காங்க எப்ப இவங்களோட காதல வெளிய சொல்ல போறாங்க
அதுவும் தெரியலையே
 
Top