வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ரேணுகா 💝வேலன்(அத்தியாயம்-22)

GG writers

Moderator
ரேணுகா 💝வேலன்
(அத்தியாயம்-22)

அடுத்த நாள் காலையில் சக்திவேலன் அறையில்
சுஹானா சக்தியிடம் “முதுகு வலி
குறைஞ்சிருக்கா..? இன்னைக்கு கண்டிப்பா ஆபிஸ் போகணுமா?ரெஸ்ட் எடுக்கலாம்ல” என்று கேட்டாள்.

“பெயின் பரவயில்ல..இன்னும் 2,3 நாள்ல நல்லா வலி விட்டு நல்லா ஆயிடும்..இன்னைக்கு என்.ஆர்.ஐ மீட்டீங் கண்டிப்பா போணும்” என்றான் சக்தி.

“ஒரு நிமிஷம் நில்லு அண்ணியாரே..”என்றாள்
சுஹானா.

“என்ன மாப்ள..”

சுஹானா டை எடுத்து கொண்டு அவனருகில் சென்றாள்.

“டைம் ஆச்சு மாப்ள டை கட்ட வேண்டாம்”என்றான் சிரித்தபடி சக்தி.

“அப்படி எல்லாம் விட முடியாது..”என்று
சிரித்தவாறு அருகில் சென்று டை கட்ட ஆரம்பித்தாள் சுஹானா.

சக்தி கண்களால் ‘என் அம்மா, அப்பாவுக்காக
வந்த மாதிரி நீ எனக்காக வருவியா ஸ்ரீ லேகா மேடம்ம விட்டு..’என்று கேட்டான்.

சுஹானாவும் கண்களால் ‘நான் வந்தா ..மாமா
அத்தையை பார்த்துக்கிற மாதிரி நீ என்ன பார்த்துக்குவியா..?’ என்று கேட்டாள்.

‘நீ சொல்லு, நான் சொல்றேன்’ என்றான் கண்களால் சக்தி.

‘இல்ல நீ தான் முதல்ல சொல்லனும்’ என்றாள் கண்களால் சுஹானா.

இவர்கள் இப்படி பேசி கொண்டிருக்கையில்
வேலன்விஜயகுமாரும்,சித்ரலேகாவும் அறையினுள் வந்து இருவரின் தலைகள் முட்டும்படி செய்தனர்.

“ஹேய் அண்ணி என்னடி பண்ற இங்க?” என்று
கேட்டாள் லேகா .

“அது..அது ஒன்னுமில்ல டி மீட்டீங் அதான் டை
கட்டலான்னு வந்தேன்” என்று தயக்கமாய் சொன்னாள் சுஹானா.

அதே நேரம் சக்தியிடம் வேலன் “டேய் மச்சான் நீ பேசுன பேச்சுக்கு 2 நாளாச்சும் அவள பார்க்காம
இருப்பேன்னு நினைச்சேன் நைட்டோடு நைட்டா
ஓடிட்ட” என்று கேட்டான்.

“ஹேய் இல்லடா ஒரு ஹெல்ப்புக்காக தான்
போனேன்” என்று தயக்கமாய் பதில் சொன்னான் சக்திவேலன்.

லேகாவும்,வேலனும் ஒருசேர சுஹானா-சக்தியை
பார்த்து “உருட்டுங்க..உருட்டுங்க நல்லா உருட்டுங்க” என்றனர்.

“ஏய் இல்ல..”என்று சுஹானாவும்-சக்தியும் சேர்ந்தது போல் சொல்ல..

லேகாவும்,வேலனும் மீண்டும் ஒரு சேர
“நம்பிட்டோம்,நம்பிட்டோம் நாங்க உங்கள
நம்பிட்டோம்” என்று நக்கலாய் பதில் சொன்னார்கள்.

அந்நேரம் கீழே ஹாலில் இருந்து அவசரமாய்
சுஹானாவை அழைக்க..அவளும் பதட்டமாய் கீழ்
இறங்கி வந்த போது போலீஸ் சுஹானாவிடம் விசாரணை செய்ய அழைத்தனர்.

அதை பார்த்த சக்திவேலன் கீழ் இறங்க நினைத்த போது ஒருவன் அட்வகேட்டோடு வீட்டினுள் வந்தான் அவன் போலீசிடம் “நான் அவளோட பார்ட்னர்”என்றான் .

உடனே சுஹானா “ஹேய் சுதீப் நீ எப்ப அப்ராடுல இருந்து வந்த..”என்று கேட்டு விட்டு
போலிஸ் பக்கம் திரும்பி “இவர் சுதீப் என்னோட பிசினஸ் பார்ட்னர்” என்று அறிமுகம் செய்தாள்.

அவனும் அட்வகேட்டை வைத்து
போலிஸிடம் பேசி..”சார் உங்களுக்கு எதுன்னாலும்
என்ன கேளுங்க சுஹானாவ டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்றான்.

“சார் இது எங்க டியூட்டி” என்றார் போலீஸ்

“ஓகே சார் அவள நீங்க அக்யூஸ்ட்,கிரிமினல்
மாதிரி கேள்வி கேட்கிறது எனக்கு சுத்தமா பிடிக்கல” என்றான் சுதீப்.

“சார் எங்களுக்கு எல்லாரும் ஒன்னுதான் விசாரணைக்கு பிறகுதான் யார் நிரபராதின்னு
தெரியும்” என்றார் போலீஸ்.

“உங்க ஐ.ஜிகிட்ட பேசறீங்களா..?போன் போடவா”
என்று மிரட்டினான் சுதீப்.

“மேடம் என்ன மேடம் இது சார் ஏன் இப்படி பண்றார்” என்றார் போலீஸ்.

“சுதீப் சும்மாயிரு அவர் டியூட்டியதான செய்யறாரு”

“முடியாது சுஹானா..”

“டேய் அமைதியாயிரு இல்ல அடி வாங்கிருவ” என்று சுஹானா மிரட்டவே அமைதியானான் சுதீப்.

“சார் உங்க டியூட்டி நீங்க செய்யுங்க” என்று எல்லா
விவரங்களையும் போலீஸிடம் சொன்னாள்...

“தேங்கஸ் மேடம் இத நான் கோர்ட்ல சப்மிட் பண்ணனும்” என்று கிளம்பினார் போலீஸ்.

“போ,போ..உன்ன அனுப்புனவங்ககிட்ட போய் சொல்லு சுஹானாவுக்கு துணையா சுதீப் இருக்கான்னு” என்று கத்தினான் சுதீப்.

“ஏய் அமைதியா பேசு” என்றாள் சுஹானா.

“நீ பேசாத டி” என்று கோபமாய் திரும்பினான் சுதீப்.

“ஏன் டா ..கோபப்படுற..”

“உன் மேரேஜ்க்கு உன் பெஸ்ட்டி என்ன கூப்பிடணும்னு உனக்கு தோணல ல..” என்றான் சுதீப்.

அப்பொழுது தாத்தா சுதீப்பிடம் சிரித்தபடி “அட என்னப்பா சுஹானாவோடது லவ்-மேரேஜ்
உண்மையை சொன்னா ஸ்ரீ லேகா
ஒத்துக்கமாட்டா..அதான் யாரையும் கூப்பிட முடியல” என்றார்.

“நம்ம சுஹானாவா” என்று ஆச்சர்யமாய் கேட்டான் சுதீப்.

சுஹானா சிரித்தபடி...“தாத்தா நீங்க இருக்கீங்களே” என்றாள்.

“ஹேய் சொல்லு டி சுஹானா யார் உன் அவர்”
என்று கேட்டான் சுதீப்.

அப்பொழுது ரேணுகாவும், வேலனும் அங்கு வர சுதீப் அவர்களை பார்த்து “ரேணுகா ஆன்ட்டி வேலன் அங்கிள் சரியா..உங்கள பார்க்க வர்றேன்னு சொன்னவ அதுக்கப்புறம் என்கிட்ட பேசவே இல்ல..”

ரேணுகா மற்றும் வேலன் யோசனையாய்
பார்க்க..தாத்தா அவர்களிடம் “இவன் சுதீப்
சுஹானாவோட காலேஜ்மேட்,சுஹானாவோட பிசினஸ் பார்ட்னர் நல்ல பையன் மா” என்று அறிமுகம் செய்தார்.

“இல்லப்பா என்ன பிரச்சனை போலீஸ் வந்தாங்க”
என்று கேட்டாள் ரேணுகா.

“ஆன்ட்டி யூ டோன்ட் ஒரி,சுஹானா இல்லாததால
கம்பெனில ப்ராப்ளம் கிரியேட் பண்றாங்க சம்-பிசினஸ் எனிமிஸ் இப்ப நான் வந்துட்டேன்ல நான்
பார்த்துக்கிறேன் நீங்க சுஹானாவ பார்த்துக்கோங்க.”

“தேங்க் யூ சுதீப்” என்றனர் ரேணுகா மற்றும் வேலன்.

சுதீப் சுஹானாவிடம் “ஏய் எங்க உன் ஹஃப்பி” என்று கேட்டான்.

அப்பொழுது சக்தி மற்றும் வேலன் விஜயகுமார் மாடியிலிருந்து கீழே இறங்கினர்.

சுஹானா “அதோ அவரே வராரு” என்று மாடிப்படியை பார்த்து தலைகுனிந்தவாறு சொன்னாள்.

“ஏய் 2 பேர் வர்றாங்க யாரு டி” என்று கேட்டான் சுதீப்.

சுஹானா வெட்கம் நிறைந்த புன்னகையாய்
சக்திக்கு நேராக கைவிரலை நீட்டி காண்பித்தாள்.

சுதீப் சக்திக்கு கை கொடுத்து “சூப்பர் ப்ரோ” என்றான்.

அந்நேரம் வேலன் விஜயகுமார் சுஹானாவிடம் “இது யாரு மா உன் சித்தப்பா பையனா..?”என்று கேட்டான்.

“ஹேய் யூ நான் அவளோட பெஸ்ட்டி” என்றான்.

“பார்க்க பால் கொழுக்கட்டை மாதிரி இருக்கீங்களா ப்ரோ அதான் அவ அண்ணனா இருப்பீங்கன்னு
நினைச்சு கேட்டேன்” என்றான் வேலன் விஜயகுமார்.

“ஏய் சுஹானா யாரு இவன்..?”

“சுதீப் இவர் என் அண்ணன்..”

“அண்ணனா..?”என்று அதிர்ச்சியாய் கேட்டான்

“ஏய் என் நாத்தனார கல்யாணம் பண்ணிக்க போறவர்.”

“நாத்தனாரா..?” என்று மீண்டும் அதிர்ச்சியாய் கேட்டான்.

“யோவ் பால் கொழுக்கட்டை எல்லாத்துக்கும் ஷாக்
ஆகாத யா..வா..அது பெரிய ஸ்டோரி உனக்கு சொல்றேன்” என்றான்.

அந்நேரம் அத்தை சக்தி அங்கு வந்தாள்.

“சுஹானா நீ சொல்லாத மா மாமியாரான்னு
அதுக்கும் ஷாக் ஆவான்” என்று சொல்லி வேலன்
விஜயகுமார் அத்தை சக்தியை “இவங்க என்
அம்மா..”சுதீப்பை அருகில் அழைத்து அவன்
காதுகளில் மெல்ல லேகாவை கை காண்பித்து “அது என் பொண்டாட்டி” என்று அறிமுகம் செய்தான்.

“டேய் சுதீப்பை விடு.. நீங்க எத்தன நாள்
இங்க இருப்பீங்க” என்று கேட்டாள் அத்தை சக்தி.

“3 மாசம் ஆன்ட்டி” என்றான்.

“அப்ப எங்க கூட எங்க வீட்லேயே தங்குங்களேன்”
என்று சொன்னாள் அத்தை சக்தி.

“இல்ல ஆன்ட்டி பரவாயில்ல தேங்க்ஸ்” என்றான்
சுதீப்.

சுதீப்-சுஹானாவிடம் “நீ என்ஜாய் பண்ணு டி
கம்பெனி விஷயம் நான் பார்த்துக்கிறேன் ஏதாவது
தேவைன்னா உன்ன தேடி வர்றேன்” என்று சொல்லி போனான் சுதீப்.

சக்திவேலன் எதுவும் பேசாமல் ஆபிஸ்க்கு கிளம்பி போனான். அன்று முழுவதும் சுஹானா ஆபிசுக்கு வரவில்லை.

சக்திவேலன் வேலை அதிகம் வர அன்-டைம் ஆயிடும் என்று லேகாவிடம் சொல்லி
வீட்டில் உள்ள அனைவருக்கும் சொல்ல சொல்லி
அனுப்பி வைத்தான்.

இரவு வெகு நேரத்திற்கு பின்
சக்தி வேலை செய்து முடித்து விட்டு சுதீப் பற்றி யோசித்தான்.’சுதீப் சுஹானாவோட ப்ரண்ட் ஆனா
எனக்கு அவன பிடிக்கல’ என்று மனஅழுத்தமாய்
சீட்டில் அமர்ந்திருந்தான் அப்போது போன் கால்
வந்தது சக்திக்கு அதை எடுத்தான் அதில் அத்தை
சக்தி..”மருமகனே உன்ன தேடி என் மக சுஹானா
வந்திட்டு இருக்கா பார்த்து கூட்டிட்டு வாப்பா” என்றாள்.

அவன் எரிச்சலாய் “அத்தை மணி 1 ஆக போகுது;சரி நான் பார்த்து
கூட்டிட்டு வர்றேன்” என்று கோபமாய் போனை
வைத்தவன் வேகமாய் ஆபிஸ் விட்டு கிளம்பி
சுஹானாவை வரும் வழிகளில் தேடிப் போனான்.

சிறிது நேரத்தில் தூரத்தில் ரோட்டில் சுஹானாவை
பார்த்ததும் கோபமாய் அவளிடம் போய் “நைட் 1
மணிக்கு ஒரு பொண்ணு தனியா நிற்கிற இடமா டி இது” என்று வேகமாய் ஒரு அறை ஓங்கி அறைந்தான்.

அடுத்த 2 நிமிடங்களில் சுதீப் அங்கு வந்து “ப்ரோ உங்களுக்கு ஆக்சிடென்ட்ன்னு சொல்லி நான் தான் சுஹானாவ வர வச்சேன்” என்றான்.

சக்தி சுதீப் கழுத்தை பிடித்து “நீ லிமிட் தாண்டி
போற” என்று நெறிக்க..

அவனோ” “ப்ரோ உங்க அத்தை சக்தி தான் என்ன சுஹானாவ கூப்பிட சொன்னாங்க..”என்றான்.

அடுத்த 2 நிமிடங்களில் அத்தைசக்தி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கேக்,கேண்டில் உடன் வந்தனர்.

சக்தி சுதீப்பை விட்டு “என்ன அத்தை
பண்றீங்க” என்று கேட்டான்.

”இன்னைக்கு சுஹானாவோட பர்த்டே” என்றாள் அத்தை சக்தி.

“பர்த்டே வா” என்று அதிர்ச்சியாய் பார்த்தான் சக்தி சுஹானாவை.

குடும்பத்தினர் அனைவரும் ரோட்டில் கேக் வெட்டி சுஹானாவுக்கு ஊட்டி விட்டு பரிசு கொடுத்து
மகிழ்ச்சியாய் கொண்டாட சக்திவேலனுக்கோ
அவசரப்பட்டு அடிச்சிட்டோமே என்ற குற்ற உணர்வில் சாரி கூட யார் முன்னேயும் சொல்ல
முடியாமல் தவித்தான்..

சுஹானாவும் மகிழ்வாய் இருந்தாலும் கண்கலங்கியபடியே நின்றாள்.

பின் அனைவரும் வீட்டிற்கு சென்றனர்.
சக்திவேலன் சுஹானாவிடம் பேச முயலும் போது
சுஹானா போய் கண்ணீரோடு படுத்து கொண்டாள்.

அடுத்த நாள் காலையில் சுஹானா கண் விழிக்கும் போது அவள் அருகே இருந்த டேபிளில் ஒரு
லெட்டர் பூவோடு இருந்தது.அதை அவள் பிரித்த
போது அதில் சுஹானா தன் தாத்தா,பாட்டியோடு
வீட்டிற்குள் வந்த முதல் நாள் ஒவியமாக இருந்தது.
சாரி என்று இருந்தது. அதை பார்த்ததும்
சுஹானாவுக்கு சிரிப்பு வர அடக்கி கொண்டு குளிக்க போக பாத்ரூமில் ஒரு லெட்டர் பூவோடு
இருந்தது..அவள் அதை எடுத்து பிரித்தபோது
அதில் சுஹானாவின் துப்பட்டா சக்தி முகத்தை
மூடியதும் அவள் அதை சரி செய்ததும் ஓவியமாக
இருந்தது கூடவே வெரி சாரி
என்றிருந்தது.
சுஹானாவுக்குள் ஒரு சந்தோசம்.

அதன்பின் சேலை எடுக்க பீரோவை
திறந்தபோது அதிலும் ஒரு லெட்டர் அதை பிரித்த போது அதில் சக்தியும்-சுஹானாவும் லேப்டாப்பில்
ஒன்றாக வேலை செய்தது ஒவியமாக கூடவே சாரி
இருந்தது.

சுஹானா சமைக்க கிச்சனுக்கு
சென்றபோது காய்கறிகள் மீதும் ஒரு லெட்டர் பூவோடு இருந்தது அதை எடுத்து பிரித்தபோது
சுஹானாவும்-சக்தியும் பைக்கில் சென்றது ஒவியமாக கூடவே சாரியும் இருந்தது.
சுஹானா சுற்றி பார்த்து
சக்திவேலனை தேடினாள்,அவன் அங்கு இல்லை.

சிறிது நேரத்திற்கு பின் சாப்பிட பிளேட்டை
திருப்பிய போது அதிலிருந்த லெட்டரை பிரித்த
போது அதில் சக்தி சுஹானாவின் இரு தோள்களை பிடித்தபடி மாடியில் பேசி நிற்பது போன்ற ஒவியம் கூடவே சாரி என்றிருந்தது.

சுஹானா சிரிப்பு அடக்க
முடியாமல் வரவே தன் அறைக்கு போய் கதவை திறந்து உள்ளே போன போது

சக்திவேலன் அவள்
பின்னே இருந்து நின்று தன் கைகளால் அவள்
கண்களை மூடி அவன் நெஞ்சோடு அவளை நெருக்கத்தில் பிடித்து அவள் காதுகளில் “ரொம்பவே சாரி..உன்ன பர்த்டே அதுவுமா நீ தப்பே பண்ணாம அடிச்சிட்டேன்..கஷ்டமா இருக்கு மாப்ள நீ வேண்ணா என்ன திருப்பி அடிச்சிரு..நீ சிரிக்காம,பேசாம இருக்கிற பனிஷ்மென்ட் தவிர வேற நீ எது கொடுத்தாலும் நான் வாங்கிக்கிறேன்” என்று அவள் கண்களின் மேலிருந்து கைகளை எடுத்து அவளை விட்டு விலகி நின்றான்.

அவள் கண் திறந்த போது அறை முழுவதும் பலூனால் டெக்கரேட் செய்யப்பட்டு
இருந்தது.

அவள் அவனிடமாய் திரும்ப அவன் தலையை குனிந்து கொண்டான்.

“அண்ணியாரே பரவாயில்ல.. எனக்கு கோபம் இல்ல நீ ஆபிஸ் கிளம்பு” என்றாள் சுஹானா.

“கோபமில்ல ஆனா நீ சந்தோசமாவும் இல்லையே, ஏதாவது பனிஷ்மென்ட் கொடு” என்றான் சக்தி.

“ஹேய் ரவுடி வேணும்னா ரவுடி பேபி சாங்கு-க்கு
டான்ஸ் ஆடு அதுதான் உனக்கு பனிஷ்மென்ட்”
என்றாள் சுஹானா.

“இவ்ளோ தானா இப்பவே ஆடுறேன்” என்று
பாடலை போட்டு அவன் நடனமாட சுஹானா அடக்க முடியாமல் வாய் விட்டு சிரித்தாள்..

“ஹப்பா சிரிச்சிட்ட மாப்ள இந்தா” என்று
அவளிடம் பூவோடு பரிசு பொருளையும் கொடுத்து “பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று சொல்லி
மகிழ்ச்சியாய் ஆபிஸ் கிளம்பியவன்.

அறைகதவை அடைந்ததும் திரும்பி மீண்டும் சுஹானாவை பார்த்து நடக்க,அவளும் சக்தியினை
பார்த்து நடக்க இருவரும் “ஒரு செல்ஃபி
எடுத்துக்கலாமா” என்று ஒரே நேரத்தில்
ஒருவரையொருவர் கேட்டு கொண்டனர்.

ஒரு இனம் புரியாத மகிழ்வோடு இருவரும் நெருங்கி நின்று செல்ஃபி எடுத்து கொண்டனர்.

சக்தி அறையை விட்டு வெளியே போனதும் சுஹானா அவன் கொடுத்த பரிசை திறந்தாள்.அதில் தங்க கொலுசு இருந்தது.மிகுந்த மகிழ்ச்சியாய் அதை எடுத்து
தன் கால்களில் அணிந்தாள்.

சுஹானா அறையை விட்டு கீழே செல்லவும் ரேணுகாவும், அத்தை சக்தியும் கொலுசை பற்றி விசாரிக்க அவ்வழியாக வந்த லேகாவை கட்டி கொண்டு “ஏய் அண்ணி காப்பாத்து டி கொலுசு நீ வாங்கி கொடுத்தன்னு சொல்லு டி” என்றாள் சுஹானா.

லேகாவும் புரிந்து கொண்டு “ஏன் மா நான் தான்
அவ பர்த்டேன்னு ஆன்லைன்ல ஆர்டர் போட்டு
வாங்கி கொடுத்தேன்.”

“நேத்து நைட் வேற கிப்ட் கொடுத்த டி” என்றாள்
அம்மா ரேணுகா.

“இது இன்னைக்குதான் வந்துச்சு கேள்வியா கேட்காத மா பஃடி நீ வா போலாம்” என்று
சுஹானாவை அறைக்கு அழைத்து போனாள்.

லேகா சுஹானா அறையை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியாய் சுஹானாவிடம் “ஏய் அண்ணி தங்க கொலுசு அண்ணன் தான வாங்கி கொடுத்தான்”.

“ஆமா டி..”

“அப்ப அம்மாகிட்ட சொல்ல வேண்டியதான..”

“ஏய் பெரியவங்ககிட்ட போய் எப்படி டி சொல்றது அப்புறம் ஏதாவது ஃபீலிங்ஸ்ன்னு தப்பா நினைச்சுட்டாங்கன்னா”

“அது சரி ஃ பீலிங்ஸ் இல்ல, ஃ பீலிங்ஸ் இல்லன்னு சொல்லிட்டு புருஷனும்,பொண்டாட்டியும்
என்னம்மா ஃபீல் பண்றீங்க” என்றாள் லேகா.

“ஹேய் உங்கள மாதிரி நாங்க இன்னும் ஃபீல் பண்ணலையே”

“ஹேய் அண்ணி ரேணுகா-வேலன், சித்ரலேகா-வேலன் எல்லாம் ஓவர்டேக் பண்ணி போயிட்டு இருக்கீங்க..எத்தனை நாள் நீயும், அவனும் இதையே சொல்லி ஏமாத்துறிங்கனு பார்ப்போம்”

“நாங்க உண்மையாதான் சொல்றோம் லேகா”

“உங்க 2 பேரோட முடியல டி பஃட்டி பர்த்டே அதுவுமா என்கிட்ட திட்டு வாங்காத ஆள விடு”என்று சொல்லி கடந்து போனாள் லேகா

சிறிது நேரத்திற்கு பின் சக்திவேலன் ஆபிஸ் போக மனமில்லாமல் வீட்டின் கேட்டின் முன்னே நின்று
யோசிக்க அப்பொழுது அங்கு வந்த அவனது அப்பா வேலன்..அவனிடம் “என்ன மருமகள விட்டுட்டு போக மனசு வரலையா” என்று கேட்டான்.

“எப்படிப்பா கண்டுபிடிச்ச..”

“நான் உன் அப்பன் டா..சரி..கார்ல உட்காரு மருமக வர்றா” என்றார் வேலன்.

சக்தியும் காரினுள் அமர..லேகாவும்,சுஹானாவும் வர..லேகாவை ஆபிஸ்க்கு அனுப்பினார் அப்பா வேலன்.

அதன்பின் “மருமகளே ஆடிட்டர் வீட்டுக்கு இந்த
கார்ல போய் பைலை வாங்கிட்டு வாம்மா..கீ கார்லேயே இருக்கு” என்று சொல்லி சுஹானாவின் மாமா வேலன் உள்ளே போனார்.

சுஹானா கார் கதவை திறந்து சக்தியை பார்த்ததும் கதவை அடைத்து திரும்பி நடந்தாள்.

சக்திவேலன் வேகமாய் வெளிவந்து “மேடம் எங்க போறீங்க” என்று கேட்டான்.

“எம்.டி.சார் ஆபிஸ் போகலையா...”என்று
கேட்டாள் சுஹானா.

“அதான் சின்சியர் சிகா லேகா
போயிருக்காங்களே..”

“உங்களுக்கு இங்க என்ன வேலை எம்.டி.சார்..”

“சி.இ.ஓ மேடம்க்கு பர்த்டே பார்த்துட்டு அவங்க
கூட...”

“ஹாம் என்ன எம்.டி.சார்..”என்று கேட்டாள் சுஹானா.

“இல்ல அவங்ககிட்ட கேக் வாங்கி
சாப்பிடலாமேன்னுதான்..”

“நீங்க ஆபிஸ் போங்க நான் கேக் வாங்கிட்டு வந்து தர்றேன்” என்றாள்.

“மாப்ள என் கூட வாயென் கேக் சாப்பிட்டு வரலாம்” என்றான்.

அவளும் சிரித்தபடி “சரிங்க அண்ணியாரே போலாம்” என்று காரினுள் அமர்ந்தாள்.

சக்தியும் காரை இயக்க கார் ஸ்டார்ட்
ஆகவில்லை... “என்ன அண்ணியாரே விதி சதி செய்யுதா” என்று கேட்டாள் சுஹானா.

“இல்ல மாப்ள விதி நல்லது தான் செய்யுது” என்று
வெளியே இருந்த டூவீலரை கை காண்பித்தான் சக்திவேலன்.

சக்திவேலனும்,சுஹானாவும் பல நாட்களுக்கு பின் பைக்கில் ஒன்றாக செல்ல குடும்பத்தின்
பெரியவர்களுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி.

சக்திவேலனும் சுஹானாவும் வழக்கமாய்
நண்பர்களாய் இருந்தபோது சென்ற
ரெஸ்டாரண்ட்டுக்கே சென்றனர்.

பைக்கை விட்டு இறங்கியதும் சுஹானாவிடம் “என் கிப்ட் பிடிச்சிருந்துதா” என்று கேட்டான்.

அவளும் புடவையை சற்று தூக்கி கால்களை
காண்பித்தாள். மகிழ்வாய் இருவரும் உள்ளே
கேக் ஆர்டர் செய்து அமர்ந்தனர்.

“சரி எப்படி கரெக்டா கொலுசு கிப்டா வாங்குன”
என்று கேட்டாள் சுஹானா.

“அது..அது” என்று அவன் சொல்ல தயங்கவே

“சொல்லு அண்ணியாரே” என்றாள் சுஹானா.

“அது அன்னைக்கு குளத்துல உன்ன
தூக்குனப்பவே உன் கால்ல கொலுசு இல்லாததை பார்த்தேன். அதான் வாங்குனேன்” என்று தலை
குனிந்தபடி சொன்னான் சக்தி.

“உனக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்கா” என்று கேட்டு சிரித்தாள்.

“சரி மாப்ள உனக்கு என்ன ரொம்ப பிடிக்கும்” என்று கேட்டான் சக்தி.

‘உன்னதான் ரொம்ப
பிடிக்கும்’ என்றாள் மனதினுள்.

“மாப்ள உன்னதான் கேட்டேன்...”

“நீ எத மீன் பண்ணி கேட்குற அண்ணியாரே”

“இப்ப எனக்கு ரொம்ப பிடிச்சவங்க என் அம்மா
தான்.அந்த மாதிரி உனக்கு யாருன்னு கேட்டேன்”.

“வேண்டாம் சொன்னா உனக்கு கோபம் வரும்”
என்றாள் சுஹானா.

“கோபப்பட மாட்டேன் சொல்லு..”என்றான்.

“என் பாட்டி ஸ்ரீ லேகா” என்றாள்.

அவன் முகம் சட்டென மாறியது

“நீ கோபப்பட மாட்டேன்னு சொன்னல்ல” என்றாள்

“சரி,கோபப்படல..சொல்லு அவங்ககிட்ட என்ன உனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று கேட்டான்.

“பாட்டி ஸ்ட்ரிக்ட் தான் ஆனா தப்பானவங்க இல்ல, அவங்களுக்கும் அம்மா,அப்பாஇல்ல..தாத்தா
நம்ம வேலன் அண்ணா மாதிரி பாட்டிக்கு அத்தை பையன்...”

“இந்த ஸ்டோரி நல்லா இருக்கே தாத்தா சொன்னதே இல்ல” என்றான் சக்தி.

“இல்ல இல்ல தாத்தாவுக்குதான் பாட்டி மேல
அவ்ளோ அன்பு,பாட்டி ஒன்லி ஆர்டர்
தான்..”என்றாள்.

“ஹேய் பாவம்தான தாத்தா..”என்றான்.

“ஆமாம்..பாட்டிட்ட ஒரு நாள் கேட்டேன் இந்த
பிசினஸ் எல்லாம் விட்ரலாமேன்னு..ஆனா பாட்டி
அதுக்கு பிசினஸ் பணத்துக்காக மட்டுமில்ல நமக்கு கீழ 2000 தொழிலாளர்களோட வாழ்வாதாரம் இருக்கு.நாம பிசினஸ் விட்டுட்டு நல்லா இருப்போம் ஆனா அவங்க எங்க போவாங்கன்னு சொன்னாங்க.”

“பரவாயில்ல மேடம் ஸ்ரீலேகா இப்படி கூட யோசிப்பாங்களா.மாப்ள நீ இரு கேக் இன்னும் வரல நான் போய் வாங்கிட்டு வர்றேன்” என்று எழுந்து போனான் சக்தி.

அப்போது சுதீப், பாட்டி ஸ்ரீ லேகாவோடு
சுஹானாவை வந்து பார்த்தான்.
பாட்டி என்று ஆசையாய் எழுந்து கட்டி கொண்டாள். மூவரும் அமர சக்தி கேக் வாங்கி வந்து பாட்டி ஸ்ரீ லேகாவை பார்த்ததும் கோபமாய் கேக்கை டேபிளில் வைத்து விட்டு திரும்ப
சுஹானா வேகமாய் எழுந்து அவன் எதிரே நின்று எனக்காக வா என்று கண்களால் கெஞ்சினாள்.

சக்தி மனம் மாறி பாட்டி முன் அமர்ந்தான்.

“கேக் கட் பண்ணு சுஹானா” என்றாள் பாட்டி.

“பாட்டி எனக்கொரு ஆசை நீங்க கேக் வெட்டி உங்க கையால எனக்கும்,உங்க பேரனுக்கும் ஊட்டி
விடுங்க” என்று கேட்டாள்.

பாட்டி மறுக்க முடியாமல்
கேக் வெட்டி இருவருக்கும் ஊட்டினாள்.

சுஹானா சக்தி கையை வலுவாய் பிடித்து “நீ கேக்
கட் பண்ணி எனக்கும், பாட்டிக்கும் ஊட்டி விடு டா”
என்றாள்.

அவனும் மறுக்க முடியாமல் ஊட்டி
விட்டான்.அதன்பின் பாட்டி கிளம்பவே
“வீட்டுக்கு வாங்க பாட்டி” என்று அழைத்தான் சக்தி.

“இல்ல...வேலை இருக்கு இன்னொரு நாள் வர்றேன்” என்று சொல்லி போனாள் பாட்டி.

சுஹானாவுக்கு அளப்பறிய மகிழ்ச்சி சுதீப்க்கு வாய் ஓயாமல் “தேங்க்ஸ்” சொல்லி கொண்டே வந்தாள்.






























































































































































 
Sakthi oru avasarakudukkai..posukkunnu kai neettura.. yenna pazhakkam man ethu 😡
எல்லாம் ஒரு அன்புதான்...உரிமை இருக்கிற இடத்துலதான கோபமும், பாசமும் சேர்ந்து வரும்... சுஹானாவே மன்னிச்சிட்டா..நீங்க மன்னிக்க மாட்டிங்களா sister
 
Top