GG writers
Moderator
ரேணுகா
வேலன் (அத்தியாயம்-23)
ரேணுகாவின் வீட்டிற்கு கண்ணன் மற்றும் அகிலாவின் கணவர் இருவரும் சேர்ந்து வந்தனர்.கண்ணன் தன் மகனின் திருமணம் ஊட்டியில் வைத்து இருக்கிறோம் என்று சொல்லி அழைப்பிதழை ரேணுகா, வேலன் மற்றும் அத்தை சக்தி கையில் கொடுத்துவிட்டு
“4நாள்ல கல்யாணம் நாளைக்கே எல்லாரும் குடும்பமா வந்துரனும்” என்று அன்பாய் கட்டளையிட்டான்.
அவர்களும் சந்தோசமாய் “கண்டிப்பா வந்துர்றோம்” என்றனர்.
சிறிது நேரத்திற்கு பின் அகிலாவின் கணவர் அத்தை சக்தியிடம் “ஏன் உன் பிடிவாதத்தால உன் மகன் வேலன் வாழ்க்கைய வீணாக்குற” என்று கேட்டார்.
“பெரியப்பா என் அம்மாவ எதுவும் சொல்லாதீங்க, அவங்க எது செய்ஞ்சாலும் அது சரியா இருக்கும்” என்றான் மகன் வேலன்.
“பாரு சக்தி உன் மகன மாதிரி யாரையும் பார்க்க முடியாது அவன் வாழ்க்கைய நீ யோசிக்கணும்ல” என்றார்.
“என்ன யோசிக்கணும் யா” என்று மகன் வேலன் கோபமாய் கேட்க, அப்பொழுது சக்தி
“டேய் அமைதியாயிரு,அவர் எங்க மாமா, நம்ம வீட்டு பெரியவர்..நீ அமைதியா நில்லு” என்று மகன் வேலனை அதட்டினாள். அமைதியானான் மகன் வேலன்.
“சாரி மாமா..நீங்க சொல்லுங்க” என்றாள் சக்தி.
“சக்தி நீயும் லேகாவும் ஒன்னா இருந்தா வேலன் கல்யாணம் எப்பவோ நடந்திருக்கும்..”என்றார்.
“மாமா என்ன சொல்ல வர்றீங்க” என்று கேட்டாள் சக்தி.
“சரி மா உன் சித்தப்பா பையன் ராஜன் இருக்கார்ல அவருக்கு 2 பொண்ணுங்க இருக்காங்க, கண்ணன் மகன் கல்யாணத்துக்கு அவங்களும் வர்றாங்க. நீ அவங்க 2 பேர்ல யாராவது ஒருத்தியை உனக்கு மருமகளா செலக்ட் பண்ணு, கல்யாண வீட்ல வேலனுக்கு நிச்சயம் பண்ணிருவோம்” என்றார்.
சக்தியோ வீட்டில் நடப்பதை அவரிடம் சொல்ல முடியாமல் தயக்கமாய் அமர்ந்திருந்தாள்.
“அது வந்து மாமா..”என்று தயக்கமாய் சொன்னாள்.
“எனக்கு புரியுது சக்தி, வேலன்-லேகா பத்தி ராஜன்கிட்டயும் அவன் பொண்ணுங்ககிட்டேயும் எல்லாத்தையும் நான் சொல்லிட்டேன்.அவங்களுக்கு வேலன பிடிச்சிருக்கு” என்றார்.
அவர் சொன்னதும் மகன் வேலன் கோபமாய் அவரோடு சண்டைக்கு போக சக்தி அவனை தடுத்து நிறுத்தி கோபமாய்
“டேய் என்ன டா பண்ற வேலா..? மாமா நீங்க சொன்ன விஷயத்துல எனக்கு சம்மதம் நீங்க போய் அதுக்கான வேலைய பாருங்க” என்றாள் சக்தி.
“என்னம்மா சொல்ற நீ” என்று கண்ணீருடன் அதிர்ச்சியாய் கேட்டான் மகன் வேலன்.
“இல்லடா..உன் லைஃ ப்-பையும் பார்க்கணும்ல.. அம்மா சொல்றதை கேளு” என்றாள் சக்தி.
“சரி சக்தி சந்தோசம்..நான் கிளம்புறேன்” என்று
கண்ணனும்,அகிலாவின் கணவரும் கிளம்பினர்.
இங்கு நடந்த எல்லாவற்றையும் பார்த்த சித்ரலேகா எதுவும் பேசாமல் கண்ணீரோடு தன் அறைக்கு போனாள்.
அத்தை சக்தி ரேணுகா மற்றும் அண்ணன் வேலனிடம் “மாமாகிட்ட நம்ம குடும்பத்துக்குள்ள நடக்கிறதை எப்படி சொல்ல முடியும் விட்டா வேலன் அவரை ஏதாச்சும் பேசி,சண்டையாயிரும் தான் மாமாகிட்ட சம்மதம் சொன்னேன்” என்றாள்.
“தெரியும் சக்தி” என்று ரேணுகாவும்,அண்ணன் வேலனும் ஒரு சேர சொன்னார்கள்.
“தேங்க்ஸ் டி அண்ணி.. நான் லேகாகிட்ட பேசிட்டு வர்றேன்” என்று அவள் அறையை நோக்கி நடந்தாள் அத்தை சக்தி.
அங்கு சித்ரலேகா அறையில் மகன் வேலன் அவளிடம் சென்று கண்கலங்கி நிற்க..
“இங்க ஏன் சார் வந்தீங்க.. நான் யாரு உங்களுக்கு” என்று கேட்டு திரும்பி நின்றாள் சித்ரலேகா.
வேலன் பின்னிருந்து அவளை இறுக்கமாய் பற்றி கொண்டு “நீ மட்டும்தான் எனக்கு மனைவி” என்று அவள் தோள்களில் அவன் கண்ணீர்படும் படி அழுதான்..அவன் கண்ணீர் தோளில் பட்ட நொடியில் அவளும் உடைந்து கண்ணீர் விட..
“எனக்காக என் அம்மாகிட்ட சாரி சொல்லு டி ப்ளிஸ்” என்று கெஞ்சினான்.
அதே நேரம் அத்தை சக்தி அங்கு வர வேலனை பிரித்து அவனை ஓங்கி ஒரு அறை அறைந்தாள்.
“லிமிட்ட மீறிட்ட வேலா நீ ?”என்றாள் கோபமாய்..
“நீங்கதான் லிமிட்ட மீறிட்டீங்க” என்றாள் சத்தமாய் லேகா.
“ஏய் பேசாத டி” என்று லேகாவை தடுத்தான் வேலன்.
“நீ சும்மா இரு பேசாம இருக்க முடியாது” என்றாள் லேகா.
“என்னதான் காதலா இருந்தாலும் ஒரு
கண்ணியம் வேண்டாமா?” என்று கேட்டாள் அத்தை சக்தி.
“உங்க ஆர்மி ரூல்ஸ உங்களோட வச்சுக்கோங்க” என்று சொன்னாள் லேகா.
“லேகா அம்மாகிட்ட இப்படி பேசாத டி” என்றான் வேலன்.
அவனையும் மீறி பேசினாள் லேகா.. “நீங்க நினைக்கிற மாதிரி ஒரு நாள் கூட அவன் தப்பான எண்ணத்தோட என்கிட்ட வந்ததில்ல... எப்பவுமே அம்மா,அம்மா மட்டும்தான் அவனுக்கு..இப்ப கூட உங்ககிட்ட சாரி சொல்ல சொல்லிதான் சொல்லிட்டு இருந்தான்.”
கண்களில் வந்த கண்ணீரை அடக்கினாள் சக்தி.
“நாங்க சந்தோசமா பேசி எவ்ளோ நாளாச்சு தெரியுமா..? எங்கம்மா வர்ற நாள் நம்ம கல்யாண நாளா இருக்கும்னு சொன்னான்.ஆனா நீங்க வந்ததுக்கப்புறம் ஒரு நாள் கூட நாங்க சந்தோசமா இல்ல,அப்புறம் எப்படி வாழ்க்கை முழுக்க உங்க கூட இருக்க முடியும்” என்று லேகா கேட்டதும் கண் கலங்கி அறையை விட்டு வெளியேறினாள் அத்தை சக்தி.
வேலன் கோபமாய் “உன்ன மாதிரி யாருமே எங்கம்மாவ பேசி கஷ்டப்படுத்தினதில்ல டி”
“நான் உண்மையதான சொன்னேன்..”என்றாள் லேகா.
“எது உண்மை..என் அம்மா சொன்னதுதான் உண்மை உனக்கு என் மேல லவ் இல்ல டி..அப்படி இருந்திருந்தா..நான் இவ்ளோ நாள் இவ்ளோ தூரம் பேசியும் நீ கொஞ்சம் கூட மனசு இரங்கி வர்ல...”
அதிர்ச்சியாய் பார்த்தாள் லேகா.
“என் அம்மாவ புரிஞ்சுக்காத என்ன நேசிக்காத பொண்டாட்டி எனக்கு வேண்டாம்” என்று கோபமாய் சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினான் வேலன்.
வேலன் தன் அம்மா சக்தியை தேடி மாடிக்கு போனான். அங்கு தனிமையில் நின்ற சக்தியிடம் போய் “சாரி மா.. நீ என்ன சொல்றியோ அததான் நான் செய்வேன்,நீ கண் கலங்காதம்மா” என்றான்.
“சாரி டா நான் உன்ன அவசரப்பட்டு அடிச்சிட்டேன்” என்றாள் அம்மா சக்தி.
“நீ பண்ணது கரெக்ட்தான் மா..”
“டேய் லேகா கடைசியா சொன்னது உண்மையா?”
“அவ லூசு மா அவ சொல்றதை நீ நம்பாத..”
“வேலா உண்மையை சொல்லு நான் வர்ற நாள் கல்யாண நாளா இருக்கும்னு சொன்னியா..?”
வேலன் தலைகுனிந்தவாறு “ஆமாம்மா அவ சம்மதம் சொன்னதுமே தாலி கட்டணும்னு நினைச்சேன்.. நீ இல்லாம எப்படி மா..நிச்சயத்தன்னைக்கு நீ வந்ததும் அவளுக்கு தாலி கட்டணும்னு நினைச்சேன்..ஆனா நடக்கல” என்றான்.
சக்தி மனதினுள் ‘சாரி டா வேலா உன்ன பத்தி யோசிக்காமலே போயிட்டேன் அம்மா’ என்று நினைத்தாள்.. “சரி வேலா அம்மாவுக்கு சோர்வா இருக்கு நாம நாளைக்கு பேசலாம்” என்று அனுப்பி வைத்தாள் அம்மா சக்தி.
சுஹானாவும், சக்திவேலனும் மகிழ்வாய் வீட்டுக்குள் வர தாத்தா நடந்த அனைத்தையும் இருவரிடமும் சொன்னார். சக்திவேலன் மாப்ளை வேலனை தேடி போனான்.
ரேணுகா,வேலன், அத்தைசக்தி என மூவரும் முகம் பார்த்து பேச முடியாமல் சோகமாய் அமர்ந்திருந்தனர்.
அப்போதுசுஹானா அங்கு வந்து “மாமியாரே என் நாத்தனாரின் மாமியாரே” என்று அழைக்க..
“நான் பேசற மைண்ட்ல இல்ல டி..போயிடு”
என்றாள் அத்தை சக்தி.
“ஆனா நான் பேசற மைண்ட்ல இருக்கேனே” என்றாள் சுஹானா.
“சுஹானா என்னம்மா பண்ற” என்றாள் ரேணுகா.
“அண்ணி கொடுமை மாமியாரே” என்றாள் சுஹானா.
“என்ன நாத்தனாரின் மாமியாரே நீங்க கேட்டீங்களே 2 விஷயம் அதை நான் எப்படி செய்யாம போவேன்.”
“என்ன டி” என்று கோபமாய் கேட்டாள் அத்தை சக்தி
“45நாள் ரேணுகா அத்தைக்கு டைம் கொடுத்தீங்க எனக்கு 4 நாள் டைம் கொடுங்க
ஊட்டி ட்ரிப் முடியறதுக்குள்ள லேகா லவ்வையும் ப்ருவ் பண்றேன், உங்களையும் லேகாவையும் ப்ரண்ட்ஸ் ஆக்குறேன்” என்றாள் சுஹானா.
“என்ன தைரியத்துல சொல்ற நீ” என்று கேட்டாள் அத்தை சக்தி.
“நம்ம சேலன்ஞ்சு முடிய 10 நாள் தான் இருக்கு 11வது நாள் சித்ரலேகா-வேலன் கல்யாணம் நடக்கும்..அண்ணன் கட்ட போற தாலியில் 3வது முடிச்சு போட போற நாத்தனார்ன்ற தைரியத்துல தான் சொல்றேன்” என்றாள் சுஹானா.
அத்தை சக்திக்கோர் இனம் புரியாத மகிழ்ச்சி
உள்ளத்தில்.. “மகளே பார்ப்போம் டி 4 நாள் தானே டைம் தர்றேன்” என்றாள்.
சுஹானா அங்கிருந்து போன பின் தன் அண்ணன் அண்ணியிடம் அத்தை சக்தி “அதான் என் மகளே சொல்லிட்டாளே அவ பார்த்துக்குவா சோ நோ சோகம்.. நாம ஜாலியா இருப்போம்” என்றாள்.
மாடியில் மாப்ளை வேலன் சக்திவேலனிடம்
“முடியல டா மச்சான் தாங்கவே முடியல.. என் அம்மா அவள வேண்டான்னு சொன்னாலும் வலிக்குது,அவ என் அம்மாவ வேண்டான்னு சொல்லி பேசுனாலும் வலிக்குது பார்டர்ல கூட நின்னு சண்ட போட்டுரலாம் ஆனா இவங்க சண்ட டார்ச்சரா இருக்கு டா” என்று சக்தியை கட்டி கொண்டு கண்ணீர் விட்டான்.
“டேய் மாப்ள எல்லா சரியாயிடும்” என்று அவனை தேற்றிவிட்டு தன் அறைக்கு போய் கவலையாய் அமர்ந்திருந்தான் சக்திவேலன்.
சுஹானா அவன் அருகில் சென்று அமர்ந்து பேச ஆரம்பித்தாள். “ஏன் கவலையா இருக்க ?” என்று கேட்டாள்.
“இல்ல மாப்ள, வேலா பாவம் 2 பேர் மேல அன்பு வச்சது தவிர தப்பு எதுவும் செய்யலையே..லேகா புரிஞ்சுக்காம பண்றாளே” என்றான்.
சுஹானா அவன் கைகளை பிடித்து கொண்டு.. “எல்லாம் சரி ஆயிடும்..அவங்க 3 பேருக்கும் ஓவர் அன்பு அதான் ஒருத்தருக்கொருத்தர் முட்டி மோதுறாங்க” என்றாள்.
“நீ பேசுறது கேட்க நல்லா இருக்கு..அவங்க சேருவாங்களா..”என்று கேட்டான் சக்தி.
“கண்டிப்பா சேருவாங்க.. நான் பார்த்துக்குறேன் நீ நிம்மதியா தூங்கு அண்ணியாரே” என்றாள் சுஹானா.
“குட் நைட் மாப்ள” என்று சிரித்தபடி சொல்லிவிட்டு தூங்க போனான் சக்திவேலன்.
அடுத்த நாள் காலையில் அனைவரும் குடும்பமாய் ஊட்டிக்கு சென்றனர்.குடும்பத்தினர் அனைவருக்குமான தனி தனிரூம்கள் இருந்த காட்டேஜிற்கு சென்றனர்.
சிறிது நேரத்தில் ராஜனின் மகள்கள் தர்ஷினி,வர்ஷினி சக்தியின் மகன் வேலனை காண வந்தனர்.
அப்பொழுது அம்மா சக்தி மகன் வேலனிடம் “இவங்க 2பேரையும் எனக்கு பிடிச்சிருக்கு..நீ ஒருத்தரை செலக்ட் பண்ணு” என்றாள்.
“என்ன பிடிச்சிருக்கு உனக்கு இவங்ககிட்ட” என்று கேட்டான் மகன் வேலன்.
“நீ பொண்டாட்டின்னு ஒருத்தியை கூப்பிடுவியே அவ என்னைக்காவது மாமான்னு உன்ன மரியாதையா கூப்பிட்டிருக்காளா..இவங்க 2 பேரும் உன்ன மதிச்சு மாமான்னு கூப்பிடறாங்க ஐ அம் இம்ப்ரெஸ்டு டா வேலா” என்றாள் அம்மா சக்தி.
“அவங்க 2 பேரும் நடிக்கிறாங்க அம்மா” என்றான் வேலன்.
“அவன் கூச்ச சுபாவம் மா நீங்க 3 பேரும் வெளிய போய் மனசு விட்டு பேசுங்க” என்று 3 பேரையும் அனுப்பி வைத்தாள் அம்மா சக்தி.
அன்றைய நாள் இரவு நேரத்தில் ரிசார்ட்டில் ஒளி அலங்காரம் செய்யப்பட்ட விளக்குகளின் நடுவில் சித்ரலேகா நடக்க நடக்க விளக்குகள் வரிசையாய் ஒளி வீச பூ அலங்காரம்,கேண்டில் லைட் ஏற்றி கோட் சூட்டில் திரும்பினான் சித்ரலேகாவின் கல்லூரி தோழன் வசந்த்குமார்.
“ஏய் வசந்த் நீ எப்படா வந்த” என்று ஆச்சர்யமாய் கேட்டாள் லேகா.
அவள் முன் மண்டியிட்டு ரோஜாவை நீட்டி லவ் ப்ரொப்போஸ் செய்தான்.
வசந்த் ப்ரொப்போஸலை லேகா அறியாதபடியினால் திகைத்து போனாள்,அதிர்ச்சியாய் அவனுக்கு பதில் எதுவும் சொல்லாமல் திரும்பி நடந்து போனாள்..
அதே இடத்தில் வேலன் விஜயகுமார் தர்ஷினி,வர்ஷினியை ரிஜெக்ட் செய்து திரும்பும் போது வசந்த் லேகாவிடம் சொன்னதையும், பதிலில்லாமல் அவள் போனதையும் பார்த்து வருத்தமாய் நடந்து போனான்.
சுஹானா லேகாவிடம் பேச அவள் எந்த பதிலும் பேசாமல் அமைதியாய் அறைக்கு சென்று அமர்ந்து
லேகாவின் மனதிற்குள் ‘ஓர் பழைய நினைவு தோன்ற கண்களை மூடினாள்..அந்த நினைவில்..வேலனோடு இருந்த ஆரம்ப நாட்களில் “டேய் உனக்கு எதுக்கு ஓகே சொல்லணும் ஒரு ப்ளவர் இல்ல,கேண்டில் லைட் இல்ல,லவ் ப்ரொப்போஸல் இல்ல” என்றாள் லேகா.
“ஏய் அது எல்லாம் கொஞ்சமா லவ் வச்சிருக்கிறவன் இம்ப்ரெஸ் பண்ண பண்ணுவான்.. நான் அப்படி இல்ல டி...”
“ஃ பிலாஸஃபி பேசாத டா..”
“உனக்கு சொன்னா புரியாது வா” என்று லேகா கையை இழுத்து ரேணுகா-வேலன் அறை முன் கை, காட்டினான். “அங்க பாரு 50 வயசுலேயும் அத்தைக்கு ஐ-டெக்ஸ் போட்டு அழகு பார்க்குறாரே மாமா அதுதான் லவ்..நானும் உன்ன அப்படி தான் பார்த்துக்குவேன்.அவங்க ரேணுகா-வேலன்,நாம சித்ரலேகா-வேலனா இருப்போம்” என்றான்.
இதனை நினைத்து கண்களில் கண்ணீர் வடிய கண்களை திறந்தாள் லேகா.
அடுத்த நாள் காலையில் வசந்த் லேகா அப்பா,அம்மா முன்னிலையில் மீண்டும் ப்ரொப்போஸ் செய்தான்..
“லேகா எனக்கு அம்மா இல்ல என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு எனக்கு அம்மாவா இருப்பியா” என்று அவன் கேட்டதும்..
“சரி வசந்த் கொஞ்சம் வெளிய போய் பேசலாமா” என்றாள் லேகா.
குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியாயினர்.
“குட் லேகா வா போலாம்” என்று மாப்ள வேலன் கண் முன்னே அவளை கூட்டி சென்றான் வசந்த்.