GG writers
Moderator
ரேணுகா
வேலன்
(அத்தியாயம் -24)
மாப்ள வேலன் வருத்தமாய் அமர்ந்திருக்க..அவளது
அம்மா சக்தி அவனிடம் “சரி விடுடா அவ எனர்ஜி ஆர்கனிசேஷன் எம்.டி.ன்னுதான உனக்கு ஓகே சொன்னா..” என்றாள்.
“நான் உன்கிட்ட கேட்டனாம்மா” என்று முறைத்தபடி எழுந்து வேகமாய் நடந்தான்.
சக்திவேலன் மாப்பிள்ளை வேலனை தடுத்து நிறுத்தி “எனக்கு குறும்படம் காட்டுவல்ல உனக்கு லைவ் ஷோ காட்டவா..” என்றான்.
“டேய் போடா” என்று சக்தியை தள்ளிவிட்டு வேலன் வேகமாய் நடந்து ஹாலுக்கு வரும்போது அவனை சுற்றி நான்கு பக்கமும் டிவி ஆன் ஆனது அதில் லேகாவும் வசந்தும் பேசுவது தோன்ற அனைவரும் டிவியை நோக்க, சுஹானா அத்தை சக்தியை டிவியை பார்க்க இழுத்து வந்தாள்.
லேகா-வசந்த் பேசுவதை அவர்களுக்கே தெரியாமல் தாத்தா அவர் மொபைல் மூலம் தூரத்திலிருந்து ஒளிபரப்பு செய்ய அவை டிவியில் வந்தது.. அதில்
“சாரி வசந்த் நான் சரின்னு சொன்னது உனக்கு சில விஷயங்கள புரிய வைக்கணும்னுதானே தவிர உன் மேல விருப்பப்பட்டு இல்ல” என்றாள் லேகா.
“லேகா உன் எக்ஸ் வேலன் பத்தி எனக்கு எல்லாம் தெரிஞ்சுதான் ப்ரொப்போஸ் பண்ணேன்.அந்த ஆர்மிக்காரன விட நான் உன்ன நல்லா பார்த்துக்குவேன் என்ன கல்யாணம் பண்ணிக்கோ..” என்றான் வசந்த்.
“நான் எத்தன தடவை கல்யாணம் பண்றது” என்று கேட்டாள் லேகா.
“என்ன சொல்ற நீ..?”
“வேலன் என்னோட எக்ஸ் இல்ல..என்னோட லைஃப்..அவன பார்த்த முதல் நிமிஷம் எனக்கும் என் புருஷன்னுதான் தோணுச்சு, அதனாலதான் அவன வீட்டுக்கு கூட்டிட்டு போனேன்.என் அத்தை பையன்னு தெரிஞ்சதும் அவன் கூடதான் வாழனும்னு முடிவு பண்ணிட்டேன்.அதான் 45நாள் சேலன்ஞ்சுக்கு ஓகே சொன்னேன்.அவன் என்ன பார்க்காம,பேசாம இருக்கவே மாட்டான் டெய்லியும் வந்துருவான்..அவன் வரலன்னாலும் திட்டிட்டாச்சும் நான் அவன தேடி போயிருவேன்.. என்னடா நம்ம புருஷன் லட்சியம் இல்லாம இருக்கானே எப்படி லவ்வ சொல்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன் அப்பதான் அவன் எனர்ஜி ஆர்கனிசேஷன் எம்.டி.ன்னு தெரிஞ்சுது ஓகே சொன்னேன் அப்பவே மனசார எங்க 2 பேருக்கும் கல்யாணம் நடந்துருச்சு.இப்ப நீ பேசிட்டிருக்கிறவ உன் ப்ரண்ட் லேகா இல்ல. மிஸ்சஸ் சித்ரலேகாவேலன்கிட்ட..” என்றாள்.
“அப்புறம் ஏன் வேலன் நான் உன்ன கூட்டிட்டு வரும்போது தடுக்கல” என்று கேட்டான் வசந்த்.
“என் புருஷன் என் மேல கோபமா இருக்கான் அதான் உன்ன தடுக்கல.. நார்மலா இருந்தான் நீ நல்லா அடி வாங்கியிருப்ப” என்றாள்.
“அது சரி அவங்கம்மாவ உனக்கு பிடிக்காதுல அப்புறம் எப்படி..?”
“நான் அப்படி சொன்னனா..?அவங்களுக்கு தான் என்ன பிடிக்காது,வேலன் சொல்றதுக்காக நான் சாரி சொன்னா லைஃப் லாங் என் அத்தைக்கிட்ட நான்
நடிச்சிட்டுதான் இருக்கணும்.நான் எப்படிப்பட்ட கேரக்டர்ன்னு அவங்க தெரிஞ்சுக்கணும்தான்
அமைதியா இருந்தேன்.”
“வேலனுக்கு அவங்கம்மா வேற பொண்ணு பார்க்கிறாங்கள்ல” என்று கேட்டான் வசந்த்
லேகா சிரித்தபடி “என்ன தவிர எவளையும் அவன் பார்க்க மாட்டான்,லவ்வர் வேண்டான்னு விட்டுட்டு போவான்,என் புருஷன் எப்படி என்ன விட்டுட்டு போவான்..அவன் என்னையும் விட மாட்டான், அவங்கம்மாவையும் விடமாட்டான், அவங்கம்மா சம்மதத்தோட என்ன ஊரறிய கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போவான்.”
“ஒரு வேளை வேலன் உன்ன சேராம போயிட்டா அப்ப என்ன செய்வ..”என்று கேட்டான் வசந்த்.
“ஆயுசுக்கும் அவன் நெனைப்புல வாழ்ந்துருவன்..என்னையும், என் பெயரையும்,என் உயிரையும் வேலன் தவிர யாருக்கும் கொடுக்க மாட்டேன்” என்றாள் லேகா அதோடு முடிந்து டிவி ஆஃப் ஆனது.
கண் கலங்க நடு ஹாலில் நின்றிருந்தான் வேலன் விஜயகுமார்.
அப்போது சித்ரலேகா வீட்டினுள் வர..அவளிடமாய் ஓடி கட்டி கொண்டு அவள் உச்சியில் முத்தமிட்டான் மாப்ளை வேலன்.
“என்னடா சந்தேகப்பட்டதான” என்றாள் லேகா கண்கலங்க..
“இல்லடி உனக்குள்ள இவ்ளோ காதல் இருக்கும்னு நினனக்கல டி” என்றான்
அப்போது அம்மா சக்தி “டேய் வேலா” என்று அழைக்க...
“அம்மா நீ சொன்னாதான் கல்யாணம்,ஆனா அவ மட்டும்தான் என் பொண்டாட்டி என் ஆயுசுக்கும்..” என்றான் வேலன் விஜயகுமார்.
சொந்தபந்தங்கள் கூடியிருந்த நிலையில் சுஹானா அகிலா,அகிலா கணவரிடமும் போய் “பாருங்க பெரியம்மா,பெரியப்பா சக்திஅத்தைக்கிட்ட நியாயம்
கேளுங்க” என்று ஒவ்வொருவரையும் அத்தை சக்திக்கெதிராய் தூண்டி விட்டாள்.
அகிலா,அகிலா கணவர்,பூமா என அத்தை சக்தியிடம் போய் “என்ன டி இப்படி பண்ற நம்ம பிள்ளைங்கள சேர்த்து வை டி” என்று வற்புறுத்த..அத்தை சக்தி அவர்களை சமாளிக்க முடியாமல் திணற..
அந்நேரம் சுஹானா மற்றும் சக்திவேலன் நிச்சய தட்டுடன் கீழ் இறங்கி வந்தனர்.
அப்பொழுது சக்திவேலன் ரேணுகா மற்றும் வேலனிடம் நிச்சயதட்டை கொடுத்தான்.
சுஹானா நிச்சயதட்டை அத்தை சக்திக்கு நேராக நீட்டி “வாங்கி தட்டு மாத்துங்க”என்றாள்.
“மகளே நான் உன்கிட்ட கேட்டது 2 விஷயம்”என்றாள் அத்தை சக்தி.
“நான் லேகா லவ்வை ப்ருவ் பண்ணிட்டேன் நீங்க தட்டு மாத்தி நிச்சயமோதிரத்தை கொடுங்க நீங்க கேட்ட 2வது விஷயத்தையும் செய்த பின்னாடி அண்ணன் கையில தாலி எடுத்து கொடுங்க."
அத்தை சக்தி யோசனையாய் பார்க்கவே...
"என்ன யோசிக்கிறிங்க மாமியாரே என் நாத்தனார் ஃப்ரண்ட்ஷிப் என்ன லவ் யூ வே உங்களுக்கு சொல்லுவா..”என்றாள் சுஹானா.
அத்தை சக்தியின் சம்மதத்துக்காக அண்ணன் வேலனும்,மகன் வேலனும் அவளை பார்த்தனர்..அவள் கண்களால் சரி என்று சொல்லி சுஹானாவிடம் நிச்சய தட்டை வாங்கினாள்.
சுஹானா அத்தை சக்தியிடம் “ஹாம் ஒரு நிமிசம் மாமியாரே” என்று சொல்லி “தாத்தா இன்விட்டேசன் கார்டு அண்ட் ஐயர்ர வர சொல்லுங்க முகூர்த்த பட்டோலை வாசிக்கணும்ல” என்றதும் தாத்தா பூமாலை தட்டை சுஹானாவிடம் கொடுத்துவிட்டு நொடிப்பொழுதில் ஐயரை அழைத்து வந்தார்.
சக்திவேலன் மாப்ளை-வேலனுக்கு கோட் போட்டு பூமாலை போட்டான்.சுஹானா சித்ரலேகாவுக்கு பூமாலை போட்டு சொந்தபந்தங்கள் மத்தியில் ஐயர் முகூர்த்தபட்டோலை வாசிக்க அத்தை சக்தியும்,ரேணுகாவேலனும் நிச்சயம் செய்து தட்டு மாத்தினர்.
அம்மா சக்தி நிச்சய மோதிரத்தை மகன் வேலனிடம் கொடுத்தாள், அதே போல் அப்பா வேலன் லேகாவிடம் நிச்சயமோதிரத்தை கொடுத்தார்.
மகிழ்ச்சி பொங்க இரு இதயங்களும் மோதிரத்தை ஒருவர் கையில் ஒருவர் போட்டு விட அனைத்து உறவுகளும் மணமக்களுக்கு வாழ்த்து சொல்லிய போது வசந்தும் வந்து வாழ்த்து சொல்ல..மணமக்கள் தயங்கவே..
“ஒன்னும் யோசிக்காத அண்ணன் வசந்த் லேகாவ லவ் பண்ல அவர ப்ரொப்போஸ் பண்ண சொன்னதே நான் தான்..உங்க நிச்சயத்துக்கான இந்த அண்ணியோட ப்ளான்” என்றாள் சுஹானா.
அம்மா சக்தி மிகுந்த அதிர்ச்சியாய் சுஹானாவை பார்த்தாள்.
“என்ன பார்க்குறீங்க மாமியாரே என் நாத்தனாரின் மாமியாரே நீங்க தான் எனக்கு குரு..” என்றாள் சுஹானா.
“என்ன டி சொல்ற” என்று கேட்டாள் அத்தை சக்தி.
“நீங்க ரயில்வே ஸ்டேசன்ல உங்க அண்ணன் அண்ணிக்கு கல்யாணம் பண்லாம், நான் என் அண்ணன் அண்ணிக்கு கல்யாண வீட்ல நிச்சயம் பண்ண கூடாதா” என்றாள் சுஹானா.
“மகளே பாதி தான் டி ஜெயிச்சிருக்க இன்னும் மீதி 2 நாள்தான் இருக்கு நான் மாமியார் டி மறந்துராத” என்று மிரட்டினாள் அத்தை சக்தி.
“உங்களுக்கு செய்யாம நான் யாருக்கு செய்வேன் மாமியாரே வெயிட் அண்ட் வாட்ச்” என்றாள் சுஹானா.
ரேணுகா மகிழ்ச்சியின் உச்சியில் சுஹானாவை கட்டி கொண்டு “தேங்க்ஸ் டி மருமகளே” என்றாள்.
“மகளுக்கு தேங்க்ஸ் சொல்லுவாங்களா” அத்தையம்மா.
“ஹேய் சாரி டி..”
“மகளுக்கு சாரி சொல்லுவாங்களாம்மா”
ரேணுகா “மகளுக்கு இத கொடுக்கலாம்” என்று சொல்லி சுஹானாவின் கன்னத்தில் முத்தமிட்டாள்.
நிச்சய ஆரவாரங்கள் முடிந்து இரவில் அண்ணன் வேலனிடம் தங்கை சக்தி “இன்னைக்கு நம்ம பிள்ளைங்க நிச்சயம் எப்படி நடந்துச்சு பார்த்தியா..எல்லா உறவுகளும் சேர்ந்து சந்தோசமா இததான் நான் வந்த அன்னைக்கு எதிர்பார்த்தேன்.”
“சரியா சொன்ன டி” என்றான் அண்ணன் வேலன்.
அடுத்த நாள் காலையில் சுஹானாவும்,லேகாவும் தனிமையில் மலைரோட்டில் சுவாரஸ்யமாய் பேசி கொண்டு நடந்து வர..சுஹானவை ஏளனம் செய்ய எதிரில் வந்தான் அகர்சன்..அப்போது அவர்களின் நடுவே சக்திவேலன் வந்து சுஹானா பக்கம் திரும்பி
“என்னம்மா நைட் மறந்து விட்டுட்டியே” என்று
ஒரு கொலுசை காண்பித்து.. “இருமா நானே போட்டு விடுறேன் ” என்று அவள் முன் ஒரு காலில் முட்டிபோட்டு அவள் காலை கேட்டான்
அவளும் சக்திவேலனின் இன்னொரு கால் மீது தன் கால்லை எடுத்து வைக்க கொலுசை மாட்டினான் சக்திவேலன்.
லேகா சுஹானாவிடம் “அகர்சன் செத்துட்டான் அண்ணி அவன் மூஞ்சிய பாரேன்” என்று மெல்ல அவள் காதுகளில் சொன்னாள்.
அந்நேரம் அங்கு வந்த மாப்ள வேலன் அகர்சனை அடிக்க போக சக்திவேலன் தடுத்தான்.
“டேய் வேலா மச்சான போய் அடிக்க போற..சுஹானாவோட அண்ணன் டா” என்றான்
சக்தி.அதன்பின் அகர்சனை பார்த்து சுஹானாவோடு நெருங்கி நின்று அவள் தோள் மீது கை போட்டு“மச்சான் வாயென் வீடு பக்கத்துலதான் நானும் உன் தங்கச்சியும் எப்படி வாழ்றோம்ன்னு பாரேன்” என்று சொல்ல அகர்சன் எரிச்சலாய் திரும்பி போனான்.
அதன்பின் சக்தி சுஹானாவிடம் “மாப்ள இப்படி பேசுனாதான் அவன் உன்ன டிஸ்டர்ப் பண்ணாம இருப்பான்..அதான்..”
“தெரியும் அண்ணியாரே” என்றாள் சுஹானா.
வேலன் விஜயகுமார் அவர்களை பார்த்து“உலகத்துலேயே மனைவியை மாப்ளன்னு கூப்பிடுற ஒரே புருஷன் நீதான் டா..”என்றான் சக்தியை
“ஏய் என்ன என் அண்ணணன மட்டும் சொல்ற உன் தங்கச்சி மட்டும் என்ன உலகத்துலேயே புருஷன அண்ணியாரேன்னு கூப்பிடற ஒரே பொண்டாட்டி இவதான்டா” என்றாள் லேகா.
“2 பேரும் மறுபடியும் ஆரம்பிக்காதீங்க நீ வா மாப்ள நாம முன்னாடி போலாம்” என்று சக்திவேலன் சுஹானாவை அழைத்து போனான்.
“மச்சான் மச்சான்தான்-யா சொல்லாமலே புரிஞ்சுக்குறான்” என்றான் மாப்ள வேலன்.
“என்ன டா என் அண்ணன புகழ்ற” என்று கேட்டாள் லேகா.
“நேத்து நிச்சயத்துல ஒன்னு மிஸ்ஸிங் அத கொடுக்கலாமேன்னு வந்தேன்” என்றான்.
“என்னது” என்று கேட்டாள்.
ஒரு முழம் பூவை கொடுத்து.. “வச்சுக்கோ டி” என்றான் வேலன்.
“ரக்சா பந்தன்ல சொன்னத இப்ப நிறைவேத்துறியா ..?”
“ஆமா டி ரொம்ப நாள் ஆசை வச்சுக்கோ”என்றான்.
மாட்டேன் என்று தலையசைத்தவள் திரும்பி “நீயே வச்சு விடு” என்றாள்.
அவனும் சந்தோசமாய் பூவை வைத்து அவளை திருப்பினான்.அப்பொழுது அவன் மொபைல் போன் ரிங் ஆக எடுத்து பேசியவனின் முகம் வாடலாய் மாறியது.
“என்னாச்சு” என்று கேட்டாள் லேகா.
“இல்ல லீவு முடிய இன்னும் நாள் இருக்கு.ஆனா காஷ்மீர் உடனே வர சொல்றாங்க” என்றான் வேலன்.
“சரி போயிட்டு வா...”
“இல்ல லேகா போனா கல்யாண தேதிக்குள்ள திரும்பி வர முடியாது” என்றான் வேலன்.
“உங்கம்மா வேலையாதான் இருக்கும்” என்றாள்.
“புரியாம பேசாத டி” என்று சொல்லிவிட்டு வேகமாய் அம்மா சக்தியை தேடிப்போய் நடந்ததை சொன்னான் வேலன் விஜயகுமார்.
“டேய் எப்படி டா போக முடியும்” என்று கேட்டாள் அம்மா சக்தி.
“நடிக்காதீங்க மாமியாரே உங்க வேலைதானே” என்றாள் லேகா.
“லேகா பேசாம போ” என்று கோபமாய் சொன்னான் வேலன்.
“சேலன்ஞ்சுல ஜெயிக்க எதுவும் செய்வாங்க..நாம சந்தோசமா இருந்தா அவங்களுக்கு பிடிக்காது டா”என்று லேகா சொல்ல கோபம் ஏறி ஓங்கி ஒரு அறை அறைந்தான் வேலன் விஜயகுமார் லேகாவை.
“டேய் என்னடா பண்ற கை நீட்டுற” என்று அம்மா சக்தி அவனை அதட்ட..
லேகா கோபமாய் வெளியே போனாள்.
“டேய் போய் மருமகள சமாதானப்படுத்து”என்றாள் அம்மா
“முடியாதும்மா” என்று அவனும் வெளிய போக சுஹானாவிடம் நடந்ததை கூறினான்.
சிறிது நேரத்திற்கு பின் சுஹானா லேகாவை தேடி போக..லேகா ஊட்டியை விட்டு கோயம்புத்தூர் சென்று அங்கு ஏர்போர்ட்டில் அமர்ந்திருக்க ப்ளைட் 3மணி நேரம் தாமதம் ஆனதால் அங்கு ப்ளைட்டுக்காக காத்திருந்தாள்.
அப்பொழுது சுஹானா லேகாவிடம் “அண்ணி கோபப்படாத உன் அத்தை நீ நினைக்கிற மாதிரி இல்ல..”
“நீ சப்போர்ட் பண்ணாத...அவங்க ஜெயிக்க எதுவும் செய்வாங்க..”என்றாள் லேகா.
“இல்ல டி உன் அத்தை மாதிரி ஒரு மனுசியை நான் பார்த்ததே இல்ல.அவங்க விளையாட்டா வில்லங்கமா பேசுவாங்க.. ஆனா தப்பு பண்ண மாட்டாங்க என்ன நம்ப மாட்டியா லேகா” என்று கேட்டாள் சுஹானா.
“உன்ன நம்புறேன் ஆனா அவங்கள நம்பவே மாட்டேன்”
“எனக்காக ஒரு விஷயம் செய்வியா” என்று கேட்டாள் சுஹானா.
“உனக்காக எதுன்னாலும் செய்வேன்..ஆனா அவங்கள மட்டும் ஏத்துக்கவே மாட்டேன் டி..”
“சரி இந்த டைரியை படிச்சிட்டு நீ ப்ளைட் ஏறனும்னா ஏறு இல்ல ஊட்டிக்கு வரன்னாலும் வா முடிவு உன் கையில..எனக்காக இத முழுசா படிப்பியா..?”என்று கேட்டாள் சுஹானா.
“எங்கப்பா,அம்மா வாழ்க்கை வரலாறு எனக்கே தெரியும் டைரியை படிச்சுதான் தெரிஞ்சுக்கணும்னு அவசியமில்ல..”
“இது ரேணுகாவேலன் பாகம்-1ஓட டைரியில்ல அதை தொடர்ந்து ரேணுகா அத்தை எழுதின ரேணுகாவேலன் பாகம்-2ஓட டைரி இதை படிப்பியா எனக்காக” என்று அவள் முன் மண்டியிட்டு கண்ணீரோடு கேட்டாள் சுஹானா.
“ஹேய் அண்ணி கொடு..நான் படிக்கிறேன்” என்று டைரியை வாங்கினாள் லேகா.
அப்பொழுது சுஹானாவுக்கு மொபைலில் அழைப்பு வர பேசி விட்டு லேகாவிடம் “நான் வேலையா போரேன் ..நீ படிச்சிட்டு வருவன்ற நம்பிக்கையோட போரேன் வந்துரு டி” என்று சொல்லி போனாள் சுஹானா.
லேகா டைரியின் முதல் பக்கத்தை திறந்தாள்
இனி 25 வருடங்களுக்கு முன்.......