வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ரேணுகா 💝வேலன் (அத்தியாயம்-25)

GG writers

Moderator
ரேணுகா 💝வேலன்
(அத்தியாயம்-25)

லேகா டைரியின் முதல் பக்கத்தை திறந்தாள்

இனி 25 வருடங்களுக்கு முன்

ரேணுகா வேலன் வாழ்வில் முன் நடந்தவை..
ரேணுகாவின் முதல் குழந்தை அவள் வயிற்றில் 9வது மாதம்..குழந்தை பிறந்து விட்டது என்று எண்ணி அவள் அண்ணியை காண ஆசையாய் விடுப்பு எடுத்து வந்தாள் நாத்தனார் சக்தி...

ஆனால் வீடே தோரணமும்,பூ அலங்காரமுமாய் சொந்த பந்தங்கள் கூடி சக்தியை வரவேற்க..

அப்போதுதான் தெரிந்தது சக்திக்கே தெரியாமல் அவளுக்கு திருமண ஏற்பாடு செய்து அவளை வர வைத்தனர் என்று..

சக்தி கோபமாய் அம்மாவிடம் சென்று “யாரை கேட்டு கல்யாண ஏற்பாடு பண்ணுனீங்க.. நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என்றாள்..

“நாத்தனாரே நான் தான் உனக்கு கல்யாண
ஏற்பாடு பண்ணுனேன்” என்றாள் ரேணுகா.

“ஹேய் அறிவிருக்கா டி உனக்கு,என்ன கேட்காம நீயா முடிவு எடுப்பியா எனக்கு கல்யாணத்துல விருப்பமில்ல எனக்கு அது சரியா வராது.”

“ஏன் சரியா வராது..”

“ஏய் நான் ஒரு டாக்டர் சில நேரம் ஹாஸ்பிட்டல்
சில நேரம் சோல்ஜர்ஸ் ஓட கேம்ப்ல இருப்பேன் என் உயிருக்கு உத்ரவாதமில்ல..எல்லா
ஃ பேமிலி கேர்ள்ஸ் மாதிரி என்னால
ஃ பேமிலிய நல்லா பார்த்துக்க
முடியாது மாப்ள வீட்ல இதெல்லாம் சொன்னியா..”

“ஹோ சொல்லியாச்சே அவங்க ஓகே சொன்னதாலதான உன்ன வர வச்சேன்”

“அவங்க ஓகே சொன்னாலும் எனக்குவேண்டாம், நான் கல்யாணம் பண்ணனும்னா உனக்கு முன்னாடியே பண்ணியிருப்பேன்”.

“மாப்ள பிடிக்கலன்னா சொல்லு கல்யாணத்த
நிறுத்துறேன்.”

“எனக்கு மாப்ளைய பிடிக்கல” என்றாள்.

“பார்க்காமலே பிடிக்கலன்னா எப்படி..சக்தி, ஏன் இப்படி பண்ற அது சரி நான் ஒன்னும் உனக்கு அவ்ளோ முக்கியமான உறவு இல்லையே ?”என்றாள் கண்கலங்க ரேணுகா.


ரேணுகா கண் கலங்கியதும் சக்தி மனம் கலங்க அவளிடம் அமைதியாய் “ஹேய் அண்ணி என்னடி பேசுற, நீ என் பெஸ்ட் ஃப்ரண்ட் டி” என்றாள் கனிவாக

“அண்ணா-அண்ணி நல்லா வாழனும்னு நீ நினைக்கலாம், ஆனா என் நாத்தனார் குடும்பமா வாழணும்னு நான் நினைக்க கூடாதா டி ஏன் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்ற?”

“வேணாம் டி நான் இப்ப இருக்குற மாதிரி
கல்யாணத்துக்கப்புறம் இருக்க முடியாது.. எல்லாரும் வேலன் மாதிரி கிடையாது..ஏன் நானும் அகிலா மாதிரி மாறிருவேன்.,நமக்குள்ள இருக்குற நட்பும்,அன்பும் கூட இல்லாம போயிடும் டி.”

“உன் அண்ணன் ஒரு மாப்ள உனக்கு பார்த்தா எவ்வளவு தூரம் யோசிச்சிருப்பார்..நீ மாற மாட்ட சக்தி..நெருப்பு நிறமும் மாறாது,குணமும் மாறாது என் சக்தி நெருப்பு” என்றாள் ரேணுகா.

“ஹேய் அண்ணி நாளைக்கே நமக்குள்ள சண்ட வந்தா என்னடி செய்வ...”

“சண்ட போடுவேன்..ஆனா உன்ன விட்டு
கொடுக்க மாட்டேன்” என்றாள் ரேணுகா.

சக்தி அமைதியாய் தயங்கவே..

“சக்தி நீ கல்யாணம் பண்ணி குடும்ப வாழ்க்கை தொடங்குனா..நம்ம உறவு இன்னும் பலமாயிரும்”என்றாள் ரேணுகா.

“என்னடி சொல்ற..?”

ரேணுகா தன் நிறைமாத வயிற்றை தடவி “ஆமா நாளைக்கு என் பையனுக்கு உன் பொண்ணையும்,உன் பையனுக்கு என் பொண்ணையும் கொடுத்து கடைசி வரைக்கும் நாம பிரியாம இருப்போம் என்ன சொல்ற” என்று கேட்டாள் ரேணுகா.

மனம் மாறி சிரித்தபடி “சரி” என தலையசைத்தாள் சக்தி.

அப்பொழுது வேலன் வந்து “இந்த கவரை
பிரிச்சு பாரு மாப்ளை ஒட போட்டோ,படிப்பு,விவரம்
எல்லா இருக்கு” என்று கவரை சக்தி கையில்
கொடுத்தான்.

“அட நல்லவனே..இவ்வளவு நேரம் எங்க இருந்த..இந்தா பிடி” என்று கவரை திருப்பி கொடுத்தாள்.

“பார்க்கலையா டி..”

“ஏன் டா அண்ணா எல்லாத்தையும் முடிவு
பண்ணிட்டு பார்க்க சொன்னா
எப்படிடா..நாளைக்கு மணமேடைல
பார்த்துக்குறேன்” என்றாள் சக்தி.

திருமண நாளன்று காலையில் ரேணுகா
சக்தியிடம் போய் “ஏய் என்ன இது காய்ஞ்ச பூவ
பத்திரமா வச்சிருக்க” என்று கேட்டாள்.

“அது..அது வந்து..”என்று சக்தி சற்று தயங்கவே.

“சக்தி மறைக்காம சொல்லு” என்று கேட்டாள்
ரேணுகா.

கொஞ்ச நாட்களுக்கு முன்..ஹாஸ்பிட்டலில்
சக்தி நோயாளியை பார்த்து கொண்டிருக்க அவள் எதிரே வந்து நின்றான் ஒருவன் பூவோடு..
“டாக்டரே..என் பாட்டியை குணமாக்குனதுக்கு தேங்க்ஸ்” என்று பூவை நீட்டினான்.

சக்தியும் தற்செயலாய் பூவை வாங்க கையை
நீட்டி பூவை பிடிக்க..

“உங்கள எனக்கு பிடிச்சிருக்கு..கல்யாணம் பண்ணிக்கலாமா” என்று கேட்டான்.

சக்தி பூவை கையில் பிடித்து கொண்டு பதட்டமாய் பதில் எதுவும் சொல்லாமல் அவ்விடம் விட்டு திரும்பி போனாள்..இதை ரேணுகாவிடம் சொல்லி முடித்தாள்.

“ஹேய் உனக்கு அவன பிடிச்சிருக்கு டி
கல்யாணத்த நிறுத்துவோம்..அவன் எங்கன்னு
சொல்லு நான் கூட்டிட்டு வர்றேன்” என்றாள்
ரேணுகா.

“அண்ணி எனக்கு அவன் யாரு,என்ன
பண்றான்,அவன் பெயர் கூட தெரியாது..ஒரே நாள் தான் பார்த்தேன்.”

“என்ன டி இப்படி சொல்ற.. சரி ஃப்ளவர் பாய்
பார்க்க எப்படி இருப்பாரு...”

“கருப்பா அழகா இருப்பான் டி.”

“அப்ப கல்யாணம் கேன்சல் உன் அண்ணன
பார்த்து இப்பவே பேசுறன்.”

வேலன் அங்கு வந்து கண்டிப்பான குரலில்
“என்ன அண்ணியும், நாத்தனாரும்
விளையாடுறீங்களா..சக்தி போய் ரெடியாகு”என்றான்.

ரேணுகாவிடம் கட்டளையாய் “1மணிநேரத்துல
கல்யாணம் அவள ரெடி பண்ணி கூட்டிட்டு வா”
என்று சொல்லி போனான்.

சக்தி மணக்கோலத்தில் தலைகுனிந்தவாறு
மணமேடை முன் அழைத்து வந்தாள் ரேணுகா.

அப்பொழுது மாப்பிள்ளையை மணமேடை முன்
அழைத்து வந்த வேலன் சக்தியிடம் “நிமிர்ந்து பாரு” என்றான்.

சக்தி நிமிர்ந்து பார்த்து ஆச்சர்யப்பட.......

அப்பொழுது மாப்பிள்ளை குறும்பான புன்னகையோடு இரு கைகளை கூப்பி வணக்கம் சொல்லி அவன் கண்களால் ‘என்ன டாக்டரே’ என்று தன் புருவங்களை உயர்த்தி கேட்டான்.


“என்ன சக்தி கல்யாணத்த நிறுத்திரவா..” என்று கேட்டான் வேலன்.

“டேய் நிறுத்திராத டா” என்று வேகமாய் பதில்
சொன்னாள் சக்தி.

“சக்தி அதான் அவரே நிறுத்துறாரே” என்று கேட்டாள் ரேணுகா.

“ஹேய் இல்லடி இவர்தான் அவர்..”என்றாள் சக்தி.

“ஹோ ப்ளவர் பாய் யா” என்று கேட்டாள் ரேணுகா.

“ஆமா டி..”என்று சந்தோசமாய் சொல்ல..

மணமக்களை அண்ணனும், அண்ணியும் மணமேடை அழைத்து சென்று அமர வைத்தனர்.

மணமேடையில் மகிழ்ச்சியாய் சக்தியின்
திருமணம் நடந்தது.

அதன்பின் சக்தி மணமகனிடம்
“என்ன கேட்காமலே கல்யாணம்
பண்ணிட்டீங்க.. நான் உங்கள பிடிச்சிருக்குன்னு சொல்லவே இல்லையே” என்றாள்.

“டாக்டரே உங்களுக்கு என்ன பிடிக்கும்.”

“நான் உங்க பக்கம் என் பார்வையை கூட
வீசலையே..”

“நான் கொடுத்த பூவையும் நீங்க வீசலையே” என்று குறும்புன்னகையாய் சொல்லி விட்டு
"அந்த நம்பிக்கையில தான் உங்க வீட்ல வந்து பொண்ணு கேட்டேன்.”

“சரி உங்க பெயர் என்ன..?”

“சூப்பர் கல்யாணம் பெயரே தெரியாம..”

“என் அண்ணன் வேலன் மேல உள்ள
நம்பிக்கையில நான் உங்கள பத்தி எதுவும் கேட்கல.”

“என் பெயர் விஜயகுமார், ஆர்மில சோல்ஜர் உங்கள ஆர்மி-கேம்ப்ல தான் பார்த்தேன்..”என்றான்.

“உங்க அம்மா,அப்பா எங்க..” என்று கேட்டாள் சக்தி.

“வாங்க” என்று சக்தியை கைபிடித்து மணமகன் அறையை காட்டி அழைத்து போனான்.

“உள்ள இருக்காங்களா” என்று கேட்டு சக்தி மட்டும் மணமகன் அறையின் உள்ளே சென்று ஒருவரும் இல்லாததால்.. “எங்க
இருக்காங்க” என்று வாசலில் நின்ற விஜயிடம்
கேட்டாள்.

“உங்க எதிர்லதான் இருக்காங்க” என்றான்.

“என் எதிர்ல கண்ணாடி தான இருக்கு..”

“அதுல தெரியறவங்கதான் என் அப்பா,அம்மா”என்றான்.

சக்திக்குள் சங்கடமாகி..அவனிடம்
சென்று.. “உன் வீட்ல இருந்து யாரும் வரலையா..?”

“ஹோ வந்திருக்காங்களே..”

“எங்க இருக்காங்க..?”

“அதோ” என்று வேலன் மற்றும் வேலன்
குடும்பத்தினரை கைகாட்டி “அவங்கதான் என்
வீட்டாளுங்க” என்றான் விஜய்.

சக்திக்குள் சொல்ல முடியாத சங்கடம் பிறக்கவே...மனதினுள் ‘உனக்குன்னு யாருமே இல்லையா’என்று கலங்கிய விழிகளோடு அவனை பார்த்தாள்.

“டாக்டரே அதான் எல்லாரையும்
பார்த்துட்டீங்கள்ல அப்புறம் என்ன ஃ பீலிங்” என்று விளையாட்டாய் சொன்னான்.

“ஒன்னுமில்லங்க..”என்றாள் கலக்கத்தோடு சக்தி.

“டாக்டரே ஒன்னு சொல்லணுமே”

அவன் ஏதோ முக்கியமாய் சொல்ல போகிறான் என்று அதிக கலக்கமாய் கண்ணீர் கண்களில் முட்ட “சொல்லுங்க” என்றாள் சக்தி.

அவள் கைகளை பிடித்தபடி “அது கதவை லாக் பண்ணிட்டு உங்கள லாக் பண்ணலாமா” என்று அவன் கேட்டதும் “ஹேய்..ச்சீ..”என்று அவனை குறும்பாய் அடித்து கண்ணீரை துடைத்து சிரித்தாள்.

அப்பொழுது அவள் தங்கை பூமா மணமகன் அறைக்கு வந்து “அக்கா உங்க 2 பேரையும் சாப்பிட கூப்பிட்டாங்க” என்றாள்.

“அதேதான் மச்சினிச்சி நானும் கேட்டேன் உன் அக்காகிட்ட... பதிலே சொல்ல மாட்டேன்றாங்க”என்றான் விஜய்.

“அப்படி எல்லாம் இல்ல மாமா சும்மா என் அக்காவ சொல்லாதீங்க”

“நம்பமாட்டியா டாக்டரே சொல்லுங்க எப்ப எனக்கு சாப்பாடு போடுவிங்க”என்று கேட்டான்.

சக்தி குறும்பான புன்னகையோடு அமைதியாய் நிற்கவே..

“என்ன அக்கா மாமா சாப்பாடுதானே கேட்குறாரு, இப்பவே போடறேன் சொல்லு அக்கா”என்றாள் பூமா.

சக்தி தங்கை முன் பேச முடியாமல் இன்ப அவஸ்தையாய் திக்கி திணறி “ சாப்பாடு போடுறேன்” என்றாள் சக்தி.

“மச்சினிச்சி உன்ன அத்தை கூப்பிடறாங்க பாரு நீ போ மா நான் அக்காவ கூட்டிட்டு வர்றேன்”என்றான்.

பூமா சென்றதும் சக்தி வேகமாய் அவன் கைகளில் செல்லமாய் அடித்து “ஹேய் என்ன விளையாட்டு இது”

விஜய் அவள் நாடியை பிடித்து “பின்ன என்ன டாக்டரே இப்படி சந்தோசமா இருக்க வேண்டிய நேரத்துல சோகமா ஃ பீல் பண்ணுறிங்க உங்க மூட் மாத்த தான் இப்படி விளையாடினேன்”என்று கொஞ்சி பேசிவிட்டு “வாங்க போலாம்”என்று அவள் கைபிடித்து திரும்பினான் விஜய்.

“அப்ப உங்களுக்கு இப்ப சாப்பாடு வேண்டாம்ல”என்று சக்தி சொன்னதும் சட்டென திரும்பி

“என்ன சொன்னிங்க”

“நான் ஒன்னும் சொல்லலையே”

“இல்ல எதோ சொன்னனீங்க காதுல கேட்டுச்சு “

அந்நேரம் ரேணுகாவும், வேலனும் அவர்களை அழைக்க மணமகன் அறைக்கு வந்தனர்.

விஜய் பாவமாய் முகத்தை வைத்து கொண்டு அவர்கள் உடன் சேர்ந்து செல்ல...

ரேணுகா சக்தியின் காதுகளில் மெல்ல “ஹேய் பாவம் டி ஃ ப்ளவர் பாய் சாப்பாடு எப்ப போடுவன்னு சொல்லிடு”என்றாள்.

“ஹேய் அண்ணி என்னடி ”என்றாள் இன்ப அதிர்ச்சியாய்..

“நீங்க 2 பேரும் மணமகன் ரூம்க்கு போனதுல இருந்து நானும் உன் அண்ணனும் உங்களை தான் வாட்ச் பண்ணிட்டு இருந்தோம். நம்மள சுத்தி சொந்த பந்தம் எல்லா இருக்குள்ள மறந்துட்டியா” என்று கேட்டாள் ரேணுகா.

“சாரி டி”என்றாள் சக்தி.

“சும்மா சொல்ல கூடாது ஃப்ளவர் பாய் உன்ன நல்லாவே கரெக்ட் பண்றார் உனக்கு ஏத்த பீஸ் தான் அவரும்”என்று சொல்லி அவளை விட்டு விலகி போனார்கள் ரேணுகாவும் வேலனும் சிரித்த படி...

விஜயும், சக்தியும் ரேணுகா வேலனை பார்த்து அசடு வழிய சிரித்து விட்டு சாப்பிட கடந்து போனார்கள்.

லேகா இதை படித்தபடி டைரியின் அடுத்த
பக்கம் திருப்பவே அதில் சக்தி,விஜயகுமாரின்
திருமண புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியானாள்.

ஏனென்றால் தற்போதைய சித்ரலேகா,வேலன்
போலவே ஒத்த உருவம் உடைய ஜோடி சக்தி-விஜயகுமார்.. மீண்டும் அடுத்த பக்கத்தை திறந்தாள்.

அதில் திருமணமான மறுநாள்
காலை 4.30மணி அளவில் சக்தி சமையலறையில் நின்று ஸ்வீட் செய்ய..தற்செயலாய் எழுந்து வந்தாள்
ரேணுகா...

“புதுப்பொண்ணே இங்க என்ன பண்றீங்க..”

“இல்லடி விஜிக்காக ஸ்வீட்” என்றாள்.

“ஹேய் அத நாங்க செய்ஞ்சு தர மாட்டோமா..”

“இல்ல அண்ணி விடிஞ்சா அம்மா,தங்கச்சி முன்னாடி எப்படி விஜிக்கு கொடுக்க முடியும்.”

“அடடா..என் நாத்தனார் வெட்கப்படுறாளே”

“ஹேய் கத்தாத டி யாராவது வர போறாங்க”
என்றாள் சக்தி.

“சரி என்ன ஸ்வீட் செய்யற” என்று கேட்டாள்
ரேணுகா.

“கேரட் அல்வா டி..”

“சூப்பர் ஃ ப்ளவர் பாய் உன்ன சாய்ச்சிட்டாரு..”

“ஃ ப்ளவர் பாய் இல்ல அண்ணன்னு சொல்லணும்.”

“என்னன்னு சொல்லணும்..?”

“அண்ணன்னு சொல்லணும்..”என்று
கொஞ்சலாய் சொன்னாள் சக்தி.

“சரி சரி... சும்மா சொல்ல கூடாது சக்தி
சிங்கிள் ஃ பீட் சேலையில சூப்பரா இருக்க..”

“சேலை நல்லா இருக்கா டி அண்ணி.அந்த
நேரம் வேலன் வந்து..யார் இது புதுசா இருக்காங்க..?”

“ஏன் டா உன் பொண்டாட்டி வந்தா
பின்னாடியே வந்துருவியா..?”

“ஆமா பிள்ளைதாச்சிலடி அவ..”

“சரி உங்களுக்கும் சேர்த்துதான்
செய்ஞ்சிருக்கேன் 2 பேரும் சாப்பிடுங்க” என்று தட்டோடு கிளம்பினாள் சக்தி.

“ஏய் ரேணுகாவுக்கு எப்பவும் ஊட்டிதான
விடுவ” என்றான் வேலன்.

“விடுங்க அது என் சக்தி.. இவங்க
சக்திவிஜயகுமார்ல” என்றாள் ரேணுகா.

போனவள் திரும்பி வந்து ரேணுகாவுக்கு
ஊட்டி விட.. இதையெல்லாம் மாடியிலிருந்து
விஜயகுமார் பார்த்து கொண்டிருந்தான்.

“ஹேய் சக்தி எனக்கு டி..”என்றான் வேலன்.

“டேய் அண்ணா சண்டை மூட்டி விட பார்த்தல்ல உனக்கு தர மாட்டேன் டா”என்று கிளம்பினாள் சக்தி.

“ஹேய் போடி உன் அண்ணி எனக்கு தருவா.. என்ன ரேணுகா” என்று கேட்டான்.

“கண்டிப்பா”என்று வேலனுக்கு அன்பாய் ஊட்டினாள் ரேணுகா.

“வாங்கிக்க வாங்கிக்க அவ கொடுத்தாதான் உண்டு உனக்கு” என்று சொல்லி போனாள் சக்தி.

“என் கேர்ள் ஃப்ரண்ட் டி அவ...”என்றான் வேலன்.

“என்னங்க அமைதியா இருங்க, பூமா யாரவது வந்தா அப்புறம் நான் ஊட்டிவிட மாட்டேன் பார்த்துக்கோங்க”என்றாள் ரேணுகா.

“சரி சரி மேடம்”

“ஹும் குட் பாய்”என்றாள் ரேணுகா

அதன்பின் சக்தி அவள் அறைக்குள் சென்றதும்
“டாக்டரே உங்களுக்கே ஓவரா தெரியல காலையில 5 -மணிக்கு அல்வா வா” என்று கேட்டான் விஜய்..

“அப்படியில்லங்க விடிஞ்சதும் அம்மா,தங்கச்சி எல்லாம் இருக்கும் போது நான் எப்படி உங்களுக்கு ஊட்டி விட முடியும்” என்றாள்.

“சாரி டாக்டரே கொடுங்க..”என்று அவன்
சொல்ல அவள் ஊட்ட அந்நேரம் அவள் அம்மா
சித்ரா எழுந்து “என்ன சக்தி ரூம்ல லைட்
எரியுது..என்ன பிரச்சனை பண்ணான்னு தெரியலையே..”என்று அவள் அம்மா போக

“அத்தை போகாதீங்க” என்றாள் ரேணுகா.

“இல்ல ரேணுகா இந்த டைம்ல லைட் எரியுது
உன் நாத்தனார் மறுபடியும் சண்ட போடறாளோ
என்னவோ..”என்று சக்தி அறைக்கு வெளியே போய் நின்றாள்.

சக்தி ஊட்டி முடிக்க விஜய் முகம் மாறி
கண்ணீர் முட்டின.

“என்னாச்சு...”

“இல்ல சாப்பாடுனாலே நினைவு தெரிஞ்ச
நாள்ல இருந்து லைன் ல நின்னு வாங்கி சாப்பிடறதுதான் இப்பதான் முதல் தடவை உங்க கையால சாப்பிடுறேன்” என்று கண்ணீர் விட்டான்.

“உங்கம்மா ஊட்டுனதான் நினைச்சுக்கோங்க”
என்று தன் புடவை முந்தானையால் அவன்
கண்களை துடைத்தாள்.

இதை பார்த்த சக்தியின் அம்மா சிரித்தபடி தன்
அறைக்கு சென்றாள்.

அதன் பின் சிறிது நேரம் கழித்து ரேணுகா
சமையலறையில் நிற்க சக்தி மீண்டும் வந்து பேசி கொண்டிருக்க அகிலா சக்தியிடம் வந்து சந்தேகமாய்
“வாழ்க்கையை தொடங்குனியா டி” என்று கேட்க..

சக்தி வெட்கம் நிறைந்த புன்னகையாய் தொடங்கி விட்டேன் என்று தலையசைத்தாள்.

“டவுட்டா இருக்கே இவ்ளோ ஃ ப்ரெஷ் ஆக எப்படி இருக்கிறா...” என்றாள் அகிலா.

“ ஹும் 4மணி நேரத்துல 3 தடவை குளிச்சா
ஃ ப்ரெஷ் ஆக இல்லாம எப்படி” என்று வாய்க்குள் முனுமுனுத்தாள் ரேணுகா.

“ஹேய் அண்ணி சும்மா இரு டி” என்று செல்லமாய் அடித்தாள் சக்தி.

பின் அம்மா சக்தியை அழைத்து மறுவீடு
சம்பிரதாயங்கள் செய்து கொண்டிருக்கும் போதே போன் வந்தது,அதில் சக்தி காஷ்மீர்க்கு வரும்படி அவசரம் என்று அழைத்தனர்.விஜயகுமார் கோபமாய்
எழுந்து மாடிக்கு அவன் அறைக்கு சென்றான்.
சக்தியும் வேகமாய் பின் செல்லவே..

வெளியில் இருந்து வந்த வேலனிடம் நடந்தவை ரேணுகா சொல்ல
“இதுல கோபப்பட என்ன இருக்கு..தெரிஞ்சுதான
கல்யாணம் பண்ணான்” என்று கோபமாய் வேலன் சக்தி அறை நோக்கி நடந்தான்.

“என்னங்க அவசரப்படாதீங்க” என்று தடுத்தபடி
அவன் பின்னே ஏற முடியாமல் ஏறி போனாள் ரேணுகா.

சக்தி அவள் அறையில்.. “கோபமா
இருக்கீங்களா..?”என்று விஜயிடம் கேட்டாள்.

“ஆமாம்” என்றான் கடுப்பாய் விஜய்.

“இல்ல நம்ம மேரேஜ்க்குன்னு லீவு
கேட்கல..அண்ணி குழந்தைய பார்க்கணும்னு தான் லீவு போட்டேன் அதான்..”என்று அவள் தயக்கமாய் சொல்ல..

“வேலையை விட்ரு சக்தி” என்றான் விஜய்.

“எதுக்கு வேலையை விடணும்” என்று கோபமாய் உள்ளே வந்து கேட்டான் வேலன்.

“டேய் அண்ணா நீ ஏன் வந்த...”

“சக்தி நீ வேலையை விடக்கூடாது..”என்றான்
வேலன்.

விஜய் கோபமாய் முறைக்கவே..

சக்தி கண்கலங்க “விட்டுறேன்ங்க..”என்றாள்.

“நீ எவ்ளோ கஷ்ட்டப்பட்டு இந்த பொசிஷனுக்கு வந்த நீ வேலையை விட கூடாது” என்று சக்தியிடம்
சொல்லி விஜயை பார்க்க திரும்பி..
“அவ வேலையை விடமாட்டா டா..தெரிஞ்சுதான
கல்யாணம் பண்ண...நீயும் ஆர்மின்னு தான அவள உனக்கு கட்டி வச்சேன்” என்றான் வேலன்.

“நீ வெளிய போ முதல்ல..”என்றான் விஜய்.

“ஹேய் இது என் வீடு டா போணும்னா நீதான்
போகணும்” என்றான் வேலன்.

“நீ வெளிய போ வேலா” என்று கத்தினாள் சக்தி.

வேலன் கண்கலங்க பார்த்தான்
சக்தியை..ரேணுகா வேலனை கைப்பிடித்து இழுத்து சென்று அறைக்கு வெளியே நிறுத்தி
“என்னங்க இது..?”

“சக்தி சொன்னதை கேட்டியா ரேணுகா” என்றான் கண்ணீருடன்..

“சக்திக்கு கல்யாணம் ஆயிருச்சு நாமதான் அவள விட்டு விலகி நிற்கணும்” என்று அவள் கண்களில் கண்ணீர் வர வேலனின் கண்ணீரை துடைத்தாள் ரேணுகா.

“அவள கண்கலங்க வைக்கிறான் நான் கேட்க
கூடாதா..”

“சரி கொஞ்சம் பொறுமையாயிருங்க..என்னதான்
சொல்றாரு பார்ப்போம்” என்றாள் ரேணுகா.

“சக்தி உன் அண்ணன் அண்ணி மேல நீ
காட்டுற அன்பும்,அவங்க உன் மேல காட்டுற
பாசமும் எனக்கு பிடிக்கல அவங்களையும் விட்டுரு” என்றான் விஜய்.

“அன்பை வெளிப்படுத்தாம வேணா இருக்கேன் ஆனா எப்பவும் பாசம் மனசுல இருக்கதான் செய்யும்.. அவங்களையும் விட்டுறேன்” என்றாள்.

“இந்த சக்தியை எனக்கு சுத்தமா பிடிக்கல”
என்றான் விஜய்.

விஜய் சொன்னதும் கண்ணீரோடு வெளியே
போக திரும்பிய சக்தியை பின்னிருந்து இறுக்கமாய் பற்றி கொண்டு “எங்க போற..?” என்றான் விஜய்.

“என்னதான் உங்களுக்கு பிடிக்கலையே” என்று
கண்ணீர் வடிய சொன்னாள் சக்தி.

“ஆமா ஃ போன் வந்துச்சு,டேய் விஜய் காஷ்மீர்க்கு கிளம்புன்னு சொன்னா அதுதான் சக்தி..அந்த சக்திதான் எனக்கு பிடிக்கும்”.

சட்டென அவன் பக்கம் திரும்பினாள் சக்தி.

“என் அண்ணன், அண்ணிடா எதுக்கு
விடணும்.நான் அப்படிதான் பாசமா இருப்பேன்னு கேட்டிருந்தா அது சக்தி நான் நேசிச்ச டாக்டர் சக்தி,
சொல்லு சக்தி உனக்கு பிடிச்சது எல்லாம்
விடணும்னு நான் சொன்னா நீ ஏன்
கேட்குற..புருஷன் தான் ஹெட்டா..நம்மவீட்ல
எப்பவும் நீதான் ஹெட் சரியா..” என்று விஜய்
சொன்னதும்..

சக்தி கண்ணீரோடு கட்டி கொண்டு .. “நீ சின்ன
கஷ்டம் கூட படக் கூடாது விஜி..”என்றாள்

“அதுக்குன்னு மொத்த கஷ்டத்தையும் நீ
அனுபவிப்பியா சக்தி..உன் வீட்ல வேலன் உன்ன எவ்ளோ சந்தோசமா பார்த்துக்கிட்டாரோ அதே
மாதிரி நானும் உன்ன பார்த்துப்பேன்,நீ எப்பவும் ஜாலியா,தைரியமா,கேரக்டர் மாறாம இருக்கணும் சரியா” என்றான்.

“சரி” என்று மீண்டும் கட்டி கொண்டாள் சக்தி.

“டாக்டரே ட்ரெயினுக்கு கிளம்ப டைம் இருக்கா..”
என்று கேட்டான் விஜய்.

“எதுக்கு..?”

“டைம் இருந்தா டாக்டர்க்கிட்ட ஒரு
இன்ஜெக்சன், போட்டுக்கலாமேன்னுதான்..”

“நீ கொடுத்த ஷாக் - ட்ரீட்மென்ட்டுக்கு உனக்கு
நோ இன்ஜெக்சன் போய் துணியை எடுத்து வை கிளம்பணும்” என்று அவனை தள்ளிவிட்டு சிரித்தபடி வெளியே வர..

“ஹேய் நில்லு டி” என்று பின்னால் விஜய்யும் வர..

அறை வெளியே இருந்த வேலனிடம் விஜய் “சாரி மச்சான்”

“இல்ல நான் தான் சாரி கேட்கணும் மாப்ள..
உங்கள தப்பா பேசிட்டேன்.”

“ஹேய் மச்சான் நீ என்ன வாடா போடான்னு
பேசுனா என் அண்ணன் பேசுற மாதிரி இருக்கு நீ அப்படியே பேசு யா” என்றான் விஜய்.

“சரிடா மாப்ள” என்றதும் சக்தி பேச முயல
“மாப்ள உன் பொண்டாட்டி கூட பேச
எதுவுமில்ல..”என்று கோபமாய் சொல்லி போனான் வேலன்.

ரேணுகா சக்தியிடம் பேசாமல் அமைதியாய் போக

“ஏய் அண்ணி பேச மாட்டியா டி..”என்றாள் சக்தி.

“அதான் உன் புருஷனுக்காக என் புருஷன
வெளிய போக சொன்னியே..”

“அப்படியில்ல டி வேலனுக்கு
எல்லாரும் இருக்கோம்
ஆனா விஜிக்கு ..
விஜிக்கு எல்லாமுமா நான் இருக்கணும்னு நினைச்சேன் தப்பாடி” என்று அழுதாள் சக்தி.

“ஹேய் அழாதடி..நீ இப்படி ஃ பேமிலி லைஃ ப்
வாழனும்னுதான் நான் ஆசப்பட்டேன்..சாரி டி”
என்றாள் ரேணுகா.

சிறிது நேரத்திற்கு பின் இரயில் நிலையத்தில்
சக்தி-விஜயகுமாருடன் இரயிலுக்காக
காத்திருந்தான் வேலன்.

வேலன் சக்தியை பார்க்காதபடி நிற்க..அவளும்
கண்கலங்க அண்ணனை பார்க்க..

விஜய் சென்று
“யோவ் மச்சான் நான் தான் விளையாட்டா
பேசுனேன் அவமேல தப்பு இல்லை பேசு டா” என்று கெஞ்ச,

சக்தி கண்களில் கண்ணீர் வடிவதை கண்டதும் சட்டென வேலன் கால்களில் விழுந்தான் விஜய்குமார்.

“டேய் மாப்ள என்னடா பண்ற” என்று அவனை
எழுப்பி கட்டி கொண்டான் வேலன்.

“இல்லடா மச்சான் அவ கண்ல கண்ணீரே வரக்கூடாது” என்றான் விஜய்.

“மாப்ள என்ன மனுசன் டா நீ...”என்று சொல்லி
தன் தங்கை சக்தியிடம் போய்.. “ஏய் என் மாப்ள கண் கலங்குச்சு நீ அவ்ளோதான், நீ எங்க இருந்தாலும்
தேடி வந்து அடிப்பேன் டி..”என்றதும் கண்ணீர் மாறி சிரித்தாள் சக்தி.

வேலன் பின் அமைதியாக சக்தியின் தலையை வருடி
“உன் மனம் போல உனக்கு வாழ்க்கை
அமைஞ்சிருக்கு சக்தி..ரொம்ப சந்தோசமா இருக்கு”
என்று அவன் சொல்லும் போதே டிரெயின்
வந்தது,மணமக்கள் இருவரையும் மகிழ்ச்சியாய் வழியனுப்பி வைத்து வேலன் வீட்டுக்கு போக
ரேணுகாவிற்கு பிரசவ வலி வந்து..மகன்
பிறந்தான்.

ரேணுகா தன் மகனை கையில் எடுத்து
“சக்தி” என்று பெயரிட்டாள்.குடும்பத்தினர்
அனைவரும் ஆச்சர்யமாய் பார்த்தனர்.

அப்பொழுது குடும்பத்தினரிடம் “என் நாத்தனார் சக்தி இல்லன்னா இந்த ரேணுகா வேலன் லைஃப் இல்ல..என் மகன் சக்திய மாதிரிதான் இருக்கணும்”
என்றாள் ரேணுகா.





















































































 
Top