GG writers
Moderator
ரேணுகா
வேலன்
(அத்தியாயம்-27)
நாட்கள் உருண்டோடின..ரேணுகா நிறைமாத கர்ப்பிணி ஆனாள்.அந்த நேரத்தில் சக்தியின் அம்மா உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானாள்.
மருந்து,மாத்திரைகளினாலும் சுகமாகவில்லை. அப்பொழுது அம்மாவை காண விஜயை தவிர அனனத்து மகள்களும்,மருமகன்களும்,உறவுகளும் வந்தனர்.
அப்பொழுது வேலனின் அம்மா
வேலனின் கையை இறுக்கமாய் பிடித்து கொண்டு “நான் உன்ன விட்டு எங்கேயும் போ மாட்டேன்,நீ அழாத, அம்மா உன் கூடவே தான் இருப்பேன்”என்றாள்.
தூரத்தில் நின்ற சக்தியை காண்பித்து “அவ உனக்கு அண்ணன் மாதிரி துணையா இருப்பா..”என்றார் அம்மா.
வேலன் கண்ணீரோடு அம்மாவை விடாமல் பிடித்திருந்தான்.
சக்தி அனைவரையும் விட்டு விலகி தனியே நின்றாள். ரேணுகா சக்தியிடம் போய் “ஏய் ஏதோ மறைக்குற என்னாச்சு டி..”என்று கேட்டாள்.
“ஏன் டாக்டர் ஆனன்னு தோணுது டி..ரொம்ப வலிக்குது அண்ணி”
“ஏன் டி...”
“அம்மா உயிர் பிரிஞ்சிக்கிட்டிருக்கு டி” என்று அமைதியாய் சொல்லி கதறினாள் சக்தி.
“அப்ப வா உடனே ஹாஸ்பிட்டல் போலாம்” என்றாள் ரேணுகா.
“காப்பாத்த முடியாது ரேணுகா..போற வழியிலே அம்மா போயிடுவாங்க” என்று ரேணுகாவின் கைகளில் முட்டி கொண்டு அழுதாள்.. “டாக்டரா இருந்தும் என்னால என் அம்மாவ காப்பாத்த முடியலையே டி..”என்று கதறினாள் சக்தி.
அப்பொழுது கீழிருந்து அகிலா கத்தி கதறினாள்.
“அம்மா ரூம் இங்க இருக்கு அகிலா ஏன் கீழ இருந்து கத்துறா” என்று பதட்டமாய் ஓடி வந்த சக்திக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி...
விஜயகுமார் இறந்த உடல் மீது தேசிய கொடி போர்த்தி சக்தி வீட்டின் ஹாலுக்கு கொண்டு வரப்பட்டது.
சக்தி அதிர்ச்சியாய் கண்ணீரோடு மெல்ல மாடிப்படியிறங்கி விஜயை நெருங்கும் முன்
வேலன் மாடியிலிருந்து..
“சக்தி அம்மா நம்மள விட்டு போயிட்டாங்க டி” என்று கதறி அழுதான்.
இருவரின் உடல்களும் நடுஹாலில் இவர்கள் நடுவில் சக்தி.
“ஏன் 2 பேரும் என்ன விட்டுட்டு போனீங்க..”என்று அம்மா,விஜியையும் இருகைகளால் கட்டி கொண்டு அழுதாள்.
“நானும் வர்றேன் சொன்னலடா..தனியா கஷ்டப்படுவன்னு சொல்லிட்டு மொத்தமா என்ன தனியா விட்டுட்டீயே டா” என்று விஜியின் உடலை கட்டி கொண்டு அழுதாள்.
“நீ இல்லாம நான் என்னடா பண்ணுவேன்..”என்று கதறி அழுதாள்..தன் அம்மா உடல் பக்கம் திரும்பி..”ஏன்மா போன..எனக்குன்னு இருந்த 2பேரும் போயிட்டீங்களே.., இனி கஷ்டம்னா நான் யார் மடியில படுப்பேன்,யார் தோள்ல சாய்வேன்” என்று உயிரை உறைய வைக்கும் கதறல் சக்தியின் கதறல்.
அன்பிற்குரிய அம்மாவின் அரவணைப்பையும்,விவரிக்க முடியா விஜயின் பாசத்தையும் ஒரே நாளில் இழந்து மொத்தமாய் உடைந்து நொறுங்கி போனாள் சக்தி.
சக்தி தன் நிலையில் இல்லாதபடி நிலைகுலைந்து போனாள். அவளுக்கு விதவை கோலம் கொடுத்தனர்...இருவரின் உடல்களும் தகனம் செய்யப்பட்டன.
அன்று இரவில் சக்தி அம்மாவோடு மட்டும் உள்ள திருமண புகைப்படத்தை பார்த்து
“ஏன்மா போன..எனக்கு யாருமா இருக்கா,நான்
யாரை அம்மான்னு கூப்பிடுவேன்” என்று அவள் பேசும் நேரத்தில் ரேணுகாவுக்கு பிரசவ வலி வந்து வேலன் அவளை அழைத்து போனான்.
சக்தி கண் எதிரே ரேணுகா போனாலும்...மனதளவில் சக்தி உடைந்த நிலையிலே இருந்ததால்..அவள் ரேணுகா பற்றி யோசிக்கவே இல்லை.
சக்தி புகைப்படத்தை பார்த்து “நானும் வர்றேன்டா விஜி..உன் கூடவே வந்துர்றேன்டா..என்னால இருக்க முடியல..,என்னால உன்ன விட்டு இருக்க முடியாது விஜி நானும் இப்பவே உன்கிட்ட வந்துர்றேன்” என்று திரும்பியவள்..கண்களில் விஜய்குமாரின் யூனிபார்ம் படவே..வேகமாய் ஓடி யூனிபார்ம் பாக்கெட்டை திறந்து பார்த்தாள்.
அதில் ரத்த கறையுடன் அவன் வழக்கமாய் எழுதுவது போல் ஒரு கடிதம் இருந்தது.அதை பிரித்தாள் சக்தி அதில்..
“டாக்டரே எனக்காக நீ எதுவும் செய்வன்னு தெரியும்..என் கடைசி ஆசை எனக்காக செய்வியா...?
என் உயிர் போயிட்டே இருக்கு..நான் போனாலும் நீ வாழணும் அதுதான் என் ஆசை..நீ என்ன தேடி வந்துட்டா வேலன் என்ன மாதிரி யாருமில்லாம
தான் வளரணும்.நான் வளர்ந்த மாதிரி வேலன் வளர கூடாது...டாக்டரே.. சாரி டி..உன்ன விட்டு என் உடம்புதான் பிரிய போகுது,என் உயிர் உன்ன சுத்தியேதான் இருக்கும்..லவ் யூ டி
டாக்டரே..டாக்டரே..
மனச விட்ராத..மாமா உன் கூடதான் இருக்கேன்.. உடைஞ்சிராத உன்ன விட்டு நான் போகல.. நீ
என்ன பார்ப்ப வேலன் ரூபத்துல..
மருமகள தான்
பார்க்க முடியல டாக்டரே..செயின் போட்ரு..”
என்று இரத்தக்கறையோடு முடிந்தது கடிதம்.
சக்திக்கு தன் நினைவு வந்தது போல் கடிதத்தை பத்ரமாய் வைத்துவிட்டு மகனை கையில் தூக்கியப்படி ரேணுகாவை காண கீழே போனாள்..
அப்பொழுது கண்ணன் சக்தியிடம்
“வெளிய 144 தடை போட்டுருக்காங்க ரேணுகாவ பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போக முடியல..கிளினிக்ல பிரசவம் பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க”என்றான்.
“இருடா.. பூமா வேலன பார்த்துக்கோ” என்று மகனை கொடுத்து விட்டு கண்ணனோடு ரேணுகா வேலனை தேடி போனாள் சக்தி.
கிளினிக்கில் ரேணுகா வலியில் அலற..வேலன் வெளியே நின்று சக்திய பார்த்ததும் அவள் கைபிடித்து கதற..
“என்னாச்சுடா அண்ணா..”
“குழந்தை கொடி சுத்தி இருக்கு 2 பேர் உயிரும் ஆபத்துல இருக்கு” என்று அழுதான்.
“அழாதடா..டாக்டரிடம் ஐ அம் டாக்டர்
சக்தி-விஜய்குமார் ரிப்போர்ட்ஸ் பார்க்கலாமா” என்று கேட்டு பார்த்து விட்டு..
“வேலா பயப்படாத நான் 2 பேரையும் காப்பாத்துரேன்” என்று சொல்லி போனாள்.
சக்தி கண்களை மூடி ‘இறைவா 2 உயிரை நாங்க பறி கொடுத்துட்டோம் போதும்....இந்த 2 உயிரை காப்பாத்த நீங்க தான் எனக்கு பலத்தை தரணும் 2பேரும் எனக்கு வேணும்..இந்த 2 உயிரை காப்பாத்தி கொடுங்க” என்று கண்ணீரோடு வேண்டிக்கொண்டு..பிரசவ வார்டில் நுழைந்தாள்.
தன் கைமூட்டு எலும்புகளால் ரேணுகாவின்
வயிற்றில் கொடி சுற்றிய குழந்தையை திருப்பி திருப்பி சுழட்டி விட்டு பிரசவம் பார்த்தாள் சக்தி.
சக்தியை பார்த்ததும் வலியை தாண்டி ரேணுகாவிற்கு தைரியம் வந்தது.
“அண்ணி இன்னும் கொஞ்ச நேரம்தான் குழந்தை பிறக்க போகுது” என்று தைரியமாய் சொன்னாள் சக்தி.
ரேணுகாவிற்கு சுகப்பிரசவமானது...இரத்தம் படிய குழந்தையை கையில் எடுத்தாள்..சக்தி.
குழந்தையின் அழுகுரல் கேட்டு வேலன் அறையினுள் ஓடி வந்தான். “சக்தி என்ன குழந்தை ..டி”
“வேலன் பொண்டாட்டி வந்துட்டா டா...”என்றாள் சக்தி கண்ணீரும் சிரிப்புமாய்.
சக்தி கையிலிருந்து குழந்தையை வாங்கி.. “அம்மா என் அம்மா,நம்ம அம்மா டி சக்தி” என்று கண்ணீரோடு உற்சாகமாய் கத்தினான்.
“ஆமாடா நம்ம அம்மா தான்..நம்ம வீட்டு
மகராணிடா என் மருமக” என்றாள் சக்தி.
“ரேணுகா எல்லா நல்லாயிருச்சுடி” என்று அண்ணியின் உச்சியில் முத்தமிட்டாள் சக்தி.
சிறிது நேரத்திற்க்கு பின் “மருமகளே சித்ரலேகா உன் மாமா உனக்காக வாங்குனது” என்று சி.எல்.வி செயினை குழந்தைக்கு போட்டு விட்டாள் சக்தி..
டைரியில் இவைகளை படித்த போது உடைந்து கண்ணீர் விட்டாள் சித்ரலேகா.தன் கழுத்தின் சி.எல்.வி.செயினை தடவி ‘மாமா..அத்தை’ என்று கண்ணீர் ததும்ப அடுத்த பக்கத்தை திருப்பினாள்.
அடுத்த சில மாதங்களுக்கு பிறகு சக்திக்கு மறுமணம் செய்ய அகிலாவும்,அகிலாவின் கணவரும் அவளுக்கே தெரியாமல் ஏற்பாடு செய்து அவளை அழைத்து போயினர்.
“சக்தி அம்மா இல்ல அந்த ஸ்தானத்துல இருந்து தான் அக்கா உனக்கு கல்யாண ஏற்பாடு பண்ணியிருக்கேன் வா கல்யாணம் பண்ணிக்கோ..”
“ஏய் அறிவில்ல உனக்கு நான் சக்தி விஜய்குமார் டி.”
“சக்தி உனக்கோ இளம் வயசு விஜய் போய் சேர்ந்துட்டான், வேலன ஆசிரமத்துல விட்ருவோம் நீ கல்யாணம் பண்ணி உன் வாழ்க்கைய பாரு..”என்றார் அகிலாவின் கணவர்.
“மாமா விஜி என் கூடதான் இருக்கான்..என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது..சரி ரேணுகா,வேலன் எங்க” என்று கேட்டாள்.
மணவறை அருகே பொம்மை போல்,பதில் பேசமுடியாமல் ரேணுகாவும்,வேலனும் நின்றதை கை காட்டினார் அகிலாவின் கணவர்.
“ஏன் டி அண்ணி சொன்னா கல்யாணம் பண்ணிக்குற,அக்கா நான் சொன்னா மட்டும் கல்யாணம் பண்ணிக்க மாட்டல்ல...”
“கல்யாணம் தான மாப்ள எங்க..?” என்று கேட்டாள் சக்தி.
சக்தியை மாப்ளையிடம் அழைத்து சென்றாள் அகிலா.
சக்தி மாப்ளை மற்றும் சுற்றியிருந்த அனைவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டு
“மன்னிச்சிருங்க., மன்னிச்சிருங்க சார்,நீங்க என்ன கல்யாணம் பண்ணாலும் உங்களுக்கு வாரிசு தர என்னால முடியாது..என்னால எந்த சந்தோசமும் உங்களுக்கு மட்டுமில்ல யாரு என்ன கல்யாணம் பண்ண வந்தாலும் கொடுக்க முடியாது..ஏன்னா என்
கர்ப்ப பைய தானம் பண்ணிட்டேன்” என்றாள் சக்தி.
“என்னடி சொல்ற” என்று அதிர்ச்சியாய் கேட்டாள் அகிலா.
“என் கர்ப்ப பைய ஆப்ரேசன் பண்ணி குழந்தை இல்லாத பொண்ணுக்கு கொடுத்துட்டேன்..அதனால் நீயும், உன் வீட்டுக்காரரும் எனக்கு எந்த நல்லதும் பண்ண வேண்டாம்” என்று சொல்லி மகன் வேலனை கையில் தூக்கி வேகமாய் நடந்தாள் சக்தி.
“எத்தன நாளைக்கு உன் மகன் உன் கூட இருப்பான்,அவன் பெரிசாகி கல்யாணம் பண்ணி பொண்டாட்டி வந்ததும் உன்ன தனியாக்கிருவான், அன்னைக்கு நீ தனியா நிற்ப சக்தி” என்றார் அகிலாவின் கணவர்.
சக்தி திரும்பி “வேலன் வளர்ற வரையும் அவனுக்கு துணையா இருப்பேன்.அவன் வளர்ந்தப்புறம் அவனுக்கும்,அவன் பொண்டாட்டி ,பிள்ளைங்களுக்கும் காவலா இருப்பேன் அவன் வீட்டு நாய் மாதிரி..”என்று சொல்லி போனாள் .
இந்த வார்த்தைகளை டைரியில் படித்த போது
யாரோ அடித்தது போல் லேகாவுக்குள் ஓர் குற்ற வலி கண்கள் துடைக்க,துடைக்க கண்ணீர் வந்து கொண்டு இருந்தது. மீண்டும் மேலும் படித்தாள்.
சக்தி வீட்டில் ரேணுகா,வேலனிடம்.. “ஏன் 2 பேரும் இப்படி இருக்கீங்க..?மாமாவ எதிர்த்து பேச முடியாம நின்னீங்க..எனக்கு புரிஞ்சுது” என்றாள்.
“சக்தி கல்யாணம் பண்ணி வச்சு,உன் வாழ்க்கையையே நாங்க தான் கெடுத்துட்டோம்”என்று இருவரும் கண்ணீர் விட்டனர்.
“ஹேய் அண்ணா, அண்ணி” என இருவரின் கைகளை பிடித்து “ஏன் இப்படி சொல்றீங்க நல்லதுதான பண்ணுனீங்க,விஜி மாதிரி ஒரு மனுஷன பார்க்கவே முடியாது,அவனோட வாழ வச்சீங்களே..”
“ஆனா நீ தனியா இருக்கியே டி..”என்று வேலன் கண்ணீர் விட்டு “எங்க கூடவே இருந்துரு சக்தி,உனக்கு நானும்,ரேணுகாவும் இருக்கோம்” என்றான் வேலன்.
“நான் தனியா இல்ல,விஜி என் கூடதான் இருக்கான்..எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா..நான் காஷ்மீர் போரேன், திரும்பி ஊருக்கு லீவுக்கு எல்லாம் வர மாட்டேன். நீங்க 2பேரும் என் லீவு டைம்ல காஷ்மீருக்கு என்ன பார்க்க வருவீங்களா..?”
“என்ன டி கேள்வி இது..நாங்க கண்டிப்பா வருவோம் அம்மா இல்லன்னு நினைக்காத அண்ணிங்கிறவ அம்மாதான்.. நீ உன் அம்மாவுக்கு லெட்டர் எழுதுற மாதிரி இனி எனக்கு எழுது உனக்கு அம்மா நான் இருக்கேன் ” என்று கண்ணீருடன் கட்டி கொண்டாள் ரேணுகா.
“ரேணுகா... நீ என் அம்மா இல்ல.. அதுக்கும் மேல... கண்டிப்பா லெட்டர் போடுவேன்.. என் மருமகள நல்லா பார்த்துக்கோ அவ முகத்துல என் அம்மாவை பார்க்கிறேன்”என்று கண்ணீருடன் சொல்லி விட்டு வீட்டை விட்டு காஷ்மிர் செல்ல ரயில்நிலையம் கிளம்பினாள் சக்தி.
அதன்பின் சக்தியை மகன் வேலனுடன் தனிமையாய் டிரெயினில் ஏத்தி விட்டு,மணமக்களாய் அவளை வழியனுப்பியது ஞாபகம் வரவே கண்ணீருடன் திரும்பினான் வேலன்.
டைரியின் அடுத்த பக்கத்தை லேகா வேகமாய் திருப்பவே அத்தை சக்தியின் இன்லென்ட் லெட்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அதை ஒவ்வொன்றாய் படித்தாள் அதில்.. மகன் வேலன் விவரம் தெரியும் வயதில் சக்தியிடம் போய்
“ஏன்மா நீ எல்லார் மாதிரியும் பொட்டு வைக்கல..தாலி போடல” என்று கேட்டான்.
கண்ணீரை அடக்கி சிரித்தவாறு வேலனிடம்
“அப்பாவுக்கு நான் இப்படி இருந்தாதான் பிடிக்கும்,அதான் அம்மா அதெல்லாம் போடல”என்றாள்.
“சரிம்மா அப்பா எங்க..என் ப்ரண்ட்ஸ் எல்லாம் கேட்குறாங்க, எல்லார் கூடவும் அவங்க அப்பா நிற்கிறாங்க தெரியுமா, என் அப்பாதான் இல்ல..”என்றான் ஏக்கமாய் வேலன்.
“டேய் வேலா அப்பா சீக்கிரட் ஆப்ரேசனுக்காக பக்கத்து நாட்டுக்கு போயிருக்காரு..ஆப்ரேசன் முடிஞ்சதும் வந்துருவாரு” என்றாள் அம்மா சக்தி.
“எப்ப வருவாரு..அப்பாவ பார்க்கணும் போல இருக்கு..,பேசணும் போல இருக்கு” என்றான் வேலன்.
சக்தியால் தாங்க முடியாமல் கண்ணீர் வரவே திரும்பி நின்று கண்ணீர் வடித்தாள்.
அவள் இடுப்பு உயரம் இருந்த மகன் வேலன் அவள் கைகளை பிடித்து உளுக்கி”சொல்லுமா அப்பா எப்ப வருவாரு,என் கூட பேசுவாரு, ஏன் மா அப்பாவுக்கு என்னயும், உன்னையும் பார்க்கணும்னு தோணவே இல்லையா.. நம்ம மேல பாசமே இல்லையா அப்பாவுக்கு”
வேகமாய் சக்தி கண்ணீரை துடைத்து மகனை தூக்கி டேபிள் மீது அமர வைத்து “ஹேய் வேலா நீ நினைக்கிற மாறி அப்பா இல்ல...அப்பாவுக்கு எப்பவும் நம்ம 2 பேர் ஞாபகம் மட்டும்தான்...உன் அப்பா மாறி பாசமானவர பார்க்கவே முடியாது”என்று கண்ணீர் தத்தும்ப கூறினாள்.
“அப்புறம் ஏன் நம்மள பார்க்க வரல, ஒரு ஃபோன் பண்ணி பேசலாம் ல”
“அவர் வேலை அப்படி டா...”
“அம்மா உனக்கு எப்பவும் அப்பா மேல லவ் தான் அவர விட்டு கொடுக்க மாட்டேன் ற”
“ஆனா வேலா உனக்கு அம்மா மேல லவ் இல்ல ல”
“ஹய்யோ அம்மா எனக்கு உன் மேல தான் லவ் அதிகம் அப்பாவை விட...”என்று சக்தியை கட்டி கொண்டு “ஆனா அம்மா எனக்கு அப்பா வேணும் அப்பா கூட பேசணும்”என்று மகன் கேட்கவும் பேச முடியாமல் கண்ணீரை வடித்தாள்.
அவள் கண்ணீர் அவன் மேல் பட்ட நொடியில் சட்டென்று நிமிர்ந்து பார்த்து “அம்மா அழாத, எனக்கு அப்பா வேண்டாம் அவர் வரும்போது வரட்டும், உன் கண்ல கண்ணீரை வர கூடாது”என்று கண்ணீரை துடைத்தான்.
“உன் அப்பா உன்ன மாதிரி தான் டா..என் கண்ல கண்ணீரே வர விட மாட்டார் ”
“ஆனா என் கூட மட்டும் பேசாம, என்ன அழ வைப்பார் ல “
“ஒரு ஐடியா வேலா எனக்கு அப்பா அட்ரஸ் தெரியும் தர்றேன் நீ லெட்டர் போடு,அப்பா பதில் போடுவாரு...”
“அதான் அட்ரஸ் இருக்கே நாம நேர்லையே போய் பார்ப்போமே” என்றான் வேலன்.
“அது முடியாது அப்பா வேலையா எங்க இருப்பாரோ லெட்டர்ன்னா கண்டிப்பா பதில் வரும்”என்றாள்.
வேலனும் லெட்டர் எழுதி சக்தியிடம் அட்ரஸ் வாங்கி எழுதி போஸ்ட் பாக்ஸில் போட்டு ஸ்கூலுக்கு போவான்.
சக்தி போஸ்ட்மேனிடம் தன் மகன் எழுதிய கடிதங்களை வாங்கி படித்து அவன் அப்பாவை போல பதில் அனுப்புவதும்,பரிசு பொருள் அனுப்புவதும்..அதை வேலன் அனைவரிடமும் மகிழ்ச்சியாய் சொல்வதும்..ஆக இருந்தான்.
சக்தி தன் வலிகளில் எதையும் மகனுக்கு சொல்லாமல் கண்ணீர் நிறைந்த தனிமையின் பாதையில் எல்லாம் மகனை நடத்தாமல் ஆடல்,பாடல்,கால்பந்து என மகனை வேலனை வீட்டினுள் மகிழ்வாய் வைத்திருந்தாள்..
அவனும் தன் தந்தை வருவார் என்று நம்பிக்கையில் எப்போதும் மகிழ்வாய் அம்மாவோடு இருந்து வளர்ந்து வந்தான்.
சக்தி வேலன் முன்னே எதையும் காட்டாமல் மகனுடனான ஒவ்வொரு தருணத்திலும் விஜியை நினைத்து அழுவாள்.
விஜய் உடன் இல்லை என்ற வலி ஒரு புறம்..வேலனுக்கு வலிக்காமல் வளர்ப்பது ஒரு புறம் என சக்தி கடந்து வந்த பாதை வார்த்தைகளால்
விவரிக்க முடியாத வேதனை..
“என்ன யார் உன்ன மாதிரி டாக்டரேன்னு கூப்பிடுவாங்க விஜி..டாக்டரேன்ற உன் குரல் எனக்குள்ள கேட்டுக்கிட்டே இருக்கு விஜி” என்று அவன் போட்டோவை பார்த்து தினமுமே கண்ணீர் விடுவாள் சக்தி.
மகன் வேலன் வளர்ந்து பார்க்க விஜய்குமார் போன்றே தோற்றத்தில் நிற்க
அவனை பார்க்கவே ‘விஜயின் கடைசி கடித வார்த்தைகள் அப்படியே நடந்தது’ என்று நினைத்தாள் சக்தி.
வேலன் சக்தியிடம் “அம்மா நான் ஏன் சோல்ஜர் ஆன தெரியுமா..?”
“ஏன் டா..?”
“அப்பாவ கூட்டிட்டு வந்து உன் கூட சேர்க்க போரேன் அம்மா” என்றான்.
“டேய் நான் தான் அப்பாகிட்ட போணும்” என்று வழக்கம் போல் கண்ணீரை மறைத்து சிரித்தபடி சொன்னாள்.
“நீ பாரு ஒரு நாள் மிஸ்டர்.விஜய்குமாரை உன் கூட சேர்க்கதான் போரேன்”
“சரிடா..என்னவரை விடு.. உன்னவள எப்ப காட்ட போற” என்றாள் சக்தி.
“எனக்கு எவள பார்த்தாலும் சிஸ்டர் ஃபீலிங் தான் வருது..”
“அடேய் என்னடா இப்படி சொல்ற..?” என்று கேட்டாள்.
“அப்படி லவ் வந்தா உன்கிட்டயும் அவகிட்டயும் ஒரே நேரத்துல சொல்றேன்” என்றான் வேலன்.
டைரியில் இருந்த அத்தையின் லெட்டரிலிருந்தவை இவை படித்து முடித்து, கடைசியாக ஒட்டப்பட்டிருந்த லெட்டரை வேகமாய் படித்தாள். அதில்
“ரேணுகா கடைசில விஜி ஆச நடந்துருச்சு லேகா ஓகே சொல்லிட்டான்னு வேலன் வந்து சொன்னதும் அவன் முகத்துல அவ்ளோ சந்தோசத்தை நான் இதுவரையும் பார்த்ததே இல்ல..
நான் கேம்ப்ல மாட்டிக்கிட்டேன் 4 நாள்ல வந்துருவேன் டி.
என் மருமகளுக்கு நீ 1 கிராம் கூட தங்கம் போட கூடாது..நான் முகூர்த்த புடவை, நகை, தாலியோட வர்றேன்.எங்கம்மா,என் வீட்டு மகாராணி, என் வீட்டு ஹெட்டான என் மருமக சித்ரலேகாவை நான் வந்து கூட்டிட்டு போவேன் டி..”என்று கடிதம் முடிந்தது.
டைரியை மூடி வேகமாய் காரில் ஏறி கல்யாண வீட்டிற்கு வேகமாய் செல்லும்படி டிரைவரை துரிதப்படுத்தினாள் லேகா..
காரில் பயணம் செய்தபடி துடைக்க,துடைக்க அடங்காமல் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது லேகாவுக்கு.. ‘எப்பவும் சிரிச்ச முகமா இருப்பியே அத்தை..உன் சிரிப்புக்கு பின்னால் இவ்ளோ வலியும்,கண்ணீரும் இருக்கா..
எப்படி எல்லா கஷ்டத்தையும் தனியாவே அனுபவிச்ச..இனி உன் மகன் உன்ன விட்டாலும் நான் உன்ன விடமாட்டேன் அத்தை’ என்று எண்ணியபடியே அமர்ந்திருந்தாள்.
கார் கல்யாண வீட்டு வாசலில் நின்றது.அனைவரும் திருமண முகூர்த்தத்துக்கு ரெடியாகி போக அத்தை சக்தி ரெடியாகி அவள் அறையில் தனிமையில் அமர்ந்து யோசனையாய் இருந்தாள்.
லேகா தன் அத்தையை பார்க்க வேகமாய் படிகள் ஏறி அத்தை இருந்த அறைகதவை திறந்து பேச வந்தவள்..
அத்தை சக்தியை பார்த்ததும் வார்த்தைகளின்றி கண்ணீர் விட்டு......
“எமாத்திட்டீங்கள்ல என்ன..?” என்று கோபமுமாய் கண்ணீருமாய் கேட்டாள் லேகா.
“அம்மா என்ன நம்பும்மா நான் எதுவும் பண்ணலம்மா” என்று லேகாவை கட்டி கொண்டாள் அத்தை சக்தி.
சக்தி ஹக் பண்ணதும் அன்றொரு நாள் வீட்டில் கரண்ட் கட் ஆன போது ஹக் பண்ணது லேகாவுக்கு நினைவு வர...
“அன்னைக்கு கரண்ட் கட்ல நீங்கதானே என்ன ஹக் பண்ணி கிஸ் பண்ணீங்க” என்று மீண்டும் கண்ணீர் விடும் குரலில் கோபமாய் கேட்டாள்.
“அம்மா உன்ன சமாதானம் பண்ணதான் மா ஹக் பண்ணி கிஸ் பண்ணுனேன்” என்று அத்தை சக்தி சொல்ல
மகன் வேலன் வேகமாய் உள்ளே வந்து “லேகா வேண்டாம்மா,இந்த கல்யாணமும் வேண்டாம் நான் காஷ்மீர் போரேன்” என்று சொல்லி வேகமாய் வெளியேறினான்.
“லேகா நீ இருமா..நான் அவன கூட்டிட்டு வர்றேன்” என்று சொல்லி அத்தை சக்தி மகன் வேலன் பின்னே போய் நிறுத்த அவன் எதையும் கேட்காமல் வெளியே வந்து காரின் பின் சீட்டில் ஏறினான்.கூடவே அம்மா சக்தியும் ஏறினாள்.டிரைவர் காரை இயக்கினார்.
“என்னாச்சுடா வேலா..”
“எனக்கு வாழ்க்கை முழுக்க கல்யாணம வேண்டாம்.. எந்த பொண்ணுமே வேண்டாம்” என்றான்.
“டேய் நிச்சயம் பண்ணிட்டு ஏமாத்ததாடா,பாவம் டா அவ” என்றாள் சக்தி.
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கையில் லேகா புளூ கலர் காரில் அவர்களை ஓவர்டேக் செய்தாள்.
“அய்யோ லேகா காரை ஸ்லோ பண்ணு டி”என்று கத்தினான் வேலன்.
“என்னாச்சுடா வேலா”
“அம்மா அவ ஓட்டிட்டு போறது பிரேக்
ஃ பெயிலியர் ஆன கார் அம்மா” என்று அவன் சொல்லி முடிக்கும் போதே லேகாவின் கார் மலையிலிருந்து உருண்டு விழுந்து அவளும் வெளியே வந்து உருண்டு விழுந்தாள்.
வேலனும்,அத்தைசக்தியும் லேகாவை நோக்கி மலையில் இருந்து இறங்கி வேகமாய் ஓடி அவளை தூக்கி அமர வைத்தனர்.
நெற்றியில் காயமாகி இரத்தம் வடிய, வடிய.. “என்னதான் உங்க 2 பேருக்கும் பிடிக்காதே ஏன் வந்தீங்க..”என்றாள் லேகா.
சக்தி அவளை கட்டிக்கொண்டு கண்ணீரோடு
“நீ என் அம்மா மா உன்ன எப்படி டா பிடிக்காம போகும் வா மா ஹாஸ்பிட்டல் போலாம்” என்று கெஞ்சினாள்..
“நான் வர்ல” என்றாள் லேகா.
“ஹேய் கிருக்கி வாடி” என்று கோபமாய் இழுத்தான் வேலன்.
“வர மாட்டேன் போடா” என்று தள்ளினாள் லேகா.
“வேலா நீ லேகாவ பார்த்துக்கோ நான் போய் ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸ் இருக்கான்னு பார்த்துட்டு வர்றேன்” என்று வேகமாய் போனாள் சக்தி.
“போடா..காஷ்மீர் போ.. நான் வர மாட்டேன் ஹாஸ்பிட்டலுக்கு” என்றாள் வேலனை பார்த்து லேகா.
வேலன் கண்ணீரோடு “நீ என் அம்மா மாதிரி ஆயிடக்கூடாதுன்னு தான் டி உன்ன வேண்டான்னு சொன்னேன்..ஏர்போர்ட்ல தான் டி நானும் இருந்தேன் உன் பின் சீட்ல இருந்து நானும் உன் கூட தான் டி டைரியை படிச்சேன்...”
கண்ணீரோடு பார்த்தாள் லேகா..
வேலன் கண்ணீரோடு அவள் முகங்களை பிடித்து “உன்ன பார்த்ததும் நேசிச்சனே தவிர நான் இல்லன்னா நீ என்னாவன்னு யோசிக்கலடி..என் அப்பா போனா மாதிரி நானும் போயிட்டா நீ என்ன டி பண்ணுவ..நீ இன்னொரு சக்தியா வலியோட வாழ வேண்டாம் டி..நீ நல்லா வாழணும் டி வாடி ஹாஸ்பிட்டலுக்கு போலாம்” என்றான் வேலன்.
இதை அதிர்ச்சியாய் அம்மா சக்தி,வேலன் பின் நின்று கேட்க...அப்பொழுது லேகா காதுகளில் இருந்து ரத்தம் கசிய ஆரம்பித்ததை சக்தி பார்த்து வேகமாய் அவளிடம் போனாள் .
“வேலா பேச நேரமில்ல லேகாவ தூக்கு” என்றாள்.
வேலன் லேகாவை கையில் தூக்கி வேகமாய் நடக்க..
லேகா வேலனிடம் “சாவு யாருக்கு வேணா வரும் டா சோல்ஜர்ன்னா சீக்கிரம் போயிடுவன்னு அர்த்தமா..கடவுள் குறிச்ச நேரம் வர்ற வரையும் யாரும் பூமியை விட்டு போக முடியாது” என்றாள்.
காரினுள் லேகாவை அமர வைத்து ஒரு பக்கம் வேலனும்,மறுபக்கம் சக்தியும் அமர்ந்தாள்.
இருவரும் பயத்தோடு கண்ணீரோடும் லேகாவை பார்க்க..
“டேய் பயப்படாதடா..கருவறையிலேயே என்ன காப்பாத்துன டாக்டர் கல்யாண வயசுல சாக விட்ருவாங்களா..? என்றாள் லேகா.
“இல்லடி..”என்றான் கண்ணீருடன் வேலன்.
லேகா மயக்கம் வரும் நிலையில் அத்தை சக்தியை பார்த்து.. “டாக்டரே..உன் பையனுக்கு கூட இன்னும் சொல்லல உனக்குதான் ஃபர்ஸ்ட்..
லவ் யூ டாக்டரே” என்று கூறிய படி வேலன் மடியில் மயங்கி விழுந்தாள்.