GG writers
Moderator
ரேணுகா
வேலன்
(அத்தியாயம்-28)
அதன்பின் லேகாவை ஹாஸ்பிட்டலில் ஐ.சி.யூவுக்குள் கொண்டு சென்றனர்..
அறையின் வெளியே மாப்ள வேலன் கண்ணீரோடு நிற்க..அம்மா சக்தி அவனிடம்.. “பயப்படாத அம்மா உள்ள
போரேன்..பார்த்துக்கிறேன்” என்று சொல்லி
ஐ.சி.யூவுக்குள் சென்று டாக்டரிடம் அறிமுகமாகி தன் மருமகளுக்கு சிகிச்சை அளித்து சிறிது நேரத்திற்கு பின் வெளியே வந்தாள்.
“லேகா நல்லா இருக்கா..அபாய கட்டத்தை தாண்டிட்டா கொஞ்ச நேரத்துல கண்
விழிச்சிருவா..”என்றாள் சக்தி.
“தேங்க்ஸ் அம்மா” என்று பெருமூச்சு விட்டான் வேலன்.
“ஏன்மா அப்பா பத்தி நீ சொல்லல..எவ்ளோ
கஷ்டத்தை மறைச்சிட்ட... சொல்லியிருக்கலாம்ல மா”
என்று கேட்டான் வேலன்.
“நான் உண்மையை சொல்லியிருந்தா நீ உடைஞ்சு போயிருப்ப..அப்பா இல்லன்னு
ஏக்கத்தோடவும், வலியோடவும்
வாழ்ந்திருப்ப..இத்தன வருஷம் சந்தோசமா
வளர்ந்துருக்க மாட்ட..நாம 2 பேரும் வலி
அனுபவிக்கிறதுக்கு பதிலா..நான் மட்டும் வலி அனுபவிச்சிக்கலாம்ன்னு தான் சொல்லல” என்றாள்.
“ஏன் மா” என்று கண்ணீரோடு கேட்டான் வேலன்.
“நான் உன் அம்மா டா..நான் மட்டுமில்ல உலகத்துல எந்த அம்மாவும் தன் பிள்ளைங்க
கஷ்டப்படணும் நினைக்க மாட்டாங்க ..எல்லா
அம்மாவும்,அப்பாவும் தன் வலியை மறைச்சுதான் பிள்ளைங்கள வளர்க்கிறாங்க..நானும் அததான்
செய்ஞ்சேன் பெரிசா எதுவும் செய்ஞ்சிடல..”
வேலன் தொடர்ந்து கண்ணீர் விடவே..
“வேலா அப்பா நம்ம கூடதான்
இருக்கார்..என்ன உயிரா,உருவமா இல்ல அவ்ளோதான்..சரியா..அழாதடா” என்றாள் சக்தி.
அத்தை சக்தி பேசிவிட்டு திரும்பவே
ரேணுகா,வேலன்,மருமகன் சக்தி நின்றனர்.
அவர்களிடம் அத்தை சக்தி போய்..
“எங்க போனா லேகாவோட அண்ணிக்காரி..அவ
இருந்துருந்தான்னா இவ்ளோ கலவரம்
ஆயிருக்காது,எங்க போய் தொலைஞ்சா அவ” என்று கோபமாய் கேட்டாள்.
“எதுவும் தெரியாம அவள திட்டாதீங்க அத்தை” என்றான் மருமகன் சக்திவேலன்.
அத்தை சக்தி யோசனையாய் பார்க்கவே..
ரேணுகா அத்தை சக்தியிடம் “சுஹானாவும்
எமர்ஜென்சி வார்டுல தான் இருக்கா..”
“ஹேய் அண்ணி என்னாச்சுடி சுஹானாவுக்கு”
என்று கேட்டாள் அத்தை சக்தி.
மருமகன் சக்திவேலன் அத்தையிடம்
“நான் சொல்றேன் என்ன நடந்துச்சுன்னு”
சிறிது நேரத்திற்கு முன் நடந்தவை...
“என்னம்மா முகூர்த்தத்துக்கு நேரமாச்சு இப்ப
போய் பதட்டமா இருக்க..”என்று கேட்டான் மகன்
சக்திவேலன் ரேணுகாவிடம்,
“இல்லடா சுஹானா இன்னும் வரல..”
“எங்க போயிருக்கா..?”
“கோயம்புத்தூர்..”
“யார் கூட போனா...?”
“நம்ம கண்ணனோட டிரைவர் ராஜூ
அண்ணாவோட தான்...”
“சரிமா நீ மண்டபத்துக்கு கிளம்பு..நான்
சுஹானாவ கூட்டிட்டு வர்றேன்” என்று வீட்டிலிருந்து அம்மா, அப்பாவை அனுப்பி வைத்தான் சக்திவேலன்.
அதை தொடர்ந்து ராஜூ
அண்ணாவுக்கு போன் செய்தான்..அப்போது
போனில் ராஜு
“தம்பி நான் ஊட்டி வந்துட்டேன்,மண்டபத்துல இருந்து 3 கி.மீல ஜெய்சன் டீ பேக்டரிக்கிட்ட இருக்கேன்,மரம் விழுந்ததால ரொம்ப நேரம் டிராபிக்ல வெயிட் பண்றேன்..சுஹானாம்மா இறங்கி போயிட்டாங்க..”
“என்ன அண்ணன் ஏன் அவள தனியா
அனுப்புனீங்க” என்று கேட்டான் சக்தி.
“சுஹானாம்மாதான் மண்டபத்துக்கு போணும்
அவசரம்னு இப்பதான் இறங்கி போனாங்க தம்பி.”
“சரி அண்ணன் நான் பார்த்துக்கிறேன்” என்று போனை கட் செய்தவன் வெளியே வந்த போது ஒரு வண்டி கூட இல்லை வேகமாய் ரோட்டிற்கு போய் லிஃப்ட் கேட்டு ஜெய்சன் டீ பேக்டரி நோக்கி போனான் சக்திவேலன்.
டீ பேக்டரி அருகே போகும் போது அங்கு தொழிலாளர் பிரச்சனை கலவரமாய் மாற..அந்த கலவரத்தின் மத்தியில் சுஹானாவை தேடி போனான் சக்திவேலன்.
சற்று தூரத்தில் சுஹானா
ஓட..அவளை அடிக்க வந்தவர்களை ஓடிப் போய்
தடுத்தான் சக்தி.அதற்குள் போலீஸ் தடியடியில்
சிக்கி சுஹானாவின் தலையில் காயம் ஆகி இரத்தம் வழிய வழிய அவ்விடத்தை விட்டு வேகமாய் ஓடினாள் சுஹானா.
சக்தியும் சுஹானா பின் தொடர்ந்து
ஓட..அந்நேரம் போலீஸ் ஒருவரின் லத்தி சுஹானாவின் கால்களை குறி வைத்து எறியப்பட்டு தடுக்கி கீழே விழுந்தாள்..சக்தி ஓடிப் போய் அவளுக்கு கை கொடுத்து தூக்கியதும் லத்தி எறிந்த போலீஸ் வர..
“சார் நான் ஆர்.வி. கம்பெனி எம்.டி., இவங்க ஆர்.வி. கம்பெனியோட சி.இ.ஓ” என்று விசிட்டிங் கார்டை கொடுத்தான் சக்தி.
போலீஸ் விடவே சக்தி திரும்பியபோது நடக்க
முடியாமல் வேகமாய் நடந்தாள் சுஹானா.
சக்தி அவளை பிடித்து நிறுத்தி
“மாப்ள வா.. ஹாஸ்பிட்டல் போலாம்”
“பேச நேரமில்ல மண்டபத்துக்கு உடனே போணும்” என்றாள் சுஹானா.
சக்தி சுற்றி பார்த்த போது வண்டி எதுவும் வரவில்லை.
“தம்பி நீங்க வேலன் சார் பையன் தான” என்று
அவ்வழியாய் சைக்கிளில் வந்த ஒருவர் கேட்க..
“ஆமா சார் நீங்க...”
“நான் உங்க கம்பெனி பழைய வாட்ச்மேன்
மண்டபத்துக்கு தான் போரேன்” என்றார்.
“சார் உங்க சைக்கிள் தர்றீங்களா அவசரம்” என்றான் சக்தி.
“எடுத்துட்டு போங்க சார் மண்டபத்துக்கு வந்து
வாங்கிக்குறேன்” என்றான்.
அதன் பின் சக்தி சுஹானாவை சைக்கிளில் முன் கம்பியில் அமர வைத்து வேகமாய் சைக்கிளை அழுத்த மழை வந்து ஓட்ட முடியாமல் அவன் திணற.. “மாப்ள கொஞ்சம் நிறுத்தி மழை நின்னதும்
போலாமா?” என்று கேட்டான் சக்தி.
“சரி நீ வெயிட் பண்ணு நான் போரேன்” என்றாள்.
“ஏய் இறங்காத” என்று சக்தி வேகமாய் ஓட்ட மண்டபத்திற்கு 100 அடியில் இருக்கும் போது
காட்டெருமை அவர்கள் இருவர் வந்த சைக்கிளை முட்டி சாய்க்க இருவரும் கீழே விழுந்து தனியே தனியே ரோட்டில் உருண்டனர்.
சக்தி நெற்றியில் காயத்துடன் எழ சுஹானா மண்டபம் நோக்கி வேகமாய் ஓடினாள்..சக்தியும் பின்னே ஓடி..
சுஹானா மண்டபத்தினுள் நுழைய கண்ணன்
வேகமாய் வந்தார்...
”சரியான நேரத்துல வந்துட்ட சுஹானா இன்னும் 5 நிமிசம் தான் இருக்கு” என்றார்.
சுஹானா தன் கையில் இரத்தம்படாமல்
மறைத்திருந்த தாலியை கண்ணன் கையில் கொடுத்தாள்.
கண்ணன் அதை வாங்கி கொண்டு
தன் மகனும்,மருமகளும் அமர்ந்திருந்த மணமேடை நோக்கி வேகமாய் ஓடினார்.
சக்தி சுஹானாவை திருப்பி “ ஹேய் கேவலம் ஒரு தாலியை கொடுக்கவா இப்படி ஓடி வந்த..”என்று கோபமாய் கேட்க..
சுஹானா சற்று மூச்சுவிட்டு “அது தாலி இல்ல...ஒரு பொண்ணோட லைஃப்..குறிச்ச நேரத்துல அது அவ கழுத்துக்கு போகணும்..நீ ஈஸியா தாலி கட்டிட்ட..”
அங்கு மணமேடையில் இருந்த
மணமக்களை கை காண்பித்து..
”ஒரு பொண்ணுக்கும், பையனுக்கும் இருக்குற அழகான பந்தத்தோட அடையாளம் தான் தாலி..”என்றாள்.
சக்தி கண்கலங்க மணமேடையை பார்க்க மேளசத்தத்துடன் திருமணம் நடைபெற கண்ணன் மற்றும் அவரது மனைவி அமராவதி சுஹானாவை பார்த்து கையெடுத்து நன்றி சொல்ல...
சுஹானா நன்றி எல்லாம் சொல்லாதீங்க என்று
தலையசைத்து..மலர்களை மணமக்கள் மீது தூவினாள்.
சக்தி கண்கலங்க சுஹானாவை குற்ற
உணர்வோடு பார்க்க..
சுஹானா மயங்கி சக்தி மீது விழுந்தாள்..
அவளை தூக்கி காரை நோக்கி வேகமாய் ஓடி சென்று ஏற்றினான் சக்திவேலன்.
அவன் பின்னே ரேணுகா,வேலனும் காரில் ஏறினார்கள்.அப்பா வேலன் காரை இயக்கவே..சக்திவேலன்..தன்
அம்மாவிடம் “என்னம்மா நடக்குது சுஹானா கையில எப்படி தாலி..”
“நேத்து தாலி காணாம போயிடுச்சு.
தாலியையே மாப்ளையால காப்பாத்த முடியல, நம்பி வர்ற பொண்ண எப்படி காப்பாத்துவான்னு எல்லாரும் கண்ணனையும்,அமராவதியையும்,
அவங்க மகனையும் அவமானமா பேசுனாங்க.சுஹானா லேகாவ கூப்பிட கோயம்புத்தூர்ல இருந்ததால
அவள் தாலி வாங்கிட்டு வர சொன்னேன் டா..ஆனா
இப்படி நடக்கும்னு நினைக்கல..”என்று நடந்த அனைத்தையும் சக்திவேலன் தன் அத்தை
சக்தியிடம் சொல்லி முடித்தான்.
அத்தை சக்தி மனதில் ‘என்ன டைம் இது 2 மருமகள்களும் இப்படி விழுந்து கிடக்குறாளுங்க’என்று எண்ணியபடியே தன் குடும்பத்தினரிடம் “பயப்படாம இருங்க, நான் போய் சுஹானாவ பார்க்கிறேன்” என்று
எமர்ஜென்சி வார்டில் நுழைந்து..அங்கிருந்த
டாக்டரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு சுஹானாவின் ரிப்போர்ட்ஸ் வாங்கிப் பார்த்துவிட்டு அவள் நாடிபிடித்து பார்த்தாள் அத்தை சக்தி..
அதன்பின் வெளியே வந்து. தன்
குடும்பத்தினரிடம்
“பயப்படாதீங்க ஷீ இஸ் ஃபைன் நவ்..ரிப்போர்ட்ஸ் எல்லாம் நார்மல்தான் அதனால
ஃவொரி பண்ணாதீங்க” என்று அத்தை சக்தி சொல்லும் போதே அவளது மகன் வேலன்.
“அம்மா லேகா கண் விழிச்சிட்டா” என்றான்
“சரி டா..போய் பாரு” என்றாள் அம்மா சக்தி.
ரேணுகா,வேலன்,சக்திவேலன் மற்றும் வேலன் விஜய்குமார் லேகாவை காண ஐ.சி.யுவுக்குள் போய் கண்ணீருடன் அவளிடம் நலம் விசாரிக்க ஐ.சி.யுவுக்குள் இருந்த நர்ஸ் “யாராவது ஒருத்தர், 2 பேர் இருங்க இத்தன பேர் நிக்காதீங்க” என்று சொல்ல
அப்பா வேலன் சிஸ்டரிடம் “ஒரு 2 நிமிசம் பேசிட்டு போயிடுறோம்” என்றான்.
“சார் சீக்கிரம் பேசிட்டு போங்க” என்றாள் நர்ஸ்..
லேகா அனைவரிடமும் “நான் நல்லா இருக்கேன் எதுவும் ஃபீல் பண்ணாதீங்க..ஆமாம்..அத்தை எங்க.. ?”என்று கேட்டாள்.
“என் தங்கச்சி வெளியதான் நிக்குறா மா” என்றார் அப்பா வேலன்.
“சரி நீங்க போயிட்டு அத்தையை அனுப்புங்க”என்றாள்.
அனைவரும் ஐ.சி.யுவை விட்டு வெளியே
வந்தனர்..அப்பொழுது அண்ணன் வேலன்,
தங்கை சக்தியிடம் “லேகா உன்ன கூப்பிடுறா போம்மா” என்றார்.
“இல்லடா அண்ணா நான் இப்ப அவள
பார்க்கல..”என்று சொல்லி மகன் வேலனை “டேய் வேலா நீ மட்டும் போடா உள்ள..”என்று அனுப்பி
வைத்தாள் சக்தி.
வேலன் உள்ளே சென்று நொடிப்பொழுதில்
வெளியே வந்து “அம்மா நீ உள்ள வர்றியா..இல்லஅவ வெளிய வர்றட்டான்னு கேட்குறா..?”என்றான்
“உன் பொண்டாட்டி திமிர் அடங்கவே
அடங்காதுல..” என்று கோபமாய் சக்தி
ஐ.சி.யுவுக்குள் வந்தாள்.
லேகாவிடம் சென்று “ஹேய் உன் திமிரை என்கிட்ட காட்டாத டி..திமிர் இருக்கிற அளவுக்கு தாங்குற சக்தி இருக்காடி உனக்கு..அவன் போயிட்டா அப்படியே உன்ன விட்டுட்டு
போயிடுவானா ஏன் உனக்கு அம்மா,அப்பா இல்ல எதையும் யோசிக்காம முடிவெடுப்பியா..”என்று சக்தி திட்ட.....
மகன் வேலன் அவளிடம் போய் தயவாய்
“அம்மா நான் தான வேண்டான்னு சொன்னேன்,அதனால தான் அவ அப்படி பண்ணா..”என்றான்.
“பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்றியா..அவ தப்பு பண்ணும் போது சப்போர்ட் பண்ண அடி வாங்கிருவ டா” என்றாள் அம்மா சக்தி.
அதை தொடர்ந்து லேகாவிடம்.. “வாழ்க்கைன்னா எல்லாமே இருக்கும்,நாம நினைக்கறதும்,விரும்பறதும் மட்டுமில்ல சிலநேரம் நாம நினைக்காததும்,விரும்பாததும் கூட நடக்கும் அத ஏத்துக்கிட்டு வாழனுமே தவிர கோழை மாதிரி முடிவெடுக்க கூடாது..இதுல ட்ரீட்மெண்ட்க்கு வர மாட்டேன் அடம் பண்ற..அங்கேயே உன்ன ஓங்கி அறைஞ்சிருப்பேன் டி..”என்று சக்தி கையை நீட்ட..
லேகா சிரித்தபடி “லவ் யூ டாக்டரே..”என்றாள்.
கோபத்தோடு சக்திக்கு சிரிப்பு வர.. “ஹேய் நான் உன்ன திட்டிட்டு இருக்கேன் டி..”என்றாள் சக்தி.
“அதுக்குதான் லவ் யூ சொன்னேன் டாக்டரே..நீ திட்றது கேட்க நல்லா இருக்குல..லவ் யூ டாக்டரே” என்றாள் மீண்டும் லேகா.
சக்தி சிரித்தபடி “ஹேய் அவனுக்கு சொல்ல வேண்டியத மாத்தி எனக்கு சொல்லிட்டு இருக்க டி..”
“அவனுக்கு இப்போதைக்கு சொல்ல மாட்டேன்..உனக்கு மட்டும்தான் எப்பவும் சொல்லி டார்ச்சர் பண்ணுவேன். டாக்டரே இதுக்கு பெயர்தான் லவ்-டார்ச்சர்..நான் விஜயகுமார் மருமக டாக்டரே..”என்று லேகா சொன்னதும் சக்தி அவளை கண்ணீரோடும்,மகிழ்வோடும் கட்டி கொண்டாள்.
“மாமியார் டார்ச்சர் என்னன்னு எனக்கு காண்பிச்சல்ல..மருமக லவ்-டார்ச்சர்
என்னன்றதை நானும் லைஃப் லாங் உனக்கு காட்டுறேன்” என்றாள் லேகா.
“போதும்மா என்னால முழுசா திட்ட கூட முடியல” என்றாள் சக்தி.
“அப்படியெல்லாம் உன்ன விட்ர மாட்டேன் டாக்டரே..நீ விட்ட கண்ணீருக்கெல்லாம் சேர்த்து
உன்ன சந்தோசமா பார்த்துக்குவேன் நான் சாகற வரையும்..”என்றாள் லேகா.
“ஹேய் அப்படி சொல்ல கூடாது” என்று லேகா வாயை மூடினாள்.. “வாழ வேண்டிய வயசு நீ இன்னும் 100 வருசம் நல்லா வாழனும்” என்றாள் அத்தை சக்தி.
மகன் வேலன் வியப்பாய் கண்ணீரோடும்- மகிழ்ச்சியோடும், லேகாவையும்,அம்மாவையும் பார்த்தான்.
“ஹேய் சரி அவன் கூட பேசு..நான் வெளிய போரேன்” என்றாள் சக்தி.
“எங்க போற டாக்டரே..”
“2பேரும் பெர்சனல் ஆக பேசுவீங்கள...” என்றாள் சக்தி.
“நீ இல்லாம என்ன பெர்சனல்..இரு..என் கூடவே இரு..”என்று அவள் கையை விடாது பிடித்து தன் அருகில் வைத்து கொண்டாள் லேகா.
அப்பொழுது வேலன் விஜய்குமாரின் மொபைல் போன் ரிங் ஆக அவன் போனை எடுத்து
“நாளைக்கு வந்துருவேன் சார்” என்று போனை கட் செய்தான்.
“டேய் என்னடா காஷ்மீர் போறியா” என்று கேட்டாள் அம்மா.
“ஆமா அம்மா..”
சித்ரலேகாவோ சோகமாய் தலை குனிய..
“ஏன் டா நான் வேணா ஹையர் ஆபிசர்க்கிட்ட பேசட்டுமா” என்றாள் சக்தி.
“வேண்டாம்மா..ஏன்னா நான் ரெஸிக்னேசன் கொடுக்கிறதுக்கு தான் போரேன்..கல்யாண தேதிக்குள்ள வந்துருவேன்” என்றான்.
“சரியான முடிவுதான் டா எடுத்திருக்க” என்றாள் அம்மா சக்தி.
லேகாவோ வேலனிடம் “அவசரப்படாத டா..எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு சோல்ஜர் ஆயிருப்ப..இப்ப எனக்காக விட்ராதடா” என்றாள்.
“ஹேய் நீ ஏன் டி இப்படி சொல்ற” என்று கேட்டாள் அத்தை சக்தி.
“அப்படியில்ல அத்தை அவனுக்கு பிடிச்ச ஆர்மியை விட்டுட்டு அவன் எப்படி நம்ம கூட சந்தோசமா இருப்பான்” என்று கேட்டாள் லேகா.
“எந்த நேரமும் என்ன நினைச்சு நீங்க 2 பேரும் பயந்துட்டே இருப்பீங்களா..?அதே மாதிரி நானும் நமக்கு ஏதாவது ஆனா என் பொண்டாட்டி என்ன பண்ணுவா,அம்மா என்ன செய்வாங்கன்னு நினைச்சு நினைச்சு ஆர்மிக்கும் என்னால உண்மையா இருக்க முடியாது,உங்களையும் விட
முடியாம நிம்மதியில்லாம இருக்கறதை விட.. வேலையை விட்டுட்டு நிம்மதியா உங்கள பார்த்துக்குறேன்..”
“ஆனா வேலா உனக்கு ஆர்மிதான ரொம்ப பிடிக்கும் அதை ஏன் தியாகம் பண்ற” என்று கேட்டாள் லேகா.
“எனக்கு உலகத்துலேயே ரொம்ப பிடிச்ச விஷயம் என் அம்மாவும் ,பொண்டாட்டியும்தான்..உங்க 2 பேரையும் சந்தோசமா பார்த்துக்கணும்..அவ்ளோதான்..
நாட்டுக்கு சேவை செய்ய நிறைய பேர் இருக்காங்கடி..ஆனா உங்க 2
பேருக்கும் என்ன தவிர யாரு டி இருக்கா... அதனால் நீ எதுவும் ஃபீல் பண்ணாத..” என்றான் வேலன்.
“வேலையை விட்டு என்னடா செய்ய போறா?”என்று கேட்டாள் லேகா.
“ஹேய் மருமகளே அவன் நல்லா
விளையாடுவான் டி” என்றாள் சக்தி.
“அதான் தெரியுமே அத்தை உன் மகனை நீ விளையாட்டு பிள்ளையா வளர்த்திருக்கியே” என்றாள் லேகா.
“ஏய் பொண்டாட்டி அம்மா சொல்றது கரெக்ட் நான் அப்பா பெயர்ல ஒரு ஸ்போர்ட்ஸ் அகாடமி ஸ்டார்ட் பண்ணலான்னு நினைக்கிறேன்..அந்த வேலையையும் சேர்த்து முடிச்சிட்டு உனக்கு தாலி கட்ட கரெக்ட்டா வந்துருவேன்” என்றான் வேலன்.
“நல்ல ஐடியா அதையே பண்ணு” என்றாள் லேகா.
அதன்பின் லேகாவிற்கு நர்ஸ் ஊசி போட கண்களை மூடி தூங்கினாள்,சக்தியும்,வேலன்
விஜயகுமாரும் வெளியேறினர்.
சற்று நேரத்தில் சுஹானாவும் கண் விழிக்க சக்திவேலன் தவிர குடும்பத்தினர் அனைவரும்
அவளை நலம் விசாரிக்கவும்,லேகாவுக்கு நடந்த
விபத்து பற்றியும் பேசிவிட்டு அவர்கள் வெளியே சென்ற பின்..
சுஹானா அறையில் தனிமையிலிருக்கையில்
சக்திவேலன் அவள் எதிரே
நின்று “சாரி மாப்ள..”என்று தயக்கமாய் சொன்னான்.
“சாரி அண்ணியாரே உனக்கு அடிபட்டதை கூட
பார்க்காம நான் விட்டுட்டேன்” என்றாள் சுஹானா.
“வலி பரவாயில்லையா” என்று இருவரும் ஒரே
நேரத்தில் ஒருவரையொருவர் பார்த்து கேட்டு கொண்டனர்..அதே போல்
“இப்ப நல்லா இருக்கேன்” என்ற பதிலையும் ஒரே
நேரத்தில் இருவரும் சொல்லி கொண்டு சிரித்தனர்.
“தாத்தாவ உன் கூட கூட்டிட்டு போயிருக்கலாம்ல, ஏன் தனியா போன கோயம்புத்தூர்க்கு” என்று
கேட்டான் சக்தி.
“தாத்தா லேகா நிச்சயம் முடிஞ்சதுமே மெட்ராஸ் போயிட்டாங்க, நம்ம கம்பெனி கேஸ் நடந்துச்சுல்ல
அதுக்காக போயிருக்காங்க” என்றாள் சுஹானா.
“சரி தனியா எங்கேயும் போகாத..எங்க
போகணும்னாலும் யாரையாவது துணைக்கு கூட்டிட்டு போ..”என்று சொல்லி கிளம்பினான் சக்தி.
“நீ வருவியா என் கூட துணையா..”என்று
கேட்டாள் சுஹானா.
அவன் திரும்பி அவளிடம் “நீ கூப்பிட்டா
கண்டிப்பா வருவேன்” என்றான் சக்தி.
சுஹானா மனதில் ‘வாழ்க்கை முழுக்க துணையா வருவியா ..?’ என்றபடி சக்தியை பார்த்தாள்.
சக்தியும் மனதில் ‘நீ என் வாழ்க்கை முழுக்க என் கூட இருப்பியா சுஹானா..’என்றபடி அவளை பார்த்தான்.
அப்பொழுது குடும்பத்தினர் அனைவரும் சுஹானா அறைக்குள் வந்தனர்.. அப்பொழுது அப்பா வேலன் அத்தை சக்தியிடம்.. “சக்தி டாக்டரை இப்பதான் பார்த்து பேசிட்டு வர்றேன் சுஹானாவ இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம், ஆனா லேகாவ 5 நாளுக்கு அப்புறம்தான் டிஸ்சார்ஜ் பண்ண முடியும்னு சொன்னார், இப்ப என்ன பண்றது 6 நாள்ல கல்யாணம் வச்சிருக்கோம், வேணா லேகா-வேலன் கல்யாணத்தை தள்ளி வச்சிரலாமா?”என்று கேட்டான்.
“ஹேய் அண்ணா பாவம் டா நம்ம பிள்ளைங்க நீங்க சுஹானாவ கூட்டிட்டு ஊருக்கு போய் கல்யாண வேலையை பாருங்க, நான் மருமகளை பார்த்துக்கிறேன். கல்யாணத்துக்கு முந்துன நாள் மருமகளை டிஸ்சார்ஜ் பண்ணி நேரா மண்டபத்துக்கே கூட்டிட்டு வந்துறேன்”என்றாள் அத்தை சக்தி.
“சரி”அப்படியே செய்ஞ்சிரலாம் என்று அனைவரும் அதை ஆமோதித்தனர்.
அதன் பின் மாப்ள வேலன் காஷ்மிர் செல்ல தயாராகி அனைவரிடமும் பேசி விட்டு
கடைசியாக மச்சான் சக்தியிடம் பேச
வந்தான்.
“டேய் மச்சான் அதான் 2 பேரும் நல்லா இருக்காங்கள்ல ஏன் சோகமா இருக்க” என்று
கேட்டான் மாப்ளை வேலன்.
“குற்ற உணர்ச்சியா இருக்கு டா வேலா.”
“ஏன் டா..?”
“இல்ல கல்யாணத்தை பத்தி உன் தங்கச்சிக்கு எவ்ளோ கனவு இருந்திருக்கும்.. நான் அவள
காப்பாத்துறதா நினைச்சு கல்யாணம் பண்ணி கஷ்டப்படுத்திட்டு இருக்கேன்ல அத நினைக்கும்
போதுதான் குற்ற உணர்ச்சியா இருக்கு..”
“டேய் சுஹானா சொன்னாளா உன் கூட இருக்கிறது கஷ்டமா இருக்குன்னு ..?”
“இல்லடா ஆனா அதே நேரம் எங்க ரிலேசன்ஷிப் பத்தியும் அவ
எதுவும் சொல்லலையே” என்றான் சக்தி.
“அவ சொல்றது இருக்கட்டும் முதல்ல நீ என்கிட்ட சொல்லு உங்க ரிலேசன்ஷிப் பத்தி நீ என்ன
நினைக்குற..” என்று கேட்டான் வேலன்.
“இது என்ன ஃபீலிங்ன்னு புரியலடா ஃப்ரண்ட்ஷிப் மாதிரியும் இல்ல, லவ் மாதிரியுமில்ல..”என்றான் சக்தி.
“சரிடா உன் ஃபீலிங்க என் தங்கச்சிக்கிட்ட போய்
சொல்லு அவளால மட்டும்தான் அது என்ன ஃபீலிங்ன்னு உனக்கு புரிய வைக்க முடியும்” என்றான் வேலன்.
“சொல்லமாட்டேன் டா..அது என்ன ஃபீலிங்ன்னு
தெரியாத வரையும் நான் அவகிட்ட எதுவும் சொல்ல மாட்டேன் டா” என்றான் சக்தி.
“அப்ப சரி நீ என் தங்கச்சி கூட சேர்ற வரையும் நான் உன் தங்கச்சி கூட சேர மாட்டேன்..”என்றான்
வேலன்.
“வேலா...சரி நான் சுஹானாகிட்ட பேச ட்ரை பண்றேன்” என்றான் சக்தி.
“என் கல்யாணத்துக்குள்ள நீ சுஹானா கூட சேரணும்..மச்சான்” என அவனை கட்டி கொண்டு
“டேய் நாமளும் நம்ம அம்மா,அப்பா மாதிரி வாழ
வேண்டாமா அதுக்குதான் சொல்றேன்” என கூறிவிட்டு காஷ்மீர் நோக்கி பயணமானான் வேலன் விஜய்குமார்.
சுஹானா டிஸ்சார்ஜ் ஆகி லேகாவை காண அவள் அறைக்கு போனாள்.
லேகா அவளை கட்டிக் கொண்டு “தேங்க்ஸ் டி
அண்ணி நீ சரியான நேரத்துல டைரி கொடுத்த”
“சந்தோசமா இருக்கு லேகா, ஆமா உன் மாமியார் எங்க கலாட்டா பண்லாம்ன்னு பார்த்தா ஆள காணும்”
“டாக்டர் வேற ஒருத்தவங்களுக்கு டிரீட்மென்ட் கொடுக்க போயிருக்காங்க”
“சரி,சரி உன் கல்யாணத்தப்பம் பார்த்துக்கிறேன் உன் மாமியாரை”என்றாள் சுஹானா.
“ஹேய் அண்ணி அதெல்லாம் இருக்கட்டும் ஞாபகம் இருக்கா. இன்னும் 5 நாள் தான் இருக்கு”என்று கேட்டாள் லேகா.
“உன் கல்யாணத்துக்குதான டி.. “
“இல்ல நீ என் அண்ணன் கூட சேர்றன்னு சொன்னதுக்கு”என்று லேகா கேட்டதும் சட்டென்று அமைதியானால் சுஹானா.
“உன்ன தான் டி அண்ணி பதில் சொல்லு”
“இல்ல லேகா இது என்ன ஃபீலிங்ஸ்ன்னே புரியல ஃப்ரண்ட்-ஷிப் மாதிரியும் இல்ல, லவ் மாதிரியும் இல்ல”என்றாள் சுஹானா.
“அதெல்லாம் எனக்கு தெரியாது.. நீ என் அண்ணனோட சேரல..நான் உன் அண்ணனோட சேர மாட்டேன் பார்த்துக்க”என்றாள் லேகா.
“ஏய் அப்படி சொல்லாதடி..அதான் இன்னும் 5நாள் இருக்குல பேச ட்ரை பண்றேன்” என்று
சொல்லி வெளியேறினாள் சுஹானா.
சிறிது நேரத்திற்கு பின் குடும்பத்தினர்
அனைவரும் லேகாவிடமும், அத்தை சக்தியிடமும்
சொல்லிவிட்டு ஊருக்கு சென்றனர்.