வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ரேணுகா 💝வேலன்(அத்தியாயம்-29)

GG writers

Moderator
ரேணுகா 💝வேலன்
(அத்தியாயம்-29)

அடுத்த நாள் காலையில் தேவதை போன்ற அழகுடைய பெண்ணொருத்தி ரேணுகாவின் வீட்டினுள் வர சுஹானா கிச்சனிலிருந்து ‘யார் இவங்க இவ்ளோ அழகா இருக்காங்க’ என்று யோசனையாய் பார்க்க..ரேணுகா அப்பெண்ணிடம்
“யாருமா நீ..?”என்று கேட்க

“என்ன அத்தை,மாமா என்ன அடையாளம் தெரியலயா” என்று கேட்டாள் அப்பெண்.

மாமா வேலன் சற்று அவளை கூர்ந்து பார்த்து “ஹேய் ஸ்ருதி” என்று உற்சாகமாய் ரேணுகாவிடம் சொல்ல..

ரேணுகாவும் “ஸ்ருதியா ஸ்கூல் படிக்கும் போது பார்த்தது..கொஞ்சம் கூட அடையாளம் தெரியல..ஆனா அழகா இருக்க மருமகளே”என்றாள்.

அதன்பின் சுஹானாவை அழைத்து “இவ ஸ்ருதி ராஜன் அங்கிளோட தங்கச்சி பொண்ணு, உன் மாமாவுக்கும் தங்கச்சி பொண்ணு, நம்ம சக்தியோட ஸ்கூல் லைஃப் பெஸ்ட் ஃப்ரண்ட்”என்றாள் ரேணுகா.

அப்போது ஸ்ருதி மென்மையான குரலில் “மாமா சக்திவேலன் எங்க” என்று கேட்டாள்.,

“மேலதான் இருக்கான் இருமா,அவன கூப்பிடுறேன்” என்று அப்பா வேலன் சொல்ல...

“வேண்டாம் கூப்பிடாதீங்க மாமா ..நானே அவன என்கிட்ட வர வைக்கிறேன்” என்று சொல்லி மென்மையான குரலில் கர்நாடக இசையில் ஒரு கீர்த்தனைப் பாடலை பாட ஆரம்பித்தாள்.அவள் பாடலினை கேட்டு மாடியிலிருந்து கண்ணீரோடு வேகமாய் ஓடி வந்தான் சக்தி..அவள் பாடலை பாதியில் நிறுத்த..கண்களில் கண்ணீர் ததும்ப சக்தியை பார்த்தாள்.

அவள் நிறுத்திய வரியிலிருந்து பாடலை முழுவதுமாய் சக்தி பாடி முடித்தான்.
அதன்பின் ஸ்ருதி சக்தியை தொடவே..அவளை விட்டு இரண்டடி விலகி போய் கோபமாய் திரும்பி நின்றான்.

“சக்தி என்ன பாரு” என்றாள் ஸ்ருதி.

“உன்ன ஏன் பார்க்கணும் அதான் இத்தன வருஷம் உனக்கு என் ஞாபகமே வரல ல” என்று திரும்பி நின்றவாறே சொன்னான் சக்தி.

“சக்தி அம்மாவுக்கு கேன்சர் ட்ரீட்மென்ட்டுக்காக அவங்க கூட நானும் அப்ராடு போனேன் 8 வருசம் ட்ரீட்மென்ட் பண்ணியும் அம்மாவ காப்பாத்த முடியல..போன மாசம்தான் அம்மா தவறிட்டாங்க” என்று சொல்லி அழுதாள் ஸ்ருதி.

“ஹேய் அழாதடி” என்று திரும்பி அவள் கண்ணீரை துடைத்தான் சக்தி.

“2நாள் முன்னாடிதான் இந்தியா வந்தேன் கண்ணன் அங்கிள் பையன் மேரேஜ்ல உங்க எல்லாரையும் பார்த்தேன் உங்க கூட பேசணும்னுதான் வந்தேன்.”

“சாரி டி..”என்றான் சக்தி.

“பரவாயில்லடா நான் எல்லாரையும் பார்த்துட்டேன்ல நான் கிளம்புறேன்” என்றாள் ஸ்ருதி.

“இருமா..லேகா கல்யாணம் வரையும் நம்ம வீட்லேயே எங்க கூட இருந்துட்டு அப்புறம் போலாம்” என்றாள் ரேணுகா.

“இல்ல அத்தை கல்யாண வீட்ல நான் ஏன் டிஸ்டர்பன்ஸா இருக்கணும் ..”

“ஹேய் என்ன டிஸ்டர்பன்ஸ் நீயும் கல்யாண-வீட்டுக்காரிதான் இது உன் வீடு இல்ல..நாங்க உன் உறவு இல்லன்னா இப்பவே கிளம்பு” என்றான் சக்தி.

“சரி,சரி..நான் உங்க கூட இருக்கேன் கொஞ்சம் சிரியேன் டா” என்றாள் ஸ்ருதி.

சக்தி சிரித்ததும்,அப்பா வேலன் சுஹானாவை ஸ்ருதி முன் காண்பித்து அவர் பேசும் முன் ஸ்ருதி
அவரிடம் “இவங்க சுஹானா..இவங்க சஹானாவ இருக்கும் போது சக்தி கல்யாணம் பண்ணிக்கிட்டான்” என்றாள்.

“எப்படி மா...இப்படி அப்டேட்டா இருக்க..”

“அகிலா பெரியம்மாதான் சொன்னாங்க மாமா”என்றாள் ஸ்ருதி.

சக்தி ஸ்ருதியிடம் “ஹேய் வெயிட் பண்ணு நான் ரெடியானதும் உன்ன என் ஆபிசுக்கு கூட்டிட்டு போரேன்” என்று சொல்லி வேகமாய் தன் அறைக்கு போனான்.

ஸ்ருதி சுஹானாவிடம் “சக்தி மாறவே இல்ல” என்றாள்.

சுஹானாவோ அனைவரிடமும், புன்னகை மட்டுமே காண்பித்தாள்,ஆனால் ஸ்ருதியும்,சக்தியும் சேர்ந்து ஆபிஸ் கிளம்பிய போது சுஹானாவுக்குள் சொல்ல முடியாத வலி அதை மறைத்து சிரித்தபடி சக்தியை வழியனுப்பி வைத்தாள்.

அதன்பின் ஸ்ருதியும்,சக்தியும் கைகோர்த்து அமர்வது,அவர்களின் பாசமான உரையாடல்களும், அவர்கள் ஒன்றாய் சேர்ந்து வெளியே செல்வதும், நடனமாடுவதுமாய் அந்த நாள் முழுவதும் அவர்களுக்கு மகிழ்வாய் போனது..ஆனால் சுஹானாவுக்கோ அது மன வலியை அதிகமாய் தந்தது.

அப்பொழுது தாத்தா ஊரிலிருந்து வந்து கோபமாய் சுஹானாவிடம், “என்ன நடக்குது இங்க..? என் பேரன் கூட நீ இல்லாம அவ யாரு?” என்று கேட்டார்.

“தாத்தா கோபப்படாதீங்க அது அவன் ஸ்கூல் ப்ரண்ட் அண்ட் அவன் அத்தை பொண்ணு..”என்றாள்.

“அதுக்காக உன்ன விட இம்பார்ட்டன்ஸ் கொடுக்கறான்..நீ அமைதியா பார்த்திட்டு இருக்க..உன்னதான் சுஹானா” என்றார் தாத்தா.

“என்ன பண்ண சொல்றீங்க தாத்தா”

“நீ போய் கேளுமா சக்தியை..”

“என்னன்னு கேட்குறது எனக்கு தாலி கட்டிட்ட அதனால என்கிட்ட மட்டும் அன்பா இருன்னா..”என்று கோபமாய் கேட்டாள் சுஹானா.

“என்னம்மா இப்படி பேசுற..”

“தாத்தா உலகத்துலேயே கொடுமையான விஷயம் நமக்கானவங்ககிட்ட என் மேல அன்பு காட்டு, எனக்கு இம்பார்ட்டன்ஸ் கொடுன்னு கேட்குறதுதான், வாழ்க்கைல எத வேணா கேட்டு வாங்கலாம்.....ஆனா அன்பு,பாசம் , காதல் மட்டும் கேட்காமலே வரணும்..அப்படி வரலன்னா விட்ரணும்”என்றாள் சுஹானா.

“உனக்கு கஷ்டமா இல்லையா சுஹானா..பேரன் இப்படி பண்றது, பேரன் மேல உனக்கு எந்த ஃபீலிங்ஸும் இல்லையா...”

“இல்ல” என்று சத்தமாய் கண்ணீரோடு கூறினாள் சுஹானா.

“அப்புறம் ஏன் மா உன் கண்ல கண்ணீர் வருது..”

“தெரியல தாத்தா..இது என்ன ஃபீலிங்ன்னு புரியல என்ன தனியா விடுங்க ப்ளீஸ்” என்று சொல்லி வேகமாய் மாடிக்கு சென்றாள் சுஹானா.

மாடியில் ரேணுகா ஸ்ருதியிடம் தனிமையில்
“ஸ்ருதி சொல்றேன்னு தப்பா நினைக்காத சக்தியை விட்டு கொஞ்சம் டிஸ்டன்சுல இரு மா..அவனுக்கு கல்யாணம் ஆயிருச்சு..நீ இப்படி அவன் கூட க்ளோஸ் ஆக இருந்தா அது உங்க 2 பேர் லைஃப்க்கும் நல்லதில்ல” என்றாள்.

“அத்தை ஏன் விருப்பம் இல்லாத 2 பேரை சேர்த்து வாழ வைக்க ட்ரை பண்றீங்க..”

“இல்ல ஸ்ருதி அவங்க 2 பேருக்கும் ஒருத்தரையொருத்தர் பிடிக்கும்” என்றாள் ரேணுகா.

“அப்புறம் ஏன் அத்தை என்ன விலக சொல்றீங்க அவங்களுக்குதான் ஒருத்தரையொருத்தர் பிடிக்குமே” என்று கேட்டாள் ஸ்ருதி.

“ஸ்ருதி உனக்கு எப்படி புரிய வைக்கிறது” என்றாள் ரேணுகா.

“அத்தை உங்க மகன் உங்கள தாண்டி எந்த பொண்ணுக்காவது இம்பார்ட்டன்ஸ் கொடுத்திருக்கானா..இப்ப எனக்கு கொடுக்கிறானே சுஹானாவ ஒரு கெட்டவன்கிட்ட இருந்து காப்பாத்த நினைச்சவன்,அகர்சன் மேல உள்ள கோபத்துல தாலி கட்டுனான். அவளை லவ் பண்ணதால தாலி கட்டல சுஹானா அவன் மனசுல இல்ல..”

“அப்ப நீ இருக்குறியா அவன் மனசுல” என்று கோபமாய் கேட்டாள் ரேணுகா.

“ஆமா அத்தை நான் தான் பல வருஷத்துக்கு முன்னாடி அவன் மனசுல இருந்தேன்,இப்பவும் நான் தான் இருக்கேன்..உங்களுக்கு சந்தேகம்ன்னா சக்தியோட நெஞ்சுல என் பெயரோட ஃபர்ஸ்ட் லெட்டர் எஸ்ன்னு டாட்டூ குத்தியிருக்கான் இப்ப இல்ல ஸ்கூல் படிக்கும் போதே குத்திட்டான் போய் அவனையே கேட்டு பாருங்க” என்றாள் ஸ்ருதி.

ரேணுகா வேகமாய் சக்தியை தேடி அவன் அறைக்கு சென்று..சக்தியை பிடித்து டி-சர்ட் டை இழுத்து பார்த்த போது ஸ்ருதி சொன்னது போலவே டாட்டூ இருந்தது.அதை பார்த்ததும் மிகுந்த அதிர்ச்சியானாள் ரேணுகா.

“டேய் என்னடா இது டாட்டூ” என்று கேட்டாள் ரேணுகா.

“அம்மா இது ஸ்கூல் படிக்கும் போது குத்துனது”என்றான் சக்தி.

“அத ஏன் டா இவ்ளோ நாளா சொல்லாம இருந்த” என்று கேட்டாள் ரேணுகா.

“அம்மா என்னம்மா ஏன் டென்ஷனாகுற”

“சுஹானா கேட்டா என்னடா பதில் சொல்லுவ..”

“நான் சொல்லிக்குறேன்மா அவகிட்ட அவ ,சொன்னா புரிஞ்சுக்குவா நீ டென்சன் ஆகாத” என்றான் சக்தி.

ரேணுகா பதட்டமாய் கண்ணீர் வர அவன் அறையை விட்டு வெளியேறினாள்..சுஹானா நடந்த அனைத்தையும் பார்த்த போது அதிர்ச்சியில் உடைந்து போனாள்.

சுஹானா சற்றும் எதிர்பாராத விதமாய் சக்தி நடக்க என்ன செய்வதென்றே தெரியாமல் மனம் கலங்கி குழம்பி போனாள்.

அந்நேரம் ஸ்ரீலேகா பாட்டி சுஹானா ஹவுஸ் கீப்பிங் வேலை செய்ததும், சக்தி சுஹானாவை அடித்தது என ஸ்பை மூலம் பாதியை மட்டும் தெரிந்து கொண்டு மிகுந்த கோபமாய் ரேணுகா வீட்டிற்குள் சுதீப்புடன் உள்ளே வந்தாள்.

“வா சுஹானா நம்ம பேலஸ்க்கு போலாம்” என்று பாட்டி அழைக்க,

தாத்தா பதிலுக்கு “சேல்ன்ஞ்சு முடிய இன்னும் 3 நாள் இருக்கு அதுக்குள்ள கூப்பிடுற”

“லேகா வேலன் கல்யாணத்துக்காகதானே அவ இங்க இருந்தா..அதான் இப்ப நடக்க போகுதுல இனி இவளுக்கு இங்க என்ன வேலை..”என்றாள் பாட்டி.

“அப்ப சுஹானாவோட வாழ்க்கை..”என்றார் தாத்தா.

“அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்க நான் இருக்கேன்..சுஹானா வா” என்றாள் பாட்டி.

“பாட்டி நான் இல்லன்னா லேகா கல்யாணம் பண்ணிக்க மாட்டா..அவ கல்யாணம் முடிஞ்சதும் நாம கிளம்பலாம்” என்று கண்ணீரோடு சொன்னாள் சுஹானா.

“ஓகே சுஹானா ஆனா அதுவரையும் நான் உன் கூடதான் இருப்பேன்.” என்று சொல்லி பாட்டி கடந்து போனாள்.

“சக்தி உனக்கு வேண்டாம் சுஹானா, உன்னோடது லவ் மேரேஜும் இல்ல, அரேஞ்ஜ் மேரேஜும் இல்ல பாட்டி இப்பதான் சொன்னாங்க வா போலாம் இந்த வீட்ட விட்டு ”என்றான் கோபமாய் சுதீப்.

“சுதிப் ப்ளீஸ் நான் எதையும் பேசற மனநிலையில இல்ல என்ன புரிஞ்சுக்கோ நான் பாட்டிட்ட சொன்னதுதான் உனக்கும்”

“ஹேய் சக்தி உன்ன அடிச்சான் தெரிஞ்சப்பவே அவன் மேல மரியாதை போச்சு அவன் ஒரு ஆளா டி”

“சுதிப் ஸ்டாப் இட் , ப்ளீஸ் லீவ் மீ அலோன்”என்று கோபமாய் சொல்லி அவனை கடந்து போனாள் சுஹானா.

சக்தியையும், சுஹானாவையும் பேச விடாது பாட்டி தடுத்தார்.

சுஹானாவிடம் பேச சக்தி முயற்சிக்க பாட்டியோ சக்தியை தடுத்து நிறுத்தி “சொத்துக்காகதான அவளை உனக்கே சொந்தமாக்கணும் பிளான் பண்ற”என்று பாட்டி கேட்ட பொழுதில் சக்திக்காக ஸ்ருதி அவன் பக்கமாய் பேசி விட்டு அவனை மாடிக்கு அழைத்து போனாள்.

சுஹானாவுக்கோ என்ன செய்வதென்றே தெரியாமல் குழப்பத்தோடும்,மனவேதனையோடும் அமைதியாயிருந்தாள்.

சிறிது நேரத்திற்கு பின் சுஹானாவிடம் பாட்டி தாலியை கழட்ட சொல்லி பலவந்தம் பண்ண..அவளோ தாலியை கையில் பிடித்தவாறு யோசனையாய் இருந்தாள்.

அப்பொழுது ரேணுகா மிகுந்த கோபமாய் சுஹானாவிடம் “நீ தாலியை கழட்டுனா இந்த அம்மாவும் உனக்காக இருக்க மாட்டேன்..என் மகனும் உனக்குன்னு இருக்க மாட்டான்” என்று மிரட்டலாய் சொன்னாள்.

சுஹானா கண்ணீர் வழிய ரேணுகாவை கண்டாள்.

அப்பொழுது மாமா வேலன் ரேணுகாவை சமாதானம் செய்ய அழைத்து போனார்.

தாத்தா பாட்டியை சமாதானம் செய்ய அழைத்து போனார்.

சுஹானா மனவலி தாங்க முடியாமல் தாலியை பார்த்தவாறு “இத கட்டுனவனே கழட்டட்டும்” என்று சக்தியை தேடி மாடிக்கு போனாள்..

அப்போது மாடியில் தீபாவளிக்கு 3 நாளே இருந்த நிலையில் அழகு வண்ண வண்ணமாய் ராக்கெட்டுகள் வானில் வரிசையாய் வெடித்து கொண்டிருக்க..அந்த வெளிச்சத்தில் ஸ்ருதி சக்தியை இறுக பற்றி பிடித்திருக்கும் காட்சிய பார்த்த சுஹானாவுக்கு கண்ணாடி நொறுங்கி உடைந்தது போலானது அவள் இதயம்...

சுஹானா மனதில் ’ சக்தி தாலி கட்டுனதுக்காக நீ என் கூட வாழ வேண்டாம் நான் உன்ன விட்டு போயிடுறேன் சக்தி, உன் மனச நான் பார்த்திட்டேன், எனக்கு உன் மேல இருந்த ஃபீலிங் என்னன்னே தெரியல, ஆனா உனக்கு தெரியாம கூட என் மேல எந்த வித ஃபீலிங்ஸ்யும் இல்ல’என்றபடி
அவள் திரும்பி படிகளில் கண்ணீர் சிந்த இறங்க..

“சுஹானா” என்ற சக்தியின் கதறல் சத்தம் கேட்கவே அவள் திரும்பி வேகமாய் ஓடியபோது சக்தியின் நெற்றியில் தீபாவளி ராக்கெட் மோதி இரத்தம் வழிய தரையில் விழுந்து கிடந்தான்.

சுஹானா வேகமாய் அவனிடம் சென்று கைகளில் ஏந்தி “சக்தி..சக்தி..என்ன
பாரு..”என்று அவனை கதறி கூப்பிட்டாள்.

ஸ்ருதி கீழே போய் மாமா வேலனை அழைக்க அவர்களை விட்டு வேகமாய் போனாள்.

சக்தி சற்றே கண்விழித்து சுஹானாவிடம் “மாப்ள நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்று சொல்லியவாறே அவள் கைகளை இறுக பிடித்தபடி மயங்கி போனான். அவனை அவசரமாய் ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு சென்றனர்.


ஆனால் சக்தி கையிலிருந்து சுஹானாவின் கையை யாராலும் பிரிக்க முடியவில்லை.. எல்லா சிகிச்சையும்,ஸ்கேனும் சுஹானாவோடே சக்திக்கு நடந்தது. சிகிச்சை முடிந்து சற்று நேரத்திற்கு பின் சக்தி கண் விழிக்க எதிரில் இருந்த சுஹானாவைப் பார்த்து “நான் உன்கிட்ட ஒன்னு சொல்லனும்” என்றான்.

அவளும் கண்ணீரோடு அவனை பார்க்க..நர்ஸ்
“அவரை பேச விடாதீங்க ..இன்னும் 2 நாளைக்கு அவர் நல்லா தூங்கணும்” என்று டிரிப்ஸில் ஊசியை இறக்கினாள்.

சுஹானா சக்தியிடம் “நீ என்ன சொல்ல போறேன்னு தெரியும் நீ நல்லாயிட்டு வந்து சொல்லு நான் வெயிட் பண்றேன் இப்ப தூங்கு” என்று அவள் தட்டி கொடுக்க அவனும் மருந்தினால் கண் அயர்ந்தான்.

சக்தி கண் அயர்ந்ததும் தன் கையை அவன் கையை விட்டு பிரித்து எடுத்தாள்.

டாக்டரிடம் சென்று விசாரித்தாள்.. “நத்திங் டூ சீரியஸ் பட் 2 நாள் அவர் நல்லா தூங்கணும், 3வது நாள் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்” என்றார் டாக்டர்.

டாக்டருக்கு நன்றி சொல்லி சுஹானா டாக்டரின் அறையை விட்டு வெளியே வந்த போது பாட்டியும்,ரேணுகாவும் வாக்குவாதம் செய்வதை பார்த்து மன அழுத்தம் உச்சத்தில் அவர்களிடம் சென்று.. “நிறுத்துங்க 2 பேரும்,3வது நாள் என் முடிவை நான் சொல்றேன்..சக்தி அவன் முடிவை சொல்லட்டும்..அதுவரையும் கல்யாண வேலையை மட்டும் பாருங்க.வேற எதுவும் நீங்க 2 பேரும் பேசக் கூடாது” என்று கட்டளையாய் சொல்லி போனாள்.

2நாட்கள் முடிந்து..3வது நாளும் வந்தது.ரேணுகாவும், வேலனும் மகன் சக்தி டிஸ்சார்ஜ் ஆகி வந்ததும் மண்டபத்துக்கு கிளம்ப தயாராகி கொண்டு இருந்தனர்.

அப்போது சக்தி ஹாஸ்பிட்டலில் இருந்து வந்து அமைதியாய் அமரந்திருந்தான்.

“என்னடா முடிவு பண்ணியிருக்க” என்று கேட்டாள் ரேணுகா.

அதே நேரம் பாட்டி,சுதீப்,சுஹானா வீட்டினுள் வந்தனர். சுஹானாவை பார்த்த சக்திக்கு கண்களில் கண்ணீர் வர அதை அடக்கி கொண்டான்.

“சக்தி அம்மா உன்கிட்டதான் கேட்குறேன் என்ன முடிவு பண்ணியிருக்க..”

“எனக்கு சுஹானா வேண்டாம்மா”

வேலன் மகன் சக்தியிடம் போய் “டேய் உன் மனசுல என் மருமக இல்ல..என்ன பார்த்து சொல்லு டா” என்று கேட்டான்.

“இல்லப்பா ..உன் மருமக இல்ல..”

“பொய் சொல்லாதடா சக்தி..ஒரு பொண்னோட
லைஃ ப்டா” என்றார் அப்பா வேலன்.

அப்போது ரேணுகா சுஹானாவிடம் பேச போக அவளின் கழுத்தில் தாலி இல்லாததால்..
கடும் கோபமாய் மிரட்டலாய் “தாலி எங்க
சுஹானா?” என்று கேட்டாள் ரேணுகா.

“உன் பையன் வேண்டான்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் கழட்டுனா..”என்றாள் பாட்டி.

ரேணுகா சக்தியை நோக்கி “ஸ்ருதி அவ வீட்டுக்கு போயிட்டா, நீ போய் அவள கூட்டிட்டு வா நாளைக்கு லேகா வேலன் கல்யாண முகூர்த்த டைம்ல ஸ்ருதிக்கும் உனக்கும் கல்யாணம் நடக்கனும்”என்று கட்டளையாய் சொன்னாள்.

“நீ என்ன டி உன் பையனுக்கு கல்யாணம் பண்றது..உன் பையன்,பொண்ணு முகூர்த்தத்துக்கு முன்னாடி ஃப்ர்ஸ்ட் முகூர்த்த டைம்ல சுதீப் -சுஹானா கல்யாணத்த உன் கண் முன்னாடி நடத்தி காட்டுறேன் பாரு டி” என்றாள் பாட்டி.

தாத்தா பதட்டமாய் பாட்டியிடம் வந்து “என்ன சொல்ற நீ..”என்றார்.

“உங்க பொண்ணு பிக்ஸ் பண்ண மண்டபத்துக்கு கிளம்புங்க நாளைக்கு நம்ம பேத்திக்கு கல்யாணம்” என்று சுஹானாவை இழுத்து போனாள் பாட்டி.

அவர்கள் முன்னால் சக்தி சென்று சுஹானாவின் காதுகள் கேட்கும் படியாய் “ஸ்ருதியை கூட்டிட்டு வர்றேன்” என்று சொல்லி காரை இயக்கினான்.

தாத்தா,சுதீப்,சுஹானா,பாட்டி என நால்வரும் மண்டபத்துக்கு சென்றனர்.

அதன்பின் அப்பாவேலன்

ரேணுகாவிடம் "நீ அவசரப்பட்டு முடிவு எடுத்துட்டீயோன்னு தோணுது” என்றான்.

“இல்லங்க நாமளும் மண்டபத்துக்கு போலாம்” என்று கண்ணீரும்,கோபமுமாய் சொன்னாள் ரேணுகா.

அதன் பின் அன்று மாலை வேளையில் அத்தைசக்தியும்,சித்ரலேகாவும் மண்டபத்தினுள் வந்தனர்.

ரேணுகா அவர்களை தனியே அழைத்து போய் வீட்டில் நடந்த அனைத்தையும் அவர்களிடம் சொல்லி விட்டு அத்தை சக்தியை பார்த்து
“நீ உன் மகளுக்காக லேகா-வேலன் கல்யாணத்துல எதாவது பிரச்சனை பண்ண உன் அண்ணிய உயிரோட பார்க்கிற கடைசி நாள் அதுதான்” என்றாள் ரேணுகா.

“ஏய் அண்ணி என்னடி பேசுற.. நீ தான் டி எனக்கு முக்கியம். . என் மகன் வேலன் கரெக்ட்டா முகூர்த்த டைம்க்கு வந்துருவான்,சித்ரலேகா கல்யாணமும்,உன் மகன் சக்தி வேலன் கல்யாணமும் நடக்கும்” என்று வாக்களித்தாள் அத்தை சக்தி.

ரேணுகாவும் “சரி” என்று தலையசைத்தாள்.

அப்போது சித்ரலேகா மண்டபத்தினுள் சுஹானாவை தேடி போன போது சுஹானா சித்ரலேகாவை பார்த்ததும் ஓடி போய் கட்டி கொண்டு கதறி அழுதாள்..

“என்ன டி அண்ணி 5 நாள்ல இவ்ளோ பிரச்சனை நடந்துருக்கு.."என்று கேட்டாள் சித்ரலேகா

“என்னால முடியல டி..”என்று அவள் கண்ணீரால் சித்ரலேகாவின் தோள்களை நனைத்தாள் சுஹானா.

“ஹேய் அழாதடி அண்ணி” என்று அவள் சொல்லி கொண்டு இருக்கும் போதே அத்தை சக்தி
சித்ரலேகாவை பிரித்து வேகமாய் தனியே அழைத்து போனாள்.

“உன் அண்ணிக்காக என் அண்ணியை விட சொல்றியா டாக்டரே” என்று கேட்டாள் சித்ரலேகா.

“நீ அவ கூட பேச கூடாது” என்று கட்டளையாய்
சொன்னாள் அத்தை சக்தி.

சித்ரலேகா அத்தையை கட்டி கொண்டு “டாக்டரே சுஹானா பாவம்..ப்ளீஸ்... பேச விடு டாக்டரே” என்று கெஞ்சினாள்.

“உன் டாக்டர் உனக்கு வேண்டான்னா போய் பேசு போ..”என்று கோபமாய் தள்ளினாள் அத்தை சக்தி.

சித்ரலேகா கண்ணீரோடு நின்று கொண்டிருந்தாள்.

“எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படி பண்ணா எப்படி” என்று கேட்டாள் அத்தை சக்தி.

“டாக்டரே அவள பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு..”

“சுஹானாவோட கஷ்டத்துக்கு அவ தான் காரணம், ரேணுகா எப்பவும் இவ்வளவு கோபப்பட மாட்டா நீ கொஞ்சம் சூழ்நிலைய புரிஞ்சு பொறுமையாயிரு லேகா” என்று சமாதானம் செய்தாள் அத்தை சக்தி.
 
எல்லாம் நல்லா தானே போயிட்டு இருந்துச்சு ஏன் இப்படி??
இந்த ஸ்ருதி வந்ததுனாலதான் எல்லா குழப்பமும் இப்ப சக்தி ஏன் சுஹானா வேணான்னு சொல்றான் சுஹானா கழுத்துல இருந்த தாலியை யார் கழட்டுனது???
 
எல்லாம் நல்லா தானே போயிட்டு இருந்துச்சு ஏன் இப்படி??
இந்த ஸ்ருதி வந்ததுனாலதான் எல்லா குழப்பமும் இப்ப சக்தி ஏன் சுஹானா வேணான்னு சொல்றான் சுஹானா கழுத்துல இருந்த தாலியை யார் கழட்டுனது???
வாழ்க்கை நமக்கு எல்லா நேரமும் வாய்ப்பு தராது... சுஹானாவும், சக்தியும் மனசுக்குள்ளயே பேசுனா.. இப்படி வில்லிஸ் வரிசையா வந்தா என்ன செய்ரது... நாளை அத்தியாயத்தில் எல்லாம் தெளிவாகி விடும் thank you sister
 
Top