வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ரேணுகா 💝வேலன் (அத்தியாயம் -3)

GG writers

Moderator
அதன்பின் சக்தி “ரேணுகா உன் ப்ராஜெக்ட் ஒர்க் எல்லாம் என்ன ஆச்சு ?”

“சக்தி அதுக்கான வேலை போயிட்டு இருக்கு,என்னோட கம்பெனி திறக்க இன்னும் 6 மாசம் ஆகும்.ஆனா இப்ப எனக்கு எக்ஸ்ட்ரா ஒரு வேலைவந்திருக்கு,
எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் லீவுல போறார் அவருக்கு பதில் கொஞ்சநாள் அந்த கம்பெனியையும் சேர்த்து பார்க்கணும்.”

“நீ எதுக்கு ஹெல்ப் பண்ற...”

“அப்படியில்ல சக்தி அவர் என்னோட காலேஜ் டியூட்டர்”.

“ஓகே மா.......”

வேலன் எதுவும் பேசாமல் ஆபீஸ் கிளம்பி போனான்.

அதன்பின் ஆபீசில் நடுவாக நின்று “என் அன்பு தோழர்களே நான் இதயநோய் சார்பாக 2மாதங்கள் விடுப்பு எடுக்க உள்ளதால்.... எனக்கு பதிலாக 2மாதங்கள்.....எனது மாணவி ரேணுகா உங்கள் மேலாளர் ஆக பணிபுரிவார். தாங்கள் அனைவரும் அவளுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்கிறேன்” என்று வெளியேறினார் மேனேஜர் சிவமணி.

ரேணுகாவை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தான் வேலன். அதேநேரம் அவன் அருகே உள்ளவன்.
“ஹேய் யார்றா இவ...? தங்கச்சிலையா இருக்காளே..... பாரு எங்களுக்குள்ள என்ன ஒரு பெயர் பொருத்தம் நான் ராஜேஷ் அவ ரேணுகா....” என வேலன் காதுபட பேசினான்.

“டேய் கண்ணா... ரேணுகாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்றா ராஜேஷ்ட்ட” என்றான் வேலன்.

“நான் ஏன்டா சொல்லணும் நீ சொல்லுடா ரேணுகா என் பொண்டாட்டின்னு....” என்றான் கண்ணன்.

“நீயும் சக்தி மாதிரி ஆயிட்டியேடா.....”

“ரேணுகாவுக்கு காலர் வச்ச சுடிதார் செமஅழகு” என்றான் ராஜேஷ்.....

ரேணுகாவுக்கு உதவி செய்ய வந்த இடத்தில் எதிர்பாராத புதையல் கிடைத்தது போன்ற மகிழ்ச்சி வேலனை பார்த்ததில்......மாலை நேரம் இனிப்புகள் வாங்கி கொண்டு மகிழ்ச்சியாய் வீட்டிற்கு சென்று அத்தை, சக்தி, பூமாவுக்கும் ஊட்டி விட்டு வேலனின் அறைக்கு சென்றாள் இனிப்பு கொடுக்க......

ஆனால் அவன்.. “நீ ஆபீஸ்க்கு வந்திருக்கலாம், என் வீட்டுக்கு வந்திருக்கலாம்..... என் மனசுக்குள்ள எப்பவும் வரப் போறதில்ல.... என்அம்மா, தங்கச்சி எத்துகிட்டா நான் உன்ன எத்துக்கணும்னு அவசியமில்ல...” என்று அவன் கூறியதும்

ரேணுகா கண் கலங்கி “ஏங்க உங்களுக்கு இவ்ளோ கோபம்........”

“ஏன்னா மேடம் ஸ்ரீலேகாவோட வாரிசு மேல எனக்கு நம்பிக்கை இல்ல.....”

மனம் கலங்கியவாறு வெளியேறி படிகளில் இறங்கினாள் ரேணுகா.

எதிரில் வந்த சக்தி “ஏன் உன் கண்கலங்கி இருக்கு ரேணுகா,ஏதாவது சொன்னானா..? “

அமைதியாய் நின்றாள் ரேணுகா.

“அவன.......”என்று சக்தி கோபமாய் கிளம்ப....

“நீ போகாத சக்தி” என்று தடுத்தாள் ரேணுகா.

ரேணுகாவின் கண்களில் கண்ணீரை பார்த்ததும்.

“ரேணுகா என் கூட வா” என்று கூட்டி கொண்டு போய் அவள் சூட்கேஸ்யில் இருந்து ஒரு பேப்பர் ரோலை கொடுத்தாள் சக்தி.

ரேணுகா அதை பிரித்த போது அதில் வேலன் ரேணுகாவின் திருமண ஓவியம் “சக்தி இது யார் வரைஞ்சது ? ”

“வேலன்... நான் கல்யாணதுக்கு வரல உன்ன மணகோலத்துல பார்க்கணும்னு கேட்டேன் அவன் எனக்கு போஸ்ட்ல அனுப்புனான்.”

ரேணுகாவின் கண்ணீர் ஆனந்தகண்ணீராக மாறியது....

சிறிது நேரத்திற்குபின்.. ரேணுகா தனிமையில் இருக்கையில் அவளது அத்தை அவளிடம் “ நீ வேலன் ரூம்க்கு போ.. அங்கதான் நீ இருக்கணும்.”

“ஆனா அத்தை அவர் கோபப்படுவாரு”

“அவன் கோவப்பட்டாலும் நீ அவன் கூடதான் இருக்கணும்.... அவன் பொண்டாட்டின்ற உரிமை எடுக்க மாட்டான், நீ புருஷன்ற உரிமை எடு.... ரேணுகா அம்மா சொல்றன்ல போ...”

“ஆனா அத்தை பயமா இருக்கே”

“ரொம்ப பேசுனானா நாத்தனாரேன்னு கூப்பிடு சக்தி வருவா மீதி அவ பார்த்துக்குவா....”

பயத்தோட கைப்பையுடன் வேலன் அறைக்கு போனாள். அவள் பயந்தது போலவே வேலன் கோபப்படவே....

“நாத்தனாரே” என்று சத்தமாய் கூப்பிட்டாள்.

“சொல்லுங்க அண்ணியாரே”

“இவர் என்ன இங்க இருக்க விடமாட்டிக்கிறார்...”

“ஏய் என்னடா பிரச்சனை உனக்கு...? அப்படி உனக்கு ரொம்ப கஷ்டம்னா ஹால்ல போய் தூங்கு, போடா”

“ஏய் என்ன ? என் வீட்ல என்ன எங்க போய் தூங்க சொல்ற அடிச்சன் வை....”

“உன் அண்ணிய பார்த்து பயமா இருக்கு. எங்க மனைவியா எத்துக்குவனோன்னு பயமா இருக்கு சக்தின்னு உண்மை சொல்லு அண்ணா.....”

“நான் ஏன் டி பயப்படணும்... ஹேய் ரேணுகா நீ உள்ள போ.. எனக்கு எந்த பயமும் கிடையாது. ஆம்பள சிங்கம் டி நானு......”

“இனிதான்டா தம்பி தெரியும் நீ சிங்கமா இல்லையான்னு......”

அடுத்தநாள் காலையில் காலர் வச்ச சுடிதாரில் ரேணுகா போக

“ஏய் சக்தி ரேணுகாவை சேலை கட்டி தலை வகிட்டுல பொட்டு வச்சிட்டு போ¸ சொல்லு” என்றான் வேலன்.

“நான் ஏன்டா சொல்லணும்... நீ போய் சொல்லு....”.

"மத்த நேரத்துல எல்லாம் அண்ணியாரேன்னு கொஞ்சுற சொல்ல சொன்னா சொல்ல மாட்ட....” என்று மிரட்டினான் வேலன்.

“இருடா சொல்றன்....... அண்ணியாரே சேலை கட்டிட்டு ஆபீஸ்க்கு போங்க”.

"சக்தி எனக்கு சேலை கட்ட தெரியாது...?”
"ஹேய் அப்ப முன்னாடி எல்லாம் சேலை எப்படி கட்டுன” என்று கேட்டான் வேலன்.

“அது ரெடிமேட் சாரிஸ்......”

"அம்மா... நம்ம கார்மெண்ட்ஸ்ல ரேணுகாவுக்கு ரெடிமேட் சாரிஸ் கொண்டு வாங்கம்மா” என்றாள் சக்தி.


“நான் கொண்டு வர்றேன் ஆனா சேலை கட்டி பழகணும்” என்று அவளை கூட்டி கொண்டு போனாள்.

சேலையில் ரேணுகா புதிதாய் பூத்த பூ போல நடந்து வேலனை தாண்டி போனாள்.

வேலன் ரேணுகாவை கூப்பிட......
‘அவர் கூப்பிடறது கேட்க நல்லா இருக்கு, திரும்புனா கூப்பிட மாட்டாரே....’ என்று மனதில் நினைத்து கேளாதவள் போல போனாள்.

"ஹேய் கூப்பிட கூப்பிட போயிட்டே இருக்க " என்று அவள் கையைபிடித்து இழுத்து நிறுத்தி அவள் தலைவகிட்டில் குங்குமம் வைத்தான் வேலன் .

ரேணுகா தன்னை அறியாமல் கண்கலங்க

“புருஷன்ற உரிமைல பொட்டு வைக்கல உன் பாதுகாப்புக்காக வச்சேன் போ.....”

"எதுக்காக வச்சாலும் எனக்கு சந்தோசம்தான்....” என்றாள் ரேணுகா.

இதை பார்த்த வேலனின் மாமா அவர் தங்கை சித்ராவிடம் “மாப்பிளை சேர்ந்து வாழ 45நாள் எல்லாம் தேவைப்படாது.. சீக்கிரமே சேர்ந்துருவாங்க” என்றார்.

சில நாட்கள் கடந்து செல்ல செல்ல ரேணுகாவை வேலன் தவிர அனைவரும் ஏற்று கொண்டனர்.

அகிலாவுக்கு சீமந்தம் செய்ய மொத்த குடும்பமும் இரவு, பகலாய் வேலை செய்ய....

“கண்ணா இந்த கேமரா வச்சிட்டு அங்க நில்லு” என்றாள் சக்தி.

“எதுக்கு கேமரா சக்தி....”

“இப்ப ஒரு லவ் சீன் நடக்க போகுது சரியா போட்டோ எடுக்குற..... ஓகே”

“யாரு உங்க அண்ணனா? எப்ப பாரு சிடுசிடுன்னு
இருக்கான்.”

“ஏய் நடக்கும் வெயிட் பண்ணு....”

“என்ன எண்ணெய் ஊத்தி ரேணுகாவை விழ வைக்க போறியா....?”

“அது ரொம்ப பழசு டா... நீ போய் நின்னு பாரு... அமராவதி சரியா பூ போடு” என்று மேல உள்ள கண்ணனின் மனைவியிடம் கூறினாள் சக்தி.

“என்னமோ சொல்ற நானும் போறேன்” என்றான் கண்ணன்.

வேலன் நடந்து வந்து கொண்டு இருந்தான்.....

“ரேணுகா.... இங்க வா இந்த பூவ ஸ்டூல் மேல ஏறி அங்க மாட்டு நான் ஸ்டூல பிடிச்சிக்குறேன்” என்றாள் சக்தி.

அவளும் ஏறினாள்....

‘வாடா தம்பி...வா’ என்று மனதில் நினைத்தாள் சக்தி.

வேலன் அருகில் வந்ததும் ஸ்டூலை தன் கைகளாலே வேகமாய் தட்டி விட்டாள் சக்தி.

ரேணுகா விழ வேலன் கைகளால் தாங்கி பிடிக்க மேலிருந்து அமராவதி பூ தூவ 2 நிமிடங்கள் இருவரும் மெய்மறக்கவே.....

அதன் பின் ரேணுகா.. சக்தியை குறும்பாய் அடித்து.... கடந்து போனாள்.

“போட்டோ எடுத்துட்டேன் பிடி உன்னமாதிரி எனக்கு ஒரு தங்கச்சி இல்லையே” என்று புலம்பினான் கண்ணன்.

“ஹேய் சக்தி நீ வித்தியாசம் ஆக இருக்க, ஊர்ல போய் பாருடி நாத்தனார் எல்லாம் எப்படி இருக்காங்க” என்றாள் அமராவதி.

“தாலியில 3 முடிச்சு 1-முடிச்சு புருஷன், 2-முடிச்சு பொண்டாட்டி,3-முடிச்சு நாத்தனார். அந்த முதல் 2 முடிச்சையும் பிரிய விடாம நெருக்கமாக வச்சுக்கிறதுதான் நாத்தனார்ன்ற 3வதுமுடிச்சு....”என்றாள் சக்தி.

“அடியே யாரும் இத மாதிரி சொன்னதே இல்ல.”

“எனக்கு தோணுனத நான் சொன்னேன் அமராவதி.”

சீமந்தம் தடபுடலாய் நடந்து முடிய “அகிலா, ரேணுகா, சக்தி, பூமா என நால்வரும் ஒரு சேர நிற்கையில் அப்படி ஒரு அழகு......” என்று அவள் அம்மா.... மாடியில் நின்று பார்த்து கொண்டிருந்த வேலனிடம் கூறினாள்.

“என் மருமகளை எத்துக்கடா.....வேலா கொஞ்சம் கோபத்தை விட்டு யோசிடா...”என்று கடந்து போனாள் அவனது அம்மா.

வேலன் வீட்டில் விளையாடும் குழந்தைகளை மாடியிலிருந்து பார்த்து ரசித்து கொண்டிருந்த போது..... சக்தி ரேணுகாவுக்கு கண்சைகை செய்து வேலன் அருகில் சென்றாள்.

“சொல்லுப்பா தம்பி......” என்றாள் சக்தி.

“எனக்கு குழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்கும்.”

“எத்தனை குழந்தை வேணும்பா ?” என்று கேட்டு ரேணுகாவை இழுத்து வேலன் அருகில் நிறுத்தி விட்டு ஓடி போனாள்.

“எனக்கு பையன் ஒன்னு, பொண்ணு ஒன்னு போதும்.......”

“பெத்துக்கலாம்ங்க.....” என்றாள் ரேணுகா.

அமைதியாய் அவளை விட்டு கடந்து போனான் வேலன்.

அடுத்தநாள் காலை வேலன் துயில் களையும் போது.... ரேணுகா தலையின் முடிஈரம் அவன் முகத்தில் பட.... ஜன்னல் அருகே சூரியவெளிச்சமும் ரேணுகாவின் மஞ்சள்நிறபுடவையும் அவனை ஈர்த்தது, அவனை அறியாமல் அவளை ரசித்து கொண்டிருந்தான்.

அவன் ரசிப்பதை முகம் பார்க்கும் கண்ணாடி வழி ரேணுகாவும் பார்த்து சிரித்து கொண்டே ரெடி ஆனாள்.

“ரேணுகா டீ வேணும்” என்றான்.

அவன் கேட்ட உடனே வேகவேகமாய் ஓடி போய் டீ போட்டு எடுத்து வந்தாள்.

சிரித்த முகமாய் டீ எடுத்து குடித்து விட்டு “யார் போட்டாங்க....? சூப்பர் ஆக இருக்கு” என்றான்.

ஆபீஸ்க்கு இருவரும் சேர்ந்தே கிளம்பி போனார்கள்.

ஆனால் சிறிதுநேரத்தில்......
ரத்தம் வழிய வழிய விரட்டி விரட்டி ராஜேசை அடித்து கொண்டிருந்தான் வேலன்.

ரேணுகா வேலனை பிரிக்க முடியாமல் பிரித்து விட்டாள்.

“டேய் வேலா உன்ன சும்மா விடமாட்டேன் டா....” என்றான் ராஜேஷ்.

“மிஸ்டர் வேலன் யூ ஆர் சஸ்பெண்டட் 15 டேஸ்” என ஆர்டர் போட்டாள் ரேணுகா.

வெறித்தனமான கோபத்துடன் வீட்டிற்கு சென்றான் வேலன்.

ரேணுகா வேலன் பின்னாலே வீட்டிற்கு சென்று.... “இப்படிதான் மிருகத்தனமா அடிப்பீங்களா” என்று கேள்வி கேட்கவும்....
அவள் கையை இறுக்கமாய் வலிக்கும் அளவுக்கு பிடித்து அறை அதிரும்படி அவளை ஓங்கி அறைந்தான்..வேலன்

இதை பார்த்த சித்ரா ஓடி வந்து வேலனை தடுத்து “என் பொண்ண தொட்டனா இருக்கு ராஸ்கல்... என்னடா கை நீட்டுற பழக்கமிது” என்று அதட்டினாள்.

வேலன் வேகமாய் தன் அறைக்கு போனான்.

சக்தியிடம் பூமா நடந்ததை கூற....
“எங்க அவன்....மேல இருக்கானா” என்று கோபமாய் படி ஏறி அவன் அறைக்கு சென்று
“டேய் வேலா.... ஏன்டா ரேணுகாவை அடிச்ச.....? சொல்லுடா...”

“ஆமா அடிச்சேன்...” என்று கண்ணீரோடு சத்தமாய் கூறினான்.

“வேலா அழுகுறியாடா...? டேய் என்ன ஆச்சு.... சொல்லு..?”

“முடியல சக்தி...... எனக்குள்ளேயே சாகுறேன்.......”

“ஹேய் வேலா என்ன நடந்துச்சு சொல்லு....”

"ரேணுகாவ பத்தி மனசு ஒன்னு சொல்லுது, மூளை ஒன்னு சொல்லுது.”

“அவ நல்ல பொண்ணுடா வேலா...”

“ரேணுகாவ இவ எல்லாம் பத்தினியா... இவ ஒருத்தனோட வாழ்ந்துருவாளான்னு கேட்டு தப்புதப்பா ராஜேஷ் பேசுனான். அவனை அடிச்சன் இவ என்ன சஸ்பென்ட் பண்ணிட்டா வீட்டுக்கு வந்ததும் நான் சொல்றதை கேட்பான்னு நினைச்சேன்,அவ முடிவு பண்ணிட்டு பேசுறா... அதான் அடிச்சேன்.”

“அவ மேல இவ்ளோ பாசம் வச்சிருக்க அப்புறம் ஏன்டா அவள பிரிஞ்சிருக்க.......”

“எனக்கு பணக்கார வாழ்க்கை பிடிக்கல மேடம்ஸ்ரீலேகா மேலதான் கோபம்... ரேணுகா மேல கோபம் வரல. ரேணுகாவோட காலேஜ்மேட் மதன் என்ன வந்து பார்த்து இந்த டெக் கேசட்டை கொடுத்து அவனும் ரேணுகாவும் லவ் பண்ணதா சொன்னான். ரேணுகா மனசுல நான் இல்லன்னு தெரிஞ்சப்பதான் தாங்க முடியாம அவள விட்டுட்டு வந்தேன், அவ வேண்டான்னு முடிவெடுத்தேன்.இந்த டெக் கேசட்ல ரேணுகா பேசுன காதல் வசனங்கள பார்த்தா நம்ம ரேணுகாவான்னு தோணும்.அவ குடிப்பான்னு சொன்னாங்க அவள குடிக்கிற மாதிரி நானும் பார்த்தேன்..... ஆனா என்னால எத்துக்க முடியல... அவள தப்பான சூழ்நிலையிலேயே பார்த்தாலும்,அவள என்னால தப்பா நினைக்க முடியல.
அவள ஏத்துக்கவும் முடியாம,வேண்டான்னு தள்ளி விடவும் முடியாம எனக்குள்ள தவிக்குறேன் சக்தி ” என்று அழுதான்.

“டேய் அழாதடா....? விடு... பிரச்சனை என்கிட்ட விடு.... நான் உன் குழப்பத்துக்கு ஒரு முடிவு கண்டுபிடிக்கிறேன். அதுவரையும் பொறுமையாயிரு. அவள மனைவி ஆக இல்ல ஒரு
சிநேகிதியா பாருடா....” என்றாள் சக்தி.

சரி என்பது போல் தலையசைத்தான்.

யோசனையாய் சக்தி அறையின் கீழ் இறங்குகையில்,

கண்ணன் உள்ளே வந்து ரேணுகாவிடம் வேகமாய் சென்று “ என்ன தங்கச்சி இப்படி பண்ணிட்ட? வளைகாப்புல எடுத்த உங்க போட்டோவ வேலன்ட்ட காண்பிச்சப்போ ராஜேஷ்தான் உன்ன பத்தி தப்பு தப்பா பேசுனான் அதான் வேலன் கோபப்பட்டு அடிச்சான் நீ அவனையே சஸ்பென்ட் பண்ணிட்டியே மா, உனக்காகதான் சண்டை போட்டான். நீயே அவன புரிஞ்சுக்கலையே...” என்று சொல்லி சக்தியிடம் வளைகாப்பு போட்டோக்களை கொடுத்து போனான்.

இதயத்தில் ஒரு குற்றவலி ரேணுகாவுக்கு ஏற்பட்டது. வேலனிடம் எப்படி பேசுவது என்று யோசித்து கொண்டிருந்தாள்.

இரவு வந்தது வேலன் பிடித்ததில் கைகளில் வலிகளோடு அவள் அறையில் தேநீர் கோப்பையை வலதுகைக்கு பதில் இடதுகையில் பிடித்து குடிப்பதை வேலன் கவனித்துவிட்டு சக்தியிடம் தசைவலிக்கான தைலத்தை வாங்கி கொண்டு அவன் அறைக்கு போனான்.
ரேணுகாவின் அருகில் போய் அமர்ந்து பேச ஆரம்பித்தான்.

“சாரி நான் உன்ன அடிச்சிருக்க கூடாது” என்றான்.

“நான்தான் உங்ககிட்ட சாரி கேட்கணும்.. நீங்க ஏன் அடிச்சீங்கன்னு வீட்ல வந்தாச்சும் நான் கேட்டு இருக்கணும்” என்றாள் ரேணுகா.

“ இல்ல ரேணுகா நான் இவ்ளோ ஹார்ஷா ஆக நடந்துக்கிட்டது தப்புதான்....லாட்ஸ் ஆப் சாரி...”

“சாரி எல்லாம் வேண்டாங்க.... நான் உங்க மேல ஆக்சன் எடுக்கலைன்னா அவன் போலீஸ் கேஸ்ன்னு போய் உங்களுக்கு பிரச்சனை வந்துட கூடாதுன்னுதான் சஸ்பெண்ட் பண்னேன்.”

“உன் இடத்துல யார் இருந்தாலும் இததான் செய்வாங்க நீ செய்ஞ்சதுல எந்த தப்பும் இல்ல “என்று சொல்லி கொண்டு அவள் கைகளில் வலி தைலத்தை பூசி விட்டான் வேலன்.

ரேணுகா மனதில் ‘நீங்க இப்படி சமாதானம் பண்ணுவீங்கன்னா தினமும் கூட அடி வாங்க ரெடி...’

இவற்றை எல்லாம் அறைக்கு வெளியே இருந்து சக்தியும், வேலனின் அம்மாவும் பார்த்து விட்டு சற்று தள்ளி போய்.....

“பரவாயில்ல சக்தி வேலன் அடிச்சதும் ரேணுகா கோபிச்சிட்டு போயிருவாளோன்னு நினைச்சேன்..... ஆனா 2பேரும் சமாதானம் ஆயிட்டாங்க “என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள் வேலனின் அம்மா.

“ரேணுகா நல்ல பொண்ணுமா....” என கூறி சக்தி மனதிற்குள் ‘அவ தப்பு பண்ணி இருக்க வாய்ப்பே இல்ல, வேலனோட குழப்பத்தை எப்படி ஆச்சும் சரி பண்ணனும் என எண்ணி அவள் அறைக்கு சென்று வேலன் கொடுத்த டெக்கேசட்டை கையில் பார்த்தபடி இத முதல கண்டுபிடிக்கனும்....’
என்று நினைத்தாள்.
 
ரேணுகாவை வேலனின் கண் பார்வையில் தப்பான பொண்ணா காட்டி அவனிடம் இருந்து பிரிக்க முயற்சி பண்றாங்களோ 🙄🙄
 
ரேணுகாவை வேலனின் கண் பார்வையில் தப்பான பொண்ணா காட்டி அவனிடம் இருந்து பிரிக்க முயற்சி பண்றாங்களோ 🙄🙄
உங்களின் கேள்விகளுக்கு இன்னும் 2அத்தியாயங்களில் விடை கிடைத்து விடும் சகோதரி
 
Top