வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ரேணுகா 💝வேலன் (அத்தியாயம்-30)

GG writers

Moderator
ரேணுகா 💝வேலன் (அத்தியாயம்-30)

அடுத்த நாள் காலை 5.30மணிக்கு மணக்கோலத்தில் மணமேடையில் அமர்ந்திருந்தான் சுதீப்..

அப்போது மணப்பெண் அலங்காரம் முடிந்து பாட்டி ஸ்ரீலேகா சுஹானாவுக்கு பூமாலை போட்டு “மணமேடைக்கு வாம்மா” என்று சொல்லி போனாள்.

சுஹானாவுக்கோ ‘சக்திவேலன் அருகில் இருப்பது போல் தோன்ற..’மண்டபம் முழுதும் சுத்தி பார்த்தாள்..ஆனால் அவன் எங்குமே இல்லை..

அப்பொழுது ஸ்ரீலேகாவின் இரு பணிப்பெண்கள் சுஹானாவை அழைத்து செல்ல..

சுஹானா அமைதியாய் அடி எடுத்து வைத்து நடக்க நடக்க சக்திவேலனோடு இருந்த ஒவ்வொரு நினைவும் அவள் உள்ளத்தில் மோதியடிக்க.. ‘என்ன இது ஏன் சக்தி ஞாபகம் வந்துட்டே இருக்கு,சக்தி மனசுல தான் நான் இல்லையே’என்று யோசித்தவாறே மணமேடை பார்க்க..

சக்திவேலன் அமர்ந்திருப்பது போல் அவளுக்கு தெரிய மகிழ்வாய் அருகில் போய் சுஹானா அமர்ந்து நன்கு பார்த்த போது உண்மையில் அமர்ந்திருந்தது சுதீப்.

சுஹானா ஏமாற்றமாய் திரும்பி உட்கார அவள் கண்முன் இருந்த தாலி தட்டைப் பார்த்த போது சக்தி தனக்கு தாலி கட்டியதும்,அதன்பின்
அவர்கள் ஒன்றாய் இருந்த மகிழ்ச்சியான தருணங்கள் எல்லாமே மாறி மாறி அவள் இருதயம் துளைக்கப்பட சட்டென எழுந்து மாலையை கழட்டி வீசி..

“முடியாது.....என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்றாள் சுஹானா.

“சுஹானா என்ன பண்ற நீ” என்று பதட்டமாய் கேட்டாள் பாட்டி ஸ்ரீலேகா .

“வேணாம் பாட்டி கல்யாணம் வேணாம்”

சுதீப் கோபமாய் எழுந்து “ஹேய் உன் கூட
ஃ ப்ரண்ட் மாதிரி பழகி உன்ன ஏமாத்திதான தாலி கட்டினான் அந்த சக்தி.”

சுஹானா கோபமாய் சுதீப்பிடம் “ஏமாத்தறதுக்கு என் அத்தைப்பையன் ஒன்னும் மத்த-ஆம்பளைங்க மாதிரி இல்ல ஒழுக்கமானவன்,உண்மையானவன்”என்றாள்.

“அந்த கோபக்காரனுக்கு ஏன் டி சப்போர்ட் பண்ற?”

“ஆமா அவன் கோபக்காரன் தான் ஆனா கெட்டவனில்ல ” என்றாள் சுஹானா.

“யோசிக்காம அடிதடி சண்ட போடறவன் தான அந்த சக்திவேலன்..”என்றான் சுதீப்

“அநியாயம் பண்றவன் யாரா இருந்தாலும் யோசிக்காம அடிப்பான். அதுவும் என்ன டிஸ்டர்ப் பண்றவன் எவனா இருந்தாலும் அடிப்பான் என் சக்தி
ஆள கொள்ளுற பாசக்காரன் அவன்,
நீ அவன் கோபத்தை தான் பார்த்திருக்க அவன் பாசத்தை பார்த்தது இல்லையே” என்றாள் சுஹானா.

“அந்த ஈகோ பிடிச்சவன இப்படி தூக்கி வச்சு பேசுறியே ...அறிவில்லையாடி உனக்கு..”என்றான் சுதீப்.

“அப்படி மட்டும் சொல்லாத சுதீப்..ஈகோ இருக்கிற யார் வாயிலேயும் சாரிங்கற வார்த்தை வரவே வராது..என் சக்திக்கு அவன் செய்யுறது தப்புன்னு தெரிஞ்சா அடுத்த நிமிசமே குழந்தை மாதிரி கண்ணீரோட சாரி சொல்லிடுவான்” என்றாள் சுஹானா.

“சுஹானா நீ இப்ப சுதீப்பை கல்யாணம் பண்ணிக்கோ” என்றாள் பாட்டி.

“பாட்டி என்னால 1 நிமிசம் கூட இவன என் புருஷனா பார்க்க முடியல..”

“அதான் ஏன்...?”

சுஹானா மிகுந்த சத்தமாய்
“ஏன்னா என் புருஷன் சக்திவேலன் மட்டும்தான்..
ஐ லவ் சக்தி....அவன தவிர வேற எவனையும் என்னால ஏத்துக்க முடியாது..”என்றாள் சுஹானா.

மிகுந்த அதிர்ச்சியாய் பார்த்தாள் பாட்டி ஸ்ரீலேகா .

சுஹானா கண்ணீரோடு பாட்டியிடம்
“சக்தி என்ன நெருங்கும் போது எல்லாம் எனக்கு சந்தோசமா இருந்துச்சு..இவன் என்ன நெருங்கும் போது நெருப்புல நிற்கிற மாதிரி இருக்கு பாட்டி ” என்றாள்.

மாமா வேலன் வேகமாய் சுஹானாவிடம் வந்து “அப்புறம் ஏன் மா தாலியை கழட்டுன” என்று கேட்டார்.

“நான் கழட்டல மாமா..”சற்று தள்ளி நின்ற ரேணுகாவை பார்த்து “நான் தாலியை கழட்டல அத்தையம்மா” என்றாள் சுஹானா.

“அப்புறம் யாரு சுஹானா தாலியை கழட்டுனது”என்று கேட்டார் தாத்தா..

“நேத்து ரோட்ல நான் தனியா வரும்போது அகர்சன் பைக்ல வந்து என் கழுத்துல இருந்து அறுத்துட்டு போயிட்டான்.அந்த நேரம் அங்க வந்த பாட்டி நான் தான் கழட்டிட்டன்னு நினைச்சிட்டாங்க என்ன பேசவே விடல..”என்றாள் சுஹானா.

மாமா வேலன் வேகமாய் ரேணுகாவிடம் போய் “மருமக மேல தப்பு இல்ல மா நீ நம்ம மகன்கிட்ட பேசு..”என்றார்.

அந்நேரம் பாட்டி சுஹானாவிடம் “அப்படி சக்தி என்ன உனக்காக பெரிசா செய்ஞ்சிட்டான்னு சொல்லு” என்று கேட்டாள்.

சுஹானா கண்ணீரோடு “என்ன செய்யல..அவன்..
என் ஃ ப்ரண்ட் ஆக இருக்கும் போது என் அம்மா மாதிரி என் மேல அன்பா இருந்தான்.எப்பவும் நான் பாதுகாப்பாக இருக்கணும்னு என் அப்பா மாதிரி யோசிச்சு அடி வாங்கி கூட என்ன ப்ரொடெக்ட் பண்ணியிருக்கான்.தாத்தா மாதிரி என்ன எப்பவும் சிரிக்க வச்சு சந்தோசமா பார்த்துக்கிட்டான்..அவன் கூட இருக்கும்போது எனக்குன்னு எல்லாமுமா அவன் இருக்கான்ற ஃபீல் மட்டும்தான் வந்துச்சு..அம்மா,அப்பா இல்லன்னு தோணவே இல்ல” என்றாள்.

பாட்டி எதுவும் சொல்ல முடியாமல் சுஹானாவை பார்த்தாள்.

“இத ஏன் மா இத்தன நாளா சொல்லாம இருந்த” என்று கேட்டார் தாத்தா..

“இவ்ளோ நாளா என்ன ஃபீலிங்ன்னு புரியல தாத்தா..இப்பதான் புரிஞ்சுது அவன ஒவ்வொரு நாளும் என் புருஷனா ஃபீல் பண்ணியிருக்கேன்னு” என்றாள் சுஹானா.

தாத்தா கண்கலங்க ரேணுகாவிடம் போய் “சுஹானா சொன்னதை கேட்டல்லம்மா ...ஏன் மா அமைதியாவே இருக்க..பேரன் சக்திகிட்ட பேசு மா ..”என்றார் .

“ஏய் சுஹானா லூசா டி நீ உன்ன விட்டுட்டு ஸ்ருதியை கல்யாணம் பண்ண போறான், அவன புருசனா ஃபீல் பண்ணேன்னு பேசிட்டு இருக்க” என்று கேட்டான் சுதீப்.

“சக்தி லவ் ஸ்ருதி மேல தான் அவளையே அவன் கல்யாணம் பண்ணி நல்லா வாழட்டும்.ஆனா என் லவ் சக்தி மேல மட்டும்தான் உன் மேல இல்ல...” என்று சுதீப்பிடம் சொல்லி விட்டு தள்ளி நின்ற தாத்தாவை
“வாங்க தாத்தா நாம அத்தை வீட்டுக்கு எப்படி வந்தோமோ அதே மாதிரி திரும்பி போவோம்” என்றாள் சுஹானா.

“அப்போ நான் சுதீப்புக்கு கொடுத்த வாக்கு”என்று கேட்டாள் பாட்டி.

சுஹானா கோபமாய் “என் கல்யாணம் மணமேடை வரை வந்து நின்னப்ப என் கல்யாணம் என் விருப்பம்னு எனக்கு வாக்கு கொடுத்தீங்களே..மறந்துட்டீங்களா” என்று கேட்டாள்

பாட்டி மௌனமாய் நிற்க..

சுஹானா திரும்பி நடக்க அவளை கைகொண்டு மறித்தாள் அத்தை சக்தி.

“என்ன மகளே..சக்தி கல்யாணத்தை பார்க்காமலே போற..”என்று சிரிப்பு பொங்க கேட்டாள்.

“உங்கள என் அம்மா மாதிரி நினைச்சேன்..ஆனா நீங்க..” என்று அத்தை சக்தியின் கைகளை தட்டிவிட்டு அவள் முன் நடக்கவே..

ஒரு நிமிடம் மண்டபம் முழுதும் லைட் ஆஃப் ஆனது.

சுஹானா அதை பொருட்படுத்தாமல் முன் நடக்கவே..
“ஐ லவ் சுஹானா..”என்ற சக்தி வேலனின் குரல் கேட்கவே வேகமாய் திரும்பினாள்.
அப்பொழுது மண்டபத்திலிருந்த நாலா பக்கமும் இருந்த டிவியிலிருந்த வந்த சத்தம் அது.

மணமேடையில் உள்ள டிவியில் சக்திவேலனின் முகம் தோன்ற..மணமேடை டிவி அருகே வேகமாய் ஓடி வந்து நின்றாள் சுஹானா....சுஹானா மணமேடை வந்ததும் வீடியோ ஆன் ஆனது..

அந்த வீடியோவில் ரேணுகா வீட்டின் மாடியில் ஸ்ருதி சக்தியை இறுக பற்றி கொண்டு

“சக்தி நான் உன் கூட உன் ஃவொயிப் ஆக வாழ விரும்புறேன்டா” என்றாள்.

சக்தி கண்களில் கண்ணீரும்,புன்னகையுமாய் “ஐ லவ் சுஹானா” என்றான்.

ஸ்ருதி சக்தியை விட்டு விலகி “என்ன சொல்ற நீ..?” என்று கேட்டாள்.

“ஆமா ஐ லவ் சுஹானா, நீ என்ன நெருங்கும் போது எல்லாம் என் சுஹானாவோட இருந்த நெருக்கம் மட்டும்தான் எனக்கு ஞாபகம் வந்துச்சு.....”

“அவள காப்பாத்த தான தாலி கட்டுன, வேற எந்த ஃபீலிங்சும் உங்களுக்குள்ள இல்லன்னு பெரியம்மா சொன்னாங்க”.

“ஃபீலிங்ஸ் என்னன்னு புரியாம இருந்துச்சு,ஆனா இப்பதான் புரிஞ்சுது, ஒவ்வொரு நாளும் அவள என் ஃவொயிப் ஆக ஃபீல் பண்ணியிருக்கேன்”.

“அப்படி என்ன அவ உனக்கு ஃவொயிப் ஆக வாழ்ந்துட்டா” என்று கேட்டாள் ஸ்ருதி.

“ஒருத்தன் கோபத்தை பெத்த அம்மாவுக்கு அப்புறம்..கட்டுன பொண்டாட்டிதான் தாங்க முடியும்.என் சுஹானா தாங்குனா என் கோபத்தையும்,வெறுப்பையும்..”என்று சக்தி சொல்ல..

“அதனால உனக்கு லவ் வந்துருச்சா அவ மேல”என்று கேட்டாள் ஸ்ருதி.

“இல்ல....உலகத்துலேயே பெரிய அழகி,
என் சுஹானாதான்..அதான் லவ் வந்துருச்சு..”என்றான் சக்தி.

ஸ்ருதிக்குள் பொறாமை பொங்க மனதில்’நாமதான் அவளை விட அழகு இவன் இப்படி சொல்றான்’என்று எண்ணியபடி “அப்படி என்னடா அழகு அவ..”என்று கேட்டாள்.

சக்தி கண்களை மூடியபடி “எங்க முதல் தனிமையான சந்திப்புல ஆம்பள திமிர்ல பேசுனப்ப என்ன அடிச்ச அவ வீரம் அழகு..
என்னால அச்சீவ் பண்ண முடியும்னு நம்பிக்கை கொடுத்த அவ தோழமை அழகு..
நான் பயந்தப்ப அம்மா மாதிரி எதிர்ல நின்னு உற்சாகபடுத்துன அவ அன்பு அழகு..
ஸ்ரீலேகா மேடம் பேலஸோட குயின் உறவுகளுக்காக கம்பெனியில ஹவுஸ்-கீப்பீங் வேலை செய்த அவ மன தாழ்மை அழகு,
இந்த மீசையை கம்பீரமா முறுக்க வச்ச
அவ திமிர் அழகு,
என் அம்மா,அப்பாவுக்கு மகளாக இருக்கும் போது ஓர் அழகு.
என் தங்கைக்கு தோழியாய் நிற்கையில் வேறோரு அழகு.
அவள் வார்த்தைகளின்றி கண்களால் பேசிடும் மொழி அழகு,
எனக்காய் அவள் விடும் கண்ணீர் கூட அழகு,
என் நெற்றி வியர்வை துடைக்கும் அவள் சேலை முந்தானை அழகு..
சுஹானாவோடு செல்ல சண்டைகள் அழகு,
நான் அவளை நெருங்கும் சமயம் எல்லாம் வார்த்தைகள் பேசாத அவள் வெட்கம் அழகு..
அவளின் இத்தனை அழகில் என்னை அறியாமல் எப்போதோ தொலைந்து விட்டேன்..என் இதயத்திற்கு சுகமானவள்.. என் சுஹானா..”என்று சொல்லி கண்ணீர் வழிய கண்களை திறந்தான்.

ஸ்ருதி கண்களில் கண்ணீர் வடிய “சாரி சக்தி..எவ்ளோ காதல் உனக்கு அவமேல...”

இதை வீடியோவில் பார்த்த சுஹானாவின் கண்கள் குளம் போல ஆனந்தமாய் கண்ணீரால் நிரம்பி வழிந்தது.

சக்தி கண்ணீர் வடிய “நான் இன்னும் அவகிட்ட சொல்லல ஸ்ருதி.”

“போய் சொல்லு டா..முதல்ல..”என்று அவனை கட்டி கொண்டு “விஷ் யூ ஹாப்பி மேரீடு லைஃ ப்” என்று வாழ்த்து சொன்னாள் ஸ்ருதி.

“தேங்க்ஸ் ஸ்ருதி..”

“சக்தி உன் நெஞ்சில இருக்கிற டாட்டூ” என்று சந்தேகமாய் கேட்டாள் ஸ்ருதி.

“இது ஸ்கூல் படிக்கும் போது சேலன்ஞ்சுல தோத்ததால என் ப்ரண்ட்ஸ் கட்டாயத்துனால குத்துனது எஸ் மீன் சக்தி.
சரி நான் போரேன், என் சுஹானாகிட்ட போரேன்...இப்பவே சொல்ல போரேன் மாப்ள ஐ லவ் யூ டி ” ன்னு
என்று மகிழ்ச்சியாய் திரும்பியவன் நெற்றியில் ராக்கெட் மோதி சுஹானா என்று கதறியபடியே விழுந்தான்.

வீடியோ நிறுத்தப்பட்டு லைட் ஆன் ஆனதும்
“என்ன மகளே..பார்த்தியா..”என்று கேட்டாள் அத்தை சக்தி.

சுஹானா “இந்த வீடியோ எப்படி” என்று ஆச்சர்யமாய் கண்ணீருமாய் கேட்க..

அத்தை சக்தியோ, “நம்ம பிள்ளைங்க 4 பேரும் பெட் ரூம்ல பேசுறத விட மாடியில பேசுனதுதான் அதிகம்.அதான் நான் வந்த அன்னைக்கே ஸ்பை கேமராவ மாடியில வச்சிட்டேன்.அதுல கிடைச்சதுதான் இந்த வீடியோ..சரி ராக்கெட் விட்டவன பார்ப்போமா..” என்று வீடியோவை சூம் செய்து பார்த்தால் ராக்கெட் விட்டவன் சுதீப் என்பது தெரிந்தது..

உடனே சுதீப் “அவ்ளோ காதல் உள்ள சக்தி ஏன் சுஹானாவ வேண்டான்னு சொல்லனும்” என்று கேட்டான்.

அத்தை சக்தி சத்தமாய் “மருமகளே” என்று கூப்பிட்டதும் டிவியில் அடுத்த வீடியோ ஆன் ஆனது.

அதில் சக்தி ஹாஸ்பிட்டலில் தனிமையில் இருக்கும் போது..பாட்டி உள்ளே வந்து
“சக்தி சுஹானாவ விட்ரு..அவ மனசுல நீ இல்ல சுதீப்தான் இருக்கான்” என்றாள்.

“அத சுஹானா சொல்லட்டும்..”

“எப்படி டா சொல்லுவா..அவ கழுத்து கட்டாயமா தாலி கட்டுனதுக்கப்புறம் எப்படி அவளால சொல்ல முடியும்”.

“அவ என் சுஹானா..அவ மனசு எனக்கு தெரியும்.. நீங்க போங்க..”என்றான்

“என்ன தெரியும் உனக்கு ..உன்கிட்ட போய் பேச வந்தேன் பாரு..”என்று சொல்லி போனாள் பாட்டி..

அதன்பின் சுதர்சன் மாமாவின் 2 வது பையன் கௌதம் சக்தியை தேடி உள்ளே வந்தவன்.
“ஏன் டா மணமேடை வரை வந்து ஒரு பொண்ணு கல்யாணம் நிக்குதுன்னா யோசிக்க மாட்ட..அவளும் சுதீப்பும் 6 வருஷம் லிவ்விங் டூ கெதர் லைஃப் ல இருந்தாங்க இந்த உண்மை தெரிஞ்சுதான் என் அண்ணன் சுஹானா வேண்டான்னு வேற ஒருத்தியை கட்டிக்கிட்டு சுஹானா முன்னாடி வந்தான்” என்று

அவன் சொல்லி முடிக்கவே...அவன் கழுத்தை பிடித்து சுவரோடு சேர்த்து வைத்து தன் ஒற்றை கையால் தூக்கினான் சக்திவேலன்.

“என் சுஹானா அப்படிப்பட்ட பொண்ணு இல்ல...”

கெளதம் தன் மொபைலில் ஆதாரம் உண்டு “பாரு..”என்று சக்திக்கு காட்டினான்.

கௌதமை விட்டு மொபைலை வாங்கி பார்த்த நொடியில் அதை தூக்கி எறிந்தான் சக்திவேலன்.

“பார்த்தியா உன் பொண்டாட்டி எப்படிப்பட்டவன்னு...”

மீண்டும் கௌதம் கழுத்தை பிடித்து நெறித்து .. “என் சுஹானா சுத்தமானவ..” என்றான் சக்தி.

“ஆதாரத்தை பார்த்ததுக்கப்புறமும் எப்படி அவள நம்புற” என்று கேட்டான் கெளதம்.

“என் சுஹானாவோட நடத்தை டா..நீ சொல்ற மாதிரி பொண்ணா இருந்திருந்தா அவ குடும்பத்த தேடி வந்திருக்கவும் மாட்டா, குடும்பத்துக்காக வாழனும்னே நினைக்க மாட்டா டா..அவள நான் நம்புறேன் அவ என் சுஹானா”என்று கௌதமை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினான் சக்தி.

சிறிது நேரத்திற்கு பின் சுதீப் சக்தியிடம் வந்து
“நானும் சுஹானாவும் லவ் பண்ணோம்.. 6வருஷம் லிவ்விங் டூ கெதர் லைப்ல” இருந்தோம் என்று சொல்ல ..சக்தி அவன் கழுத்தை பிடிக்க..

கல்லூரியில் சுதீப்பிடம் சுஹானா ப்ரொப்போஸ் செய்வது போன்ற ஒரு வீடியோவை காண்பித்தான்.

சக்திவேலன் சுஹானா பேசும் வீடியோ கண்டு உடைந்து கண்ணீர் விடவே..

“இப்ப என்ன முடிவு எடுக்க போற சக்தி” என்று கேட்டான் சுதீப்.

“டேய்..அவ என் பொண்டாட்டி டா; நான் கட்டுன தாலி அவ கழுத்துல இருக்கற வரையும் அவ எனக்கு சொந்தமானவ நான் யாருக்கும் அவள விட்டு கொடுக்க மாட்டேன்” என்று கண்ணீரும் கோபமுமாய் சொன்னான் சக்தி.

“சரி தாலிய கழட்டிட்டா நீ அவள டிஸ்டர்ப் பண்ண கூடாது” என்றான் சுதீப்.

“சரிடா,அவ கழட்டுனா தான... என் சுஹானா கழட்ட மாட்டா”என்றான் சக்தி.
வீடியோ முடிந்தது..





 
அடப்பாவிங்கள என்னமா பிளான் பண்ணி தாலிய கழட்டி இருக்கீங்க 😡😡
 
அடப்பாவிங்கள என்னமா பிளான் பண்ணி தாலிய கழட்டி இருக்கீங்க 😡😡
 
Top