GG writers
Moderator
ரேணுகா
வேலன் (அத்தியாயம்-31)
சுஹானா வேகமாய் சுதீப் காலரை பிடித்து “ஏன் டா இப்படி பண்ண..? மனுஷனாடா நீ எல்லாம் துரோகி” என்று கேட்டாள்.
“ஹேய் கையை எடு டி.. நான் உன்ன வருஷ கணக்கா லவ் பண்ணா..உன் பாட்டி சொன்னாங்கன்னு சுதர்சன் மாமா பையன கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லிட்ட.. அதான் நம்ம போட்டோவ மார்ஃபிங் பண்ணி உன் முதல் கல்யாணத்தை நிறுத்தி உன் ஸ்டோரிய ஆரம்பிச்ச ரைட்டரே நான் தான் டி”.
“நான் எப்படா உன்ன லவ் பண்ணேன்?என்ன வீடியோ அது...?”என்று கேட்டாள் சுஹானா.
“ஒரு பொண்ணு என்ன நேசிச்சு படிக்காம வீணா போறா என்ன ப்ரொப்போஸ் பண்ற மாதிரி நடின்னு நான் கேட்டப்ப நீ நடிச்சு கொடுத்த வீடியோதான் சக்திட்ட காண்பிச்சேன்.உன் பாட்டிக்கும் சென்ட் பண்ணுனேன் அதான் உன் பாட்டி உனக்கும்,எனக்கும் மேரேஜ் பிக்ஸ் பண்ணாங்க..”
“ச்சீ..நீ எல்லாம் மனுசனாடா..நம்பிக்கை துரோகி” என்று கேட்டாள் சுஹானா.
“ஹேய் இங்க உன் அத்தை மாமாவ பார்க்கதான வந்த அந்த வேலையை மட்டும் பார்க்க வேண்டியதான..அத விட்டுட்டு அத்தை பையனோட சுத்துனா..என்ன டி அர்த்தம்..அகர்சன் என் ஆளு..ஆர். வி கம்பெனி அனிவெர்சரி அன்னைக்கு அகர்சனிட்ட இருந்து உன்ன நான் காப்பாத்துற மாதிரி ப்ளான் பண்ணோம்..ஆனா சக்தி தாலி கட்டிட்டான். உன்ன கோர்ட்டு, கேஸ்ன்னு அவன விட்டு பிரிக்க ட்ரை பண்ணா அப்பவும் சக்தி வந்துட்டான்,கெளதம், சுதர்சன் மாமாவ தூண்டிவிட்டு உன்ன கூட்டிட்டு வர ட்ரை பண்ணேன் எதுவுமே நடக்கல..கடைசில ஸ்ருதின்னு ஒருத்தி வந்தா..என் ப்ளான் சக்சஸ்ன்னு நினைச்சேன்... சுஹானா உன் ஸ்டோரி ரைட்டர் டி நான் இனி சக்திக்கு இல்லடி நீ ஃவொயிப்.. ”
“சுதிப் உன்ன விட பெரிய ரைட்டர் ஆண்டவர்ன்னு ஒருத்தர் இருக்கார் ,
நீ எழுதுன சுஹானா கதைய அவர் மாத்துனது உனக்கு இன்னுமா புரியல, நீ அவ கல்யாணத்த கெடுத்த, ஆனா அவர் அவளை வாழ வேண்டிய வீட்டுக்கே கரெக்ட் ஆக கொண்டு வந்து சேர்த்துட்டார் ”என்றாள் அத்தை சக்தி.
ஹிம் என்று அசட்டையாய் சிரித்து “சுஹானா எனக்கு தான்” என்றான் சுதிப்
“நீ நினைச்சது எப்பவுமே நடக்காது டா துரோகி,என் புருஷன் இங்க இருந்தா உன்ன பீஸ் பீஸாக்கி போட்டிருப்பான்” என்றாள் சுஹானா.
“அட என்ன லவ் ஸ்டோரி மா..கூப்பிடு,கூப்பிடு..உன் புருஷன சத்தமா கூப்பிடு வர்றானான்னு பார்ப்போம்” என்றான் சுதீப்.
“அத்தை சக்திவேலன் எங்க..?” என்று கேட்டாள்
சுஹானா.
“சுஹானா சக்தி லைனே கிடைக்கல மா..”
“சக்தியே கிடைக்க மாட்டான்” என்றான் சுதீப்.
“என்னடா சொல்ற உன்னால அவன ஒன்னுமே செய்ய முடியாது” என்றாள் சுஹானா.
“என்ன சக்தியோட அத்தை இவ்ளோ சி.ஐ.டி வேலை பார்த்து கடைசில இந்த வில்லன் சுதீப்க்கிட்ட தோத்துட்டீங்களே..
நீங்க மட்டும்தான் வீடியோ போடுவீங்களா..டேய் அகர்சா போடுறா வீடியோவ” என்றான் சுதீப்.
வீடியோவில் சக்தி ஓட்டிய காரை ஒரு டிரக் பின்னிருந்து தள்ளி விட கார் சாலையை விட்டு பள்ளத்தில் விழுந்து வெடித்து சிதறிய காட்சியை கண்டதும் ரேணுகா சக்தி என்று சத்தமாய் அலற..
“ஹேய் ஆன்ட்டி இது கல்யாண வீடு கத்த கூடாது..அகர்சா சுஹானா பேமிலியில எல்லார் கழுத்துலேயும் கத்தி வைங்கடா” என்று அடியாட்களை ஏவினான் சுதீப்.
“சுதீப் என்ன செய்யுற” என்றாள் சுஹானா.
“இப்ப நீ என்ன கல்யாணம் பண்ணிக்கலனா..உன் குடும்பத்துல ஒருத்தரையும் உயிரோட விடமாட்டேன்”.
சுஹானாவோ அமைதியாய் நின்றாள் கண்ணீரோடு..
“அப்படி நில்லு கப், சிப்ன்னு பொண்ணாட்டம்..இப்ப நான் தான் டி உனக்கு மாப்பிள்ளை” என்று சொல்லியபடியே தாலியோடு சுஹானா முன் நடக்க...
“இதுதான் நான் வாழ்ற கடைசி நாளா இருக்கும் “என்று சொன்னாள் சுஹானா.
“எனக்கு சொந்தமாயிட்டு சாவு டி” என்று சொல்லிவிட்டு கெட்டிமேளம் வாசிக்க தாலியொடு அவளை நோக்கி நடந்தான் சுதீப்.
சுஹானா ‘வாழ்க்கை முடிந்தது’ என்று கண்களை மூட ..
மணமேடை திரையின் பின் இருந்து மணக்கோலத்தில் சக்திவேலன் வந்து எட்டி உதைத்து தள்ளினான் சுதீப்பை..
மண்டபத்தில் மப்டியிலிருந்த போலீஸ் ரவுடிகள் தலை மீது துப்பாக்கியை வைக்க குடும்பம் விடுபட..சக்தி தன் பாக்கெட்டிலிருந்து தாலியை எடுத்து சுஹானா கழுத்தில் கட்ட, குடும்பத்தினர் மலர் தூவ
கோபமும்,கண்ணீரும்,சிரிப்புமாய் “லேகா” என்று சத்தமாய் சக்திவேலன் கூப்பிட..
கண் திறந்தாள் சுஹானா..
கண்ணீரும் மகிழ்ச்சியுமாய் சக்தியை பார்க்க, “லேகா 3வது முடிச்சை போடு” என்று 2 முடிச்சு போட்டு திரும்பினான், லேகா வேகமாய் வந்து 3 வது முடிச்சை போட்டாள்.
மீண்டும் மணமேடை வந்த சுதீப்பை மிதித்து தள்ளினான் சக்திவேலன்.
“எப்பவும் நான் தான் டா அவளுக்கு மாப்பிள்ளை”என்று சுதீப்பை அடிக்க ஆரம்பித்தான் சக்திவேலன்.
அப்பொழுது அய்யர் “மாப்ளை நாழி ஆகுறது கல்யாண சடங்க செய்ய வாங்கோ” என்று சக்திவேலனை அழைக்க,
அந்நேரம் வேலன் விஜயகுமார் மணக்கோலத்தில் மணமேடை திரையின் பின் இருந்து வர..”டேய் மாப்ள இவன விடாத பிடிச்சுக்கோ நான் கல்யாணத்தை கம்ப்ளீட் பண்ணிட்டு வர்றேன்” என்று சுதிப்பை அவனிடம் தள்ளி விட்டு வேகமாய் சுஹானாவை கைபிடித்து இழுத்து அய்யரிடம் போனான் சக்திவேலன் .
“மாப்ள உங்க உடன் பிறந்தவாள வர சொல்லுங்கோ..”
“லேகா வா டி” என்றான் சக்தி.
லேகா வந்ததும் “அம்மா உங்க அண்ணன் தோள் துண்டையும்,அண்ணி சேலை முந்தானையையும் சேர்த்து முடிச்சு போடுங்கோ” என்றார் அய்யர்.
“100வருசம் சேர்ந்து வாழனும்” என்று முடிச்சு போட்டாள் லேகா.
“மாப்ள,பொண்ண கூட்டிட்டு 3 முறை அக்னியை வலம் வாங்கோ..”என்றார் அய்யர்.
சக்தியும்,சுஹானா கைபிடித்து அக்னியை சுற்றியவாறு “சாரி டி..ரொம்ப சாரி..இப்ப பிடிச்ச உன் கையை விடவே மாட்டேன்” என்று சொல்லி சுத்தி முடிந்து அவள் முன் நின்றான் சக்தி.
“அம்மா அண்ணன்ட்ட குங்குமம் எடுத்து கொடுங்கோ” என்றார் அய்யர் லேகாவிடம்.
லேகா குங்குமம் கொடுக்க சக்தி அதை எடுத்து
“நான் உயிரோட இருக்கிற வரையும் நீ மட்டும்தான் என்னோட மனைவி” என்று சுஹானாவின் வகிட்டில் குங்குமம் வைத்தான்.
“அய்யோ முகூர்த்த நேரம் முடிய போறது அடுத்த ஜோடி வாங்கோ” என்று மீண்டும் அய்யர் அழைக்க.
சக்தி,சுஹானாவோடு சென்று சுதீப்பை பிடித்து அடிக்க வேலன் விஜயகுமார்,சித்ரலேகாவோடு அய்யரிடம் சென்றான்.
“மாப்ள உங்க உடன் பிறந்தாளை வர சொல்லுங்கோ..”
“சுஹானா வாம்மா” என்று வேலன் விஜயகுமார் கூப்பிட..
சுஹானாவோ இன்ப அதிர்ச்சியாய் சக்தியை பார்த்தபடி நிற்க..சக்தி கோபமும்,சிரிப்புமாய் “ஹேய் பொண்டாட்டி உன் அண்ணன் கூப்பிடுறான் பாரு போ..”என்று தன் தோள் துண்டை சுஹானா மீது போட்டான்.
சுஹானா மகிழ்வாய் திரும்பி வேகமாய் அவர்களிடம் செல்ல..
“அம்மா உங்க நாத்தனார் போட்டது போல உங்க அண்ணன் துண்டையும்,அண்ணி சேலை முந்தானையையும் சேர்த்து முடிச்சு போடுங்கோ”என்றார் அய்யர்.
“எப்பவும் 2 பேரும் சேர்ந்து சந்தோசமா வாழணும்” என்று சொல்லியபடி முடிச்சு போட்டாள் சுஹானா.
“மாப்ள நீங்க பொண்ண கூட்டிண்டு 3 முறை அக்னியை வலம் வாங்கோ” என்றார் அய்யர்.
வேலன் லேகாவை கைபிடித்தவாறு அக்னியை சுற்றி வரும் போது “சித்ரலேகா” என்று கூப்பிட்டான்.
“என்ன டா..”
“இப்ப சொல்லணும்னு தான் இவ்ளோ நாளா சொல்லல..”
“என்னது டா..”
“லவ் யூ டி” என்றான் 3 சுற்றும் முடிந்தது.
அவளோ கண்ணீரும், மகிழ்ச்சியுமாய் அவன் முன் நிற்க..
அய்யர் “மாப்ள மாங்கல்யதானம் பண்ணுங்கோ” என்றார்.
அத்தை சக்தி தாலி எடுத்து மகன் வேலனிடம் கொடுக்க,கெட்டிமேளம் வாசிக்க,குடும்பத்தினர் மலர் தூவ..வேலன் லேகாவின் கழுத்தில் தாலியை வைத்தபடி “பொண்டாட்டி உன்ன நம்பிதான் தாலி கட்டுறேன் என்ன கண்கலங்காம பார்த்துக்கோ டி” என்றபடி தாலியின் 2 முடிச்சை அவன் போட அவளும் கண்ணீர் மாறி சிரித்து விட சுஹானா 3 வது முடிச்சை போட்டாள்.
சுஹானா கையால் குங்குமம் வாங்கி லேகாவின் தலைவகிட்டில் பொட்டு வைத்தான் வேலன்.
“இரு டி பொண்டாட்டி” என்று அவள் மீது தன் மேல் துண்டை போட்டு விட்டு..சக்தியுடன் சேர்ந்து சுதீப்பை நன்கு அடித்தான் வேலன் விஜயகுமார்.
அதன்பின் அவனை போலீசிடம் தள்ள.. “சுதீப்போ இவன் சக்திவேலனே இல்ல...”என்றான்.
“கண்ணா அங்கிள் அவன் போட்ட வீடியோவ ரிவர்ஸ் போய் காரை சூம் பண்ணி காட்டுங்க” என்றான் மாப்ளை வேலன்.
அவரும் காரை சூம் செய்த போது காரினுள் இருந்தது வேலன் விஜய்குமார்..”பார்த்தியா டா சுதீப்பு.. நீ தூக்குறதுக்கு முன்னாடியே என் மச்சான நாங்க தூக்கிட்டோம் டா..”என்றான் மாப்ளை வேலன்.
“அது எப்படி முடியும்..”என்றான் சுதீப்.
“நேத்து எங்கம்மா சக்தி என் மச்சான பார்க்க ஹாஸ்பிட்டலுக்கு எதார்த்தமா வர பாட்டியை பார்த்ததும் எங்க அம்மா டவுட்டாகி ஒரு பென்கேமராவ வார்டுபாய் மூலம் மச்சான் ரூம்லவச்சு எடுத்த வீடியோதான் 2வது நீ பார்த்தது..”
“என்ன உங்களால ஒன்னும் பண்ண முடியாது டா” என்று அகங்காரமாய் சொன்னான் சுதீப்.
“ஏன் டா கெட்டது பண்ற நீ யோசிக்கும் போது நல்லது பண்ற நாங்க யோசிக்க மாட்டோமா டா...”
“என்னடா சொல்ற” என்று கேட்டான் சுதீப்.
“ஏன் டா டேய் நீ என் மச்சான் போனையும்,என் தங்கச்சி போனையும் ஹேக் பண்ணி அவங்கள பேச விடாம பண்ணும் போது..உன் ஃ போன்ன நாங்க ஹேக் பண்ண மாட்டோமா..”என்று கேட்டான் மாப்பிள்ளை வேலன்.
அதிர்ச்சியாய் பார்த்தான் சுதீப்.
“என்னடா பார்க்குற என் அம்மா அமைதியா இருந்தா ..பெரிய ஆப்பு இருக்குன்னு அர்த்தம்.. நீ வீட்டுக்கு வந்த முதல் நாளே நீ தான் கல்பிரிட்ன்னு
என் அம்மா கண்டுபிடிச்சிட்டாங்க.. உன்னோட
எல்லா கிரைம் ஹிஸ்டரி எடுத்துட்டாங்க..பத்தாத குறைக்கு என் பொண்டாட்டி வேற உன் ஃபோன்ன ஹேக் பண்ணி நீ போட்டோ மார்ஃபிங் பண்ண டிடெயில்ஸ்,ஆடியோ,வீடியோன்னு உன் தப்புக்கான
மொத்த எவிடென்ஸையும் எடுத்துட்டா..இப்ப என்ன
பண்ண போற தம்பி..”என்று கேட்டான் மாப்ளை வேலன்.
“டேய் 2நாள்ல வெளிய வந்துருவன் பார்க்குறியா” என்றான் சுதீப்.
“அப்படியா..பார்த்தீங்களா, கேட்டீங்களா கலெக்டர் அம்மா,மாவட்ட ஜட்ஜ் ஐயா, மாதர் சங்க தலைவியே மற்றும் மனித உரிமை சங்க தலைவரே... ஒரு பொண்ணு லைஃப் கெடுக்க ட்ரை பண்ணிட்டு எவ்ளோ தைரியமாய் பேசறான்னு” என்று கேட்டான் வேலன் விஜய்குமார்.
மண்டபத்தில் விருந்தினர் போல அமர்ந்திருந்த கலெக்டர்,மாவட்ட ஜட்ஜ்,மாதர் சங்க தலைவி மற்றும் மனித உரிமை சங்க தலைவர் என அனைவரும் வெளி வந்து..சுதீப்பை பார்த்து
“வெளிய வந்துருவியா டா நீ..உன் மேல கேஸ் மேல கேஸ் போட்டுக்கிட்டே இருப்போம்” என்றாள் மாதர் சங்க தலைவி..மற்றவர்களும் சுதீப்பை வசை பாடினர்.
“டேய் சுதீப்பு..உன் வாயால எல்லா உண்மையும் வர வைக்கதான் என் அம்மா சுஹானாவ மணமேடை வரையும் வர விட்டாங்க..இந்த ஜட்ஜ்,கலெக்டர் எல்லாம் மாறு வேஷத்துல கூட்டிட்டு வந்து உன்ன மொத்தமா மாட்ட வச்சது.என் பொண்டாட்டியோட ப்ளான்..மாமியாரும்,மருமகளும் சேர்ந்து உன்ன வச்சு செய்ஞ்சுட்டாங்களா..”என்றான் மாப்ளை வேலன்.
சுதீப் முறைக்கவே..சக்திவேலன் மீண்டும் அவனை அடிக்க போனான்..
“ஹேய் மச்சான்..இவன் எல்லாம் ஒரு ஆளா..டா” என்று தடுத்தான் மாப்ளை வேலன்.
போலீசார் சுதீப் மற்றும் அகர்சன்,அவன் அடியாட்களை கைது செய்து அழைத்து சென்றனர்.அதன்பின் மண்டபத்தில் ஓர் அமைதி வந்தது.
அப்பொழுது மாப்ளை வேலன் “பரவாயில்ல அய்யரே கன் டைம்ல 2 கல்யாணத்தை முடிச்சுட்டீங்க” என்றான்.
“மாப்ள உங்கம்மா தான் நேத்தே என்கிட்ட சொன்னா என்ன நடந்தாலும் முகூர்த்த-டைம்ல சரியா மாப்ளைங்கள கூப்பிட்டு கல்யாணத்தை முடிச்சிட்டேள்னா டபுள் பேமண்ட்ன்னு,”
“டபுள் இல்ல டிரிபிளாவே தர்றேன்” என்று தட்சனையை கொடுத்தாள் அத்தை சக்தி.
அதன்பின் ரேணுகா கலங்கிய கண்களோடு மகன் சக்தி அருகில் வந்து அவன் தலைகோதி “நீ நல்லா இருக்கலடா” என்று கேட்டாள்.
“நான் நல்லா இருக்கேன் பயப்படாதம்மா..”
“ஏன் டா ஸ்கிரீன் பின்னாடிதான இருந்த கொஞ்சம் முன்னாடியே வெளிய வந்திருக்கலாம்ல” என்று கேட்டார் அப்பா வேலன்.
“மாமா மச்சான எதுவும் சொல்லாதீங்க..”என்று
மாப்ளை வேலன் “நேத்து என்ன
நடந்துச்சுன்னா..”என்று முன் கதை சொல்ல நேற்று நடந்தவை..
சக்திவேலன் வீட்டிலிருந்து வேகமாய் காரை ஓட்டி செல்ல.. அவன் காரை நடுரோட்டில் நிறுத்தினாள் அத்தை சக்தி.
“அத்தை நீங்க மண்டபத்துக்கு போங்க, நான்
வர்றேன்” என்றான்.
“ஸ்ருதி வீட்ல இல்லப்பா..நீ என் கூட வா ஸ்ருதிக்கிட்ட கூட்டிட்டு போரேன்” என்றாள் அத்தை சக்தி.
“எனக்கு ஸ்ருதி வேண்டாம்” என்றான் சக்தி.
“சரி அப்ப வா சுஹானாகிட்ட கூட்டிட்டு போரேன்.”
“எனக்கு சுஹானாவும் வேண்டாம்” என்று கோபமும்,கண்ணீருமாய் சொன்னான் சக்தி.
“சுஹானா வேண்டான்னு சொல்லும் போது மட்டும் ஏன் உன் கண்ல கண்ணீர் வருது” என்று கேட்டாள் அத்தை சக்தி.
மௌனமாய் முறைத்தான் சக்தி..
வேலன் விஜய்குமாரும்,சித்ரலேகாவும் அண்ணன் சக்தியிடம் “நாங்க எல்லா உண்மையும் உனக்கு சொல்றோம்.நாங்க சொல்றதை கேளு” என்று எவ்வளவோ தயவாய்,கெஞ்சி பேசியும் சக்தி எதையும் கேளாத படி..
“தாலியவே கழட்டிட்டா இனி என்ன உண்மை இருக்கு எதையும் நான் கேட்க மாட்டேன்” என்று சக்திவேலன் கத்தி பேசி கொண்டிருக்கையில்..அவன் வலது கையில் மயக்க ஊசியை இறக்கினாள் அத்தை சக்தி.
சட்டென அவன் மயங்கி மாப்ளை வேலன் மீது விழ..
“என்னம்மா இப்படி பண்ணிட்ட..”
“இவனுக்கெல்லாம் சொன்னா புரியாது டா..நீ என்ன பண்ற மணமேடை ஸ்கிரீன் பின்னாடி காலையில 3 மணிக்கு இவன மணக்கோலத்துல ரெடி பண்ணி,இவன் பாக்கெட்ல தாலியை வச்சு இவன உட்கார வச்சு கட்டி போட்டிரு..லேகா நீ மண்டபத்துல நடக்குற எல்லாம் லைவ் ஆக வர்ற மாதிரி செட் பண்ணி லேப்டாப் சக்தி முன்னாடி வச்சிரு..அவன் எல்லாத்தையும் கேட்கற மாதிரி ஹெட்போன் மாட்டிரு..”என்று ப்ளானை சொன்னாள் அத்தை சக்தி.
“ஏன் மா மச்சான கட்டி போட சொல்ற” என்று கேட்டான் மகன் வேலன்.
“இல்லடா இவனுக்கு 5.30 மணிக்கு மயக்கம் தெளிஞ்சிரும் இவன் சும்மா இருக்க மாட்டான் அதுக்குதான் கட்டி போட சொல்றேன். அம்மா உனக்கு ப்ளூடூத் இயர் போட்ல சொல்றவரையும் அவன கட்ட அவிழ்த்திர கூடாது..”என்றாள்.
“அத்தை சுஹானா கல்யாணம் நடந்துருச்சுன்னா..”என்று கேட்டாள் லேகா.
“சுஹானா மணமேடை வரை வரட்டும்..அவ நிறுத்தலன்னா நாம நிறுத்துவோம்” என்றாள் அத்தை.
அந்நேரம் சுதீப் சக்தியை கொலை செய்ய அகர்சனிடம் சொல்ல அந்த போன் காலை ட்ராக் செய்தாள் லேகா. மச்சான் சக்தியை தூக்கி லேகா காரில் போட்டுவிட்டு சக்தி காரை மாப்ளை வேலன் இயக்கி விபத்திலிருந்து யாரும் அறியாதபடி தப்பினான் என்று நேற்று நடந்ததை சொல்லி முடித்தான்.
“மருமகனே சக்தி எனக்கு தெரியும் டா..நீ உண்மை தெரிஞ்சா தாலி கட்டுவன்னு..அதான் தாலியை உன் பாக்கெட்ல வைக்க சொன்னேன்” என்றாள் அத்தை சக்தி.
“தேங்க்ஸ் அத்தை” என்றான் சக்திவேலன்.
“ஏய் சக்தி ஒரு அண்டர் கவர் ஆப்ரேஷனே பண்ணி முடிச்சிட்டியேடி” என்றான் அண்ணன் வேலன்.
“ஹேய் அண்ணா நான் மட்டுமில்ல என் மருமகதான் மெயின் ரோல்..”என்றாள் அத்தை சக்தி.
“டாக்டரே போதும்,போதும்..ரொம்ப தன்னடக்கம் தான் நீ..”என்றாள் சித்ரலேகா.
ரேணுகா சுஹானாவிடம் கைகளை பிடித்து கொண்டு “நான்தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன் உன்ன சாரி டா..”என்றாள்.
“யாராச்சும் பொண்ணுக்கிட்ட சாரி கேட்பாங்களா”என்று கேட்டாள் சுஹானா.
கண்ணீரும்,புன்னகையுமாய் சுஹானாவை கட்டி கொண்டாள் ரேணுகா..அப்பொழுது சுஹானா “அத்தையம்மா உங்கள என்னால தப்பாவே நினைக்க முடியாத அளவுக்கு உங்கள பிடிக்கும், சோ நோ வொரிஸ்” என்றாள்.
இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த பாட்டி ஸ்ரீ லேகாவிடம் தாத்தா சென்று “பார்த்தியா ஸ்ரீ லேகா பணமும்,பதவியும் மட்டும் நம்ம பலம் கிடையாது..உண்மையான அன்பு உடைய உறவுகள் ஒரு குடும்பத்தோட பெரிய பலம்..”என்று ரேணுகா வேலன் குடும்பம் முழுவதையும் கை காட்டினார்.
அதை தொடர்ந்து “ஸ்ரீ லேகா போதும் டி நீ உன் மனசை மறைச்சது.. நீ அன்பானவ ஆனா கோபக்காரி..உன் பேரன் சக்திவேலன் உன்ன மாதிரிதான்டி..அவங்கள ஏத்துக்கோ”
பாட்டி ஸ்ரீ லேகா கண்ணீர் மல்க மௌனமாய் நின்றாள்.
“சுதீப் கூட சுஹானாவுக்கு கல்யாணம் நடந்துருந்தா அவ வாழ்க்கையே முடிஞ்சிருக்கும்..இப்ப பாரு என்-பேத்தி, என்பேரன்,என் மகள்,என் மருமகன் கூட சந்தோசமா இருக்கா..வா 2 பேரன் பேத்தியையும் ஆசீர்வாதம் பண்ணுவோம்” என்று அழைத்தார் தாத்தா.
பாட்டி ஸ்ரீ லேகா அவர்களை விட்டு கண்ணீர் மல்க திரும்பி நின்றாள்.
அவள் முன் ரேணுகா வேலன் குடும்பம் முழுவதுமாய் சென்று நின்றனர்.அப்பொழுது அத்தை சக்தி அவர்கள் முன் நின்று கையெடுத்து கும்பிட்டு “அத்தை பணம், பவர்ல எல்லாம் நாங்க உங்கள விட குறைஞ்சு இருக்கலாம்..ஆனா பாசத்துல உங்கள விட குறைஞ்சவங்க இல்ல..ரேணுகாவ என் அண்ணன் வேலன் எப்பவுமே நல்லாதான் பார்த்துக்கிறான்.அதே மாதிரி சுஹானாவ சக்திவேலன் நல்லா பார்த்துக்குவான்..தயவு செய்ஞ்சு ரேணுகாவுக்கு கொடுத்த வலியை..சுஹானாவுக்கும் கொடுத்திராதீங்க” என்று கெஞ்சினாள்..
அப்போது சித்ரலேகா முன் வந்து “டாக்டரே கையை கீழ இறக்கு..ஏன் உங்களுக்கு சொந்த அறிவு கிடையாதா..” என்று தன் பாட்டியை பார்த்து கேட்டாள்.
“ஹேய் அமைதியாயிரு டி” என்று சித்ரலேகாவை அடக்க முயற்சித்தாள் அத்தை சக்தி.
“நீ சும்மா இரு டாக்டரே..ஏன் உங்க முன்னாடி 4 பேர் வந்து கெஞ்சிட்டே இருக்கணுமா..அப்படி என்ன உங்களுக்கு ஹெட்வெயிட்..” என்று கேட்டாள் சித்ரலேகா.
“டேய் வேலா உன் பொண்டாட்டியை கன்ட்ரோல்
பண்ணுடா” என்று அமைதியாய் சொன்னாள் அத்தை சக்தி.
“அவள கோபத்துல கன்ட்ரோல் பண்ணவே முடியாது தெரியாதா உனக்கு” என்றான் மகன் வேலன்.
அப்பொழுது தாத்தா அத்தை சக்தியிடம் “நீ சும்மா இரு மா.. ஸ்ரீ லேகாவுக்கு சித்ரலேகாதான் கரெக்ட் நீ பேசு பேத்தி..”என்றார் தாத்தா.
சித்ரலேகா பாட்டி ஸ்ரீ லேகாவுக்கு நேராக போய் “பாட்டி தோல்வியை ஏத்துக்கோங்க..கூடவே உறவுகளையும் ஏத்துக்கோங்க அதுதான் மா உங்க கெத்து..நீங்கதான் மா இருக்கிறதுலேயே சீனியர் உமென்..எல்லாருக்கும் ரோல்மாடலா இருங்க”என்றாள்.
ஸ்ரீ லேகா கண்ணீர் மாறி “அப்படின்னா ஒரு கண்டிசன் ஒரு 45 நாள் என் மக ரேணுகாவும்,என் மாப்ள வேலனும் என் கூட என் வீட்ல ஒன்னா இருக்கணும்..ஏன்னா என் மக,மருமகனை இத்தன வருசம் மிஸ் பண்ணிட்டேன்..இனியாச்சும் அவங்களுக்கு எல்லாம் நான் முறையா செய்யணும்” என்றாள்.
ரேணுகா ஓடி சென்று தன் அம்மாவை கண்ணீர் ஓடு கட்டிக்கொண்டாள். கூடவே ரேணுகாவின் கணவன் வேலனும் வந்தார்.
“மாப்ளை என்ன மன்னிச்சிடுங்க” என்றாள் பாட்டி ஸ்ரீ லேகா.
“அத்தை நீங்க என் அம்மா மாதிரி 45நாள்தான
நானும்,ரேணுகாவும் வர்றோம்” என்றார் வேலன்.
அதன்பின் சுஹானாவையும், சக்திவேலனையும் பாட்டி முன் தள்ளி விட்டாள் அத்தை சக்தி.
சுஹானாவும்,சக்திவேலனும் தாத்தா,பாட்டி காலில் விழ மலர் தூவி ஆசீர்வாதம் செய்து பாட்டி சக்திவேலனிடம்.. “பேரா..என் பேத்தியை நல்லா பார்த்துக்கோ..”
“சரி பாட்டி” என்றான் சக்தி.
அத்தை சக்தி தன் மகன் வேலனிடம் “டேய் நீயும் உன் பொண்டாட்டியை கூட்டிட்டு போய் தாத்தா,பாட்டிட்ட ஆசீர்வாதம் வாங்குடா.”
“நான் கூப்பிட்டேன் அவ வரமாட்டேன்றா அம்மா”என்றான்.
“ஏன் டா உன் பொண்டாட்டி இவ்வளவு திமிரா இருக்கா இப்படி இருந்தா எப்படி டா சமாளிப்ப அவள..”
“நான் ஏன் சமாளிக்கிறேன் நீதான் மா அவள வாழ்க்கை முழுக்க சமாளிக்க போற..”
“ஏன் டா..”
“அவ என்ன விட உன்னதான லவ் பண்றா..”என்றான் வேலன்.
“நல்ல வேளை ஞாபகப்படுத்துனடா..”என்றுசொல்லி விட்டு
சித்ரலேகாவிடம் சென்று “உன் டாக்டர் உன் கூட பேசணும்னா மரியாதையா போய் ஆசீர்வாதம் வாங்கு” என்று சொல்ல
சித்ரலேகா கோபமாய் மாப்ளை வேலனோடு சென்று தாத்தா,பாட்டி முன் நிற்க..வேலன் மட்டும் தாத்தா காலில் விழ சித்ரலேகா பாட்டி முன் ஒரு சைடாய் திரும்பி நின்றாள்.
பாட்டி ஸ்ரீ லேகா..சித்ரலேகா முன் சென்று “உன் கர்வம் தான் டி உன் அழகு..என் பேத்தி, உன்ன பார்த்தா என்ன பார்க்கிற மாதிரி இருக்கு” என்று சித்ரலேகாவை கொஞ்சி முத்தமிட்டு ஆசீர்வதித்தாள்.
அதன்பின் இரண்டு மணமக்களையும் வந்திருந்த சொந்த பந்தங்கள் யாவரும் வந்து வாழ்த்தினர்..
சற்று நேரத்திற்கு பின் ரேணுகா 2 மணமக்களையும் தேடி நாத்தனார் சக்தியிடம் வந்து..
“எங்கடி 2 ஜோடியும் ரிசெப்ஷன் டைம் ஆச்சு” என்றாள்.