GG writers
Moderator
ரேணுகா
வேலன் (அத்தியாயம் -4)
அடுத்தநாள் காலைபொழுது விடிந்ததும் ரேணுகா கைவலி இன்னும் சரியாகாததால் தலைமுடியை சீவி ஜடை போட சிரமப்பட..... வேலன் ஜடைமட்டியினை கையில் வாங்கி அவளுக்கு தலைசீவி போட்டுவிட.... வலிகளையும் கடந்து ஒரு பேரானந்தம் ரேணுகாவுக்கு.....அதன்பின் ஆபீஸ்க்கு கிளம்பி போனாள்.
ஆனால் பாதி நாளில் வீட்டுக்கு திரும்பி வந்தாள்....
அவளை பார்த்த வேலன் “ஆபீஸ்ல இருந்து இவ்ளோ சீக்கிரம் ஆக வந்துட்ட..?”
“தலைவலி” என்று கூறிவிட்டு முகவாடலாய் அறைக்கு போனாள் ரேணுகா.
பின்னாடியே கண்ணன் வந்தான் “ரேணுகா வந்துட்டாளா...?” என்றான்.
“ஏன் டா என்ன ஆச்சு” என கேட்டான் வேலன்.
“ராஜேஷ் டார்ச்சர்டா........”
“என்ன செஞ்சான்னு சொல்லு?” என்று கோபமாய் கேட்டான் வேலன்.
“ரேணுகாகிட்ட போய் வேலை செய்ய விடாம பேசிட்டே இருந்தான் டென்ஷன்ல அவ கிளம்பி வந்துட்டா”.
“சரி நான் பார்த்துக்கிறேன்” என்றான் வேலன்.
“டேய் மறுபடியும் அடிச்சிறாத செத்துருவான்டா ராஜேஷு....”
“சரிடா நீ கிளம்பு நான் பேசிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அறைக்கு சென்று ரேணுகாவை பார்த்து கண்ணன் கூறியதை கேட்டான்.
“ஆமாங்க.... ஆனா அவன மறுபடியும் அடிச்சிராதீங்க” என்று பதட்டமாய் சொன்னாள் ரேணுகா.
“நான் என்ன ரௌடியா.... பயப்படாத நாளையில இருந்து அவன் தொல்லை உனக்கு இருக்காது.”
“என்ன செய்ய போறீங்க?”
“அத நாளைக்கு பார்த்து தெரிஞ்சுக்கோ” என்று சொல்லிவிட்டு சக்தி அறைக்கு சென்று சிறிது நேரம் பேசிவிட்டு வந்தான்.
அடுத்தநாள் காலையில் ரேணுகாவோடு சக்தியும் ஒரே கலர் சேலையில் ரேணுகாவை போன்றே மேக்கப் போட்டு இருவரும் பிரிந்து ஆபீசுக்கு கிளம்பினார்கள்.
ரேணுகாவுக்கு பதில் சக்தி போகும் வழியிலே ராஜேஷ் குறுக்கிட்டு போய் காதல் வசனங்களை பேசி ரேணுகா என்று சக்தியிடம் மாட்ட அந்த நேரம் மகளிர் போலீஸ் கீதா அங்கு வர ராஜேஷ் அவர்களிடமிருந்து தப்பிக்க ஊரை விட்டு போரேன் என்று ராஜினாமாவும் கைப்பட எழுதி சக்தியிடம் கொடுத்தான்.ராஜேஷை ஊருக்கே பஸ் ஏத்தி அனுப்பிவிட்டு.. சக்தி ரேணுகாவை காண ஆபீஸ்க்கு சென்றாள்.
ரேணுகா சக்தியை பார்த்ததும் “வாங்க நாத்தனாரே என்கூட கிளம்பிட்டு லேட்டா வந்திருக்கீங்க.”
“இந்தாங்க அண்ணியாரே” என்று ராஜேஷ் ஓட ராஜினாமா கடிதத்தை கொடுத்தாள்.
“ஏய் எப்படி சக்தி....” என்று ஆச்சர்யமாய் கேட்டாள்.
நடந்த எல்லாவற்றையும் சக்தி கூற....
“ஹோ அதான் என்ன மாதிரியே மேக்கப் பண்ணியிருந்தியா.... பிரில்லியண்ட் ஐடியா.... போலீஸ் கரெக்ட் ஆக எப்படி வந்தாங்க?”
“நான், போலீஸ்கீதா, வேலன் எல்லாரும் ஒரே செட் அண்ணியாரே......”
“கிரேட் நாத்தனாரே ராஜேஷ்ன்ற தொல்லை முடிஞ்சுது... தேங்க் யூ....”
“உங்க தேங்க் யூ வேலனுக்கு சொல்லுங்க, இந்த மொத்த பிளானும் வேலனோடது தான்......”
“பரவாயில்லையே உங்க அண்ணனுக்கு அடிதடி மட்டும்தான் வரும் நினைச்சன். காலையில உன்ன எனக்கு துணையா என்கூட இருக்க சொல்லி அனுப்புறாரோன்னு நினைச்சேன்.”
“இல்ல அண்ணி.... கண்ணாட்ட போட்டோ பிரேம் கேட்டிருந்தேன் அவன் வந்ததும் நான் கிளம்பிடுவேன்.”
“ஹேய் நீ இரு சக்தி ஈவினிங் சேர்ந்து போலாம்.”
“இல்ல ரேணுகா ஈவினிங் ஒரு சிநேகிதிய பார்க்கிறதுக்காக ஊருக்கு கிளம்புறேன் திரும்பி வர 2 நாள் ஆகும்” என்று அவள் சொல்லும் போது தொலைபேசி சிணுங்க ரேணுகா எடுத்து பதில் சொல்லிவிட்டு “ஒரு 5 நிமிஷம் இரு பைல் ஒன்னு எடுத்துட்டு வந்துறேன். போன் வந்தா அட்டென்ட் பண்ணு” என்று வெளியே போனாள்.
“சரி என்றாள் சக்தி”
அவள் போய் 10 நிமிடம் சென்று மீண்டும் தொலைபேசி சிணுங்க சக்தி எடுத்தாள்.
“மேனேஜர் சீட் பின்புறம் உள்ள கப்போர்டில் ரெட் கலர் பைல் இருக்கானு பாரு “. போன் ரிசிவரை கீழ் வைத்துவிட்டு சக்தி பைலை தேடி பார்த்து கொண்டிருந்த போது ரேணுகாவின் மாமா சுதர்சன் உள்ளே வந்தான்.
“என்ன பண்ணிட்டு இருக்க ரேணுகா..... வேலன் ஒரு ஆளா... உங்கம்மா சொன்ன மாதிரி அவன் உன்ன நல்லா பார்த்துக்கமாட்டான் இவ்ளோ நாள் வாழ்ந்ததுல நீ புரிஞ்சுருப்ப.. வந்துரு ரேணுகா அவன் வேண்டா உனக்கு.. அவன் உன்ன எவ்ளோ கஷ்டப்படுத்துறான் அங்க கடல் மாதிரி வீடு, சொத்தை விட்டுட்டு வேலன் மாறி பரதேசியோட நீ என்ன பண்ண போற? அவன் எல்லாம் ஒரு ஆம்பளயா...?”
“ஹேய் நிறுத்துறா...” என்றாள் சக்தி ஓங்கி சத்தமாக....
“நான் ரேணுகாவ பார்க்க வந்தேன்...”
“யாருடா நீ..?”
“மரியாதையா பேசு....”
“உனக்கு என்னடா மரியாதை புருஷன் பொண்டாட்டியை பிரிக்க பார்க்குற...”
“நான் ரேணுகாவோட அக்கா புருஷன்...”
“அதுக்கு என் அண்ணன தப்பா பேசுவியா...?”
“எங்க வீட்டுப்பொண்ணு நான் கூப்பிடுறேன் அதுல உனக்கு என்ன பிரச்சனை? “
“யாருப்பா உங்க வீட்டுப்பொண்ணு..?”
“ஸ்ரீரேணுகா.....”
“ஹிம்.. தப்பா சொல்ற....உங்க ஸ்ரீலேகா மேடம் ஓட ஸ்ரீ குடும்பத்தோட ஸ்ரீ ரேணுகா இல்ல அவ, ரேணுகா வேலன்....என் அண்ணி எங்க வீட்டு சொத்து” என்று சக்தி கூறும்போது ரேணுகா உள்ளே வந்தாள்.
“என்ன அண்ணியாரே நான் கரெக்ட் ஆக தான” சொன்னேன்.
“கரெக்ட் ஆகதான் சொன்னிங்க நாத்தனாரே” என்றாள் ரேணுகா.
“ரேணுகா நீ இல்லாதப்ப இவ என்ன எப்படி எல்லாம் மரியாதை இல்லாம பேசுனா தெரியுமா..?”
“தெரியும் சுதர்சன் நீ பேசுனத போன் ரிசிவர் மூலம் கேட்டுட்டுதான் வந்தேன்.”
“ஹேய் நீயும் வேலனும் என்ன ரொம்ப அன்பான தம்பதியா...? இல்லல்ல... அவன் உன்கூட வேண்டா வெறுப்பாதான வாழ்றான்” என்று சுதர்சன் சொல்லும் போதே கண்ணன் உள்ளே வந்து போட்டோவை சக்தியிடம் நீட்டினான்.
“தம்பி சுதர்சா.... இத கொஞ்சம் பார்த்துட்டு பேசு...” என்று போட்டோ கவரை பிரித்து காட்டினாள்... சக்தி அதில் வளைகாப்பில் ரேணுகாவை வேலன் கையில் தாங்கிய போட்டோ பிரேம்ஆகி இருந்தது.
அதிர்ச்சியில் ஊமையாய் நின்றான் சுதர்சன்.
“இன்னும் 2 நாள் கழிச்சு எங்க வீட்டுக்கு வா இதே போட்டோ சீன உனக்கு லைவ் ஆக காட்டுறேன்” என்றாள் சக்தி.
சுதர்சன் தரையில் காலை உதைத்தவாறு வேகமாய் கிளம்பி சென்றான்.
“தேங்க்ஸ் டா கண்ணா” என்றாள் சக்தி.
கண்ணனும் “சரி” என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே சென்றான்.
“சக்தி 2 நாள் கழிச்சு இதே சீன் லைவ் காட்டுறேன்னு எத வச்சு சொன்ன....?ஏதாவது பிளான் பண்ணியிருக்கியா”
“ஐ....ஆசைய பாரு அண்ணிக்கு...எப்ப பாரு உங்களுக்கு யாராவது பிளான் பண்ணனும், நீங்களா எதுவும் செய்ய மாட்டீங்க........”
“சக்தி சொல்லு... எத வச்சு அப்படி சொன்ன...?”
“ஹேய் என்னாச்சு உனக்கு நீ வந்து 43 நாளாகுது டி அப்பம் இன்னும் 2 நாள் தானே.. மிச்சம் இருக்கு அத வச்சுதான் சொன்னேன்” என்று சக்தி சொன்னதும் சட்டென அமைதியாய் அமர்ந்தாள் ரேணுகா..
“ஏய் ரேணுகா என்ன...?”
“பயமா இருக்கு சக்தி.....” என்று கண்ணீர் விட ஆரம்பித்தாள்.
“ரேணுகா அழாத... வேலன் கண்டிப்பா உன்ன ஏத்துக்குவான்...”
“நாள் போனதே எனக்கு தெரியல சக்தி., நீ இப்பதான் ஊருக்கு போணுமா, என்கூட இரு டி.....”
“நான் போறது உனக்கு பிரயோஜனமா இருக்கும்” என்றாள் சக்தி..
அவளை மெல்ல கட்டி கொண்டு “சீக்கிரமா வந்திடு....”என்றாள் ரேணுகா.
“ஏன் இவ்ளோ பயப்படுற” ரேணுகா..
“உன் அண்ணன் என்ன சொல்லுவாரோ....”
“ஏய் ஒரு நிமிஷம், இப்ப எல்லாம் நீ பேசுனா அவன் கேட்குறானில்ல... மனசு விட்டு பேசு டி அவன்கிட்ட.......”
“பேசுறாரு சக்தி... ஆனா எப்ப கோபப்படுவாரோ....”
“ஏய் அவன் சாப்ட் கேரக்டர் டி.......”
“ஏன் சொல்ல மாட்ட அடி வாங்குன எனக்கு தான் தெரியும்.”
“ரேணுகா இந்த போட்டோபிரேம் உன் ரூம்ல மாட்டு,சரியா 45 வது நாள் நீங்க சேர்றதை பார்க்க வந்துருவேன் டி...” என்று சொல்லி கிளம்பினாள் சக்தி.
ரேணுகா ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு போனதும் மிக சோர்வாய் தன் அறைக்கு சென்று போட்டோவை ஓரம் வைத்து விட்டு ஓய்வு எடுக்க போனாள்.
அதேநேரம் அகிலாவின் கணவர் வீட்டிற்குள் வந்தார். அகிலாவை தன்னோடு அனுப்பும்படி வேலனிடம் கேட்டார்.
“என்ன மாமா இது வளைகாப்பு பண்ணி 4நாள்லியே அக்காவ கூப்பிடுறிங்களே....?”
“இல்ல மச்சான் அகிலா டெலிவரி எங்க வீட்ல வச்சு பார்த்துக்கலாம்....என் அப்பா, அம்மா ஊர்ல இருக்காங்க என் வீட்ல நான் மட்டும்தான.....”
“ஏன் மாமா இப்படி கேட்குறீங்க?எங்க வீட்ல வச்சு பார்க்கறதுதான வழக்கம்......”
“மச்சான் நான் எதுக்கு சொல்றன்னு உனக்கு இப்ப புரியாது... நாளைக்கு ரேணுகாவுக்கு இதே சூழ்நிலை வரும் போது உனக்கு புரியும்.”
வேலன் மீண்டும் பேச தொடங்கும் முன் அவளது அம்மா கிச்சனுக்கு வருமாறு சைகை காட்டினாள்... வேலனும் “ஒரு நிமிடம்” என்று கூறிவிட்டு எழுந்து போனான்....
“என்னம்மா எதுக்கு கூப்பிட்ட....?”
“ஏன்டா மாமா கூட பதிலுக்கு பதில் பேசுற...”
“அம்மா அக்காவ கூப்பிடறார் மாமா எப்படி அனுப்ப முடியும்.....”
“ஏன்டா அனுப்ப முடியாதுன்னு சொல்ற..”
“அம்மா இங்க இருந்து ஹாஸ்பிடல் 10 நிமிஷம்தான் அக்காவுக்கு வாக்கிங் ஏரியா இருக்கு பக்கத்துல யழனி, பழக்கடைன்னு அக்காவுக்கு தேவையானது எல்லாம் வாங்கலாம். மாமா ஊரு கிராமம் அம்மா எதுனாலும் 6கி.மீ வெளிய வரணும்.”
“உனக்கு சொன்னா புரியாது... உன் அக்காவ கூப்பிட்டு என்கிட்ட சொன்னது எல்லாம் அவகிட்ட சொல்லு அவ என்ன சொல்றான்னு பார்த்துட்டு போய் உன் மாமாகிட்ட பதில் சொல்லு.”
“இதோ இப்பவே கூப்பிட்டு கேட்கிறேன் அக்கா இங்க இருக்கறேன்னுதான் சொல்லுவா பாரு.”
“கூப்பிட்டு பேசு” என்று சொல்லிவிட்டு காபியை எடுத்து கொண்டு போய் மாப்பிளைக்கு கொடுத்து விட்டு ரேணுகா அறைக்கு சென்று அவளை எழுப்பி “அண்ணன் வந்திருக்கார் கீழ வாம்மா” என்று சொல்லிவிட்டு கீழே சமையல் அறைக்கு வந்தாள் அம்மா.
அங்கு வேலன் அம்மாவிடம் கூறிய அனைத்தையும் அகிலாவிடம் சொல்ல... அவளோ.. “என்ன மாமா கூட அனுப்பி வைடா தம்பி.....”
“அக்கா அதான் நான், சக்தி, அம்மா, பூமா எல்லாரும் இருக்கோம்ல மாமா வேணா வந்து இங்க நம்ம கூட இருக்கட்டும்.....”
“இல்லடா சரியா வராது. அவருக்கு இது பிடிக்காதுடா” என்று சொல்லி கடந்து போனாள்.
“அக்கா இரு என்ன பிடிக்காது மாமாவுக்கு சொல்லு.”
“மாமா என்ன திட்டுனா, கோபப்பட்டா என்னடா செய்வ..”
“ஏன் திட்டுறீங்க, கோபப்படுறீங்கன்னு கேட்பேன்.”
“நீ கேட்கிறது அவருக்கு பிடிக்காது காரணமே இல்லாம கூட சண்டை வரும்.... ஆனா சமாதானம் ஆயிருவோம்., அவருக்கு காலையில என் முகத்தை பார்க்கணும், அவர் குழந்தையோட பேசணும், அவர்தான் வாக்கிங் கூட்டிட்டு போகணும் இப்படி சொல்லிட்டே போகலாம் அதான் என்ன அனுப்பி வைன்னு சொல்றன்” என்று கடந்து போனாள் அகிலா.
“வேலா என்னடா சொல்ற இப்ப....” என்று கேட்டாள் அம்மா.
“அம்மா நீங்க எப்படி சமாளிப்பீங்க....?”
“அகிலா டெலிவரி வரையும் நான் அவங்க வீட்லயும், இங்கேயும் மாறிமாறி இருக்குறேன்டா.. நீ ஒன்னும் கவலைப்படாத ரேணுகாவுக்கு எல்லா வீட்டு வேலையும் சொல்லி கொடுத்துருக்கேன் அவ பார்த்துக்குவா....”
“ஏன்மா அக்கா இந்த பதிலைதான் சொல்லுவான்னு எப்படி தெரிஞ்சுக்கிட்ட.....”
“டேய் நான் உங்க அம்மாடா....நீ ரேணுகாவ அடிச்சு பிரச்சனை ஆனப்ப கூட அகிலா எதுலயும் கலந்துக்கலையே... அவ சிரிச்சு 4நாள் ஆச்சுடா... இப்பதான் மாப்பிளைய பார்த்ததும் பேசுறா...... என்னடா முகத்தை இப்படி வச்சிருக்க.....?”
“பின்ன என்னம்மா நான் அவ்ளோ தூரம் சொல்றன் அக்கா போரேன்றாளே.......”
“வேலா பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆனதுமே வாழ்க்கை மாறிடும்.. நீ தங்கதட்டுல வச்சு மஹாராணி மாதிரி பார்த்துக்கிட்டாலும் அவமனசு வேலைக்காரி மாதிரி நடத்துற புருஷனதான் தேடும்... எல்லா உறவும் முக்கியம்தான் ஆனா இதயத்தோட இணைஞ்சு இருக்குற உறவு கணவன் மனைவி உறவு மட்டும்தான்டா......” என்று அவள் அம்மா சொல்ல சொல்ல அவன் ரேணுகாவை கற்பனை செய்தான். பணக்கார வீட்டு பொண்ணு நமக்காக தானே வந்து கஷ்டப்படுறா என்ற எண்ணம் அவனுக்குள் வந்தது.
“டேய் வேலா ரேணுகாகிட்ட கோபப்படாத, சண்டை போடாத, ஹாம் சக்தி சொன்னா அவ வர வரையும் எதுவும் ரேணுகாட்ட தப்பா பேசிடாதன்னு புரிஞ்சுதா” நான் பூமா கூட்டிட்டு கிளம்புறேன் டா..
ரேணுகாவிடம் பேசி விட்டு அகிலா, பூமா, அம்மா என அனைவரும் கிளம்பி சென்றனர்.
வேலன் ரேணுகாவுடன் இருந்த ஆரம்பநாட்களை நினைக்கவே.... ‘நம்ம அக்கா மாதிரி அவளுக்கும் நிறைய எதிர்பார்ப்புகள் இருந்திருக்கும்ல.... மஹாராணி மாறி வாழ்ந்தவ.......... எதுக்கு என்கிட்ட கெஞ்சி, போராடி, அடிவாங்கி எவ்ளோ கஷ்டப்பட்டுட்டா.... நான் ஏன் இவ்ளோ கல்லா மாறி போனேன்.... இப்பவே சாரி சொல்லணும்’ என்று அவளை தேடி மாடிப்படிகளில் இறங்கினான்.
ரேணுகா வீட்டு வாசலில் அமர்ந்து அவள் மனதிற்குள் அகிலாவோடு பேசிய வார்த்தைகள்.... ‘ஏன் அகிலா போறீங்க? என்று கேட்டதற்கு..
‘எங்க கல்யாணத்துக்கு அப்புறம் இதுதான் எங்க முதல் பிரிவு இந்த 4நாளும் நரகமா இருந்துச்சு ரேணுகா... என்றாள் அகிலா.’
ரேணுகா யோசித்தாள் ‘நான் மட்டும் யு. எஸ். போகாம இருந்திருந்தா எங்க வாழ்க்கை இப்போ ரொம்ப நல்லா இருந்திருக்குமே.....’ என்று நினைக்கும் போதே வேலன் கூப்பிட்டான்.
“உன்கிட்ட ஒன்னு சொல்லணும் ரேணுகா.”
“நானும் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்” என்றவள் சொல்லியதும் தொலைபேசி சிணுங்கியது.. போன் எடுத்தான் வேலன்.
“சக்தி இல்லடா ஊருக்கு போய் இருக்கா... இரு நான் வரேன்னு” சொல்லி போனை கட் செய்தான்.
“என்னாச்சுங்க” என்று கேட்டாள் ரேணுகா.
“அமராவதிக்கு வலிப்பு வந்து ஹாஸ்ப்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருக்காங்க கண்ணன்தான் போன் பண்ணான் வா போலாம்” என்று இருவரும் கிளம்பினர்.
ஹாஸ்ப்பிட்டளில் கண்ணன் வேலனை பார்த்ததும் ஓடி வந்து கட்டிபிடித்து அழுது தீர்த்தான்.... “வேலா பயமா இருக்குடா ஐ. சி. யுல இருக்காடா....”
“பயப்படாதடா ஒன்னும் ஆகாது... அழாத டா....” டாக்டர் என்ன சொன்னாங்க....
“டிரீட்மென்ட் போயிட்டு இருக்குடா...”
கண்ணனோடு நின்ற வேலனின் தாய்மாமாவும் கண்ணீர் விடுவதை பார்த்த ரேணுகா அவரிடம் “சித்தப்பா அழாதீங்க.. அமராவதி நல்லா ஆயிடுவாங்க...”
“எனக்கு ஒரே பொண்ணுமா...” என்று சொல்லி அழுதார்...
அவரை ரேணுகா சமாதானம் செய்தாள்.
டாக்டர் வெளியே வந்து “பயப்பட தேவை இல்ல அபாயகட்டத்தை தாண்டிட்டாங்க.. ஆனா இன்னும் 2நாள் முடிஞ்சதும் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம். இங்க ஒருத்தர் மட்டும் இருங்க மத்தவங்க விசிட்டர் ஹால்ல இருங்க...”
“என்னங்க நான் இங்க இருக்கேன். நீங்க அண்ணா, சித்தப்பா 3பேரும் அந்த பக்கம் இருங்க” என்றாள் ரேணுகா.
வேலனும் சரி என இருவரையும் அழைத்து போனான்.
“அழாதடா கண்ணா....”
“என்கிட்ட ஏதோ சொல்லணும்னு வீட்டுக்கு வர சொன்னாடா போய் பார்த்தா வலிப்பு வந்து துடிச்சிட்டு இருந்தாடா... என்கிட்ட பேசவே இல்ல..... அவ என்ன தூக்கி சுமக்குற சாமிடா....” என்று அழுதான் கண்ணன்.
“அழாதீங்க மாப்பிள்ளை டாக்டர்தான் நல்லா ஆயிட்டான்னு சொன்னாங்களே” என்றார் கண்ணனிடம் வேலனின் மாமா.
“அவ என்கூட பேசலையே மாமா” என்றான் கண்ணன்.
“டேய் அவ கண்திறந்ததும் உன்கிட்ட முதல பேசுவா அழாத” என்று கண்ணாவை சமாதானம் செய்தான் வேலன்.
இரவு 1மணி அமராவதி கண் விழித்து கூப்பிடுவது போல் கண்ணன் விழித்து சடார் என ஐ. சி. யுக்கு ஓடினான்.
கண்ணன் ஓடும் சத்தம் கேட்டு வேலன் எழுந்து அவன் பின்னே ஓடி ஐ. சி. யுக்குள் போக நினைத்தவனை கைகளை பிடித்து தடுத்து நிறுத்தி கண்ணாடி வழி பார்க்க சொல்லி சைகையில் சொன்னாள் ரேணுகா.
ஐ. சி. யுவில் அமராவதி உண்மையில் கண் விழிக்க கண்ணன் கண்ணீரும் சிரிப்புமாய் அவள் கையைபிடித்து உச்சியில் முத்தமிட்டு பேசி கொண்டு இருந்தான்.
இதை பார்த்த வேலன் ரேணுகாவிடம் “நான் விசிட்டர் ஹால்க்கு போரேன்... ஏதாவது வேணும்னா கூப்பிடு” என்று கடந்து போனான்.
விசிட்டர் ஹாலில் வேலனது மாமா அவரது மணிபர்சில் இறந்து போன மனைவியின் போட்டோவிடம் பேசி கொண்டிருந்தார்.... “அம்மா நம்ம பொண்ணு அமராவதி பிழைச்சிட்டான்னு” அவர் சொல்லிட்டு இருக்கவே....
வேலன் அவரிடம் “ஏன் மாமா நீ அத்தை இறந்ததுக்கு அப்புறம் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கல......”
“மாப்பிளை அவ இன்னும் வாழ்ந்துட்டுதான் இருக்கா என் மனசுல....”என கண்ணீர் விட்டு “அவ வாழ்ந்த மனசுல வேற யாரையும் வைக்க முடியல டா.....” என்று சொல்லி சற்று நகர்ந்தவர் பின் திரும்பி
மாப்ள ஒன்னே ஒன்னு சொல்றன்டா “காதலர்கள் கூட காதல்ல தோத்துருவாங்க, ஆனா ஒரு புருஷன் பொண்டாட்டி மேல வச்ச உண்மையான காதலும், ஒரு பொண்டாட்டி புருஷன் மேல வச்ச உண்மையான காதலும் தோத்ததா சரித்திரமே இல்லடா” என்று கடந்து போனார் வேலனின் மாமா.
அவர் சொன்னதும் திருமணமான நாட்கள் வேலனுக்கு நினைவு வந்தது.
அடுத்தநாள் காலை டாக்டர் வேலனின் மாமாவிடம் “உங்க பொண்ணு அமராவதி கர்ப்பமா இருக்காங்க..அண்ட் கண்ணன் நீங்க அப்பா ஆக போறீங்க” என்று சந்தோசமான செய்தி சொன்னதும்...வேலன், ரேணுகா, மாமா என மூவரும் வாழ்த்து சொன்னார்கள் கண்ணனுக்கு....
“நீங்க எல்லாரும் கிளம்புங்க... நான் அமராவதிய பார்த்துக்குறேன்” என்றான் கண்ணன்.
மூவரும் சிரித்தபடி கிளம்பினர்.
பின் வீட்டிற்கு வந்ததும் ரேணுகா “என்னங்க இன்னைக்கு 45வது நாள் என்றாள்.”
“நீ இன்னைக்கு லீவு போடு நான் வந்து பேசுறேன்” என்றான் குறும்புன்னகயோடு......
“என்ன லீவு போட சொல்லிட்டு நீங்க எங்க போறீங்க.......”
“இந்த பைலை ஆபீஸ்ல கொடுத்துட்டு வர்றேன்” என்று அவளை விட்டு கடந்து போனான்.
அவளும் ஆசையாய் வேலனுக்காக தயார் ஆனாள். ஆனால் வெகுநேரமாகியும் வேலன் வரவில்லை.... அதன்பின் காலிங்பெல் சத்தம் கேட்டு வேலன் என்று ஆசையாய் கதவை திறந்தாள்.
எதிரில் நின்றது மதனும், சுதர்சனும்..
“ரேணுகா போலாமா” என்று கேட்டான் மதன்.
“எங்க போலாமா...?”
“உன் புருஷன் உன்ன வேண்டான்னு சொல்லிட்டான்.... இந்த 45நாள்ல உன்ன பிடிச்சிருக்கு, நேசிக்குறேன் அவசொன்னானா இல்லல எப்பவாவது உன்ன நெருங்கி வந்தானா? வரலல்ல அவனுக்கு உன்ன பிடிக்கலன்னு என்ன கூட்டிட்டு போக சொன்னான்,”என்று அவள் கையை தொட்ட மாத்திரத்தில்....
கோபத்தில் எரிச்சலின் உச்சியில் செருப்பை கழட்டி அவனை கதறகதற அறைந்து ஓடவிட்டு....”செத்தாலும் ரேணுகாவேலனாதான் சாவேன்டா....” மாமா என்று கோபமாய் கத்தினாள்.
“சொல்லுமா” என்று பதட்டமாய் பதறினான் சுதர்சன்....
“அவர் எங்க?” என்று கேட்டாள் ரேணுகா.
“ஆபீஸ் மீட்டிங் ஹால்ல இருக்காரு” என்று சொல்லிவிட்டு சுதர்சன் மனதில் ‘ரேணுகா இவ்ளோ கோபப்பட்டு நான் பார்த்ததே இல்ல சாதுமிரண்டா காடு கொள்ளாதுங்கிறது சரியா இருக்கு’ என்று நினைத்தான்.
மீட்டிங் ஹாலில் வேலன் தனியாக இருந்தான். ரேணுகா நேராக வேலனிடம் போய் “மதன்கிட்ட என்ன சொன்னீங்க.....?திரும்புங்க....”தாலியை வேலனுக்கு நேராக நீட்டி “இதுக்கு என்ன அர்த்தம்ன்னு தெரியுமா...?”
அமைதி காத்தான் வேலன்.
“நீங்க தாலி கட்டுனதாலதான் நான் உங்ககூட இருக்கேன்” என்று அவள் வேகமாய் சொன்ன வார்த்தையில்..... கோபத்துடன் வேலன் தாலியை பிடித்து கையோடு அவள் கழுத்திலிருந்து எடுத்தான்........
ஒரு நிமிடத்தில் நிலைகுலைந்து போனாள்.....
“போடி, மொத்தமா போயிடு என்ன விட்டு” என்று கத்தினான்.
ரேணுகா இடி விழுந்தது போல பேச வார்த்தையின்றி கண்ணீரோடு வெளியேறினாள்.