வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ரேணுகா 💝வேலன் (அத்தியாயம் -5)

GG writers

Moderator
இரவு 7.30 மணியளவில் இரயில் நிலையத்தில் சக்தி வந்திறங்கினாள்.

அவளது மாமா “இப்பதான் வர்றியாமா” என்றார்.

“ஆமா மாமா வேலனுக்கு போன் பண்னேன் வர்றன்னா கூப்பிடறதுக்கு...”பேசி கொண்டு இருக்கும் போதே இரயில் வரும் தண்டவாளத்தில் ஒரு பெண் நடப்பது போன்று தெரிந்தது....

சக்தி வேகமாய் அந்த பெண்ணை நடைமேடைக்கு கொண்டு வந்து வெளிச்சத்தில் பார்த்தால் அது ரேணுகா.

ரேணுகா உயிர் இல்லாத பிணம் போல அமைதியாய் இருந்தாள்.

“ரேணுகா என்னாச்சுமா ஏதாவது பேசுமா... ரேணுகா பேசு?”

“எல்லாம் முடிஞ்சு போச்சு.... என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு சக்தி.. வேலன் தாலிய கழட்டி அனுப்பிட்டார்” என்று அவள் கதறியது நெஞ்சை உறைய வைக்கும் கதறல் அது.

“நான் பேசுறேன் ரேணுகா.... நீ அவசரப்படாத....”

“ வேண்டாம் சக்தி கட்டாயப்படுத்தி வாழ வச்சா அது நிலைக்காது... என்ன சாகவிடு சக்தி.”

“நான் கட்டாயப்படுத்தல... எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடு ரேணுகா எல்லா உண்மையும் நான் நிரூபிக்கிறேன்” என்று அவள் முன் மண்டியிட்டு கண்ணீரோடு கேட்டாள் சக்தி.

சிறிது நேரத்திற்கு பின் வேலன் இரயில் நிலையம் வந்தான்...

அங்கு உள்ள ஸ்டோன்பெஞ்சில் சக்தி அருகே வந்து அமர்ந்தான்... சுற்றி யாருமில்லா இரயில்நிலையம்...

“ ஏன் கோபமா இருக்க வேலா” என்று கேட்டாள் சக்தி.

“ரேணுகாவ அனுப்பிட்டேன்” என்றான்.

“சரி உனக்கு பிடிக்கல அதான் அனுப்பிட்ட.......”

“இல்ல சக்தி ரொம்ப பிடிச்சதாலதான் அனுப்பிட்டேன்.”

“பிடிச்சிருந்தும் ஏன்டா அனுப்புன....?”

“நமக்கு ரொம்ப பிடிச்சவங்களுக்கு நம்மள பிடிக்கணும்ல சக்தி.”

“அவ சொன்னாளா உன்ன பிடிக்கலன்னு...?”

“இல்ல அவங்க அம்மா சொன்னாங்க...”

“எப்ப சொன்னாங்க...?”

“இன்னைக்கு ஆபீஸல பைலை கொடுக்க போயிருந்தப்போ அங்க ரேணுகா சீட்ல அவங்க அம்மா இருந்தாங்க... சிறிது நேரத்திற்குமுன் நடந்தவை......

“ வேலன் ரேணுகா வேண்டான்னுதான சொன்ன இப்ப ஏன் அவளை வீட்ல வச்சிருக்க?” என்று கேட்டாள் ஸ்ரீலேகா.

“அது என் விருப்பம் மேடம். நான் உங்க பொண்ணு ஸ்ரீரேணுகாவ தான் வேண்டான்னு சொன்னேன் என் கூட என் வீட்ல இருக்கிறது “ரேணுகாவேலன்” என்னோட மனைவி..எனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்த... அவளை எப்படி நான் விடுவேன் மேடம்.”

“ஹய்யோ வேலன் உன்ன பார்க்க பார்க்க சிரிப்புதான் வருது.... அவ உன்கிட்ட வந்து சொன்னாளா.... உனக்காகதான் வந்தேன்னு....?”

“சொல்லணும்னு அவசியமில்ல மேடம் அவ மனசு எனக்கு தெரியும்.......”

“ஏய் முட்டாள்.... உன்ன மாப்பிளையா செலக்ட் பண்ணது ரேணுகாவோட அப்பா... அவர் கட்டாயப்படுத்துனதால தான் அவ உன்ன கல்யாணம் பண்ணா.... அவர் கட்டாயப்படுத்துனதால தான் உன்ன தேடி வந்தா..... இப்பவும் அவ உன் கூட வாழ்ந்தான்னா அதுவும் அவங்கப்பாவுக்காகதான் வாழ்வா...... அவ உன்ன நேசிக்கவே இல்ல அதான் உண்மை...”

ஸ்ரீலேகாவின் இந்த வார்த்தைகளை கேட்ட போது வேலன் இதயத்தில் முள் குத்தியது போன்ற ஒரு வலி அவற்றை பொறுத்து கொண்டு பதில் சொன்னான்.

“ நான் ரேணுகாட்ட கேட்டு தெரிஞ்சுக்குறேன்” என்று சொல்லி வெளியேற நினைக்கும் போது சுதர்சன் அவனை தடுத்தான்.

“அவ உன்ன உண்மையாவே நேசிச்சிருந்தா இதுக்குள்ள நீங்க ஒன்னா சேர்ந்து வாழ்ந்துருப்பிங்கள...?” என்றான் சுதர்சன்.

“என் பொண்டாட்டி என் மேல பாசமாதான் இருக்கா..... அத உங்களுக்கு ப்ரூவ் பண்ண வேண்டிய அவசியம் எனக்கில்ல வழியை விடுடா...” என்று சுதர்சன் கைகளை தட்டிவிட்டு அவன் செல்ல....

“டேய் வேலா ஆம்பளயாடா நீ என் பொண்ணுக்கு உன்ன பிடிக்கலன்னு சொல்றன் அப்படியும் பாசமா இருக்கானு சொல்ற.. நீ தாலி கட்டிட்ட அந்த ஒன்னுக்காகதான் அவ உன் கூட வாழ்வாடா...உன்ன விரும்பி நேசிச்சு உன் கூட வாழ மாட்டா.. ஞாபகம் வச்சுக்கோ...” என்றாள் ஸ்ரீலேகா.

வேலனுக்குள் தீ பற்ற வைத்தது போல் அப்படி ஒரு கோபத்துடன் அறையை விட்டு வெளியே வந்தவன் வேகமாய் நடந்தான் கார்பார்க்கிங்கில் வேலனுக்காக காத்திருந்தான் மதன்.

“சார் ரேணுகாவ என் கூட அனுப்புங்க என்று மதன் கேட்ட மாத்திரத்தில் அவன் கன்னங்களில் தொடர்ச்சியாக 4அறை அறைந்து அவன் கழுத்தை பிடித்த வேலன்.. “அவ என்னோட ஃ வொயிப் டா..என்ல பாதிடா, எப்படி டா அவளை கேட்ப” என்று மதன் கழுத்தை நெறித்தான்.

“இந்த 45 நாள்ல ஒரு நாளாவது அவ உங்கள நெருங்கி வந்தாளா.....? உங்கள நேசிக்கிறன்னு சொன்னாளா..... அட்லீஸ்ட் உங்கள பிடிச்சிருக்குன்னாவது அவ சொன்னாளா நான் போயிடறேன்” என்று மதன் சொன்ன மாத்திரத்தில் அதிர்ச்சியாய் கைகளை அவன் மேலிருந்து எடுத்தான் வேலன்.

“புரிஞ்சுக்கோங்க சார், நீங்க தாலி கட்டுனதால தான்அவ உங்க கூட இருக்கா... ஏன் சார் பிடிக்காத உங்ககூட வாழ்றத விட பிடிச்ச என் கூட வாழட்டுமே....” என்று மதன் சொன்னவுடன் திரும்பி மதனை மிதித்து தள்ளிவிட்டு

ஆஃபீசுக்குள் மீட்டிங் ஹாலுக்கு சென்று “என்ன நீ விரும்பலையா ரேணுகா” என்று கண்ணீரோடு யோசித்தான்.......

தாலி கட்டுன கட்டாயத்தாலதான் அவ என் கூட இருக்கா என்று மதனும், ஸ்ரீலேகாவும் கூறியது வேலனை நிலைகுலைய வைத்து திருப்பிதிருப்பி அந்த சொல்லை நினைத்து அவன் மனவேதனைப்பட்ட நேரத்தில்.... ரேணுகா உள்ளே வந்து தாலிகட்டுனதாலதான் உங்ககூட இருக்கேன்னு அவ வாயால சொன்னதும் தாங்க முடியாம தாலிய கையோடு எடுத்தேன்” என்றான் சக்தியிடம்..............

இதையெல்லாம் வாக்கிடாக்கி மூலம் ரேணுகா கேட்கும்படி அவளை ஓர் அறையில் அடைத்தாள் சக்தி.

வேலன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் கண்ணீரோடு இல்ல என்று தலையசைத்தபடி கேட்டு கொண்டு இருந்தாள் ரேணுகா.

“சரி விடுடா இந்த ரேணுகா போனா வேற ஒரு மேனகா” என்றாள் சக்தி.

“ அப்படியில்ல சக்தி” என்றான் வேலன்.

“வேற எப்படி”என்றாள் சக்தி.

முதல் பார்வையில காதல் வரும்னு ரேணுகாவை பார்க்கிற வரையும் நான் நம்பல.... கல்யாணத்தப்பம் அவ அரண்மனை மேல்மாடியிலிருந்து கீழ இறங்கி மணமேடைக்கு வரும் போது பௌர்ணமி நிலா மஞ்சள் பட்டுசேலை கட்டி என் கூட வந்து நின்ன மாதிரி இருந்துச்சு..அவ முதல் பார்வையிலேயே நான் மொத்தமா தொலைஞ்சிட்டேன்... அவ பேசறதை கேட்கும் போது, அவ கூட இருக்கும் போதும் எனக்குள்ள காஷ்மீர் பனியில இருக்குற மாதிரி சந்தோசமா இருந்துச்சு.......நான் தான் அவளை யு.எஸ். அனுப்புனேன். ஆனா அவ இல்லாம ரூம்ல இருக்க முடியல...... அவ முதல் நாள் கட்டுன சேலைதான் எனக்கு அவ கூட இருக்கிற
ஃ பீலிங் கொடுக்கும்..... ரொம்ப மிஸ் பண்ணுனேன். அவ இல்லாத நாள் எல்லாம் சொல்ல முடியாத அன்பை கடிதங்களா எழுதி அவளோட ஒவ்வொரு புக்லயும் வச்சன்..... அவளுக்காக சேலை,வளையல், ஜிமிக்கின்னு சேர்த்து வச்சிட்டே அவ யு.எஸ். ல இருந்து வந்ததும் கொடுத்து என் மனச சொல்லணும்னு அவளுக்காக வெயிட் பண்ணுனேன்.. ஆனா என்னால இப்ப வரையும் சொல்ல முடியல என்று கதறி கண்ணீர் விட்டான்..

நம்ம வீட்ல அவ இருந்தப்பதான் ஒன்னு தெரிஞ்சுகிட்டேன்... என்ன அறியாமலே என் மனசு அவளுக்கு நெருக்கம் ஆயிடுச்சு..... என்னால அவளை வெறுக்கவே முடியாத அளவுக்கு நான் அவளை நேசிக்கிறேன்....”

வேலன் பேசபேச தனி அறையில் கேட்டு கொண்டு இருந்த ரேணுகா சக்தி கொண்டு வந்த பையில் வேலன் சொன்னபடி கடிதங்கள், பரிசு பொருட்களையும் தேடிபிடித்து அவற்றை எல்லாம் பிரித்து பார்த்து கடிதங்களை வாசித்து கண்ணீரோடு அதை நெஞ்சோடு அணைத்து கொண்டாள்.

மறுபுறம் வேலன் தொடர்ந்து பேசினான் சக்தியிடம்.....

“ஆனா என் ரேணுகா மனசுல நான் இல்லையே” என்று ஏங்கியே கண்ணீர் விட்டான்.

அப்போது ரேணுகாவின் அப்பா அங்கு வந்து “தப்பா புரிஞ்சுக்கிட்டடீங்களே மாப்பிளை” என்றார்.
அவரோடு ரேணுகா வயதுள்ள ஒரு பெண் வந்தாள்.. “வேலா என்ன யாருன்னு தெரியுதா...?” என்று கேட்டாள்.

“நீங்க யாருன்னு தெரியலையே” என்றான் வேலன். சக்தி அவன் தோளை தட்டி “இவ முன்னாடி நம்ம எதிர்வீட்ல இருந்தவ ஹாசினா....” என்றாள்.

ஹாசினா பேசினாள் வேலனிடம்... “வேலா உனக்கு ரேணுகாவ 2 மாசமாதான் தெரியும், ஆனா ரேணுகாவுக்கு உன்ன 1 வருஷமா தெரியும் என்று ரேணுகாவை பற்றிய முன்கதை சொல்கிறாள்...1 வருடத்திற்குமுன்....
ஒரு நாள் நல்ல மழை ஹாசினாவை தேடி வந்திருந்தாள் ஹாசிபா.. பர்தா அணிந்திருந்தாள். அவளை வேலனின் அம்மா உள்ளே வா என அவள் வீட்டுக்குள் அழைத்து செல்கிறாள்.

“ஹாசினா லைன்ல இருக்கா பேசும்மா” என்று தொலைபேசியை காண்பித்து விட்டு போனாள் வேலனின் அம்மா.

ஹாசிபா போனை எடுத்து காதில் வைத்தாள்... “ஏய் கொஞ்சம் நேரம் அவங்க வீட்லயே இரு டி பயப்படாத...நான் மழையில மாட்டிக்கிட்டேன் சீக்கிரம் வந்துருவேன்”என்று போனை வைத்தாள் ஹாசினா.

ஹாசிபாவும் போனை வைத்து திரும்ப வேலனின் அம்மா, “பயப்படாதம்மா ஹாசினாவும், என் பொண்ணுங்க 2 பேரும் சேர்ந்துதான் வெளிய போனாங்க, இப்ப வந்திருவாங்க..... நீ நல்லா நனைஞ்சிருக்கியே.... என் பொண்ணுங்க டிரஸ் தரட்டுமா மா.....”

“இல்ல பரவாயில்லை மா என்கிட்டயே டிரஸ் இருக்கு மாத்திக்குறேன் வாஷ்ரூம் எங்க இருக்கு அம்மா...”என்று கேட்டாள் ஹாசிபா.

“மாடியில் ரூம்லயே இருக்கு போய் மாத்திட்டு வாம்மா சூடா காபி குடிக்கலாம்”என்றாள் வேலனின் அம்மா.

ஹாசிபா சிரித்தபடி “சரி” என தலையசைத்து மாடியில் வேலனின் அறைக்குள் சென்று அங்கு உள்ள குளியல் அறைக்கு சென்று கதவை மூடினாள்.

அந்நேரம் வேலனும், கண்ணனும் அறைக்குள் வந்து பேச ஆரம்பித்தனர்.

“டேய் வேலா எந்த மாதிரி பொண்ணுதான் உனக்கு வேணும். ஏன்டா பார்க்குற பொண்ணு எல்லாம் இப்படி பேசியே கலைச்சுவிடற....”.

“நான் கலைக்கலடா உண்மைய சொன்னேன்” என்றான் வேலன்.

“என்ன உண்மை என்கிட்ட சொல்லு.”

“டேய் எனக்கு அப்பா இல்ல.... என் வீட்ல நான் ஒரே ஆம்பள... கல்யாணத்துக்கு அப்புறம் நிறைய அட்ஜஸ்ட் பண்ணனும் என் மனைவி. என் அம்மா, அக்கா, தங்கச்சியை அவ ஏத்துக்கணும்.நான் எப்பவும் என்அம்மாக்கும், அக்காதங்கச்சிக்கும் தான் சப்போர்ட் ஆக இருப்பேன் அதே நேரம் அவகிட்ட அன்பு குறையாம இருப்பேன்....”

“அடப்பாவி வேலா இததான் சொன்னியாடா எல்லா பொண்ணுகிட்டேயும் அதுனாலதான் அவளுக எல்லாம் உன்ன வேண்டான்னு சொன்னாங்களா..... டேய் இந்த காலத்துல எந்த பொண்ணும் புருஷன் தனக்கு சப்போர்ட் ஆக இருக்கனும்னுதான் நினைப்பாடா... இதை எல்லாம் முன்னாடியே சொன்னா எவடா உன்ன கல்யாணம் பண்ணுவா.....”

“டேய் உனக்குதான் புரியல... கல்யாணம் பண்ணி வர்ற பொண்ணுக்கு எத்தனையோ எதிர்பார்ப்புகளும், ஆசைகளும், கனவுகளும் இருக்கும். அது நிறைவேறாம போயிட்டா வாழ்க்கையே வீணாயிடும்டா.....”

“என்ன என்னமோ சொல்ற எனக்கு புரியலடா வேலா”

“டேய் உனக்கு புரியுற மாதிரியே சொல்றன் 2 கண்ல ஒரு கண் என் குடும்பம் இன்னொரு கண் என் பொண்டாட்டி இரண்டையும் எதுக்காகவும், யாருக்காகவும் நான் விட்டுகொடுக்க மாட்டேன்.”

“அப்ப லவ் ஆச்சும் பண்ணி தொலை, உனக்கு எல்லாம் அரேஞ்சு மேரேஜ்ல எவளும் கிடைக்கமாட்டா.”

“நோ டா தம்பி.... என்னோட மனைவிதான் என் முதல்காதலி, என் வாழ்நாள் காதலியும் அவ மட்டும்தான்.... என் சப்போர்ட்தான் பேமிலிக்கு....ஆனா என் லவ் 100%என் மனைவிக்கு மட்டும்தான்.”

வேலன் சொன்னது எல்லாவற்றையும் குளியல் அறையில் உள்ள ஹாசிபா சுவாரஸ்யமாய் கேட்டு கொண்டு இருந்தாள்.

சிறிதுநேரம் சத்தம் ஏதும் இல்லாததால் கதவை திறந்து வெளியே வந்தாள்...

மாடியில் நின்று வேலனை முதல்முறையாக பார்த்தாள்.

வேலன் அவனது அம்மாவின் கால்விரல்களுக்கு நெயில் பாலிஷ் பூசிவிட்டு தன் அம்மாவிற்கு தலைசீவி மேக்கப் செய்து கொண்டிருந்ததை ரசித்து பார்த்து கொண்டிருந்தாள்.

அப்பொழுது ஹாசினா உள்ளே வந்து அவர்களிடம் பேசிவிட்டு ஹாசிபாவை இழுத்து சென்றாள்,

போக மனமில்லாமல் வேலனை பார்த்தவாறே ஹாசினா வீட்டிற்குள் சென்றாள் ஹாசிபா.

ஏய் ஹாசிபா என்று பர்தாவை தூக்கினாள் ஹாசினா.

பர்தாவுக்குள் இருந்தது ஸ்ரீரேணுகா.....

“ஹேய் ரேணுகா நீ ஏன் டி ஹாசிபா மாதிரி வந்த....”

“உன்ன சர்பிரைஸ் பண்லான்னு வந்தேன்.ஆனா நானே சர்பிரைஸ் ஆகி நிற்கிறேன் டி” என்றாள் ரேணுகா.

“சரி ஏன் வேலன பார்த்துட்டே என் கூட வராம நின்ன....” என்று கேட்டாள் ஹாசினா.

“அவர்தான் வேலனா....?” என்று கேட்டாள்.

“ஆமாம்” என்று அவள் சொல்ல...
வெட்கத்தில் மலர்ந்தது ரேணுகாவின் முகம்.....

“ஏய் ரேணுகா உன் சிரிப்பு எதுவும் சரியா இல்லையே....” என்றாள் ஹாசினா.

வேலனை பின் தொடர்ந்தாள் ஹாசிபாவாக ரேணுகா. கடைவீதியில் அவன் பொருட்கள் வாங்குமிடத்தில், அவன் வேலை ஸ்தலத்தில் என்று பின் தொடர்ந்தாள் ஹாசிபா வேஷத்தில் இருந்த ரேணுகாவை அவனுக்கு தெரியாது,

“ஏய் ரேணுகா என்னடி பண்ற.... பையன் தான் பொண்ணு பின்னாடி சுத்தணும். இங்க தலைகீழாக நடக்குது நீ வேலன் பின்னாடி சுத்துற, நீ ஊருக்கு கிளம்பு போ” என்று ரேணுகாவை ஊருக்கு அனுப்பி வைத்தாள் ஹாசினா.

பின்னர் ஒரு நாள் “ 6வருஷமா ட்ரை பண்ற ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனா என்ன பெயர் கம்பெனிக்கு வைப்ப” என்று கேட்டாள் ஹாசினா.

ஆர். வி என்றாள் ரேணுகா.

ஆர். வி ன்னா...?என்று கேட்டாள் ஹாசினா.

“ரேணுகா வேலன்”என்றாள் ரேணுகா.

“ரேணுகா நீ வேலன மறக்கலையா “ என்று ஆச்சர்யமாய் கேட்டாள் ஹாசினா.

“அவரை எப்படி டி மறக்க முடியும்...” என்று பதில் சொன்னாள்.

மீண்டும் கலைவிழா ஒன்றில் ஜூலியட் ட்ராமாவில் நடிக்க வேண்டியவள் வராமல் போக ரேணுகா ஜூலியட் ஆக நடித்தது அரங்கமே நிறைந்தது கைத்தட்டல்களால்.....
“ஏய் ரேணுகா ஒரு நிமிஷம் நீதான் உண்மையான ஜூலியட்ன்னு பீல் பண்ண வச்சுட்ட” மெய் மறக்கவைக்கும் நடிப்பு டி... என்றாள் ஹாசினா.

“நடிப்பு இல்லடி உண்மை... என் முன்னாடி வேலன் இருக்கிறதா நினைச்சேன். அவர்ட்ட பேச நினைச்சததான் பேசுனேன்” என்றாள் ரேணுகா.

ரேணுகாவின் இந்த வீடியோ கேசட்டைதான் பின்னாளில் மதன் வேலனிடம் கொடுத்து பிரிவு வர முயற்சி செய்தான்.

2 மாதங்களுக்கு பின் ஹாசினா ரேணுகாவிடம் கேட்டாள் “ஏன் டி சுதர்சன் மாமா தம்பியை உனக்கு மாப்பிளையாய் பார்த்தாங்களாம் ஏன் வேண்டான்னு சொன்ன நல்லா படிச்சிருக்காரு எல்லா வசதியும் இருக்கு” என்று அவள் கேட்டு கொண்டிருக்க ரேணுகாவின் அப்பா உள்ளே வந்து “அம்மா ரேணுகா நீ உன் காலேஜ்மேட் மதன லவ் பண்றியாமா” என்று கேட்டார்.

“அப்பா நான் லவ் பண்றேன்தான் ஆனா அது மதனில்ல,அவர் பெயர் வேலன்... ரொம்ப அன்பானவர், அம்மா, அக்கா, தங்கச்சிதான் அவர் உலகம்,
பொண்ணுங்கள பாரமா நினைக்குற அண்ணன்களுக்கு மத்தியில அவர் அப்பாமாதிரி அவங்கள படிக்கவச்சு நல்லவாழ்க்கை அமைச்சு கொடுத்திருக்கார்.”

“அதுனால வேலன லவ் பண்றியா ரேணுகா" என்று கேட்டாள் ஹாசினா.

“இல்ல முதல் தடவை அவர் மனைவி பத்தின பேச்சை கேட்டப்போ...உண்மை பேசுற அவர் மனசையும், ஏதார்த்தமான அவரோட இதயமும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.... அப்பா அவரை நான் முதல் தடவை பார்த்தப்ப அவர் அம்மாவுக்கு செய்ததை எனக்கும் அவர் செய்யணும்னு தோணுச்சு அப்பா... என்னால அவரை தவிர யாரையும் லைப் பார்ட்னர் ஆக நினைக்க முடியல அப்பா” என்றாள் ரேணுகா.

“வேலன்கிட்ட நம்ம பேமிலி பத்தி சொன்னியாமா.”.. என்று கேட்டார் அப்பா.

“ஹய்யோ அப்பா ரேணுகா யாருனே வேலனுக்கு தெரியாது” என்றாள் ஹாசினா.

“என்னமா சொல்ற...?”

“அப்பா அவர்கிட்ட என் காதல சொல்ல காத்திட்டு இருக்கேன் அவர் மனைவியானதும் சொல்லிடுவேன்...... எங்கள சேர்த்து வைப்பிங்களா அப்பா” என்று கேட்டாள் ரேணுகா.

"என் தங்கமே.... நான் உங்கள சேர்த்து வைக்குறேன் வேலன உனக்கு கல்யாணம் பண்ணி வைக்குறது என்னோட பொறுப்பு" என்றார் அப்பா.

ரேணுகாவின் திருமண நிச்சயத்திற்கு பின் சுதர்சன் கோபமாய் வந்து "என் தம்பி எல்லா விதத்துலயும் வேலன விட பெரியவன்" என்று சொன்னான்.

அதற்கு ரேணுகா... "பணக்கார கழுதை கல்யாணம் பண்றத விட ;ஏழை சிங்கத்தை கல்யாணம் பண்ணி அந்த சிங்கத்தோட குகையில வாழலாம்" என்றாள்.

"ஏய் ரேணுகா அதான் கல்யாணம் உறுதி ஆயிடுச்சுல வேலன் உன்ன பார்க்க ட்ரை பண்றான் இன்னும் அவன ஹாசிபா வேஷத்துல பின் தொடர்ந்தா என்ன அர்த்தம்........."

மனம் நிறைந்த புன்னகையோடு... "கண்ட்ரோல் பண்ண முடியாத அளவுக்கு அவர்மேல காதல் இருக்கு அதை முதல் தடவை தனிமையில சந்திக்கும் போது மொத்தமா கொட்டிடுவேன் அதான்டி விலகிபோரேன்" என்றாள் ரேணுகா.

இவற்றை எல்லாம் வேலனுக்கு சொல்லி முடித்து விட்டு கூறினாள் ஹாசினா... "வேலன் உனக்காகவே வந்தா..... உன்ன மட்டுமே நம்பி வந்தவடா ரேணுகா "என்றாள்.

"மாப்பிளை ஸ்ரீலேகா சொன்னதை நம்பாதீங்க அவளுக்கு ரேணுகாவோட மனசு தெரியாது... நீங்க வீட்ட விட்டு வந்ததும் ரேணுகா என்ன சொன்னா தெரியுமா....
"ஏன்மா அவரை மரியாதை இல்லாம பேசுனீங்க, அவர் சொன்னதெல்லாம் நியாயம் அம்மா நான் அவர்கிட்ட போரேன், திரும்பி வந்தா அவரோடதான் வருவேன். அவர் என்ன வேண்டான்னு சொன்னாலும் ரேணுகாவேலனாதான் கடைசி வர இருப்பேன்" என்றாள்.

"ரேணுகா இப்ப எங்க மாமா?"என்று வேலன் கேட்ட நேரத்தில் சட்டென கதவை திறந்தாள் ரேணுகா, வேலன் பரிசாக கொடுக்க நினைத்த சேலையில் நின்றாள்..... அவள் வேகமாய் வந்து பேச துவங்கும் முன் அவளை தன் கைகளால் தடுத்தாள் சக்தி.....

வேலனை பார்த்து கோபமாய் பேச ஆரம்பித்தாள் சக்தி.

" என்னடா தம்பி கையை பிடிக்க போறியா, கட்டிப்பிடிக்க போறியா....?இது 2ம் செய்ய உனக்கு ரைட்ஸ் கிடையாது. அவ உன் பொண்டாட்டி இல்லடா நீதான் தாலிய கழட்டிட்டியே "என்றாள்.

"ரேணுகா நீ உன் அப்பாவோட கிளம்பு இவன் உனக்கு வேண்டாம்...." என்றாள் சக்தி.

" என்னடி சொல்ற சக்தி "என்றான் வேலன்.

"பின்ன என்னடா தாலிய கழட்டுனல்ல..பார்க்காம விட்டுருந்தா ரேணுகா ட்ரெயின்ல அடிபட்டு செத்துருப்பாடா......"

கலங்கி கண்ணீரோடு ரேணுகாவை பார்த்தான் வேலன்.

"டேய் வேலா அங்க என்ன பார்வை.... ஹேய் ஒரு ஆம்பள நீ, உன்னால தைரியமா காதலை சொல்ல முடியல..... அவ பொண்ணுடா எப்படி சொல்லுவான்னு எதிர்பார்த்த... நீ நாளை பின்ன அவளை கொடுமைதான் பண்ணுவ... போடா.." என்று சொல்லி தள்ளி போனாள் சக்தி.

வேலன் ரேணுகாவை நோக்கி இருந்த இடத்தில் மண்டியிட்டான்.
சக்தி அவனை பார்க்காமல் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

மண்டியிட்ட வேலன் கண்ணீர் வழிய "ரேணுகா சாரி...என தன் பாக்கெட்லிருந்து தாலியை கையில் எடுத்து என்ன இப்பவே கல்யாணம் பண்ணிக்குறியா....?" என்று கேட்டான்.

ரேணுகாவின் கண்கள் குளமாகி வேலன் கைகளில் அவள் கண்ணீர் படும்படி சரி என தலை அசைத்தாள்.

சக்தி இவற்றை காணாமல் தூரம் நடக்க அவளை சமாதானப்படுத்த ஓடினான் வேலன்.

"சக்தி நில்லு ஒரு நிமிஷம் நில்லு" என்று ரேணுகா அழைக்க திரும்பாமல் நடந்தாள் சக்தி.

"நாத்தனாரே.... "என்று கண்ணீரோடு ரேணுகாவின் குரல் கேட்டதும் திரும்பினாள்... சக்தி.

ரேணுகா கையெடுத்து கும்பிட்டு... சத்தமாய் "சாரி நாத்தனாரே எங்கள சேர்த்து வையுங்க "என்றதும் கண்களில் கண்ணீர் வடிய ஓடி ரேணுகாவை கட்டி கொண்டாள் சக்தி.

அதேநேரம் வேலனின் மாமா பூ மாலையுடன் அங்கு வந்தார். "மாப்பிளை நீ ரேணுகாவ நேசிக்கிறேன் சொன்னப்பவே பூக்கடைக்கு போயிட்டேன் "என்று மாமா ஒரு மாலையை வேலனுக்கு போட்டார்.

இன்னொரு மாலையை சக்தி வாங்கி ரேணுகாவுக்கு போட்டு அவள் கைபிடித்து அண்ணனிடம் கொடுத்தாள்.

வேலன் ரேணுகா பக்கம் திரும்பி... அவள் கண்களை நேராக பார்த்து.... "உன்கிட்ட எதையும் மறைக்க மாட்டேன்...... வாழ்க்கையின் எல்லா சூழ்நிலையிலும் உனக்கு உண்மையா இருப்பேன்,உன்ன எப்பவும் கை விடமாட்டேன்.... பிரிவு என்பது என் மரணம் தவிர என்று வேலன் சொல்லும் போது ரேணுகா தன் கை விரல்களால் அவன் வாயை அடைத்து சொல்லாதே என்பது போல் தலைஅசைத்தாள்.என் கடைசி மூச்சுவரை உன்னை மட்டுமே காதலிப்பேன் "என்று சத்தியம் செய்து தாலி கட்ட மலர்கள் மட்டுமன்றி சாரல் மழையும் அவர்கள் மேல்பொழிந்து அவர்களை ஆசீர்வாதம் செய்தது.

சக்தியோ..... "டேய் அண்ணா 2முடிச்சுதான் நீ போடணும் 3வது நான்தான் போடணும்" என்று 3வது முடிச்சை போட்டாள்.

இருவரும் ஜோடியாக மாமா மற்றும் ரேணுகா அப்பா கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர்.

அப்பொழுது "மாப்பிளை ரேணுகாவ கூட்டிட்டு வீட்டுக்கு வாங்க "என்று அழைத்தார்
ரேணுகாவின் அப்பா.

ரேணுகா அவள் அப்பாவிடம் "நான் வந்தா ரேணுகாவேலனா அவரோடதான் வருவேன். அதேமாதிரி நீங்க என்ன பார்க்க வந்தாஅம்மாவோடதான் வரணும் "என்றாள்.

"முயற்சி பண்றேன் மா" என்றார் அவள் அப்பா.

ரேணுகா ஹாசினாவிடம் திரும்பி "ரொம்ப தேங்க்ஸ் டி சரியான நேரத்துல வந்த..." என்றாள்.

"உன் தேங்க்ஸ்ஸ சக்திக்கு சொல்லு... அவதான் என்னையும் உன் அப்பாவையும் கூட்டிட்டு வந்தா...." என்றாள் ஹாசினா,
அவளுடன் ரேணுகாஅப்பாவும் "ஆமாமா "என்று சேர்ந்து சொன்னார்.

ரேணுகா சக்தியை பார்த்து நன்றி சொல்ல வாய்திறக்க.....

"அண்ணியாரே தேங்க்ஸ் சொன்ன உன்ன டிவோர்ஸ் பண்ணிடுவேன்.... பார்த்துக்கோ "என்றாள் சக்தி.

"சொல்ல மாட்டேன் நாத்தனாரே.... "என்று சக்தியை கட்டி கொண்டாள் ரேணுகா.

"சரி சக்தி கிளம்பு வீட்டுக்கு போலாம்" என்றான் வேலன்.

"எங்கடா தம்பி கூப்பிடுற எனக்கு லீவு முடிஞ்சிடுச்சு நாளைக்கு ஆர்மிகேம்ப்ல இருக்கணும்."

"சரி அப்ப நான் வீட்டுக்கு கிளம்புறேன்..."என்றான்

"சரிடா நீ கிளம்பு "என்று சொல்லி ரேணுகாவை கைபிடித்து "நீ வாம்மா நாம ட்ரெயின் வர்ற வரையும் பேசிட்டு இருக்கலாம் "என்று இழுத்து சென்று அமர வைத்தாள்.

"ஹேய்..."என்று பதறினான் வேலன்.

"நீதான் போறேன்னு சொன்னல்ல... கிளம்பு"

"உனக்கு ட்ரெயின் எத்தனை மணிக்கு...?"

"இராத்திரி 1 மணிக்குடா....."

"அதான் மாமா 2 பேர் இருக்காங்க உன்ன ட்ரெயின் ஏத்தி விடறதுக்கு...ஹாசினா இருக்கால்ல அவகூட பேசுடி "என்றான்.

"சரிதான் ரேணுகா நீயும் ஹாசினாவும் மீட் பண்ணி எவ்ளோ நாளாச்சு..நாங்க 3பேரும் சேர்ந்து பேசிட்டு இருக்கோம் நீ கிளம்பு "என்றாள் சக்தி.

சற்று யோசித்து விட்டு திரும்பியவன்.... "ரேணுகா அந்த பைல் ஆபீஸ்லேயே இருக்கு நீ மறந்துட்ட...வா போலாம்" என்று அவள் ஒரு கையை பிடித்து கூப்பிட்டான்...

"டேய் என்னடா நீ போய் வேலையை பாருடா" என்று ரேணுகாவின் மற்றொரு கையை சக்தி இறுக்கமாய் பிடித்து கொண்டாள்.

ரேணுகா வா போலாம் என்று வேலன் ஒரு கைபிடித்து இழுக்க நீ வா பேசலாம்னு சக்தி இன்னொரு கைபிடித்து இழுக்க.....

"ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம் "என்று ரேணுகா இருவரையும் நிறுத்தினாள்......"சக்தி......."

"சொல்லுடி அண்ணி....."

"சக்தி...அது ரொம்பநாளா பெண்டிங் ஆன வேலை நீ என்ன விட்டன்னா போய் முடிக்க முயற்சி பண்ணுவேன்."

"அதாவது அண்ணியாரே எனக்கு காது ஏற்கனவே குத்திட்டாங்க....நீங்க சைடு காது குத்த வேண்டாம்......போங்க 2பேரும் "என்று துரத்தி விட்டாள்.

வேலனும் ரேணுகாவும் அந்த நிலாவொளியில் கைகோர்த்து சாரல் மழையில் சிரித்து பேசி மகிழ்வாய் போனதை காண கண்களே கொள்ளை போகும் அப்படி ஓர் அழகு.

இல்வாழ்வு என்பது இருமனங்களும் ஒரு மனமாகி அன்பு, நம்பிக்கை என்கிற ஆழமான அஸ்திவாரம் போட்டு கட்டப்படும் குடும்பம் என்னும் வீடு.

இதுவே டைரியின் கடைசி வரி இதை படித்து மூடினாள் சுஹானா.

வேகமாய் தாத்தாவை தேடி சென்றாள் சுஹானா.

"தாத்தா நீங்க அத்தைய அதுக்கு அப்புறம் பார்க்கவே இல்லையா" என்று கேட்டாள்..... சுஹானா.

"எங்கம்மா "என்று சலித்து கொண்டு "ஸ்ரீலேகாதான் மனசு மாறவே இல்லையே" என்றார் தாத்தா.

"பாட்டி அவ்ளோ மோசமா தாத்தா".

"இல்லம்மா இந்த பணம், பிசினஸ் எல்லாம் வந்ததுக்கு அப்புறம்தான் இப்படி ஆயிட்டா.... எனக்கு மனைவியா மட்டும் இருக்கும் போது நல்லாதான் இருந்தா" என்றார்.

"எனக்கு அத்தை மாமா இப்ப எப்படி இருக்காங்கன்னு பார்க்கணும் போல இருக்கு தாத்தா."

"அவங்கள பார்க்கிறது கஷ்டம் சுஹானா."

"இந்த டைரியை படிச்சப்ப இருந்த ரேணுகா-வேலன் ஜோடி இப்ப எப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு தாத்தா "என்று சொல்லும் போதே பாட்டி ஸ்ரீலேகா உள்ளே வந்தாள்.

"பாட்டி நான் என்ன கேட்டாலும் செய்வேன் சொன்னிங்கள்ல..... ஒரு 45 நாள் தாத்தாவோட மனைவியா மட்டும் என் கூட வருவீங்களா....? என்னோட இருப்பிங்களா.....?"

"உனக்காக வருவேன் சுஹானா ,உன் சந்தோஷத்துக்காக வருவேன்....... ஆமா எங்க போக போறோம்..." என்று கேட்டாள் பாட்டி ஸ்ரீலேகா.

ரேணுகா❤️வேலன சந்திக்கிறதற்கு பாட்டி......🌹.......





 
சக்தி சூப்பர் நாத்தனார் 😍😍
ஒருவழியா அப்போ ரேணுகா வேணும் சேர்ந்துட்டாங்க இப்போ அவங்க எங்கே எப்படி இருக்காங்க??
 
சக்தி சூப்பர் நாத்தனார் 😍😍
ஒருவழியா அப்போ ரேணுகா வேணும் சேர்ந்துட்டாங்க இப்போ அவங்க எங்கே எப்படி இருக்காங்க??
கூடிய விரைவில் சரி செய்து அத்தியாயங்கள் போடுகிறேன் சகோதரி அதுவரை பொறுத்து கொள்ளுங்கள்...
 
Top