வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ரேணுகா 💝வேலன் (அத்தியாயம் -6)

GG writers

Moderator
ரேணுகா வேலன் (அத்தியாயம் -6)

பாட்டி ஸ்ரீலேகாவோ ரேணுகா வேலனை சந்திக்க மறுக்கவே, பாட்டிக்காக சுஹானா மாறுவேடத்தில் முஸ்லீம் பெண்ணான சஹானா என்ற பெயருடனும், பாட்டி ஸ்ரீலேகாவை பர்தா அணிந்தவாறும், தாத்தாவை தாடியுடன் அடையாளம் தெரியாதபடி ரேணுகா வேலனை சந்திக்க அழைத்து போனாள்.

அப்போது மூவரும் மெல்ல ரேணுகா வீட்டிற்குள் செல்ல 24 வருடங்களுக்கு முன் டைரியில் படித்த ரேணுகா வேலனை சந்திக்க போகிறோம் என்கிற ஆவலோடு தாத்தாவும், சுஹானாவும் ஆசையாய் உள்ளே பார்த்த போது

அங்கு வேலன் டைனிங் டேபிளில் தன் ஆசை மகளுக்கு உணவு ஊட்டி விட்டு கொண்டிருந்தார்.அவர் மகளோ மடிகணினியில் வேலை செய்து கொண்டிருந்தாள்...
சற்று தள்ளிப் பார்த்தால் ரேணுகா சமையல் அறையில் தோசை சுட அவளது மகன் அவளுக்கு உணவு ஊட்டி விட்டு கொண்டிருந்தான்.

வேலன் இவர்கள் மூவரையும் பார்த்து யோசனையாய் எழுந்து அவர்களிடம் வந்து வினவ..

அப்பொழுது
“வணக்கம் சார் நான் சஹானா., இவங்க என் தாத்தா, பாட்டி நாங்க ஹாசினா ஆன்ட்டியோட கசின்ஸ்” என்றாள்.

“ஹோ ஹாசினா மெயில் பண்ணி இருந்தா உங்க தாத்தா டிரீட்மென்ட்டுகாக வந்துருக்கீங்க, நீங்க எங்க வீட்லயே தங்கலாம்” என்று வேலன் சொல்லும் போதே அவரது மகள் “வேலா ஆபிஸ் டைம் ஆச்சு பை”என்றாள்.

“ஒரு நிமிஷம் மா, இவ என் பொண்ணு சித்ரலேகா” என்று சஹானா, தாத்தா, பாட்டிக்கு அறிமுகம் செய்தார்.

அவளும் இவர்களை பார்த்து கையசைத்த படி கிளம்பினாள்.

அதன்பின் ரேணுகாவையும், மகன் சக்தியையும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான் வேலன்.

ரேணுகா ஒரு சாதாரண உடையில் பணிப்பெண் போல் வந்ததை பார்த்த பாட்டிக்கு அழுகையும், கோபமுமாக வந்த அனைத்து உணர்வுகளையும் பர்தாவுக்குள் அடக்கினாள் பாட்டி ஸ்ரீலேகா.

சஹானா , தாத்தா, பாட்டியை தன் வீட்டின் மேல் மாடி அறைக்கு அழைத்து போனாள் ரேணுகா.

சிறிது நேரத்துக்கு பின் ... ஸ்ரீ லேகா
கோபமாய் “இதை பார்க்கதான் என்ன கூட்டிட்டு
வந்தியா சுஹானா..? என் பொண்ணு வேலைக்காரி
மாதிரி இருக்கா ..அவள சாப்பிட்டியான்னு கேட்க கூட
இந்த வீட்ல யாரும் இல்ல,வேலன் கூட அவகிட்ட
எதுவும் பேசல..”என்று அவள் கொந்தளித்தபோது ..

தாத்தா, பாட்டி ஸ்ரீ லேகாவின் பர்தாவை மூடி தரதரவென்று இழுத்து சென்று ரேணுகாவின் அறையின் எதிரில் நின்று
“அங்க பாரு..”என்றார்.

அங்கு வேலன் ரேணுகாவுக்கு மேக்கப் போட்டு விட்டு,அவளின் அழகான சேலையின் கீழ் மடிப்புகளை சரி செய்து விட்டு, அவளுக்கு பூ வைத்து விட்டு, இருவரும் ஜோடியாய் அறையை விட்டு வெளியே வந்தனர்.

ரேணுகா மற்றும் வேலன் ஆபிஸ் கிளம்பும் முன் ரேணுகாவுக்கு தன் அப்பா, அம்மா உடன் இருப்பது போல் தோன்ற ஜோடியாய் தாத்தா,பாட்டி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று, “உங்கள அப்பா அம்மான்னு கூப்பிடலாமா “என்று கேட்டாள் .

“கூப்பிடு மா”என்றார் தாத்தா கண்ணீரும் புன்னகையுமாய்

“ஆமா அம்மா பர்தா கழட்ட மாட்டாங்களா அப்பா "என்று கேட்டாள்.

“அவன் நோன்புல இருக்கா மா, நோன்பு முடிஞ்சதும் முகத்தை காட்டி பேசுவா மா" என்றார் தாத்தா.

“சரி அப்பா”

“மாமா என் நண்பன் கண்ணன அனுப்பி வைக்கிறேன் உங்களுக்கு எல்லா ஹெல்ப்பும் பண்ணுவான் “என்றார் வேலன்.

சஹானா ஆச்சர்யமாய் பார்க்க

“என்னம்மா பார்க்கிற ரேணுகாவுக்கு அப்பான்னா எனக்கு மாமா தானே”என்றார் வேலன்.

“சரிதான் சார்”என்றாள் சஹானா.
ரேணுகாவும்,வேலனும் ஆபிஸ் போனதும் சுஹானா தாத்தாவிடம் “அமேசிங் கப்பில்ஸ்,நீங்க யாருன்னு சொல்லாமலே ஆன்ட்டிக்கு ஃ பீல் ஆயிருக்கு”.

“அதுக்கு பெயர்தான் பாசம் சுஹானா, உன் பாட்டி புரிஞ்சுக்கிட்டா பரவாயில்ல”என்றார் தாத்தா.

பின் இரவு நேரத்தில் மகன் சக்திக்கும், வேலனுக்கும் இடையே பெரிதான வாக்குவாதமும் சண்டையும் வர ரேணுகா மகனை பேசி அனுப்பி விட்டு வேலனோடு கோபமாய் பேச..
வேலனும் கோபத்தோடு தன் அறையை விட்டு மாடிக்கு தூங்க போனான்.

அங்கு சஹானாவும்-தாத்தாவும் அவர்கள் அறையினுள்
“தாத்தா ஆன்ட்டி ரொம்ப கோபமா இருக்காங்க...”என்றாள் சுஹானா.

உடனே ஸ்ரீலேகா “இப்படிதான் என் பொண்ணு கூட தினமும் சண்ட போடுவானோ என்னவோ” என்றாள் கோபமாக..

“சுஹானா லைட் ஆஃப் பண்ணிட்டு தூங்குங்க
மார்னிங் பேசிக்கலாம்” என்றார் தாத்தா.

சுஹானாவும் லைட் ஆஃப் செய்து தூங்க
போனாள்.

இரவு 11மணியளவில் ரேணுகா வேலனை காண மாடிக்கு வந்தாள். “என்னங்க வாங்க கீழ போலாம்...”என்றாள்.

“சக்தி சாரோட அம்மா வந்திருக்கீங்க..நான் வரல மேடம்” என்றான் வேலன்.

“பாவமேன்னு கூப்பிட வந்தா ரொம்பதான் பண்றீங்க ..நான் போறேன்” என்று கிளம்பினாள் ரேணுகா.

கிளம்பிய ரேணுகாவை இழுத்து நெருக்கத்தில் பிடித்து கொண்டான்.

“என்ன பண்றீங்க..?”என்று முற்றும் சுற்றி பார்த்தாள்.

“நம்மள சுத்தி யாருமில்ல” என்றார் வேலன்.

“சார் நமக்கு கல்யாண வயசுல 1 பையனும், 1 பொண்ணும் இருக்காங்க.”

“நான் என்ன மேடம் பண்றது? நான் சொல்றதை என் பொண்டாட்டி கேட்கவே மாட்டேன்றா..”.

“யார் உங்க பொண்டாட்டி?”

“ரேணுகா வேலன்” என்றான் சிரித்தபடி

“நான் சக்தி,சித்ராவோட அம்மா”என்று
சொல்லி முகத்தை திருப்பி கொண்டாள்.

“ஓய்,ரேணுகா ..நான் அவன காரணமில்லாம
திட்டலடி...அகிலா அக்கா பொண்ணுகிட்ட திமிரா
பேசியிருக்கான்..என்னமோ இவன் தான் பெரிய
ஆம்பளங்கற மாதிரி பேசிருக்கான்”.

“இருக்காதுங்க நம்ம சக்தி அப்படியில்லங்க.”..

“ஏய் அப்ப நான் பொய் சொல்றனா? உனக்கு
வாட்ஸ் ஆப்ல அனுப்புறேன் நீ கேட்டுட்டு போய் உன்
பையன்கிட்ட கேளு.”

“நான் கேட்கிறேன்ங்க,சக்தி தப்பு பண்ணி
இருந்தாலும் நீங்க அவன்கிட்ட அன்பா பேசி புரிய
வைக்கலாம்ல, பொண்ணுக்கு கொடுக்கிற மாதிரி லவ்
ஏன் பையனுக்கு கொடுக்க மாட்டேன்றீங்க.”

“ரேணுகா என் பையன் மேல எனக்கு லவ்
இல்லன்றியா? பொண்ணு படிச்சா, வேலைக்கு போறா, பையன் படிச்சான் உன் கம்பெனிக்கும் வரல, நம்ம
கார்மென்ட்ஸ்க்கும் வராம அவனுக்குன்னு ஏதோ ஒன்ன தேடிட்டு இருக்கான். நாளைக்கே எனக்கு ஏதாவது ஒன்னு ஆனா..”என்றான் வேலன்.

“என்னங்க இப்படி பேசறீங்க” என்று அவன் வாயை மூடினாள் ரேணுகா .

“எனக்கு அப்புறம் உன்னையும்,லேகாவையும், அவன நம்பி வர்ற பொண்னையும் அவன் நல்லா பார்த்துக்கணும்.. குடும்பத்தை பொண்ணுங்க நல்லா பார்த்துக்குவீங்க ஆனா நல்லா பார்த்துக்கிற
உங்களுக்கு என்ன தேவைங்கறது சரியா செய்றதுதான்
ஆம்பிளைங்க சொல்ல போனா ஒரு ஆம்பிளை ஆல் ரவுண்டர் ஆக இருக்கணும்.என் பையன் ஆல்ரவுண்டர் ஆக இருக்கணும்னுதான்
பேசுனேன்,திட்டினேன் ஆனா சக்தி சார் அம்மாவுக்கு
இது பிடிக்காது” என்று சொல்லி சட்டென அவள் மேலிருந்த கையை எடுத்து விட்டு அவளை விட்டு 2அடி விலகி போய் முகத்தை திருப்பி கொண்டான்
வேலன்.

ரேணுகா 2அடி நெருங்கி போய் தனதிரு கைகளை பூ மாலை போல அவன் கழுத்தில் போட்டு “ஓய்...சாரி.. நான் தான் தப்பா புரிஞ்சுக்கிட்டு கோபப்பட்டுட்டேன் சாரி” என்றாள்.

அறைமனதாய் “ஓகே ஓகே” என்றான்.

“இப்ப போலாமா” என்று கேட்டாள்.

அமைதியாய் தலையசைத்தான்.

“இப்ப உங்கள கூப்பிட்டது சக்தி,சித்ரா அம்மா இல்ல உங்க பொண்டாட்டி ரேணுகா வேலன் போலாமா..”

“அப்ப உடனே போலாம்” என்றான், இருவரும் மகிழ்ச்சியாய் ஒன்றாக கை கோர்த்து சென்றனர்.

அவர்கள் சென்ற பின் தாத்தா,பாட்டி, சுஹானா மூவரும் அறையை விட்டு வெளியே வந்தனர்.

“தாத்தா ஏன் அழறீங்க?”

“இது ஆனந்த கண்ணீர் அம்மா ஒருத்தன் கல்யாணம் ஆன புதுசுல பொண்டாட்டிய சந்தோசமா
பார்த்துக்கிறது பெரிய விசயமில்ல..இந்த வயசுலேயும்
என் பொண்ண சந்தோசமா பார்த்துக்கிறான்.
வேலன் அமைதியா இருந்தாலும் காரணம்
இருக்கும்,
கோபப்பட்டாலும் காரணம் இருக்கும் புரிஞ்சுக்க ஸ்ரீ லேகா” என்றார் தாத்தா.

“பாட்டி தாத்தா சொல்றது சரிதான் ..நீங்க கொஞ்சம் யோசிங்க உண்மையாவே இவங்க அன்பான கப்பிள்ஸ்.”

அமைதியாய் இருந்தாள் ஸ்ரீலேகா.

அடுத்த நாள் காலையில் தாத்தா சுஹானாவிடம் “அங்க பார்த்தியா...?”

“சித்ரலேகா..”என்றாள் சுஹானா.

“அது சித்ரலேகா இல்ல குட்டி ஸ்ரீலேகா இப்ப பாரு
உன் பாட்டி அவள பிடிச்சிருக்குன்னு சொல்லுவா”
என்றார் தாத்தா.

“சுஹானா இந்த வீட்லேயே ஐ லைக் தி
பெர்சன் ஒன் அண்ட் ஒன்லி சித்ரலேகா” என்று சொல்லி கடந்து போனாள் பாட்டி.

“எப்படி தாத்தா இப்படி கரெக்டா ஆக சொன்னீங்க”

“எக்ஸ்பிரியன்ஸ் சுஹானா.. ஹய்யோ என் பொண்ணு ஸ்ரீலேகா கிட்ட தப்பிச்சு சித்ரலேகாகிட்ட மாட்டிக்கிட்டாளே”

“ஏன் தாத்தா அப்படி சொல்றீங்க”

“எவ்வளவு கலவரம் நேத்து ராத்திரி நடந்துச்சு
எதையுமே கண்டுக்காம அவ வேலைய மட்டும் பார்க்குறா இதுலேயே தெரியல இது குட்டி ஸ்ரீலேகா மா”
என்றார் தாத்தா.

சிரித்தபடி தாத்தாவை சுஹானா கடந்து போக
மொட்டை மாடி காற்று வீசியதில் சுஹானாவின்
ஷால் அங்கு தனியே அமர்ந்திருந்த சக்தி முகத்தை
முழுதுமாய் மூட அவள் வேகமாய் சென்று துப்பட்டாவை சரி செய்தாள்.

“சாரி தெரியாம பட்டுருச்சு” என்றாள்

சக்தி திமிராய் “தெரிஞ்சுதானடி போட்ட” என்றான்.

சுஹானா “ இல்ல மை மிஸ்டேக் சாரி..”என்றாள்

“நான் பார்க்கணும்னுதான பர்தா போடாம சுத்துற?

“உங்க பேச்சு சரியில்ல நான் அங்கிள், ஆன்ட்டிட்ட சொல்லிடுவேன்.”

“என்ன ப்ரொப்போஸ் பண்ணி வளைச்சு
போடறதுதான உன் ப்ளான்..அதுக்குதான என்ன
சுத்தி சுத்தி வர்ற” என்றான் சக்தி.

சுஹானா ஒரே அறை ஓங்கி அவன் கண்ணத்தில் அறைந்தாள். “என்னடா..? நீ என்ன
பெரிய மன்மதனா..நானும் பொறுமையா பேசுனா ஓவர் ஆக பேசுற இன்னொரு பொண்ணுக்கிட்ட பேசும்போது உன் வீட்ல இருக்கற பொண்ணுங்க உனக்கு ஞாபகம் வரணும்..என்ன வரலன்னா இந்த அடி உனக்கு ஞாபகபடுத்தும்” என்று வேகமாய் கீழே படிகள் இறங்கினாள்.

தலை குனிந்து நின்றான் சக்தி.

இதையெல்லாம் பார்த்த வேலன் உற்சாகமாய் கீழே போய் சத்தமாய் “மருமகளே” என்று சஹானாவை அழைத்தபடி படிகளில் இறங்கினான்.

சஹானா ஒன்றுமறியாது வேலனை பார்த்தாள்.

“ஏங்க ஏன் சஹானாவை மருமகளேன்னு கூப்பிடுறீங்க” என்று கேட்டாள் ரேணுகா.

“ஹாசினா என் தங்கச்சி அப்ப அவபொண்ணு எனக்கு என்ன முறை” என்றான் வேலன்.

வேலன் சஹானாவின் இரு கைகளை பிடித்து “என்ன உன் அம்மா கூடப் பிறந்த அண்ணனா நினைச்சுக்கோ மாமான்னு கூப்பிடு மருமகளே..”

சந்தோசமாய் கண் கலங்க “மாமா”என்று அழைத்தாள் சஹானா.

“உன் கல்யாணத்துக்கு மாமா சீர் கொண்டு வருவேன்..என்ன ..இது உன் மாமன் வீடு இங்க எல்லா உரிமையும் உனக்கிருக்கு...உன்ன எவனும் கேள்வி கேட்க முடியாது.என் மகளுக்கு இருக்குற உரிமை என் மருமக உனக்கும் இருக்கு. உன்ன எவனாச்சும் ஏதாச்சும் கேட்டா அவன் செவுளை பேர்த்து விடு மருமகளே மாமா இருக்கேன்” என்று சொல்லிவிட்டு சந்தோசமாய் அவன் அறைக்கு சென்றான் வேலன் .

சுஹானாவின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் அடங்காமல் வந்தது.

வேலன் நடந்ததை எல்லாம் ரேணுகாவிடம் சொல்ல..

“சஹானா எப்படி சக்தியை அடிக்கலாம்”
என்று கோபமாய் சண்டைக்கு கிளம்பினாள் ரேணுகா.

அவள் எதிரே சஹானாவின் தாத்தா நின்று கையெடுத்து கும்பிட்டு “நாங்க இந்த வீட்ட விட்டு
போயிடுறோம்.ஒரு 5 நிமிசம் நான் சொல்றதை கேட்டுட்டு சஹானாட்ட போய் சண்ட போடுங்க.

ரேணுகா அமைதியாய் நின்றாள்.

“மணமேடை வரையும் வந்து சஹானாவோட கல்யாணம் நின்னு போச்சு. சஹானாவுக்கு தாலி கட்ட வேண்டிய மாப்பிள்ளை வேற ஒருத்தியை கல்யாணம் பண்ணி மணமேடைக்கு முன்னால கூட்டிட்டு வந்தான்..அப்பவும் சஹானா கோபப்படல..
கண்ணீரோட பூவை அவன் மேல தூவி அவன் நல்லா இருக்கணும்னு நினைச்சா..துரோகம் பண்ணவனையே என் சஹானா அடிக்கல..உங்க பையனை எதிரியாய் நினைச்சு அவ அடிச்சிருப்பாளா? உங்க பொண்ணுக்கிட்ட நீ என்ன ப்ரொப்போஸ் பண்ண போற, வளைச்சு போட போற,நான் பார்க்கதான பர்தா போடாம சுத்துறன்னு எல்லாம் எவனாச்சும் கேட்டா உங்க பொண்ணு என்ன செய்ஞ்சிருப்பாளோ அததான் என் சஹானாவும் செய்ஞ்சா..நாங்க வர்றோம் அம்மா” என்றார்.

“அப்பா நில்லுங்க நீங்க எங்கேயும் போகாதீங்க தப்பு சக்தி மேலதான் என்ன மன்னிச்சிடுங்க” என்று கையெடுத்து கும்பிட்டாள் ரேணுகா.

இதையெல்லாம் அறைக்கு வெளியே நின்றுகேட்டு கொண்டிருந்தான் சக்தி.

சஹானாவின் தாத்தா அறையை விட்டுவெளியேறிய பின் சக்தி உள்ளே சென்றான்.

“ஹேய் பொறுக்கியாடா நீ..?” என்று ஓங்கி அறைந்தாள், “இப்படியா ஒரு பொண்ணுகிட்ட பேசுவ..ச்சீ..அருவருப்பா இருக்கு,நான் தான் தப்பு பண்ணிட்டேன் ,உன்ன ரொம்ப நம்பிட்டேன் டா” என்றாள் ரேணுகா.

“அம்மா எனக்கு அந்த பொண்ணோட சிட்டுவேசன் தெரியாது சாரி அம்மா..ரொம்ப சாரி”என்று கெஞ்சினான் சக்தி.

“இனி என்கிட்ட பேசிராத ..,..”

“அம்மா சாரி மா பேசாம போகாத அம்மா”

ரேணுகா சக்தியை தள்ளி விட்டு கோபமாய் கடந்து போனாள்.

பின் இரவில் மாடியில் ரேணுகா தனிமையில் இருக்கையில் சக்தி வந்து “நான் சொல்றத கேளு மா.. ப்ளீஸ் என்கிட்ட பேசாம இருக்காத, கஷ்டமா இருக்கு மா நான் உன்கிட்ட பேசணும் ,உட்காரு மா ”என்று அழுத படி கெஞ்சினான்.

அவன் கண்ணீரை பார்த்து மனமிறங்கி அமைதியாகி ரேணுகா அவனிடம் “இப்படித்தான் ஒரு பொண்ணுக்கிட்ட பேசுவாங்களா? அவ உன்ன தப்பானவன்னு நினைச்சிருப்பாள் ல “

“அவ என்ன கெட்டவன்னு நினைக்கணும் தான் அப்படி பேசுனேன் அம்மா “

“என்ன டா சொல்ற .? ஆமா உன் அகிலா அத்தை பொண்ணுகிட்டயும் இப்படித்தான் பேசுனியா “

“ ஆமா அம்மா என் கூட பழகணும் நினைக்கிற எல்லார்கிட்டேயும் இப்படிதான் பேசியிருக்கேன்”

“ஏன் டா..? “

“எனக்கு பாசம் எவ்ளோ இருக்கோ, கோபம் அவ்ளோ வரும்னு உங்களுக்கு தெரியும்ல நான் யாரு கூட வாச்சும் பழகுனா அது எந்த உறவானாலும் என் கோபத்தால கஷ்டப்படுவாங்க. என்னால யாரும் கஷ்ட பட கூடாதுனு தான் கெட்டவன் ஒரு வேஷம் போட்டுக்கிட்டு என்ன யாரும் நெருங்கி வந்திராம விலகி போறேன் அம்மா “

“தப்புடா தம்பி உனக்கு உண்மையா இருக்கிற உறவுகள் உன் பாசத்தையும், கோபத்தையும் புரிஞ்சுக்குவாங்க, இந்த கெட்டவன் வேஷம் வேண்டாம் அம்மாவுக்கு பிடிக்கல" என்றாள்.

“உனக்கு பிடிக்காதாதை நான் செய்ய மாட்டேன் அம்மா “என்றான் சக்தி.

இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த சஹானாவை ரேணுகா அழைத்து, சக்தியையும் சஹானாவையும் சமாதானம் செய்து வைத்து இருவரையும் நண்பர்களாய் மாற்றினாள்.

அதன் பின் ரேணுகா சஹானாவிடம் தனிமையில் “சக்தியோட பயம் கரெக்ட் தான் மா.. அவனோட கோபப்பட்ற குணம் மட்டும் மாறவே மாட்டேன்குது,
சக்திக்கு ஃ ப்ரண்ட்ஸே கிடையாது “என்றாள்.

“நீங்க கவலைபடாதீங்க ஆன்ட்டி சக்திக்கு நல்ல ஃ ப்ரண்டா நான் இருப்பேன்.அவன் பேசுனதை வச்சு தப்பாதான் நினைச்சேன்,ஆனா உங்ககிட்ட அவன் பேசுனதை பார்க்கும் போது அவன் முகத்துல உண்மைய பார்த்தேன். சோ நீங்க எதுவும் ஒரி பண்ணாதீங்க" என்றாள்.

“தேங்க்ஸ் சஹானா “ என்றாள் ரேணுகா.

சண்டைக்கு பின் சக்திக்கும், சஹானாவுக்கும் நல்ல நட்பு மலர்ந்தது.

அடுத்த நாள் காலையில் அகிலா, அகிலாவின் கணவர், தங்கை பூமா என ஒன்றிணைந்து வந்து வேலன் மகன் சக்திக்கு அவர்கள் தன் மகள்களில் ஒருவரை திருமணத்திற்கு தேர்ந்தெடுக்கும் படி வேலனிடம் கேட்க

ரேணுகாவோ “மகள வீட்ல வச்சிட்டு மகனுக்கு எப்படி கல்யாணம் பண்ண முடியும் “அண்ணி என்றாள்.

“அப்ப வேலா உன் பொண்ணு சித்ரலேகாவ என் மகனுக்கு கொடு" என்று கேட்டாள் அகிலா.

“லேகாவுக்கு வேற எய்ம் இருக்கு அக்கா இப்ப கல்யாணம் வேண்டாம்னு சொல்றா”என்று வேலன் சொல்லவும்

அவர்கள் கோபமாய் பெண் கொடுத்து, பெண் எடுக்காவிட்டால் சொத்தில் பங்கு தர சொல்லி நிர்பந்திக்க வேலன்
“சரி மாமா கார்மெண்ட்ஸ் சேல்ஸ் பண்ணி ஷேர் தர்றன்” என்று சொல்லவும்

ரேணுகா குறுக்கிட்டு “வேண்டாங்க.. அண்ணன் வீட்ட சேல்ஸ் பண்ணி ஷேர் தர்றோம்”என்றாள்.

“நான் தான் பேசிட்டு இருக்கேன்ல ரேணுகா நீ ஏன் அவசரப்படுற” என்றான் வேலன்.

“வேலா ரேணுகா சொல்றதுதான் சரி
கார்மெண்ட்ஸ் விட வீடுதான் நல்ல விலை போகும்”என்றார் மாமா.

“அண்ணன் நீங்களே நல்ல பார்ட்டியா பாருங்க சேல்ஸ் பண்ணிடலாம்” என்றாள் உறுதியாக ரேணுகா.

அவர்களும் கிளம்பி சென்றனர்.

“நான் சொல்றதை கேட்கவே மாட்டியா ரேணுகா”என்றான் வேலன்.

“இங்க பாருங்க வீடு இல்லனாலும் வேற வீட்டுக்கு போகலாம். கார்மெண்ட்ஸ் கொடுத்துட்டு நீங்க என்ன பண்ணுவீங்க..”?என்று கேட்டாள்.

“நான் வேற வேலைக்கு போவேன் டி.....”

“என் புருஷன் யார் முன்னாடியும் தலை
குனிஞ்சு நிற்க கூடாது..எப்பவும் முதலாளியாதான் இருக்கணும் இதுல நான் சொல்றதை மட்டும்தான் நீங்க கேட்கணும்” என்று கட்டளையாய் சொல்லி விட்டு அவனை கடந்து போனாள்.

நடந்த எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருந்த சஹானா சக்தியிடம் போய்.....
“நீ உன் அத்தை பொண்ணுங்கள்ல யாரையாவது கல்யாணம் பண்லாம்ல” என்று கேட்டாள்.

“அகிலா அத்தை பொண்ணு மனசுல நான் கிடையாது.எப்படி கல்யாணம் பண்றது”.

“அப்பம் 2வது அத்தை-ஆர்மி டாக்டர்” என்று கேட்டாள் சஹானா.

“2வது அத்தைக்கு பொண்ணே கிடையாது”

“பூமா அத்தை பொண்ண கட்டலாம்ல டா.?”

“கட்ட முடியாது சஹானா..அவ உன்ன விட சின்னப்பொண்ணு படிக்கணும்னு ஆசைப்படற
பொண்ண கல்யாணம் பண்ண சொல்றியா..?”

“இல்ல டா கீழ அவங்க பேசுனத கேட்டியா..”

“கேட்டேன் டி..ஏய் கல்யாணம் பண்ணாலும் பிரச்சனை தீராது..என் அத்தை பொண்ணு வந்து சொத்தை பிரிப்பா அதுக்கு இது எவ்வளவோ பெட்டர் டி” என்று சொல்லி கீழ் இறங்கி போனான்.

சஹானா தாத்தாவிடம் சென்று “நாம ஏதாச்சும் ஆன்ட்டிக்கு ஹெல்ப் பண்லாமா” என்று கேட்டாள்.

பாட்டி ஸ்ரீலேகா பதிலுக்கு “சுஹானா நாம 45 டேஸ்க்கு சாதாரண மிடில் கிளாஸ் பேமிலி அவ்வளவு பெரிய ஷேர் எப்படி கொடுப்ப” என்றாள்.

“இல்ல பாட்டி...”

“சுஹானா இப்பவாச்சும் ரேணுகாவுக்கு அவ
அம்மா ஞாபகம் வருதான்னு பார்க்கலாம். நீங்க யாரும்
ஹெல்ப் பண்ண கூடாது” என்று கட்டளையிட்டாள் ஸ்ரீலேகா.

இரவு நேரத்தில் சஹானா ரேணுகாவிடம் “ ஏன் ஆன்ட்டி ஒரு மாதிரி இருக்கீங்க? “

“இன்னும் 2 நாள் ல வீடு ரெஜிஸ்டரேசன் அண்ணன் போன் பண்ணாரு மா “

“ஏன் ஆன்ட்டி நீங்க உங்க அம்மாகிட்ட ஹெல்ப் கேட்கலாம்ல?"

அந்நேரம் மகன் சக்தி அங்கு வந்து ஸ்ரீலேகா பாட்டியை பற்றி வெறுப்பாய் வசை பாட ரேணுகா அவனை அனுப்பி விட்டு
“சாரி மா, அவனுக்கு என் அம்மாவ பிடிக்காது"

“உங்களுக்கும் பிடிக்காதா ஆன்ட்டி “

“இல்ல சஹானா ரொம்ப பிடிக்கும்.. ஆனா நமக்கு ரொம்ப பிடிச்சவங்க தப்பு பண்ணா ஏத்துக்கவே முடியாது..? என் வேலனை அவங்க முதல்ல மாப்ள ன்னு கூப்பிடட்டும் “

“ஏன் ஆன்ட்டி நீங்க அவங்கள தேடி போக கூடாதா? “

“நான் அவங்கள தேடி போனா பணம் ஜெயிச்சதா அர்த்தம், அவங்க என்ன தேடி வந்தா பாசம் ஜெயிச்சதா அர்த்தம்”என்று சொல்லி கடந்து போனாள் ரேணுகா.

இரவு நேரத்தில் மாடியில் வேலன் தனிமையாய் நின்று கொண்டிருந்தான்.

“ஏங்க என் மேல இன்னும் கோபமா இருக்கீங்களா திரும்புங்க” என்று அவனை திருப்பினாள் ரேணுகா.

கலங்கிய கண்களோடு அவளை பார்த்தான்.

“என்னாச்சு ஏன் இப்படி உங்க கண் கலங்கியிருக்கு..?”

அவன் பேச முற்படும்போது அவனையறியாமல் கண்களில் கண்ணீரை சிந்தினான்.

“என்ன இது குழந்தை மாதிரி”என்று சொல்லி கண்ணீரை துடைத்தாள்.

“எனக்காக பெரிய பேலஸயே விட்டுட்டு வந்த உனக்காக என்னால ஒரு வீட்டை கூட காப்பாத்தி வைக்க முடியலையே என்று சொல்லி அழுதான்.”

“என்ன இது” என்று மீண்டும் அவன் கண்களை துடைத்து விட்டு “இந்த ரேணுகா வாழ்ற பேலஸ், என் வேலனோட இதயம் மட்டும்தான்..எப்பவும் அந்த பேலஸ விட்டு என்ன அனுப்பிராதீங்க” என்றாள் ரேணுகா.

கண்ணீரோடு மாட்டேன் என்று தலையசைத்தான்.

அவனை சமாதானம் செய்து அழைத்து போனாள் ரேணுகா.

அவர்கள் சென்றபின் சஹானா பாட்டியிடம் “ரேணுகா வேலன் மாதிரி லைஃ ப் எல்லாருக்கும் அமையாது. நீங்க ஏன் அத்தை,மாமாவ
புரிஞ்சுக்கவே மாட்டேன்றீங்க..
சாருலேகா அத்தையை சுதர்சன் மாமா இந்த மாதிரி தான் பார்த்துக்கறாரா?”
“ரேணுகா வேலன் மாதிரி யாரும் வாழவே முடியாது பாட்டி அவங்க எப்பவும் ஒருத்தர் மேல ஒருத்தர் அன்பு குறையாம இருக்காங்க இதான் ட்ரு லவ் பாட்டி”என்றாள் சஹானா.

பாட்டி எதுவும் பேசாது அமைதியாய் கடந்து போனாள்.
 
Top