வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ரேணுகா 💝வேலன் (அத்தியாயம் -9)

GG writers

Moderator
ரேணுகா💝வேலன்
(அத்தியாயம்-9)

அடுத்தநாள் காலையில் சித்ரலேகா மடிகணினியில்
வேலை செய்து கொண்டிருந்த போது வேலன்
விஜயகுமார் காபி கொண்டு வர தரையில் இருந்த
தண்ணீரை கவனிக்காமல் அவன் கால் வழுக்கி
சூடான காபி அவள் மடிகணினியில் கொட்டி அது
வேலை செய்யாமல் போக கோபமாய் திரும்பினாள்.

“டேய் அறிவு இல்லையா உனக்கு,உன்
விளையாட்டுக்கு அளவே இல்லயா?”

“ஏய் இல்லடி தெரியாம தான் பட்டுருச்சு”

“ஒரு ப்ராஜக்ட் வேல்யூ தெரியுமாடா உனக்கு
சும்மாவே சுத்துற உனக்கெல்லாம் எப்படி தெரியும்,எப்படி என் ப்ராஜக்ட் முடிப்பேன். வரவர உன்ன
பார்க்க பார்க்க எரிச்சல்தான் வருது. நீயெல்லாம் ஏன்
டா இங்க இருக்க எங்கேயாவது போய் தொலைய வேண்டியதான” என்று
கோபமாய் சொல்லிவிட்டு ஆபிஸ்க்கு போய் லேப்டாப்
சர்வீஸ் செய்ய நபரை வீட்டிற்கு அனுப்பி வைத்தாள்.

பின் இரவு வீட்டில் உள்ள கணினியில் வேலை
செய்து கொண்டு இருந்தாள்.இரவு 1மணி கதவை
தட்டும் சத்தம் கேட்டது.
ரேணுகா கதவை திறக்க வந்த போது

“அம்மா நில்லு யார் இந்த நேரத்துல..?”

“ஏய் மருமகன் டி..”

“போகாதம்மா, கதவை
திறக்காத அவன்
வெளியவே கிடக்கட்டும்”.

“லேகா வழியை விடு” என்று அவளை தள்ளி
சென்று கதவை திறந்தாள் வேலன் உள்ளே வந்ததும்

“இது என்ன சத்திரமாடா உன் இஷ்டத்துக்கு
வர்றதும்,போறதும். நீ எங்கேயோ போய்
தொலைஞ்சிட்டன்னு நிம்மதியா இருந்தேன், வந்துட்ட மறுபடியும்
என் நிம்மதிய கெடுக்க,எங்கேயாச்சும்
போயிடு வராத வீட்டுக்கு..”என்று அவள் சொல்லி
கொண்டிருக்கும் போதே தன் பையிலிருந்து அவளின்
மடிகணினியை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

“ஏய் உன் லேப்டாப் சர்விஸ் பண்றவங்க கூடவே இருந்து சரி பண்ணி
வாங்கிட்டு வர லேட் ஆகும்ன்னு எனக்கு போன்
பண்ணான் அது தெரியாம கத்துற” என்றாள் ரேணுகா .

“நீ வாடா மருமகனே சாப்பிடு வா” என்று
அழைத்து போனாள்.

“ஏன் டா இவ உனக்கு
வேணுமாடா ? வேற நல்ல பொண்ணா நானே பார்க்கிறேன்
உனக்கு..” என்றாள் ரேணுகா.

“அத்தை இவள விட நல்ல பொண்ண எங்க
பார்ப்பீங்க.."

ரேணுகா முறைக்கவே

"பின்ன என்ன அத்தை மாமா லேட் ஆக
வந்தா நீங்க கோபப்படுவீங்கள்ல..?”

“ஆனா நான் பாசமாவும் இருப்பேன் உன் மாமா
மேல” என்றாள்.

“என் பொண்டாட்டியும் அவ ஸ்டைல்ல என் மேல பாசத்தை காட்டுறா அவ்வளவுதான்”.

“என்னமோ போடா...”என்றாள் ரேணுகா.

அடுத்த நாள் காலையில் ரேணுகா தன் மகளிடம்
“மருமகன கல்யாணம் பண்ணிக்குறியா..?”

அதற்கு லேகா “லேப்டாப் சர்வீஸ் பண்ணா காசுதான் கொடுக்க முடியும்,கல்யாணம் பண்ணிக்க முடியாது”.அதே நேரம் வேலன் விஜயகுமார் அங்கு வர
“இந்த பைத்தியத்தை ஏதாச்சும் கிறுக்கிதான்
கல்யாணம் பண்ணுவா..”என்றாள் சித்ரலேகா .

“அதனாலதான் பொண்டாட்டி உன்ன கல்யாணப்பொண்ணா செலக்ட் பண்ணியிருக்கேன்” என்றான் வேலன்.

“என்னடா சொன்ன..?”என்று கேட்டு லேகா அவன் போட்டிருந்த டவலாலே அவன் கழுத்தை
நெறித்தாள்.

“ஏய் அவன விடு..போய் வேலைய பாரு” என்று லேகாவை பிரித்து அனுப்பிவிட்டாள் ரேணுகா.

சக்தி சந்தோசமாய் வந்து சஹானாவை சமையலறைக்கு அழைத்து சென்று சர்க்கரையை அவள் வாயில் போட்டு “ஒரு குட்நியூஸ்..ப்ராஜக்ட்
நம்ம ஆர்.வி.கம்பெனிக்கு
தான் கிடைச்சிருக்கு”.

“சூப்பர்டா..
கன்கிராஜுலேசனஸ்”

ரேணுகா சமையலறை வர அன்பாய் அம்மாவை கட்டி கொண்டான். “அம்மா ப்ராஜக்ட் ஓகே ஆயிடுச்சு
ப்ராஜக்ட்னால நமக்கு வரப்போற ப்ராபிட் 400கோடிமா” என்று அவன் சந்தோசமாய் சொல்லி கொண்டிருக்கும் போதே சக்தியின் அப்பா வேலன் அங்கு வந்தார். சட்டென அமைதியாய் நின்றான் சக்தி.

சக்தியின் அப்பா அவனை கட்டிக்கொண்டு அவன் உச்சி முகர்ந்து முத்தமிட்டார்.. “ரேணுகா என் பையன் ஆல் ரவுண்டர் ஆயிட்டான்,
எனக்கு கவலையே இல்ல எனக்கப்புறம் உங்க எல்லாரையும் நல்லா பார்த்துக்குவான்” என்று கண்களில் ஆனந்தமாய் வடிந்த கண்ணீரை
துடைத்து
கொண்டான் வேலன்.

அப்பாவின் பேச்சால் அமைதியாய் நின்றான் சக்தி,அவர் கடந்து போனதும் “அம்மா, அப்பா இப்படி பேசி நான் பார்த்ததே இல்ல.”

“அவர் நீ நல்லா இருக்கணும்னுதான் திட்டினார் நீதான் புரிஞ்சுக்கல” என்று கடந்து போனாள் அம்மா.

“டேய் மாமாட்ட போய் பேசு” என்றாள் சஹானா.

“எனக்கு வார்த்தையே வர மாட்டிக்குதுடி”

“போடா போய் பேசு” என்று அப்பா வேலன் முன் சக்தியை தள்ளினாள் சஹானா.

“சாரி அப்பா..நான் உங்களுக்கு ரொம்ப கஷ்டம் கொடுத்துட்டேன்”.

“அதெல்லாம் இல்லடா..நீ இன்னும் பெரிய ஆளா
வருவடா...உன் கோபத்தை மட்டும் கன்ட்ரோல் பண்ணிக்கோ”

“நான் இப்ப எல்லாம் கோபப்படறதில்ல அப்பா”.

“தெரியும்..உன் ஃப்ரண்ட் சஹானாவால கன்ட்ரோல் ஆகுற,என் மருமகளுக்கு கிப்ட் வாங்கி கொடு டா.
சக்தி.”

“கண்டிப்பா அப்பா” என்று சொல்லி போனான்.

அன்று இரவில் மாடியில் சஹானா, வேலன் விஜயகுமார் தனிமையிலிருப்பதை பார்த்து “என்ன அண்ணன் எப்பவும் ஜாலியாக இருப்பீங்க, இன்னைக்கு ஒரு மாதிரி டல் ஆக தெரியுறீங்க” என்று சொல்லி கொண்டு அவன் அருகில்
வந்தாள்.

“ஏன் அண்ணன் சட்டை பாக்கெட் கிழிஞ்சிருக்கு,
நெத்தியில என்ன காயம்..என்ன நடந்துச்சு.."

மாப்பிள்ளை வேலன் அமைதியாய் இருக்கவே

"சொல்லுங்க அண்ணன், என்ன தங்கச்சியா நினைச்சா..” என்றாள் சஹானா.

“லேகா ஆபிஸ் வாசல்ல ஒரு பையன் 5,6பேரோட என்கிட்ட வந்து லேகாவும் அவனும் லவ் பண்றதா சொன்னான்.அவனும் லேகாவும் சேர்ந்திருக்கிற போட்டோவ காட்டவா, வீடியோவ காட்டவான்னு கேட்டான்,கோபம் வந்து வந்தவங்க எல்லாரையும் அடிச்சேன்.லேகா வந்து என்ன அடிச்சு கூட்டிட்டு வந்தா...”

இதையெல்லாம் கேட்ட சக்தி,சஹானாவுக்கு முன்னாடி போய்..”டேய் மாப்ளை அவ உன்ன அடிச்சாளா..?”என்று கேட்டு மௌனமாயிருந்த வேலனை லேகா அறைக்கு தரதரவென்று இழுத்து சென்றான்.

“ஏய் எதுக்காக மாப்ளைய அடிச்ச அவன் உனக்காகதான சண்ட போட்டான்...”என்று கேட்டான் சக்தி .

“நானா சண்ட போட சொன்ன” என்றாள் லேகா.

“அவன அத்தன பேர் மத்தியில ஏன் டி அடிச்ச” என்று கை ஓங்கி கொண்டு அவளை அடிக்க போன சக்தியை தடுத்தான் வேலன் விஜயகுமார்.

“யோவ் மச்சான் என்னய்யா பண்ற..”

“டேய் அத்தனை பேரை அடிச்சல்ல இவள அடிக்க உன்னால முடியாதாடா” என்றான்.

“ஹேய் மச்சான் அமைதியாயிரு..அமைதியாய் பேசு.”

“விடுறா..ஏய் என்ன உரிமையில அவன் மேல கை வச்ச..அவனுகதான் தப்பா பேசியிருக்காங்க எதுவுமே தெரியாம அவன் மேல கை வைப்பியா.....”என்றான் சக்தி.

“அவனுக எல்லாம் தெருநாய்ன்னு தெரியும்
டா..அவன் என் பின்னால சுத்துற தெரு நாய்,இவன் என் பின்னால சுத்துற வீட்டு நாய்.அதனால தான் வீட்டு நாயை பிடிச்சு வீட்ல கொண்டு வந்து போட்டேன்.”

“இன்சல்ட் பண்றதுக்கு ஒரு அளவு இல்லையாடி..டேய் மாப்ளை..
இவ என்ன உலக அழகியாடா..இவள விட அழகான பொண்ணா நான் உனக்கு கட்டி வைக்கிறேன் வாடா.....”

“எப்பா சாமி அதை முதல்ல செய்” என்றாள் லேகா.

“ஏய் லேகா வேலன் உன் மேல வச்ச அன்பு நான்,அப்பா,அம்மா கூட வச்சிருக்க மாட்டோம் டி..அதை உணரவே மாட்டியாடி..”என்று பேசிய சக்திய மாடிக்கு இழுத்து சென்றான் வேலன் விஜயகுமார்.

பின் மாடியில் சஹானாவிடம் விஜயகுமார்,சக்தி பேச ஆரம்பித்தனர்.

“டேய் ஆம்பிளையாடா நீ..?அடிவாங்கிட்டு வந்திருக்க” என்றான் சக்தி.

“டேய் மச்சான் அவ வந்து எதிர்ல நின்னு அடிச்சப்ப என் அம்மா என்ன அடிச்ச மாதிரி இருந்துச்சு,அம்மா மாதிரி தெரியுற பொண்ண எப்படிடா அடிக்க முடியும்.”என்றான் வேலன் விஜயகுமார்.

“லவ் இஸ் ப்ளைன்ட்- ன்னு படிச்சிருக்கேன்.ஆனா இப்பதான் நேர்ல பார்க்குறேன்”என்று சொன்ன சக்தியை தனியே அழைத்து போனாள் சஹானா.

“சக்தி நான் சொல்றதை கேளு..ஏன் அவசரப்பட்டு கோபப்பட்ட..டா”

“பின்ன அவ செய்தது சரியா..?என் மாப்ளையை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன்”.

“அய்யோ டேய் அது அவங்க பெர்சனல் அதுல யாரும் நடுவுல போக கூடாது..இதே நீ போய் பேசாம இருந்திருந்தா லேகாவே சாரி கேட்டு அவங்க சேர வாய்ப்பு இருந்தது. அதுவும் இனி நடக்காது,
அண்ணனோட ஃ பீலிங் உன் லைப் ல நடக்கும் போதுதான் உனக்கு புரியும்”.

“நான் எல்லாம் இவன மாதிரி இருக்க மாட்டேன்”என்றான் சக்தி.

“ஆமாடா நீ கண்டிப்பா உன் பொண்டாட்டியை கோபப்பட்டே டார்ச்சர் பண்ணுவ” என்றாள் சஹானா.

அவனோ முகத்தை திருப்பி கொண்டான்.

“சரி சரி திரும்பு நீ எவ்ளோ கோபக்காரனோ, அவ்ளோ பாசக்காரன் சரியா” என்றாள் சஹானா.

அவனும் சிரித்தவாறே..
”சஹானா அகர்சன் வேலன் மாதிரி இருந்தா அவனுக்கே உன்ன கட்டி வச்சிருப்பேன்”.

சட்டென அவள் முகம் கோபமாய் மாறி “அந்த பொறுக்கியை ஏன் டா ஞாபகப்படுத்துற”

“ஏன் டி என்னாச்சு..?”

“எல்லாரும் என் அண்ணன் மாதிரி உண்மையானவங்க இல்ல,அவன் அனுப்புன மெசேஜ்,போட்டோவ பாரு” என்று செல்போனை அவனிடம் நீட்டினாள்.

அவனும் அதை வாங்கி பார்த்து.. “ச்சீ..என்னடி
இதெல்லாம்..அகர்சன் இவ்வளவு மோசமானவனா..”

“ஹோ..ஏன் பின்னாடி அவன் வர்றதால சின்சியர் லவ்ன்னு நினைச்சியா...”

“ஆமாடி...”

“சரிதான்......”என்றாள் சஹானா.

“சரி விடுடி உனக்கு உன் அண்ணன் மாதிரி ஒரு மாப்ளைய நான் தேடி பிடிக்கிறேன்”.

“சரி தேடி பிடிச்சிட்டனா சொல்லு நான் அவன் கூட ஓடிடுறேன்” என்றாள் சஹானா.

அடுத்த நாள் மாலையில் லேகாவும், வேலன்
விஜய்குமாரும் ஒரே நேரத்தில் வீட்டிற்க்குள்
வந்தனர்.லேகா அடக்க முடியாமல் அவனை பார்த்து சிரித்தவாறே உள்ளே வந்தாள்.
சித்ரலேகாவின்
சிரிப்பை வீட்டிலுள்ள அனைவரும் வியப்பாய் பார்த்தனர்.

“ஏய் சிரிக்காதடி” என்றான் வேலன் விஜயகுமார்.

“என்ன அண்ணி சிரிப்பு பயங்கரமா இருக்கே”
என்று கேட்டாள் சஹானா.

“நீ கேளு சஹானா.......”

“ஏய் சொல்லாதடி” என்று அதட்டினான் வேலன்
விஜயகுமார்.

“நான் சொல்லுவேன் போடா” என்று மீண்டும்
சிரித்தாள் சித்ரலேகா.

சற்று நேரத்திற்கு முன்..லேகாவின் ஆபிஸ் முன்னே உள்ள பூக்கடையில்
பூ வாங்கி பைக்கில் வைத்துவிட்டு 1முழம் பூவை தன் பாக்கெட்டில் சொருகினான் வேலன் விஜயகுமார். ஆபிஸ் முடிந்து வெளியில் வந்த லேகா இதை கவனித்து விட்டு...
‘பூ வாங்குற அளவுக்கு வந்துட்டியா வாடா
உனக்கு இருக்கு இன்னைக்கு’ என்று மனதினுள்
சொல்லியபடியே அவனை நோக்கி வந்தாள்.

வேலன் அவளிடம் வந்து “நீ இன்னைக்கு
ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போயிடு..எனக்கு வேற வேலை இருக்கு” என்று சொல்லும் போதே
“பொண்டாட்டி” என அவன் மொபைல் போன் ரிங் ஆக அதை எடுத்து பேசினான்.”வந்துட்டே இருக்கேன் ஷாலினி” என்றவாறே லேகாவை விட்டு போனான்.

“ஷாலினியா அது யாரு..?” என்று அவன் மேல்
சந்தேகமாய் ஆட்டோவில் அவனை பின் தொடர்ந்தாள் லேகா. அவனோ அடுத்த தெரு முனையில் ஷாலினியை வண்டியில் ஏற்றி ஒரு ஸ்வீட் கடையில் நிறுத்தி ஆர்டர் செய்த ஒரு பெரிய ஸ்வீட் பாக்ஸை வாங்கி கொண்டு அவளையும் கூட்டி கொண்டு ஒரு அடுக்குமாடி கட்டடத்தின் முன் அவன் வண்டி நின்றது. லேகாவும் அவனுக்கு தெரியாமல் அவன் பின்னே சென்றாள். 6வது மாடிக்கு சென்றான் வேலன். லேகாவும் பின் சென்று பார்த்தபோது அது
ஏழை,எளிய,
பெண்களுக்கான
சுய-வேலைவாய்ப்புக்கான மாதர் சங்கம் என தெரிய வந்தது.

‘இவனுக்கு இங்க என்ன வேலை’ என்று நினைத்து கொண்டே லேகா உள்ளே வர..

மாதர் சங்கதலைவி “நீங்க யாரு” என்று கேட்டாள்.

“நான் அவர் கூட வந்தேன்” என்று வேலனை கை
காட்டினாள் லேகா.

“அப்படியா மேடம் உட்காருங்க.”

“இல்ல பரவாயில்லங்க.. இங்க இன்னைக்கு என்ன செலிப்ரேசன்” என்று கேட்டாள் லேகா.

“ரக்சா பந்தன் மேடம் வேலன் சாரோட அம்மா சக்தி எங்க ஆர்கனிசேஷனோட பவுண்டர் வருஷா வருஷம் சார் இங்க
இருக்க எல்லா பொண்ணுங்களுக்கும் பூ,ஸ்வீட் எல்லாம் கொரியர் பண்ணுவார். இந்த வருஷம் நேர்ல வர்றேன் சொல்லி வந்திருக்கார்” என்றாள்.

அந்த நேரம் எல்லாரும் ராக்கி கட்டினர் வேலனுக்கு, ஷாலினியும் வந்து வேலன் கைகளில் ராக்கி கயிற்றை கட்டி கடந்து போனாள்.அப்போது லேகா வேலனருகே சென்றாள்.

“ஹேய் பொண்டாட்டி நீ எங்க இங்க..?”

“சாருக்கு ஊரெல்லாம் தங்கச்சிதான் போல..”

“ஆமா 1000தங்கச்சி இருக்காங்க, ஆனா பொண்டாட்டி நீ மட்டும்தான் இருக்க.”

அந்த நேரம் ஷாலினி அங்கு வந்து “அண்ணன் ஒரு கயிறு மிச்சம் இருக்கு....நீங்க வேணா கட்டுறீங்களா” என்று லேகாவிடம் நீட்டினாள்.

“ஹோ.......கட்டிடலாமே”என்று சிரித்தபடி கயிறை வாங்கினாள் லேகா..

“ஏய் ஷாலினி என்ன வேலை பார்த்துட்டு போற மா..”என்று அலறினான் வேலன்.

அவனை நெருங்கிய லேகாவை
“ஏய் வேணாம் தள்ளி போ டி” என்றான்.

“முடியாது......நான் ரக்சா பந்தன் கயிறு கட்டுவேன்”.

“ஹேய் லூசு நீ கட்ட கூடாது டி” என்று அவளிடமிருந்து ஓடினான்.

“ஏய் ஒரு தடவை கட்டிக்கோடா” என்று துரத்தினாள்.

”என்ன இவ்ளோ நாள் என்ன என்ன பாடு படுத்துன..வாடா இன்னைக்கு நீ காலி டா...”என்று அவனை விடாமல் துரத்தினாள் லேகா.

அவன் அவளுக்கு பயந்து மேல் ஸ்லாப்பில் ஏறி உட்கார்ந்து “ஹேய் என்னடி கொடுமை இது மஞ்சத் தண்ணியோட துரத்த வேண்டியவ மாத்தி ராக்கி கயிரோட
துரத்துற.. ஏய் பொண்டாட்டி நான் தான் டி உனக்கு தாலி கயிறு கட்டணும், நீ எனக்கு கட்ட கூடாது டி..”என்று அவன் சொல்லும் போதே ஷாலினி உள்ளே வந்தாள்..

“ஏன் அண்ணன் மேல இருக்கீங்க..?”

“ஏய் ஷாலினி அவ என் பொண்டாட்டி......மா”

“உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா சொல்லவே இல்ல”

“இப்ப ரொம்ப முக்கியம்,அவ கையில உள்ள கயிறை வாங்கு.”

“சாரி தெரியாம கொடுத்துட்டேன்” என்று கயிறை வாங்கினாள்.

பின் இறங்கி கீழே வந்தான்..அந்த
கயிறை என்கிட்ட கொடு வீட்ல ஒரு தங்கச்சி இருக்கா... “இவ என் மாமா பொண்ணு இனிமேதான் கல்யாணம்... கண்டிப்பா என் கல்யாணத்துக்கு வரணும்”
என்றான்.

என்று நடந்த எல்லாவற்றையும் சஹானாவிடம் சொல்லி சிரித்துவிட்டு அவர்களை விட்டு மெல்ல அவள் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் சித்ரலேகா.

“சஹானா இந்தாம்மா பூ,ஸ்வீட் ஹாப்பி ரக்சா பந்தன்” என்றான் வேலன்.

“அண்ணன் பூ கொடுத்து ப்ரொப்போஸ் பண்றவங்கள பார்த்து இருக்கேன்.ஆனா உங்கள மாதிரி யாரையும் பார்க்கல” என்று சொல்லி ரக்சா பந்தன் கயிறை கட்டினாள் சஹானா.

“ஆமா அண்ணிக்கு பூ வாங்கலையா..?
சொல்லு அண்ணன்”.

அவன் சிரித்தபடி “என் பொண்டாட்டிக்கு நான் முதல் முதல்ல கொடுக்குற பூ
பூ-வைக்குற
ஃபங்ஸனுக்காகதான் இருக்கும்”என்றதும்,
லேகா நின்று அவனைப் பார்த்து சிரித்தபடி
“பைத்தியம்டா நீ” என்று சொல்லிவிட்டு படிகள் ஏறி போனாள்.

அதன் பின் ரேணுகா,அப்பா-வேலன்,மாப்ளை வேலன்,சக்தி என நால்வரும் பேசி கொண்டு இருந்தனர்.

“நம்ம கம்பெனியோட 25வது ஆண்டு வெள்ளி விழா இன்னும் 5 நாள்ல வரப் போகுது.எல்லா
ஓர்க்கர்சுக்கும் இன்சென்டிவும்,டிரஸும் எடுத்து
கொடுக்கணும்” என்றாள் ரேணுகா.

“அப்படியே செய்யலாம்” என்றனர் மூவரும்.

“நம்ம வீட்ல இருக்க எல்லாருக்கும் டிரஸ் வாங்கணும்,நம்ம
ஃப்ரண்ட்ஸ்,ரிலேசன்ஸ கூப்பிட்டு பார்ட்டி கொடுக்கணும்” என்றாள் ரேணுகா .

“சரி மா வாங்கிடலாம், பார்ட்டி பண்ணலாம்”என்றனர் மூவரும்.

அதன்பின் சஹானா
சித்ரலேகாவிடம் தனிமையில் “நீங்க என் அண்ணன கொஞ்சம் கன்சிடர் பண்ணலாமே..”

“சஹானா அவன் காமெடி பீஸ் அதனாலதான் சிரிச்சேன். நீயும் அம்மா மாதிரியே கேட்குறீயே..”

“அப்படியில்ல அவரோடது ட்ரூ லவ்-ன்னு தோணுது”

“எனக்கு அப்படி ஃ பீல் ஆகல சஹானா..அவங்க அம்மா ஆர்மில டாக்டர், அதனால இவன் ஆர்மில சோல்ஜர் அவ்ளோதான், அவனுக்குன்னு ஏதாவது எய்ம் இருக்கா..?ஒரு பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்றதெல்லாம் ஒரு எய்ம்மா..?சொல்லு”.

“எனக்கு எய்ம் இல்ல அத நீ பார்த்த..”என்று
கேட்டான் வேலன் விஜயகுமார் அங்கு வந்து..

“எய்ம் இருக்குறவனால ஒரு பொண்ணு பின்னால இப்படி சுத்த முடியாது”.

“என் எய்ம், என் லைப் 2ம் உன்கிட்டதான் டி இருக்கு” என்றான் வேலன்.

“உனக்கு எல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது
இதே எண்ணத்தோட என் பின்னாடி திரிஞ்ச தேவதாஸாதான் அலைய போற” என்று சொல்லிவிட்டு அவனை கடந்து போனாள் சித்ரலேகா.
 
Top