GG writers
Moderator
ரேணுகா
வேலன்
(இறுதி அத்தியாயம்-32)
சற்று நேரத்திற்கு பின் ரேணுகா 2 மணமக்களையும் தேடி நாத்தனார் சக்தியிடம் வந்து..
“எங்கடி 2 ஜோடியும் ரிசெப்ஷன் டைம் ஆச்சு” என்றாள்.
“ஹேய் அவங்கள தேடாதடி,தனியா பேசணும்னு நினைச்சு போயிருப்பாங்க” என்றாள் அத்தை சக்தி.
“அதுக்கு இதுவா நேரம் அங்க அகிலா அண்ணி,அண்ணன்,பூமான்னு எல்லாரும் மணமக்களை கேட்கறாங்க என்ன டி பதில் சொல்ல..”
“ஹேய் அண்ணி நீ சுஹானா-சக்தியை விட்ரு..நான் லேகா வேலன வர சொல்றேன். அவங்கள வச்சு சமாளிப்போம்.”
“என்னமோ ஒன்னு சீக்கிரம் பண்ணு டி” என்றாள் ரேணுகா.
மண்டபத்தின் மொட்டை மாடியில் சித்ரலேகாவும்,சுஹானாவும் ஒரு சேர நின்றனர் அப்பொழுது சுஹானா லேகாவிடம்
“இங்க ஏன் டி கூட்டிட்டு வந்த..”என்று கேட்டாள்.
“ஏன் என் அண்ணன் கூட பேச ஆசையில்லையா உனக்கு?”
“அப்படியில்ல அவங்க எப்படி இங்க வருவாங்க”என்று கேட்டாள் சுஹானா.
“அது என் மாமா உன் மாமாவ கூட்டிட்டு வந்துருவாரு..”
சுஹானா லேகாவை செல்லமாய் அடித்தாள்.
மாப்ளை வேலனும்,மச்சான் சக்தியும் பேசி கொண்டே மாடிப்படி ஏறி வர..சக்தி சுஹானாவை பார்த்ததும் திரும்ப..
“ஏன் டா மச்சான் என்னாச்சுடா மறு படியும் உனக்கு இப்படி வியர்வை வந்திருக்கு..”என்று தன் கர்ச்சீப் பால் சக்தி முகத்தின் வியர்வையை துடைத்தான்.ஏன்டா நீ எவ்வளவு பெரிய மாவீரன் கடைசில என் தங்கச்சிக்கிட்ட பேச கை நடுங்குறீயேடா” என்றான் மாப்ள வேலன்.
“டேய் கிண்டல் பண்ணாதடா.....இதுக்குதான் என்ன மாடிக்கு கூட்டிட்டு வந்தியாடா” என்று கேட்டான்.
“ஆமா 2 பேரும், பேசிக்கவே மாட்டேன்றீங்களே டேய் என் தங்கச்சி அமைதியா இருக்கான்னா அது நியாயம் அவ பொண்ணு வெட்கப்படுறா..நீ ஏன் டா வெட்கப்படற” என்று கேட்டான் வேலன்.
“நீ ரொம்ப பேசறடா வேலா..”
“அப்ப நீ போய் என் தங்கச்சிக்கிட்ட பேசு நான் அமைதியா இருக்கேன்” என்று சொல்லி சக்தியை சுஹானாவிடம் தள்ளி விட்டான்.
அண்ணன் சக்தி வந்ததும் லேகா சுஹானாவிடம் “நானும் உன் அண்ணனும் அந்த பக்கம் பேசிட்டு இருக்கோம்” என்று மாப்ளை வேலனை அழைத்து போனாள்.
அதன்பின் லேகா மாப்ளைவேலனிடம்
“ஏன் டா அவங்கள பார்த்துட்டு இருக்க..”
“அது உங்க அண்ணன் கெமிஸ்ட்ரில வீக் டி” என்றான் வேலன்.
“சார் ரொம்ப ஸ்ட்ராங்கோ..”
“நான் அவுட் ஸ்டாண்டிங் ஸ்டுடண்ட் டி..”
“நான் பார்த்ததே இல்லையே” என்றாள் சித்ரலேகா.
“நீ ஒர்க்-அவுட் பண்ண விட்டதே இல்லையே”என்றான் வேலன்.
“சரி அதை விடு உன்கிட்ட ரொம்ப நாளா ஒன்னு கேட்கணும் நினைச்சேன்.”
“கேளு டி...”
“இல்ல எல்லாருக்குமே பொதுவா சுஹானா மாதிரி அன்பான,அமைதியான பொண்ணுங்களதான் பிடிக்கும்..என்ன மாதிரி கல் மனச ஏன் உனக்கு பிடிச்சது..”
வேலன் சிரித்தபடி அவள் தோள்களில் மேல் கைபோட்டு “பொண்டாட்டி நீ கல் மனசு இல்ல டி..தேன் மாதிரி மனசு உள்ளவ..அதுனாலதான் தேனீ மாதிரி உன்ன யாரும் சேர்ந்திராதபடி கோபம்ன்ற பேர்ல எல்லாரையும் கொட்டிடுற...”
“அப்படியா..அப்ப இப்பவும் தேனீட்ட கொட்டு வாங்கிக்குறியா...”
“அதெல்லாம் நிறைய வாங்கிட்டேன்...இனி தேனீட்ட இருந்து தேனதான் வாங்கணும்” என்று வேலன் ஆசையாய் சொல்லும் போதே ஒரு பையன் வேலனின் கால்களை தட்டி “இந்தாங்க மாமா” என்று செல்போனை கொடுத்தான்.வேலன் செல்போனை வாங்கி பார்த்தால் அம்மா சக்தி வீடியோ காலில்..
“டேய் என்னடா பண்ற?உன் பொண்டாட்டியை கூட்டிட்டு கீழ வா..”என்றாள்.
“ஏன் மா உன் மக அங்கதான நிற்கிறா அவளுக்கு வீடியோ கால் போட மாட்டியா..”
“ஏய் அவங்க பாவம் டா இப்பதான் மேரேஜ் ஆயிருக்கு”.
“ஆமா எங்களுக்கு கல்யாணம் ஆகி 50,60வருஷம் ஆயிருச்சு” என்றான் வேலன்.
“உன்கிட்ட பேச முடியாது..மருமகளே”
“அத்தை” என்றாள் லேகா.
“நீ அவன்கிட்ட பேசி கீழ கூட்டிட்டு வாம்மா” என்றாள் சக்தி.
“சரி அத்தை” என்று லேகா போனை கட் செய்தாள்.
“என்ன சரி அத்தை” என்று செல்ல கோபமாய் கேட்டான் வேலன்.
“ஹேய் வேலா கோபமா இருக்கியா..”
“ஆமா செம கோபமா இருக்கேன்..உன் மேல தான்..”
“நான் என்னடா பண்ணுனேன்..”
“உனக்கு உன் டாக்டர் மேலதான் பாசம் ஓவர்.. நான் எல்லாம் யாருங்க...”
“ஹேய் மாமா..”என்று சித்ரலேகா அழைக்க,வேலன் நாலா பக்கமும் சுற்றி பார்க்க
“டேய் மக்கு மாமா உன்னதான் கூப்பிட்டேன்” என்றாள் லேகா.
“என்ன டி” என்ற சிரித்தபடி கேட்டான் வேலன்.
லேகா வேலன் கைகோர்த்தபடி “டாக்டர் சொன்னா சரியா இருக்கும்.. நீயும்,டாக்டரும் என் 2 கண் மாதிரி சரியா..ஒருத்தருக்காக ஒருத்தரை விடமாட்டேன்,அவங்க 2 பேரும் பாவம் தானே
ஒருத்தருக்கொருத்தர் மனசு விட்டு பேசிக்கவே இல்ல ல நாம கீழ போய் மத்தவங்கள மேனேஜ் பண்ணுவோம்.”
“ஹய்யோ என் பொண்டாட்டி பாசமா எல்லாம் பேசறாளே எனக்கு மயக்கம் வருதே” என்றான் வேலன்.
“டேய் அடி வாங்க போற வா போலாம்” என்று அவனை இழுத்து சென்றாள் சித்ரலேகா.
லேகா தன் அண்ணியிடம் “நாங்க கீழ போறோம் நீங்க பேசிட்டு வாங்க” என்றாள்.
மாப்ளை வேலன் மச்சான் சக்தியிடம் “நீ இன்னும் பேசவே ஆரம்பிக்கலதானே..”
“ஆமாடா எப்படி கண்டுபிடிச்ச..”என்றான் சக்தி.
“தூ..போடா..”என்று திட்ட நினைத்தவனை சித்ரலேகா இழுத்து செல்ல..
சக்திவேலன் சற்று யோசித்தவாறு சுஹானாவை பார்த்தபடி “டேய் மாப்ள எனக்கு 2 பொண்டாட்டி டா”என்று சத்தமாய் சொல்ல..
“ஆமாடா ஆடத்தெரியாதவனுக்கு 2 கால்லையும் சலங்கையாம்” என்று சொல்லியபடி படியிறங்கி போனான் மாப்ளை வேலன்.
சுஹானா வேகமாய் போய் சக்திவேலனின் இரண்டு காலரையும் பிடித்து “என்ன பேசிட்டு இருக்க நீ” என்று கோபமாய் கேட்க..
“உண்மையதான் சொன்னேன்”.
“என்ன உண்மை..ஏன்டா ஒருத்தி வந்து ப்ரொப்போஸ் பண்ணாதான் உன் பொண்டாட்டி ஞாபகம் வருமா உனக்கு” என்று கேட்டாள் சுஹானா.
“ஏன் டி உனக்கு தாலி கட்ட ஒருத்தன் கிட்ட
வந்தாதான் உன் புருஷன் ஞாபகம் வருமா உனக்கு..சரிக்கு சரியா போச்சு” என்றான் சக்தி.
“சரி விடு என்ன 2 பொண்டாட்டி..”என்று கேட்டாள் சுஹானா.
“ஆமா நீதான் என்னோட செகண்ட் ஃவொயிப்” என்றான் சக்தி.
“நான் உனக்கு 2வதா..”என்று கண்கள் கண்ணீர் சிந்த கேட்டாள் .அப்பொழுது காற்று பலமாய் வீசி அவள் புடவையின் முந்தானை பகுதி பறந்து சுஹானாவையும்-சக்தியையும் மூடிய 2 மணித்துளிகளில் சுஹானாவின் கண்ணீரை உவகையாக மாற்றினான் சக்திவேலன்.
புடவையின் முந்தானை அவர்களை விட்டு கீழ் இறங்கும் போது சாரல் மழை அவர்களை நனைக்க சுஹானா மேல் நோக்கி மழையை பார்த்து “என் அப்பா,அம்மா நம்மள ஆசீர்வாதம் பண்றாங்க” என்றாள்.
சக்திவேலன் மழையை பார்த்து “தேங்க்ஸ் அத்தை மாமா” என்றான்.
“ஹேய் என்ன பண்ண 2 நிமிசத்துக்கு முன்னாடி
நீ என்ன..ஹாம் சொல்லு டா?”
அவளை இறுக பிடித்த சக்திவேலன் “என் பொண்டாட்டிக்கிட்ட வாய் திறக்காம சாரி சொன்னேன்..”
“நான் தான் உனக்கு 2வது பொண்டாட்டி ஆச்சே...”
“ஆமா என் முதல் மனைவி பெயர் சஹானா அவள காப்பாத்ததான் தாலி கட்டுனேன் என் 2 வது காதல் மனைவி பெயர் சுஹானா அவ மட்டும் என் மொத்த வாழ்க்கைக்கும் சொந்தமானவன்னு தாலி கட்டுனேன்”.
“உனக்கு சஹானா வேணுமா,இல்ல சுஹானா வேணுமா” என்று கேட்டாள்.
“இது என்ன கேள்வி எப்பவும் சுஹானாதான் வேணும்.”
“அப்புறம் என்ன 2 ஃவொயிப் ...”என்றாள் சுஹானா.
“அப்படி சொன்னாதான் சண்டபோடவாச்சும் நீ என்கிட்ட வருவ” என்றான் சக்தி.
“ஹேய் கேடி..ரவுடி.”
இவர்கள் பேசிகொண்டிருந்த தருணத்தில் ரேணுகாவும் அவளின் கணவர் வேலனும் மெல்ல படிகள் ஏறி வர..
சக்தி சுஹானாவிடம் “சரி உனக்கு என் அம்மா மாதிரி ட்ரீம் என் தங்கச்சி மாதிரி எய்ம் இருக்கா?” என்று கேட்டான்.
“ட்ரீம், எய்ம்ன்னு எல்லாம் சொல்ல முடியாது ஆனா ஒரு ஆச இருக்கு” என்றாள் சுஹானா.
“என்னது?”
“அது என் மேரேஜூக்கு அப்புறம் நானும் என் புருஷனோட ரேணுகா-வேலன் மாதிரி வாழணும்னு ஆச” என்று சொல்லும் போதே இதை கேட்ட ரேணுகாவும், வேலனும் படிக்கட்டுகளில் நிற்க ஒருவரையொருவர் பார்த்து சிரித்து கொண்டனர்.
அப்பொழுது சக்தி சுஹானாவிடம் “சூப்பர் ஆச இதை போய் இவ்ளோ நாளா சொல்லாம இருந்துட்டியே சரி அவங்க ரேணுகா வேலன் பார்ட் 1 ஆக இருக்கட்டும்,நாம பார்-2 ரேணுகா வேலனா இருப்போம்” என்று அவன் சொல்ல..
“மருமகளே ரிசப்சன் டைம் ஆச்சு” என்று படிகளில் நின்றபடி சத்தமாய் கூறினாள் அத்தை ரேணுகா.
“ஹாம் இதோ வந்துட்டேன் அத்தை” என்றாள் சுஹானா.
“சரி சீக்கிரம் வாங்க” என்று கூறியபடி கீழே போனார்கள் ரேணுகா வேலன் தம்பதியினர்.
சக்தி சுஹானாவின் கைகளை பிடித்தபடி “போறியா சுஹானா..?”என்று பாவமாய் கேட்டான்.
“மிஸ்டர் சக்திவேலன்..”
“சொல்லுங்க சுஹானா சக்திவேலன்.”
“போறியா..இல்ல..போறோம்..சரியா..
ரிசெப்ஷன் முடிஞ்சதும் பேசலாம் ஒகே வா மாமா” என்று அவள் கொஞ்சலாய் கேட்க..
அவனும் “ஓகே ஒகே” என்று சிரித்தபடி சொல்ல..இருவரும் கைகோர்த்தபடி மகிழ்வாய் கீழ் இறங்கி போனார்கள்.
ரேணுகா
வேலன், சக்தி
விஜய்குமார் இடையில் உண்மையான காதலும், நம்பிக்கையும், புரிதலும் இருந்ததால் அவர்கள் இல்வாழ்வில் இன்பத்திற்கு குறைவே இல்லை....
சித்ரலேகா
வேலன்,
சுஹானா
சக்திவேலன் போன்று இல்வாழ்வில் இணையும் இரு இதயங்களுக்கும் இடையில் உண்மையான காதலும், நம்பிக்கையும், புரிதலும் வந்து விட்டதால் இவர்கள் இல்வாழ்விலும் இன்பத்துக்கு இனி பஞ்சமிருக்காது....
சிறிது நேரத்தில் ரிசெப்சன் தொடங்கி 2 ஜோடிகளும் மிக மகிழ்வாய் மேடையில் அமர்ந்திருக்க உற்றார்,உறவினர், நண்பர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவிக்க..
மணமக்கள்ஆடல்,பாடல் என மகிழ்ச்சி பொங்க நிறைவாய் ரிசெப்ஷன் முடியவே..2 ஜோடிகளுக்கும் தனித்தனி போட்டோ ஷீட் முடிந்து 2 ஜோடிகளும் கைகோர்த்த வண்ணம் ராஜா-ராணியை போல படிகளில் கீழ் இறங்கி வர அப்படியொரு அழகு
குழந்தைகளை பெற்று வளர்ப்பதில் இது போன்ற 2பிள்ளைகளும் தன் தன் வாழ்க்கை துணையோடு ஒரே நேரத்தில் அவர்கள் இல்லற வாழ்வு தொடங்குவது என்பது ரேணுகா-வேலன் போன்ற பெற்றோருக்கு அளவிட முடியாத ஆனந்தம் தந்த தருணம் இது.
அவர்கள் இறங்கிய பின் சுஹானா-சக்திவேலனிடம் பாட்டியும்,தாத்தாவும் ரேணுகா மற்றும் வேலனை தன் உடன் அழைத்து செல்வதாக சொல்லி கொண்டு இருந்தனர்,
மறுபுறம் சித்ரலேகா-வேலன் விஜயகுமாரிடம் அம்மா சக்தி தோளில் பையுடன் வந்தாள்.
“என்ன டாக்டரே எங்க நைசா நழுவுற மாதிரி தெரியுது” என்று கேட்டாள் சித்ரலேகா.
“எனக்கு லீவு முடிஞ்சுதுடி நாளைக்கு காஷ்மீர்ல இருக்கணும்” என்றாள் அத்தை சக்தி.
“அப்ப நாங்களும் வர்றோம்” என்றாள் லேகா.
“ஹேய் நாளைக்கு தலதீபாவளி கொண்டாடிட்டு என் அக்கா,தங்கச்சி வீட்டுக்கெல்லாம் போய் விருந்து எல்லாம் முடிச்சிட்டு 2 பேரும் காஷ்மீருக்கு வாங்க”என்றாள்.
“டாக்டரே” என்றாள் லேகா.
“ஆரம்பிச்சிட்டா டா..உன்கிட்ட பேச முடியாது டி.. வேலா என்று தன் மகனை அழைத்து ஒரு சாவியை அவன் கையில் கொடுத்து;இது உன் கல்யாணத்துக்கான அம்மாவோட கிப்ட்” என்றாள்.
“என்ன சாவி மா இது?”
“காஷ்மீர்ல நீயும், உன் பொண்டாட்டியும் தனியா ஹேப்பியா இருக்க ஒரு ஃ ப்ளாட்
வாங்கியிருக்கேன்..நீங்க காஷ்மீர் வந்ததும் புது ஃ ப்ளாட்டுக்கு போய் நிம்மதியா இருக்கலாம் அம்மா டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் டா” என்று சொன்னாள் அம்மா சக்தி.
“தனிக்குடித்தனமா....என்னடா அமைதியா நிற்குற” என்று கேட்டாள் சித்ரலேகா.
“ஹேய் அம்மா தான டி போக சொல்றாங்க, அவங்கள வருத்தப்பட வச்சு போறதுதான் தப்பு..உனக்கும் தனியா இருக்கதான டி பிடிக்கும்” என்றான் வேலன்.
“டேய் போடா....டாக்டரே தனியா எல்லாம் உன்ன விட்டு போக முடியாது” என்றாள் லேகா.
“மருமகளே உன்ன விட்டு தனியா போல உன் எதிர் ஃ ப்ளாட்ல தான் நான் இருக்க போரேன் ஓகே வா” என்று கேட்டாள் அத்தை சக்தி.
சித்ரலேகா கண்ணீரோடு அத்தை சக்தியை கட்டி கொண்டு “டாக்டரே..நீ..என் கூடதான் இருக்கணும்”என்றாள்.
“அப்படியா நான் உன் கூட இருக்கணுமா..அப்ப
ரேஸ் -ல ஃபர்ஸ்ட் வா உன் கூடவே இருக்கிறேன்”என்றாள் சக்தி.
“என்ன சொல்ற டாக்டரே புரியல..”
சக்தி மெல்ல மருமகளின் காதோரமாய் “அது..உனக்கும்,உன் அண்ணிக்கும் யார் ஃப்ர்ஸ்ட் அம்மாவாக போறீங்கன்ற ரேஸ் ஸ்டார்ட் ஆக போகுதுல,அதுல நீ ஃபர்ஸ்ட் வந்துரு..நான் உன் கூடவே இருக்கிறேன்” என்றாள்.
“டாக்டரே நீ இருக்கியே..”என்று கண்ணீரை துடைத்து சிரித்தாள் சித்ரலேகா.
“ஹேய் என்ன மாமியாரும் மருமகளும் ரொம்ப நேரமா பேசுறீங்க..என்ன பேசுறீங்க” என்று கேட்டான் மகன் வேலன்.
“அது எங்களுக்குள்ள 1000 பெர்சனல் இருக்கும் அதெல்லாம் நீ கேட்க கூடாது?” என்றாள் அம்மா சக்தி.
“அது சரி ..ஃ ப்ளாட் கொடுத்ததுக்காக உன் கூட சண்ட போடாம விடுறேன்” என்றான் வேலன்.
“என்ன மருமகளே ஃபர்ஸ்ட் வந்துருவியா?” என்று கேட்டாள் அத்தை சக்தி.
சித்ரலேகா வெட்கத்தோடு புன்னகை செய்து
“வந்துருவேன்” என்றாள்.
அத்தை சக்தி தன் மருமகளை கட்டி கொண்டு “உன் டாக்டர் எப்பவும் உன் கூடவே தான் இருப்பேன்,எதுவும் ஃபீல் பண்ணாத..சீக்கிரம் குட் நியூஸ் சொல்லணும் சரியா” என்று சொல்லி கிளம்பினாள்.
மாப்ளை வேலன் லேகாவிடம் “என்ன டி பேசுறீங்க 2 பேரும்” என்று கேட்க
“நான் அப்புறம் சொல்றேன் சரியா” என்றாள்.
“சரி,சரி லேகா மேடம் கோபப்படாதீங்க” என்றான் வேலன்.
“கோபம் எல்லாம் இல்ல சார்” என்று அவள் சொல்லவும் அவன் முகம் மாறவே..அவன் காதுகளில் அமைதியாக அவர்கள் பேசியதை சொன்னாள் சித்ரலேகா.
“அம்மான்னா அம்மாதான... நீ செம அம்மா”என்றான் மாப்ளை வேலன்.
அதன் பின் அத்தை சக்தி ரேணுகா வேலனிடம்
சொல்ல போக பாட்டி ஸ்ரீ லேகாவும், தாத்தாவும் “சக்தியையும் வீட்டிற்கு வாம்மா” என்று அழைத்தனர்.
“இல்ல மாமா லீவு முடிஞ்சுது” என்று சொல்லி சக்தி கிளம்ப “நாத்தனாரே” என்று ரேணுகா அழைக்க.
“என்ன அண்ணியாரே” என்று சக்தி அவளை கட்டி கொள்ள..ரேணுகா சக்தியிடம்
“எங்க கூடவே இருந்துருங்க நாத்தனாரே” என்றாள்.
“ரிடையர்மென்ட் வந்ததும் உங்க கூடவே இருக்கிறேன் சரியா” என்று தன் அண்ணனிடமும் கூறிவிட்டு மேடையை விட்டு இறங்கி 4 அடி நடந்தவளை..
“என்ன நாத்தனாரின் மாமியாரே என்கிட்ட சொல்லாமலே போறீங்க” என்றாள் சுஹானா.
அத்தை சக்தி திரும்பி “என்ன மகளே”என்று கேட்டாள்.
“அண்ணி கொடுமை இன்னும் முடியலை..புரியலையா..அன்னைக்கு டான்ஸ்ல சுத்தி விட்டு விழ வச்சீங்கள்ல..இப்ப வாங்க ஆடலாம் நீங்க சுத்திவிட்டாலும் நான் விழ மாட்டேன்” என்றாள் சுஹானா.
சக்தி சிரித்தபடி “வேண்டாம்மா” என்றாள்.
“தில் இல்லையா மனசுல, வயசாயிடுச்சுல உங்களுக்கு” என்று சுஹானா கேட்டதும்...
“உனக்கு கொழுப்பு கொஞ்சமா டி இருக்கு..போடுறீ பாட்டை நீயா,நானான்னு பார்க்கலாம்” என்றாள் அத்தை சக்தி.
ரேணுகா,சித்ரலேகா,சுஹானா,அத்தைசக்தி என நால்வரும் ரஞ்சிதமே பாடலுக்கு மீண்டும் நடனமாட.. ஒருவருக்கொருவர் அழகாய் சளைக்காமல் ஆட நடனத்தின் பாதியில் ரேணுகாவும்,சித்ரலேகாவும் நிறுத்தி விலகி கொள்ள...ஆனால் முடிவு வரை ரோலிங் ஸ்டெப் பயன்படுத்தியும் சுஹானா அத்தை சக்திக்கு சமமாய் ஆடி முடிவில் பாட்டு முற்று பெற இருவரும் வெற்றி பெற..
அத்தை சக்தி டான்ஸ் ஆடி மூச்சு வாங்க..
“மகளே” என்று மிரட்டலாய் அழைத்தாள் சுஹானாவை..
“சொல்லுங்க நாத்தனாரின் மாமியாரே” என்றாள் சுஹானா.
“உன் நாத்தனார் வாழ்க்கைக்காக நான் கேட்குறதை செய்வியா..?”
“செய்வேன் கேளுங்க” என்றாள் சுஹானா.
“இன்னும் ஒரு வருஷத்துல என் மக சுஹானாவ நான் சீமந்தம் பண்ணி என் கூட கூட்டிட்டு போணும் செய்வியா..”என்று கேட்டாள் அத்தை சக்தி.
சுஹானா வெட்கத்தோடே புன்னகை செய்தாள்.
“என்ன மகளே பதிலே காணும் “என்று மிரட்டலாய் மகிழ்ச்சியாய் கேட்டாள் அத்தை சக்தி.
சுஹானா மென்மையாய் சிரித்தபடி “செய்வேன் அம்மா” என்று சொல்லி அத்தை சக்தியை கட்டி கொண்டாள்.
“அம்மாதான் உனக்கு டெலிவரி பார்ப்பேன் சரியா சுஹானா."
“சரிம்மா” என்று கண்ணீர் ததும்ப கட்டி கொண்டு “எனக்காக நிறைய செய்ஞ்சிருக்கீங்க தேங்க் யூ அம்மா” என்றாள் சுஹானா.
அத்தை சக்தியும் அவளை அரவணைத்தபடி “உன் அம்மாவா என்ன செய்யணுமோ அத மட்டும்தான் செய்ஞ்சேன்,பெரிசா எதுவும் நான் செய்ஞ்சிடல சரியா..சீக்கிரம் குட் நியூஸ் சொல்லணும்” என்றாள்.
இல்லற வாழ்வில் இணைய இரு இதயங்கள் போதும்.ஆனால் அந்த இல்லறவாழ்வு நட்சத்திரம் போல மிளிரவும்,மாளிகை போல உயர்ந்து நிற்கவும் ஒவ்வொரு உறவுகளும் அவற்றின் உண்மையான அன்பும் அத்தியாவசியமானது. இங்கு அண்ணன்,அண்ணி,தாத்தா, மாப்பிள்ளை,மச்சான், நாத்தனார் என ஒவ்வொரு உறவும் கோபம்,போட்டி,பொறாமைகளை விட்டுவிட்டு
என் அண்ணி,என் நாத்தனார்,என் பேத்தி, என் மச்சான்,என் மாப்பிள்ளை என் ஒவ்வொரு உறவும் உண்மையான அன்பை மட்டும் வெளிக் கொணர்ந்தால் குடும்பங்கள் ஒவ்வொன்றும் குட்டி சொர்க்கம் ஆகிவிடும்.இறந்துதான் சொர்க்கத்துக்கு போக வேண்டியதில்லை உண்மையான அன்பை ஒவ்வொருவரும் வெளிக் கொணர்ந்தால் நாம் இருக்கும் இடம் சொர்க்கமாகி விடும். வாருங்கள் பூமியை சொர்க்கமாக மாற்றுவோம்”. சுபம்.
கதை முடிந்து விட்டது.
என்றும் நட்புடன்,
ரேணுகா
வேலன்.