வனம் -01
"தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தேய்கின்றது...தேய்கின்றது புது
பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போல வாழும் பாசம்.....
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு"....என
எஸ்பிபியின் குரலில் பேருந்தில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. பேருந்தும் தரிப்பிடத்திற்கு வந்ததும் அனைவரும் இறங்கிக் கொண்டனர்.
தனது தோள்களிலும் கையிலும் இரு பைகளை எடுத்துக்கொண்டு பேருந்தில் இருந்து இறங்கினான் "ஜெருன் ஈ னோக்", குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரி தனது அலைபேசியில் யாருக்கோ அழைப்பெடுக்க மறுபுறம் என்ன சொல்லப்பட்டதோ...ஓகே, என்றபடி அழைப்பை துண்டித்தான்.
சுற்றிப் பார்வையை சுழல விட காலை நேரக் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. வேலைக்கு செல்பவர்கள் ஒருபுறம், பாடசாலை மாணவர்கள் ஒருபுறம், டீ, காஃபி விற்பவர்கள் ஒரு புறம், என பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது அக்கரைப்பற்று நகரம்.
தனக்கருகில் கேட்ட மணிச் சத்தத்தில் திரும்பிப் பார்க்க கண் தெரியாத நபரொவர் யாசகம் வேண்டி நின்றார்.
அவரின் ஊன்றுகோளில் இருந்துதான் மணிச்சத்தம் வந்தது. தனது பையில் இருந்து இரு நூறு ரூபாய் தாள்களை அவருக்கு கொடுக்க அவர்..." நல்லா இருங்க தம்பி" என விலகி மற்றொருவரிடம் யாசகம் வேண்ட நகர்ந்தார்.
சார், என அழைத்தபடி அங்கு வந்து சேர்ந்தார் சாரதி மாணிக்கம் அவருடன் ஜீப்பில் தனது பைகளுடன் ஏறிய அமர்ந்தான் ஜெருன், ஜீப் வண்டியும் மிதமான வேகத்துடன் நகர்ந்தது.
சார், "பயணம் எப்படி" என மாணிக்கம் கேட்க..... ஓ பரவால்லண்ண ரூமுக்கு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரி என்றான் ஜெருன்.....
அக்கரைப்பற்று நகரிலிருந்து அடுத்தடுத்துள்ள கிராமங்களைக் கடந்து ஜீப்பானது விரைந்து சென்றது. ஊர்களை கடந்ததும், எங்கிலும் பசுமையான வயல்வெளிகள் அதனைக் காண்பதே கண்கொள்ளாக் காட்சி மெல்லிய குளிர் காற்று உடலை தழுவிச் சென்றது.
அண்ணே,கடைசியா நடந்த கொலைய யாரு பார்த்தாங்க.... "அது சார் விறகு வெட்டப் போன கண்ணகிபுரத்து ஆட்கள் தான் பார்த்து இருக்காங்க எப்படியும் அவர் இறந்து ரெண்டு, மூன்று நாள் இருக்கும் போல" என்றார்.பின் அவர்களின் பேச்சு அங்கு நடந்த கொலைகள் பற்றி நீண்டது.
"குட் மார்னிங் சார்"..... என சலூட் அடித்தபடி தன் முன் விரைப்பாக நின்ற ஜெருன் ஈனோக்கைப் பார்த்த மேலதிகாரி,குட் மார்னிங் ஜெருன் என தன் முன்னிருந்து இருக்கையை அமரச் சொல்லியபடி ஒரு கடிதத்தையும் ஒரு பைலையும் கொடுத்தார்.
அக்கடிதத்தைப் பிரித்த ஜெருன் தன் உணர்வுகளை முகத்தில் காட்டாது மேலதிகாரியை பார்த்து," ஐ வில் டிரை மை பெஸ்ட் சார் என்றான்.... யா ஷ்வர் ஜெரூன். எவ்வளவு கிரிட்டிக்கலான கேச கூட சக்சஸ் புல்லா முடிச்சிருக்கீங்க.... இந்த கேச கேண்டில் பண்ண அக்கரைப்பற்று போலீஸ் அண்ட் போரஸ்ட் ஸ்காட்ச் தந்த ரிப்போர்ட் இதுல இருக்கு......
"நம்ம உதவிய அவங்க கேட்டப்போ இதை ஹேண்டில் பண்ன சரியானாள் நீங்க தான்னு தோணுச்சு எனிவே பெஸ்ட் விஷஸ் சீக்கிரமா குற்றவாளியை கண்டுபிடிங்க" என்றார் மேலதிகாரி,
அவருக்கு கை குலுக்கி மறுபடியும் சலூட் அடித்து வெளியேறி தனது அலுவலக அறைக்கு வந்தான் ஜெருன்.
வந்தவனின் முகமும் இறுக்கமாக இருந்தது மேலதிகாரி கொடுத்த ரிப்போர்ட்டை பார்க்க, "தேவகி கிராமத்தில் தொடர்ச்சியாக அங்குள்ள வனத்தில் மர்மமான முறையில் கொலைகள் நடைபெற்றிருப்பதையும்,அது தொடர்பான புகைப்படங்களும் அதில் இணைக்கப்பட்டிருந்தது. அவற்றைப் பார்த்தவன் ஒருமுறை ஆள மூச்செத்து கண்களை மூடித் திறந்தான்.
ஜீப் ஒரு குலுக்களுடன் மெயின் ரோட்டில் இருந்து வளைந்து திரும்பி ஒரு செம்மண் பாதையில் மேடு பள்ளத்தில் ஏறி இறங்கி தேவகி கிராமம் நோக்கி சென்றது.
சார்," இதான் தேவகி கிராமம்..... அதுவோ ஆங்காங்கு இடிபாடுடைந்த காணப்பட்டது.உயர்ந்த ஒரு கட்டிடம் மட்டுமே மீதமாக தெரிந்தது. ஜெருன் மாணிக்கத்தை பார்க்க...... "இந்த ஊர் மக்கள் காணமல் போய் ஒரு பதினாங்கு, பதினைந்து வருஷம் இருக்கும் என்றார்.
ஜெருனின் பார்வை அங்கு உயர்ந்திருந்த கட்டிடத்தையே நோக்கியது கிராம எல்லையை கடந்ததும்,முன்னோக்கிச் செல்ல சலசல என நீரோடும் சத்தம் கேட்டது, காட்டை கடந்து சிறிது தூரம் சென்றதும் ஆற்றோரம் ஜீப் வண்டி நிற்க, ஜெருன் வண்டியிலிருந்து இறங்கிக் கொண்டான்.
மாணிக்கம் பையில் ஒன்றை கையில் எடுக்க ஜெருன் மற்றொன்றை எடுத்தவன் அங்கு வனத்துறை அதிகாரிகள் தங்குவதற்கென கட்டப்பட்ட குவாட்டர்ஸினுள் நுழைந்தான்.
நீங்க ஓய்வு எடுங்க ஜெயகாந்தன் சார் ரவுண்ட்ஸ் போயிருக்கார் சாப்பிட எதும் கொண்டு வாரேன்.என ஜெருனை அவ்வறையில் விட்டு மாணிக்கம் வெளியேறினார்.
அவ்வறையில் தனது பைகளை வைத்து விட்டு ஜன்னல் திரைச் சீலையை விலக்க அங்கு சீன மொழி பேசியபடி சிலர் திரிந்தனர். சற்று தொலைவில் முழுவதும் வெண்நிறத்தால் மூடப்பட்ட கட்டடம் ஒன்று தெரிந்தது .காட்டின் எல்லைக்கு மின்சார வேலி போடப்பட்டிருந்தது.
தானும் பயணக் களைப்புத்தீர குளித்து தயாராகும் போது உணவுடன் வந்தார் மாணிக்கம்....
உணவுண்னும்போது "அண்ணே கொலைகளப் பற்றி பக்கத்து ஊர்ல என்ன பேசிக்கிறாங்க"....... சார்,.... தம்பினு சொல்லுங்க என்றான் ஜெருன்.....சரி தம்பி ஏதோ வன தேவதை தான் இப்படி கொலைகளை செய்றதா சொல்றாங்க..... அதோட வன தேவதையை கண்டதாகவும் சொல்கிறாங்க, நீங்க நம்புறீங்களா???? என ஜெருன் கேட்க....
சற்று பயத்துடனே "சொன்னா நம்ப மாட்டீங்க தம்பி வனத்தேவதைய நானும் ஒருவாட்டி கண்டிருக்கேன்".... என்றார் மாணிக்கம். ஜெருனோ சத்தமாக சிரித்தபடி கைகளை கழுவிக்கொண்டு வர... இருவரும் குவாடஸை விட்டு வெளியேறினர்.
இதோ அத்தியாயம் 01 பதிவிட்டு விட்டேன் எப்படி இருக்கு என்று சொல்லுங்கள்......