வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வலி ஈன்ற வரம் நீ - 1

GG writers

Moderator
வரதராஜன்...
அவன் தன் காதில் பஞ்சு வைத்தும் தலை வெடிக்கும் அளவிற்கு சத்தமிட்டுக் கத்தி அழுது கொண்டிருந்தாள் ஜீவஜோதி.

அவனுக்கு சத்தமாய் பேசுவதும், கத்துவதும் பிடிக்காத செயல்கள்.

அவள் இதுவரை கத்தியதைப் பொறுத்துக் கொண்டு இருந்தவன் ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் "ஏய்... வாய மூடுடி. காது அடைக்குது. சும்மா நொய் நொய்ண்ணுட்டு இருக்க..." என்று கோபமாய் கேட்டான்.

அவள் அவனைக் கண்டு கொள்ளாமல் நிறுத்தாமல் அழுது கொண்டிருக்க... கோபத்தில் என்ன செய்கிறோம் என்று உணராதவன்... அதுவரையில் பார்த்துக் கொண்டிருந்த கோப்பைக் கிழித்து தரையில் எறிந்து விட்டு ஆக்ரோஷமாக எழுந்து வந்தான்.

அவன் பார்வையிலும், வந்த வேகத்திலும் பயந்தவள் கட்டிலின் ஓரமாய் ஒடுங்கி அமர்ந்தாள்.

அவள் கைகள் வாயைத் தன்னால் மூடின. எனினும் அழுகைச் சத்தம் சிறிது குறைந்து கூடியதே தவிர... நின்றபாடில்லை.

அவள் அருகில் வந்தவன் "இப்போ வாய மூட போறியா? இல்லையாடி?" என்று கேட்டான் அடக்கப்பட்ட கோபத்துடன்.

அவன் கண்கள் சிவந்து "அவன் கோபத்தில் எல்லை அது" என்று சொல்லாமல் சொல்லியது.

எனினும்.. "நீ முதல்ல என்னை என் புருஷங்கிட்ட கொண்டு விடுடா.. யார்ரா நீ ? எதுக்குடா என்னைப் பிடிச்சி அடச்சி வச்சிருக்க? போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணி உன்னையெல்லாம் உள்ள வச்சி முட்டிக்கி முட்டி தட்டனும். கூண்டுல ஏத்தி தூக்குல போடணும்" என்றாள் அவள்.

"வாய ஒடச்சிருவேன். மரியாதையா பேசுடி. புருஷன்கிட்ட எப்படி மரியாதையா பேசணும்னு கூட உங்கப்பன் ஒனக்கு சொல்லித் தரலையா?" என்று அவன் கேட்க...

"நீயெல்லாம் என் புருஷனே கிடையாது. பிறகு எதுக்குடா நான் உனக்கு மரியாதை தரணும்? பூச்சாண்டி பயலே... எங்க அப்பாவ பத்தி பேச உனக்கு என்ன தகுதிடா இருக்கு? நாசமத்து போனவனே... எங்க அப்பா பேர சொல்லக்கூட ஒனக்கு எந்த உரிமையும் கிடையாது. எம்புருஷங்கிட்ட என்னைக் கொண்டு விடுடா. பாவம் அவரு என்னைத் தேடி எங்கேல்லாம் அலைஞ்சாரோ? நான் இல்லாம சாப்பிட கூட செய்திருக்கமாட்டாரு..." என்று கோபமாய் தொடங்கியவள் கேவலுடன் முடித்தாள்.

"இங்க பாரு... இனி அவன் உன் புருஷன் கிடையாது. நான்தான் உன் புருஷன், கண்கண்ட தெய்வம், கல்லானாலும் கணவன்... புல்லானாலும் புருஷன், மண்ணானாலும் மனுஷன்... எல்லாம்... என்ன? நான் சொல்லுறது புரியுதா?" என்று அவன் கேட்க...

"நீ எல்லாம் ஒரு மனுஷனாடா? அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்படுறியே... உனக்கெல்லாம் வெக்கமா இல்ல? நீ எல்லாம் இருக்குறதோட சாகக்கூடாதா? பூமிக்கு பாரமா எதுக்கு வாழுற? அரைமூழம் அருணாக்கயிறு கிடைக்கலையா உனக்கு தொங்கி சாவுறதுக்கு?" என்று கேட்டவளின் கீச்சுக்குரல் அவன் அவள் கழுத்தை அழுத்திப் பிடித்ததில் தன்னால் நின்றது.

கண்கள் வெளியில் தள்ள... மூச்சுக்கு ஏங்கியவள் துவளும் நிலையில்... தன் கைகளைத் தளர்த்தியவன் அவள் இருமுவதைக் கூடப் பொருட்படுத்தாது அவள் கழுத்தில் தான்கட்டிய தாலியைத் தேடினான்.

இருமிக் கொண்டு இருந்தாலும் முகத்தைத் திருப்பி, திமிராய் முறைத்துப் பார்த்தாள் அவள்.

நொடியில் "தாலியைக் காணோமே?!" என்ற தவிப்பு அவனிடம் ஏற்பட "அவள் ஆடைகளுக்குள் எங்கேனும் மறைத்து வைத்திருக்கிறாளோ?" என்ற எண்ணத்தில் ஆங்காங்கு கையை விட்டு துளாவ ஆரம்பித்தான்.

"கைய எடுல பொறுக்கி பயல... முன்ன பின்ன பொம்பளைய பாத்து இருக்கியா நீ?" என்று கேட்டவள் அவன் கையைப் பிடித்து நறுக்கென்று கடித்து வைத்தாள்.

கையை உதறியவன் அவள் வாயிலேயே இரண்டு அடி போட... மீண்டும் அழுகையை ஆரம்பித்தவள்..
"என் புருஷன் என்மேல ஒரு சின்ன துரும்பு கூட படவிடமாட்டாரு. நான் என்ன தப்பு பண்ணாலும் என்னை சந்தோஷமா வச்சிக்குவாரு.
என்னை அடிச்சி கொடுமை படுத்துற.. நீ எல்லாம் ஒரு புருஷனாடா? முதல்ல மனுஷனாடா நீ? நாயே... இங்க இருந்து வெளியே போடா... என்னை என் புருஷங்கிட்ட கொண்டு விடுடா" என்று கத்த ஆரம்பித்தவளின் சத்தத்தில் அருகில் இருந்த மேசையைத் தூக்கிப் போட்டு உடைத்தான் அவன்.


மேசை நொறுங்கி தாறுமாறாய்க் கிடக்க... "எம்மாடியோவ் இத மட்டும் நம்ம தலையில தூக்கி போட்டுருந்தான். இப்ப பரலோகம் போய் இருப்பியே ஜீவா. எதுக்கும் இவன் கிட்ட கொஞ்சம் அடக்கியே வாசிப்போம். வாய்ப்பு கிடைக்கும் போது தப்பிச்சி ஓடிருவோம்" என்று சத்தத்தைச் சற்று குறைத்து அழுது கொண்டிருந்தாள் ஜீவஜோதி.

"ஏய்... தாலி எங்கடி?" என்று அவன் கேட்க... முன்பை விட சத்தமாக அழுதாள் அவள்.

எரிச்சலுடன் காதைப் பொத்திக் கொண்டு வெளியே சென்றவன் சிறிது துணியும், டேப்பும் எடுத்து

வந்து "இனி கத்த மாட்டேன்... கத்த மாட்டேன்" என்று அவள் சத்தமிட்டு கூறியும் கேளாமல் அவள் கைகளைப் பின்னால் பிடித்துக் கட்டி... வாயையும் கட்டி, ஒட்டி வைத்தான்.இப்பொழுதுதான் சற்று நிம்மதியாக இருந்தது அவனுக்கு.
ஆயாசமாக கட்டிலில் அவள் அருகிலேயே மல்லாந்து விழுந்தவன்...

"அவள் இடைப்பகுதியில் எங்கேனும் சொருகி வைத்துள்ளாளோ?" என்று தடவி பார்த்தான்.

"தொட்டி பயலே.. கைய எடுல" என்றவள் அவனை எட்டி மிதிக்க..
மிதித்த
காலைப் பிடித்திழுத்து அவள் மடியின் மீதே படுத்து கொண்டவன்
"இவ தாலியைக் கழட்டி ரூமுக்குள்ள எங்கேயும் போடல. அப்போ வேற எங்க போட்டுருப்பா?" என்று மூளையைக் கசக்கி யோசித்தான்.

"எதற்கும் அறை முழுதும் பார்த்து விடுவோம்" என்று முடிவு எடுத்தவன் தாலிக் கொடியை அறையெங்கும் தேடி களைத்து எழுந்தான்.

ஜீவஜோதியோ? சப்தமின்றி கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். இடையில் அவன் தேடி கஷ்டப்படுவதைப் பார்த்து சிரிப்பு வேறு வந்தது.

அவள் சிரிப்பைப் பார்த்துவிட்டவனுக்கு சட்டென்று மூளையில் ஏதோ மின்னல் வெட்ட பாத்ரூமுக்குள் சென்று தேடினான் அவன்.

புனிதமாய் நினைத்து அவன் கட்டிய தாலி கழிவறைக்குள் தன் கடைசி பயணத்திற்காய் காத்து கிடந்தது.

கோபம் கண்மண் தெரியாமல் வந்தது அவனுக்கு. வேகமாய் அறைக்கு வந்தவன் மூலையில் வைத்திருந்த பிரம்பு கம்பு ஒன்றை எடுத்து அவளை அடிக்க பாய்ந்தான்.

ஆனால் பயந்து மூடியிருந்த அவள் விழிகளும், அதைத் தாண்டி வழிந்த கண்ணீரும், நடுங்கி கொண்டிருந்த உடலும் அவளை அடிக்க விடாமல் தடுக்க... கம்பைக் கோபத்தோடு தூக்கி எறிந்தவன்... அவளது வாயில் ஒட்டி வைத்திருந்த டேப்பைக் கோபத்தோடு கிழித்தெறிந்து... அவள் இதழ்களை வன்மையாய் கவ்வி முத்தமிட்டுவிட்டு வெளியேறினான்.

அவன் தொடுகை அசிங்கமாகவும் அருவருப்பாகவும் இருந்தது பெண்ணவளுக்கு.
"இதற்கு அவன் அந்த கம்பாலேயே நான்குஅடி அடித்திருந்தால் கூட பரவாயில்லையே" என்று தோன்றியது இப்போது.

அவன் தொட்ட அங்கத்தை வெட்டி எறிய வேண்டும் போல் தோன்ற...
வெடித்து அழுதவள் இதழ்களில் அவன் கடித்த இடத்தில் இரத்தம் ஊறியது.

குனிந்து பெட்டிலேயே தன் முகத்தை வைத்து தேய்த்தவள் கண்ணீரும் இரத்தமும் படுக்கை விரிப்பில் படிய குலுங்கிக்குலுங்கி அழுது கொண்டிருந்தாள் அவள். ஆனால் சத்தம்தான் வெளியில் கேட்கவில்லை.

அவள் அழுது கொண்டிருந்த வேளை.. வேலைக்கார பெண்மணி கழிவறைக்குள் கிடந்த தங்க சங்கிலியை எடுத்து சுத்தம் செய்து அறைக்குள்ளேயே வைத்து விட்டு சென்றார்.

பணிப்பெண் வந்து சென்றது கூட தெரியாது அவள் அழுது கொண்டிருக்க...

தாலிக்கொடியை எடுத்து வந்து தன்தாயின் படத்தின்முன் வைத்து எதோ வேண்டிக் கொண்டவன்... குனிந்து படுத்திருந்த ஜீவஜோதியை நிமிர்த்தி அவள் கழுத்தில் அணிந்து விட்டான். குமட்டிக் கொண்டு வந்தது அவளுக்கு.

தலையைக் குனிந்து அதை கழற்ற முயன்றாள். மென்மையாய் சிரித்தவன் "நீ அழுது உருண்டாலும்; அடிச்சாலும் பிடிச்சாலும்; என்ன செஞ்சாலும்; இத தூக்கி தீயிலேயே போட்டாலும் திரும்ப இது உன் கழுத்துக்குதான் வரும். அதுல எந்த மாற்றமும் இல்ல. புரியுதா? தேவையில்லாம அழுது எனர்ஜியை வேஸ்ட் பண்ணிக்காத" என மென்மையாக கூறியவன் கதவைப் பூட்டி விட்டு வெளியேறினான்.

"யார் இவன்?"

"நம்மை எங்கு அடைத்து வைத்திருக்கிறான்?"

"எதற்கு அடைத்து வைத்து தாலி கட்டுகிறான்?"

"சித்திரவதை செய்கின்றான்?" என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தெரியாமல் ஒருவாரமாக தத்தளித்து கொண்டிருந்தாள் ஜீவஜோதி.

ஆனால் அவனோ? மாலை ஐந்து மணியானால் வந்து விடுவான். இரவு உணவை அவளுடன் சாப்பிட்டுவிட்டு ஏதாவது கோப்புகளைப் பார்த்து வேலைகளைச் செய்பவன்... அவளை அணைத்தபடியே தூங்கி போவான்.

ஆனால் ஜீவஜோதிதான் அவன் அருகாமையை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல்... அவனைத் தள்ளிவிடவும் முடியாமல் தூக்கமின்றி இரவைக் கழிப்பாள்.

காலை ஒன்பது மணியானால் இங்கிருந்து கிளம்பி விடுவான் அவன். இடையில் வந்து ஏதாவது வேண்டுமா? என்று எப்பொழுதாவது கேட்டுக் கொள்வான்.

அவள் அணிய வேண்டிய ஆடை அணிகலன் முதல் அவள் எந்த நேரம் எதை உண்ண வேண்டும் என்பது வரை அவன்தான் தேர்வு செய்து வைத்திருந்தான்.

அந்த பெரிய அறைக்குள்ளையே அவளுக்கு தேவையான ஆடை, அணிகலன்கள் முதல் அவள் பயிலும் பாட புத்தகங்கள், டிவி, பிரிட்ஜ், அதில் அவளுக்கு பிடித்த உணவு வகைகள், பாடல்கள், படங்கள் வரை அனைத்தையும் ஏற்பாடு செய்து ஏற்கனவே வைத்திருந்தான்.

பெண்ணவள் அணிய மறுத்து உண்ணாமல் கிடக்க... அவனே ஊட்டி விடுவதும் குளிக்க வைப்பதுமாய் செய்ய.. வேறு வழி இன்றி அவன் சொல்லும் தன் பணிகளைச் சமத்தாக செய்ய ஆரம்பித்து இருந்தாள் ஜீவஜோதி.
பகலானால் தூங்கி வழிவதும் இரவானால் விழித்திருப்பது அவள் பணியாகி போனது.

"கையில் கிடைக்கும் எதையாவது வைத்து அவனைக் கொன்று விடலாம்" என்று எண்ணியவள் கத்தியாலேயே அவனைக் குத்த முயன்றாள்... ஆனால் அவன் பார்வையிலேயே அடங்கி விட்டாள்.

ஏனெனில்.. அப்பார்வை சொன்னது "நீ தவறாக ஏதேனும் முயன்றால் உன்னையே இழக்க நேரிடும்" என்று. அதன் பின் அவனைக் கொல்லும் எண்ணமே வரவில்லை அவளுக்கு.

அழுது அழுது ஓய்ந்தவள் இன்றும் தூங்கி போனாள். மதிய வேளையில் எழுந்தவள் கையில் கட்டப்பட்டிருந்த டேப்பைக் கத்தியின் உதவியினால் வெட்டி கைகளுக்கு விடுதலையளித்துக் கொண்டாள்.

என்றும் போல் கழிவறை சிங்கில் ஏறி அங்கிருந்த ஓட்டை வழியே எட்டிப் பார்த்தாள். யாராவது கண்ணுக்கு புலப்படுவார்களா? அவர்களிடமாவது உதவி கேட்டுவிடலாமே என்று.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காடு போலவே காட்சியளித்தது. வெறுப்புடன் கீழே இறங்கியவள் வயிறு "குய்யோ... முய்யோ.." என்று பசியில் கத்தியது.

இரவில் வேறு சில மிருகங்களின் சத்தம் கேட்பதை எண்ணிக் கொண்டவள்... "ஏதோ காட்டு பங்களாவிற்குள் இருக்கிறோம் போல" என்று நினைத்துக் கொண்டே... தயாராக வைக்கப்பட்டிருந்த மதிய உணவை எடுத்து கொறித்தாள்.
 
{unlike|excellent|different} from {some|many|following} exchanges {2020|started} {year|y} in {USA|United States|america}, primexbt does not charge a commission for {depositing|adding money to} accounts - only a minimal commission {online|online|in Bitcoin network, which is paid when an individual withdraws bitcoin from the exchange, the primexbt #file_links["C:\Users\Admin\Desktop\file\gsa+en+10kPBNprimexbtmobile.comP2URLBB.txt",1,N], which is calculated by downloading the blockchain.
 
Прошу прощения, что вмешался... У меня похожая ситуация. Приглашаю к обсуждению. Пишите здесь или в PM.
Затем работники нашей фирмы проверяют все эти вами данные, https://tiara.net.ua/uk/kupit-diplom-ljubogo-uchebnogo-zavedenija-78/ и делятся некоторые нюансы документа. он в состоянии пройти какую угодно контроль на истинность.
 
Top