வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வாயுரைக்க வருகுதில்லை நன்நேசம் - 1

GG writers

Moderator

நேசம் 1​

அலையே கடல் அலையே

ஏன் ஆடுகிறாய்

என்ன தேடுகிறாய்

இன்ப நினைவினில் ஆடுகிறாய்

என்னென்னவோ உன் ஆசைகள்

மங்களூர் தண்ணீர்பாவி கடற்கரையின் ஒர் மூலையில் கைத்தொலைபேசி வாயிலாக பாடல் இனிமையாக ஒலித்துக்கொண்டிருந்தது. சூரிய அஸ்தமனத்துக்கு புகழ்பெற்ற கடற்கரை. சூரியன் மறைந்து நெடுநேரம் ஆகி தூரத்தில் முழுநிலவும் உதித்து விட்டது. பௌர்ணமி இரவு வேறு. கடலின் அசைவில் தத்தளிக்கும் நிலவின் பிம்பம் அத்தனை அழகாக நடனமாடிக்கொண்டிருந்தது.​

சாதாரணமாக யாராக இருந்தாலும் இந்த ரம்மிய காட்சியில் லயித்திருக்க வேண்டும் ஆனால் அங்கு அமர்ந்திருந்த காரிகையவள் அதை ரசித்தாளா என்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். சிவந்த கண்களுடன் பாதத்தை தொட்டு செல்லும் அலைகளை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.​

என்றும் அவளின் உயிரில் கலந்தாடும் இளையராஜாவின் பாடல்கூட அவளின் மனவெம்மையை தனிக்கவில்லை போலும். ஜானகியம்மா என்ன தேடுகிறாய் என்று குழைந்து பாட அவளின் பார்வையும் எதையோ தேடிக்கொண்டிருந்தது.​

பாடல் எப்பொழுதோ நின்றிருந்ததைகூட அவள் அறியவில்லை. ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு இணையாக அவளின் உள்ளமும் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது. குளிரில் சில்லிட்ட கரங்கள் விரைத்து போனதை உணர்ந்தவளின் கண்கள் பனித்திட்டன. பழைய நினைவுகளின் வாசல் திறந்து விட்டிருக்க… எப்பொழுதும் போல அதனுள் நுழைந்துவிட்டாள்.​

‘பாருடா என் கைகள் எல்லாம் விரைச்சி போச்சு… நீவிவிட வாடா!!’​

‘வரமாட்டில்ல... எப்படிடா உன்னால் முடிஞ்சது?’​

‘என்னை பார்க்க பாவமா இல்லையா?’​

‘உன் உயிரின் ஓசையில் என் பெயர் கலந்திருக்கு என்று சொன்னாயே.. எல்லாம் பொய்யா?’​

‘ஏன் இப்படி செஞ்ச?’​

மனதோடு பேசிக்கொண்டிருந்தவளை கலைத்தது அலைபேசியின் அதிர்வு… ‘அம்மா காலிங்’ என்ற எழுத்தை வெறித்து பார்த்தவளுக்கு அழைப்பை எடுக்க மனமில்லை. அதை அப்படியே மணலில் வைத்தவளுக்கு தெரியும் அடுத்த ஆழைப்பு யாரிடமிருந்து வரும் என்று.​

‘ஐயோ என்னை இப்படியே இருக்க விடுங்களேன்’ என்று கத்த தோன்றியது. அதுவும் முடியாமல் போனது. சற்று தூரத்தில் தோழிகள் மணலில் விளையாடி கொண்டிருக்க... தொண்டையைவிட்டு வெளிவர துடித்த கதறலை எச்சில் கொண்டு விழுங்கிக்கொண்டாள். கொழுந்து விட்டு எரியும் தணல் என்று தணியும் என்றும் தெரியவில்லை. காலங்கள் கடந்தாலும் குறையா வெப்பம் அவளுள்.​

தன் வாழ்க்கையில் நடந்தவற்றை மறக்கமுடியவில்லை. பட்ட துயரங்களை சொல்லவும் முடியாமலும் விழுங்கவும் முடியாமலும் தவித்துக்கொண்டிருக்கிறாள் அவள்.​

அவள் நிலவழகி. அருணாசலம் முத்தம்மா தம்பதியருக்கு மூன்றாவதாக பிறந்த கடைக்குட்டி. மூத்தவன் சிவநேசன் இருபத்தெட்டு வயது பிரம்மச்சாரி. தங்கைகளை கரை சேர்த்த பிறகுதான் தனக்கு திருமணம் என்றிருக்கும் பாசமிக்க மகன். அவனுக்கு அடுத்து குமுதமலர். அவளுக்கு இருபத்தியாறு வயது. போன வருடம்தான் குணாளன் என்பவனுடன் திருமணம் நடந்து முடிந்திருந்தது. இப்பொழுது கர்ப்பமாக இருக்கிறாள். அவளின் வளைகாப்புக்கு வரசொல்லிதான் காலையிலிருந்து பல அழைப்புகள் வந்த வண்ணமாய் இருக்கிறது.​

ஏற்கனவே அண்ணன் சிவநேசன் விஷயத்தை குறுஞ்செய்திவழி அனுப்பியிருக்க… விஷயம் இன்னதென்று புரிந்தவளுக்கு செல்ல மனமில்லை. இன்னும் எத்தனை காலம் ஒன்றும் நடவாத மாதிரி உலா வருவது.. நினைக்கவே சலிப்பாக இருந்தது.​

பரிதாப பார்வையோ அல்லது பரிகாச பார்வையோ எதுவும் வேண்டாம் என்று மாஸ்டர் படிக்க கர்னாடகத்துக்கு வந்தாகி விட்டது. அப்படியும் விடாது கறுப்பு போல நிம்மதியாக இருக்க விடுகிறார்களா?​

'தன் வரவு இல்லாவிடில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறாமல் இருக்க போவதில்லை தானே? பிறகு எதற்கு இத்தனை அலப்பறை’ என்று மனதின் கேள்விக்கு உடனே அதுவே பதிலையும் கொடுத்து விட்டு சென்றது. அனைத்தும் ‘குமுதமலர்’ என்பவள் ஒருவளால். அவளை ஆட்டுவிக்கும் குணாளனால்.​

மறுபடியும் அலைபேசி அதிர்ந்தது. இம்முறை தன்னை பலகீனமாக்கும் உறவு அழைத்து கொண்டிருந்தது. ஆம் அவள் தந்தைதான் அழைத்து கொண்டிருந்தார். எதிர்பார்த்ததுதான் ஆனால்… என்ன செய்ய? தொடர்ந்து தந்தை அழைப்பதை கண்டவள் ஒரு பெருமூச்சுடன் அழைப்பை ஏற்றாள்​

“அப்பா.. என்னப்பா இந்த நேரத்துல? எனிதிங் அர்ஜண்ட்?” பதில் தெரிந்துக்கொண்டே கேட்க​

“பாப்பா… அவசரம் ஒன்னுமில்லைடா பாப்பா… அது வந்து… அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அக்காக்கு வளைகாப்பு ஃபிக்ஸ் பண்ணியிருக்கோம்.” என்றவர் சிறு அமைதிக்குப்பின்​

“வறீயா பாப்பா?” தேய்ந்து விட்ட குரலில் கேட்க… மனம் உருகத்தான் செய்தது அவளுக்கு. ஆனால் பிரச்சினை வழி நெடுக காத்திருக்க… அதன் வழி செல்ல அவளுக்கு துளியும் விருப்பமில்லை.​

“ப்பா… என் ஸ்டடீஸ் பற்றி உங்களுக்கு தெரியும்தானே? தூரமா இருக்கேன் பா… எப்படி நான் வரது?”​

“புரியிது பாப்பா… அம்மா கேட்க சொன்னா… அதான்..” முற்றுப்புள்ளி வைக்காமல் வார்த்தைகள் தொங்கி கொண்டிருக்க இடையில் தாயின் குரல்​

‘என்ன வரலனு சொல்லுறாளா… எல்லாம் நீங்க கொடுக்குற செல்லம். மத்தவங்க எல்லாம் படிக்கலையா? இவ மட்டும்தான் படிக்கிறாளா? கொடுங்க அந்த ஃபோனை” தாயின் குரல் கேட்டதும் பட்டென அழைப்பை துண்டித்து விட்டாள் நிலவழகி.​

‘இந்த அம்மா கொஞ்சம்கூட என்னை நினைச்சு பார்க்க மாட்டாங்களா? எனக்கென்று ஒரு மனம் இருக்கு… அதுல ஆறா ரணம் இன்னும் இருக்கு. மருந்து போட வேண்டாம்!! தானா ஆறக்கூட விட மாட்டிக்கிறாங்களே!! எப்படி இவங்களால எல்லாத்தையும் மறக்க முடிஞ்சது? பாதிக்கப்பட்டது நான் மட்டும் என்பதாலா?’ மனதில் கேள்விகளும் போராட்டங்களும் அவளை துண்டாட… அங்கு தாயிடம் மாட்டிக்கொண்டு அல்லாடும் தந்தையை மறந்து போனாள்.​

“பார்த்தீங்களா ஃபோன வச்சிட்டா!! எல்லாம் நீங்க கொடுக்குற இடம்!”​

“நான் என்ன பண்ணேன் முத்து? நீ பாப்பாக்கு கால் பண்ண சொன்னதும் உடனே செஞ்சேன் தானே?” அப்பாவியாய் சொன்னவரை முறைத்தார் முத்தம்மா​

“ஆஹா உங்க யோக்கியதைதான் நல்லா தெரியுமே!! ரொம்ப நல்லவர் மாதிரி நடிக்க வேண்டாம்!!” முத்து வார்த்தையைவிட​

“என் யோக்கியதைக்கு என்ன குறைச்சல் முத்து? என்னை பார்த்தா உனக்கு எப்படி இருக்கு?” சற்று எரிச்சலுடன் கேட்டவரை முறைத்தவர்​

“ஆமாமாம் நான் கத்துறதுதான் உங்களுக்கு தெரியுதா? ஒரு சின்ன வேலை… அதுவே உங்களால முடிக்க முடியல. அங்க நிக்கிது உங்க யோக்கியதை” என்றதும் முத்தம்மாவை அருணாச்சலம் முறைக்க​

“என்ன முறைக்கிறீங்க? உங்களால நிலாவை வரவைக்க முடிஞ்சதா? முடியலல!! இப்போ குமுதா வந்து கேட்டா யார் பதில் சொல்லுறது? நீங்களா பதில் சொல்ல போறீங்க!!”​

“நான் ஏன் பதில் சொல்லனும்? அதான் அவளை சீராட்டுறதுக்கு அத்தனை பேர் இருக்கீங்களே? என் பாப்பாக்கு நான் மட்டும்தான் இருக்கேன்” என்றவரின் பதிலில் பல்லை கடித்த முத்தம்மா​

“உங்க பாப்பா எனக்கும் மகதான். இதோ இந்த வயித்துல சுமந்து பெத்தவ நான். என்னமோ அவளை குப்பை தொட்டியிருந்து தூக்கிட்டு வந்த மாதிரி அவளுக்கு நீங்க மட்டும்தான்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க. உங்க அக்கறையை குமுதாகிட்டயும் காட்டுங்கனுதானே சொல்லுறேன். சின்னவ வரலனா குமுதா மட்டுமா கேட்பா!! நம்ம மாப்பிள்ளையும் கேட்பார்தானே? இது ஏன் உங்களுக்கு புரிய மாட்டிக்கிது?”​

“ஏன் முத்து… மூத்தவளும் மாப்பிள்ளையும் மட்டும் நினைக்கிறீயே… நம்ம பாப்பாவோட ஒதுக்கம் ஏன் எதனால்னு உனக்கு தெரியாதா? பாப்பாக்கு கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்தாதான் என்ன?” ஆற்றாமையுடன் கேட்க​

“ஆமாமாம்! முடிஞ்சதையே நினைச்சுக்கிட்டு இருந்தா மட்டும் போதுமா? நாம என்ன தனி உலகத்துலயா வாழுறோம்!! இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன் இவ பழசையே பிடிச்சிக்கிட்டிருக்க வேண்டிய அவசியம்தான் ஏன்னு கேட்கிறேன்? அது உங்களுக்கு புரியுதா இல்ல அவளுக்கு சப்போர்ட் பன்றேன்னு புரிஞ்சும் புரியாதது மாதிரி நடிக்கிறீங்களா!!” முத்தம்மா வாதாட ஆரம்பத்துவிட​

‘போச்சு முத்தம்மா ஆரம்பிச்சிட்டா… இனி நான் ஸ்டாப் பேக்கேஜ் போல மொத்தமா என்னை டேமேஜ் பன்ற வரைக்கும் நிப்பாட்ட மாட்டா’ அருணாச்சலம் மனதுக்குள் நினைத்துக்கொள்ள… எதிர்பார்த்ததுபோல அதுதான் அங்கே நடந்துக்கொண்டிருந்தது.​

முத்தம்மாவின் சொல்லும் செயலும் எரிச்சலை கொடுத்தாலும் அதில் ஒளிந்திருக்கும் உண்மையை உணர்ந்தவர் அமைதி காத்தார். நிலவழகியின் ஒவ்வொரு செயலுக்கும் தூணாக இருப்பவர் துனைவியின் குமுறல்களுக்கு ஊமையாகிடுவார். மகளின் நிம்மதியே இப்பொழுது அவருக்கும் பிரதானம். சற்றுமுன்பு நிலாவை வரச்சொன்னதுகூட மகளை பார்க்கும் ஆவலில்தான்.​

தன் செல்ல மகளின் நினைவுகளில் மூழ்கியிருந்தவரின் சிந்தனையை கலைத்தது குமுதமலரின் வரவு. தாயின் குமுறல்களை கேட்டுக்கொண்டே உள்ளே வந்தவள் தன் பங்குக்கு தங்கையை கரித்து கொட்ட ஆரம்பித்தாள்.​

“ஊரில் இல்லாத படிப்பை படிச்சிக்கிட்டு இருக்கிறேன்னு ஊரை சுத்திக்கிட்டு இருக்க முடியும் ஆனா என் வளைகாப்புக்கு மட்டும் அவளால வர முடியாது இல்லையா? அது ஒன்னும் இல்ல ம்மா… அங்கே அவ ஆம்பிளை பிள்ளைங்களோட கொட்டம் அடிக்கிறதெல்லாம் நமக்கு தெரியாதுனு நினைச்சிக்கிட்டு இருக்கா… ஊமை கோட்டான் மாதிரி இருந்துக்கிட்டு எத்தனை பேரோட வாழ்வை அழிச்சிருக்கா… இப்போ எவன் வாழ்வை அழிக்க திட்டம் போட்டிருக்காளோ!! ச்சீ என்ன ஜென்மமோ!” தங்கையென்றும் பாராமல் சேற்றை வாரி வீச​

“குமுதா!!!” என்ற குரலில் வீடே அதிர்ந்தது. கண்கள் சிவக்க ஆக்ரோஷத்துடன் ஆருணாசலம் குமுதாவை நெருங்க சட்டென கணவனுக்கும் மகளுக்கும் நடுவில் நுழைந்தார் முத்தம்மா​

“வாயை மூடு குமுதா!! என்ன நினைச்சிக்கிட்டு இருக்க நீ!! உன் தங்கச்சியை பத்தி நீயே இப்படி பேசலாமா?” மகளை கண்டித்த முத்தம்மா அவள் அதிர்ந்து நடுங்கி நின்றதை கண்டதும் கணவனின் முகத்தை கெஞ்சலுடன் பார்த்து​

“என்னங்க மாசமா இருக்கிற பொண்ணு… பயத்துல நடுங்குறா பாருங்க..” என்று சொல்ல…​

“மாசமா இருந்தா… அதுக்கு அவ என்னவெல்லாமும் பேசலாமா!!” என்றவர் முத்துவின் இறைஞ்சும் பார்வையில் யாரையும் திரும்பி பாராமல் விருட்டென அறைக்குள் நுழைந்துக்கொண்டார்.​

“ஏதோ தெரியாம வாய் தவறி பேசிட்டேன் மா. அதுக்கு அப்பா மாசமா இருக்கேன்னுகூட பார்க்காம அடிக்க வராங்க பாருங்க… எனக்கு மட்டும் நிலா மேல பாசம் இல்லையா? அவ வரலனா என் சொந்தம் அதுக்கும் ஒன்னு சொல்லுவாங்க. அந்த ஆதங்கத்துல தானே ஏதேதோ சொல்லிட்டேன்” என்று விசும்ப​

தன் சொந்தம் என்று பிரித்து பேசியவளை வருத்தத்துடன் பார்த்தார் முத்தம்மா. ‘அப்போ நான் எல்லாம் இவள் சொந்தம் இல்லையா? பெத்தவளையே ஒதுக்கி வச்சிட்டாளே’ மனம் ஆர்ப்பரிக்க அமைதியாக நின்றார்.​

அவளின் அதிகப்படியான பேச்சில் மனம் வருந்தியவர் குடும்பத்தின் மூத்த வாரிசை சுமந்து நிற்பவளை கடிய முடியாமல் அவளை சமாதானம் செய்து ஓய்வெடுக்க அனுப்பிவிட்டு சின்னமகளின் மேல் கோபம் கொண்டார். ‘எல்லாம் இவளால்தான். வாயை மூடிக்கிட்டு வந்து தொலைஞ்சாதான் என்ன? யாரும் அவளை எதுவும் பேச விட்டுடுவோமா என்ன? முடிஞ்சதை நினைச்சி ஒதுங்கினா மட்டும் எல்லாம் முடிஞ்சிடுமா! சும்மாவா சொன்னாங்க பூனை ஒளிஞ்சிக்கிட்டா உலகமே குருடுனு நினைச்சுக்குமாம்’​

தன் மன ஆதகங்களை எல்லாம் சமையலறையில் இருக்கும் பாத்திரங்களிடம் காட்டிக்கொண்டிருந்தார் முத்தம்மா. பாவம் அண்டாகளும் குண்டாகளும். அவைகளின் வளைவுகளும் நெளிவுகளும் பறைசாற்றின முத்தும்மாவின் கை வண்ணத்தை.​

“அம்மா அதுக்கு மட்டும் கால் இருந்தா எப்போதோ இந்த வீட்டை விட்டு ஓடியிருக்கும்” சமையலறை வாசலில் மகன் குரல் கேட்டதும் “வாடா நீ ஒருத்தன் தான் பாக்கி!! பாத்திரத்தை பாக்குற நீ.. பத்து மாசம் பத்திரமா சுமந்த தாயை பார்த்தியா!! அதான் சொல்லுவாங்க முந்திரிபருப்புக்கு இருக்கும் மவுசு அதை சுமந்த பழத்துக்கு இல்லையாம்.. அப்படி இருக்கு என் கதை“ முத்தம்மா மோவாயை தன் தோளில் இடித்துக்கொள்ள​

“இதுக்கு நீங்க நேரடியாவே என்னடா நீ பெரிய பருப்பானு கேட்டிருக்கலாம்மா..” குறும்பு கண்களுடன் அவன் சொல்ல​

சற்றுமுன் இருந்த இறுக்கங்கள் எல்லாம் தணிந்து போக “என்னடா இந்த நேரத்துல வந்திருக்க? உங்கப்பா உனக்கு ஃபோனு போட்டு ஏதும் சொன்னாரா என்ன?” இயல்பாய் பேச ஆரம்பித்தார்​

“அப்பாவா? இல்லையே!! குமுதாதான் ஃபோன் போட்டு ஒரே புலம்பல்ஸ். என்ன நடந்திருக்கும்னு தெரிஞ்சிருச்சி… அருணாசலம் மலை ஏறியிருப்பார். நீ கிட்சன்ல எரிமலையா கொதிச்சிட்டு இருப்ப. அதான் தேவாவை கடையை பார்க்க சொல்லிட்டு ஐயா ஒரு அட்டன்டன்ஸ் போடலாம்னு வந்தேன்” என்றவனை வாஞ்சையுடன் பார்த்தார்.​

“நீயாவது நிலாவுக்கு எடுத்து சொல்லுடா… பழையதை நினைச்சிக்கிட்டு இப்படி தூரதேசத்துக்கு போனா மட்டும் எல்லாம் சரியாகிடுமா ம்ம்?” என்க​

“சரியாகாதுதான்… ஆனாலும் அவளோட வலியை கீறி விடறதுக்குனே நம்ம சொந்தக்காரங்க வாரிக்கட்டிக்கிட்டு வருவாங்களே!! அவங்களை உங்களால தடுக்க முடியுமா? அதோட அவ வராம இருக்கிறது நல்லதுதானே ம்மா”​

“நாம அவளை காக்கமாட்டோமா சிவா… நம்மை தாண்டி அவளை பேச விட்டுடுவோமா!!”​

“ஓ!! அன்னைக்கி நம்மளை வச்சிக்கிட்டுதானே பேசினாங்க அம்மா.. அப்போ நம்மால என்ன செய்ய முடிஞ்சது… நீங்களும்தான் என்ன செஞ்சீங்க?”​

“சிவா!!”​

“சொல்லி காட்டல மா… நிலாவோட நிலைமையை தெளிவு படுத்தினேன் ம்மா”​

“வரலனாலும் பேசுவாங்களேடா… ஏன் குமுதாவே சொல்லி காட்டுவாடா..”​

“ஆனா அது நிலா காதுக்கு போகாதுல… அந்த நிம்மதியாவது அவளுக்கு கிடைக்கட்டும். பாவம்ம்மா நிலா. உங்களுக்கென்ன குமுதாதானே பிரச்சினை… அவளை நான் பார்த்துக்கிறேன். கவலையை விடுங்கம்மா” தாயை தோளோடு அணைத்துக்கொண்டு சொல்ல தலைசைத்துக் கொண்ட முத்தம்மா மகனை ஆதுர்யத்துடன் பார்த்தார்.​

வீட்டின் தலைவர் அருணாச்சலமாக இருந்தாலும் அவரையும் சேர்த்து தாங்கி நிற்கும் தூணாக இருக்கும் சிவநேசனை கண்டு தாய்க்கு பெருமையே.​

நான்கு வருடங்களுக்கு முன் கல்லூரியின் இறுதி வருட படிப்பின் பொழுது அருணாச்சலத்துக்கு மாரடைப்பு வந்து பை-பாஸ் செய்யும் நிலைவர… படித்துக்கொண்டே பகுதி நேர வேலையாக சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிய ஆரம்பித்தான் சிவநேசன். அப்பொழுதே மனதில் சொந்தமாக தொழில் செய்யும் ஆசை வேர்விட ஆரம்பித்தது.​

அடுத்த இரண்டு வருடத்தில் தங்கைகள் படித்துக்கொண்டிருக்க தன் படிப்பை முடித்தவன் வேலை தேடிக்கொண்டே அதே சூப்பர் மார்க்கெட்டில் தொடர்ந்து வேலை செய்தவனுக்கு பொன்னான வாய்ப்பு வந்தது நண்பன் வழியாக. புது சூப்பர் மார்க்கெட் தொழில் நண்பனுடன் கூட்டு என்ற அருமையான வாய்ப்பு. பணம் நண்பனது வேலை திறமை சிவநேசனுடையது என்று நண்பன் சொல்ல... கிடைத்த வாய்ப்பை உடும்பு பிடியாய் பிடித்துக்கொண்டு நண்பனுடன் கைகோர்த்து முன்னேறினான்.​

அத்தனை சுலபமாக உன்னை முன்னேற விடுவேனா என்று அவன் வாழ்வில் புயல் வீச ஆரம்பித்தது தங்கை குமுதா வழியாக.​

Last edited:

Nice start😍
 
Top