வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வாயுரைக்க வருகுதில்லை நன்நேசம் - 12

GG writers

Moderator

உ​

நேசம் 12​

ஹாஸ்பிட்டல் வளாகத்தில் அமர்ந்திருந்த நிலாவின் பார்வை எதிரில் இருந்த அறையில் நிலைகுத்தியிருந்தது. அப்பொழுதுதான் அங்கு வந்து சேர்ந்த அருணாசலம் அவளருகில் வந்து அமர்ந்தார். அதைகூட உணராமல் சிந்தனை எங்கோ சென்றிருக்க சிலையென அமர்ந்திருந்தவளை கண்டவரின் மனம் கலங்கி போனது. இரண்டாம் முறை தன் மகளை இந்த கோலத்தில் பார்த்தவருக்கு நெஞ்சம் பதறியது.​

“பாப்பா.. இங்க பாரு… அப்பா வந்திருக்கேன் பாரு” என்றழைத்த அருணாசலம் மகளின் தலையை மென்மையாக வருட… அந்த சொல்லுக்குதான் எத்தனை சக்தி? எங்கோ சென்றிருந்த சிந்தனைகள் எல்லாம் கூட்டுக்குள் வந்தடைந்தன போல​

“அப்பா… அப்பா… அவருக்கு ஒன்னும் ஆகாதுல” உதடுகள் துடிக்க அவள் கேட்க… இன்னுமே கலங்கிபோனார் அருணாசலம். என் மகளுக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனைகள் என்று மனம் துடிக்க​

“இல்லடா தங்கம்.. தேவாக்கு ஒன்னுமில்லடா..” சமாதான படுத்தினார்.​

"இல்ல! இல்ல! நான் பார்த்தேன் நான் பார்த்தேன்ப்பா!! அப்படியே பறந்து வந்து கீழே விழுந்ததை நான் பார்த்தேன்! முகமெல்லாம் ரத்தம் ரத்தம்!” துடித்தாள்.​

“இல்லடா சின்ன காயம்தான்… ஒன்னுமில்லடா”​

“பொய் சொல்லுறீங்க! முகமெல்லாம் ரத்தம் நான்… நான் பார்த்தேன்… மூச்சுகூட இல்ல… நான் அதிஷ்டமில்லாதவ ப்பா!! அதான் இப்படியெல்லாம் நடக்குது. நான் என்ன பண்ணுவேன்?” தன்நிலை மறந்து பினாத்திக்கொண்டிருந்தவளை என்ன சொல்லி அடக்குவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றார் அருணாசலம்.​

“பாப்பா இங்கே பாரு அப்பா சொல்றேன்ல..”​

“ஆமா நீங்களும் அண்ணனும் சொல்லிதானே கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்!! இப்போ என் துரதிஷ்டம் எங்கே வந்து நிக்கிது பாருங்க!! நான் ராசி இல்லாதவ அப்பா” தன்னிறக்கம் அவளை கூறுபோட்டு கொண்டிருந்தது​

“இல்லடா பாப்பா தேவாக்கு ஒன்னுமில்லை..”​

“ஐயோ அப்பா… உங்களுக்கு நான் சொல்லுறது புரியல!! இப்போதான் அவரை முதன் முறையா பார்த்து ரசிச்சேன்… அடுத்த நொடியே அடிப்பட்டு கீழே கிடக்கிறார். ஏன் ப்பா? ஏன்? நான் ரசிக்க கூட கூடாதாவளா? ஏன் ப்பா எனக்கு மட்டும் இப்படி நடக்குது?” புலம்பல்கள் சீனபெருஞ்சுவர்போல தொடர​

“நிலவழகி…” தன் பெயரை தேவா அழைப்பதுபோல் அவள் காதில் விழ…​

“அப்பா!! அவருக்கு என்னமோ ஆச்சு!! அவர் குரல் என் காதில் கேட்குது!! அவர்… அவர்… உயிருக்கு..” அவளை பேச விடாமல் அவள்முன் வந்து நின்றான் தேவா. அவனருகில் சிவநேசன்.​

“போதும் நிலவழகி!! இங்கே பார் நிஜமா நான்தான்” கண்முன் வந்து நின்றவனை அன்னார்ந்து பார்த்தாள். அதே தீர்க்கமான பார்வை. அதே சிரிக்காத இதழ். அவனே தான். அதே கடுவன்தான். நெற்றியில் மட்டும் சின்ன கட்டு. மென்மையாக அதை தொட்டு பார்த்தவள்… அடுத்த நொடி அவன் மார்பில் சரிந்து விழுந்தாள்.​

“பாப்பா… நிலாமா” என்ற அழைப்புகள் தவிப்புடன் வர… தன் மேல் சாய்ந்திருந்த நிலாப்பூக்குவியலை கையில் அள்ளிக்கொண்டான் தேவா. தன்னை பார்த்ததும் அதிர்ந்து… மாயையோ என்று திகைத்து பின்பு கடலில் கலந்த நதியாய் ஆசுவசமாகி மயங்கியவளின் பாவங்களை கண்டவனின் மனம் ரசனை கொண்டது.​

சற்றுமுன் கண்விழித்தவன் முதலில் கண்டது சிவாவைதான். நெற்றி வின்வின்னென்று சிறு மின்னல் வலிகளை தந்துகொண்டிருக்க கண்கள் அவளைதான் தேடின. எங்கே என் அழகி? அடிப்பட்டு மயங்கி விழும்முன் அவள் நின்றிருந்த கோலம் கண்ணில் வந்தாட… சட்டென எழுந்துவிட்டான்.​

“ஆர் யூ ஓகே தேவா” சிவா கேட்டது எதுவும் அவன் புத்தியில் பதிவு செய்யவில்லை போலும்​

“அழகி எங்கே?”​

நீயும் என்னை விட்டு சென்றுவிடுவாயா என்ற பாவனையை முகத்தில் தேக்கி… அதிர்வுடன் கலங்கி நின்றிருந்தவளின் தோற்றம்… இப்பொழுது நினைக்கையிலும் அவன் மனம் தவித்து துடித்தது.​

“வெளியே அப்பாவோடு இருக்கா..” என்றதும் சட்டென கதவை திறந்தவன் அவள் வாய் மொழியாக காதில் கேட்ட வார்த்தையில் தவிப்பு அடங்கி தென்றல் தாலாட்டியது.​

“முதன் முறையா அவரை ரசிச்சேன்’ என்ற அவளின் வார்த்தை கேட்ட முதல் உலகமே புதியதாய் தெரிந்தது அந்த கள்ளனுக்கு. தன்னை போல் அல்லாமல் உண்மை சொல்லிவிட்டவளின் நேசம் கண்டு மலர்ந்தது தேவாவின் உலகம்.​

அதற்கு நேர் மாறாக தவிப்புடன் நின்றிருந்த அருணாசலத்தை அப்பொழுதுதான் கவணித்தவன் ‘கன்ட்ரோல் தேவா. அடிக்கடி நீ உன் கன்ட்ரோல்லயே இருக்க மட்டிக்கிற” தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தான். தன் நெஞ்சில் தவழ்ந்திருந்த தன் சந்தோஷத்தை பார்த்துக்கொண்டே​

“ரொம்ப நேரமா மன அழுத்தத்தில் இருந்திருக்கிறா போல… அதான் என்னை நேரில் பார்த்ததும் அதன் அழுத்தம் தாங்காமல் மயங்கிட்டா” என்றவனை இமைக்காமல் பார்த்தான் சிவநேசன். நண்பனின் முகத்தில் வந்துசென்ற வர்ணஜாலங்களை அவதானித்து கொண்டான்.​

“ட்ரீட்மென்ட் எடுக்க வந்த பேஷண்ட் டாக்டராகிட்ட மாயம்தான் புரியல.. என்னவா இருக்கும் தேவா?” காதில் கிசுகிசுத்த நண்பனை புருவம் உயர்த்தி பார்த்த தேவாவின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை… சற்றே சிவந்த கன்னங்கள் தவிர்த்து.​

“எப்படி இருக்க தேவா? ஆக்சிடெண்ட் என்று கால் வந்ததும் ரொம்ப பயந்துட்டேன் பா! MRI ஸ்கேன் எல்லாம் செஞ்சாச்சா? ஐயோ கையில காயம் இருக்கே!! அதோட பாப்பாவை வேற தூக்கிவச்சிக்கிட்டு நிற்கிறீங்க” படபடத்தவரை அமைதி படுத்தினான்.​

“ஐ அம் ஆல்ரைட் அங்கிள்!” ஒரு வார்த்தையில் முடித்துக்கொண்டான். ஏனோ இந்த வார்த்தையின் பஞ்சங்கள் எல்லாம் மற்றவரிடம்தான். அவன் அழகியிடம் மட்டும் கஞ்சத்தனம் எல்லாம் செல்லாகாசாகி வள்ளலின் இளைய மகனாகி விடுகிறான். ‘எல்லாம் கையில் துயில் கொண்டிருக்கும் இந்த சக்கரை மூட்டையால்தான்’. கொஞ்சிக்கொண்டான்.​

தன் சுகமான சுமையை தாங்கி நின்றிருந்தவன் மனமேயில்லாமல் மென்மையாக கட்டிலில் படுக்க வைக்கவும்… டாக்டர் வரவும் சரியாக இருந்தது.​

“நீங்கதானே அடிபட்ட பேஷண்ட்? இவங்க யாரு?” தேவாவையும் நிலாவையும் மாறி மாறி பார்த்து வினவ​

“அதிர்ச்சியில் மயங்கிட்டாங்க டாக்டர்” தேவா சொல்ல​

“திடீரென டாக்டரான பேஷண்ட் அதை ஒரிஜினல் டாக்டரிடம் சொல்லுறார் பாருங்க..” சிவநேசன் ஜாடையாக சொல்ல… தவிப்புடன் நின்றிருந்த அருணாசலமே சிரித்துவிட்டார். டாக்டரும் புன்னகைத்துக்கொண்டே நிலாவை பரிசோதிக்க… அறையினுள் நுழைந்தனர் கௌரம்மாவும் இலக்கியாவும்.​

“தேவா..” என்று அழைத்துக்கொண்டே மகனை கண்களால் ஆராய்ந்தார். தலையில் இருந்த கட்டை பார்த்தவர் அடுத்து அவன் உடலில் தெரிந்த சிராய்ப்புகளை கண்டதும் கண்ணீர் வந்துவிட்டது.​

“என்னப்பா இது?” தழுதழுத்த குரலில் கேட்க​

“ஒன்னுமில்ல ம்மா. நத்திங் டு வர்றி” ஆறுதலாக சொன்னவனை பார்த்துவிட்டு கட்டிலில் படுத்திருந்தவளை கேள்வியாய் நோக்க​

“என்ன டாக்டர் இங்கே யார் பேஷண்ட்? அண்ணனுக்கு பதிலா மருந்தை தப்பா அண்ணிக்கிட்ட கொடுத்திட்டீங்களோ?” இலக்கியா துடுக்குடன் கேட்க​

“ரொம்ப மன அழுத்தத்தில் இருந்திருக்காங்க… உங்க அண்ணனை பார்த்ததும் சட்டென உணர்ச்சி வசப்பட்டதில் மயங்கிட்டாங்க. ஊசி போட்டிருக்கேன். இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்” என்று டாக்டர் சொன்னதும்… நிம்மதி பெருமூச்சுவிட்டார் கௌரம்மா.​

“மன அழுத்தமா டாக்டர்… நான்கூட என் அண்ணன் அழகிலே மயங்கிட்டாங்கனு நினைச்சிட்டேன்?” இன்னும் கேலி பேசினாள் இலக்கியா​

“அப்போ உன் அண்ணன்கூட என் தங்கச்சியின் அழகுல மயங்கி ரோட்டுல விழுந்து தலையில் கட்டு போட்டிருக்கான்னு நான் சொல்லலாம்ல?” சிவநேசன் பதிலுக்கு சொல்ல​

“யார் சொல்ல வேணாம்னு சொன்னா? சொல்லிக்கலாமே! ஆனா அதை நான் சொல்றதுக்கு முன்னே சொல்லிருக்கனும். நான் சொன்ன பிறகு காப்பி பூனை பண்ண கூடாது” என்று சொன்னவள் கௌரம்மா பார்த்த பார்வையில் கப்சிப்.​

“எப்படி ஆக்சிடன்ட் ஆனது தேவா” கௌரம்மா விசாரிக்க​

“தெரியலமா? நான் ரோடை கிராஸ் பண்ணும்போது எந்த காரும் வரல. திடீரென வேகமா வந்த காரை பார்த்ததும் நான் திரும்பிட்டேன் ஆனாலும் சைட்ல இடிச்சிருச்சி. பேலன்ஸ் இல்லாம கீழே கிடந்த கல்லுல விழுந்திட்டேன்”​

“போலீஸ் ரிப்போர்ட் செய்தாச்சா?” கௌரம்மா கேட்க “சிவா செஞ்சிருப்பான்” நம்பிக்கையுடன் தேவா சொல்ல… தலையசைத்தான் சிவா.​

“திட்டமிட்டு செய்த சதியா இல்ல உன் அஜாக்கிரதையா தேவா?” கௌரம்மா துருவி கேட்க…​

“ரிப்போர்ட் கொடுத்தாச்சு! அதை போலீஸ் பார்த்துக்குவாங்க” என்றவனை கூர்ந்து பார்த்தவர் ஏதும் சொல்லாமல் அமைதியாகிவிட்டார்.​

இதை ஏன் தான் யோசிக்கவில்லை என்று தனக்குள் கேட்டுக்கொண்ட அருணாசலம் கௌரம்மாவின் சிந்தனையும் நிமிர்வும்தான் தேவாவிடம் பிரதிபலிக்கிறது என்று நினைத்துக்கொண்டார்.​

“ம்ம்…நீ சொல்வதும் சரிதான். போலீஸ் அவங்க வேலையை பார்க்கட்டும்” என்றவர் யோசனையானார். அவரின் தீவிர முகத்தை கண்ட அருணாசலத்தின் மனம் கலங்கியது. நடந்த விபத்தை அபசகுணம் என்றுவிடுவாரோ என்ற எண்ணம் தாக்கியது அவரை. ‘கடவுளே என் மகளின் வாழ்வு மலரும் முன்னே வாட வைத்து விடாதே’ அவசர வேண்டுகோளும் வைத்துக்கொண்டார்.​

“அண்ணே”​

“சொல்லுமா தங்கச்சி” அவசரமாக அவர் சொல்ல​

“பத்திரிக்கை ப்ரிண்ட் ஆகிடுச்சா?” யோசனையுடன் கேட்டவரின் கேள்வியில் சர்வமும் நடுங்கியது அருணாசலத்துக்கு. நெஞ்சில் சுருக்கென வலி வந்து போக​

“அம்மா தங்கச்சி… என் பாப்பா தேவதை மாதிரிமா… அவளை ராசியில்லாதவ என்று மட்டும் நினைச்சிடாதேமா?” என்று கையெடுத்து கும்பிட்டவரை அதிர்ச்சியுடன் பார்த்தனர் அனைவரும் “அப்பா..” என்று சிவநேசன் அருகில் வர… “என்ன அங்கிள் இது?” என்று தேவா சொல்ல​

“ஏன் அப்படி சொல்லுறீங்க அண்ணே?” புரியாமல் கௌரம்மா புருவம் சுருக்கி கேட்க​

“இல்ல பத்திரிக்கை பிரிண்ட் ஆகலனா கல்யாணத்தை நிறுத்தி..” சொல்லி முடிக்கவிடாமல் இடைபுகுந்தார் கௌரம்மா​

“பத்திரிக்கை பிரிண்ட் ஆகிவிட்டால் இந்த வெள்ளிக்கிழமை குல தெய்வம் கோவில்ல பொங்கல் வச்சி கும்பிடலாம்னு சொல்ல வந்தேன் அண்ணே! என் மருமகளோட ராசியாலத்தான் என் மகனே பெரிய விபத்திலிருந்து தப்பி சின்ன அடியோடு முழுசா வந்திருக்கானு நினைச்சிக்கிட்டு இருக்கேன். நீங்க என்னன்னா..” என்று சலித்துக்கொண்டவரின் கைகளை பிடித்துக்கொண்டு கண்கலங்கி விட்டார் அருணாசலம்.​

ஒருத்தரின் வலியை புரிஞ்சிக்க ஒருவர் இருக்காங்க எனும்பொது வலியைவிட சந்தோஷம் அதிகமாக முந்திக்கொண்டது போலும். சற்றுமுன் சுருக்கென வந்த வலி எல்லாம் பின்னங்காலெடுத்து ஓட சந்தோஷ மிகுதியில் கண் கலங்கிவிட்டார் அருணாசலம்.. உணர்ச்சி குவியல்கள் ஒரு பக்கம் நடந்தேறி கொண்டிருக்க… ஒருத்தனுக்கு பொறுமை பறந்து கொண்டிருந்த்து​

“அம்மா நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கனும். நிலாவை நான் பார்த்துக்கிறேன்” ஜன்னலை பார்த்துக்கொண்டே தேவா சொல்ல​

“நீங்க ரெஸ்ட் எடுத்தா அண்ணியை எப்படி பார்த்துக்குவீங்க அண்ணா?” இலக்கியா அதிமேதாவி கேள்வி கேட்க.. பின்னங்கழுத்தை ஒற்றை கையால் அழுந்த தடவியவன்​

“ஊசி போட்டிருக்காங்கல்ல….” என்று அவன் கத்திரிக்க​

“இதைவிட தெளிவா எங்களை நீ வெளி ஜாவோனு விரட்டியிருக்கலாம்… ம்ம்… நல்லா வருவேடா மச்சான்” சிவா தேவாவை கலாய்க்க​

“போக்கிரி பயலே! அவனை வாராம பேசாம எங்களுடன் வா..” என்று கௌரம்மா சிவாவை இழுத்து செல்ல நிம்மதி பெருமூச்சுவிட்டான் தேவா.​

நாற்காலியை இழுத்து அவளருகில் அமர்ந்துக்கொண்டவன் துயில் கொண்டிருக்கும் தன் அழகியை உரிமையுடன் ரசித்தான்.​

“அழகி..” உயிர் உருக அவன் அழைக்க… அவளிடம் சிறு அசைவு​

“வாவ்! மயக்கத்திலும் உன்னால என்னை உணர முடியுதா அழகி..” என்றவன் புறங்கையால் அவளின் மென்பஞ்சு விரல்களை வருடிக்கொண்டே கேட்க… மயக்கத்திலும் சிலிர்த்தாள்.​

“எத்தனை வருஷமா ஹனுமான்போல உன்னை இங்கே பொத்தி வச்சிருக்கேன் தெரியுமா?” தன் நெஞ்சை சுட்டிக்காட்டி சொல்ல… புருவம் நெரித்தாள். தன் விரல்களை அவள் விரல்களுடன் கோர்த்துக்கொண்டவன் மெதுவாக தன் நெஞ்சில் வைத்து கண்களை மூடிக்கொண்டான். அவள் விரல்களின் ஸ்பரிசம் தன் நெஞ்சை தீண்ட சுகமாய் தென்றல் தீண்டிய உணர்வில் சிலிர்த்து வேர்த்தான் அவளின் தேவன்.​

 
Last edited:
இத இத தான் எதிர்பார்த்தேன்
தேவா 😍😍😍😍🤩🤩😘😘😘🥰🥰🥰🥰
இந்த கல்யாணம் நடக்க கூடாதுனு அவ மாமா செஞ்சி இருப்பானோ 🤔🤔🤔🤔
 
Top