வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வாயுரைக்க வருகுதில்லை நன்நேசம் - 5

GG writers

Moderator

உ​

நேசம் 5​

“நிலா அங்கே பாரேன் ஒருத்தன் நம்மளையே பார்த்துக்கிட்டு இருக்கான்..”​

“யாரு க்கா? நிலா கண்ணுக்கு யாரும் நம்மளை பார்க்கிறது போல தெரியலையே!!”​

“அதான் அந்த லெஃப்ட் சைட்ல மெரூன் கலர் சட்டை போட்டு கண்ணாடி போட்டுருக்கான் பாரு..”​

“யாரு அந்த ஒட்டகசிவிங்கி மாதிரி இருக்கானே அவனா?”​

“ஆமாம் ஆமாம் அவனேதான். நம்மளை உத்து உத்து பார்த்துக்கிட்டு இருக்கான் பாரு”​

“இது சகஜம்தானே க்கா. பொண்ணுங்க இருந்தா ஆம்பிளங்க பார்க்கத்தானே செய்வாங்க. இவன் என்ன ஸ்பெஷன்லு என்கிட்ட காட்டுற!”​

“அதில்லடி… அது வந்து..” என்று தயங்கிவள் சற்றுமுன் அவன் சொன்னதை சொல்ல​

“ஓ.. அப்படியா… அது அந்த ஆளோட ஒபினியன்… அதெல்லாம் நமக்கெதுக்கு. சரி அதை விடு. இங்கப்பாரு பொண்ணும் மாப்பிள்ளையும் டான்ஸ் ஆடுறத..” அக்காளின் கவனத்தை திருப்பிவிட சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தான் சிவநேசன்​

“நீங்க ரெண்டு பேரும் இங்கேயே இருங்க. நான் போய் பந்தியில இடம் கிடைக்குதானு பார்த்துட்டு வரேன். கிடைச்சிட்டா கால் பன்றேன் அங்கே வந்திருங்க”​

“அதுக்குள்ள ஏன்னா சாப்பிடனும்? இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போவோமே?” நிலா ஆசையுடன் நடனத்தை பார்த்துக்கொண்டே கூற​

“இல்லடா எத்தனை நேரம் தேவா ஒத்தை ஆளா கடையை சமாளிச்சிக்கிட்டு இருப்பான்? என்னதான் நண்பன் பார்ட்னரா இருந்தாலும் ஓவரா அட்வாண்டேஜ் எடுத்துக்க கூடாது டா”​

“சரி ண்ணா” என்றவள் தேவா பெயரை கூறியதும் குமுதாவின் முகத்தை ஆராய்ந்தாள். காலையில் தேவாவை கண்டதும் தமக்கையின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தை கண்டுகொண்டவள் இப்பொழுது பேச்சை துவங்கினாள்​

“ஏன் க்கா. தேவாண்ணா ரொம்ப நல்லவர் ல?” கொக்கி போட​

“ஆமா அதுக்கு இப்போ என்ன?” பார்வை மண்டபத்தை சுற்றி வந்தது​

“நீ போட்ட காப்பிதான் அவருக்கு பிடிக்கும்னு சொன்னல்ல… அப்படினா அவரை உனக்கு ரொம்ப பிடிக்குமா க்கா… அதாவது லவ் பன்றீயா… நான் வேனா அண்ணாட்ட சொல்லி தேவாண்ணாட்டா பேச சொல்லவா?” ஆர்வத்துடன் கேட்டாள் நிலா​

“ஏய்!! சத்தம் போட்டு பேசாதே!!” மறுபடியும் சுற்று முற்றும் பார்த்தவள் “நான் போட்ட காப்பி பிடிக்கும்னு மட்டும்தான் சொன்னேன்… அவனை பிடிக்கும்னா சொன்னேன்?” தாழ்ந்த குரலில் சொன்னவளின் அலைபாய்ந்த கண்கள் தேடியது கிடைத்துவிட்டதில் மின்னின. குணாளனும் குமுதாவைதான் வைத்தக்கண் விலகாமல் பார்த்துகொண்டிருந்தான்.​

‘அப்போ அக்காக்கு தேவாண்ணா மேல நோக்கம் இல்லயா!! ச்சே!! நல்ல வேளை நிலா நீ அண்ணங்கிட்ட பேசல…’ மனதோடு பேசியவளின் கரத்தை அழுந்த பற்றினாள் குமுதா​

“ஏய் நிலா… அந்த ஹேன்சம் என்னையே பார்க்கிறான் டி” வெட்கத்தில் முகம் சிவக்க நின்றிருந்தவளை கண்ட நிலாவுக்கே ஆச்சரியமாக இருந்தது. அக்கா இத்தனை அழகா…. அங்கே அவனும் அவள் அழகைதான் கண்களால் படம் பிடித்துக்கொண்டிருந்தான்.​

‘என் ஒத்தை பார்வைக்கே சிவக்கிறாளே!! இத்தனை அழகும் எனக்கே எனக்கா!! ஆனால் என் வாழ்க்கையில் ஏற்கனவே ஒருத்தி விளக்கேத்த காத்திருக்கிறாளே! அவளை எப்படி வெட்டி விடுறது.? ம்ம்… எப்படியாவது அவளை விரட்டி அடிச்சிட்டு இவளை சொந்தமாக்கிக்கனும்’ மனதோடு முடிவெடுத்துக்கொண்டான்.​

பிரபலமான சட்ட நிறுவனம் ஒன்றில் லிட்டிகேஷன் கிளார்க்காக வேலை செய்கிறான் குணாளன். அவனது வேலைகளில் ஒன்று அனுதினமும் நீதிமன்றத்துக்கு சென்று அஃபிடவிட் கோப்புகளை பதிவு செய்வது. அப்படித்தான் ஒரு நாள் அவன் நீதிமன்றத்துக்கு செல்ல… அங்கே குடும்பத்தாருடன் நின்றிருந்த அந்த அழகு பெட்டகம் அவன் கண்ணில் பட்டது. முகத்தில் ஒருவித பதட்டம்… உதட்டின்மேல் வியர்வை துளிகள்… துப்பட்டாவை முடிச்சிடுவது அவிழ்ப்பதுமாக நின்றிருந்தாள்.​

துளி ஒப்பனை இல்லாமல் பளிங்கு சிலை போல் மின்னி கொண்டிருந்தவளை பார்த்தவனுக்குள் ஓர் ஆர்வம். எதற்காக வந்தாள்? ஏன் இந்த பதட்டம்? அவளைப்பற்றி அறிந்தே ஆகவேண்டும் என்ற உணர்வு உந்த… நண்பனின் துணையோடு அவர்கள் சந்தித்து சென்ற வழக்கரிஞரிடம் பேச்சு கொடுக்க… அவளைப்பற்றிய கிடைத்த தகவல்கள் அவனை சிந்திக்க வைத்தது.​

ஏமாற்றப்பட்டிருக்கிறாள் பாவம்… பரிசுத்தமானவள். காதலிப்பது ஒன்னும் தவறில்லையே. தேர்ந்தெடுத்தவன்தான் தவறானவன். நானாக இருந்தால் அவளை போற்றியிருப்பேன். ம்ம்… ஏன் வாய்ப்பு கிடைத்தால் இப்பொழுதுகூட போற்றலாமே!! ஏன் வாய்ப்பு கிடைத்தால்தானா…. நாமே அந்த வாய்ப்பை உருவாக்கி கொண்டாள் என்ன?” சிந்தனைகள் தெரிக்கெட்டு ஓட மனதில் நெருஞ்சி முள்ளாய் தனக்கு நிச்சயிக்கப்பட்ட வதனியின் முகம் எழுந்து நின்றது.​

‘ச்சே!! எத்தனை தடவை சொன்னேன். யாராவது கேட்டாங்களா!! அவசரமா இந்த வதனியை என் தலையில் கட்டப்பார்க்கிறாங்க!! ஹ்ம்… இந்த அழகியும் இப்பொழுதுதான் என் கண்ணில் வந்து படனுமா? எனக்கு பிடிச்ச விதமா இருந்துட்டு, இப்போ வந்து என் கண்ணுல பட்டு அப்படியே மனசுல பச்சக்குனு ஒட்டிக்கிட்டாளே!! நான் என்ன செய்ய… ம்ம்… என்ன செய்யலாம்?’​

குணாளன் நல்ல அழகன். அவன் அணிந்திருக்கும் கண்ணாடிகூட அவனை இன்னும் அழகனாக காட்டும். அழகிலும் நிறத்திலும் தந்தையை கொண்டு பிறந்திருந்தான். அவனுக்கு ஒரே ஒரு தங்கை.. தாயை கொண்டு பிருந்திருந்தாள். சொந்தங்களை தவிர்த்து மற்றவர்கள் அவளை அவனின் தங்கையென்றே சொல்ல மாட்டார்கள். தோற்றத்தில் அவனுக்கு நேரெதிராய் இருப்பாள். ‘எனக்கு இணையான ஒரு அழகியை கட்டியிருந்தா என் பொண்ணும் அழகா பிறந்திருப்பா’ என்று அவனின் தந்தை அடிக்கடி சொல்ல… அதுவே அவன் மனதில் பசுமரத்தாணியாய் பதிந்துவிட்ட து.​

தனக்கு வருபவள் பேரழகியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. கொஞ்சம் லட்சணமாக இருந்தாலே போதும். தனக்கு பிறக்க போகும் பிள்ளைகளின் தோற்றம்வரை கனவு கண்டு வைத்திருந்தான். அத்தனை ஆசைகளிலும் கனவுகளிலும் மண்ணள்ளி போட்டார் அவன் தாயார். மகளுக்கு வரன் தள்ளிக்கொண்டே போக… இறுதியாக வந்த வரன் பெண் கொடுத்து பெண் எடுப்பது என்ற கண்டிஷன் போட… கேட்டுக்கொண்டிருந்த குணாளனின் கண்டிஷன்தான் மோசமானது.​

பலமுறை மறுத்து பார்த்தான். அவனின் மறுத்தலில் தங்கையின் முகம் வாடி போனது. அதுகூட அவனை அசைக்கவில்லை ஆனால் இறுதியாக அவன் பிடிவாதத்தில் தாய் மனதுக்குள் மறுகி உடல் சுகவீனம் அடைய வேறு வழியில்லாமல் தன் ஆசைகளையும் கனவுகளையும் சமாதி கட்டிவிட்டு திருமணத்துக்கு சம்மதித்தான்.​

இப்பொழுது குமுதாவின் அழகும் பண்பும் அவன் மனதில் விழுதாய் நுழைய ஆசைச்செடி மறுபடியும் துளிர்விட ஆரம்பித்து விட்டது. அவளரியாமல் அவளை பின் தொடர்ந்தவனுக்கு ஜாக்பாட் அடித்தது நண்பனின் திருமணம் மூலம். அங்கு அவளை கண்டவன் அவள் காதில் கேட்கும்படி புகழாரம் சூட்டிவிட்டு அவளின் எதிர்வினையை எதிர்பார்ப்புடன் காத்திருக்க… அவள் கண்களில் கண்ட வர்ணஜாலத்தில் மயங்கியே போனான்.​

இதோ முடிவெடுத்து விட்டான் இவள்தான் தன் எதிர்காலம் என்று. அதில் அவனின் இன்னொரு சுயநலமும் ஒளிந்திருந்தது. வதனியை மணந்தால் பிரச்சினைகள் வரும்பொழுதெல்லாம் தங்கையின் வாழ்வுக்காக விட்டு கொடுத்து வாழ வேண்டிவரும். ஆனால் குமுதாவின் வாழ்வில் அவன் இரண்டாம் முறையாக நுழைவதால் தன்னை கொண்டாடுவர். தனக்கு கிடைக்கும் முன்னுரிமையும் சலுகைகளும் பட்டியலிட்டான். மாமனார் வீட்டில் இலகுவாக தன்கொடி நாட்டி விடலாம் என்று மகிழ்ந்தான். தங்கையின் வாழ்வை மறந்தான்.​

“அக்கா உனக்கு இந்த ஒட்டகசிவிங்கியை பிடிச்சிருக்கா? ஆனா அவர் யார் எவர்.. என்ன பெயர் என்றுகூட தெரியாதே!!” நிலா கேல்விகளை அடுக்க​

“இது முதல் அட்ராக்ஷன் நிலா. யாருக்கு தெரியும் முதல் அட்ராஷனே என் வருங்கால அட்ரஸாகிட்டா..” சொல்லும்பொழுதே குமுதாவின் முகத்தில் தெரிந்த விருப்பம் நிலாவை அசைத்தது. இத்தனை நாட்களாக தாழ்வு மனப்பான்மையில் மூழ்கியிருந்தவளை வெளிகொனரும் வழி அந்த ஒட்டகசிவிங்ககியிடம் இருந்தால்… சற்றும் தாமதிக்வில்லை அவள் சட்டென குணாளன் அருகில் சென்றவள்​

“ஹாய் என் பெயர் நிலா” என்றாள்​

“ஓ. இருக்கட்டும். அதை ஏன் என்கிட்ட சொல்லுறீங்க” தெனாவெட்டாய் அவன் சொல்ல​

“ஓஹோ… அப்போ சரி நீங்க ராங் நம்பர் என்று தெரியாமல் பேசிட்டேன். என் பெயரை மறந்திடுங்க… பாய்” சொல்லியவள் விருவிருவென நகர்ந்துவிட்டாள். இதை குணாளனுமே எதிர் பார்க்கவில்லை. கொஞ்சம் கெத்து காட்ட நினைக்க… சட்டென நிலா முகம் வெட்டி சென்றதும் தன் கெத்து சொதப்பியதை நினைத்து மனதார தலையில் கொட்டிக்கொண்டவன்… அவளை நோக்கி செல்லவும் சிவநேசன் அவர்கள் அருகில் செல்லவும் சரியாக இருந்தது.​

‘ச்சே!! அவளா அவ தங்கையை தூது அனுப்பியிருக்கா… நல்ல சான்ஸ். அதை போய் கெடுத்திட்டேனே!!’ என்று நினைத்தவன் அவர்கள் பந்திக்கு செல்வதை கண்டு பின் தொடர்ந்தான்.​

“என்ன நிலா அந்த ஹேன்சம்கிட்ட என்ன பேசுன?” ஆர்வத்தில் கிசுகிசுத்தாள் குமுதா​

“அதுவா!! நீ டீச்சர்னா அந்த ஸ்கூலுக்கு ஹேட்மாஸ்ட்டர் நானுடானு சொல்லிட்டு வந்திருக்கேன்” அனாயசமாக சொல்ல… பின்னால் தொடர்ந்து வந்து கொண்டிருந்த குணாளன் காதிலும் விழுந்தது. அசடு வழிந்தவன்.. அவர்கள் பந்தியில் அமரவும், அவனும் ஒன்றும் தெரியாததுபோல் அவர்கள் அருகில் அமர்ந்தான். சிவநேசன் வேறு பக்கம் திரும்பியதும் சட்டென தன் பாக்கெட்டிலிருந்த துண்டு காகிதத்தை எடுத்து நிலாவின் இலையின் அடியில் வைத்து விட்டு சென்று விட்டான்.​

குமுதாவின் சந்தோஷத்துக்காக சிவநேசனுக்கூட தெரியாமல் தூதுவிடும் வேலையில் இறங்கிவிட்டாள் நிலா. அலைபேசி எண்ணும் குணாளன் என்ற பெயரும் எழுதியிருக்க… சின்ன பிள்ளைபோல் அக்காளும் தங்கையும் ஃப்ளேம்ஸ் போட்டு பார்க்க… அதில் எம்(M) பொருந்தி வர சந்தோஷ வானில் பரக்க ஆரம்பித்தாள் குமுதா. தனக்காக பிறந்தவன் இவனே என்று பூரித்து போனாள்.​

கால சக்கரம் அதன் வேலையை சரியாக பார்க்க… காதல் கிளிகளாக வலம் வந்தனர் குணாளனும் குமுதமலரும். யாருக்கும் தெரியாமல் அவர்களின் சந்திப்பு நூலகத்து மண்டபத்தில் தொடர… அவர்களின் நிரந்தர காவலாளியானாள் நிலா.​

அன்று குணாளனுக்கு பிறந்தநாள். அவனுக்காக அழகான ஒரு டையை வாங்கிக்கொண்டு வந்து கொண்டிருந்தவளை இடைமறித்தான் ஓர் இளைஞன். அவனை எங்கேயோ பார்த்த உணர்வு அவளுக்கு.​

“ஹாய் நீங்க ஃபைனல் யேர் ஸ்டூடண்ட் நிலவழகிதானே? என் பெயர் விமலன். உங்களுக்கு என்னை தெரியுமானு தெரியல” என்றான் பணிவுடன். தெரியவில்லை என்னும்விதமாக உதட்டை பிதுக்கினாள். “நைஸ்” என்றான். யாரிவன் என்ற எண்ணத்துடன் விரி விரித்து புருவம் உயர்த்தினாள்.​

“எல்லாம் ஜாடைகள்தானா? உங்களுக்கு பேச வரும்னு சொன்னாங்களே!! அப்போ ராங் இன்ஃபர்மேஷனா?” தாடையில் கைவைத்து நிலாவை நோக்க​

“சொன்னது யார்னு சொன்னீங்கனா ராங்கா ரைட்டானு சொல்லிடுவேன்” பதிலுக்கு அவள் சொல்ல​

“நைஸ்… பேசுறீங்க. பேச வராதோனு நினைச்சுட்டேன்” மென்னகை இதழோரம் தவழவிட்டான்​

“உங்க நினைப்புக்கு நான் என்ன செய்ய முடியும். தட்ஸ் நாட் நிலாஸ் பிராப்ளம்” என்றவள் கைகடிகாரத்தை பார்த்துக்கொண்டாள். இன்னும் அரை மணி நேரத்தில் நூலகத்துக்கு சென்றிட வேண்டும் என்ற அவசரம் அவளுக்கு.​

“பிராபளோத்தோட ஆரம்ப புள்ளியே இதை சொல்லாமா?” என்றவனை புரியாமல் பார்த்தவள் “வாட் இஸ் யோர் பிராப்ளம்?” சற்றே எரிச்சலானாள்.​

“நைஸ். கரெக்டா கேட்டீங்க. எங்களுக்குதான் பிராப்ளம் உங்களுக்கு இல்லை” புதிராக பேசுபவனை வெட்டவா குத்தவா என்று பார்த்தாள் நிலா.​

“நிலவழகி என்று பெயர் வச்சிக்கிட்டு இப்படி சுடும் சூரியனாட்டம் பார்க்கலாமா?”​

“ப்ச்!!” உச்சுக்கொட்டியவள் அங்கிருந்து நகர பார்க்க “கையில் என்ன பரிசா நிலா? உன் அக்காளின் காதலனுக்கா?” என்றதும் பிரேக் போட்டது போல் நின்றுவிட்டாள்.​

“உ… உங்களுக்கு எப்படி மாமாவை தெரியும்? யார் நீங்க?” திக்கி திணறினாள்.​

“மாமா? ம்ம்… நைஸ். அவர் உனக்கு மாமா என்றால் நானும் உனக்கு மாமன் முறைதான் வருவேன். ஆனால்…” பேச்சை பாதியில் நிறுத்தியவன் தன்னோடு நடக்குமாறு சைகை செய்ய… சாவி கொடுத்த பொம்மைபோல் அவனுடன் நடக்கலானாள். அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்து கொண்டிருந்தவனை பார்த்தாள். கண்டிப்பாக அவனை எங்கேயோ பார்த்த உணர்வுதான் வந்தது அவளுக்கு. தனக்கும் மாமா முறையாமே… அப்படியென்றால் மாமாவின் தம்பியாக இருக்குமோ? ஆனால் அவருக்கு தங்கை ஒன்றுதானே? இவன் எங்கிருந்து வந்தான்?’ யோசித்தவளுக்கு குழப்பமாக இருந்தது. இருந்தாலும் குறும்பு தலைதூக்க​

“மாமாக்கு தங்கை ஒன்றுதான் தம்பியில்லையே!! அப்புறம் எப்படி நீங்க நிலாக்கு மாமன் முறை வருவீங்க? ஒரு வேளை நீங்க மாமாவோட அப்பாவாக இருந்தால் நிலாக்கு மாமன் முறை வரனும்… இல்ல அப்படித்தானோ?” பேசிய உதடுகள் சிரிக்கவில்லை ஆனால் அவளின் கண்கள் குறும்பில் சிரிப்பதை கண்டுக்கொண்டவன் ரசித்தான். வாய் தானாக “நைஸ்” என்றது.​

“என்ன நைஸ்?”​

“உன்னோட ஹியூமர் சென்ஸ் வெரி நைஸ். கூட பிறந்தாதான் தம்பியாகனுமா… சித்தப்பா மகனைகூட தம்பி என்று சொல்லலாம். பட் யூ ஆர் வெரி கிளவர் கேர்ள். அண்ணன்னு சொல்லாம தம்பினு கரெக்ட்டா கண்டு பிடிச்சிருக்கீங்க” பாராட்டுதலாய்​

“அதெல்லாம் நிலாக்கு தெரியும். ஆனா அந்த தம்பி ஏன் இந்த நிலாவை பார்க்க வந்தார்னுதான் தெரியல..” குணாளனின் உறவுக்காரன் என்றதும் இலகுவானவளுக்கு அப்பொழுதுதான் ஒன்று புரிந்தது. அவன் அசப்பில் இளமையான குணாளன்போல் இருந்தான். அதனால்தான் அவனை எங்கேயோ பார்த்தது போல தோன்றியது போலும் என்று நினைத்துக்கொண்டாள்.​

“அது… நான் நினைத்து வந்தது ஒன்று… ஆனால்..” விமலன் தயங்கினான். வதனி அண்ணியோடு நிச்சயிக்கப்பட்டிருந்தவன் திடீரென அவளை வேண்டாம் என்று சொன்னதும் பெரியம்மா (குணாளனின் அம்மா) தன் தாயிடம் அழுது புலம்பி தள்ளிவிட்டார். அவரும் என்ன செய்வார் வதனி தன் வீட்டுக்கு மருமகளாக வந்தால்தானே தன் மகளுக்கு கல்யாணம் நடக்கும். மதுரையில் தொழில் செய்து கொண்டிருந்த தன்னை வம்படியாக வேவு பார்க்க அனுப்பிவிட்டார். அவனும் உளவு வேலை செய்ததில் தெள்ள தெளிவாக விளங்கியது அவனின் காதல் விவகாரம்.​

அண்ணன் காதலிக்கும் பெண்ணுடன் பேசுவதைவிட அவளின் தங்கையிடம் பேசி பார்க்கலாம் என்று களத்தில் இறங்கியவனுக்கு நிலாவின் துடுக்கான பேச்சு பிடித்துவிட்டது. கள்ளம் சிறிதுமில்லாமல் பேசியவள் மேல் மரியாதை வந்தது அவனுக்கு.​

“ஸாரி மிஸ்டர் நைஸ் நிலவன் ஊப்ஸ் ரைமிங் தப்பா போச்சு… மிஸ்டர் விமலன்… நீங்க என்ன நினைச்சு வந்தீங்கனு வெத்தலல மை போட்டு பார்க்க முடியாது… நீங்களா சொன்னாதான் தெரியும். அதனால சீக்கிரம் சொல்லுவீங்களாம். ஏன்னா உங்களுக்கு நிறைய டைம் இருக்கலாம் ஆனா பாருங்க நிலாக்குதான் டைம் இல்ல… புவர் நிலா” என்றவளிடம் பேசும் ஆர்வம் அதிகரித்தது விமலனுக்கு. உண்மையை சொல்லலாமா வேண்டாமா என்று யோசிக்க ஆரம்பித்து விட்டான் விமலன்.​

மனதில் பெரியம்மா கண்ணீர் முகம் வந்து போக…​

“நிலா… உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லனும். அக்சுவலி உன் அக்காவிடம்தான் நான் பேசியிருக்கனும் ஆனால்… உன்கிட்ட சொன்னா ஒரு சொலுஷன் கிடைக்கும்னு தோனுது..” என்றவனை பார்த்து புன்னகைத்தவள்​

“என்ன மாமாக்கும் அக்காக்கும் சர்ப்பிரைஸா கல்யாணம் ஏற்பாடு பண்ணனுமா…” ஒற்றை கண்ணை சிமிட்டி சொன்னவளை கண்டு மனம் வலித்தது அவனுக்கு. அவள் கண்களில்தான் எத்தனை எதிர்பார்ப்புகள்… மலர்ந்து சிரிக்கும் இந்த பௌர்ணமி முகம் உண்மை தெரியவந்தால் அமாவாசையாய் இருண்டு போகுமே. சொல்லவா வேண்டாவா… அடேய் குணா உன்னால் எத்தனை இதயங்கள் உடைய போகின்றன.​

வதனி அண்ணியை பாவம் பார்த்தால் இங்கே இரண்டு பெண்கள் நொறுங்கி போயிடுவார்கள். அதுவே இவர்களுக்கு துணையாக நின்றால் வதனி அண்ணியும் கூடவே தங்கையின் வாழ்வும் கேள்வி குறியாகும். என்ன செய்ய? குழம்பி போனான் விமலன்.​

 
Last edited:
Top