வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வாயுரைக்க வருகுதில்லை நன்நேசம் - 7 (1)

GG writers

Moderator

உ​

நேசம் 7 (1)​

நல்லது செய்தாலும் தேள் அதன் கொட்டும் குணத்தை மாற்றாது என்பதை நிலா உணர்ந்த தருணம் அது. குணாவின் தங்கையின் வாழ்கைக்காக தானும் விமலனும் பாடுபட்டதை நினைத்து பார்க்க வேண்டாம்.. அட நன்றிகூட சொல்ல வேண்டாம்!! ஆனால் இப்படி தேளாய் கொட்ட வேண்டாமே.! இந்த பேச்சை எல்லாம் எப்படி அம்மாவும் அப்பாவும் தாங்கி கொள்வார்களோ என்ற தவிப்புடன் பார்க்க… இடிந்து போய் நின்றிருந்தனர் இருவரும்.​

எனக்கு கல்யாணம் வேண்டும் என்று நான் கேட்டேனா? யாரோ யாருக்கோ இரண்டாம் தாரமா போனால் இவருக்கு என்ன வந்தது. உன் சொந்த மகனும் மருமகளும் அவரவர் இரண்டாவதாக வந்தவர்கள்தான் என்று சொன்னால் இந்த அத்தை முகத்தை எங்கு கொண்டு வைப்பார். இனி வாய் திறந்தால் சொல்லிட வேண்டியதுதான்’ முடிவெடுத்தவள் தக்க தருணத்துக்காக காத்திருந்தாள்.​

என்ன நடந்து விடப்போகிறது? கவசமாய் காக்கும் அண்ணனை கட்டிக்கொள்ள வேண்டும்போல் தோன்றியது அவளுக்கு. நிமிர்ந்து நின்றவளை கடந்து அருணாசலம் கூடத்து நடுவில் நின்றதும் என்னவோ ஏதோ என்று பதறியவள் அடுத்து அவர் சொன்ன விஷயத்தை கேட்டதும் அதிர்ச்சியானாள். கைகள் தானாக கழுத்தில் தொங்கி கொண்டிருந்த தங்கச்சங்கிலியை பற்றிக்கொண்டது.​

ஆனாலும் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல் நிமிர்ந்து நின்றிருந்தாள். அத்தனை கண்களும் அவளைதான் மொய்த்து கொண்டிருந்தன. அரனாக நிற்கும் தந்தைக்கும் அன்ணனுக்கும் எந்த விதத்திலும் தலை குனிவு வரக்கூடாது என்று நிமிர்ந்து நின்றாள்.​

“என்னடி உனக்கு இந்த விஷயம் தெரியுமா?” குமுதா கேட்க அவளை இடையிட்டான் குணாளன்​

“ஓ வர மாட்டேன்னு சொன்னவ திடீர்னு வந்து நிற்கவும் என்னமோ நினைச்சேன். இதுதான் விஷயமா?” எள்ளலாக கேட்க... நிமிர்ந்து அவனை பார்த்தாள் நிலா 'இவன் கொட்ட நான் குணியனுமா?' என்று நினைத்தவள்​

“ஆமா அப்படித்தான். இப்போ அதுக்கு என்ன? ஏன் என்னை எல்லாம் யாரும் பெண் கேட்டு வரக்கூடாதா என்ன? மத்தவங்களை போல் நான் ஒன்னும் வீட்டுக்கு தெரியாம எதையும் மறைச்சதில்லையே!!” குத்தலாக சொல்ல குமுதாவின் முகம் இருண்டுவிட்டது.​

“நிலா என்ன பேச்சு இது?” முத்தம்மா இடையிட​

“இந்த வீட்டு மாப்பிள்ளையா என்கிட்ட சொல்லலனாலும் பரவாயில்லத்தை… ஆனா குமுதா… அவகூட பிறந்தவ… அவகிட்ட கூடவா சொல்லல?” குணா இந்த விஷயத்தை விடுவதாக இல்லை என்ற முடிவுடன் நிற்க​

“ஆமா நான்தான் அப்பாகிட்ட சொன்னேன். நல்ல விஷயத்தை உங்க விழா முடிஞ்சதும் சொல்லலாம் என்று. உனக்கு சர்பிரைஸ் கொடுக்கலாம்னு பார்த்தா உன் வீட்டுக்காரர் அதுக்குள்ள முந்திக்கிட்டார். அதுவும் ஒருவகையில நல்லதா போச்சி. அவங்கவுங்க எப்படி பட்டவங்கனு விளங்க வச்சிடுச்சுல” என்ற சிவநேசனை குமுதா முறைக்க​

“நான் நம்ம சொந்தங்களை பத்தி சொன்னேன் குமுதா” தோளை குலுக்கிகொண்டவன் முத்தம்மாவின் கண்டிக்கும் பார்வையில் அத்துடன் நிறுத்திக்கொண்டான்.​

“நீங்க ஒன்னும் தப்பா நினைக்காதீங்க சம்மந்தி. வளைகாப்பு உங்களை போல நல்லவர்களால் நல்லபடி முடிஞ்சது. அடுத்து ஒரு நல்ல காரியமும் வீட்டுல நடக்கப்போகுது, நீங்க எல்லாம் வந்து சின்னவளை ஆசீர்வதிக்கனும்” குணாவின் தாயாரின் கைப்பிடித்து முத்தம்மா சொல்ல​

“இந்த அம்மாவை திருத்தமுடியாது” சிவநேசன் தலையசைத்துக்கொண்டான்.​

“பார்க்கலாம் சம்பந்தி. மருமகளை இங்கே அனுப்பியாச்சு. வீட்டு வேலையை நான்தானே கவணிக்கனும். பார்ப்போம்” அழகாக நிராகரித்தவர் மகனை கண்ணால் அழைத்து தனியாக எதையோ கிசுகிசுத்துவிட்டு சென்றுவிட… புயலடித்து ஓய்ந்தது போல இருந்தது வீடு.​

வீட்டினர் அனைவரும் விருந்தாளிகளை வழியனுப்பும் வேலையில் மும்முரமாக இருக்க தன்னறையில் தன்னை தனிமை படுத்திக்கொண்டாள் நிலா. சங்கிலியில் கோர்த்திருந்த அந்த மோதிரம் அவள் மனதை போல கனத்தது.​

‘இதுதான் நான் உனக்கு கட்டபோகும் தாலி. இந்த மோதிரத்தை உருக்கிதான் உனக்கு தாலி செய்ய போகிறேன். அதுவரைக்கும் உன் வருங்கால கணவன் என்னை நித்தமும் நினைக்க இந்த வருங்கால தாலி உன் நெஞ்சமதை உரசி கொண்டிருக்கட்டும்’​

விமலனின் குரல் இன்னும் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது. நான் என்ன செய்வேன்? ஏன்டா என்னை விட்டு போன? என்னை பெண் பார்க்க வராங்களாம். உன் நிலாவை பெண் பார்க்க வராங்களாம். எப்படிடா அவங்கமுன் நிற்பேன்? உரசி கொண்டிருக்கும் உன் நினைவுசின்னம் என்னை சுடாதா!!​

வாயை பொத்திக்கொண்டு அழுது தீர்த்தாள் நிலா. யாருக்கும் தெரியாமல் பொக்கிஷமாய் அவனின் நினைவுசின்னத்தை தாலியாய் சுமந்து கொண்டிருக்கிறாள். எப்படி அவளால் இன்னொருத்தன் முன் நிற்க முடியும்? அவள் மனசாட்சியே அவளை கொன்றுக்கொண்டிருந்தது.​

இதுநாள்வரை என்ன ஏது என்று ஒரு வார்த்தை கேட்காத அண்ணன்… பாப்பா பாப்ப்பா என்று கொஞ்சும் அப்பா… அவர்களின் ஆசையை விருப்பத்தை எப்படி நிராகரிப்பது? என்னால் முடியுமா? சுயநலமாய் சிந்திக்கிறேனா? என்ன செய்ய?​

“விமலா என்னை இந்த இக்கட்டுலிருந்து காப்பாற்று” வேண்டிக்கொண்டவள் சுமந்திருக்கும் அவன் நினைகளுடன் ஐக்கியமானாள்​

----------​


அன்று​

“ஹாய் சின்ன மாம்ஸ்… ரொம்ப நேரமா காத்திருக்கீங்களா? அவசரமா மீட் பண்ணனும்னு சொன்னீங்க. பட் உங்க அவசரம் என் லெக்சுரர்க்கு தெரியல போங்க!! அறுத்து எடுத்துட்டாங்க..” அதே தெற்றுப்பல் சிரிப்புடன் வந்தமர்ந்தாள்.​

‘நைஸ்’ என்று மனம் ஜொள்ளியது. ஊதா நிற சுடிதாரில் சின்ன கொலுசு மணி சத்தம் இசைத்தாட நடந்து வந்த அந்த லாவண்டர் பூவிலிருந்து கண்ணெடுக்க முடியவில்லை விமலனுக்கு. ‘நேற்றுதான் இவளை முதல் முறை பார்த்தேனா!’ மனம் அதிசயித்து கேட்டது. இது நான் தானா? எனக்குள் இத்தனை பெரிய மாற்றம்! எல்லாம் இவளால். இந்த லாவண்டர் நிலாவால்.​

“ஹலோ… ஹலோ மாம்ஸ்” என்று நிலா முகம்முன்னே கையசைத்ததும் சுய அலசல் அறைக்குள் இருந்தவன் கதவை திறந்து வெளியே வந்தான்.​

“என்னவாம் லாவண்டர் நிலாவுக்கு? ஹலோ ஹலோ சொல்லி ஹல்லுயா பாடுறாங்க” வடதுகை மோவாயை தாங்கியிருக்க புன்னகைத்தவனின் தோற்றம் அத்தனை அழகாயிருந்தது. மனதளவில் அவனை கொஞ்சம் ரசித்துக்கொண்டாள்.​

“மாம்ஸ் செம்ம ஹான்சம். கண்டிப்பா நிறைய பொண்ணுங்க புரோபஸ் பண்ணியிருப்பாங்கள்ல..” சாதாரணமாகதான் கேட்டாள்​

“அட போம்மா நீ வேற… ஹான்சமாம் ஹான்சம்… ஒத்தை பொண்ணு என் பின்னால வராளா?”​

“என்ன சொல்லுறீங்க? மொத தடவை பார்த்தாலே பச்சக்குனு அட்ராக் பன்ற லுக்கை வச்சிக்கிட்டு ஏன் இப்படி சொல்லுறீங்க?”​

“ஏன் நீயும்தான் நேற்று என்னை மொத தடவை பார்த்த!! புரொபஸ் செய்தீயா என்ன? எல்லாம் பேச்சுதான்..” என்றவனை கண்கள் விரிய பார்த்தாள். இன்று கண்ணுக்கு மை போட்டிருப்பாள் போலும்… விரிந்த விழிகள் அவனை வசியம் செய்தன.. பார்த்த விழிகள் பார்த்து கொண்டிருக்க… வெய்டர் வந்து ஆர்டர் கேட்டதும் பார்வைகள் விடைபெற்றுக்கொண்டன​

‘ச்சே!! நான் என் கன்ட்ரோல்லயே இல்ல’ சுதாகரித்துக்கொண்டவன் பேச்சை மாற்றினான்​

“ஓரு குட் நியூஸ் நிலா..” என்னவென அவள் பார்க்க​

“குணாவின் காதலை என் பெரியம்மா ஏத்துக்கிட்டாங்க”​

“வாவ்!! மாம்ஸ்… நிலா வெரி வெரி ஹேப்பி” குதூகளித்தாள்​

“ஆனால்…: அவன் ஜவ்வாய் இழுக்க​

“ஆனால் என்ன மாம்ஸ்” தவிப்புடன் கேட்க​

“அதை சொல்வதற்கு முன் நீ ஒரு உண்மையை தெரிஞ்சிக்கனும்” என்றான். மறுபடியும் பார்வையால் என்னவென வினவ… ‘கொல்லுறாளே! ஸ்டெடியா இருடா விமல்’ மனம் கூப்பாடு போட​

“குணாளனுக்கு ஏற்கனவே வதனி என்ற பெண்ணோட நிச்சயம் ஆகிடிச்சு..” அதிர்ந்து பார்த்தவளின் பார்வையை தவிர்த்தவன்​

“நேற்று நான் உன்னிடம் ஒரு புதிர் போட்டேனே!! அது குணாவின் கதைதான்” என்றவன் அவள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து வெளிவரவில்லை என்பதை கண்டவன்… ஆர்டர் செய்த ஜூஸை அவளிடம் நகர்த்திவிட்டு அவளின் மென்மையான விரல்களை பற்றி​

“குடி நிலா… ரொம்ப ஷாக்காகிட்ட..” என்றவன் பற்றியிருந்த அந்த விரல்களின் மென்மையை ஆராய ஆரம்பித்தான். ‘அடடா மார்ஷ்மெல்லோ போல சாஃப்ட்டா இருக்கே!’​

ஒருத்தி அதிர்ச்சியின் உச்சத்தில் அமர்ந்திருக்க இடைவெளி கிடைத்த இன்பத்தில் அவளை அனுஅனுவாக ரசிக்க ஆரம்பித்தான் விமலன்.​

“ரசிக்கிறேன்… ஈர்ப்பவள் அவளாகியதால். காந்தமா இவள்? நிலவுக்கு காந்த சக்தி உண்டா? இந்த நடமாடும் நிலவுக்கு மட்டும் இருக்கிறதே? எப்படி? ஈர்ப்பா? காதலா? ஈர்ப்பு காதலாகிவிட்டதா? ச்சே!! ச்சே!! இல்லை… இல்லை… பொறுப்போம். பொறுந்திருந்து பார்ப்போம்’ மனதோடு பட்டிமன்றத்தை முடித்தவன்​

“இதோ பார் நிலா அதான் வீட்டில் சம்மதித்து விட்டார்கள் என்றேனே. பிறகு ஏன் இந்த அதிர்ச்சி” மென்பஞ்சு விரல்களுக்கு அழுத்தம் கொடுத்தான். மனம் ஒன்று சொல்ல.. அவன் செயல் வேறாக இருந்தது.​

“ம்ம்ம்… ஸாரி கொஞ்சம் ஷாக்காகிட்டேன். பட் நிலாவும் ஒன்று சொல்லனும். அக்சுவலி இந்த விஷயத்தை நிலாகிட்ட இருந்து நீங்க மறைச்சிருக்கலாம். உங்களோட இந்த வெளிப்படையான பேச்சு நிலாக்கு பிடிச்சிருக்கு” என்றாள்.​

“நைஸ்.. நிலாக்கு விமலை பிடிச்சிருக்காமா?” புன்னகை விரிந்தது​

“பேச்சு.. பேச்சு… அதை சொன்னேன். அந்த வார்த்தையை மட்டும் அண்டர்லைன் பண்ணிக்கோங்க” மனதுக்குள் வெட்கம் குமிழ முகம் மென்புன்னகை சிந்த சொன்னாள். அவளும் கவணித்துக்கொண்டுதான் இருக்கிறாள் அவனின் ரசனையான பார்வையை. அவள் ஒன்றும் சின்ன குழந்தையல்லவே இதெல்லாம் தெரியாமல் இருப்பதற்கு. இப்பொழுது குமுதாவின் வாழ்க்கை செழித்தால் போதும் என்ற நினைவு அவளை மற்றதை ஏற்க தடை செய்தது.​

“அண்டர்லைன் யூ மீன் கோடு? ம்ம்.. போட்டுட்டா போச்சு!” ஏனோ அந்த நிலவிடம் மனதை மறைக்கதான் பார்க்கிறான். வாயோ வஞ்சம் செய்து விடுகிறது.​

“உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லனும்” என்றவள் குமுதாவின் வாழ்வில் நடந்ததை ஒன்று விடாமல் சொல்லிவிட்டு விமலனை ஏறிட்டு பார்த்தாள்.​

“மாமாகிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன். ஏன்னா எதையும் மறைச்சி வச்சி என் அக்கா மனசில் ஆசை வளர்க்க நிலா விரும்பல. பின்னாளில் பிரச்சினை வரக்கூடாது என்று சொல்லிட்டேன். ஆனா மாம் இஸ் ஜெம் தெரியுமா? இதை யாரிடமும் சொல்லக்கூடாதுனு கேட்டுக்கொண்டார்… ஆனா ஏனோ உங்ககிட்ட நிலா மறைக்க விரும்பல” என்றவளின் கண்களில் நீர் படலம்.​

“ஹேய் நிலா!! வாட் இஸ் திஸ்” பதறினான் விமலன்.​

“இத்தனை நாள் தாழ்வு மனப்பான்மையில் தவிச்சிக்கிட்டு இருந்தவ… மாமாவுடன் பழகிய பிறகுதான் நார்மலாக ஆரம்பிச்சா. என் அக்கா இரண்டாம் தடவையும் ஏமாறக்கூடாது!! ஏமாற்றம் தாங்காம அவ ஏதாச்சும் செஞ்சிக்கிட்டானா நாங்க என்ன பண்ணுவோம்? நான் சுயநலமா யோசிக்கிறேனா??”​

“ஏய் என்ன இது சின்ன பிள்ளையாட்டம் கண்ணை கசக்கிட்டு!! நேற்று பெரிய மனுஷியாட்டம் பேசுனவ எங்கே போனா?”​

“யாருக்கு தெரியும் நீங்கதான் கண்டுபிடிச்சி கொடுங்களேன்” கண்ணை துடைத்துவிட்டு துடுக்காய் சொல்ல​

“ஹப்பா!! நிலா மழை மேகத்திலிருந்து தள்ளி வந்துட்டாங்க டோய்” கேலி செய்தான்.​

“ப்ச்!! சும்மா சும்மா நிலாவை கேலி செய்யாதீங்க” சினுங்கலாய் சொல்ல… சிருங்கார தூறல் அவனுள். குரலை செருமியவன்​

“அட அசட்டு நிலா… அதான் நான் சொன்னேனே காதலுக்கு பச்சை கொடி காட்டிட்டாங்கனு. பிறகு எதற்கு இந்த பயம்? குணாக்கு அண்ணி மேல செம்ம காதல் தெரியுமா? நேற்று வீட்டுல பெரும் போர்களமே உருவாகி நானும் உன் அக்காக்காக சப்போர்ட் பண்ணி… கடைசியில குணா உன் அக்காவின் ஃபோட்டோ காட்டி ‘அம்மா பாருங்க இவளைவிடவா அந்த வதனி எனக்கு பொருத்தமா இருப்பா’ என்று சொல்லி கெஞ்சி கூத்தாடி அவங்களை ஒருவழியா சம்மதிக்க வச்சிட்டோம். ஆனால்….”​

“ஆனால் என்ன?”​

“அப்படி இப்படினு பெரியம்மாவை சம்மதிக்க வச்சாச்சு. ஆனா அவங்க ஒரு கண்டிஷனோடதான் சம்மதிச்சாங்க. வதனியையும் அவளோட அண்ணனையும் நாமதான் சமாளிக்கனும் என்று. அதாவது நீயும் நானும்” என்றதும்​

“வாட்!! நிலாவும் விமலுமா? ஏன் அப்படி?”​

“யெஸ் நிலா அண்ட் விமல்” இருவரது பெயர்களையும் இணைத்து ரசித்து சொன்னவன் “நாம் இருவரும் அவங்களோட காதலுக்கு சப்போர்ட் பண்ணதால நாமதான் பிரச்சினைகளை களையனுமாம். ஏன்னா ஐயா ரொம்ப அமைதியாம்… மூளைக்காரனாம்… குணா அவசரக்காரனாம்… பொறுமையில்லாதவனாம்”​

“எத்தனை னாம்!!” அதிசயித்தவளை பார்த்து கன்ணடித்தவன்​

“நாளைக்கே நம்ம மிஷனை ஆரம்பிக்கிறோம்” கைவிரலை தூக்க​

“ஓகே டன். நாளைக்கு முக்கியமான கிளாஸ் இல்ல. முதல்ல மிஷனுக்கு பெயர் வைங்க” புன்முருவல் பூத்தாள்.​

“வச்சிட்டா போச்சி… மிஷன் கும்முகுணா” விமலன் சொன்னதும் பக்கென சிரித்துவிட்டாள். கடையில் அமர்திருந்தவர்கள் அவர்களை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு செல்ல… அது அவர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. கள்ளம் இல்லா இரு இதயங்கள் கன்னமிட விதி அழகாக வழி வகுத்தது.​

 
Last edited:
Top